Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடா.. டாட .........

தமிழர்களுக்குள் இருக்கும் பிரிவினைகள் போதாது என்று ......

இனி புலம்பெயர் நாட்டுக்கு அகதியாய் வந்தவன் , Student Visa வில வந்தவன் ,

Work permit எடுத்து வந்தவன் , தலை மாத்தி வந்தவன் , Border பாஞ்சு வந்தவன் என்று பிரிவினை வரும் போல கிடக்குதே .

சிங்களவனிடம் இருந்து பிரிஞ்சு வாழுவம் என்று ஆசைப்பட்டால் ....... கடைசியாய் தமிழனுக்குள்ளை , தமிழன் தான் புதுசாய் மேலும் பிரிய வேண்டிக் கிடக்குது .

நீங்கள் என்ன விசாவிலை வந்தும் , அந்தந்த நாட்டு குடிமகனாக மாறியிருந்தாலும் .......

அந்த நாட்டு மக்களுக்கு , நீங்கள் இரண்டாம் தர பிரஜையே ..... என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள் .

பானையை பார்த்து ....... நீ கறுப்பு என்று , கேற்றில் இழித்த கதை போல எல்லோ கிடக்குது .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தனது மலத்தை தானே தொட்டு நுகர்வதில் தமிழனுக்கு அலாதிப்பிரியமாக்கும் :)

அதையும் மற்றவர்களுக்கு சொல்லி சொல்லி நுகர்வதில்.....

எக்ஸ்கியூஸ்மி.. மலம் என்றால் என்னவுங்கோ?

scheisse_gif7n99.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல கதையினை எழுதிய சயந்தனுக்கு எனது வாழ்த்துக்கள். இக்கதையின் கருப்பொருளை சத்திர சிகிச்சை செய்து ஓர் நல்ல எழுத்தாளனாக உருவாகும் வாய்ப்புள்ள ஒருத்தரை முளையிலேயே கிள்ளிப்போடாதையுங்கோ. இங்கு யாரும் சுத்தமில்லை. சயந்தன் தொடர்ந்து எழுதுங்கள். சிலருக்குத்தான் வார்தைகள் கூடிவரும் அது உங்களுக்கு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் வெற்றி நடை போடுகையில், புலத்தமிழனின் உழைப்பையும் அவனது பணத்தையும் தேவையான பொழுது பெற்று உங்களால் தான் விடுதலைப் போராட்டம் நவீனமானது என புகழாரம் சூட்டப்பட்டு உச்சி குளிரப்படுத்தி விட்டு, இன்று ஆயுத போராட்டம் படுதோல்வி அடைந்த நிலையில் வாங்கி வைத்த பொப் கோர்னகளும் இளவாலிச்சுப் போன நிலையில், நன்றி கெட்டத் தனமாக போராட்டத்தின் தோல்வியை புலத்தமிழனின் தலையில் கட்டி விடுகின்றனர்.

இதே.. எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில்.. ஊதுபத்தி விற்றுத் திரிந்த காலங்களில்.. தலைவர் பிஸ்ரலோடு அலைந்த காலங்களில்.. யார் உதவி செய்தார்...??! அன்று சிறீலங்காப் படையில்.. ஒரு எறிகணை செலுத்தி கூட இருந்ததில்லை. ஆர் பி ஜியைக் கூட விடுதலைப்புலிகள் தான் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலோடு அறிமுகப்படுத்தி இருந்தனர். இது வரலாறு. போராட்டத்தின் ஆரம்பத்தில்.. அடைக்கலம் அளித்தது தமிழகம்..! நிதி அளித்தது தமிழகம்..! ஏன் விடுதலை இயக்கக் குழந்தைகளின் பிரசவம் பார்த்ததே அந்தத் தமிழகம் தான்..!

அவர்கள் எப்போதாவது அறிக்கை விட்டார்களா.. நாங்க இந்தளவு பண்ணித்தான்.. போராட்டம் வளர்ந்தது. இந்தளவு பண்ணியும் தோற்று நிற்கிரார்கள் என்று. ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னரும் கூட அந்த மண் ஏதோ ஒரு வகையில் உதவிக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த மக்கள் அடைக்கலம் கொடுத்து.. நிதி கொடுத்து.. வளர்த்து விட்டதே இந்தப் போராட்டம். இன்றேல் இது கருவில் அழிந்திருக்கும். ஆனால் அவர்கள் இந்தக் கருவுக்குச் சொந்தக்காரன் கூட அதனை இந்தளவுக்கு சுயநலத்திற்குப் பயன்படுத்தி இருக்கமாட்டான்.

