Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தோல்விக்கு இராணுவக் கண்ணோட்டமே காரணம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

இந்திய இராணுவத்துடன் சேர்ந்து மாற்று இயக்கங்கள் செய்த கொலைகள் மன்னிக்க முடியாதவை.ஆனால் நான் இது பற்றி அவர்களுடன் கதைக்கும் போது சொன்னார்கள் " புலி வேட்டை இந்திய இராணுவம் வர முத‌லேயெ தொடங்கிவிட்டது.தாங்கள் இயக்கமெல்லாம் விட்டுவிட்டு (அதிலிருந்தே கூட‌தப்பி ஓடித்தான் வந்தவர்கள்) யூனிவேசிற்றிக்கு கூட போகத்தொடங்கிவிட்டர்களாம்.திரும்ப திரும்ப வந்து அலுப்பு.கையெழுத்து வைக்க வா,என்ன செய்கின்றாய்,ஏது செய்கின்றாய் என்று ஆயிரம் கேள்விகள் வேறு.விட்டு விட்டு வந்துவிட்டோம் இனி வந்து கையெழுத்து வைத்தால் இப்பவும் இயக்கதில் இருப்பதாகிவிடும் என்றுகூட சொல்லிபார்தார்களாம்.அது விளங்கும் நிலையில் புலிகள் இல்லை.

இந்தியன் ஆமி வந்தது பிறகு,எங்க ஒருக்கா திருப்பி அடிக்கலாம் இராணுவதிற்கல்ல,புலிக்கு என்றிருந்தவர்களூக்கு கிடைத்த சந்தர்ப்பம் தான் அது.இங்கு இப்பகூட பல பழைய மாற்று இயக்கத்தவர்கள் சொல்வார்கள் தங்களுக்கு எதைப்பற்றியும் இப்போது அக்கறை இல்லை புலியை யார் அழித்தாலும் சரி என்று.அந்த அளவிற்கு மனத்தளவில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.இவைகளையெல்லாம் யார் கணக்கில் எடுத்தார்கள்.அதிகாரம் தரும் மமதை அது. ராஜபட்சா சகோதரர்கள் அதைத்தான் இப்ப செய்கின்றார்கள்.புலிகள் முன்பு செய்தார்கள்.

அப்போ இந்திய ராணுவதோடு சேர்ந்து புலிகளின் குடும்பத்தையே அழித்தவர்கள், மக்களை பலோத்காரமாக இராணுவ பயிற்சிக்கும், பங்கர் வெட்டவும் விட்டவர்கள் இந்த செந்தோழர்கள் தானே. யாராவது மறுக்கட்டும் பார்போம்.பிறகென்ன புலிகள் தான் அழித்தவர்கள் என்று ஒரு பக்கமாக எழுதுவது?? மேற்கூறிய கூட்டத்தை சேர்ந்தவர் தான் இதே சுரேஸ் பிறேமசந்திரன் என்றவரும்.இப்போ ஏதோ மேதாவி போல கதைப்பவர் ஒரு காலத்தில் கடைந்து எடுத்த வன்முறையாளர்.

  • Replies 105
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது தானே ஜனநாயக நாடுகள் அமெரிக்காவோ, பிரான்சோ, அல்லது அமெரிக்க + பிரான்ஸ் கலவை கொண்ட சனநாயக அரசியலை கொண்ட ஜேர்மனியாகட்டும் வாக்களிப்பு முறை கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளது.இதில் தமிழர்விடுதலை கூட்டணி எப்படி வித்தியாசமாக முடியும்?

