Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்காச்சி ஆணியாய் பதிந்து போனாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nila.JPG

ஒட்டியுலர்ந்து ஊட்டச்சத்தெல்லாம்

உறிஞ்சப்பட்டுப் பதுங்குளியிலிருந்து

இழுத்துவரப்பட்ட போது மிரளும் விழிகளின்

அருகாய் அருகாய் துப்பாக்கிகள்…..

*அம்மா காப்பாற்று அப்பா காப்பாற்று*

கண்ணீர் வற்றிய கண்களிலிருந்து

சொட்டிய துயர்…..

கனவுகளைத் துரத்திக் கொண்டு

இரவுகள் அலைகிறது……

கட்டையாய் கத்தரிக்கப்பட்ட தலைமயிருக்கான

காரணங்கள் கேட்டுக் கேட்டுப் பதிவிடுகிறார்கள்…..

சொல்லால் வசியம் செய்து

சொல்ல முடியாக் கதைகள் நிரம்பிய

கதைகளை மீள்பதியமிடும்படி வேண்டுகிறார்கள்……

‘எனக்குத் தெரியாது‘

எத்தனையோ தரம் எழுத்துமூலமும்

வாக்குமூலமும் எடுத்த பின்னாலும்

கிளறிக் கிளறி ரணங்களைத் தோண்டுகிறார்கள்…..

*பம்பைமடு* விசப்பாம்புகளின் குடியிருப்புகள் போல்

கம்பிவேலிகளுக்கால் எறிந்த பார்வைகள்

அம்மாவுக்காக அப்பாவுக்காக காத்திருந்த

ஒரு மதியம்…..

அக்காச்சி எங்கையம்மா ?

அம்மா இறைஞ்சியழுது கேட்டது

நினைவுகளுக்குள் வந்தமாதிரியும்

இல்லாமலும் குழம்பியது….

புதுமாத்தளனில் இரத்தம் நிறைந்த சதைகளுக்குள்

அக்காச்சி போலொருத்தி

நீண்டமுடி கத்தரிபட்ட தலையோடு

சிதைந்து கிடந்ததாய் ஞாபகம்…..

சொல்ல எழுந்த சொற்கள் புதைகிறது….

எனக்குத் தெரியாம்மா…..

அக்காச்சியைத் தேடுங்கோம்மா…..

ஞாபகங்கள் தடுமாறி

அக்காச்சி போக மனமின்றி அழுதது

எங்கோ கேட்பது போலிருந்தது…..

போ….போ….என்ற குரல்கள்

அம்மாவையும் அப்பாவையும் துரத்துகிறது…

கண்ணெட்டிய தொலைவு வரையும்

அக்காச்சியைத் தேடிய அம்மாவின் அழுகை

கண்ணுக்குள்ளிருந்து திரள் திரளாய்

உருண்டு விழுந்த கண்ணீருக்குள் மறைகிறது…..

'அக்காச்சி பயந்தாங்கொள்ளி'

கையில் கொடுக்கப்பட்ட துப்பாக்கியை

நடுநடுங்கப் பிடித்துச்

சுடக்கற்றுக் கொண்ட கணத்தில் கூட

அக்காச்சியின் கைகள் உதறியபடிதானிருந்தது….

பயந்தவள் அக்காச்சி பாவம் என்ற இவளுக்குப்

பரிசாய் அக்காச்சியும் இவளும் தனித்தனியாகப்

பிரிபட்டுத் தனித்தார்கள்…..

ஓயாத வெடிச்சத்தங்களும்

ஆளறிய முடியாப் புகைமண்டலில்

கையிலிருந்ததை எறிந்துவிட்டு

ஓடியவர்களுடன் இவளும்……

எல்லார் மீதும் எல்லாம் மீது வெறுப்பாயிருக்கிறது

என்ரையக்காச்சி எங்கையடி போனாய்…..?

நினைவு திறந்து கடந்தவை ஞாபகம் கொள் பொழுதெல்லாம்

அக்காச்சியே இவள் தேடும் வரிசையில்

முன்னுக்கு வருகிறாள்……

முடிவுமின்றித் தொடருமின்றி அக்காச்சி

முல்லைமண் வெளியில் எங்கேனும் இருக்கக்கூடுமென்ற

அம்மாவின் நம்பிக்கை போல இவளுள்ளும் அக்காச்சி

ஆணியாய் பதிந்து போகிறாள்…..

