Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிலாரி கிளிங்டன் மொனிக்கா எபிசோட்டினை மறந்துவிட்டார் போல - ரட்னசிறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிரச்சினை ரத்தினசிறி சொன்னதா இல்லை மற்றவயள் எத்தின கள்ளப் பொஞ்சாதி வச்சிருக்கினம் என்கிறதா? ரத்தினசிறி சொன்னத வச்சு அமெரிக்காவோட அவன சிண்டு முடிக்காம நாம நம்மட வீட்டில எத்தின பேருக்கு எத்தின எண்டு வாதாடுவது நல்லதா தெரியல அண்ணன்மாரே........

அதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

ரத்திணசிரியார் கிளங்டனின் தவறைக் காட்டி தமது நாட்டை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதைச் சுட்டிக்காட்ட அமெரிக்காவிற்கு யோக்கியதை கிடையாதென்பது உண்மை. ஈராக்கில் அமெரிக்க இராணுவம் செய்யாத பாலியல் கொடுமைகளா ?? அதுவும் அமெரிக்க இராணுவத்திலிருந்த பெண்கள் கூட ஈராக் ஆண்களை பாலியல் கொடுமைப்படுத்திய எத்தனை ஒளிப்பதிவுகள் வெளிவந்தன. இவற்றைப் பற்றி திருமதி கிளிங்டன் இன்றுவரை வாய் திறக்கவவில்லையே .....

அமெரிக்கா ஜப்பான், அப்கானிஸ்தான் ,ஈராக் என பல நாடுகளில் பல மனித உரிமைகளை மீறியது. இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரெலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு துணைபோகின்றன.

இந்தியா தமிழீழம், அசாம், காஸ்மீர், மிசோரம் என்று பல இடங்களில் மனித உரிமைகளை மீறுகிறது. சீனா செய்த மனித உரிமை மீறல்கள் எண்ணில் அடங்காதவை. சரி இப்படியானால் யார் தான் சிறிலங்காவின் மனித உரிமை மீறல் பற்றிக் கதைப்பது?.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு,

நீங்கள் மேலோட்டமக விமர்சிக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

உலகிலுள்ள ராணுவங்கள் தாம் போகுமிடமெல்லாம் அந்நாட்டுப் பெண்களுக்கெதிராகப் புரியும் பாலியல் வக்கிரங்கள் இருவகைப்படும்.

முதலாவது வகை,

எந்த அரசியல் நோக்கங்களுமற்ற ஆணாதிக்க வெறியாலும் ஆயுத ஆதிக்கத்தாலும் கூட்டாகவும் தனியாகவும் நடைபெறும் பாலியல் வன்புணர்வுகள். இவற்றிற்கு உதாரணம், ஈழத்திலும் வங்க தேசத்திலும் இந்திய ஆக்கிரமிப்புப்படை செய்ததும், கெயிட்டியில் இலங்கை ஐ.நா படைகள் செய்ததும், நீங்கள் சொல்லியவாறு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் செய்ததும்.

ரெண்டாவது வகை,

அரச மயமாக்கப்பட்ட பயங்கரவாதம் தனது அரசியல் நோக்கங்களுக்காகவும், இன ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவும் தான் ஆக்கிரமித்துள்ள நாட்டில் அம்மக்களின் சந்ததியைப் பெருக்கக் கூடியவர்களான பெண்களின் மேல் செய்யும் பாலியல் வன்புணர்வு. இதற்கு உதாரணம், இலங்கையில் சிங்கல ஆக்கிரமிப்பு ராணுவம் கடந்த 40 - 50 வருடங்களாகச் செய்துவருவதும், காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் செய்துவருவதும், 1990 களில் பொஸ்னிய முஸ்லீம்களுக்கெதிராக சேர்பியர்கள் நடத்திய இனவழிப்புப் போரில் அவர்கள் செய்ததும், ருவாண்டாவில் டுட்ஸி இனப்பெண்களுக்கெதிராக கூட்டு இன அரச படைகள் கட்டவிழ்த்துவிட்ட பாலியல் வன்புணர்வுகளும் அடங்கும்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் பொஸ்னிய இனவழிப்புப் போரின்போது கூட்டம் கூடமாகக் கைதுசெய்யப்பட்ட பொஸ்னியப் பெண்கள் கூட்டாகக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் கருத்தரிக்கும்வரை வதை முகாம்களில் அடைக்கப்பட்டும், அவர்கள் கருத்தரித்தது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான் சேர்பிய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களால் விடுவிக்கப்பட்டார்கள். இதன்மூலம் இனிவரும் பொஸ்னியச் சந்ததி தனது தனித்தன்மையை இழப்பதோடு, சேர்பிய ஆதிக்கம் நிலைபெறும் என்றும் எதிர்பார்த்தார்கள்.

