Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுநாவல்-வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

நான் பொய்றின் கதையின் விருப்பத்தினால் தான் என்னொருவரை ஒப்பிட்டு எழுதினேனே ஒளிய பொயறின் மனதைப் புண் படுத்தும் அளவுக்கு எழுத வில்லை.அப்படி அவர் மனம் நோக எழுதியிருந்தன் எண்டால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதை விட இந்த அறிவுரையை எழுதிய நபருக்கு ஒண்டு சொல்ல விரும்புகிறேன்...நமது நாக்கு வாயைத்திறந்தால் பொல்லாத வார்த்தைகளை எல்லாம் கொட்டி விடுவது உலக வளமை கொஞ்சம் மற்றவர் மனதை நோகாமல் பேசப்பழகிக்கொண்டால் நன்று.எனக்கு நீங்கள் சொல்லிதரத் தேவை இல்லை யாருடைய புத்தகம் நல்லது கெட்டது எண்டு எனக்குத் தெரியும் என்வேலை.நீங்கள் ஒண்டும் எனக்குப் படிப்பிக்கத்தேவை இல்லை.

இதில் கோபப்பட எத்வுமில்லை தோழி........ நான் சொல்லவேண்டியதை பிழம்பு என்பவர் சோல்லியுள்ளார்... கொஞ்சம் காரமாக. பிழம்பு சொல்வதை நூறு வீதம் ஏற்றுக் கொள்கின்றேன் (என் கவிதைகளுக்கு இப்படி பதில் எழுதினால்தான் தெரியும் சேதி,,,)

ஒரு விடயத்தை உங்களுடன் வைத்திருப்பதற்கும் அதனை எல்லாரும் பார்க்கும் விதமாக பிரசுரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. பிரசுரித்த பின் "நீ உன் வேலையை பார்" என்பது சரியல்ல என நம்புகின்றேன். ஒரு பிரதிக்கு மட்டுமல்ல, பிரதியின் விமர்சனங்களுக்கும் மறு வாசிப்புகள் உண்டு. எனக்கு இப்படி யாரும் விமர்சிக்க இல்லையே என கவலைப்படுகின்றேன் (பறவைகளையும் காத்தையும் தவிர)

நானோ, நீங்களோ, பொயறோ இங்கு முழுமை அல்ல....எல்லாருக்கும் கோபமற்ற சிந்திக்கும் திறன் அவசியம் என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இப்போ விளங்கீட்டு.....இனிச் செய்ய முயற்சிக்கிறன்.

Edited by yagini

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் நீண்ட நாட்களின் பின்னர் கணணியில் ஒரு நீண்ட நேரமெடுத்து ஒரு கதையை படித்தது இன்றுதான்..ஊரின் போராட்ட காலங்களின் ஆரம்பத்தை பலசம்பவங்கள் அத்தனையையும் ஒரு கோர்வையாக தொடுத்து சென்றிருக்கிறீங்கள்.. உங்கள் கதையில் சாரங்காவின் தந்தையாக கொமினிஸ் கந்தையா வாத்தியாரை புனைவாக நினைத்து எழுதினீங்களோ தெரியாது பலஇடங்களில் கந்தவேல் என்றும் ஒரு இடத்தில் கந்தையா என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..அ

தே நேரம் சாரங்கா பிடித்த..பச்சைக்குடை..மற்றும் நீலக்குடை தமிழர் மாறி மாறிப்பிடித்த ஜ.தே.கட்சி..மற்றும் சுதந்திரக்கட்சிக்குடைகளை நினைவில் கொண்டுவந்து போனது..ஆனாலும் பெரிய கம்யுனிச வாதியின் மகளே சிவப்புக்குடையை பிடிக்கவில்லை.....இத்தனை இழப்பு வலிகளின் பின்னரும் வன்னி வதை முகாமில் கூட சாதியம் வாழ்ந்துகொண்டுதானிருக்கின

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிழம்பு

இதை விட எவராலும் வ.ஐ.ச வை கேவலமாக விமர்சித்து இருக்க முடியாது... ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடுவதே தவறு...அதிலும் யதார்த்தமான ஈழத்து எழுத்தாளர் ஜெயபாலனை ரமணிச்சந்திரனுடன் ஒப்பிட்ட அறியாமையை என்னவென்பது..... யாகினி, முதலில் சிறந்த படைப்புகளை வாசிக்க பழகுங்கள் அதன் பின் இன்னொருவருடன் ஒப்பிட்டு விமர்சிக்க பழகுங்கள்....

