Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மனைவி திவ்யமதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மனைவி திவ்யமதி.

ஞாபகமிருக்கா என்னை... ? கேள்வியாலேயே என் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என் ஞாபகக்கிடக்கையில் எங்கும் அவளை அறிந்தததற்கான தடயங்கள் எதுவுமில்லை. பிள்ளைகள் எப்பிடியிருக்கினம் ? உன்னுடைய கணவர் இப்பவும் ஒரே வேலைதானோ ? இப்ப உனக்கு 34வயதெல்லோ உன்ரை பிறந்தநாள் யூன் பதினாறெல்லோ ? என்னை அறிந்து பலநாள் பழகியவள் போல தொடர்ந்தாள் அவள். அருகிலிருந்த எல்லோரும் என்னைத்தான் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

நான் திவ்யமதி. 5வருசத்துக்கு முதல் உந்த நடைபாதையில சந்திச்சனான். அவள்தான் தன்னை அடையாளம் சொல்லி எனது பழைய பறணிலிருந்து புறப்பட்டாள். 'இப்போது நினைவில் அவள்....

எண்ணை வழியும் தலையும் ஒரு நூல்கிளம்பிய பஞ்சாபியோடும் ஒற்றைத் தோற்பையோடும் 'எனக்கு இங்கை ஒருதருமில்லையென அழுதபடி என்னைச் சந்தித்த அவளா இவள் ? ஆச்சரியத்தால் அசந்து போனேன்.

5வருடம் முதல் அதுவொரு கோடைகாலம். நெரிசல் நிறைந்த கடைகளும் மனிதர்களும் நிறைந்த நடைபாதையின் ஒரு தொடக்கத்திலிருந்து அடுத்த முடிவுவரை கிட்டத்தட்ட 2மணித்தியாலங்கள் அங்குமிங்கும் நடந்து திரிந்தாள் ஒருத்தி. ஏதோ தனக்குள் முணுமுணுத்தபடி அங்குமிங்கும் திரிந்தாள். பார்க்கும் கண்களில் தலைபிழைச்ச ஆளோ என எண்ணும்படிதான் அவளது நடையும் முணுமுணுப்பும் இருந்தது. நகர் மத்தியில் புடவைக்கடையொன்றின் வாசலில் கட்டப்பட்டிருந்த குழந்தைகள் காசுபோட்டு ஏறும் குதிரையில் பிள்ளைகளை ஏற்றியிறக்கிக் கொண்டிருக்க....திடீரென நீ இந்தியாவா ? என்ற அந்தக் குரலுக்குரியவளை நிமிர்ந்து பார்த்தேன்.

நான் இந்தியா இல்லை இலங்கை ? அப்ப நான் தனியத்தான் எனக்கொருதருமில்லை. என்று சொல்லியபடி போனவள் திரும்பி வந்து 'எனக்கு உதவி செய்வியா ? என்றதும் பயத்தோடுதான் அவளைப் பார்த்தேன். இந்த நகரின் மூலையெங்கும் திரியும் விஸ்கிக் கிழவன் மாதிரி இவளுக்கும் விசரோ ? என்றுதான் நினைக்கத் தோன்றியது.

அந்தக் கடையொன்றின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவான இருக்கையில் போயிருந்து அழுதாள். அந்த வழியால் போய் வந்த யேர்மனியர்கள் ஒருவரும் அவளைப் பார்க்கமாலே போனார்கள். அவளது நிலை சிலவேளை வீதிகளில் கோப்பிக்கப்களோடு பிச்சை கேட்கும் பிச்சைக்காரியென நினைத்தார்களோ என்னவோ. அவளுக்குச் சற்றுத் தள்ளியிருந்துவிட்டு எழுந்து போன வயோதிபச்சோடிகள் அவளுக்கு முன்னால் 2யூரோவை வைத்துவிட்டுப் போனார்கள்.