ஆனால் ஈழத்தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வோர்.. விடுதலைக்காகப் போராடுகின்றோம் என்றவர்கள்.. செய்தனர். அதனைத்தான் இங்கே சுட்டிக்காட்டுகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் போராடினார்கள் என்றால் எந்தெந்த வகைகளில்.. எவ்வெப்போது என்று சொல்லுங்கள்.. வரையறுங்கள்.

சில தொகைப் பணங்களை கொடுத்தது போராட்டம் என்றால்.. எம் ஜி ஆர் அன்றைய பொழுதுகளில் அள்ளிக் கொடுத்தது.. அதுவும் போராட்டம் தான். உயிரைக் கொடுத்துப் போராடியவனுக்குத் தான் போராட்டத்தின் உண்மைப் பெறுமதி தெரியும். அவனின் தியாகத்தில் குளிர் காய்ந்தவர்கள்.. அதனை நேரடியாக ஏற்கப் போவதில்லை. இதற்குள் பிரிவினையா என்று இலகுவாகக் கேட்கிறார்கள்.

ஈழத்தில் இருந்து வந்த தமிழர்களே நாடுகளின் பெயரால் பிரிந்து கிடக்கின்றனரே.. சொந்த உறவுகளின் துயரை.. இரண்டாம் தரமாக எண்ணி வாழ்கின்றனரே அதனை எந்த வகையில்.. பார்கிறார்களோ தெரியவில்லை.

தமிழர்கள் தங்களை சுய மீளாய்வு செய்ய பிரியப்படுவதும் இல்லை. முன்னேற்றுவதும் இல்லை. எல்லாவற்றிற்கும்.. மூக்கைத் தோண்டுறான்.. மலத்தை தொடுகிறான் என்று மூடி மறைப்புக்களை செய்து வாழ்ந்து விடுகின்றனர். ஆராய்வுகளை முளையிலேயே முறித்து விடுகின்றனர்.

அதன் பயன்.. சுயநலமே மிகுந்த ஒரு கேடு கெட்ட இனமாக இந்த ஈழத்தமிழினம்.. புலம்பெயர் நாடு ரீதியான தமிழினமாக மாறி நிற்பதே அன்றி வேறில்லை.

சவாலாக கேட்கிறேன்.. இந்த புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்று கூட்டி இந்தப் போராட்டத்தின் கருவியாகக் கடைசி வரை நீங்கள் கொடுத்த பணத்துக்கு ஆயுதம் தூக்கிப் போராடி.. வீழ்ந்து கிடக்கும் அந்த மக்களையும் வீரர்களையும் சிறை மீட்டு வாருங்கள் பார்க்கலாம். அதைச் செய்துவிட்டு சொல்லுங்கள்.. நாங்கள் போராடினோம் என்று. துப்புக்கெட்ட ஜென்மங்களாக அடுத்தவனின் வாயைப் பார்த்துக் கொண்டு திரியும் இவர்கள்.. எவ்வகையில் களத்தில் வெற்றிகளை பணத்தால் குவித்தனர். பணம் போராடி வென்றதா.. போராளிகளான ஏழை மக்கள் நூற்றுக்கணக்கில் இறந்து பெற்றதுதான் அந்த வெற்றிகள்.

வணங்கா மண் கப்பலில் அனுப்பிய சுத்த மனிதாபிமானப் பொருட்களையே அந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியாதவர்கள்.. போராடினார்களாம். வேடிக்கையாக இருக்கிறது..!

புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் ஏவுகணைகளோ.. யுத்த விமானங்களோ.. லேசர் ஆயுதங்களோ உருவாக்கி வாங்கிக் கொடுக்கவில்லை. பொத்தானை அமுக்கிவிட்டு போர் செய்து கொண்டிருக்க..!

1987 இலும் கரும்புலிகள் தான் திருப்பங்களை உருவாக்கினர். 2007 இலும் அவர்கள் தான். இதுதான் புலம்பெயர் சமூகம் ஏற்படுத்திய.. யுத்த தொழில்நுட்ப மாற்றமா..??!