காசுக்கு எவர் கேட்டாலும் எழுதும் ரமணிச்சந்திரன் எனும் வியாபாரியின் எழுத்தை விட, எம் ஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச 1000 மடங்கு தரமான இலக்கியவாதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதில் உங்களை வேதனை படுத்தலாம்....ஆனால் வ,ஐ,ச வை ர.ச உடன் ஒப்பிட்ட ரணத்தை விட அது வலிக்காது

ஒரு எழுத்தாளரின் சாயல் இன்னொருவருக்கு இருப்பதென்பதோ வருவதென்பதோ சில வேளைகளில் தவிர்க்க முடியாதது... ஒரே எழுத்தாளரின் ஆக்கங்களை அதிகம் படிக்கும் ஒருவருக்குத்தான் அவரின் எழுத்தின் சாயல் புரியும் அதே போன்று வேறு எழுத்தாளரின் படைப்புக்களையும் படிக்கும் போது இவரின் எழுத்தின் சாயல் இருக்கிறதே என்று புரியும் அதற்காக ஒட்டுமொத்தப் புத்தகத்தையே அவரைப் போல எழுதியுள்ளார் என்று சொல்வதாக அர்த்தப்படாது....

அதே வேளை நாங்கள் கதைக்கும் போதே சில மனதைப் பாதிக்கும் பாடல்களைக் கேட்டால் ..இந்தப் பாட்டுவரிகள் கண்ணதாசனின் வரிகள் போல இருக்கிறது என்று வாலியின் வரிகளையோ, காசியானந்தனின் வரிகளையோ விமர்சிக்கும் போது அவர்கள் ஒருபோதும் கோபப்படுவர்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.......மாறாகப் பெருமைப் படுவார்கள் என்றே தோன்றுகிறது.... காரணம் ஒரு திறமைசாலியுடன் தங்களையும் ஒப்பிடுகிறார்கள் என்று.... அதற்காக அவர்கள் திறமையற்றவர்கள் என்று அர்த்தப் படாது....

எனவே யாயினியின் விமர்சனத்துக்காக வ,ஐ,ச வுக்காக வக்காளத்து வாங்கப் போய் இன்னொரு எழுத்தாளரான ர. ச வைக் கேவலப்படுத்திவிட்டீர்கள்.. எழுத்து அவரின் பிழைப்பு.... அதுக்காக அவரின் தொழிலைக் கேவலப்படுத்திய உங்களுக்கு யாயினியை விமர்சிக்கும் தகமை கிடையாது...வ,ஐ,ச ஈழத்து எழுத்தாளர் தான் அது எங்களுக்குப் பெருமை அதற்காக இன்னுமொரு எழுத்தாளரைச் சிறுமைப் படுத்துவது மிகவும் பிழை.... ஈழத்து எழுத்தாளர் என்றோ இந்திய எழுத்தாளர் என்றோ நான் பார்க்கவில்லை... ர.ச வும் ஒரு பிரசித்தி பெற்ற எழுத்தாளர்... அவரை கேவலப்படுத்திய நீங்கள் இந்த விமர்சனத்துக்கு தகுதியற்றவர்...

உலகத்திலே பணத்தை மையப்படுத்தியே பல காரியங்கள் நடைபெறுகிறது எனவே வ.ச.ஜெ வை யாயினி கேவலப்படுத்தவில்லை ர.ச வின் எழுத்துடன் சாயல் இருப்பதாகவே சொல்லியுள்ளார்....ஆனால் நீங்கள் ர.ச வை கேவலப்படுத்திவிட்டீர்கள் பணத்துக்காக எழுதும் வியாபாரி என்று....

உங்களை நினைக்க ..'உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும் ' எனும் பழமொழிதான் ஞாபகம் வருகிறது.....

