Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாணவர்கள் கேள்வி:திமுக கூட்டணி எம்பிக்கள் மவுனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குழு இன்று காலை யாழ்ப்பாணத்திற்குச் சென்றது.

யாழ்ப்பாணம் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் அழைத்து வரப்பட்டிருந்த மாணவர்கள் உள்ளிட்டோருடன் தமிழக குழுவினர் உரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சரமாரியாக கேள்விகளைக் கேட்டுள்ளார்கள்.

’’ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக வைத்து பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் எத்தனை ஆயிரம் தமிழர்களைக் கொல்லப் போகிறார்கள்’’? என்று ஒரு மாணவர் கேட்டபோது,

திமுக -காங்கிரஸ் எம்.பிக்கள் குழு அமைதியாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன்.

மறுகுடியமர்த்தல் நடவடிக்கைகள் குறித்த பல கேள்விகளுக்கு டி.ஆர்.பாலு சரிவர பதில் தர முடியாமல் தவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.nakkheeran.in

  • கருத்துக்கள உறவுகள்

உது உவையளுக்கு தேவையா? ஒழுங்கா ஜெயாவோடை அரசியல் பண்ணிக்கொண்டு கம்முனு இருந்திருக்கலாம்தானே..! :icon_mrgreen:

உது உவையளுக்கு தேவையா? ஒழுங்கா ஜெயாவோடை அரசியல் பண்ணிக்கொண்டு கம்முனு இருந்திருக்கலாம்தானே..! :icon_mrgreen:

நீங்கள் வேறை சிலநேரம் அவ கேட்கின்ற கேள்விக்கும் கொலைஞர் சுத்துமாத்து பதில் சொல்கின்றான்.

இந்தியாவில் இருந்து தமிழக மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் பூச்சாண்டி காட்ட இந்திய நாடாளுமன்றக் குழுவின் நேற்று இலங்கைக்கு வியையம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளனர் இவர்களை தமிழ் துரோகிகள் பலர் வரவேற்றிருந்தனர்.

இவர்கள் வந்த பகுதிக்கு சென்ற மக்கள் அவர்களிடம் பல கேள்விகளை தொடுத்திருந்தனர்,இந்தியா நாடாளுமன்றக் குழுவின் அவர்களுக்கு சரியான தெளீவான பதிலை கூறவில்லை.

பின்னர் தந்தை செல்வாவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய அவர்கள், யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதன் பின்னர் அங்கு கூடியிருந்தோருக்கும் இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாநகர உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் உட்பட்டோர், வடக்கில் அபிவிருத்திகளை காட்டிலும் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவதே உண்மையான அபிவிருத்தியாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார்.

பின்னர் நடைபெற்ற யாழ் மாணவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில், மாணவர்களின் சரமாரியான கேள்விகளில் சிக்கி மூச்சுத் திணறினர்..தமிழக எம்பிக்கள்.

ராஜிவ் காந்தி கொலையைக் காரணம் காட்டி எத்துனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள் ? இன்னும் எத்துனை ஆயிரம் மக்கள் கொல்லப் படுவார்கள் என்ற கேட்டவுடன் டி.ஆர் பாலு மற்றும் மற்ற எம்பிக்கள் வாயடைத்து போயினர். பேசவும் இல்லை, எந்தவித கருத்துக்களும் சொல்லவில்லை..! ( தமிழகத்தில் பேசும் பொழுது ராஜிவை கொன்றவர்கள் என்றார்கள்...இவர்கள் கேட்டதற்கு பதில் சொல்லி இருக்கலாமே திராணி இருந்திருந்தால் ...? )

என்ன தமிழ்நாடா ! மைக்கை பிடிப்பது வார்த்தைகளாலேயே மனித உரிமை, ஜனநாயகம், சமத்துவம் என்று அனைத்தையும் கட்டி எழுப்ப ...! மற்றும் மீள்குடியேற்றம் பற்றி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, டி.ஆர் பாலு, நாங்கள் இந்த விஷயங்களைப் பற்றி அறிக்கை தயாரித்து முதல்வரிடம் கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று தமிழக பொதுக் கூட்டத்தில் கூறுவது போல் கூறினார்...டி.ஆர் பாலு,

