Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையமும் துரோகி!

Featured Replies

நான் துரோகி! நீயும் துரோகி!

என்னையும் உன்னையும் பெற்ற பெற்றோர் துரோகி!

பெற்றவரைப் பெற்ற பேரன்,பூட்டன் முப்பாட்டனாரும் துரோகி!

அவன் துரோகி! இவன் துரோகி!

அவனைத் தெரிந்த அவள் துரோகி!

அவளுக்கு தெரியாமல் தெரிந்த அதுவும் துரோகி!

கடல் துரோகி! காற்று துரோகி!

கடலையும் காற்றையும் இணைக்கின்ற கதிரவன் துரோகி!

கதிரவனை சுற்றிவருகின்ற பூமியும் துரோகி!

கடவுள் துரோகி! கடவுளுக்கு கோயில்கட்டிய பக்தன் துரோகி!

பக்தனுக்கு சோறுபோட்ட பக்தை துரோகி! பக்தையுக்கு

பின்னால் அலைந்த பித்தனும் துரோகி! புத்தனும் துரோகி!

பறவைகள் பல்லி பாம்பு பூச்சி புழுக்கள் அனைத்தும் துரோகி!

நினைத்துப்பார்க்க நினைவில் வருகின்ற நினைப்பும் துரோகி!

நினைப்பைத் தூண்டுகின்ற நரம்பு துரோகி! மூளை துரோகி!

மூச்சு துரோகி! பேச்சு துரோகி! முழுவதும் துரோகி!

எழுதுகின்ற நாங்கள் துரோகி! வாசிக்கின்ற நீங்கள் துரோகி!

இதையெல்லாம் பிரசுரித்த யாழ் இணையமும் துரோகி!

[quote name='கலைஞன்' date='Aug 26 2009, 03:21 AM' post='536720'

புத்தனும் துரோகி!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் தொடரலாம்.....

ஆதரவளித்த உறவு துரோகி

நிதம் எதிரியை வையும் வைகோ துரோகி

சீறும் குரலோன் சீமானும் துரோகி

நேர்மையுடைய நெடுமாறன் துரோகி

மானும் துரோகி மயிலும் துரோகி

அதை ஆடவைத்த கலைஞரோ இரட்டைத் துரோகி

அமெரிக்கன் துரோகி

அவுஸ்திரேலியன் துரோகி

சீனனும் துரோகி பாக்கியும் துரோகி

மலேசியன் துரோகி தாய்லாந்தும் துரோகி

கனடியன் துரோகி சுவிசும் துரோகி

நோர்வேகாரனோ உலகின் தலைமைத் துரோகி

இப்படியும் தொடரலாம்.....

அமெரிக்கன் துரோகி

அவுஸ்திரேலியன் துரோகி

சீனனும் துரோகி பாக்கியும் துரோகி

மலேசியன் துரோகி தாய்லாந்தும் துரோகி

கனடியன் துரோகி சுவிசும் துரோகி

நோர்வேகாரனோ உலகின் தலைமைத் துரோகி

இந்த நாடுகளில் வந்து குடியேறிய

ஒறிஜினல் தமிழன் நாங்கள் மட்டும் `

துரோகியல்ல துரோகியல்ல

Edited by Jil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கலைஞன் நீங்களும் துரோகிகள் பற்றி பேச்சுக்கு வந்திட்டீங்க... போல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாடுகளில் வந்து குடியேறிய

ஒறிஜினல் தமிழன் நாங்கள் மட்டும் `

துரோகியல்ல துரோகியல்ல

துரோகி இல்ல தியாகி சரிதான ஜில்லு

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,

என்ன திடீர் எண்டு இப்படி எல்லாம் குளப்புறீங்கள்......குளம்புறீங

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பத்தான் சில பேருக்கு சுடலை ஞானம் வந்திருக்கு.அதுவும் தாங்கள் முன் காலங்களில் விட்ட 'துரோகி ' அம்பு மீண்டும்

திரும்பி தங்களையே தாக்கி வருவதை தாங்க முடியாமல் 'நீயும் பொம்மை நானும் பொம்மை 'பாணியில் எல்லாம் துரோகி

பாடுகிறார்கள். யாராவது தங்களை மீறி ஏதாவது செய்து விட்டாலோ செய்ய முயற்சித்தாலோ 'இவன் தேசியத்து எதிராக கருத்து

சொல்லுறான் என்று துரோகி ஆக்கியவர்கள் இப்போது தங்களையே இந்த துரோகி வரைவிலக்கணத்துக்குள் (தாங்களே உருவகித்த)

சிக்குப்பட்டு உள்ளதால் இந்த நானும் துரோகி நீயும் துரோகி வருகுது. நல்லதுதான்...

