Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்!

நாங்கள் எதிர்பார்த்தது போலவே, நாங்கள் எதிர்வு கூறியதைப் போலவே சிங்கள தேசத்தின் புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திலும் வேகமாக, கொடூரமாகத் தீவிரமாகி வருகின்றது.

முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்டது மனித உயிர்கள். இங்கே வீழ்த்தப்படுவது மனித மனங்கள். புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்கும் முயற்சிகள் யுத்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களிலேயே ஆரம்பமாகிவிட்டது என்றாலும், தற்போது அதன் வேகம் அச்சம் கொள்ளத்தக்க வகையில் அதிகரித்துச் செல்கிறது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு விட்டனர்.

தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்குதல் போன்ற அரச பயங்கரவாதத்தால் முகாம்களுக்கு வெளியே வாழும் மக்கள் அச்சுறுத்தப்பட்டு அடக்கப்பட்டு விட்டார்கள்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அதிகம் அசைவியக்கமற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் இருப்புக்கான அளவைத் தாண்டி நகரப் போவதில்லை. நகரவும் அனுமதிக்கப்படப் போவதில்லை. தங்களது இயலாமையை இந்திய சார்பாக மாற்றித் தற்காத்துக் கொள்ளும் நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

இப்போது, ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள பலம் புலம்பெயர் தமிழீழ மக்களே. யுத்தத்தின் இறுதி நாட்களில் புலம்பெயர் தேசங்கள் எல்லாம் புலிக்கொடி ஏந்திய தமிழீழ மக்களின் போராட்டங்கள் மேற்குலகின் இலங்கை குறித்த கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

சிங்கள தேசத்தால் தொட்டுவிட, நெருங்க முடியாத தூரத்தில் பாதுகாப்பான நிலையில் இருந்து கொண்டு புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்திற்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களை நிகழ்த்தியவாறே உள்ளனர். இது சிங்கள தேசத்திற்குப் பாரிய நெருக்குதல்களைக் கொடுத்து வருகின்றன.

அதை விடவும், புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் சிங்கள தேசத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது.

நாடு கடந்த தமழீழ அரசும், உலகத் தமிழர் பேரவையும் அடித்துக்கொண்டு எதிர்த் துருவங்களாக நகரும் என்ற சிங்கள எதிர்பார்ப்பும் தவறாகிவிட்டது. ஆரம்ப கால சலசலப்புக்களைத் தாண்டி இந்த இரு அமைப்புக்களும் சிங்கள அரசை நிலைகுலைய வைக்கும் இரு ஏவுகணைகளாக, ஒரே திசை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றன.

தற்கோதைய நிலையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளையும் பரஸ்பர நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் சிங்கள தேசம் முழு மூச்சாக இறங்கியுள்ளது. சிங்களத்தின் தமிழ்த் தேசியச் சிதைவுக்கான சதிகளுக்காக புலம்பெயர் தேசங்களில் ஒட்டுக் குழுக்களை ஒத்த சில தமிழர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலத்தில் இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர், விடுதலைப் புலிகள் புலிகளுடன் இருந்து நிறம் மாறிய சில கருணாக்கள், சில வரலாற்றுப் பிழையானவர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட சிலர் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

அண்மையில் பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விவாதம் ஒன்றும் இதன் பின்னணியிலேயே நிகழ்த்தப்பட்டது. ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுக்களுடன் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவர்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்திற்காகப் பணி புரிவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டதே அன்றி வேறொன்றும் இல்லை.

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றைத் தனி நபர்கள் அபகரிப்பதாகவும் நடாத்தப்பட்ட வானொலி விவாதம் அவர்களது அறியாமையின் உச்சத்தையும், துரோகத்தின் வீரியத்தையும் மட்டுமே தமிழர்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு நிர்வாக ரீதியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களைக் கொண்டது. விடுதலைப் புலிகளின் இந்தக் கட்டமைப்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டாத உலக நாடுகளே இல்லை என்று சொல்லலாம்.