குதிரை ஓடி முடிந்து பிள்ளைகள் அந்தக் கதிரைகளைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்க அவளுக்குச் சற்றுத் தள்ளி நானும் போயிருக்கிறேன். நீ கிந்தி கதைப்பியா ? தானே மீண்டும் வந்து கேட்டாள். இல்லை நான் இலங்கைத்தமிழ் என்றேன். எனக்கு உதவி செய். எனக்கிப்ப என்ரை அம்மா அக்காவோடை கதைக்க வேணும் என கண்களைத் துடைத்துக் கொண்டு அருகில் வந்திருந்தாள். அவளுக்கு விசரில்லையென்பதை அவளே தனது கதையால் மெய்ப்பித்தாள்.

வீட்டுக்குள் வந்ததும் முதலில் தொலைபேசியைத்தான் கேட்டாள். கையில் வைத்திருந்த 2காட்டையும் சுரண்டி ஏதோ காச்சு மூச்சென அழுதழுது கதைத்தாள். திடீரென தொலைபேசியைத் துண்டித்துவிட்டு நான் போட்டுக்கொடுத்த தேனீரையும் குடித்து வாய்ப்பனையும் சாப்பிட்டாள். உறைப்புக் கறியுடன் சோறுசாப்பிட ஆசையென்று ஒருகதையையும் போட்டு வைத்துவிட்டு மீண்டும் தொலைபேசியில் அழத்தொடங்கியவள் என்னிடம் தொலைபேசியைத் தந்தாள். மறுக்க மனமின்றி தொலைபேசியை வாங்கி காதில் வைத்தேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்.பாதித்தமிழ் பாதி ஆங்கிலம் கலந்து என்னோடு கதைத்தாள் அந்தப்பெண். 13வருடங்கள் தமிழ்நாட்டில் வேலைபார்ப்பதாகவும் அங்கிருந்தே தமிழை ஓரளவு பேசக்கற்றுக் கொண்டதாகவும் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்தினாள் அவள்.

திவ்யமதி அவளது சகோதரி என்பதும் இந்தியாவிலிருந்து ஒரு யேர்மனியன் இவளைத் திருமணம் செய்து வந்ததும் அவனது தொல்லைகள் தாங்காமல் இவள் தனித்து பெண்கள் விடுதியில் இருப்பதும் தெரியவந்தது.

அரசியல் கட்சியொன்றில் பணியாளனாக இருந்த அவளது கணவன் காரணம் தெரியாமல் கொலைசெய்யப்பட்டு வெள்ளைத் துணி போர்த்தியபடி கட்சித் தொண்டர்கள் கொண்டு வந்து மாலைபோட்டு மரணவீடு கொண்டாடி அவளிடமிருந்து ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்ட பொட்டு , பூ , புடவையெல்லாம் பறிபோய் கணவனின் தம்பி வாழ்வு தருகிறேன் என்றதை உதறிவிட்டு கன்னடத்திற்கு போயிருந்தாள் திவ்யமதி.

இறந்து போன கணவனின் பழைய படங்களைப் பார்ப்பதும் அழுவதுமாக 4வருடத்தை ஏனோ தானோவெனக் கரைத்தவள் 8வயதான தனது ஒரு மகளுக்காகவே இனி வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கன்னடத்திற்குப் போனாளாம். தோழியொருத்தி மூலம் விடுதியொன்றில் பணிப்பெண்ணாக வேலையும் கிடைத்தது.

வெளிநாட்டவர்கள் வந்துபோகும் அந்த இடத்திற்கு 55வயதான இவளது இன்றைய யேர்மன் கணவனும் கோடைகால விடுமுறையொன்றுக்குப் போயிருந்த போது அங்கு பணிபுரிந்த ஒருவனால் இவளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டான் அவனது வெள்ளைக்கணவன். யேர்மன் மொழியில் ஒரு சொல்லும் தெரியாதவள் திவ்யமதி. ஆங்கிலத்தில் ஓம் இல்லை என்பதற்கும் அதைவிட்டால் ஓரிரண்டு ஆங்கிலச் சொற்களையே தெரிந்தவன் அவன். இடையில் மொழித்தரகனாக நின்றவன் சொல்லிச்சொல்லி அவளை யேர்மனியனைத் திருமணம் முடிக்கச் சம்மதம் பெற்றுக் கொடுத்தான். இடையில் தடையாய் நின்ற மொழியையும் யேர்மனி போனால் படித்துவிடலாம் என அவன் சொன்ன தைரியத்தை நம்பி உறவுகளுக்கும் சொல்லாமல் அவனோடு திருமண எழுத்தை முடித்து 5மாதத்தில் யேர்மனி வந்து சேர்ந்தாள்.