கேள்விகள் பெரும்பாலும், முகாம்கள், மீள் குடியேற்றம் குறித்து தான் இருந்தன..இந்தக் கேள்விக்கெல்லாம் இவர்களால் பதில் சொல்ல முடியாது..வேறு ஏதாவது பிரச்சனைகள் உள்ளனவா? என்று கேட்டு முகாம் குறித்த கேள்விகளை புறந்தள்ளினர்..

திருமாவளவனும் முகாம் குறித்த எந்த விதமான பதில்களும், கருத்துக்களும் கூறவில்லை...மேலும் திருமாவளவனிடம் மாணவர்கள் கேட்ட கேள்வி, எங்கள் மாணவர்கள் அந்த இறுதி யுத்தத்தில் சிக்கியிருந்த சமயத்தில் போரை நிறுத்தியிருந்தால் பெரும்பாலான பொது மக்களும், மாணவர்களும் பிழைத்து இருப்பார்கள் என்று கேட்டவுடன், பேச்சு வராத திருமாவளவனை... மாணவர்கள் பார்த்தனர்..ஒன்றுக்கும் பதில் இல்லை, கருத்து இல்லை,

( திருமாவளவன் எதிர் காலத்தில் ஒரு குட்டி கருணாநிதியாக வருவார் )

ஒன்று தெரிந்திருக்கும் இவர்களுக்கு, கலந்தாய்வு, பத்திரிக்கை சந்திப்பு இவற்றில் எல்லாம் இனிமேல் கலந்து கொள்ள மாட்டார்கள்...மகிந்தாவைப் பார்த்து விருந்து உண்டு, பரிசுப் பொருட்கள் பெற்று திரும்புவார்கள்.. ( முகாம்களை பார்வையிடச் செல்லும் இவர்களை முகாம் மக்கள் செருப்பு வீசி தனது எதிர்ப்பை காட்டுவார்கள் என்று நம்பலாம் ...! ) முழுக்க அம்பலப்பட்டு போனார்கள் இந்தக் கோமாளிகள் உலக மக்களிடமும் தமிழக மக்களிடமும் ...இவர்கள் மூலம் இந்திய அரசு கோமாளி ஆகி போனதை கண்டு கொண்டன உலக நாடுகள்.

http://www.parantan.com/

யாழ் பல்கலைக்கழகமே தமிழர்களின் உணர்வுகளை என்றுமே வெளிப்படுத்தியது.. இன்றும் பயந்த சூழலிலும் தன் உணர்வை, கோபத்தை பதிவாக்கியுள்ளது.

சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது யுத்தத்தை யார் செய்தார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

1375ae74977c63d7faf7aa936102e7c2.jpg

ஈழத் தமிழரின் அகதி முகாமை இரவில் பார்வையிட சென்ற போது ........

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கண்ட காட்சியை ........

நமது புகைப்படப்பிடிப்பாளர் படம் பிடித்து அனுப்பியுள்ளதை நீங்களும் பாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகங்களில் குறிப்பாக கலைஞரின் ஊடகங்களான சன், கலைஞர், முரசொலி, தினகரன், குங்குமம் போன்றவை நடந்ததை மாற்றி தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிடப் போகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிப்போட்டே வரயில்ல அதுக்குள்ள........ சாத்திரக்காறரவிட மோசமாக்கிடக்கு......... :icon_mrgreen:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

றிப்போட்டே வரயில்ல அதுக்குள்ள........ சாத்திரக்காறரவிட மோசமாக்கிடக்கு......... :icon_mrgreen:

சரி வந்தால் நானும் பிரபல சாத்திரி ஆகிவிடலாம் தானே. :(

  • கருத்துக்கள உறவுகள்

றிப்போட்டே வரயில்ல அதுக்குள்ள........ சாத்திரக்காறரவிட மோசமாக்கிடக்கு......... :(

என்ன றிப்போட் கொடுப்பார்கள் என்று தெரியும் தானே ..........