சிங்கள தேசத்தில் கூட அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக் குறித்து அங்கலாய்ப்பது வழக்கம். புலம் பெயர் தேசங்களிலும் இந்த ஒழுக்கம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை அனைத்துத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நாங்கள் இழந்தது எவ்வளவு? அழிந்தது எவ்வளவு? எங்கள் மக்கள் அழிந்தார்கள்… எங்கள் போராளிகள் அழிந்தார்கள்… எங்கள் தளபதிகள் அழிந்தார்கள்… எங்கள் படைக் கட்டுமானங்கள் அழிந்தன…

இத்தனை அழிவுகளை எதிர்கொண்டும் நிம்மதியாக வாழ மறுக்கப்பட்ட வன்னி மக்கள் வதை முகாம்களில் நாளாந்தம் செத்து மடிகின்ற வேளையில் இப்படியான, புலம்பெயர் தமிழர்களிடம் மனச் சிதைவை ஏற்படுத்தும் இப்படியான விவாதங்கள் திட்டமிட்ட தமிழின அழிப்புச் சதியின் தொடர்ச்சியே.

ஈழத் தமிழர்களிடம் உள்ள வாழ்வின் முதன்மையான இலட்சியங்கள் பிள்ளைகளின் படிப்பு, குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு. இந்த வாழ்வியல் தொடர்ச்சி புலம் பெயர் தேசங்களிலும் தொடர்கின்றன. அதற்காக ஓடி ஈடிப் பணியாற்றுகின்றனர்.

ஒருவர் தேசியக் கடமையிலும் தன் நேரங்களைச் செலவிடுகிறார் என்ற காரணத்திற்காக அவர் வாங்கும் வீடு, அவர் ஓடும் கார் என்று எல்லாமே தேசியக் கடமையிலிருந்து திருடியதாகக் குற்றம் சுமத்துவது ஈனத் தனமானது. கோழைத்தனமானதும் கூட.

புலம்பெயர் தமிழர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டை எழுந்தமானமாக கற்பனைவாதத்தின் அடிப்படையில் சுமத்த முடியாது. அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் அதைத் தட்டிக் கேட்கும் தகைமை தனக்கு இருக்கின்றதா? என்பதையும் குற்றம் சுமத்துபவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி என்ற வானொலி யாரால்? எந்த நிலையில்? எந்த அடிப்படையில்? உருவாக்கப்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள தேசத்தால் நியமிக்கப்பட்ட திரு. எஸ். குகநாதன் அவர்கள் தற்போது ‘டண்’ என்ற தொலைக்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து கொழும்பிலிருந்து ஒளிபரப்பி வருகின்றார்.

அவரது தமிழ்த் தேசிய சிதைப்புச் சேவையின் ஒரு அங்கமாக பிரான்சிலும் ‘தமிழ் அலை’ என்ற பெயரில் வானொலி ஒன்று தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது. முற்று முழுதாக தமிழத் தேசியத்தைச் சிதைக்கும் பணியில் பல வருடங்களாக திரு. எஸ். குகநாதன் அவர்களுடன் இணைந்து நடாத்தியவர்களே தற்போது ‘ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி’ என்ற பெயரில் வானொலியை ஆரம்பித்து நடாத்தப் பணிக்கப்பட்டுள்ளாhகள்.

அடையாளம் காணப்பட்ட தமிழ் அலை வானொலியால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிக சிதைவினை ஏற்படுத்த முடியாது என்பதால், சிங்கள அரசின் முதலீட்டுடன் இந்த வானொலி நடாத்தப்பட்டு வருகின்றது. இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை தற்போது ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இந்த வானொலி விவாதம் உறுதிப்படுத்துகின்றது.

துரோகிகள் புயல் போன்றுதான் உள்ளே நுழைவார்கள். போராளிகள் போலத்தான் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். இறுதியில் தங்கள் துரோகத்தால் இனத்தையே அழிவுக்குள்ளாக்கி விடுவார்கள்.

இது முள்ளிவாய்க்காலில் நாம் பெற்ற அனுபவம். புலம்பெயர் மண்ணிலும் இது தொடர்கின்றது.