இதில் முக்கியமான விடயம் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தே வட கிழக்கில் வாக்குக் கேட்டது. தேர்தல் முடிவுகள் தமிழீழத்திற்கான ஆணையென்று கூறியது. எனவே வட-கிழக்கில் (தமிழீழம்) வாழ்ந்த மக்கள் உண்மையாகவே ஆணை கொடுத்தார்களா என்று பார்த்தால், ஆசனங்களின் அடிப்படையில் கொடுத்தார்கள் என்றே சொல்லலாம். எனினும் விகிதாசாரப்படி யாழ்ப்பாணத்தில்தான் (கிளிநொச்சித் தொகுதியும் யாழ்ப்பாணத்திற்குள் இருந்தது) அறுதியான வாக்குகள் (72%) விழுந்தன. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் தொகுதிகளில் 50% க்கு அதிகமாக விழுந்தாலும் 2/3 பங்கை த.வி.கூ.யால் பெற முடியவில்லை.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தொகுதிகள் அனைத்திலும் ஐ.தே.க. வென்றிருந்தது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கல்குடாத் தொகுதியில்கூட தேவநாயகம் ஐ.தே.க. சார்பாக வென்றிருந்தார் (அதாவது த.வி.கூ.வால் வெல்லமுடியவில்லை). கிழக்கில் திருமலை, மட்டக்களப்பு, பட்டிருப்பு, பொத்துவில் தொகுதிகளில் மாத்திரம் சாதாரண பெரும்பான்மையுடன் த.வி.கூ. வென்றிருந்தது. எனினும் மட்டுநகர் எம்.பி. ராஜதுரை, பொத்துவில் எம்.பி. கனகரத்தினம் ஆகியோர் தேர்தலின் பின்னர் ஐ.தே.க. வுக்குக் கட்சி தாவிவிட்டனர்.

ஆகவே 1977 இல் வட-கிழக்கில் யாழ் மாவட்டத்தினர் மாத்திரமே தமிழீழம் வேண்டுமென்று ஆணை வழங்கியதாகக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் ஒத்துளைப்பு இல்லை எண்றால் புலிகள் அமைப்பு எண்றோ காணாமல் போய் இருக்கும்... புலிகள் மீண்டு எழுந்து வழர்ந்தார்கள் எண்றால் அதுக்கு காரணம் 1990 களில் மக்கள் கொடுத்த 2 பவுண்கள் மண்மீட்ப்பு நிதிதான் காரணம்... அந்த ஓவ்வொரு 2பவுண்களும் ஒர் குடும்பத்தை பிரதிநிதப்படுத்தியது.... மக்கள் அப்போது வோட்டு போடவில்லை, மூலதனம் இட்டார்கள்...

இது தற்போது காணாமல் போனதுக்கு மக்களின் ஒத்துழைப்பு இன்மையே என்று சொல்லுவதுபோல் உள்ளது.

மேலும் மக்கள் விரும்பித்தான் மூலதனம் இட்டார்கள் என்று சொல்ல முடியாது.

Edited by கிருபன்

இதில் முக்கியமான விடயம் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தே வட கிழக்கில் வாக்குக் கேட்டது. தேர்தல் முடிவுகள் தமிழீழத்திற்கான ஆணையென்று கூறியது. எனவே வட-கிழக்கில் (தமிழீழம்) வாழ்ந்த மக்கள் உண்மையாகவே ஆணை கொடுத்தார்களா என்று பார்த்தால், ஆசனங்களின் அடிப்படையில் கொடுத்தார்கள் என்றே சொல்லலாம். எனினும் விகிதாசாரப்படி யாழ்ப்பாணத்தில்தான் (கிளிநொச்சித் தொகுதியும் யாழ்ப்பாணத்திற்குள் இருந்தது) அறுதியான வாக்குகள் (72%) விழுந்தன. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் தொகுதிகளில் 50% க்கு அதிகமாக விழுந்தாலும் 2/3 பங்கை த.வி.கூ.யால் பெற முடியவில்லை.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தொகுதிகள் அனைத்திலும் ஐ.தே.க. வென்றிருந்தது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கல்குடாத் தொகுதியில்கூட தேவநாயகம் ஐ.தே.க. சார்பாக வென்றிருந்தார் (அதாவது த.வி.கூ.வால் வெல்லமுடியவில்லை). கிழக்கில் திருமலை, மட்டக்களப்பு, பட்டிருப்பு, பொத்துவில் தொகுதிகளில் மாத்திரம் சாதாரண பெரும்பான்மையுடன் த.வி.கூ. வென்றிருந்தது. எனினும் மட்டுநகர் எம்.பி. ராஜதுரை, பொத்துவில் எம்.பி. கனகரத்தினம் ஆகியோர் தேர்தலின் பின்னர் ஐ.தே.க. வுக்குக் கட்சி தாவிவிட்டனர்.

ஆகவே 1977 இல் வட-கிழக்கில் யாழ் மாவட்டத்தினர் மாத்திரமே தமிழீழம் வேண்டுமென்று ஆணை வழங்கியதாகக் கொள்ளலாம்.