ஐயா நாலு வர்க்கம்,

அப்ப நீங்கள் இவ்வளவு காலமும் எங்கனைக்க நிண்டு மினக்கட்டனீங்கள்? முன்னாள் போராளி எண்டு பீலா காட்ட போறீங்களோ? இல்லாட்டிக்கு இந்நாள் புதிய போராளி ஆகாயத்தில இருந்து வந்து குதிச்சு இருக்கிறீங்களோ? உங்கள் சேவைகளையும், தியாகங்களையும் பற்றியும் கொஞ்சம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்ன கலைஞன் நீங்களும் துரோகிகள் பற்றி பேச்சுக்கு வந்திட்டீங்க... போல...

வேறொன்றும் இல்லை. அண்மைக்காலத்தில ஆளையாள் துரோகி என்று சொல்லுறீனம். கடவுள் தூணிலு இருப்பார் துரும்பிலும் இருப்பார் எண்டுறதுமாதிரி.. துரோகி எண்டுறது.. சர்வமும் துரோகமயம் எண்டு கீதா உபதேசம் செய்யக்கூடிய நிலையில இருக்கிது. இதனால ஒரு சின்ன ஆன்மீகத்தேடல்.. துரோகியைத் தேடினால் கடைசி கடவுளை - மெய்பொருளாவது காணலாமோ என்று ஆன்மீக ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா மாப்பிழை பாத்தீங்ளோ..ஒன்றில் துரோகி இல்லாட்டி போராளி. இது ரெண்டை விட்டால் வேறை எதிலேயும் நிற்கமாட்டீங்கள்

போல இருக்கு. சுல்தான் இல்லாட்டி பக்கிரிதான் உங்க நிலை. முன்னாள் போராளி எண்டு பீலா காட்டினால் நீங்கள் நம்புவீங்களோ?

முன்னாள் போராளிகள் நாச்சிமார் கோவிலடியிலை 'என்ரை அப்பா விசுவநாதனுக்கு அடிச்சவங்கள்' என்டு இப்பவும் கறுவுற

இன்னாள் போராளி உருத்திரகுமார் விடுகிற பீலாக்களை காவுற நீங்கள் எப்பிடி எங்கடை பீலாக்களை நம்புவீங்கள்.

என்ரை சேவையையும் தியாகங்களையும் கேட்டிருந்தீங்கள்.

தியாகம்: செத்தாப் பிறகுதான் தெரியும்.இப்ப அதுக்கும் வழியில்லை.

சேவை: இப்பிடித்தான் உங்களோடை மல்லுக்கட்டுறது.

ஓஹோ மல்லுக்கட்டுறதோ.. அப்ப சரியான இடத்துக்குத்தான் சேவை செய்ய வந்து இருக்கிறீங்கள். சரி அப்ப மிச்சம்.. பிறகு சந்திப்பம்.

நல்ல கவிதை. வாழ்த்துகள்.

என்ன கலைஞன், புத்தன் என்ன நினைப்பார். அவரையும் துரோகி என்று சொல்லிப்போட்டீங்கள். :icon_idea:

actually உங்கடை கேள்விக்கு பதில் சொல்லிறது கஸ்டமாய் இருக்கிது யாழ்கவி. எண்டபடியால நீங்களே சொல்லுங்கோ அவர் என்ன நினைப்பார் எண்டு. :icon_mrgreen:

இப்படியும் தொடரலாம்.....

ஆதரவளித்த உறவு துரோகி

நிதம் எதிரியை வையும் வைகோ துரோகி

சீறும் குரலோன் சீமானும் துரோகி

நேர்மையுடைய நெடுமாறன் துரோகி

மானும் துரோகி மயிலும் துரோகி

அதை ஆடவைத்த கலைஞரோ இரட்டைத் துரோகி

அமெரிக்கன் துரோகி

அவுஸ்திரேலியன் துரோகி

சீனனும் துரோகி பாக்கியும் துரோகி

மலேசியன் துரோகி தாய்லாந்தும் துரோகி

கனடியன் துரோகி சுவிசும் துரோகி

நோர்வேகாரனோ உலகின் தலைமைத் துரோகி

அப்படியோ..

