Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே வசீகரனின் வரிகளில் வட்டுக்கோட்டைத்தீர்மானம்

Featured Replies

நோர்வே வசீகரனின் வரிகளில் வட்டுக்கோட்டைத்தீர்மானம்

இந்த லிங்கில் உள்ள பாடல் இயற்றியவர் கவிஞர் வசீகரன்

http://tamilnet.com/art.html?catid=13&artid=30548

குருதி வலி இறுவட்டு வெளியிPடு எதிர்வரும் 15ம் திகதி

VN Music Dreams வழங்கும்,

நான்காவது இறுவட்டு “குருதி வலி”

வி.எஸ்.உதயாவின் இசையில், வசீகரனின் பாடல் வரிகளில் தாயகப் பாடல்கள்:

வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 15.கார்த்திகை.2009 அன்று

Grorud Samfunnshus ஒஸ்லோ இல் இடம்பெறுகிறது.

திகதி : 15.11.2009

காலம் : 17.30 pm

இடம் : Grorud Samfunnshus, ஒஸ்லோ

அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றார்கள்.

http://karumpu.com/wp-content/uploads/2009/10/Vaddukkoaddaith_theermaanam.mp3

பாடல் வரிகள் சில:

சொந்த மண்ணில் குடியிருக்க வழியில்லையோ

சொந்தம் என்று சொல்லிவிட ஆளில்லையோ

தாய் மண்ணில் வாழ்ந்த பூர்விகமக்கள்

மின்சார வேலிக்குள்ளே கருகுதடா

தாய் நாட்டைப் பிரிந்து வாழ்கின்ற எமக்கு

நெருப்பாய் நினைவுகள் சுடுகின்றது

வெட்டவெளியில் சிறை வாழ்க்கை

உயிர்வலியே எம் வாழ்க்கை

91535583.jpg

தகவல்: வசீகரன் – நோர்வே, நன்றி!

மேலதிக தகவல்: தமிழ்நெட் வலைத்தளம்

வணக்கம் வசீகரன்,

உங்கள் பாடலை தமிழ்நெட் வலைத்தளத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் இணைப்பு கொடுத்து வசதி செய்து இருந்தார்கள். எனவேதான் நானும் அதை தரவிறக்கி கரும்பு, யாழ் வலைத்தளங்களில் குறிப்பிட்ட பாடலை முழுமையாக கேட்கக்கூடிய வகையில் இணைத்தேன். நீங்கள் இறுவட்டை வெளியிட முன்னர் பாடலை முழுமையாக இணைத்தது பற்றி என்ன நினைத்தீர்களோ தெரியாது. தவறுகள் இருந்தால் மன்னித்துகொள்ளவும்.

குறிப்பிட்ட பாடலை பல தடவைகள் கேட்டேன். மிக நன்றாக இருக்கின்றது. வெளியீட்டு விழா சிறப்பான முறையில் நடைபெறவும், மற்றும் உங்கள் கலைப்பயணம் தொடர்ந்து பல மைக்கற்களை காணவும், வெற்றிகரமாக தொடரவும் உளம் கனிந்த வாழ்த்துகள்!

வணக்கம் மச்சான்,

முதலில் உங்களுடைய இணைபபுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதியே வட்டுக்கோட்டைப் பாடலை இணையத்தின் ஊடாக தமிழ்வலை வெளியீடு செய்திருந்தது. இந்தப் பாடலை என்ன நோக்கத்திற்காக தயாரித்தேனோ அந்த நோக்கத்திற்கு வலுச்சேர்க்கவும் சிறப்பாக இருக்கும் என்ற காரணத்தால் வெளியீடு செய்ய முன்வந்தேன்.

நீங்கள் மிகவும் அழகாக அதனை பதிவுசெய்து யாழில் இணைத்திருந்தீர்கள். என்றும் எனது நன்றிகள் மச்சான்:D யாழில் உள்ள ஏனைய உறவுகள் ஒருவரும் கருத்துக்கள் பதிவு செய்யவில்லை. மூன்றாவது கண்ணுக்கம் எனது நன்றிகள்.

என்னால் இயன்றளவு சிறந்த பாடல்களை உருவாக்கும் முயற்சிகளில் எனது நேரங்கள் செலவாகின்றது.