– ஈழநாடு (பாரிஸ்)

http://www.meenagam.org/?p=12698

  • Replies 60
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு தமிழர்களே காரணம் வேறு ஒருவரும் அல்ல

உலகத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு தமிழர்களே காரணம் வேறு ஒருவரும் அல்ல

இல்லை வானத்திலை இருந்து குதிச்ச புலிதான் காரணம்... நான் அடிச்சு சொல்லுறன்...

எனக்கு தெரிந்த நல்லவை நெல்லையன், பாண்டு அண்ணைமார் எனக்கு சொல்லி தந்தவை..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகள் புயல் போன்றுதான் உள்ளே நுழைவார்கள். போராளிகள் போலத்தான் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். இறுதியில் தங்கள் துரோகத்தால் இனத்தையே அழிவுக்குள்ளாக்கி விடுவார்கள்.

இது முள்ளிவாய்க்காலில் நாம் பெற்ற அனுபவம். புலம்பெயர் மண்ணிலும் இது தொடர்கின்றது.

ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி

எஸ். குகநாதன்

டக்ளஸ் தேவானந்தா

அடையாளம் காணப்பட்ட தமிழ் அலை வானொலியால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிக சிதைவினை ஏற்படுத்த முடியாது என்பதால்

சிங்கள அரசின் முதலீட்டுடன் இந்த வானொலி நடாத்தப்பட்டு வருகின்றது

எத்தனை உண்மைகள்

புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்!

துரோகிகள் புயல் போன்றுதான் உள்ளே நுழைவார்கள். போராளிகள் போலத்தான் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். இறுதியில் தங்கள் துரோகத்தால் இனத்தையே அழிவுக்குள்ளாக்கி விடுவார்கள்.

http://www.meenagam.org/?p=12698

யாழுக்கையும் இந்த பச்சோந்தி கூட்டம் நிறைய ..

எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களில் பழியைப் போட்டு, எம் தவறுகளை மறைத்து விட முடியாது. சமீபத்தில் சுவிசிலுள்ள புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் அவர்களுக்குள்ளேயே பயங்கர மோதல் நடந்தது. ஏனென்று தெரியுமா ?? உங்களின் வாதங்கள் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு துணை போகுமேயொழிய, அவர்கள் திருந்த உதவாது.

இப்பிடியே எழுதி காலத்தை தள்ள வேண்டியது தான்! அவன் அவன் தலைவனாக வேண்டியது தான். எம்மை பற்றிய ஒரு முழு விமர்சனத்i வைக்காமல் அடுத்தவனையே குறை கூறுவது இலகு! அது தான் தமிழ் மகக்ளின் நியாயமான போரட்டமே இப்ப கேள்விக்குறியாகியுள்ளது! விமர்சிப்பவன் எல்லாம் துரோகிகள்! இது விசர்! இந்நத நோய்க்கு மருந்தே இல்லை!

இன்னுமொரு கருணா!!!!!!!

டீ.பி எஸ் ஜெயராஜ் என்ற ஒரு பத்திரிகையாளர்! இவரும் இவர்களின் பார்வையில் ஒரு கருணா! ஆனால் கீழ் வரும் கட்டுரையை ஒரு கணம் பாருங்கள்! இந்த பத்திரிகையாளனின் இந்த தகவல்கள் பற்றி ஒன்றும் கதைக்க மாட்டார்கள் காரணம்????? இது தமிழ் நெற்றில் கூட வந்து விட்டது! வாழ்க உங்கள் துரோக முத்திரை பதிப்பு!!!!

http://dbsjeyaraj.com/dbsj/archives/1149

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

எல்லோரும் கதைக்கத்தான் வேண்டும்

ஏனெனில் எதிரி தீர்மானமாக இருக்கின்றான்

உன்னை அழிப்பதென்று.