இந்த நாடுகளில் வந்து குடியேறிய

ஒறிஜினல் தமிழன் நாங்கள் மட்டும்

துரோகியல்ல துரோகியல்ல

பிறகு பேச்சு மாறக்கூடாது என.

துரோகி இல்ல தியாகி சரிதான ஜில்லு

அப்பிடியும் சொல்லலாம்.

கலைஞன், என்ன திடீர் எண்டு இப்படி எல்லாம் குளப்புறீங்கள்......குளம்புறீங

மாப்பிள்ளை ,

இதெல்லாம் ஓவராய் தெரியல? துரோகி பட்டம் கொடுக்கும் ஒரு சிலரை வைத்துகொண்டு

முழு யாழ் இணையமும் ஏதோ துரோகி பட்டம் வழங்குவது போல தலைப்பிருப்பது நல்லதல்ல.

இந்த "துரோகி" எண்ட சொல்லை கருதுக்களில் இருந்து நீக்க முடியும் தானே? database இற்கு insert பண்ண முதல். செய்தால் நல்லது.

எவரிண்ட துரோகிகளிண்ட Database என்று ஒருக்கால் விபரமாய் சொல்லுங்கோ:

ஒவ்வொரு நாட்டில இருந்து வெளிவருகிற ஒவ்வொரு தமிழ் பத்திரிகைகளும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

வலைப்பூக்களில ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

தமிழ் வானொலிகளில ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

சிறீ லங்கா அரசாங்கம் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

சிறீ லங்காவில இருக்கிற ஆயுதக்குழுக்கள் ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

சிறீ லங்காவில இருக்கிற அரசியல்கட்சிகள் ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

இதர அமைப்புக்கள், நிறுவனங்கள் ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட Database வச்சு இருக்கிறீனம்.

இதனால.. இந்த உலகத்தில நீங்கள் யாராவது ஒருத்தரிண்ட தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Databaseஇல உங்கடை பெயரும் இருக்கிறதில இருந்து தப்ப ஏலாது.

Edited by மாப்பிள்ளை

அப்படியேண்டா , சர்வசாதாரணமா எல்லோருக்கும் துரோகி database இருக்கும் போது, நாம் ஏன் இந்த விடயத்தை தூக்கி பிடிக்கவேண்டும்???

எம்மை பொல தான் சாதாரணா சிங்கள மக்களும் , தமக்கு எதிரானாவர்கள் ஏண்டு யார் மீதும் குற்றம்சாட்டினால் , அன்றுமுதல் துரோகி ஆகவோ, எதிராளியாகவோ

தான் பாக்கிறார்கள்...., உண்மையா பொய்யா எண்டு பார்க்கிறேல...

இதுவும் ஓர் அவலம்தான். எனக்கு இப்ப சின்னனில் நாலாம் வகுப்பு சொச்சத்தில படிச்ச கதை ஒண்டு நினைவுக்கு வருகிது.

ஓர் பேரூந்தில ஆக்கள் பயணம் செய்துகொண்டு இருக்கேக்க... திடீரெண்டு மோசமாக இடி மின்னலோட மழை அடிக்கது துவங்கீடும். இடி இடியாய் விழுந்துகொண்டு இருக்கும். அப்ப பேருந்துக்க இருக்கிற ஆக்கள் என்ன சொல்லுவீனம் எண்டால் இந்த பேரூந்துக்க ஒரு பாவி இருக்கிறான். அவனாலதான் இப்பிடி எல்லாம் சோதனையாய் இருக்கிது. அவனைக் கண்டுபிடிக்கிறதுக்கு ஒவ்வொருத்தராய் பேருந்தால இறங்கி அருகில இருக்கிற மரத்தடிக்குபோய் வரவேணும் எண்டு.