எனவே விமர்சனங்களுக்கு முதல் வார்த்தைப் பிரயோகங்கள் மற்றவரை காயப்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.... அதுதான் ஈழத்து தமிழராகிய எங்கள் எல்லோரூக்கும்.. ஏன் வ,ஐ,ச யின் வாசகர்களாகிய எங்களுக்கும் வ,ஐ,ச க்கும் பெருமையைத் தரும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி

இதில் கோபப்பட எத்வுமில்லை தோழி........ நான் சொல்லவேண்டியதை பிழம்பு என்பவர் சோல்லியுள்ளார்... கொஞ்சம் காரமாக. பிழம்பு சொல்வதை நூறு வீதம் ஏற்றுக் கொள்கின்றேன் (என் கவிதைகளுக்கு இப்படி பதில் எழுதினால்தான் தெரியும் சேதி,,,)

ஒரு விடயத்தை உங்களுடன் வைத்திருப்பதற்கும் அதனை எல்லாரும் பார்க்கும் விதமாக பிரசுரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. பிரசுரித்த பின் "நீ உன் வேலையை பார்" என்பது சரியல்ல என நம்புகின்றேன். ஒரு பிரதிக்கு மட்டுமல்ல, பிரதியின் விமர்சனங்களுக்கும் மறு வாசிப்புகள் உண்டு. எனக்கு இப்படி யாரும் விமர்சிக்க இல்லையே என கவலைப்படுகின்றேன் (பறவைகளையும் காத்தையும் தவிர)

நானோ, நீங்களோ, பொயறோ இங்கு முழுமை அல்ல....எல்லாருக்கும் கோபமற்ற சிந்திக்கும் திறன் அவசியம் என்பது என் கருத்து

கருத்துச் சுதந்திரமென்று வாய் கிழியக் கத்திக்கொண்டிருக்கும் நாங்கள் எங்களின் மனதில் தோன்றுவதை சொல்லக்கூடாதாம் அதை மனதிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமாம் அதற்கு எழுந்த ஓர் இழிவான விமர்சனத்துக்கு நாங்கள் உதவிக்குரலாம்... ஆனால் எங்களுக்கு மட்டும் தான் கோவம் வருமாம் வேரு யாருக்கும் கோவம் வரக்கூடாதாம்... இதெல்லாம் தவறாகப் படாவில்லையா...?

ஒருவன் தன்னைப் பற்றி ஒருவரும் கடுமையாக விமர்சிக்கக் கூடாது ஆனால் நாங்கள் எவ்வளவு கேவலமாகவும் மற்றவரை விமர்சிக்கல்லலாம்.... உலக நியதிகள் மாறும் போது நேர்மை சாகத்தான் செய்யும்....

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு மற்றும் நிழலி ஆகியோர், கவிஞர் அவர்களின் ரசிகர்கள் எனும் நிலையில் நின்று கொண்டு கருத்துக்களை வைக்க முற்பட்டபோது யாயினியாரின் கருத்துச் சுதந்திரம் பறிபோய்விட்டது. :lol:

நிழலி

கருத்துச் சுதந்திரமென்று வாய் கிழியக் கத்திக்கொண்டிருக்கும் நாங்கள் எங்களின் மனதில் தோன்றுவதை சொல்லக்கூடாதாம் அதை மனதிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமாம் அதற்கு எழுந்த ஓர் இழிவான விமர்சனத்துக்கு நாங்கள் உதவிக்குரலாம்... ஆனால் எங்களுக்கு மட்டும் தான் கோவம் வருமாம் வேரு யாருக்கும் கோவம் வரக்கூடாதாம்... இதெல்லாம் தவறாகப் படாவில்லையா...?

ஒருவன் தன்னைப் பற்றி ஒருவரும் கடுமையாக விமர்சிக்கக் கூடாது ஆனால் நாங்கள் எவ்வளவு கேவலமாகவும் மற்றவரை விமர்சிக்கல்லலாம்.... உலக நியதிகள் மாறும் போது நேர்மை சாகத்தான் செய்யும்....