தனது மகளின் எதிர்காலம் வண்ண வண்ண மலர்களால் சூழப்பட்டு அவள் ஒரு இராஜகுமாரியாக வலம்வருவாள் என்ற கனவில் தனது கற்பனையில் வந்து சேர்ந்தாள். நிலமையோ தலைகீழ் அல்ல அதனினும் மேலாய் உலகவரைபடத்தில் அவள் பார்த்த நிலமெல்லாம் உருண்டு திரண்டு வந்து தன்னை அழுத்துவது போல நம்பிக்கைகள் சிதைந்து உடைந்து போனாள்.

அவனது தேவைகளுக்காக மட்டும் அவள். மற்றும்படி அவன் டிஸ்கோ போய்வரும்வரை காத்திருந்து , அவனுக்கு வைன் குடிக்கவோ சிகரெட் பிடிக்கவோ விரும்பும் தருணங்களில் அதையெல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொள்வதையே அவளது கடமையெனக் கருதினான் அவன்.

அவளது ஒரே மகளுக்கு செஞ்சிலுவைச்சங்கத்தில் போய் பழைய உடுப்புக்கள் எடுத்து வந்து கொடுத்தான். அவளுக்கும் தான். நான் குடுத்து வைச்சவன். ஒரு இந்திய மனைவி கிடைச்சதையிட்டு நான் பெருமைப்படுகிறேன் என போதையில் உளறுவான். பெண் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று தான் விரும்புவதாய்ச் சொன்னவன் ஒரு உணவகத்தில் துப்பரவுப் பணியாளாக்கினான். சம்பளத்தை மட்டும் தனது வங்கிக்கணக்கில் விட்டு அதிலும் ஒரு சதமும் அவளுக்கோ அவளது மகளுக்கோ சிந்தாமல் பார்த்துக் கொண்டான்.

உன்னையும் உன்ரை மகளையும் கூப்பிட்டதுக்காக நானெடுத்த கடன் இன்னும் முடியேல்ல....எனச் சொல்லிக் கொள்வான். அவள் நினைத்தது ஏதோ நடந்தது ஏதோவாக....அவளால் இயலாத மாதவிடாய் நேரங்களில் கூட அவனுடன் படுத்துச்சாக வேண்டிய தொல்லைக்குள் அவள். சாகும் தருணம் வரும்வரை அவள் ரணமாகிக்கிடந்தாள். அடிக்கடி மருத்துவமனையும் அவளது நாட்களுமாக சில வருடங்கள் போயொதுங்கியது.

சின்னவளாய் அவளோடு ஒட்டித்திரிந்த மகள் பூப்படைந்துவிட்டாள். தனித்து அவன் நிற்கும் நேரங்களில் அவள் அம்மா இல்லாமல் நிற்க அச்சப்பட்டாள். அம்மா வா நாங்க இந்தியாவுக்கே போவோம் என்று அழுவாள். தனது நண்பிகளுடன் சினிமாவுக்குப் போவதாக நண்பிகளின் வீடுகளுக்குச் செல்வதாக சொல்லிப் பலநாள் வீட்டுக்கே வராமிலிருந்திருக்கிறாள்.

நாட்கள் செல்லச் செல்ல பாடசாலையிலிருந்து அழைப்புக்கள் வந்தது. அவளது ஒற்றைச் செல்ல மகள் பாடசாலைக்குப் போவதில்லை போதைமருந்து டிஸ்கோவென அலைவதாக. ஒருநாள் இரவு 7மணிபோல் வீட்டுக் கதவை காவல்துறை தட்டும் வரையும் தனது மகள் பற்றி எதையுமே அவள் அறியாமல்தானிருந்தாள். போதைவஸ்து விற்றதில் பிடித்ததாக ஒருநாள் காவல்துறை அவளைக்கைது செய்து கொண்டு போனதோடு இவளது உலகம் தலைகீழாகியது. அவளது அழகான பூங்காக்கள் நிறைந்த மாளிகையின் இராஜகுமாரியின் வில்லுவண்டில் உடைந்து நொருங்க அவளது மகளை அவள் இழந்து போனாள்.

