Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஜோக் சொல்லுங்கள்

Featured Replies

ஓய் என்ன பாசையப்பா இது நாங்கள் என்ன உங்களைப்போல பள்ளிக்குப்போனனாங்களே

யோவ் தமிழில எழுதுமப்பா

:evil: :evil: :wink: :wink: :wink:

சின்னப்பு இதோ அவரின் பாஷையின் விளக்கம்:

சின்னப்பு என்பவர் யாழில் பல லொள்ளுகள் விட்டு 10 :twisted: க்கும் டிமிக்கி விட்டுக் கொண்டு திரிகிறார். அவரை கண்டால் உடனே கைது செய்யும்படி உலக அளவிலான பொலிசுக்கு கட்டளை போயிருக்கு

  • Replies 82
  • Views 16.6k
  • Created
  • Last Reply

சின்னப்பு என்பவர் யாழில் பல லொள்ளுகள் விட்டு 10 :twisted: க்கும் டிமிக்கி விட்டுக் கொண்டு திரிகிறார். அவரை கண்டால் உடனே கைது செய்யும்படி உலக அளவிலான பொலிசுக்கு கட்டளை போயிருக்கு

சின்னப்புவை பிடிக்க பெரியளவு பொலிசா .......

சும்மா சின்னாச்சி வாற எண்டு கதைவிட்டா காணும் ஆள் பேசாமப் போய் கூட்டுக்கை இருந்திட மாட்டார்....

RaMa wrote:

சின்னப்பு இதோ அவரின் பாஷையின் விளக்கம்:

சின்னப்பு என்பவர் யாழில் பல லொள்ளுகள் விட்டு 10 க்கும் டிமிக்கி விட்டுக் கொண்டு திரிகிறார். அவரை கண்டால் உடனே கைது செய்யும்படி உலக அளவிலான பொலிசுக்கு கட்டளை போயிருக்கு

பிறகென்ன சின்னப்புவும் கராத்தே தியாகராஜன் ரேஞ்சுக்கு போயிட்டார்.

:roll: :roll: :roll: :roll:

சின்னப்பு பங்கருகயே இருங்கோ :!:

வெளியே வந்தால் ஆப்புதான் :wink:

வயசான காலத்தில இதெல்லாம் தேவையா சின்னப்பு :?:

:lol::lol::D:D:lol:

இஞ்ச நான் சிரிச்சா சி*5 பபா என்று பேசாமல் இருப்பார்...நீங்கள் வேற சிரிச்சு என்னையும் மாட்ட பார்க்கிறிங்க :lol:

ஒரு ஜோக்

நீதிபதி : நீங்க சொல்ல விரும்புவதை தைரியமாக சொல்லாம்

குற்றவாளி : ஒரு அசைன்மெண்ட்டுக்கு லட்சக்கணக்குல சம்பள்ம் வாங்குற எங்களை இனிமேலும் 'கூலிப்படை'ன்னு சொல்லி கேவலப்படுத்த வேண்டாம் யுவர் ஆனார்.!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிடர்: உங்க ஜாதகப்படி ஆறு மாசத்துக்குள்ள கண்டிப்பா... கல்யாணம் நடத்திடனும்னு சொன்னா ஏன் சந்தோசப்படாம கவலைப்படறீங்க?"

ராமு : இப்ப இருக்கிற மனைவிஇ குழந்தைகளை என்ன பண்றதுன்னுதான் யோசிக்கிறேன்!

  • 2 weeks later...

ஒரு சிந்தனை ஜோக்

ஒரு கூன் விழுந்த கிழவர் தெருவோரம் போய்க்கொண்டிருந்தார். அந்த கிழவரைப்பார்த்து அந்த வழியால் போன வாலிபன் ஒருவன் நக்கலாக "என்ன தாத்தா என்ன நிலத்தில் தேடுறீங்க?" என்று கேட்டான்.

அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார்.

காவோலை விழ குருத்தோலை சிரிக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :P

நல்லா தமிழ் படித்திருக்கிறீர்கள் போல .. :)

கவிதன் எழுதியது : நல்லா தமிழ் படித்திருக்கிறீர்கள் போல .