இளங்கவி,

நான் Bracket இனுள் "என் கவிதைகளுக்கு இப்படி பதில் எழுதினால்தான் தெரியும் சேதி,,," என இட்டது ஒரு நகைச்சுவைக்காக... அதுவும் பிழம்பு இப்படி என் கவிதைகளுக்கு பதில் எழுதினால் தெரியும் சேதி என்ற பொருள் பட.. அது தோழி யாயினிக்கும் நன்கு புரிந்து இருந்தது..... பிழம்புக்கும் புரிந்து இருக்கும் அதனுள்ளே இருக்கும் அங்கதத்தை.. அதனை நான் யாயினிக்குக்தான் கூறியுள்ளேன் என நீங்கள் தவறாக விளங்கிக்கொண்டு இருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். யாயினியே அதனை அப்படி எடுக்காமல் இருக்கும் போது உங்களுக்கு எவ்வாறு இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது என புரியவில்லை. ஒரு வேளை Bracket இனுள் எழுதியதில் "[பிழம்பு] என் கவிதைகளுக்கும் இப்படி [காரமாக] எழுதினால் தெரியும் சேதி என்று" என்று விளக்கமாக எழுதியிருந்தால்தான் உங்களுக்கு புரிந்திருக்குமோ எனவோ..............

ஆனால் உங்களுக்கு என்மேல் ஏன் தேவையற்ற கோபம் வருகின்றது என்பதன் காரணம் நான் அறிவேன்... வேறு சந்தர்ப்பம் கிடைக்காமல் என் மேலுள்ள கோபத்தை கொட்ட இந்த பதிலை ஏன் தூக்கிப் பிடிக்கின்றீர்கள் என்றும் எனக்கு புரிந்து கொள்ள முடிகின்றது. இதற்கு மேல் உங்களுடன் இதைப் பற்றி கதைத்து உங்களிற்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமும் அதற்கான தேவையும் எனக்கில்லை...உங்களின் வீராவேசமும் இலக்கிய விமர்சன நேர்மையும் மெச்சத்தக்கது.... வாழ்க வளமுடன்

............ மற்றப்படி பிழம்பின் கருத்தையும் யாயினியின் கருத்தையும் வரவேற்கின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாரும் எனக்காக கருத்து மோதல்களில் ஈடுபவேண்டாம்.

நான் யாரையும் அடிபடச்சொல்லவும் இல்லை யாரும் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.என் போறாத காலம் ஏதோ நடந்து விட்டது.போறது போகட்டும் விட்டு விடுங்கள்.மேற்கொண்டு யாரும் கருத்து மோதல்களில் ஈடுபடுவீர்களாக இருந்தால் என்னை யாழில் மேற்கோண்டு எதிலும் கருத்துக்களை வைக்க விடாதற்கு சமன்.இத்தோடு இந்தப்பிரச்சனையை விட்டு விட்டு வேற ஏதாச்சும் வேலை இருந்தால் பாருங்கள்.எனது வேண்டுகோளை ஏற்று நடப்பீர்கள் எண்டு நினைக்கிறன்.இது எனது தாழ்மையான வேண்டுகோழ்.நன்றி.

யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் ஜனரஞ்சமாக எழுதும் ரமணி சந்திரன், பாலகுமார் போன்றவர்களின் மாதமொருமுறை வரும் "பாக்கெட்" நாவல்களைப் படித்து பழக்கப்பட்டுப் போன நமக்கு எல்லா எழுத்துக்களையும் ஒரு தட்டில் வைத்துப் பார்க்க முனைவது பிழையாகத் தெரியாது.