துக்கம் மகளைப் பிரிந்த இயலாமையென தன்மீது கோபம் வரும் போதெல்லாம் யேர்மனியக் கணவனுடன் வாய்த்தர்க்கத்தில் மல்லுக்கு நிற்பாள். இந்திய மனைவி கிடைத்ததற்காக பெருமைப்படுவதாகச் சொன்னவன் சிகரெட்டால் சுடுவது கையில் கிடைப்பதால் அவளைக்காயப்படுத்துவது என ஆசியக்கணவனின் ஆயுதத்தைக் கையிலெடுத்தான்.

எல்லாம் தன் கைகளை விட்டுப்போய்விட்டதான ஏக்கம். மனசெல்லாம் சல்லடையாய் போயிருக்க அவன் விரும்பும் தருணங்களில் அவனுடன் ஒன்றாயிருக்க வேண்டிய நரகம் அவளுக்கு. குருதிப்போக்கு அதிகரித்து தொடர்ந்து இயங்க முடியாத நிலையிலும் அவனோடு உடன்பட்டு ஆகவேண்டிய தொல்லை. பொழுது இருள் போர்த்தினால் இவளுக்கு பேய்களும் பிசாசுகளும் சுற்றுவது போல.

இறுதியில் ஒருநாள் அவன் இல்லாத நேரமாகப் பார்த்து அயல் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தாள். அவர்கள் சேர்த்து விட்டதே பெண்கள் விடுதி நிலையம். மகளுமில்லை மனதில் நிம்மதியுமில்லாமல் தனித்துப் போனாள் திவ்யமதி.

அன்றைய சந்திப்பின் பின் அடிக்கடி வீட்டுக்கு வருவாள். பிள்ளைகளுடன் விளையாடுவாள். என்னவனுடன் கதைப்பாள். நீ என்ரை தம்பியைப்போல என்பாள். நீ எனக்குக் கடவுள் என கண்கள் பனிக்க என்னைக் கட்டியழுவாள். ஒருநாள் தொலைபேசியெடுத்துச் சொன்னாள் மருத்துவமனையில் இருப்பதாக நானும் என்னவனும் போய்ப்பார்த்தோம். தனது அக்காவின் தொலைபேசியிலக்கத்தைத் தந்து தகவல் சொல்லச் சொன்னாள். தலைக்குள் ஏதோ செய்வதாகவும் தற்கொலை பண்ண வேண்டும் போலிருப்பதாகவும் சொல்லியழுதாள். அவளை ஆற்றவோ தேற்றவோ வார்த்தைகளற்று நாங்கள் இருவரும்.....

2நாள் கழித்து மீளவும் மருத்துவமனை போனோம். திவ்யமதி அங்கில்லை. அவளை அவளது கணவன் கூட்டிக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள். தொடர்புக்கு இலக்கம் எதுவும் கொடுக்காமல் போய்விட்டாள்.

பின்னர் ஒருதரம் தொடர்பு கொண்டு சொன்னாள். தனது கணவன் ஒற்றுமையாக வந்து கேட்டதில் தானும் சம்மதித்துப் போனதாக. இப்ப பிரச்சனையில்லையென்றாள். ஒருமாதம் கடந்த நிலையில் யூன்பதினாறு ஒரு பாசல் வந்தது. அதில் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்தும் பிள்ளைகளுக்கு இரண்டு ரீசேட்டும் என்னவனுக்கு ஒரு ரீசேட்டும். அது திவ்யமதியிடமிருந்து வந்திருந்தது. அவள் தந்த தொலைபேசியிலக்கத்தை அழுத்தினேன் நன்றி சொல்ல. அவளது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எப்போதாவது இவள் நினைவில் வருவாள் நானும் என்னவனும் அவளைப்பற்றிக் கதைப்போம். அவள் எங்காவது நலமோடு இருக்க வேண்டும் என்ற எனது பிரார்த்தனை இருக்கும். அதற்கும் அப்பால் வேறெதையும் செய்ய முடியாதிருந்தது. பெண்கள் விடுதியிலும் அவள் பற்றிய எந்தவித பதிவுகளும் இல்லாமல் போயிருந்தது.

