Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்திருந்தேன்... கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24/09/2009, 22:55

காத்திருந்தேன்... கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்!

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலா காக் கடுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரையும், அவரது மேலதிகாரி மைக்கேல் ஓ டயரையும் இங்கிலாந்து வரை தேடிச் சென்று, ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு ஜெனரல் டயர் இறந்துவிட, எஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை விழா ஒன்றில் சுட்டுக்கொன்றார் ஷாஹித் உத்தம் சிங்.

தன் தேசத்து மக்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட கொடியவனில் ஒருவனையாவது சுட்டுக் கொன்ற திருப்தியுடன் 31 ஜுலை 1940 அன்று இங்கிலாந்து நாட்டில் தூக்கிலிடப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டார். இவரது எஞ்சிய உடல் பாகங்கள் கல்லறையில் தோண்டி எடுக்கப்பட்டு, 1974-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அரச மரியாதையுடன் அவரது பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த மாவீரரைக் கவுரவப்படுத்தி 'காத்திருந்தேன்... கதை முடித்தேன்!' என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் நாடு போற்றும் வீரர்கள் வரிசையில் வரிசைப்படுத்தியிருந்தது. உண்மையாகவே, அந்த தேசிய உணர்வாளனின் தியாகம் போற்றப்பட வேண்டியதுதான். உலக மக்களும் அறிந்து கொள்ள வேண்டியதுதான். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஈழத் தமிழர்களான நாங்களும் இதய பூர்வமாக அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.

இப்படியேதான் நாங்கள் எங்கள் நாட்டுப் படுகொலைகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்... இந்திய தேசத்தை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர்கள் போலல்லாது நாங்கள் மலர்க்கொத்துக்கள் வழங்கி இந்திய அமைதிப்படையை வரவேற்ற காலம்... நம்பிக்கையோடு எம் தேசத்தின் அமைதிக் காற்றைச் சுவாசிக்கும் ஆவலில் குதூகலித்திருந்த காலம்... தமிழர்களைக் காப்பாற்ற என்ற கொட்டொலியுடன் 1987 இல் கால் பதித்த இந்திய அமைதிப்படையை நம்பி விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி காத்த காலம்...

தமிழீழ மண்ணில் கால் பதிக்கும்வரை அமைதிப் படையாகவே வந்த இந்தியப் படை தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதும், சுய ரூபம் காட்டியது. சிங்கள தேசத்தின் காவல் படையாக மாறிய இந்திய அமைதிப் படையின் துரோகத் தனத்தைக் கண்டு கொதித்த தமிழர்களை பொறுமை காக்க வைத்து திலீபன் அவர்களிடம் மூந்து அம்சக் கோரிக்கைகளை வைத்து, காந்திய தேசத்திடம் நீதி கோரி, காந்திய வளியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

1- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்ற சாதாரண கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று திலீபனால் ஆரம்பிக்கப்பட்ட தியாக வேள்வி இந்திய அரசால் கண்டு கொள்ளப்படாமலே விடப்பட்டது. உறுதி தளராத திலீபன் 26 செப்ரம்பர் 1987 சனிக்கிழமை காலை 10.48 மணிக்குத் தன் இறுதி மூச்சை எம் சுவாசத்தில் கலக்கவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.

எதிரியின் கொடுமையிலும் பார்க்க, துரோகியின் துரோகத்தின் வலி தமிழீழ மக்களின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. இதைத் தொடர்ந்தும் இந்தியத் துரோகத்திற்கு குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகள் பலியானதால் உருவான கொந்தளிப்பு இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் திரும்பியது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படை ஆரம்பித்த நம்பிக்கைத் துரோகப் போர் யாழ். வைத்தியசாலையையும் விட்டு வைக்கவில்லை.

யாழ். வைத்தியசாலைக்குள் புதுந்த இந்திய இராணுவம் அங்கு பணியாற்றிய வைத்தியர்கள், தாதிகள், நோயாளிகள் என்று யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து முன்னேறிய இந்திய இராணுவத்தின் கொலைக் கரங்களுக்கு சிறியவர், பெரியவர், இளைஞர், யுவதிகள், ஆண்கள், பெண்கள், வயோதிபர் என்ற வேறுபாடு தெரியவில்லை. காந்தி தேசத்தின் படைகள் ஈழத் தமிழர்கள் சுமார் பத்தாயிரம் பேரைக் காவு கொண்டது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத இந்தியப் படை 31 மார்ச் 1990 அன்று அன்றைய சிறிலங்கா அதிபர் பிரேமதாஸவால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது.