முதலில் நல்ல தரமான எழுத்துக்களைத் தேடி வாசித்தால் நாம் இழந்தவை எவ்வளவு என்று தெரியும். ஜெயமோகனைக் கூட "நான் கடவுள்" படத்தில் வசனம் எழுதியவர் அல்லது சிவாஜி எம்ஜியாரைப் பற்றி கிண்டலாக எழுதியவர் என்று மட்டும்தானே நமக்குத் தெரியும்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலிக்கு

இதில் கோபப்பட எத்வுமில்லை தோழி........ நான் சொல்லவேண்டியதை பிழம்பு என்பவர் சோல்லியுள்ளார்... கொஞ்சம் காரமாக. பிழம்பு சொல்வதை நூறு வீதம் ஏற்றுக் கொள்கின்றேன் (என் கவிதைகளுக்கு இப்படி பதில் எழுதினால்தான் தெரியும் சேதி,,,)

ஒரு விடயத்தை உங்களுடன் வைத்திருப்பதற்கும் அதனை எல்லாரும் பார்க்கும் விதமாக பிரசுரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. பிரசுரித்த பின் "நீ உன் வேலையை பார்" என்பது சரியல்ல என நம்புகின்றேன். ஒரு பிரதிக்கு மட்டுமல்ல, பிரதியின் விமர்சனங்களுக்கும் மறு வாசிப்புகள் உண்டு. எனக்கு இப்படி யாரும் விமர்சிக்க இல்லையே என கவலைப்படுகின்றேன் (பறவைகளையும் காத்தையும் தவிர)

நானோ, நீங்களோ, பொயறோ இங்கு முழுமை அல்ல....எல்லாருக்கும் கோபமற்ற சிந்திக்கும் திறன் அவசியம் என்பது என் கருத்து

இளங்கவி,

நான் Bracket இனுள் "என் கவிதைகளுக்கு இப்படி பதில் எழுதினால்தான் தெரியும் சேதி,,," என இட்டது ஒரு நகைச்சுவைக்காக... அதுவும் பிழம்பு இப்படி என் கவிதைகளுக்கு பதில் எழுதினால் தெரியும் சேதி என்ற பொருள் பட.. அது தோழி யாயினிக்கும் நன்கு புரிந்து இருந்தது..... பிழம்புக்கும் புரிந்து இருக்கும் அதனுள்ளே இருக்கும் அங்கதத்தை.. அதனை நான் யாயினிக்குக்தான் கூறியுள்ளேன் என நீங்கள் தவறாக விளங்கிக்கொண்டு இருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். யாயினியே அதனை அப்படி எடுக்காமல் இருக்கும் போது உங்களுக்கு எவ்வாறு இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது என புரியவில்லை. ஒரு வேளை Bracket இனுள் எழுதியதில் "[பிழம்பு] என் கவிதைகளுக்கும் இப்படி [காரமாக] எழுதினால் தெரியும் சேதி என்று" என்று விளக்கமாக எழுதியிருந்தால்தான் உங்களுக்கு புரிந்திருக்குமோ எனவோ..............

ஆனால் உங்களுக்கு என்மேல் ஏன் தேவையற்ற கோபம் வருகின்றது என்பதன் காரணம் நான் அறிவேன்... வேறு சந்தர்ப்பம் கிடைக்காமல் என் மேலுள்ள கோபத்தை கொட்ட இந்த பதிலை ஏன் தூக்கிப் பிடிக்கின்றீர்கள் என்றும் எனக்கு புரிந்து கொள்ள முடிகின்றது. இதற்கு மேல் உங்களுடன் இதைப் பற்றி கதைத்து உங்களிற்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமும் அதற்கான தேவையும் எனக்கில்லை...உங்களின் வீராவேசமும் இலக்கிய விமர்சன நேர்மையும் மெச்சத்தக்கது.... வாழ்க வளமுடன்............ மற்றப்படி பிழம்பின் கருத்தையும் யாயினியின் கருத்தையும் வரவேற்கின்றேன்

நீங்கள் bracket போட்டது எனக்கும் நன்றாகப் புரிந்திருந்தது... நீங்கள் நகைச்சுவயாகச் சொன்னதிலும் கூட உங்களின் கோவமே தென்பட்டது.....(அது நகைச்சுவைக்காகவோ, உண்மைக்காகவோ குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட....) ஆனால் யாயினி கோபப்பட்டதற்கு அது அவசியமற்றது என்பது போன்ற உங்கள் கருத்து உங்களுக்கு ஒரு நியாயம், யாயினிக்கு ஒரு நியாயமா என என்னைக் கேட்க வைத்தது... நானும் அதை விளக்கமாகச் சொல்லியிருக்க வேண்டுமோ உங்களுக்கு புரிய வைக்க... காரணம் ஒருவர் மனதில் சிந்திக்கும் ஒரு விடயத்தை மற்றவரின் மனம் அறியும் சக்தி எங்கள் இருவருக்கும் இல்லையென்பதை ஒப்புக்கொள்கிறேன்...