உண்மையில் விடுதலைப்புலிகள் தோற்கவும் அவர்கள் பயங்கரவாதிகள் ஆகவும்.. வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தும் குழுவினர் என்ற பட்டம் பெறவும்.. வெளிநாட்டு உளவு அமைப்புக்களின் கண்காணிப்புக்கள் தீவிரமாகவும்.. இந்தப் புலம்பெயர் சமூகம் தான் காரணம். அதை மறுக்க முடியாது..! அதனை ஆராய நாதியற்ற நிலையில்.. தமது தவறுகளை இனங்கண்டு திருத்தும் நிலையில் கூட இவர்கள் இல்லை என்பதைதான் இங்கு இவ்வாறான கருத்துக்கள் வலியுறுத்துகின்றன. இதுதான் உண்மை..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா நடக்குது இங்கை... ?

இந்தக்கதையில் ஒருவர் தனக்கு புலிகளால் ஆபத்து என்கிறார். அவரே பிறகு போராளிகள் விடுதலை வீரர்கள் என்கிறார். அவ்வளவும்தான் நான் சொன்னது.. :) மிச்சமொன்றுக்கும் நான் பொறுப்பில்லை :lol:

இன்று ஆயுத போராட்டம் படுதோல்வி அடைந்த நிலையில் வாங்கி வைத்த பொப் கோர்னகளும் இளவாலிச்சுப் போன நிலையில், நன்றி கெட்டத் தனமாக போராட்டத்தின் தோல்வியை புலத்தமிழனின் தலையில் கட்டி விடுகின்றனர்

நிழலி..

தமது 30 000 உயிரைகொடுத்து போராடியவர்கள் மீதும் விமர்சனங்கள் வருகிறதே..( உதாரணமாக உங்கள் அண்ணன்) அதுகூட நன்றிகெட்ட தனமல்லவா..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கால போவானுக்கு அடிக்கடி கனடா கடுக்குது ஏன் என்று தான் புர்pயல்ல..

நிழலி..

தமது 30 000 உயிரைகொடுத்து போராடியவர்கள் மீதும் விமர்சனங்கள் வருகிறதே..( உதாரணமாக உங்கள் அண்ணன்) அதுகூட நன்றிகெட்ட தனமல்லவா..?

அது தான் தமிழர்களின் இன அடையாளம்

என் குறிப்பு உங்களின் கதைக்கான விமர்சனம் அல்ல. இங்கு சில பம்மாத்து பேர்வழிகள் தாமும் வெளிநாட்டுக்கு ஏதேனும் ஒரு முறையில் தப்பி ஓடி வந்துட்டு, அப்படி வந்த மற்றவர்களை பார்த்து ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்தமையால் தான் போராட்டம் தோற்றது என்று விதண்டாவாதம் செய்கின்றவர்களை பார்த்து எழுதியது. இப்ப இது ஒரு புது பஷன்.

நெடுக்கால போவானுக்கு அடிக்கடி கனடா கடுக்குது ஏன் என்று தான் புர்pயல்ல..

அவரிண்ட பழைய காதலி கலியாணம் கட்டி லைபுல செட்டிலாகி கனடாவில இருக்கிறாவோ என்னமோ.. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்தமையால் தான் போராட்டம் தோற்றது என்று விதண்டாவாதம் செய்கின்றவர்களை பார்த்து எழுதியது. இப்ப இது ஒரு புது பஷன்.

இதை இப்படிச் சொல்வதே சிறந்தது. ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த படியால் தான் தமிழீழம்.. தாயகம் என்ற சிந்தனையில் இருந்து.. சுற்றுலா செல்லும் இடம் என்ற சிந்தனைக்கு தரம் தாழ்ந்தது. அதன் பிரதிபலன்.. இப்போ நிதர்சனமாகிக் கொண்டிருக்கும்.. நிகழ்வுகள்..! இதை எவராலும் மறுக்க முடியாது.

நாங்கள் யாருக்கும் பயந்து.. அல்லது போராட்டத்தை காட்டி பிழைப்பு நடத்த ஓடி வரவில்லை. தாயகம் என்பது எமக்கு எப்போதும்.. அதுதான்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

அவரிண்ட பழைய காதலி கலியாணம் கட்டி லைபுல செட்டிலாகி கனடாவில இருக்கிறாவோ என்னமோ.. :icon_mrgreen:

கனடா மீது எனக்கு ஒரு காதலும் இல்ல வெறுப்பும் இல்ல. அது எனது தாயகமும் அல்ல..! எனது தாயகம் தெற்காசியாவில் இருக்கிறது. நான் என்னை வட அமெரிக்காவின் பூர்வ குடி என்று கற்பனையில் வாழ நினைக்கவில்லை. ஆனால் பிற நாடுகளில் வாழும் மக்களை விட கனடாவில் உள்ள அகதித் தமிழர்கள் தாங்கள் ஏதோ கனடாவின் பூர்வ குடிகள் என்ற கணக்கா.. வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.. கேவலமாகத் தெரிகிறது..! இப்படி போகும் இடத்தின் பெயரால் பெருமை கொண்டு தமிழர்கள் வாழத் தலைப்பட்டால்... அவர்களுக்கு தமிழீழம் என்பது இரண்டாம் பட்சம்.. மூன்றாம் பட்சம் தானே..!