தமது உறவுகள் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக, இந்தியத் துரோகங்களுக்கும் ஈழப் படுகொலைகளுக்கும் காரணமான இந்தியாவின் அந்த நாளைய பிரதமர் ராஜீவ் காந்தி அதே உத்தம் சிங் பாணியில் பலி கொள்ளப்பட்டார். அன்று துப்பாக்கியுடன் டயரை நெருங்க முடிந்த உத்தம் சிங் போல அந்த தமிழீழப் பெண்ணால் நெருங்க முடிந்திருந்தாலும் நிச்சயம் குறி தவறியிருக்கும் என்பதால், தன்னையே வெடிகுண்டாக்கித் தன் வீர சபதத்தை முடித்துக் கொண்டாள் என்று ஈழத் தமிழர்கள் அவரை மாவீரராக ஏற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அன்று, உத்தம் சிங் எடுத்த முடிவைத்தான் பின்னர் தானு எடுத்தார். உத்தம் சிங் தேசிய வீரராக கவுரவிக்கப்பட்டது சரி என்றால், தானுவும் எமது மக்களால் தெசிய வீரங்கனையாகப் போற்றப்பட வேண்டியவர்தான். இந்தியா உத்தம் சிங்கிற்கு உரிய கவுரவம் வழங்க இங்கிலாந்து அரசு அனுமதித்தது போலவே, தமிழீழம் தானுவுக்கு உரிய கவுரவம் வழங்கப்போகும் காலத்தில் இந்தியாவும் அதற்கான அனுமதியை வழங்கவேண்டும்.

ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை

பதிவு

ம்ம்ம்ம்ம்ம்ம்......... சின்ன வித்தியாசம் தான் இருகொலைகளுக்குப் பிறகு! . டயரின் கொலைக்குப் பின்னமும் இந்திய தேசத்துக்கு ஒன்றும் நடக்கவுமில்லை, இந்திய மக்கள் எவராவது இறக்கவில்லை!!! ஆனால் ......................

இல்லை, ஈழநாட்டு ஆசிரியரின் மொழியில் கூறுவதானால் ....... ஒரு ராஜீவ் காந்திக்காக 50000 ஈழத்தமிழ் மக்கள்!!

........... அரைவேட்காட்டுத்தனமான எழுத்துக்கள்!!! ........ வயிற்றுப்பிழைப்புக்கான விபச்சாரங்கள்!!!!!!!!!!!!

க.....க்கு தெரியுமா??

கற்பூரவாசனை.....................

ம்ம்ம்ம்ம்ம்ம்......... சின்ன வித்தியாசம் தான் இருகொலைகளுக்குப் பிறகு! . டயரின் கொலைக்குப் பின்னமும் இந்திய தேசத்துக்கு ஒன்றும் நடக்கவுமில்லை, இந்திய மக்கள் எவராவது இறக்கவில்லை!!! ஆனால் ......................

இல்லை, ஈழநாட்டு ஆசிரியரின் மொழியில் கூறுவதானால் ....... ஒரு ராஜீவ் காந்திக்காக 50000 ஈழத்தமிழ் மக்கள்!!

........... அரைவேட்காட்டுத்தனமான எழுத்துக்கள்!!! ........ வயிற்றுப்பிழைப்புக்கான விபச்சாரங்கள்!!!!!!!!!!!!

நெல்லையன் உங்கள் கருத்துக்களை(?) கொஞ்சநாட்களாகவே பார்க்கின்றேன். நீங்கள் அரைவேக்காடன கருத்துக்களையும் வயிற்றுப்புழைப்புக்குமான கருத்துக்களை எழுதிக்கொண்டு மற்றவர்களை விமர்சிக்கின்றீர்கள்.

அடக்குமுறைக்குள் இருக்கின்ற மக்களே போராட ஆரம்பித்துவிட்டனர். நீங்கள் இன்னமும் வயிற்றுப்பிழைப்புக்காக கருத்தெழுதுகின்றீர்கள். வவுனியா முகாமிலுள்ள மக்கள் என்றைக்கு ஆயுத அடக்கு முறைக்கெதிராக மீண்டும் போராட ஆரம்பித்தார்களோ அன்றைக்கே அவர்கள் தங்கள் பாதையை தேர்ந்தெடுத்துவிட்டனர்.