(வவுனியா பம்பைமடு தடுப்புக்காவலில் இருக்கும் ஒரு 15வயதுச் சிறுமியின் குரலிது. அக்காச்சியும் இவளும் ஒன்றாய் பிடித்துச் செல்லப்பட்டு மே மாத முடிவுகளின் பின்னால் புனர்வாழ்வென்ற பெயரில் அமைக்கப்பட்ட கம்பி வேலித்தடுப்பிலிருந்து தன் அக்காச்சியைத் தேடுகிறாள். 15நாளுக்கு ஒரு தரம் 10 நிமிடம் பேசக் கிடைக்கின்ற அனுமதியில் தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்துப் பேசும் போதெல்லாம் அவள் அக்காச்சி பற்றி அம்மா கேட்கும் தோறும் இவள் ஆன்மவலி இப்படியாயிருக்கிறது)

02.10.09

  • கருத்துக்கள உறவுகள்

என்றுமே தீராது இந்த ஆன்ம வலி ..........உயிருள்ள வரைக்கும். சந்ததி சந்ததியாய்

எடுத்து சொல்ல படபோகிறது. வலி உணர்த்தும் வரிகள். வலியை தீர்ப்பார் யாருள்ளார்கள்?

அம்மா காப்பாற்று அப்பா காப்பாற்று

வலிகள் தீராது

....உயிருள்ள வரைக்கும்

உறைய வைத்த கவிதை வரிகள்.....

யாரைக் குற்றம் சொல்வது எனபதற்கு அப்பால், இவர்கள் தமிழராய் வன்னியில் பிறந்ததே பாவம் என்ற உணர்வுதான் வருகின்றது. என்னைப் போல எல்லோரும் புகலிடத்திற்கும், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும், கிழக்குமாய் ஓடி ஒளிந்து விட, 35 இலட்சம் தமிழ் மக்களின் தாயக கனவின் சுமையை சுமந்த வெறும் 3 இலட்சம் வன்னி மக்களில் பிறந்ததுதான் இவர்களின் பாவமா?

இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துவிடக்கூடாதென்று தான் காலம் காலமாக பயந்திருந்தோம்.கவிதையில் வலியை விட பயந்தாங்கொள்ளி அக்காவிற்கு நடந்த கேவலம் புரிகின்றது.எப்போதொ புலம் பெயர்ந்த எங்களுக்கு வலி இரண்டு எழுத்து சொல் அவர்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்றுமே தீராது இந்த ஆன்ம வலி ..........உயிருள்ள வரைக்கும். சந்ததி சந்ததியாய்

எடுத்து சொல்ல படபோகிறது. வலி உணர்த்தும் வரிகள். வலியை தீர்ப்பார் யாருள்ளார்கள்?

உண்மைதான் நிலாமதி உயிருள்ளவரை மறக்கப்பட முடியாத நூற்றாண்டுத் துயரம் தடைமுகாமில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்குள்ளும் இருக்கிறது.

வலி தீர்க்க யாருமில்லை யாதுமில்லாமல் துடிக்கிறார்கள். இதோ வழிகள் என்றவர்களும் தங்கள் இலாபங்களையே கணக்கில் எடுக்கிறார்கள்.

அம்மா காப்பாற்று அப்பா காப்பாற்று

வலிகள் தீராது

....உயிருள்ள வரைக்கும்

எத்தனையோ அம்மாக்களின் கண்ணீர் இந்த உலகுள்ள வரைக்கும் மாறாதது.

யாரைக் குற்றம் சொல்வது எனபதற்கு அப்பால், இவர்கள் தமிழராய் வன்னியில் பிறந்ததே பாவம் என்ற உணர்வுதான் வருகின்றது. என்னைப் போல எல்லோரும் புகலிடத்திற்கும், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும், கிழக்குமாய் ஓடி ஒளிந்து விட, 35 இலட்சம் தமிழ் மக்களின் தாயக கனவின் சுமையை சுமந்த வெறும் 3 இலட்சம் வன்னி மக்களில் பிறந்ததுதான் இவர்களின் பாவமா?