இதே கருத்தொன்றை ஒரு முறை மாற்று கொள்கைகளுக்கான நிலையம் வைத்த கருத்தரங்கு ஒன்றில் ஒரு விவாதத்தின் போது என் சிங்கள நண்பர் ஒருவரும் வைத்தார். அவர் எப்போதும், எம் விடுதலைப் போராட்டத்தினை வடக்கு கிளர்ச்சி என்று குறிப்பிட்டு வந்ததை கண்டு, அது ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என் நான் மறுத்துச் சொல்லும் போது, இதே புள்ளிவிபரத்தினையே முன் வைத்து இருந்தார்

முடிந்தால் நான் எழுதியதை திரும்ப படிக்கவும்.புலிகள் செய்ததுகளுக்கு தான் இவர்கள் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து திருப்ப செய்தார்கள்.ஆரம்பம் எங்கே என்பதுதான் முக்கியம்.புலிகளைத் தவிர வேறெந்த இயக்கத்திற்கும் மற்ற இயக்கங்களை அழிக்க வேண்டும் என்ற நிலைபாடு இருந்த‌தில்லை.அது தலைவரது சிந்தனையில் மட்டும் உதிர்தது.

டெலோவை அடித்து விட்டு ஊரழுவில் ஒரு கூட்டம் வைத்தார்கள். அதில் கிட்டு சொன்னார் டெலோ மக்களிடம் பறித்த வாகனங்கள் எல்லாம் யாழ்ப்பாணதில் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றதென்று.அப்ப ஒரு பெரியவர் கேட்டார் நீங்கள் ஓடித்திரிகின்ற வாகனங்களெல்லாம் உங்கட கம்பனியில் செய்ததோ என்று.பின் பெரியவருக்கு நடந்த பூசை பற்றி கேட்க வேணுமோ.

இதையே திரும்பவும் சொல்லாம்... ஆரம்பித்தது TELO வினர்தான்... புலிகள் வைத்து இருந்த பண்ணைகள் அனேகமானவைகளை சூறையாடினர், பல்பொருள் அங்காடிகளை கொள்ளை அடித்து நாசம் செய்தனர்..

எனது ஊரான நூணாவிலில் இருந்த புலிகளின் பல்பொருள் அங்காடியில் வேலை செய்த மாணவரான புலிகள் ஆதரவாளரான எனது பெரியம்மாவின் மகன் தாக்கப்பட்டு காயப்படுத்த பட்ட பின்னர் கடையை கொள்ளை அடித்தனர்... பின்னர் காசு வைத்து இருந்த லாச்சியில் வெளியில் இழுக்க வெடிக்குமாறு ஒரு குண்டை வைத்து விட்டும் செண்றனர்... அதில் பின்னர் வந்து பார்த்த இரண்டு போராளிகள் காயம் வேறு அடைந்தனர்...

அது தவிர தென்மராட்ச்சி கோட்டத்தில் இருந்த புலிகள் வைத்து இருந்த வாகனங்களில் நல்ல நிலையில் இருந்தவை எல்லாம் கையகப்படுத்தி கொண்டனர்... அதில் தென்மராட்ச்சி கோட்ட தளபதி கேடில்ஸ் அண்ணையின் வாகனமும் அடக்கம்...

புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் வெளியில் தலைகாட்ட கூடாது அச்சுறுத்தலும் வழங்கி இருந்தனர்... அதில் TEA அமைப்பில் இருந்த எனது அண்ணன் புலி எண்று கூறி கையும் அடித்து முறிக்கப்பட்டது..

இதை நீங்கள் எல்லாம் எப்படி மறந்து போனீர்கள்... இல்லை வசதியாக அறிந்து கொள்ளவும் முயலவில்லையா...??

Edited by தயா

இது தற்போது காணாமல் போனதுக்கு மக்களின் ஒத்துழைப்பு இன்மையே என்று சொல்லுவதுபோல் உள்ளது.

மேலும் மக்கள் விரும்பித்தான் மூலதனம் இட்டார்கள் என்று சொல்ல முடியாது.

இப்போதும் புலிகள் காணாமல் போய் விட்டார்கள் எனும் வாதம் கூட ஒரு வித மயக்கமே...! இதுக்கான பதிலுக்கு நான் அவசரப்படவில்லை... காலம் பதில் சொல்லும்தானே...