இத்தனைக்குப் பின் இன்று என் முன் நின்று என் ஞாபகத்தை கிழறிவிட்டுள்ளாள் அன்றைப்போல்... மருத்துவமனையொன்றில் தாதியாக இருப்பதாகவும் யேர்மனியக் கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கிவிட்டதாகவும் சொன்னாள். தனக்குத் தெரிந்த ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணைப் பற்றி ஏதோ சொல்ல வேண்டும் என அந்தக்கூட்டத்தை விட்டு சற்றுத் தள்ளி அழைத்துப் போனாள்.

அந்த இலங்கைத் தமிழச்சிக்கும் அவளது கணவனுக்கும் நெடுகலும் பிரச்சனையாம். அவளை அவன் மிருகத்தனமாக அடிப்பானாம். அந்தப்பெண்ணின் மகளின் தோழியாயிருந்த 18வயது யேர்மனியப் பெண்ணோடு தொடர்பாம். இது பற்றி அவள் விசாரித்ததில் அவனுக்குக் கோபம் வந்து அந்தப்பெண்ணின் பெண்ணுறுப்பில் தும்புத்தடியால் குற்றி அடித்திருக்கிறான். இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மறைத்து வைத்திருக்கிறாள். முதல் நாள் கடைவீதியில் கண்டவள் திடீரென மருத்துவமனையில் என்றதைக் கேட்டு திவ்யமதி போயிருந்தாள் அவளைப் பார்க்க.அப்போதே இந்த அவலத்தை அந்தத் தமிழச்சி இவளுக்குச் சொல்லியழுதிருக்கிறாள்.

அவளின்ரை மகள் நல்லவடிவான பிள்ளை. என்ரை மகளைப் போலயிருக்கிறாள். அவள் பாவம். அவளுக்காகக் கட்டாயம் உதவ வேணும். பொலிஸ் இப்ப அந்தப்பிள்ளையை அவேடை வீட்டிலை விடாமல் இளையோர் பராமரிப்பிடத்திற்கு அனுப்பியிருக்கு. விசர் பிடிச்சாக்கள் மாதிரி தாயைப்பாக்க வருவாள். பிறகு அழுதபடி போயிடுவாள் என்றாள் திவ்யமதி.

கேட்கவே உயிர் வலித்தது. மனசெல்லாம் ரணமாகி அவளுக்காக அழுதது விழிகள். உன்ர மகள் எங்கே ? கேட்ட எனக்கு தனது மகளைப்பற்றி எதையும் சொல்லாமல் கண்ணீர் விட்டாள். அவளது இராஜகுமாரி பற்றிய அவளது கனவுகள் பொடியாகி....கண்ணீர் மட்டும் மீதமாக....திவ்யமதி.

வீடு வந்து நெடு நேரமாகியும் திவ்யமதி சொன்ன தமிழச்சியின் நினைவாகவே இருந்தது.

09.07.2008

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தான் ஊரில இருக்க முடியாது. சிங்கள அரசின் கொடுமைகளுக்கு தப்பி வெளினாடுகளுக்கு வருகிறோம். ஆனால் இந்தியர்களுக்கு அவர்களின் நாட்டில உயிரோட சுதந்திரத்தோட வாழலாம். அதை விட்டு விட்டு வெளினாடுகளுக்கு வந்து சீரளியும் இந்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இங்கு அவுஸ்திரெலியாவில் கல்வி கற்க பல இந்தியர்கள் வருகிறார்கள். படித்து முடித்தால் அவுஸ்திரெலியாக் குடியுரிமை கிடைக்கும் என்ற கனவுடன் வருகிறார்கள். படிப்பதற்கு அதிக பணம் தேவை. அவுஸ்திரெலியச்சட்டத்துக்கு முரணனா முறையில் பணம் சம்பாதிக்கிறார்கள் பல இந்தியர்கள். அதிலும் சில வட இந்தியப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிக்கிறார்கள். இந்தியாவில் படிக்க முடியாதா?.