ஒவ்வொருத்தராய் பேரூந்தால இறங்கி மரத்தடி ஒண்டுக்குபோய் திரும்பி வருவீனம். இடி அந்தமாதிரி விழுந்துகொண்டு இருக்கிது. எல்லாரும்போய் வந்தாச்சிது. ஒருத்தன் மாத்திரம் இறங்க இல்லை. அப்ப என்ன எண்டால் சனம் எல்லாம் அவன்தான் அந்தக் கூடாத பாவி எண்டு திட்டத்துவங்குங்கள்.

அவனுக்கு சரியான பயம் வந்திடும். வெளியில இடிவிழுந்துகொண்டு இருக்கிது. பேரூந்தால இறங்கி மரத்தடிக்கு போய்வர பயப்படுவான். சனம் எல்லாம் முணுமுணுத்து அவனுக்கு கரைச்சல் குடுக்க கடைசி ஆளாய் அவன் மெல்ல மெல்ல மரத்தடிக்கு நடந்து போவான். அவன் மரத்தடிக்கு போன உடன மீண்டும் பெரியதொரு சத்தம்..!

என்ன எண்டு திரும்பி பார்தால் பேரூந்துமேல ஓர் இடிவிழுந்து பேருந்து எரிஞ்சுகொண்டு இருக்கும். பேரூந்துக்க இருந்து சனங்களிண்ட அவலக்குரல் கேட்டுக்கொண்டு இருக்கும்.

அதாவது..

பாவி எண்டு சொல்லப்பட்ட அவனுக்கு ஒன்றும் நடக்க இல்லை. ஆனால் மிச்ச சனம் எல்லாம் செத்துப்போயிடும்.

அவன் ஒரு அப்பாவி எண்டு கடவுள் தீர்மானிச்சாரோ என்னமோ...!

இதுவெறும் கதைதான். ஆனால்... பல அர்த்தங்கள் உள்ளது என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் எனக்கு நிம்மதி.. :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் துரோகி! நீயும் துரோகி!

என்னையும் உன்னையும் பெற்ற பெற்றோர் துரோகி!

பெற்றவரைப் பெற்ற பேரன்,பூட்டன் முப்பாட்டனாரும் துரோகி!

அவன் துரோகி! இவன் துரோகி!

அவனைத் தெரிந்த அவள் துரோகி!

அவளுக்கு தெரியாமல் தெரிந்த அதுவும் துரோகி!

கடல் துரோகி! காற்று துரோகி!

கடலையும் காற்றையும் இணைக்கின்ற கதிரவன் துரோகி!

கதிரவனை சுற்றிவருகின்ற பூமியும் துரோகி!

கடவுள் துரோகி! கடவுளுக்கு கோயில்கட்டிய பக்தன் துரோகி!

பக்தனுக்கு சோறுபோட்ட பக்தை துரோகி! பக்தையுக்கு

பின்னால் அலைந்த பித்தனும் துரோகி! புத்தனும் துரோகி!

பறவைகள் பல்லி பாம்பு பூச்சி புழுக்கள் அனைத்தும் துரோகி!

நினைத்துப்பார்க்க நினைவில் வருகின்ற நினைப்பும் துரோகி!

நினைப்பைத் தூண்டுகின்ற நரம்பு துரோகி! மூளை துரோகி!

மூச்சு துரோகி! பேச்சு துரோகி! முழுவதும் துரோகி!

எழுதுகின்ற நாங்கள் துரோகி! வாசிக்கின்ற நீங்கள் துரோகி!

இதையெல்லாம் பிரசுரித்த யாழ் இணையமும் துரோகி!

இப்படியும் தொடரலாம்.....

ஆதரவளித்த உறவு துரோகி

நிதம் எதிரியை வையும் வைகோ துரோகி

சீறும் குரலோன் சீமானும் துரோகி

நேர்மையுடைய நெடுமாறன் துரோகி

மானும் துரோகி மயிலும் துரோகி

அதை ஆடவைத்த கலைஞரோ இரட்டைத் துரோகி

அமெரிக்கன் துரோகி

அவுஸ்திரேலியன் துரோகி

சீனனும் துரோகி பாக்கியும் துரோகி

மலேசியன் துரோகி தாய்லாந்தும் துரோகி

கனடியன் துரோகி சுவிசும் துரோகி

நோர்வேகாரனோ உலகின் தலைமைத் துரோகி

இப்பத்தான் சில பேருக்கு சுடலை ஞானம் வந்திருக்கு.அதுவும் தாங்கள் முன் காலங்களில் விட்ட 'துரோகி ' அம்பு மீண்டும்