மக்கள் விரும்பாமல் முதல் இடவில்லை எண்றால் வீரச்சாவடைந்த 30 000 பேர் அமைப்பில் இணைந்து இருக்க வளியே இல்லை... இவ்வளவு ஈகங்களும் மக்களுக்காக எண்று கூறி செய்து இருக்க மாட்டார்கள்... கொள்ளை அடித்து கொண்டு விலகி இருப்பார்கள்.. அதில் உலகில் முதல் நிலை பணக்காறர்களில் ஒருவராக பிரபாகரன் இருந்து இருப்பார்...

என் கருத்தும் இதுதான்

உண்மையும் இதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்

இன்று உலகமும் ஏன் எதிரி கூட வியக்கும் விடயம்

புலிகளின் தியாகங்களும் விலைபோகாத அவர்களது கொள்கைப்பிடிப்பும்தான்

எனவே அவர்கள் மக்கள்மேல் பாசமில்லாமல்

அவர்களிலிருந்து தோன்றாமல் இத்தனை தியாகங்களை செய்திருக்கமுடியாது

இதை நாம் முதலில் உணரவேண்டும்

சிலர் எம்மை பைத்தியக்காறர்களாக ஆக்கும் வேலையை செய்ய முனைகின்றனர்

நாம் இவர்களை இனம் காணவேண்டும்

தாங்களை மேதாவிகளைப்போலும் அறிவாளிகளைப்போலும் முன்பே கண்டுபிடித்துவிடும் ஆற்றல் படைத்தவர்கள்போலும்

வியாபித்து

எம்மை முட்டாள்களாகவும்

புலிகளுக்கு பின்னால் ஓடும் மந்தைக்கூட்டங்களாகவும் மூளைச்சலவை செய்யப்பட்ட பைத்தியக்காறர்களாகவும் நிறுவும் படலம் அரங்கேறி வருகிறது

நாம் மிகவும் விழிப்பாக இருப்போமாக.....

நாம் ஏன் புலிகளை ஆதரித்தோம்

ஏன் ஆதரிக்கின்றோம் என்பது என்றுமே தெளிவானது

தமிழ் மக்களுக்கு ஏதாவது பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அது புலிகளால் மட்டுமே முடியும்என்பதை நாம் நம்பினோம்

நம்;புகின்றோம்

அதைவிட வேறு எவரும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும்

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் நான் எழுதியதை திரும்ப படிக்கவும்.புலிகள் செய்ததுகளுக்கு தான் இவர்கள் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து திருப்ப செய்தார்கள்.ஆரம்பம் எங்கே என்பதுதான் முக்கியம்.புலிகளைத் தவிர வேறெந்த இயக்கத்திற்கும் மற்ற இயக்கங்களை அழிக்க வேண்டும் என்ற நிலைபாடு இருந்த‌தில்லை.அது தலைவரது சிந்தனையில் மட்டும் உதிர்தது.

டெலோவை அடித்து விட்டு ஊரழுவில் ஒரு கூட்டம் வைத்தார்கள். அதில் கிட்டு சொன்னார் டெலோ மக்களிடம் பறித்த வாகனங்கள் எல்லாம் யாழ்ப்பாணதில் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றதென்று.அப்ப ஒரு பெரியவர் கேட்டார் நீங்கள் ஓடித்திரிகின்ற வாகனங்களெல்லாம் உங்கட கம்பனியில் செய்ததோ என்று.பின் பெரியவருக்கு நடந்த பூசை பற்றி கேட்க வேணுமோ.

புளட்டின் கோட்டையான சுழிபுரத்தில் அரசியல் வேலைக்கு சென்ற 6 புலி உறுப்பினர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர் (சங்கிலியனால்).இது தான் இயக்க படுகொலைக்கான தொடக்கம் என நினைக்கிறேன்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இதே கருத்தொன்றை ஒரு முறை மாற்று கொள்கைகளுக்கான நிலையம் வைத்த கருத்தரங்கு ஒன்றில் ஒரு விவாதத்தின் போது என் சிங்கள நண்பர் ஒருவரும் வைத்தார். அவர் எப்போதும், எம் விடுதலைப் போராட்டத்தினை வடக்கு கிளர்ச்சி என்று குறிப்பிட்டு வந்ததை கண்டு, அது ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என் நான் மறுத்துச் சொல்லும் போது, இதே புள்ளிவிபரத்தினையே முன் வைத்து இருந்தார்

e • d Summary of the 1977 Sri Lankan parliamentary election Parties Votes % Seats