ஆனால் நாம்தான் இன்னமும் அவர்களுடன் சேர்ந்து போராட தயங்குகின்றோம்.

பண்றி எப்போதும் சாக்கடையை நோக்கிதான் போகு அதை பற்றித்தான் எப்போதும் சிந்திக்கும்....

அண்ணன் வாழ்க, தலைவன் வாழ்க, அண்ணனுக்கு அரோகரா, தலைவனுக்கு அரோகரா, ஆனால் மக்கள்? :unsure::rolleyes::lol:

பண்றி எப்போதும் சாக்கடையை நோக்கிதான் போகு அதை பற்றித்தான் எப்போதும் சிந்திக்கும்....

தம்பிமாரே, திரும்ப, திருமப நூறுமுறை உந்த வசனத்தை சொல்லுங்கோ, அர்த்தம் புரியும் :o

அண்ணன் வாழ்க, தலைவன் வாழ்க, அண்ணனுக்கு அரோகரா, தலைவனுக்கு அரோகரா, ஆனால் மக்கள்? :unsure::rolleyes::lol:

உந்த நிலைக்கு முக்கிய காரணம் நீங்கள் தான் என்பதை எப்ப ஒத்துக்கொள்ள போகிறீர்கள்...???

மற்றவையிலை பழியை எவ்வளவுகாலத்துக்கு தூக்கி போட போகிறீர்கள் எண்டும் பாக்கலாம்....

Tiger leader appologises for 1991 killing of Indian prime minister

இராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் வருத்தற்திற்குரிய நிகழ்வு அன்ரன் பாலசிங்கம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=11797

இதைக்கூறிய பாலா அண்ணாவா அல்லது உதைக்கூறிய ஈழநாட்டு ஆசிரியரா பன்னாடை????? .............

..... தனி மனிதப்படுகொலைகள் மூலம் நாம் சாதித்தவைகள் என்ன??????????????

இப்போது இங்கிலாந்து டயரின் கொலை குறித்து இந்தியாவிடம் கேட்டாலும் இந்தியா அது ஒரு துன்பியல் சம்பவம் என்றே வர்ணிக்கும்..! அதுதான் அரசியல். ஒரு கொலைக்குற்றவாளியை ஒரு அரசு தூக்கில் போடுவதும் கூட ஒருவகையில் துன்பியல் சம்பவம்தான். அதற்காக அவன் செய்த கொலை இல்லையென்று ஆகிவிடாது. :unsure:

இந்திராவை கொண்ற சீக்கியன் இண்றுவரைக்கும் தான் செய்தது தவறு இல்லை எண்று தான் ஒட்டு மொத்தமாக சொல்கிறான் ஒற்றுமையாக இருக்கிறான்... இண்று இந்திய அரசு அவர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் நிலையில் இருக்கிறது....

ஆனால் 2 வருடத்தில் 12000 தமிழர்களை கொண்ற இந்திய தலைவரை கொண்றவர்கள் முட்டாள்கள் அறிவிலிகள்... அவர்கள் தண்டிக்க படுவது நியாயமானது... இதை கேடு கெட்ட தமிழனே சொல்கிறான்...

தமிழனின் அடிமைத்தனத்துக்கு இன்னும் 30 வருடம் போனாலும் இந்த நிலை மாற மாட்டது எண்டதை கட்டியம் சொல்கிறது...

சுறணை கெட்ட நாயள்... சொந்த நலனை மட்டுமே சிந்திக்கும் கேடு கெட்டதுகள்..

Edited by தயா

மனசாட்சிப்படி சொல்லுங்கள்....

ராஜீவ் கொல்லப்படாமல் இருந்திருந்தால் மட்டும் இந்தியா புலிகளுக்கு உதவியிருக்குமா????

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..... தனி மனிதப்படுகொலைகள் மூலம் நாம் சாதித்தவைகள் என்ன??????????????

தனிமனிதப் படுகொலை என்று சொல்கிறீர்களே இன்றும் கடத்தல் கப்பம் என்று யாழ்,வவுனியா,மட்டு,அம்பாறையி

தமிழன் வரலாற்றில் ஈழத்தமிழன் செய்த ஒரு நல்ல வரலாற்று பதிவு ராஜிவ் காந்தியை மரணிக்க வைத்தது. இந்தியாவின் கொட்டம் அடக்கப்பட்டது. .