ஈழத்திலும் இதற்குச் சற்றும் குறையாத பாலியல் வன்புணர்வுகள் அரங்கேறுகின்றன. அவற்றை வெறும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களாக நாமே சித்தரிப்பதன் மூலம் அவற்றிற்குப் பின்னாலிருக்கும் அரச பயங்கரவாதத்தை பார்க்கத் தவறி விடுகிறோம்.அதாவது தமிழரின் இனத்தை விருத்தி செய்யும் தகுதியுடைய இளம் பெண்கள் ஒன்றில் கற்பழிக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். அதேபோல இளைய ஆண்களும் அழிக்கப்படுகிறார்கள். கடந்த 30 - 40 வருடப் போரில் இலங்கையில் சனத்தொகை வளர்ச்சி வீதத்தைப் பார்த்தால் தமிழினம் அடைந்திருக்கும் வளர்ச்சி என்பது மற்றைய இரு இனங்களுடனும் ஒப்பிடும்போது எங்கே நிற்கிறதென்பது புரியும். முல்லைத்திவை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்த போது கோத்தபாய தனது ராணுவத்திற்குச் சொன்ன பாடம் சிலருக்கு நினைவிருக்கலாம்." முல்லைத்தீவை நீங்கள் கைப்பற்றும்போது அங்கிருக்கும் பெண்களை நீங்கள் காம வேட்டையாடலாம், ஆண்களை கொன்று கடலில்ப் போடுங்கள், அவர்களின் ரத்தத்தில் கடல் சிவப்பாகட்டும்"

ஆக, திருமதி கிளின்ரன் பேசியது இவ்வாறான அரச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தின் ஒரு ஆயுதமான பாலியல் வக்கிரங்களைப் பற்றித்தான். அவர் எழுந்தமாறான பாலியல் வன்புணர்வுகள் பற்றிக் குறிப்பிடவில்லை.

ரெண்டுமே பாலியல் வன்புணர்வுகளாக இருந்தாலும் கூட அவை செய்யப்படும் நோக்கங்கள் வேறு வேறானவை. ஒரு குறிப்பிட்ட இனத்தை நீண்டகாளப் போக்கில் வெகுவாகப் பாதிக்கக்கூடியவை. அதைத்தான் அவர் சொன்னார். நீங்கள் மொனிக்காவை இந்த அரச மயப்பட்ட பயங்கரவாத ஆயுதத்துடன் ஒப்பிட்டால், அவரது யூத இனம் இப்போது என்ன பின்னடைவைச் சந்தித்தது என்று கூற முடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

ஆக மொத்தத்தில ரத்தின சிறி ஒருமாட்டுக்கள்ளன் இல்லை ஒரு அறிவாளியென்டு நாங்களெல்லாம் ஒத்துக்கொள்றமா?

எத்தனை வாதப்பிரதிவாதங்கள்?

எதைச்சொன்னாலும் பொங்கிறாங்களப்பா எங்கட சனங்கள்.

Edited by Sooravali

1. அமெரிக்கா குற்றம் செய்துள்ளது, ஆகவே இலங்கை பற்றி கதைக்க கூடாது. அமெரிக்கா போன்றுதான் ரஷ்சியா, பிரித்தானியா, ஜேர்மனி,பிரான்ஸ் என்பன தொடக்கம் வரலாற்றில் போரில் ஈடுபட்ட அனைத்து தேசங்களும் இலங்கையை குற்றம் சுமத்தக் கூடாது என்கின்றீர்களா? அப்படியெனில், எந்த நாடு இலங்கை மீது குற்றம் சுமத்த வேண்டும் என்கின்றீர்கள்?

மிகவும் கடினமான கேள்வி கேட்டிங்கள். இதற்கு திருவாளர் மதிப்புக்குரிய வசம்பு அவர்கள்

1) பதில் அளிக்கமாட்டார்

2) கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்காது நீங்கள் வேறு பதிவில் சொன்னவற்றுக்கு பதில் அளிப்பார்( உ+ம் - கருணாநிதிக்கு 3 மனைவிகள்)

3) அரை குறையாக வாசித்து விட்டு பதில் அளிக்காதீர்கள் என்று திட்டுவார்

4)இப்பதிவில் இருக்கும் வேறு கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்

5) என்னைத்திட்டுவார்

6)சிஞ்சாங் போடுவதாகச் சொல்லுவார்

7)தொப்பியைக் கழ்ற்றி விட்டதாகச் சொல்லுவார்.