ஆகவே தான் யாழில் எனது கருத்துப் பகிர்வுகள் இடம்பெறுவது குறைவு. குருதி வலி என்னும் இந்த இறுவட்டை கனடாவில் வெளியீடு செய்யவேண்டும்.

எதாவது ஒரு அமைப்பு பொறுப்பெடுத்து செய்யுமா? அல்லது யாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து செய்வார்களா? பார்ப்போம்.

எங்கள் மக்களின் பேரவலத்தின் வலிகளே குருதி வலியாக வருகிறது.

அன்புடன்

வசீகரன்

வணக்கம் வசீகரன்,

யாழில் எழுதப்படும் பதில் கருத்துக்களுக்கும் + ஒரு தலைப்பு பார்வையிடப்படும் எண்ணிக்கைக்கும், அதன் உள்ளடக்கத்திற்கும் எதுவித சம்மந்தமும் இல்லை. காத்திரமான ஆக்கம் ஒன்றிற்கு எதுவித பதில் கருத்துக்களும் வராமல் இருக்கலாம் அத்துடன் மிகச்சொற்பமான எண்ணிக்கையிலேயே குறிப்பிட்ட தலைப்பு பார்வையிடப்பட்டு இருக்கலாம்.

நிசார் நிசார் வா வா

நில்லாமல் ஓடிவா

மதில்மீது ஏறி வா

மாங்காய் கொண்டுவா

இப்படி ஓர் கவிதை எழுதி இருந்தால்.. பல நூறுபேர் வந்து பாராட்டு தெரிவித்து இருப்பதோடு.. ஆயிரக்கணக்கான பார்வைகளும் குறிப்பிட்ட தலைப்பிற்கு கிடைத்து இருக்கலாம்.

அதற்காக.. நல்ல ரசனை உள்ளவர்கள் எல்லாம் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். உங்கள் வேண்டுகோளை ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து உதவி செய்வார்கள் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வசியண்ணா.. நேற்று சிஎம்ஆரில் இப்பாடல் போனபோது, வித்தியாசமாக இருக்கின்றதே என்று ரசித்துக் கேட்டேன். இறுதியில் கவிஞர் வசிகரன் என்றபோது தான் நீங்கள் என்று புரிந்தது. வரிகள் எல்லாம் அற்புதம், ஆனாலும் தந்தை செல்வாவின் பெயரை இணைத்தது போல, தலைவர் பெயரைச் சொல்லும்படி செய்திருக்கலாம். இருந்தாலும் சொல்லாமல் சொல்லி இருப்பதும் நன்றாகத் தான் இருந்தது. இந்தியாவில் பாடல்கள் பதிவு செய்திருப்பதால் தான் தவிர்த்தீர்களோ எனத் தோன்றுகின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் வாசீகரன்.

தமிழக ஊடகங்களில் குறிப்பாக தென்னிந்திய தமிழ்படங்களின் இணையத்தளங்களில் இறுவெட்டு பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன.

cinesouth.com

http://tamil.cinesouth.com/masala/hotnews/new/12112009-2.shtml

tamilcinema.com

‘குருதிவலி’ இறுவட்டு

நார்வேயில் வெளியீட்டு நிகழ்ச்சி

காதல் கடிதம், பீஷ்மர், கண்டேன் காதலை, உப்புமூட்டை போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் உதயா. நார்வேயில் வசிக்கும் வசீகரனும், உதயாவும் இணைந்து ஏராளமான இசை ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார்கள். காதல் கடிதம் இசை ஆல்பம் உலக தமிழர்களிடையே மிகவும் பிரபலம். காதல் சொட்ட சொட்ட கவிதைகளும் பாடல்களும் எழுதி வந்த வசீகரன், தான் பிறந்த இலங்கை மண்ணில் நடக்கும் கோர தாண்டவத்தை அனல் பறக்க எழுத துவங்கினார். அந்த கந்தக வரிகளுக்கு மெட்டமைத்து காற்றில் உலவ விட்டார்கள் இருவரும். தற்போது உலக தமிழர்களிடையே இவர்களின் இசைத்தொகுப்புக்கு பெரிய வரவேற்பு. இந்நிலையில் ‘குருதி வலி’ என்ற மற்றொரு இசை ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்கள் இவர்கள். எதிர்வரும் 15 ந் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த இசைத்தொகுப்பு வெளியிடப்படுகிறது.