பதிவு மிகவும் நன்றாயுள்ளது. "நாற்பத்தியேழுநாட்கள் "திரைப்படத்தை அறிவும் அனுபவமும் கலந்து மிகத்திறமையாய் றீமேக் செய்ததோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு சிறு ஆதங்கம். பிறரின் உணர்வுகளை உங்களதாக உள்வாங்கக் கூடியதும், உள்வாங்கியதைத் தத்ரூபமாய்ச் சொல்லக்கூடியதுமான தன்மை பெற்றுள்ளீர்கள். இந்தப் பெண்ணின் கதை கூட உங்களின் இத்தன்மைக்கு எடுத்துக் காட்டு. இருப்பினும், மனவியாதி தொடர்பில் நீங்கள் இக்கதையில் பேசிய இடங்களில் எல்லாம், அவை பற்றிய உங்களது விபரிப்புக்களில் எல்லாம், எமது சமூகத்தில் மனவியாதிகள் பற்றிப் புரையோடிப்போயிருக்கும் அறியாமை உங்களிலும் வெளிப்படுவது உறுத்துகிறது.

இது பற்றி நான் பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. மனவியாதி பற்றிய உங்கள் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்று முடியுமானால் சுயபரிசீலனை செய்துபாருங்கள். முடியுமானால் கொஞ்சம் தேடுங்கள். உள்ளார உங்களை விசாரியுங்கள். இது பற்றிய தெளிவினை நீங்கள் பெறுகையில் நிச்சயம் உங்களால் பலர் பயன் பெறுவர் என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

சாந்தி அக்கா இன்னுமொருவன் சொன்னமாதிரி கதை எழுதும் கலை சயந்தனைப்போல உங்களுக்கும் நல்லாய் வாச்சு இருக்கிது.

:unsure: ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் முழுமெண்டல் ஆக்கிறதெண்டே தீர்மானிச்சுட்டீங்க போல இருக்கிது.

நீண்ட நாட்களின் பின்பு,உங்கள் படைப்பை வாசிக்க கிடைத்தமைக்கு நன்றீ சாந்தி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

திவ்யமதி அவளது சகோதரி என்பதும் இந்தியாவிலிருந்து ஒரு யேர்மனியன் இவளைத் திருமணம் செய்து வந்ததும் அவனது தொல்லைகள் தாங்காமல் இவள் தனித்து பெண்கள் விடுதியில் இருப்பதும் தெரியவந்தது.

யெர்மன் காரன் எங்கடையாக்களோடை சினேகிதம் போலை.. :unsure::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவு மிகவும் நன்றாயுள்ளது. "நாற்பத்தியேழுநாட்கள் "திரைப்படத்தை அறிவும் அனுபவமும் கலந்து மிகத்திறமையாய் றீமேக் செய்ததோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு சிறு ஆதங்கம். பிறரின் உணர்வுகளை உங்களதாக உள்வாங்கக் கூடியதும், உள்வாங்கியதைத் தத்ரூபமாய்ச் சொல்லக்கூடியதுமான தன்மை பெற்றுள்ளீர்கள். இந்தப் பெண்ணின் கதை கூட உங்களின் இத்தன்மைக்கு எடுத்துக் காட்டு. இருப்பினும், மனவியாதி தொடர்பில் நீங்கள் இக்கதையில் பேசிய இடங்களில் எல்லாம், அவை பற்றிய உங்களது விபரிப்புக்களில் எல்லாம், எமது சமூகத்தில் மனவியாதிகள் பற்றிப் புரையோடிப்போயிருக்கும் அறியாமை உங்களிலும் வெளிப்படுவது உறுத்துகிறது.

இது பற்றி நான் பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. மனவியாதி பற்றிய உங்கள் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்று முடியுமானால் சுயபரிசீலனை செய்துபாருங்கள். முடியுமானால் கொஞ்சம் தேடுங்கள். உள்ளார உங்களை விசாரியுங்கள். இது பற்றிய தெளிவினை நீங்கள் பெறுகையில் நிச்சயம் உங்களால் பலர் பயன் பெறுவர் என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

பகிர்வுக்கு நன்றிகள் இன்னும்ஒருவன்.