எனவே நாம் சேரவேண்டும்

எல்லோரும் ஒன்றாக வேண்டும்

புரியாதவர்களுக்குத்தான் நீங்கள் nதிளிவுபடுத்தவேண்டும்

இப்பிடியே எழுதி காலத்தை தள்ள வேண்டியது தான்! அவன் அவன் தலைவனாக வேண்டியது தான்.

http://www.epdpnews.com/spaw2/uploads/file...%20News/ar6.jpg

எம்மை பற்றிய ஒரு முழு விமர்சனத்i வைக்காமல் அடுத்தவனையே குறை கூறுவது இலகு! அது தான் தமிழ் மகக்ளின் நியாயமான போரட்டமே இப்ப கேள்விக்குறியாகியுள்ளது! விமர்சிப்பவன் எல்லாம் துரோகிகள்! இது விசர்! இந்நத நோய்க்கு மருந்தே இல்லை!

இன்னுமொரு கருணா!!!!!!!

டீ.பி எஸ் ஜெயராஜ் என்ற ஒரு பத்திரிகையாளர்! இவரும் இவர்களின் பார்வையில் ஒரு கருணா! ஆனால் கீழ் வரும் கட்டுரையை ஒரு கணம் பாருங்கள்! இந்த பத்திரிகையாளனின் இந்த தகவல்கள் பற்றி ஒன்றும் கதைக்க மாட்டார்கள் காரணம்????? இது தமிழ் நெற்றில் கூட வந்து விட்டது! வாழ்க உங்கள் துரோக முத்திரை பதிப்பு!!!!

http://dbsjeyaraj.com/dbsj/archives/1149

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2001 இல் எழுதியும் இன்னமும் தொடர் கதியாக இருப்பதற்கு காரணம் தமிழர்களிடயே காணப்படும் தனிமனித குரொதமும், கழிவிரக்கமும், எமது ஒற்றுமையும் தான்.

பல நல்ல எழுத்தாழர்களை சிங்கள பெளத்த இனவாதிகள் வாங்கிவிட்டார்கள்..........

தமிழினம் அழிந்தால் தான் இந்த ஒட்டுண்ணிக்கள் கழன்று விழும் அதுவரை 300000 மக்கள் படும் பாடு புலம் பெயர் தமிழருக்கும் ஏற்படும்.

இப்பிடியே எழுதி காலத்தை தள்ள வேண்டியது தான்! அவன் அவன் தலைவனாக வேண்டியது தான். எம்மை பற்றிய ஒரு முழு விமர்சனத்i வைக்காமல் அடுத்தவனையே குறை கூறுவது இலகு! அது தான் தமிழ் மகக்ளின் நியாயமான போரட்டமே இப்ப கேள்விக்குறியாகியுள்ளது! விமர்சிப்பவன் எல்லாம் துரோகிகள்! இது விசர்! இந்நத நோய்க்கு மருந்தே இல்லை!

இன்னுமொரு கருணா!!!!!!!

டீ.பி எஸ் ஜெயராஜ் என்ற ஒரு பத்திரிகையாளர்! இவரும் இவர்களின் பார்வையில் ஒரு கருணா! ஆனால் கீழ் வரும் கட்டுரையை ஒரு கணம் பாருங்கள்! இந்த பத்திரிகையாளனின் இந்த தகவல்கள் பற்றி ஒன்றும் கதைக்க மாட்டார்கள் காரணம்????? இது தமிழ் நெற்றில் கூட வந்து விட்டது! வாழ்க உங்கள் துரோக முத்திரை பதிப்பு!!!!

http://dbsjeyaraj.com/dbsj/archives/1149

2001 இல் எழுதியும் இன்னமும் தொடர் கதியாக இருப்பதற்கு காரணம் தமிழர்களிடயே காணப்படும் தனிமனித குரொதமும், கழிவிரக்கமும், எமது ஒற்றுமையும் தான்.

பல நல்ல எழுத்தாழர்களை சிங்கள பெளத்த இனவாதிகள் வாங்கிவிட்டார்கள்..........

தமிழினம் அழிந்தால் தான் இந்த ஒட்டுண்ணிக்கள் கழன்று விழும் அதுவரை 300000 மக்கள் படும் பாடு புலம் பெயர் தமிழருக்கும் ஏற்படும்.