United National Party 3,179,221 50.9% 140

Tamil United Liberation Front 421,488 6.4% 18

Sri Lanka Freedom Party 1,855,331 29.7 8

Ceylon Workers' Congress 62,707 1.0 1

Lanka Sama Samaja Party 225.317 3.6 0

Communist Party 123,856 2.0 0

Mahajana Eksath Peramuna 22,639 0.4 0

Others 353,014 5.6 1

Totals 6,243,573 100.0 168

http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_parliamentary_election,_1977

இல்லையே அப்போ இருந்த அரசியல் சட்டத்தின் படி கூடிய வாக்கு பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்பட்டார்கள். இதனாலேயே த.விடுதலை எதிர்கட்சியாக வரமுடிந்தது.அந்நேரம் ஐ.தே.க அமோக வெற்றி பெற்றதாக கூறப்பட்டாலும் 50% வாக்குகளையே அவர்கள் பெற்றார்கள். 50 வீதமானவர்கள் ஐ.தே.காவுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்று கொள்ளலாமா? அவர்களின் வெற்றி எப்படி நிர்ணயிக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறினார்களோ அதே சட்டம் மூலம் தான் கூட்டணியினர் வடக்கு, கிழக்கில் வெற்றி பெற்றார்கள்.கூட்டணியினருடன் சேர்ந்த தொண்டமான் கூட வெற்றி பெற்றதாக சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் பிரேமச்சந்திரன் GTV க்கு அளித்த பேட்டியின் ஒளிப்பதிவினை பார்க்க.....

http://www.tubetamil.com/view_video.php?viewkey=97ab8e2f9cc309152492&page=1&viewtype=&category=

Edited by தமிழ் சிறி

புலிகள் இயக்கம் என்பது சிங்கள பேரினவாத அடக்குமுறையிலிருந்து சுதந்திரம் பெற ஈழ தமிழ் மக்களாகிய எமது எழுச்சியின் அடிப்படையில் இருந்து உருவாகிய பேரியக்கம். அதன் அனைத்து வெற்றி தோல்விகளும் ஈழத்தமிழர்களின் வெற்றி தோல்விகள் என்ற அடிப்படையில் பார்க்கப்படவேண்டும். புலிகளின் தவறுகள், எமது தவறுகளே. அவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் எமது எழுச்சியும் வீழ்ச்சிகளுமே. ஈழத்தமிழர்களாகிய எமக்குள் இருக்கும் அடிப்படைவாத கருத்துகள், விட்டுக் கொடுக்காத தன்மை, நுட்பமான செயல்திறன், கடும் உழைப்பு போன்றனவற்றை புலிகளும் பிரதிபலித்தனர். முன்னர் இந்த அடிப்படை இயல்புகள் இராணுவ ரீதியான வெற்றியினைக் கொடுக்கும் போது, நாமும் புலிகளும் ஒன்றே என அகமகிழ்ந்து இருந்தோம். இன்று அவர்களின் இராணுவ ரீதியான வீழ்ச்சியின் போது, அவர்களை எம்மில் இருந்து பிரித்துக் கொண்டு, வெறும் இயக்கம் ஒன்றின் தோல்வி என்கின்றோம்.

புலிகளின் வீழ்ச்சி என்பதை ஈழத்தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சி என ஏற்றுக்கொண்டு அதனிலிருந்து எப்படி மீள்வது என்பதை ஆரோக்கியமான தளத்தில் வைத்து ஆராயவும் எம்மை நாமே மீள்விமர்சனம் செய்யவும் ஆரம்பிப்போம்.