நீங்கள் குறிப்பிட்ட விடயங்களில் கவனம் எடுக்கிறேன். தங்கள் விமர்சனம் இத்தகைய பலவிடயங்கள் பற்றி யோசிக்க வைத்துள்ளது.

சாந்தி அக்கா இன்னுமொருவன் சொன்னமாதிரி கதை எழுதும் கலை சயந்தனைப்போல உங்களுக்கும் நல்லாய் வாச்சு இருக்கிது.

:lol: ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் முழுமெண்டல் ஆக்கிறதெண்டே தீர்மானிச்சுட்டீங்க போல இருக்கிது.

கலைஞா கருத்துக்கு நன்றிகள்.

முழுமெண்டல் ஆக்கும் எண்ணமில்லை. நம்மோடு கூட அல்லது நமக்குப் பிடித்தவர்களது துயர்நிலை அதை அப்படியே பகிரச்சொல்கிறது மனசு அவைதான் இத்தகைய எழுத்துக்கள். இப்பதிவுகளை சிறுகதையென்றோ அல்லது ஏதோவொரு இலக்கியமென்றோ சொல்லத் தெரியவில்லை. ஒரு சம்பவத்தை பதிவு செய்துள்ளேன் அதுதான்.

நீண்ட நாட்களின் பின்பு,உங்கள் படைப்பை வாசிக்க கிடைத்தமைக்கு நன்றீ சாந்தி அக்கா.

நன்றிகள் நிதர்சன். மீளவும் உங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி.

யெர்மன் காரன் எங்கடையாக்களோடை சினேகிதம் போலை.. :unsure::rolleyes:

சினேகிதிகளின் கணவர்கள் தேடுகிறார்கள் சினேகிதத்தை தேடி :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தான் ஊரில இருக்க முடியாது. சிங்கள அரசின் கொடுமைகளுக்கு தப்பி வெளினாடுகளுக்கு வருகிறோம். ஆனால் இந்தியர்களுக்கு அவர்களின் நாட்டில உயிரோட சுதந்திரத்தோட வாழலாம். அதை விட்டு விட்டு வெளினாடுகளுக்கு வந்து சீரளியும் இந்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இங்கு அவுஸ்திரெலியாவில் கல்வி கற்க பல இந்தியர்கள் வருகிறார்கள். படித்து முடித்தால் அவுஸ்திரெலியாக் குடியுரிமை கிடைக்கும் என்ற கனவுடன் வருகிறார்கள். படிப்பதற்கு அதிக பணம் தேவை. அவுஸ்திரெலியச்சட்டத்துக்கு முரணனா முறையில் பணம் சம்பாதிக்கிறார்கள் பல இந்தியர்கள். அதிலும் சில வட இந்தியப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிக்கிறார்கள். இந்தியாவில் படிக்க முடியாதா?.

இதுபோன்ற விடயங்கள் பல இங்கும் நடக்கிறது கந்தப்பு.

இந்திய ஆண்கள் பலரும் இங்கு படிப்புக்கு வந்து பின்னர் வெள்ளையினப்பெண்களைத் தங்கள் மனைகளாக்கி அதன்பின் நல்ல வீசா கிடைத்ததும் அவர்களைக் கைவிடுவதும் நடக்கிறது. பின்னர் இந்தியா போய் இந்திய மனைவிகளை இறக்குமதி செய்வது கூட சாதாரணமாக நடக்கிறது.

இந்தியாவில் படிக்கவென பலர் இந்தியா செல்கின்றனர் இங்கிருந்து அங்கு செல்கின்றனர் பலர் இது 'அக்கரைக்கு இக்கரை பச்சை' நிலைதான்.

. அதிலும் சில வட இந்தியப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிக்கிறார்கள். இந்தியாவில் படிக்க முடியாதா?.

:( எப்படி இந்தவிடயம் உங்களுக்கு தெரியும்? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:( எப்படி இந்தவிடயம் உங்களுக்கு தெரியும்? :lol:

அப்புவை ஆபத்தில் மாட்டுறீங்கள் ஜில் :D பாவம் அப்பு ஆச்சியிட்டை பிரப்பங்கட்டையாலை...... :(

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற விடயங்கள் பல இங்கும் நடக்கிறது கந்தப்பு.