நெல்லையன்.. புலியைத்தாண்டி உங்களால் சிந்திக்க முடியாதா? சரி வாக்குவாதம் வேண்டாம்.. ஈழத்தமிழன் தாயகம், தன்னாட்சி, தேசியம் ஆகிய மூன்று மூலக்கூறுகளுக்கும் உரித்துடையவனா? சுற்றி வளைக்காமல் ஆம் அல்லது இல்லை என்கிற பதிலில் ஒன்றை மட்டும் தரவும்..! நன்றி. :)

நாளைக்கு சொல்லுவன் என்பார் அல்லது பட்ஜெட் முடிய அல்லது .............

திரு நாளைப் போவார் போன்று காலம் கடத்த்தும் நபர்கள்தான்.

300000 மக்களை வைத்து பிச்சை எடுப்பது தான் மகிந்தா ஒட்டுண்ணிகளின் தொழில்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே எழுதி காலத்தை தள்ள வேண்டியது தான்! அவன் அவன் தலைவனாக வேண்டியது தான். எம்மை பற்றிய ஒரு முழு விமர்சனத்i வைக்காமல் அடுத்தவனையே குறை கூறுவது இலகு! அது தான் தமிழ் மகக்ளின் நியாயமான போரட்டமே இப்ப கேள்விக்குறியாகியுள்ளது! விமர்சிப்பவன் எல்லாம் துரோகிகள்! இது விசர்! இந்நத நோய்க்கு மருந்தே இல்லை!

இன்னுமொரு கருணா!!!!!!!

டீ.பி எஸ் ஜெயராஜ் என்ற ஒரு பத்திரிகையாளர்! இவரும் இவர்களின் பார்வையில் ஒரு கருணா! ஆனால் கீழ் வரும் கட்டுரையை ஒரு கணம் பாருங்கள்! இந்த பத்திரிகையாளனின் இந்த தகவல்கள் பற்றி ஒன்றும் கதைக்க மாட்டார்கள் காரணம்????? இது தமிழ் நெற்றில் கூட வந்து விட்டது! வாழ்க உங்கள் துரோக முத்திரை பதிப்பு!!!!

உமது கேள்விக்குப் பதில் எழுத முதல் உம்மிடம் ஒரு கேள்வி. இன்றைக்குச் சொல்லியிருப்பதை நாளைக்கு..சீ...சீ...இன்று பின்னேரமே மாற்றிக் கதைக்க மாட்டீர் எண்டு உத்தரவாதம் தரமுடியுமா?? ஏனென்றால் நீர்தான் காலை சொல்லியதை மதியம் வாந்தியெடுத்து அந்த வாந்தியை பின்னேரமே நக்கிக் குடிக்கிற்வராச்சே??! அதனால் கேட்கிறேன். முதலில் ஒரு தெளிவிற்கு வாரும், பிறகு கருத்தெழுவதைப் பற்றி யோசிக்கலாம்.

:)ஜெயராஜ் எப்போதிலிருந்து உமக்குத் தேசியவாதியாகத் தெரியுது? ஏன் அவரை 99 % ஆன தமிழர்கள் எதிரியாகப் பார்க்கிறார்கள் என்று தெரியுமா? ஏன் அவரால் சிங்களத்து அல்லது அவர்களின் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் மட்டும்தான் எழுத முடிகிறது ? சிங்களவன் ஏன் அவரின் கட்டுரைகளை ஆர்வத்துடன் அடிக்கடி பிரசுரிக்கிறான்?? இதெல்லாம் அவர் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கிறார் என்பதாலா?? சுத்த முட்டாப்பய ....!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமது கேள்விக்குப் பதில் எழுத முதல் உம்மிடம் ஒரு கேள்வி. இன்றைக்குச் சொல்லியிருப்பதை நாளைக்கு..சீ...சீ...இன்று பின்னேரமே மாற்றிக் கதைக்க மாட்டீர் எண்டு உத்தரவாதம் தரமுடியுமா?? ஏனென்றால் நீர்தான் காலை சொல்லியதை மதியம் வாந்தியெடுத்து அந்த வாந்தியை பின்னேரமே நக்கிக் குடிக்கிற்வராச்சே??! அதனால் கேட்கிறேன். முதலில் ஒரு தெளிவிற்கு வாரும், பிறகு கருத்தெழுவதைப் பற்றி யோசிக்கலாம்.