8)

பி.கு - யாழ்பிரியா அவர்களுக்கு நான் இங்கு திருவாளர் மதிப்புக்குரிய வசம்பு என்று தான் சொல்லி இருக்கிறேன். கருத்துக்கள் வேறாக இருந்தாலும் யாழில் எழுதும் போது நாகரீகமாக எழுதவேண்டும் என்ற உங்களின் கோரிக்கையினை இனி ஏற்றுக்கொள்கிறேன்.

Edited by sivakumaran

ரத்திணசிரியார் கிளங்டனின் தவறைக் காட்டி தமது நாட்டை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதைச் சுட்டிக்காட்ட அமெரிக்காவிற்கு யோக்கியதை கிடையாதென்பது உண்மை.

இதை திருவாளர் மதிப்புக்குரிய வசம்பு அவர்கள் 10 மாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்தால் எங்கட அமெரிக்கா, கனடா ,ஐரோப்பியா, அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா சனங்கள் வேலை வெட்டியில்லாமல் அமெரிக்காத்தூதுவாரலயங்களுக

ரகுநாதன்,

தங்கள் கருத்திற்கு நன்றி. எனது பதில்க் கருத்தை தங்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே வைக்கின்றேன். காரணம் இஙகு சிலர் தம்மை அதிபுத்திசாலிகளாக நினைத்து எனது கருத்தை தவறாகத் திணித்து தம்மைத் தாமே மெச்சிக் கொள்கின்றார்கள்.

ஏற்கனவே ஹிலாரி பொதுப்படையாகவிட்ட அறிக்கையை எம்மவர் ஊடகங்களே மிகைப்படுத்தி பரபரப்பாக்கினார்கள். இதையே தற்போது ஹிலாரி கூட தனது செய்தி மிகைப்படுத்தப்பட்டதாகவும், தான் எவரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லைலயென்றும் மறுப்பறிக்கை விட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் தற்போது நடைபெற்ற போரில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு தங்களிடம் எவ்வித ஆதாரமும் இல்லையென அறிக்கை விட்டுள்ளார். இவற்றை வைத்து எம்மால் என்ன செய்ய முடியும் ?? முன்பு ஐக்கிய இராச்சிய வெளிவிவகார அமைச்சரும் இலங்கையின் குற்றங்களை ஐ.நாவின் கூட்டத் தொடரில் எழுப்பப் போகின்றேனென்று ஓங்கிக் குரல் கொடுத்தார். ஆனால் ஐ.நா கூட்டத் தொடர் தொடங்கிய போது அவர் வாயே திறக்கவில்லை.

போர்க் குற்றங்ககள் புரிந்த நாடுகள் எமக்காக குரல் கொடுக்கக் கூடாதா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சில மாதங்களின் முன்பு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் "ஐ.நா வேண்டுமானல் எம்மீது விசாரணை நடத்தட்டும், அதற்கு முதல் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா நடாத்திய விசாரணை அறிக்கையை எம்மிடம் சமர்ப்பிக்கட்டும்" என்று. இதற்கு இன்றுவரை ஐ.நா பதிலளிக்கவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளின் கண்துடைப்புகளை நம்பி நாம் புளங்காகிதம் அடைந்து என்ன பயன் ?? வன்னியில் போர் உச்சக்கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது அமெரிக்கா, பிரித்தானியா, யப்பான், இந்தியா போன்ற பல நாடுகளின் இராணுவத்தளபதிகள் நேரடியாகவே வந்து, களநிலைமைகளை ஆராய்ந்து இலங்கை அரசிற்கு ஆலோசனை வழங்கினார்கள். இவர்களுக்குத் தேவை ஆயுத விற்பனையே தவிர, உலக அமைதியல்ல.