திரும்பி தங்களையே தாக்கி வருவதை தாங்க முடியாமல் 'நீயும் பொம்மை நானும் பொம்மை 'பாணியில் எல்லாம் துரோகி

பாடுகிறார்கள். யாராவது தங்களை மீறி ஏதாவது செய்து விட்டாலோ செய்ய முயற்சித்தாலோ 'இவன் தேசியத்து எதிராக கருத்து

சொல்லுறான் என்று துரோகி ஆக்கியவர்கள் இப்போது தங்களையே இந்த துரோகி வரைவிலக்கணத்துக்குள் (தாங்களே உருவகித்த)

சிக்குப்பட்டு உள்ளதால் இந்த நானும் துரோகி நீயும் துரோகி வருகுது. நல்லதுதான்...

எவரிண்ட துரோகிகளிண்ட Database என்று ஒருக்கால் விபரமாய் சொல்லுங்கோ:

ஒவ்வொரு நாட்டில இருந்து வெளிவருகிற ஒவ்வொரு தமிழ் பத்திரிகைகளும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

வலைப்பூக்களில ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

தமிழ் வானொலிகளில ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

சிறீ லங்கா அரசாங்கம் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

சிறீ லங்காவில இருக்கிற ஆயுதக்குழுக்கள் ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

சிறீ லங்காவில இருக்கிற அரசியல்கட்சிகள் ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Database வச்சு இருக்கிறீனம்.

அப்புறம்..

இதர அமைப்புக்கள், நிறுவனங்கள் ஒவ்வொருத்தரும் தங்கட தனிப்பட்ட Database வச்சு இருக்கிறீனம்.

இதனால.. இந்த உலகத்தில நீங்கள் யாராவது ஒருத்தரிண்ட தங்கட தனிப்பட்ட துரோகிகளிண்ட Databaseஇல உங்கடை பெயரும் இருக்கிறதில இருந்து தப்ப ஏலாது.

ம்.... தாத்தாதான் நினைவுக்கு வாறார். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நாலு வர்க்கம்,

அப்ப நீங்கள் இவ்வளவு காலமும் எங்கனைக்க நிண்டு மினக்கட்டனீங்கள்? முன்னாள் போராளி எண்டு பீலா காட்ட போறீங்களோ? இல்லாட்டிக்கு இந்நாள் புதிய போராளி ஆகாயத்தில இருந்து வந்து குதிச்சு இருக்கிறீங்களோ? உங்கள் சேவைகளையும், தியாகங்களையும் பற்றியும் கொஞ்சம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாப்பிளை உதையெல்லாம் பரகசியமாக கேக்கக்கூடாது. ஒளிச்சிருந்து ககைத்கிறதுதான் தியாகம்.

முன்னாள் போராளிகள் நாச்சிமார் கோவிலடியிலை 'என்ரை அப்பா விசுவநாதனுக்கு அடிச்சவங்கள்' என்டு இப்பவும் கறுவுற

இன்னாள் போராளி உருத்திரகுமார் விடுகிற பீலாக்களை காவுற நீங்கள் எப்பிடி எங்கடை பீலாக்களை நம்புவீங்கள்.

அப்ப உருத்திரகுமாரும் ***** ஏன் சனியனைப்பிடிச்சு...வேண்டாம்..... :(

என்ரை சேவையையும் தியாகங்களையும் கேட்டிருந்தீங்கள்.

தியாகம்: செத்தாப் பிறகுதான் தெரியும்.இப்ப அதுக்கும் வழியில்லை.

செத்தாப்பிறகு தியாகிகளானவையின் வரலாறுகளே அழிபட்ட நிலையில் புது வழி இல்லைத்தான்.

எண்டாலும் மல்லுக்கு நீங்கள் தான் மன்னர் :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் எனக்கு நிம்மதி.. :( :( :lol:

:D:lol::lol:

மாப்பிளை உதையெல்லாம் பரகசியமாக கேக்கக்கூடாது. ஒளிச்சிருந்து ககைத்கிறதுதான் தியாகம்.

:( சாந்தி அக்காவுக்கும் பகிடிவிடத்தெரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.