:lol:ஜெயராஜ் எப்போதிலிருந்து உமக்குத் தேசியவாதியாகத் தெரியுது? ஏன் அவரை 99 % ஆன தமிழர்கள் எதிரியாகப் பார்க்கிறார்கள் என்று தெரியுமா? ஏன் அவரால் சிங்களத்து அல்லது அவர்களின் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் மட்டும்தான் எழுத முடிகிறது ? சிங்களவன் ஏன் அவரின் கட்டுரைகளை ஆர்வத்துடன் அடிக்கடி பிரசுரிக்கிறான்?? இதெல்லாம் அவர் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கிறார் என்பதாலா?? சுத்த முட்டாப்பய ....!!!!!!!

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

... அரசியல்(?) பொறுப்பாளர் தமிழினி அக்கா, அரசியல்(?) பொறுப்பாளர் இளம்பருதி, விளையாட்டுத்துறை(?) பொறுப்பாலர் பாப்பா, புலனாய்வுத்துறை பொறுப்பாளர் தமிழ்க்குமரன் ........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

http://video.yahoo.com/watch/6004165

ஐயா

எல்லோரும் கதைக்கத்தான் வேண்டும்

ஏனெனில் எதிரி தீர்மானமாக இருக்கின்றான்

உன்னை அழிப்பதென்று.

எனவே நாம் சேரவேண்டும்

எல்லோரும் ஒன்றாக வேண்டும்

புரியாதவர்களுக்குத்தான் நீங்கள் nதிளிவுபடுத்தவேண்டும்

சேர்ந்திருந்தவர்களை சிதறடித்தது யார் என்று தேடுங்கள்.

விடை கிடைக்கும்?

அன்று, அனைத்து இயக்கங்களுக்கும் பொது எதிரியாக இருந்தது சிறீலங்கா அரசு.

ஆனால் , அனைத்து இயக்கங்களையும் அழித்தது புலிகள்தான்.

புலத்திலும் கூட தம்மை தவிர

எவரையும் எதையுமே செய்ய விடவில்லை.

இன்று அதற்கான தண்டனையை தாமே அனுபவிக்கிறார்கள்.

இனி இந்த ஒற்றுமை என்ற பித்தலாட்டம் எல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான்.

மக்கள் தெளிவடைந்து வருகிறார்கள்.

(Danguvaar @ Oct 6 2009, 11:07 PM)

நெல்லையன்.. புலியைத்தாண்டி உங்களால் சிந்திக்க முடியாதா? சரி வாக்குவாதம் வேண்டாம்.. ஈழத்தமிழன் தாயகம், தன்னாட்சி, தேசியம் ஆகிய மூன்று மூலக்கூறுகளுக்கும் உரித்துடையவனா? சுற்றி வளைக்காமல் ஆம் அல்லது இல்லை என்கிற பதிலில் ஒன்றை மட்டும் தரவும்..! நன்றி.

டன். இவைகள் எம் எல்லோரது "கனவு, ஆசை, செயல், ..." எல்லாமாக இருந்தது. இன்று இவைகளை செல்லாக்காசாக்கி விட்டு சென்று விட்டார்கள்!!!!!

... யாழ்கள உறுப்பினர் முன்பு வேறொரு தலைப்புக்கு எழுதிய ....

50களில் ........ 50 : 50

70களில் ....... 40 : 60

இன்று ....... 0 : 100

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்திருந்தவர்களை சிதறடித்தது யார் என்று தேடுங்கள்.

விடை கிடைக்கும்?

அன்று, அனைத்து இயக்கங்களுக்கும் பொது எதிரியாக இருந்தது சிறீலங்கா அரசு.