பிரேமச்சந்திரனிலிருந்து இப்போது சிவத்தம்பி வரை இனி யாரோ ? பிரேமச்சந்திரன் தனது பழைய தொழிலுக்கு போகலாம் என்று முடிவெடுத்திருக்கின்றார் போலும் புலிகளை நம்பி கூட்டணியில் சேர்ந்ததினால் பதவியும் இல்லை

புலிகள் ஏதோ வானத்திலிருந்து வந்திறங்கியவர்கள் போல் பலரும் விமர்சனம் செய்வது தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றது

புலத்தில் நிகழ்வுகள் ஒரு லட்சத்திலிருந்து நூறுகள் ஆகிவிட்டது

பந்தயக் குதிரைக்கு பணம் கட்டியவர்கள் போல் பழைய படி களியாட்டங்கள் தொடரத் தொடங்கிவிட்டன

ஆப்படித்த ஒபாமாவின் வாசல்களே கதி என்று இந்த அமைப்பாளர்களும் ஒரே கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்களே ??

இல்லையே அப்போ இருந்த அரசியல் சட்டத்தின் படி கூடிய வாக்கு பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்பட்டார்கள். இதனாலேயே த.விடுதலை எதிர்கட்சியாக வரமுடிந்தது.அந்நேரம் ஐ.தே.க அமோக வெற்றி பெற்றதாக கூறப்பட்டாலும் 50% வாக்குகளையே அவர்கள் பெற்றார்கள். 50 வீதமானவர்கள் ஐ.தே.காவுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்று கொள்ளலாமா? அவர்களின் வெற்றி எப்படி நிர்ணயிக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறினார்களோ அதே சட்டம் மூலம் தான் கூட்டணியினர் வடக்கு, கிழக்கில் வெற்றி பெற்றார்கள்.கூட்டணியினருடன் சேர்ந்த தொண்டமான் கூட வெற்றி பெற்றதாக சொல்லப்படுகிறது.

நுணாவிலான்,

கிருபனும், நிழலியும் சொல்லும் கருத்து 1977 இல் கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் தமிழீழத்தை ஆதரித்துக் கிடைத்தவையல்ல. பல மக்கள் தமிழ்க்கட்சிகள் பலதும் ஒன்றிணைந்து போட்டியிட்டதால் அவர்களுக்கு வாக்களித்தார்கள். அதுபோல் கூட்டணியால் வடக்கில் தக்க வைத்த வெற்றியளறிற்கு, கிழக்கில் தக்க வைக்க முடியவில்லை. கிழக்கில் யுஎன்பியும் பல இடங்களைக் கைப்பற்றியது.

இலங்கையில் ஆரம்பத்திலிருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களின் விபரங்களையும் பார்ப்பதற்கு (2004 வரை) கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள்:

http://www.slelections.gov.lk/pastElection.html

முஸ்லீம் காங்கிரஸ் யானைச்சின்னதில் தான் நீண்டகாலமாக ஐக்கியதேசிய கட்ச்சியின் கூட்டோடு இருந்தமையால் போட்டி இட்டது. இந்த தடவை மாகான சபை தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் சிலர் போட்டி இடவில்லையா.?

கழுவாஞ்சிக்குடியில் முஸ்லீம் காங்கிரஸ் காறனை தெரிவு செய்யாமல் சிங்களவனையா தெரிவு செய்வார்கள் ?

மிகவும் கண்டிக்கத்தக்க எழுத்து

அந்த நேரத்தில் மக்களின் முடிவையும் எழுச்சியையும் போராடியாகவேண்டும் என்ற தீரத்தையும் சிறுவர்களாக இருந்தபோதும் கண்ணால் கண்டவர்கள் நாம்

எம்முன்னே நிகழ்ந்த சரித்திரத்தையே மூடநினைப்பது மடமையே தவிர வேறொன்றுமில்லை............

இப்போது எம் முன் உள்ள கேள்வி இலங்கைத்தீவில்தமிழராக உயிர்வாழப்போகின்றோமா?

அல்லது, ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் இலங்கைத்தீவில் சிங்களவராக உயிர் வாழப்பேகின்றோமா? என்பதுதான்.

இன்றைக்குள்ள கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எம் முன் உள்ள கேள்வி இலங்கைத்தீவில்தமிழராக உயிர்வாழப்போகின்றோமா?

அல்லது, ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் இலங்கைத்தீவில் சிங்களவராக உயிர் வாழப்பேகின்றோமா? என்பதுதான்.

இன்றைக்குள்ள கேள்வி.