இந்திய ஆண்கள் பலரும் இங்கு படிப்புக்கு வந்து பின்னர் வெள்ளையினப்பெண்களைத் தங்கள் மனைகளாக்கி அதன்பின் நல்ல வீசா கிடைத்ததும் அவர்களைக் கைவிடுவதும் நடக்கிறது. பின்னர் இந்தியா போய் இந்திய மனைவிகளை இறக்குமதி செய்வது கூட சாதாரணமாக நடக்கிறது.

இந்தியாவில் படிக்கவென பலர் இந்தியா செல்கின்றனர் இங்கிருந்து அங்கு செல்கின்றனர் பலர் இது 'அக்கரைக்கு இக்கரை பச்சை' நிலைதான்.

இதே போல இங்கு சில படிக்கவரும் இந்தியப் பெண்களும், ஆண்களும் கணவர் மனைவி மார் மாதிரி இருப்பார்கள். படித்து முடிந்தபின்பு இந்தியாவில் இருந்து வரும் அப்பாவி ஆண், பெண்களை கல்யாணம் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:( எப்படி இந்தவிடயம் உங்களுக்கு தெரியும்? :(

கணக்க ஊதாரணங்கள் இருக்கிறது. பில்லு என்ற உணவகம் கரிஸ் பார்க்கில் இருக்கிறது. இதனை வட இந்தியர் நடாத்துகிறார். இங்கு வேலை செய்பவர்கள் இந்தியாவில் இருந்து படிக்கவரும் வட இந்தியப் பெண்கள். இவர்களுக்கு படிப்பதற்கு அதிக பணம் தேவை. முதலாளி தன்னை அனுசரித்துப் போனால் தான் அங்கு வேலை செய்யலாம் என்று மறைமுக நிபந்தனை. அவுஸ்திரெலியாவில் படிக்க வருபவர்கள் 20 மணித்தியாலத்துக்கு மேல் கிழமைக்கு வேலை செய்ய முடியாது. சில வட இந்தியப் பெண்கள் அங்கு வேலை செய்வதை நிறுத்திவிட்டார்கள். மற்றவர்கள் அனுசரித்துப் போகிறார்கள்.

இதை விட மாலை நேரங்களில் படித்து முடித்ததும் நன்றாக வெளிக்கிட்டுக் கொண்டு பேருந்து நிலையமொன்றின் அருகில் வட இந்தியப் பெண்கள் காத்திருப்பார்கள். ஒரு வான் வந்து அவர்களை ஏற்றிக் கொண்டு செல்லும். இதனை நான் காணவில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் சொன்னார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே போல இங்கு சில படிக்கவரும் இந்தியப் பெண்களும், ஆண்களும் கணவர் மனைவி மார் மாதிரி இருப்பார்கள். படித்து முடிந்தபின்பு இந்தியாவில் இருந்து வரும் அப்பாவி ஆண், பெண்களை கல்யாணம் செய்கிறார்கள்.

ஈழத்தமிழர்களும் இந்த வழியில் விலக்கில்லை.

ஐரோப்பிய அனுபவம் பின்னர் 18வயதில் அழகிகளை எதிர்பார்க்கும் அழகர்களும் நிறைய....

இதை விட மாலை நேரங்களில் படித்து முடித்ததும் நன்றாக வெளிக்கிட்டுக் கொண்டு பேருந்து நிலையமொன்றின் அருகில் வட இந்தியப் பெண்கள் காத்திருப்பார்கள். ஒரு வான் வந்து அவர்களை ஏற்றிக் கொண்டு செல்லும். இதனை நான் காணவில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் சொன்னார்கள்.

வானில் ஏறிப்போனால் விபச்சாரம்தான் செய்கிறார்கள் என்று நினைக்கத் தேவையில்லைத்தானே அப்பு :(

  • கருத்துக்கள உறவுகள்

வானில் ஏறிப்போனால் விபச்சாரம்தான் செய்கிறார்கள் என்று நினைக்கத் தேவையில்லைத்தானே அப்பு :(

உண்மைதான். ஆனால் அடிக்கடி அந்த வானைப்பார்ப்பவர்கள் சொல்லும் செய்தியோ .............................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.