பாடல்களை பிரபல பாடகர்களான மது பாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், நித்ய ஸ்ரீ மகாதேவன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இவர்களுடன் உதயாவும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். உயிரை உருக்கும் ஒப்பாரி மெட்டில் அமைந்துள்ள அந்த பாடலின் வரிகளில் சில...

வந்தவனும் போட்டவனும் நல்லாதானே இருக்கான்

என் சனத்தை அழிச்சு முடிச்சவனும் நல்லாதானே இருக்கான்

உளவு சொல்லி திரிஞ்சவனும் நல்லாதானே இருக்கான் -அதை

வேடிக்கை பார்த்து ரசிச்சவனும் நல்லாதானே இருக்கான்...

“என்னதான் தமிழன் புலம் பெயர் தேசங்களில் வசதியாக வாழ்ந்தாலும், அவனுக்கென்று சொந்தமாக ஒரு தேசமில்லையே... இருந்த மண்ணையும் இழந்து முற்று முழுதாக ஒரு அகதியாக வாழ்கிறானே, இந்த அவலத்தை கண் கொண்டு பார்க்கவும் யாருமில்லையே... என்ற எமது நெஞ்சின் வலிகளைதான் இந்த இசைத்தொகுப்பில் பாடலாக வடித்துள்ளேன்” என்கிறார் வசீகரன்.

“வசீகரன் நார்வேயிலிருந்து பாடல்களை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதை படிச்சிட்டு படுத்த எனக்கு தூக்கமே வரலே. பக்கத்திலே படுத்திருந்த என் பையனின் தலையை கோதிக் கொண்டிருந்தேன். இவனைப்போல 65 ஆயிரம் குழந்தைகள் அநாதைகளாயிட்டாங்க. அவங்களுக்கு தலை கோதிவிட கைகள் இல்லேயே என்று நினைத்தபோது திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். அந்த இரவே அவரது வரிகளுக்கு ட்யூன் போட்டு பாடலாக்கினேன்” என்று கூறுகிறார் உதயா.

பாமரன் அழுதால் ஒப்பாரி. படைப்பாளிகள் அழுதால்...? இதுபோன்ற இசையாகதான் வெளிப்படும்!

தொடர்புக்கு :-

vnmusicdreams@gmail.com

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/November/121109a.asp

வந்தவனும் போட்டவனும் நல்லாதானே இருக்கான்

என் சனத்தை அழிச்சு முடிச்சவனும் நல்லாதானே இருக்கான்

உளவு சொல்லி திரிஞ்சவனும் நல்லாதானே இருக்கான் -அதை

வேடிக்கை பார்த்து ரசிச்சவனும் நல்லாதானே இருக்கான்...

என்ற வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வசிகரனுக்கு எனது பாராட்டுகள்...மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் வசி உங்கள் படைப்பு வெற்றிபெட்டும். காதல் கடிதம் என்றென்றும் மறக்க முடியாதளவுக்கு மனசுக்குள் நிறைந்து நிற்கிற பாடல்கள் போல் உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

வசீகரன் அண்ணாவுக்கு பாராட்டுக்கள் ...மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் வசி :o

மீண்டும் அனைத்து யாழ்கள நண்பர்களுக்கும் வணக்கங்கள்,

மச்சான்: உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மீண்டும் எனது நன்றிகள். இந்த யாழ்களத்தில் எத்தனையோ நல்ல படைப்பாளிகளும் ரசனை மிக்க நண்பர்களும் உள்ள காரணத்தால் தான் யாழ்களத்தின் சேவை நீடித்துக்கொண்டே போகின்றது. இந்தகளத்தினை மோகன் அண்ணா கைவிடும் நிலையில் இருந்த போதுகூட எத்தனையோ உறவுகள் தாம் கைகொடுப்பதாகச் சொல்லி யாழ்களத்தினை தொடர்ந்து இயங்கவதற்கு வழிசெய்தார்கள். ஏன் நான்கூட தொடர்ச்சியாக வந்து இங்கு பதியப்படும் படைப்புகளுக்கு கருத்து எழுதுவது குறைவு. ஆகவே நான் எதிர்பார்ப்பதும் பிழைதான். என் நேரம் முழுவதையும் (வேலை நேரம், குடும்பத்திற்கான நேரங்கள் தவிர்த்து) எம் மக்களின் வாழ்வை கலைப்பதிவுகள் ஆக்கவேண்டும் என்ற சிந்தனையிலேயே என் நேரங்கள் செலவாகிறது.