ஆனால் , அனைத்து இயக்கங்களையும் அழித்தது புலிகள்தான்.

புலத்திலும் கூட தம்மை தவிர

எவரையும் எதையுமே செய்ய விடவில்லை.

இன்று அதற்கான தண்டனையை தாமே அனுபவிக்கிறார்கள்.

இனி இந்த ஒற்றுமை என்ற பித்தலாட்டம் எல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான்.

மக்கள் தெளிவடைந்து வருகிறார்கள்.

உங்களது பதிலில் தெளிவில்லை

மக்கள் என்று சொல்லி எங்கள் பொறுப்பிலிருந்து தப்பிப்பதாகவே எனக்கு தெரிகிறது

அவர்கள் அனுபவிக்கின்றார்கள் என்று எதைச்சொல்கின்றீர்கள்

புலிகளையா?

அவர்கள் போராளிகள் எனவே அதை அவர்கள் பெரிதுபடுத்தமாட்டார்கள்

அவர்கள் கவலையெல்லாம் மக்களின் இன்றைய நிலைபற்றியே இருக்கும்

அதுக்கு ஏதாவது செய்ய முன்வாருங்கள்

எடுத்ததெற்கெல்லாம்

நான் பிடித்த முயலுக்கு 3கால்என்றால் எதுவும் நடக்கப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவன், நீங்களுமா??!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

டன். இவைகள் எம் எல்லோரது "கனவு, ஆசை, செயல், ..." எல்லாமாக இருந்தது. இன்று இவைகளை செல்லாக்காசாக்கி விட்டு சென்று விட்டார்கள்!!!!!

நான் கேட்டது தமிழர் உரிமைகள் பற்றிய கேள்வி. நீங்கள் கொடுத்திருக்கும் பதில் தமிழரின் இன்றைய நிலை என்ன என்பது.. :lol:

சரி.. இன்னும் தெளிவாகவே கேட்கிறேன்.. ஈழத்தமிழருக்கு இலங்கைத் தீவில் தாயகம், தேசியம், தன்னாட்சிக்கான உரிமைகள் இருக்கின்றனவா?

1) ஆம்

2) இல்லை

3) தெரியாது

4) பதிலளிக்க விரும்பவில்லை :D

பின்குறிப்பு: நிர்வாகத்துக்கு.. என்னுடைய சில கருத்துக்களை நீக்கிவிட்டீர்களே.. அப்படி என்ன தவறாக எழுதினேன்? :D

தலைவன், நீங்களுமா??!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தலைவன் நீங்களுமா எனக் கேட்பதை விட, அவரின் கருத்தில் அப்படி என்ன தவறு கண்டீர்கள் என்பதை விளக்கலாமே ?? உங்களைப் பொறுத்தவரை மற்றயவர்களும், நீங்கள் விரும்புவது போல்த் தான் கருத்து வைக்க வேண்டுமென்று ஏன் நினைக்கின்றீர்கள் ?? இனியும் தவறுகளைச் சுட்டிக் காட்டக் கூடாதென்ற மனப்பான்மையோடு தாங்கள் இருப்பது தான் கவலையளிக்கின்றது.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேட்டது தமிழர் உரிமைகள் பற்றிய கேள்வி. நீங்கள் கொடுத்திருக்கும் பதில் தமிழரின் இன்றைய நிலை என்ன என்பது.. :lol:

சரி.. இன்னும் தெளிவாகவே கேட்கிறேன்.. ஈழத்தமிழருக்கு இலங்கைத் தீவில் தாயகம், தேசியம், தன்னாட்சிக்கான உரிமைகள் இருக்கின்றனவா?