எங்களை அழித்து விட்டு போகட்டும். இந்த வரலாறு அழியாது.

ம்ம்ம்ம்ம்ம்ம்......... சின்ன வித்தியாசம் தான் இருகொலைகளுக்குப் பிறகு! . டயரின் கொலைக்குப் பின்னமும் இந்திய தேசத்துக்கு ஒன்றும் நடக்கவுமில்லை, இந்திய மக்கள் எவராவது இறக்கவில்லை!!! ஆனால் ......................

இல்லை, ஈழநாட்டு ஆசிரியரின் மொழியில் கூறுவதானால் ....... ஒரு ராஜீவ் காந்திக்காக 50000 ஈழத்தமிழ் மக்கள்!!

........... அரைவேட்காட்டுத்தனமான எழுத்துக்கள்!!! ........ வயிற்றுப்பிழைப்புக்கான விபச்சாரங்கள்!!!!!!!!!!!!

உசார்!

யாரோ போடுற எலும்புத் துண்டுக்கு வாலாட்டிற நா-கள் யாழுக்குள்ளும் நுளைந்து குரைக்க ஆரம்பித்து விட்டதுகள்

ம்ம்ம்ம்ம்ம்ம்......... சின்ன வித்தியாசம் தான் இருகொலைகளுக்குப் பிறகு! . டயரின் கொலைக்குப் பின்னமும் இந்திய தேசத்துக்கு ஒன்றும் நடக்கவுமில்லை, இந்திய மக்கள் எவராவது இறக்கவில்லை!!! ஆனால் ......................

இல்லை, ஈழநாட்டு ஆசிரியரின் மொழியில் கூறுவதானால் ....... ஒரு ராஜீவ் காந்திக்காக 50000 ஈழத்தமிழ் மக்கள்!!

........... அரைவேட்காட்டுத்தனமான எழுத்துக்கள்!!! ........ வயிற்றுப்பிழைப்புக்கான விபச்சாரங்கள்!!!!!!!!!!!!

ஹம்சா ஐரோப்பாவிற்கு வந்ததிலிருந்து நெல்லியனின் எழுத்தில் பல மாற்றங்கள்...ம்..ம்.........

நல்ல சம்பளமோ :unsure::rolleyes::lol:

80,000 தன் இன மக்களை கொன்ற சிங்களவனே எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழனை அழிக்கவேணும் என்று, ஒன்று சேர்ந்து சாதித்து விட்டுத்தான் தனக்குள் இப்பொழுது மோதிக்கொண்டு இருக்கிறான்.... ஆனால் நாமோ அமைதி காக்க என்று வந்து விட்டு 12,000 க்கு மேலதிகமான மக்களை கொன்றவனை, எந்த கொம்பன் என்றும் பாராமல் அழித்த ஒரு மாபெரும் தலைவனின் படையை ... எம்மக்களை அழித்த அந்த ஈனனுக்காக, அவனை அழித்தது பிழை என்று வாதிடுவதற்காக இன்று வரை செயற்பட்டுக்கொண்டிருபதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாமோ அமைதி காக்க என்று வந்து விட்டு 12,000 க்கு மேலதிகமான மக்களை கொன்றவனை, எந்த கொம்பன் என்றும் பாராமல் அழித்த ஒரு மாபெரும் தலைவனின் படையை ... எம்மக்களை அழித்த அந்த ஈனனுக்காக, அவனை அழித்தது பிழை என்று வாதிடுவதற்காக இன்று வரை செயற்பட்டுக்கொண்டிருபதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

நக்கினால் ஏதாவது கிடைக்குமா? என்று வெளிக்கிட்டவர்களிடம்போய்....

மானம்

வீரம்

ரோசம்.........பற்றி எழுதி

சொல்லி ...

என்ன அகப்போகின்றது

விடுதலைப்புலிகளை தனிநபர் படுகொலைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல், ... என்று பல குற்றச்சாட்டுக்களுக்காக, சர்வதேசம் ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை, என்றால், எமது மக்களின் வாழ்வுகள், வி.புக்களுக்காக சூனியம் ஆவதா? இப்படியே அழிந்து போவதா?