அடுத்து, நான் உங்களின் விமர்சனத்துக்கு மட்டும் கருத்து எழுதவில்லையே... பிழம்புக்கும் தானே எழுதியிருந்தேன்.... அப்படியிருக்க ஏன் நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கோபத்தைக் காட்டுவதாகச் சொல்லி எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு பனிப்போரே நிகழ்ந்துகொண்டிருப்பது போன்ற கருத்தை எழுதினீர்களோ தெரியவில்லை....

உங்களுடன் நானோ என்னுடன் நீங்களோ தனிமடலில் தொடர்புகொண்டு எத்தனை மாதங்களிருக்கும்..? இதற்கு முதல் நானும் நீங்களும் ஏதாலும் கருத்து முறண்பாட்டில் சந்தித்திருக்கிறோமா? இருவருக்கும் இடையில் ஏதாலும் தனிப்பட்ட கோபங்கள் இருக்கிறதா? அப்படிப் பல கேள்விகள் என்னைத் துளைக்க இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்க வேண்டிய நிர்ப்பந்ததிலுள்ளேன்....

மேலும் உங்களிடம் தனிப்பட்ட கோபம் இருந்தாலும் கூட இந்த இடத்தில் வந்து கோபத்தை கொட்டுமளவுக்கு எனக்கு எந்த அவசியமும் கிடையாது காரனம் நீங்கள் இந்த இடத்தில் மட்டும் வருபவர் இல்லையே.... பல இடங்களில் வந்து விமர்சனங்கள் சொல்பவராயிற்றே... எனவே எனக்கு ஏதாலும் தனிப்பட்ட கோபம் இருந்திருந்தால் பல இடங்களில் உங்களுடன் மோதமுடியும் இந்த இடமென்று எனக்குத் தேவையீலை... இது என் நட்பு ஒன்றின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டைடம் அவ்வளவு தான்....

ஒரு சமயம் இப்படி எடுத்துக்கொண்டாலும்... அதாவது எனது கவிதைத் தொகுப்பை நீங்கள் வாங்கியிருக்காவிட்டால் எனக்கு கோபம் வந்திருக்கும் என்று வைத்துக்கொண்டாலும் அதற்கும் சாத்தியமில்லை... காரணம் நீங்கள் இணையத்தளத்தில் வாங்கியதாகச் சக உறவின் மூலம் அறிந்தேன் எனவே உங்கள் மேல் அப்படியொரு கோபம் வருவதற்கும் சாத்தியமில்லாமல் இருக்க ஏன் உங்கள் கருத்து அப்படியமைந்தது என்று புரியவில்லை.... உங்களுக்குத் தெரிந்து நீங்கள் என்னைப் பாதிக்கும் ஏதாலும் செய்தீர்களா எனக்குத் தெரியவில்லை ஆனால் எனக்குத் தெரிந்தமட்டும் உங்களால் நான் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.....

பிழம்பு, உங்கள் விசயத்தில் நான் சம்மந்தப் படவேண்டியிருந்ததன் காரணம்....முகந்தெரியாத ஊறவுகள் ஈழத்தில் படும் அவலங்களைக் கண்டு இங்கே போராட்டங்களில் ஈடுபடுவதும் , அவர்களின் அவலங்களைச் சொல்லும் படைப்புக்களைத் தருவதுமான செயல்களில் ஈடுபடும் நான் என் கவிதைத்தொகுப்புக்கு முகவுரை எழுதிய ஓர் உறவின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு அதன் சிறகுகள் ஒடிக்கபட்டு மன்னிப்புக் கேட்டு ஓடுமளவுக்கு இருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அது தான் ஒரேயொரு காரனம்.... ஆபத்தில் உதவாத நட்பு ஒரு நட்பு அல்லவே..... நீங்கள் இருந்த இடத்தில் எவர் இருந்திருந்தாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தான் சொல்லியிருப்பேன்.