.

நான் மறத்தமிழனாக்கும். ஆனால் நுளம்புக்கு பயம்.

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய அளவில் ஆங்கிலம் தெரியாதவர் கடை ஒன்றுக்கு சோடா குடிப்பம் என்று போனார். அங்கே "கொக்ககோலா" ஒன்றை வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது "பன்ரா" குடித்துக் கொணடிருந்த வெள்ளைக்காரன் ஒருவன் குடித்து முடித்ததும் இவரைப்பார்த்து "பன்ராஸ்டிக்" என்றான். இவரும் யோசித்து பார்த்தார். "பன்ரா" குடித்த அவன் "பன்ராஸ்டிக்" என்கின்றான். இவர் "கொக்ககோலா" அல்லவா குடித்தவர். இவர் பதிலுக்கு "கொக்ககோலாஸ்டிக்" என்று பதிலுக்கு சொல்லி பெருமிதத்துடன் சிரித்தார்.

  • 2 weeks later...

மனைவிக்கும்

மெழுகுவத்திக்கும்

ஒரு ஒற்றுமை உண்டு -

இரண்டுமே எரிஞ்சுவிழும் :lol::lol:

ABCDEFGயின் விரிவாக்கம் என்ன எண்டு தெரியுமா :?:

A Boy Can Do Everything For Girl

அதை அப்பிடியே திருப்பிப் போடுங்க GFEDCBA

Girl Forgot Everything Done & Catches(new)Boy Again :lol::lol:

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த தமிழ் வாலிபன் நேர்முகப் பரீட்சை முடிந்து வருபவர்களிடம் என்ன கேள்விகள் கேட்டார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். வெளியே வந்தவர்கள் எல்லோரும் அவர்கள் "காலையில் என்ன சாப்பிட்டாய்? என்று சிங்களத்தில் கேட்டார்கள் அதற்கு நான் இடியப்பம் சாப்பிட்டேன் என்று சிங்களத்தில் (இடியாப்ப காவாய்) என்று பதில் சொன்னேன்" என்று கூறியதைக்கேட்டவர் தான் அதனை மாற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தார். உள்ளே சென்ற அவரையும் அதே கேள்வியை சிங்களத்தில் கேட்டார்கள். அதற்கு அவர் தான் புட்டுச் சாப்பிட்டேன் என்று முன்னரே தயார் செய்து வைத்திருந்ததன்படி தனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் "புட்டுவ காவாய்" என்று பதில் கூறினார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். (புட்டுவ என்றார் சிங்களத்தில் கதிரை என்பது அர்த்தமாம்)

பல வருடங்களுக்கு முன்னர் இது உண்மையில் நடந்தது என்று கூறினார்கள். எனக்குச் சிங்களம் தெரியாது. நினைவில் இருந்ததையே இங்கே எழுதினேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புட்டுவ என்றால் கதிரை தான். ஆனால் புட்டை புட்டுவ என்று சொல்வதில்லை என்று நினைக்கிறன். அந்தக்கொழுந்தை மெச்சவேண்டும் :wink:

அடப்பாவமே :cry: :):lol::lol::lol::lol::lol::lol::lol: :lol: :lol::lol::lol::lol::lol:

கொழும்பில் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த தமிழ் வாலிபன் நேர்முகப் பரீட்சை முடிந்து வருபவர்களிடம் என்ன கேள்விகள் கேட்டார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். வெளியே வந்தவர்கள் எல்லோரும் அவர்கள் "காலையில் என்ன சாப்பிட்டாய்? என்று சிங்களத்தில் கேட்டார்கள் அதற்கு நான் இடியப்பம் சாப்பிட்டேன் என்று சிங்களத்தில் (இடியாப்ப காவாய்) என்று பதில் சொன்னேன்" என்று கூறியதைக்கேட்டவர் தான் அதனை மாற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தார். உள்ளே சென்ற அவரையும் அதே கேள்வியை சிங்களத்தில் கேட்டார்கள். அதற்கு அவர் தான் புட்டுச் சாப்பிட்டேன் என்று முன்னரே தயார் செய்து வைத்திருந்ததன்படி தனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் "புட்டுவ காவாய்" என்று பதில் கூறினார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். (புட்டுவ என்றார் சிங்களத்தில் கதிரை என்பது அர்த்தமாம்)