இதுக்கெல்லாம் சாத்திர அறிவு தேவையில்லை. :(:icon_mrgreen:

றிப்போட்டே வரயில்ல அதுக்குள்ள........ சாத்திரக்காறரவிட மோசமாக்கிடக்கு......... :icon_mrgreen:

உதை சொல்லுறதுக்கு பேர்தான் பட்டறிவு... ஏற்கனவே பட்டு அறிந்து இருக்கினம்... !!

  • கருத்துக்கள உறவுகள்

உது உவையளுக்கு தேவையா? ஒழுங்கா ஜெயாவோடை அரசியல் பண்ணிக்கொண்டு கம்முனு இருந்திருக்கலாம்தானே..! :icon_mrgreen:

நீங்கள் வேறை சிலநேரம் அவ கேட்கின்ற கேள்விக்கும் கொலைஞர் சுத்துமாத்து பதில் சொல்கின்றான்.

யாழ் பல்கலைக்கழகமே தமிழர்களின் உணர்வுகளை என்றுமே வெளிப்படுத்தியது.. இன்றும் பயந்த சூழலிலும் தன் உணர்வை, கோபத்தை பதிவாக்கியுள்ளது.

சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது யுத்தத்தை யார் செய்தார்கள் என்று.

இப்போதாவது உணர்வார்களா?

நடந்தது சினிமாப்படமல்ல...

நிஐம் என்பதை....

நிஐத்தை தரிசிக்க முடியாமைதான்

பதிலளிக்க முடியாமைக்கு காரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதை சொல்லுறதுக்கு பேர்தான் பட்டறிவு... ஏற்கனவே பட்டு அறிந்து இருக்கினம்... !!

அவங்கள் வரமுதலே தெரியும் என்ன றிப்போட்டு குடுக்கப்போறாங்களெண்டு!

ஒரு விசிட்டுக்கு ஆறு தலைப்பில விதவிதமான செய்தி.

உது பட்டறிவாத் தெரியேல்ல பதட்டறிவாத் தெரியுது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் " என்பது இதைதானோ. திருமாவளவன் ஐரோப்பாவிலே வானொலிகளில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர். இங்கையும் வாயை திறந்து பதிலளிக்க வேண்டியது தானே. "அவையடக்கமாக்கும்". :icon_mrgreen::(

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு நாங்கள் செல்லத் தயார் கருணாநிதி பரிந்துரைப்பாரா‐ ராமதாஸ் ‐ இலங்கைத் தமிழர் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது‐ பொலிட்புரோவில் மார்க்ஸ்சிஸ்டுகள் ‐ ஈழத் தமிழரின் அவல நிலைக்கு காரணமான மத்திய அரசின் தவறை மறைப்பதற்காக அனுப்பப்பட்டதே இக்குழு‐ பழ.நெடுமாறன்

13 October 09 04:21 am (BST)

முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்கள் உட்பட இலங்கையின் பல்வேறு தரப்பினர்களையும் சந்திக்கும் பொருட்டு இலங்கை சென்றுள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் குழு தொடர்பாக கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ள நிலையில் இது குறpத்து கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி அவரவரவர்களின் சொந்த செலவிலேயே சென்றிருக்கிறார்கள். நீங்களும் வேண்டுமானால் பிரதமரிடம் பேசிச் செல்லுங்கள் என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்திருந்தார்.

இதுகுறித்து ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் இலங்கைப் பிரச்னையானாலும் வேறு எந்தப் பிரச்னையானாலும் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கூறுகிறார் முதல்வர் கருணாநிதி.