இறுதியாக ஒன்று... என் கவிதைகளை ரசித்து அதை வேற்று மொழியில் மாற்றும் படி ஆலோசனை கூறிய ஓர் உறவு நீங்கள், அத்துடன் என் அண்ணனின் அகால மரணத்தின் துயரத்திலும் பல தனிமடலில் எனக்கு உறுதிவளங்கிய ஓர் உறவு நீங்கள் அப்படியிருக்க... என்னைப் பொறுத்தளவில் ' நன்றி மறப்பது நன்றன்று' என்பதை வாழ்க்கையில் தொடர்பவன்.... எனவே இருவருக்கிடையில் ஏதோ பனிப்போர் நிகழ்கிறது என்ற மாயையை ஏற்படுத்திவிட்டதன் காரணமாக உங்களுடன் எங்கேயாவது கருத்தில் மோதச் சந்தர்ப்பம் ஏற்பட்டால் முடிந்தவரை விலகியிருக்க முயற்சிக்கிறேன் காரணம் எம் இருவருக்குமிடையில் ஏதோ நடக்கிறது என்ற மாயையை நீக்கி எங்கள் யாழ்கள நட்பைத் தொடர வேண்டும் என்பதற்காக......

இது என் இருதிக் கருத்து இதற்குமேல் இந்த இடத்தில் ஏதும் விவாதிக்க விரும்பவில்லை.... அதற்காகப் பயந்ததாகவும் அர்த்தம் கொள்ள வேண்டாம்..... மேலும் என் வீராவேசத்தையும் இலக்கிய விமர்சன நேர்மையையும் பாராட்டிய உங்களுக்கு என் கோடான கோடி நன்றிகள்... உங்கள் சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்....

இத்தால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் (முக்கியமாக் நல்லா சண்டையை ரசித்துகொண்டு் பேசாமல் இருக்கும் பிழம்பிற்கு) ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த தவறான புரிந்துணர்வுகள் பரஸ்பர தனிமடல்கள் மூலமும் அன்பான விளக்கங்கள் மூலமும் நேராக்கப்பட்டு இருவரும் மீண்டும் முன்னைவிட சிறந்த நண்பர்களாகி விட்டோம் என்பதே..

தன்னால் தேவையில்லாமல் சண்டை பிடிக்கின்றனர் என்று அழுது கொண்டு போன யாயினியும், தன் திரியில் தேவையில்லாதவற்றை எழுதினம் என்று வெறுப்புடன் இருக்கக்கூடிய பொயற் அவர்களும் மீண்டும் சபையில் பிரசன்னமாகுமாறு யாழ் கள பெரியோர்களின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவலரே உங்கள் எழுத்துக்கள் http://www.meenagam.org/?p=12576 இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Give me a few days to reply

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thanks for the 2000 readers. Sincere Thanks for the 4 who send 10$ each, This Time also I lost the game. My books of short novels will be available in the book air 2010 at Chennai.

Thanks for the 2000 readers. Sincere Thanks for the 4 who send 10$ each, This Time also I lost the game. My books of short novels will be available in the book air 2010 at Chennai.

ஜெயபாலன் அண்ணா,

அண்மையில் ஒருவருடன் கதைக்கும் போது சொன்னது. தான் இந்த குறுநாவலைப் வாசிக்க விரும்பியும் வாசிக்காமல் விட்டுவிட்டதாகவும் தன்னால் தன் சொந்த பெயரில் பணம் அனுப்புவது இப்போதைக்கு உசிதமானதல்ல என்றும் சொல்லியிருந்தார். இதில் கவனிக்க வேண்டியது, தன் சொந்தப் பெயரில் அனுப்புவதை தவிர்க்க முயல்கின்றார் என்பதை. பலரிற்கு இந்த சங்கடம் அல்லது பயம் இருக்ககூடிய வாய்ப்புகள் இருக்கு என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். வேற்று நாட்டவருக்கோ, ஏன் சிங்களவர்களுக்கோ கூட இந்த பிரச்சனை இல்லை. ஆனால் தமிழர்களாகிய எமக்குத் தான் சொந்த பெயரை வெளிவிடுவது எப்போதுமே பெரிய அச்சம் தரக்கூடிய ஒரு விடயமாக எப்போதுமே இருக்கின்றது. உங்களை சந்தேகிக்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம், ஆனால் யதார்த்ததில் இன்று எவரும் தம்மை வெளிக்காட்டக் கூடிய சூழ்நிலை இல்லை (நான் தனி மடலில் உங்களிடம் கேட்டுக் கொண்ட விடயமும் அது தானே). ஒரு புத்தகமாக வெளியிட்டு அதனை வாங்கும் போது இந்தப் பிரச்சனைகள் எழ வாய்பு குறைவு