அரசர்களும் குறுநில மன்னர்களும் சதா போரிட்டுக் கொண்டிருந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் சிஙகள மன்னர்களின் அரசாட்சி இலங்கை முழுவதும் வியாபித்திருந்த காலங்களிலும் தமிழர்கள் வாழ்ந்துதான் உள்ளனர். இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் இலங்கையில் உள்ள முழுத்தமிழரும் சிங்களவராக மாறுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இலங்கைத்தீவில் மாத்திரம் உள்ள சிங்கள இனத்தோடு (அதுவும் 2 கோடிக்குக் குறைவானவர்கள்) தமிழர்கள் தமது அடையாளத்தை இழந்து ஒன்றிணைவார்கள் என்பது நடக்கக்கூடியதல்ல. சிலவேளைகளில் பிற நாடுகளுக்கு தொடர்ந்து புலம்பெயர்வது காரணமாக வட கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கமுடியாமல் போகலாம்.

தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லிம்களும் தொடர்ந்து இலங்கையில் வாழ்வார்கள். புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வசிக்கும் தமிழ்மக்கள் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து வேறுமொழி பேசும் மக்கட்கூட்டமாக விரைவில் மாறிவிடுவர் (ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை)

ஆகவே தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளில் தனித்துவமாக வாழ சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்வு தேவை. அதற்காகத்தான் தீர்வுத்திட்டமொன்றை தாங்கள் வரைந்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். அரசியல் தீர்வு ஒன்றை எட்ட புலம்பெயர் தமிழர்கள் அணிவகுக்காமல் தொடர்ந்தும் கனவுலகில் இருந்தால் இலங்கையில் தமிழர்கள் தனித்துவமாக இல்லாமல் போவதற்குக் நாமே காரணாமாவோம்.

கனவுலகம் என்று எதைச் சொல்கின்றீர்கள்.

Edited by kalaivani

முஸ்லீம் காங்கிரஸ் யானைச்சின்னதில் தான் நீண்டகாலமாக ஐக்கியதேசிய கட்ச்சியின் கூட்டோடு இருந்தமையால் போட்டி இட்டது. இந்த தடவை மாகான சபை தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் சிலர் போட்டி இடவில்லையா.?

கழுவாஞ்சிக்குடியில் முஸ்லீம் காங்கிரஸ் காறனை தெரிவு செய்யாமல் சிங்களவனையா தெரிவு செய்வார்கள் ?

அடடா அப்ப பொத்துவில் மற்றும் கல்குடா தொகுதிகளில் யுஎன்பி எப்படி வந்ததுங்க?? அங்கேயும் முஸ்லீம் மக்கள் தான் அதிகம் என்று கரடி விடப் போகின்றீர்களா?? முன்பு பொத்துவிலில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்து பின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினத்தை பின் தள்ளி ஜலால்தீன் வெற்றி பெற்றுள்ளார். கல்குடாவில் கூட்டணி சார்பாக போட்டியிட்ட சம்பந்தமூரத்தியை பின் தள்ளி தேவநாயகம் வெற்றி பெற்றுள்ளார். தமிழீழக்கோரிக்கையை முன்வைத்து என்று 1977 இல் நடந்த தேர்தலில் தான் இந்த நிலை. புரியுதுங்களா இப்ப??

Edited by Vasampu

அண்ணை இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த காலம் 2 வருடங்கள் அதனால் யாரும் தங்களை ஹிந்தி பேசுபவர்களாக்கி கொள்ள இல்லை...

அதேபோல செண்பகக்குமாரன் எனப்படும் "சப்புமல் குமார" யாழ்ப்பாணத்தை கையகப்படுத்திய போதும் சில ஆண்டுகளே வைத்து இருந்ததாலும் சமூகத்தில் தங்களது கலாச்சாரங்களை திணிப்பை கொண்டுவரும் வகை நகர்வுகளை அவர்கள் செய்ய காலம் போதவில்லை...

ஆனாலும் எல்லாளனை வீழ்த்தி கைப்பற்றிய அனுராதபுரம் மதவாச்சி எல்லாம் சிங்களவர் பிரதேசங்கள்தான்..

ஆகவே தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளில் தனித்துவமாக வாழ சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்வு தேவை. அதற்காகத்தான் தீர்வுத்திட்டமொன்றை தாங்கள் வரைந்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். அரசியல் தீர்வு ஒன்றை எட்ட புலம்பெயர் தமிழர்கள் அணிவகுக்காமல் தொடர்ந்தும் கனவுலகில் இருந்தால் இலங்கையில் தமிழர்கள் தனித்துவமாக இல்லாமல் போவதற்குக் நாமே காரணாமாவோம்.