உலகத்தில தமிழர்களைத் தவிர தாய் நாட்டை விட குடிபெயர்ந்த நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கிற ஆக்களை நான் காணேல்ல..! பாகிஸ்தானியர்கள் எங்க இருந்தாலும்.. பாகிஸ்தான் சுதந்திர தினத்தையே அனுட்டிக்கின்றனர். இந்தியர்கள் அப்படி. ஆனால் தமிழர்கள் மட்டும்.. கனடிய சுதந்திரத்தினத்தை.. கொண்டாடுவார்கள்..! இந்த வகையில் தான் இருக்கிறது.. இவர்களின் தாயகப்பற்று. இதுதான் கனடா வாழ் அகதித் தமிழர்கள் தொடர்பில் கேவலமானதாக எனக்குத் தெரிகிறது. ஒரு உதாரணத்துக்கு கனடா வாழ் தமிழர்களை எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில் அங்குதான் அகதித் தமிழர்களின் குடித்தொகை அதிகம்..!

மற்றும்படி போற இடத்தில் கொண்டை முடிவது தமிழர்களின் வழக்கு..! அதை மாற்றாமல்.. தமிழீழம் என்ன தமிழர்களுக்கு ஒரு நாடு என்பது சாத்தியமில்லை..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி..

தமது 30 000 உயிரைகொடுத்து போராடியவர்கள் மீதும் விமர்சனங்கள் வருகிறதே..( உதாரணமாக உங்கள் அண்ணன்) அதுகூட நன்றிகெட்ட தனமல்லவா..?

சயந்தன் இங்கு யார் நிழலியின் அண்ணாவைப் பற்றி தப்பாக கதைத்தது...அவரது அண்ணா மன நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என எழுதியிருந்தார்...அதுக்கு தான் நான் எழுதினேன் மனநிலை பாதிக்கப்பட்டவர் எப்படி கடைசி நேரத்தில் என்ன நடந்தது என நிழலிக்கு சொன்னார் என..மற்றும் படி அவரது அண்ணாவை பற்றி ஒருவரும் தப்பாக கதைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் மன்னிக்கவும் ,

இங்கு நடந்த அமளியுக்குள்ளை உங்கள் கதையை பாராட்ட மறந்து விட்டேன் .

மெல்லிய நகைச்சுவையுடன் , நீங்கள் கதை எழுதிய விதம் எனக்குப் பிடித்திருந்தது .

விமர்சனங்கள் தான் ஒரு கதைக்கு கிடைத்த வெற்றி என நினைத்துக் கொண்டு தொடர்ந்து எழுதுங்கள் . :icon_mrgreen:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் சயந்தன் எழுதும் கதை ஒன்றை முதன் முதலாக வாசித்தேன். விறு விறுப்பாக எல்லோரையும் கவரும்படி எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள். அகதி தஞ்சம் கோரும் போது சுய நலத்துக்காக பெரும்பாலான தமிழர்கள் புலிகள் மீதும் குற்றம் சாட்டுகிறான். பிறகு புலிகள் வாழ்க என்று கோசமிடுகிறான்.

சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று தொண்டை கிழியக் கத்தி விட்டு, பிறகு விமானச் சீட்டு மலிவு விலையாக இருக்கிறதே என்று நினைத்து சிறிலங்கன் எயர்லைன்சின் மூலமாக இந்தியாவுக்கு சுற்றுலா செல்கிறான். சன் தொலைக்காட்சியில் தமிழக மீனவர்களை புலிகள் தான் சுட்டது என்ற பொய்யான செய்தி கேட்டும் மானாட மயிலாட பார்க்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து சன் தொலைக்காட்சிக்கு ஆதரவு தருகிறான்.

நாங்கள் 30000க்கு மேற்பட்ட மாவீரர்களை இழந்ததற்கு காரணங்களில் ஒன்று இப்படிப் பட்ட கேடு கெட்ட தமிழர்களினால் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.