இல்லை நாம் அடுத்த கட்டத்துகு விடுதலைப்புலிகளை விடுத்துச் செல்வதா?

"தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகளா? அல்லது விடுதலைப் புலிகளுக்காக தமிழ் மக்களா?"

கேள்வியெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது

ஆனால்

வேறு பாதையைக்காட்டுங்கோவன்

வேறு நல்லவனை தாருங்கோவன்

வேறு கறைபடியாதவனை தாருங்கோவன்

வேறு...

வேறு...

வேறு...???????????

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு தின்;றவன் தண்ணீர் குடிப்பான் தப்பு செய்தவன் தண்டனை கொள்வான்.இராசீவ் காந்திக்குரிய தண்டனை அவரால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களால் கொடுக்கப் பட்டது. வெள்ளைக் காரனைக் கொன்ற சுபாஷ் சந்திரபோஷ் போராளி என்றால் ராஜி வ் காந்திக்கு தண்டனை கொடுத்தவர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களே.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்சிப்படி சொல்லுங்கள்....

ராஜீவ் கொல்லப்படாமல் இருந்திருந்தால் மட்டும் இந்தியா புலிகளுக்கு உதவியிருக்குமா????

ஈ...ஈ ஈஈஈஈ....

நீண்ட நாட்களின் பின்பு வாய்விட்டு சிரித்தேன். வேலவன் அண்ணை யாழுக்கு புதுசோ?

மனசாட்சியா?

அதற்கு முதலில் மனிதராக இருக்கவேண்டும் மனம் இருக்க வேண்டும். ஒரு நாள் உணவு பெற்ற நாயே நன்றி மறப்பதுமில்லை. ஆதேபோல் கல்லெறிந்தவனையும் மறப்பதில்லை. நாய்க்கு ஐந்தறிவாம்.

நுண்ணங்கிகளுக்கே அரைஅறிவு இருப்பதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.......

எனக்கு அதுவும் இருக்குமென்ற சந்தேகம்.

விடுதலைப்புலிகளை தனிநபர் படுகொலைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல், ... என்று பல குற்றச்சாட்டுக்களுக்காக, சர்வதேசம் ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை, என்றால், எமது மக்களின் வாழ்வுகள், வி.புக்களுக்காக சூனியம் ஆவதா? இப்படியே அழிந்து போவதா?

இல்லை நாம் அடுத்த கட்டத்துகு விடுதலைப்புலிகளை விடுத்துச் செல்வதா?

"தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகளா? அல்லது விடுதலைப் புலிகளுக்காக தமிழ் மக்களா?"

உந்த அறிவு உமக்கு மே 17 மட்டும் ஏன் வராம போனது???....அப்ப மட்டும் புலிகளில நம்பிக்கை வையுங்கள் அவர்கள் திருப்பி அடிப்பார்கள் என்டு வாயில வீணீர் வடிய யாழுக்க ஏன் எழுதிக்கொண்டு திரிஞ்சனீர்.

நாளைக்கே புலிகளால ஒரு போராட்டம் துவங்கப்பட்டா..பெடியல் அடிக்க துவங்கிட்டாங்கள் என்டு விசிலடிக்கிற முதல் ஆள் உந்த பொண்ட் பச்சோந்தியா தான் இருக்கும் :unsure::rolleyes::lol:

ஓரிரு தினங்களுக்கு முன் ... அல்ஜசீரா தொலைக்காட்சியில் .... ருவாண்டா இனப்படுகொலைகளும், அதன் பின்னும் ... தொடர்பான ஓர் நிகழ்ச்சி ........ 1994ல் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைகளும், மனித அவலங்களும் நடந்தேறிய ... பெரும்பான்மையினரான கூற்றூ இன மக்களினால், சிறுபான்மையினரான ருட்சியின மக்கள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளின் பின்னணியில் கூற்றூ இன பெரும்பான்மை அரசுடன் அமெரிக்கா இணைந்தே செயற்பட்டதாக கூறப்பட்டது. .... ஆனால் இன்று ருவாண்டாவை ஆளும் சிறுபான்மை ருட்சியின அரசு, அமெரிக்காவுடன் நெருங்கிய உரவுகளை ஏற்படுத்தியிருக்கிரது. அங்கு பெரும் முதலீடுகள் தொடக்கம், ஆயுதப்படையினருக்கு(ருட்சியி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.