எந்த தீர்வும் நிரந்தரம் என்பதுக்கு ஏதாவது அறுதி இருக்கிறதா...???? ஏன் கேக்கிறன் எண்றால் தென்னாசிய வல்லரசான இந்தியாவின் ஆதரவுடன் செய்து கொண்ட திம்பு ஒப்பந்தம் இந்திய இலங்கை ஒப்பந்தங்களுக்கு நடந்த நிலையைதான் எங்களுக்கு தெரியுமே...

  • கருத்துக்கள உறவுகள்

கனவுலகம் என்று எதைச் சொல்கின்றீர்கள்.

ஒபாமாவின் கப்பல் வரும் என்று சொல்லிக் கடைசியில் நந்திக்கடலில் கவிழப் பண்ணிய உலகம்தான் எங்களின் கனவுலகம்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தீர்வும் நிரந்தரம் என்பதுக்கு ஏதாவது அறுதி இருக்கிறதா...???? ஏன் கேக்கிறன் எண்றால் தென்னாசிய வல்லரசான இந்தியாவின் ஆதரவுடன் செய்து கொண்ட திம்பு ஒப்பந்தம் இந்திய இலங்கை ஒப்பந்தங்களுக்கு நடந்த நிலையைதான் எங்களுக்கு தெரியுமே...

ஒப்பந்தங்கள் நிரந்தரமில்லாமல் போவ(ன)ற்கு முக்கிய இருதரப்பாரும் இதயசுத்தியுடன் நடக்காமல் இருப்பதே காரணம். திம்பு பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் அங்கீகரித்த தீர்வு எதுவும் வரவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்கள் மூன்றாம் தரப்பாகவே இருந்தனர்.

ஒஸ்லோ உடன்படிக்கை ஒன்றுதான் தமிழர்களும் சிங்களவர்களும் ஒத்துக்கொண்டு (பின்னர் தடம்மாறிய) செயற்பட முன்வந்த நிகழ்வு. ஆனால் அதைக்கூட இருதரப்பும் முழுமனதோடு செய்யவில்லை. ஆளையாள் நம்பாமல் செய்யும் எந்தவேலையும் ஒழுங்காக நடக்காது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் செவ்வியின்படி புதிய தீர்வுத்திட்டம் இலங்கை அரசியல்யாப்பை மாற்றியமைத்து சமஸ்டியிலான ஆட்சியுரிமையை கொண்டுவர முயற்சிப்பதாகும். ஒற்றையாட்சிக்கு அப்பால் எதனையுமே கருத்தில்கொள்ளாத சிறிலங்கா அரசு, தமிழர்கள் தாழ்ந்துபோய் நிற்கும் இந்நேரத்தில் இந்தத் தீர்வுத்திட்டத்தையும் தட்டிக் கழிக்கும். எனினும் புலம்பெயர் தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த அரசு என்று இலங்கையரசுக்கு முன்னாலேயே த.தே.கூவின் திட்டத்தை பின்தள்ளிவிட்டால், இலங்கையரசின் வேலை இலகுவாகிவிடும். நாம் கட்டாயம் இலங்கையரசிற்கு உதவி செய்வோம் என்றே நம்புகின்றேன்!

புலிகள் செய்து கொண்ட ஒப்பந்தகளை விடுங்கள்... இதியர்களை நம்பிய மற்றய குழுக்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களான திம்பு , இலங்கை இந்திய உடன் படிக்கை இந்தியாவின் அனுசரனையுடன் இந்தியாவின் தலைமையில் நடந்தவை... அதில் ஏது காப்பாற்ற படுகிறது... அதைக்குழப்பியது புலிகள் அல்லவே...

நீங்கள் சொல்லவது போல பார்த்தாலும் தந்தை செல்வா டட்லி, பண்டா போண்றவருடன் செய்து கொண்ட ஒப்பதங்களை இதய சுத்தியுடன் ஏற்று கொண்டார் தமிழர்களையும் நம்பவைத்தாரே... அதுக்கு என்ன நடந்தது...

கப்பல் போகும் என்ற கனவா?

கப்பல் வரும் என்ற கனவா?

கப்gல் அனுப்புவோம் என்ற ஒபாமாவின் கனவா?

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.