மற்றது, Total views என்பது Total unique viewers அல்ல. முதல் பார்த்த அதே உறுப்பினர் மீண்டும் பார்க்கும் போது இந்த தொகை ஒன்றினால் அதிகரிக்கும். நானே இந்தத் திரியை 10 தடவைக்கு மேல் பார்த்துள்ளேன்...

மதிற்பிக்குரிய பொயற்ருக்கு.

ந‌ல்ல‌ ஒரு குறுநாவ‌ல் வாசித்த‌ திருப்தி?.எழுத்துசொல்லத்தேவையில்லை.பலகவிதைகளிலும்,சிலகதைகளிலும்

ஊடாக உணர்ந்த்ததுதானே.விடுதலைப்போராட்டம்,சாதீயம்,போலியாக உழுத்துப்போன க‌லாச்சாரத்தை கைவிடாத‌ யாழ்ப்பாண வாழ்க்கை முறை,புலம் பெயர்ந்தும் திருந்தாத அதே ஜன்மங்கள். இவை அனைத்தையும் தொட்டுச்செல்லும் வலியுடன் கூடிய காதல் கதை.சொல்லில் குற்றம் இல்லை பொருளில் தான்.க்ல்யாணம் முடித்தவளேன்று தெரிந்தும் பல வருடங்களுக்கு பின் சந்திக்க செல்லும் பழைய காதலன் மீசை நரைத்தும் ஆசை நரைக்காமல் காமம் கலந்த ஒரு நோக்குடன் சந்திக்க செல்வதென்பது நடைமுறைக்கு ஒத்ததாக இல்லை.நானும் எனது பழைய காதலியை பல ஆண்டுகளின் பின் கோவிலில் கண்டேன்.எனக்குள் ஒரு வித தடுமாற்றம் வந்தது உண்மை.உடன் சுதாகரித்துக்கொண்டு பரஸ்பரம் சுகம் விசாரித்து மனைவி பிள்ளைகளை அறிமுகம் செய்ததுடன் எல்லாம் சரி.இது பல‌ருக்கு நடந்திருக்கு.உமது கதையின் கரு எனக்கு யதார்த்தமாக இல்லை.நினைப்பு பிழை கவியாரே.‌‌ ‌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DearAarjun,

You are expecting me to create an ideal Tamil hero. That’s not my work. We lost everything because we idealized everything and refused to see the reality. Most of the shocking cases in Tamil Elam courts both at Kilinochi and Mallavi are sexual abuses committed by fathers. You are a married man Balan a bachelor. Even you were exited a moment.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய முதல் குறுநாவல் தொகுதி 2010 புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தால் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழில் வெளிவந்த அவளுடைய கூரையின்மீது நிலா ஒளிர்கிறது, செக்குமாடு, சேவல்கூவிய நாட்க்கள் குறுநாவல்களை மேலும் செம்மைப் படுத்தி மாற்றி அமைத்து ’அவளது கூரையின்மீது நிலா ஒளிர்கிறது என தொகுத்துள்ளேன். எனது முதல் உரை நடை முயற்ச்சி வெற்றி பெறுமானால் எமது போராட்டத்தை கட்டம் கட்டமாக காதல்க் கதைகளாக சொல்ல விருப்பம்.

உங்கள் நூலை வலைத்தளம் ஊடாக வாங்கக்கூடிய வசதி இருந்தால் சொல்லுங்கள் கவிஞர் அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.