அந்த 3லட்சம் மனிதர்கள் மீதும் சுமையை இறக்கிவிட்டு இன்னும் கனவுகளில் வாழும் எண்ணங்களை எண்ண அவர்கள் பாவம் செய்தாரோ எனத்தான் எண்ணம் வருகிறது நிழலி.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துவிடக்கூடாதென்று தான் காலம் காலமாக பயந்திருந்தோம்.கவிதையில் வலியை விட பயந்தாங்கொள்ளி அக்காவிற்கு நடந்த கேவலம் புரிகின்றது.எப்போதொ புலம் பெயர்ந்த எங்களுக்கு வலி இரண்டு எழுத்து சொல் அவர்களுக்கு.

இத்தகைய நிகழ்வுகளை நியாயப்படுத்தி அவையெல்லாம் சாதாரணமென்று சமரசம் செய்து கொள்ள முடியவில்லை அர்யுன். பயந்தாங்கொள்ளி அக்காவின் பரிதாபம் எத்தனையோ சிறுமிகளுக்கும் சிறுவன்களுக்கும் நிகழ்ந்து முடிந்து போயுள்ளது.

அவர்களின் வலி இன்று அவர்களது வாழ்வாகிப்போயிருக்கிறது.

முடிவுமின்றித் தொடருமின்றி அக்காச்சி

முல்லைமண் வெளியில் எங்கேனும் இருக்கக்கூடுமென்ற

அம்மாவின் நம்பிக்கை போல இவளுள்ளும் அக்காச்சி

ஆணியாய் பதிந்து போகிறாள்……

அக்காச்சி இனி வரப்போவதில்லை…… ஆனாலும்…… அக்காச்சி வாருவாள் என்று அம்மா நம்பிக்கொண்டிருக்கிறாள். அக்காச்சி வருகிறாளோ இல்லையோ நம்பிக்கையுடன் வாழும் இவர்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவேண்டியவர்கள் நாங்கள். எங்கள் மனச்சாட்சிக்கு முன்பாக உண்மையாக இருப்போம்.

அக்காச்சி இனி வரப்போவதில்லை…… ஆனாலும்…… அக்காச்சி வாருவாள் என்று அம்மா நம்பிக்கொண்டிருக்கிறாள். அக்காச்சி வருகிறாளோ இல்லையோ நம்பிக்கையுடன் வாழும் இவர்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவேண்டியவர்கள் நாங்கள். எங்கள் மனச்சாட்சிக்கு முன்பாக உண்மையாக இருப்போம்.

அத்தனை அம்மாக்கள் மீதும் சபதமெடுப்போம்...அக்காச்சியினை மீட்க முடியாவிட்டாலும் இன்னும் ஒரு அக்காச்சிக்காவது இப்படி நேராமல் என்ன செய்வது என்று ...ரணங்களையும் வேதனைகளையும் விடியலாக மாற்றுவோம் என்று. ..

நம்புங்கள் விடியலுக்கு இல்லை தூரம்..

வலியை தீர்ப்பார் யாருள்ளார்கள்?

இளைய சமுதாயம் இந்த நிலையை நிச்சயம் நாளை மாற்றும்

http://www.youtube.com/watch?v=pxjUHMRhztE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சி வருகிறாளோ இல்லையோ நம்பிக்கையுடன் வாழும் இவர்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவேண்டியவர்கள் நாங்கள்.

எத்தனை நாளைக்குத்தான் நம்பிக்கையோடிரு உன் மகள் வருவாளென்று சொல்லிக்கொண்டிருப்பது என்பது புரியவில்லை. இந்த அக்காச்சியின் அம்மா தொடர்பு கொள்ளும் நேரமெல்லாம் என்ரை பிள்ளையைத் தேடுங்கோ என அழுகிறாள். எங்கே தேடுவது ???????????? எந்த நம்பிக்கையை கொடுப்பது ?????????????

எத்தனை நாளைக்குத்தான் நம்பிக்கையோடிரு உன் மகள் வருவாளென்று சொல்லிக்கொண்டிருப்பது என்பது புரியவில்லை. இந்த அக்காச்சியின் அம்மா தொடர்பு கொள்ளும் நேரமெல்லாம் என்ரை பிள்ளையைத் தேடுங்கோ என அழுகிறாள். எங்கே தேடுவது ???????????? எந்த நம்பிக்கையை கொடுப்பது ?????????????