ஆனால் இலங்கைக்கு எம்.பி.க்களை அனுப்ப பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்த போதும் இலங்கைக்கு குழுவை அனுப்பிய போதும் இதனை கடைப்பிடிக்க முதல்வர் தவறி விட்டார். தனது கூட்டணிக் கட்சி எம்.பி.க்களை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார்.அவர்களும் அங்கே சென்று இலங்கை ராணுவ அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்ற முகாம்களை மட்டும் பார்த்து வருகிறார்கள்.

இது இலங்கைத் தமிழர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது என்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.எம்.பி.க்கள் குழுவினர் யாழ்ப்பாணம் சென்றபோது அங்குள்ள மக்கள் ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஒருவேளை அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்களை இணைத்துக் கொண்டு சென்றிருந்தால் இந்த அவல நிலையை தவிர்த்திருக்கலாம்.அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு நீங்களும் (இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர்) போவது தானே? என்று முதல்வர் ஆலோசனை கூறியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறையும் ஆர்வமும் காட்டி வருகிற தேசிய கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன்மையாக விளங்குகிறது. அந்தக் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் தயார்.

எங்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்குமா? இலங்கை அரசிடம் பரிந்துரை செய்யுமா? நமது கூட்டணி கட்சிகளுக்கு உதவியதைப் போல இவர்களுக்கும் உதவுங்கள் என்று பிரதமரிடம் முதல்வர் பரிந்துரை செய்வாரா? இலங்கையில் போரின் போது அடிக்கடி கொழும்பு சென்று வந்த இந்தியத் தூதுவர்கள் உடனடியாக கொழும்புக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். அங்கேயே முகாமிட்டு முள்வேலி முகாம்களை அகற்றி 3 லட்சம் தமிழர்களை விடுதலை செய்து திரும்பி வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கை சென்ற குழுவில் எங்களை எல்லாம் சேர்த்துக் கொள்ளவில்லை எந்ற கோபத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு இப் பிரச்னையில் முதல்வருடன் கரம் கோர்த்து செயல்படவும் அவரோடு ஓங்கிக் குரல் கொடுக்கவும் நாங்கள் தயார் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது‐ பொலிட்புரோவில் மார்க்ஸ்சிஸ்டுகள் :

மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பியூரோ கூட்டம் புது டில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.தமிழர்களின் உண்மை நிலையைக் கண்டறிய இலங்கை சென்றுள்ள எம்.பி.க்கள் குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடம் பெறாதது குறித்து கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை பிரச்னையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமெல்லாம் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கும் விஷயங்களில் பாரபட்ச அணுகுமுறை கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

ஈழத் தமிழரின் அவல நிலைக்கு காரணமான மத்திய அரசின் தவறை மறைப்பதற்காக அனுப்பப்பட்டதே இக்குழு‐ பழ.நெடுமாறன் :

தனிப்பட்ட கருணாநிதிக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுவிக்கவில்லை. தமிழக முதல்வர் என்ற முறையில் பக்கத்து நாட்டு அதிபரால் அனுப்பப்பட்ட அழைப்பை அனைத்துக் கட்சி கூட்டத்தில் பரிசீலித்திருக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்கு காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்க உதவும் வகையில் இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்களை மட்டும் அனுப்பியது தவறு என்பதை முதல்வர் கருணாநிதி உணர வேண்டும்.தவறை திருத்திக் கொள்வதற்குப் பதிலாக மேலும் மேலும் தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் நமக்குள்ளே மோதிக்கொண்டுதானே இலங்கைத் தமிழர்களிடையே சகோதர யுத்தத்துக்கு வழிவகுத்து இன்றைய அவலநிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை இனியாவது சிந்திக்க வேண்டாமா? என்று எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுரை வழங்கியுள்ளார்.

போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜிநாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தன்னிச்சையாக கைவிட்டது யார் என்பதற்கு முதல்வர் பதில் கூற வேண்டும் என்று நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=15911&cat=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.