தூயவன்: என்ன தம்பி நீண்ட நாட்கள் அளையே காணவில்லை! என்று நினைத்தேன். நன்றி தூயவன். நீங்கள் குறிப்பிட்ட காரணமே உங்கள் கேள்விக்கும் பதிலாகும். பொருள் நிறையப் புரிய வைப்பதே என் நோக்கம். தந்தை செல்வாவை இங்கு பிறந்த அல்லது சிறுவயதில் வந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆகவே அவர் பெயரை நேரடியாகவே பயன்படுத்தினேன். ஆனால் உலகம் முழுதும் உள்ள குழந்தைகள் முதல் முதியவர் வரை தேசியத்தலைவர் என்றால் யார் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

கந்தப்பு: வணக்கம் கந்தப்பு நீண்ட நாட்களின் பின் எப்படி சுகங்கள்? குருதி வலி தொடர்பான செய்திகளை தேடி எடுத்து பதிவு செய்தமைக்கு எனது நன்றிகள். உங்கள் ஆக்கமும் ஊக்கமும் தொடரட்டும். இன்று(15.11.2009) எனது நான்காவது இறுவட்டு வெளிவருகின்றது. கேட்ட பிறகு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். மிகவிரைவில் உலகம் முழுவதும் பெறுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளேன்.

ரதி: வணக்கம் ரதி ரத்தினச்சுருக்கமாக உங்கள் பாராட்டைத் தெரிவித்தமைக்காக எனது நன்றிகள். அறிவுமதி அண்ணாவிற்கு ஒரு சில பாடல்களைப் போட்டுக் காட்டிய போது நல்லா இருக்கு என்று சொல்ல முடியவில்லை, வாழ்த்துச்சொல்லவும் முடியவில்லை! ஆனால் எங்கள் மக்களின் உயிர்வலியை அருமையாகப் பதிவு செய்தமைக்கு நன்றிகள் தம்பி என்றார்.

நானும் சொன்னேன் இது எம் தாயகத்து மக்களுக்கான புலம்பெயர் மக்களின் கண்ணீர்க் காணிக்கை என்று.

சாந்தி அக்கா: மிக்க நன்றி அக்கா. உங்களையும் றமேஸ் அண்ணாவையும் சந்தித்துப் பேசி 5 வருடங்கள் கழிந்து விட்டது. நீங்கள் தருகின்ற உற்சாகமான பாராட்டுக்கள் என்னை பல படைப்புகளை படைக்கத் தூண்டும். ஒரு கலைஞனுக்கு கிடைக்கின்ற விலைமதிப்பற்ற பாரட்டும் ஊக்கமும் தான் பெரிய சொத்து. இன்னும் நிறைய படைப்புகளை எம் இன மக்களுக்காக படைத்துக் கொண்டே இருப்பேன்.

சுஐp: உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் எனது நன்றிகள். குருதி வலி இறுவட்டு உருவாக்கியதற்கு ஒரே ஒரு காரணம் தான். இந்த வருடத்தில் நாங்கள் இழந்த அற்புதமான மாவிரர்களையும்;, மக்களையும் நாங்கள் எப்போதும் மறக்காமல் இருப்பதற்கும், இந்த வலியை எம் அடுத்த சந்ததிகளுக்கும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். 20000 மக்களை சில நாட்களில் இழந்தது எனக்கு எம் வாழ்வின் நிம்மதி தொலைந்தது போல் இருக்கின்றது. அதன் வெளிப்பாடு தான் இந்தக் குருதி வலி.

குமரசாமி அண்ணா: மிக்க நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

வசிகரன் அண்ணாக்கு எனது பாராட்டுகள் மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • 11 months later...

கனடாவுக்கு வந்த வசீகரன். இவரின் ஒரு படைப்பை வேண்டினேன்.

இவரின் இணையத்தளம் : http://www.vnmusicdreams.com/

படைப்பை PayPal ஊடாகவும் வேண்டலாம் என சொன்னார் ஆனால் காண முடியவில்லை

இலண்டனில் வேண்டலாம் போல் உள்ளது

http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=8

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.