பல வருடங்களுக்கு முன்னர் இது உண்மையில் நடந்தது என்று கூறினார்கள். எனக்குச் சிங்களம் தெரியாது. நினைவில் இருந்ததையே இங்கே எழுதினேன்.

:):lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்கடி துயரமான செய்திகள் வரும்போது மனதைத் தேற்றுவதற்கு நகைச்சுவைகள் கட்டாயம் தேவை.

எழுதுங்கள்...

ஒரு சிந்தனை ஜோக்

ஒரு கூன் விழுந்த கிழவர் தெருவோரம் போய்க்கொண்டிருந்தார். அந்த கிழவரைப்பார்த்து அந்த வழியால் போன வாலிபன் ஒருவன் நக்கலாக "என்ன தாத்தா என்ன நிலத்தில் தேடுறீங்க?" என்று கேட்டான்.

அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார்

இது முந்தி தமிழ் புத்தகத்தில "சிரிக்கத்தெரிந்த பாரசீகர்" என்ன பாடத்தில இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் தனது ஆள்காட்டி விரலைக்காட்டி "இந்த விரலை மிருதங்கம் வாசிப்பவர்கள் பாவிப்பதில்லை" ஏன் என்று தெரியுமா? என்று மற்றவரைக்கேட்டார்.

"தெரியாது" என்று மற்றவர் கூறினார்.

"இது என்னுடைய விரல்" என்று பதில் கூறினார்.

இதனையும் நான் ஒரு புத்தகத்தில் வாசித்ததாக ஞாபகம்.

ஒரு சர்தாஜி சோதனைக்கு படிச்சுக் கொண்டிருந்தார் அதுவும் ஆங்கிலப் பாடம் (எங்கடை ரசிகையைப் போல) யாரோ சொன்னார்களாம் நண்பர்களைப் பற்றி கட்டுரை எழுத வரும் ஆனபடியாலை நண்பர்களைப் பற்றி படிக்கும் படி ..சர்தாஜியும் நண்பர்களைப் பற்றி பாடமாக்கியிட்டு சோதனைக்குப் போனார் ஆனா பேப்பரிலை நண்பர்களைப்பற்றி வராமல் அப்பாவை பற்றி எழுத வந்ததாம் சர்தாஜி பயப்படேலை அப்பிடியே கட்டுரையை மாத்தி friends எண்ட இடத்திலை Father எனப்போட்டு எழுதினார் எப்பிடி எண்டு பாருங்கோவன்

i am a very fatherly person i got lots of fathers. My neighbour is my best father Sardar ended as,A father in need is a father indeed!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல வருடங்களுக்கு முன்னர் கேட்டது:

சரியான நாற்றமுள்ள ஒரு மிருகத்தைக் கூண்டினுள் அடைத்துவிட்டு அதனுடன் யார் அதிகநேரம் இருக்கிறார்கள் என்பதே போட்டி.

முதலில் ஓர் ஆங்கிலேயர் உள்ளே போனார். 5 நிமிடங்களுக்குமேல் அவரால் அங்கே இருக்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டு வெளியே ஓடிவிட்டார்.

அடுத்து ஒரு யப்பானியர் சென்றார். சுமார் 1மணித்தியாலங்கள் உள்ளே இருந்தார். அதற்குமேல் அவரால் உள்ளே இருக்கமுடியவில்லை வெளியே வந்துவிட்டார்.

அடுத்து ஒருவர் உள்ளே சென்றார். அவர் சென்றதுதான் தாமதம் மிருகம் வெளியே ஓடிவந்துவிட்டதாம்.

அவர் யாராக இருக்கலாம்? நிச்சயமாக நானில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.