சாந்தி, அக்காசி வருவாள் என்ற நம்பிக்கையை நாங்கள் கொடுக்கவேண்டும் என்ற கருத்தில் நான் சொல்லவில்லை. அக்காச்சிகள் மட்டுமல்ல பல அண்ணாச்சிகளும் இனி வரப்போவதில்லை. ஆனால் எத்தனையோ அம்மாக்கள் அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி பட்ட அம்மாக்களுக்கு அவர்களின் மிகுதிகால நம்பிக்கையாக நாங்கள் மாறவேண்டும் என்ற கருத்தில்தான் சொன்னேன். அனேகமானவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை உண்டு. தங்களின் பிள்ளைகளை முகாமுக்கு வெளியில் பாதுகாப்பாக அனுப்புவதற்கு பணத்துக்கு அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் பல தாய்மார் உள்ளனர். நாங்கள் மனசாட்சிபடி நடப்போமானால் ஆகக் குறைந்தது ஒருவர் இலங்கை ரூபாவில் 100,000/- கொடுக்கமுடியும். இது புலம்பெயர் மக்களுக்கு மட்டுமல்ல பொருளாதார வசதியுள்ளவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.முடியாவிட்டால் கூட செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உண்டு. அதை விடுத்து பேரணிகளும், போராட்டங்களும் உடனடித் தீர்வை தரப்போவதில்லை. அவை ஒருவேளை நீண்டகால இடைவெளியில் பலன் தரக்கூடும். உலகம் கண்திறக்கும்போது, முகாம்களில் அனைவரையும் இழந்துவிட்டிருப்போம். நாங்கள் மனது வைத்தால் எங்களால் முடியும். எங்களுடைய கடதாசிக் கனவுகளை தங்களுடைய தோள்களிலே சுமந்தவர்களுக்கு நாங்கள் இப்போது என்ன செய்யப்போகிறோம்? இப்போது செய்யாவிட்டால் வரலாறு மட்டுமல்ல எங்கள் மனசாட்சியுங்கூட எங்களை எப்போதும் மன்னிக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சிகளும் வரார் அண்ணாச்சிகளும் வரார். இருக்கின்றவர்களை மீட்க நீங்கள் சொன்னவற்றை நானும் ஆமோதிக்கிறேன் இராசராசன்.நீங்கள் சொன்னது போல ஆளுக்கு ஒரு பங்களிப்பு செய்தாலே அவர்கள் மீண்டு விடுவார்கள். ஆனால் இதில் எத்தனைபேரின் பங்கு கிடைக்கும் என நினைக்கிறீங்கள் ?

ஏற்கனவே ஒருத்திக்கு விலை பத்துலட்சமென நிர்ணயம் செய்த வேண்டுகைக்கு உதவிகள் கோரினேன். ஆனால் வாயடித்தவர்கள் தான் அதிகமாக இருந்தது. இன்னும் அவளுக்கான6லட்சம் சேர்க்க முடியவில்லை.மனமிருக்கும் இடத்தில் வசதிகள் இல்லை. இருப்பதில் கொடுத்து தனிப்பட்ட சிலரால் எத்தனை பேரை எடுக்க முடியும் ? காக்க முடியும் ?

எங்கள் கடதாசிக்கனவுகளைத் தங்கள் உயிர்கள் மீது எழுதிய அவர்களுக்காக இதையாவது செய்ய யாராவது முன்வந்தால் அவர்கள் கடவுளரே.

உங்கள் கருத்து பலரை சிந்திக்க வைக்குமென நம்புகிறேன்.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மனது வைத்தால் எங்களால் முடியும். எங்களுடைய கடதாசிக் கனவுகளை தங்களுடைய தோள்களிலே சுமந்தவர்களுக்கு நாங்கள் இப்போது என்ன செய்யப்போகிறோம்? இப்போது செய்யாவிட்டால் வரலாறு மட்டுமல்ல எங்கள் மனசாட்சியுங்கூட எங்களை எப்போதும் மன்னிக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.