1) ஆம்

2) இல்லை

3) தெரியாது

4) பதிலளிக்க விரும்பவில்லை :D

பின்குறிப்பு: நிர்வாகத்துக்கு.. என்னுடைய சில கருத்துக்களை நீக்கிவிட்டீர்களே.. அப்படி என்ன தவறாக எழுதினேன்? :D

எனக்கு ஒரு சந்தேகம் வலுவாக இருக்கிறது. யூனியர் விகடன் வரிசையில் இந்த யாழ்( எமது யாழ்) களமும் சிறி லங்கா சிங்கள இனவாதிகளின் ப்டியில் விழுந்து விட்டதா? விள்க்க வேண்டியது கள நிர்வாகத்தின் கடமை. எம்மில் பலர் ஊடுருவி சிங்கள இனவாத பாசிச கருத்துக்களை இந்த யாழ் இணைய மூலம் பரப்பி எமது மக்களை குழப்பி வருகிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தேசத்தில் புதிய கருணாக்கள் என்றவுடன் புழுங்கியவர்கள்

வசம்பு

தலைவன்

பாண்டு

நெல்லையன்

தொப்பி அளவாக இருக்கிறது என்று ஆளாளுக்கு அடித்துப் பிடித்து போட்டுக்கொள்கிறீர்கள். எங்கே இன்னொருவரை காணவில்லை... அதுதான் நம்ம மாண்புமிகு மதி. ஐயா உங்கள் வரவும் இங்கே எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by காட்டாறு

அண்ணே கருணாவுக்கு ஆதரவு குடு எண்டு அன்பா அழைக்கிறீங்க, விட்டிடுவமா? :lol:

போர் வேண்டாமெண்டு விட்டிட்டு அரசியலில இறங்கி மக்களுக்காக உழைக்கிறானாமே?

முள்ளிவாய்க்கால்வரை மக்கள தள்ளிக்கொண்டுபோய், போராட்டம் எண்ட பேரில மக்களின்ட பிணத்துமேல போராட்டம் நடத்தின

தேசியத்தலைவரைவிட அவன் உசத்தியானவன்தான்.

போராட்டம் எண்ட பேரில வன்னிமக்களை நடுத்தெருவில விட்டிட்டுப்போன தீர்க்கதரிசி சூரியத்தேவன் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனைவிட

அவன் மேலானவன்தான்.

தனிமனிதன் தனிமனிதன் எண்டு சொல்லி தட்டிக்கழிச்ம்,

தனிமனிதனா நிண்டு யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவர உதவி செய்திருக்கிறான்,

மட்டக்களப்பையாவது பேரழிவிலிருந்து மீட்டெடுத்திருக்கிறானெண்டா

அவன்தான் உண்மையான தலைவன்.

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவு அழிவுக்கும் காரணமானவன்...

இன்று தங்கள் தலைவன்

உருப்படுமா??? தமிழினம்

சேர்ந்திருந்தவர்களை சிதறடித்தது யார் என்று தேடுங்கள்.

விடை கிடைக்கும்?

அன்று, அனைத்து இயக்கங்களுக்கும் பொது எதிரியாக இருந்தது சிறீலங்கா அரசு.

ஆனால் , அனைத்து இயக்கங்களையும் அழித்தது புலிகள்தான்.

புலத்திலும் கூட தம்மை தவிர

எவரையும் எதையுமே செய்ய விடவில்லை.

இன்று அதற்கான தண்டனையை தாமே அனுபவிக்கிறார்கள்.

இனி இந்த ஒற்றுமை என்ற பித்தலாட்டம் எல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான்.

மக்கள் தெளிவடைந்து வருகிறார்கள்.

நீங்கள் சொல்வதுக்கு என்னால் முழுமையாக பதில் அளிக்க முடியும்.... அதுக்கும் முன் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்டு பதில் வேண்டுகிறேன்...

இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த போது புலிகளிடம் இருந்து 100% ஆயுதங்களையும் களைந்து விட்டு மற்றய அமைப்புக்களிடம் ஆயுதங்களை களையாமல் நடமாடி புலிகளின் உறுப்பினர்களை வேட்டையாட விட்டதின் இரகசியம் என்ன...???

இதுக்கு பதிலை சொல்லுங்கள் மாற்று இயக்கங்கள் தமிழர்களுக்காக போராட வந்தார்களா அல்லது இந்திய எஜமானுக்காக விசுவாசம் காட்ட வந்தார்களா என்பதை எழுதுகிறேன்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.