தற்போதைய களநிலைமைகளில்; முதலில் நாம் செய்ய வேணண்டியது முட்கம்பி வேலிகளுக்குள் அகப்பட்டிருக்கும் அந்த மக்களை சீரழியாது மீட்பதும், அவர்கள் மறுவாழ்விற்காக முடிந்தவரை உதவுவதுமே. கடந்த கால எமது தவறுகளிலிருந்து பாடம் படித்து, அரசியல் ரீதியான முன்னெடுப்புகளே எனி முக்கியம். இதுவரை புலிகளைப் பயங்கரவாதிகளென்று எம்மைக் கைவிட்ட உலகநாடுகள், எனி என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதையும் உரத்துக் கேட்போம். அதை விடுத்து மீண்டும் போர் வெடிக்கும், நாடு கடந்த தமிழீழ அரசமைப்போம் போன்ற கோசங்கள், மீண்டும் எம்மைத் தனிமைப்படுத்தி அந்த வன்னி மக்களையும் புதைகுளிக்குள் அனுப்பவே உதவும்.

இது தான் இவ்விடயம் சம்மந்தமான எனது தீர்க்கமான பதில். இனி இதையும் தமது அதிபுத்திசாலித்தனத்தைக் காட்ட, நான் ஏதோ இலங்கை அரசிற்கு வக்காலத்து வாங்குவதாக புரளி பண்ணி, இத்திரியை இன்னும் 20 -30 பக்கங்களுக்கு இழுத்தடிப்பதே தமது தலையாய கடைமை என நினைப்போர் தொடரட்டும். நன்றி. வணக்கம்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய களநிலைமைகளில் முதலில் நாம் செய்ய வேணண்டியது முட்கம்பி வேலிகளுக்குள் அகப்பட்டிருக்கும் அந்த மக்களை சீரழியாது மீட்பதும் அவர்கள் மறுவாழ்விற்காக முடிந்தவரை உதவுவதுமே. கடந்த கால எமது தவறுகளிலிருந்து பாடம் படித்து அரசியல் ரீதியான முன்னெடுப்புகளே எனி முக்கியம். இதுவரை புலிகளைப் பயங்கரவாதிகளென்று எம்மைக் கைவிட்ட உலகநாடுகள் எனி என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதையும் உரத்துக் கேட்போம். அதை விடுத்து மீண்டும் பேர் வெடிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசமைப்போம் போன்ற கோசங்கள் மீண்டும் எம்மைத் தனிமைப்படுத்தி அந்த வன்னி மக்களையும் புதைகுளிக்குள் அனுப்பவே உதவும்.

நன்றி வசம்பு

இதுதானே எமது நோக்கமும்

எனவே ஒன்றிணைவோம் எல்லோரும்

ஏதாவது செய்வோம் எம்மக்களுக்கு....

நான் கீழே எழுதியுள்ளதையும் பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64803

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு,

உங்கள் கருத்துக்கு நன்றி.

வன்னி முகாமில் வதைபடும் மக்கள் விரைவில் விடுதலை பெறவேண்டும் என்பதில் எவருக்குமே மாற்றுக்கருத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் வன்னி முகாம் ஏதிலிகளையும் தாண்டி எமது போராட்டம் முன்செல்ல வேண்டும் என்பதுதான் பலரின் கருத்து. ஆயுதப் போராட்டம் என்பது இப்போதைக்குச் சாத்தியம் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை.

ஆனால் சிங்களப் பேரினவாத அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கக் கூடியவர்கள் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே. ஆகவே அவர்கள் தம்மால் முடிந்தளவிற்கு நடந்தேறிய இனக்கொலையை அம்பலப்படுத்தவும் எமது போராட்டத்தின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்தவும் வேண்டியது அவசியமாகிறது.

எமது கவனம் முழுவதையும் வன்னி முகாம் மக்களின் விடுதலையின் மேல் நீண்டகாலத்துக்குச் செலுத்துவதென்பது சிங்கள அரசின் இனக்கொலை உலக அரங்கிலிருந்து சிறிது சிறிதாக மறைந்துவிடும், மறக்கப்பட்டு விடும். ஆகவே வன்னி மக்களின் விடுதலையும், புலம்பெயர் தேசங்களில் அரசியல் நடவடிக்கைகளும் ஒரே சமயத்தில் நடைபெற வேண்டும்.

வன்னி முகாம் மக்களின் விடுதலை எவ்வள்வு முக்கியமோ அதேயளவு எமது அரசிய அழுத்தங்களும் முக்கியம். அரசியல் நடவடிக்கைகளை அரசு வன்னி முகாம்களை நீண்டகாலத்துக்கு இழுத்தடிப்பதற்கான சாட்டாக வைக்குமானால் அதை முறியடிக்கத் தேவையான மாற்று வழிகளை ஆராய வேண்டியதும் அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.