Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது

Featured Replies

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது

10 November 09 02:05 am (BST)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்னேரிய காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் வேட்டையின் போது ராம் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

பொலன்னறுவை கிரித்தலை பகுதியில் மறைந்திருந்த போது ராமை படையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் கிழக்குத் தலைவர் ராமை தேடும் பணிகளில் சுமார் மூவாயிரம் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருணா புலிகள் இயக்கத்திலிருந்து பிளவடைந்ததனைத் தொடர்ந்து, ராம் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதல்களை ராம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=17076&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காப் படைகளினால் மின்னேரிய காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கையின் இக் கைதுச் சம்பவம் இடம் பெற்றதாக கொழும்பிலிருந்து வெளிவரும் 'ஐலன்ட்' பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

ஆயினும் இச் செய்தி இராணுவதரப்பிலோ அன்றி புலிகள் தரப்பிலோ இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. வன்னி யுத்தத்தின் பின்னர், வனப்பகுதியில் மறைந்திருக்கும் விடுதலைப்புலிகளை ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொண்ட படையணி தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இக் கைது தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு

அன்றி புலிகள் தரப்பிலோ இன்னமும் உறுதி செய்யப்படவில்லை
:o:o
  • தொடங்கியவர்

The island பத்திரிக்கையை ஆதாரமாக கொண்டுதான் செய்திகள் வெளி வந்தன... அதிலையும் ராம் அண்ணா அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்து கடந்த சனிக்கிழமை தப்பி சென்றவரை மீண்டும் இலங்கை படைகள் கைது செய்தன எண்று செய்தி சொன்னது...

ஆனால் குழோபல் தமிழ் செய்தி இப்பதான் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது...

LTTE’s EP leader Ram recaptured

The LTTE Eastern province leader Ram, who had escaped from Army, was arrested yesterday. The Army nabbed him following a massive search operation conducted in the Minneriya jungles.

Ram had been under interrogation in an army camp in the Giritale Area in Polonnaruwa, when he fled last Saturday (7).

With the escape of the LTTE Eastern Province leader, the Army commenced a search operation with over 3,000 soldiers deployed to trace him down.

Ram was captured while he was hiding in the jungle near the Minneriya tank.

Ram had been appointed to the leadership of the LTTE’s Eastern Province following the defection of Karuna Amman. He had a through knowledge of the terrain in the East and led a number of attacks against the security forces.

Ram had left for the North after his members were killed by the STF during confrontations.

Source :The island

http://www.lankatimes.com/fullstory.php?id=22697

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராம் இப்போதுதான் கைதுசெய்யப்பட்டாரா??? :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா,ராம் எப்போது சிங்களராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடாத்தினார்??மே19 க்கு பிறகா முன்பா??

ஏன் கேட்கிறேன் என்றால் ராம் அவர்களின் கையெழுத்துடனேயே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு

ஒரு அறிவிப்பு முன்னர் வந்தது.

அப்படி மௌனித்தாக சொன்ன ராம் தாக்குதல்களை நடாத்திஇருப்பார் என்பது கேள்வியே???

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச சிங்கள அரசு மட்டுமல்ல.. 35 வருடமா விடுதலைப்புலிகளை வைத்து இனவாதம் பேசி வயிறு வளர்த்த சிங்கள மற்றும் தமிழ் முஸ்லீம் பத்திரிகைகளுக்கு தீனி போடவும் தமது அரசியல் நகர்வுகளை மறைக்கவும்.. ராம் என்ன பிரபாகரனைக் கூட உயிர்ப்பித்துக்காட்டுவார்கள்.

ஒரு ராமோ அல்லது ஒரு பிரபாகரனோ போராட்டத்தை நடத்தப் போவதில்லை. நடத்திவதானால் ஒட்டுமொத்த மக்களும் தான் நடத்தனும். அதற்காக தயாரிப்புக்களை செய்வதை விடுத்து.. சிங்களவன் திசை திருப்பி மக்களின் கவனத்தை உணர்வுகளை சிதைக்க நிற்பதற்கு நீங்களும் துணை போவதுதான் இன்னும் இன்னும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

ஜிரிஎன் போன்ற ஊடகங்கள் செய்ய எவ்வளவோ இருக்கின்றன. இப்படியான ஆதாரமற்ற சிங்கள ஊடகங்களை நம்பிய செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதிலும் வேறு மக்கள் அவலங்களை உலகின் கண்களுக்கு கொண்டு வரலாம். அதைச் செய்யமாட்டார்கள்..???! :o :o

Edited by nedukkalapoovan

ஜிரிவி போன்ற ஊடகங்கள் செய்ய எவ்வளவோ இருக்கின்றன. இப்படியான ஆதாரமற்ற சிங்கள ஊடகங்களை நம்பிய செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதிலும் வேறு மக்கள் அவலங்களை உலகின் கண்களுக்கு கொண்டு வரலாம். அதைச் செய்யமாட்டார்கள்..???! :o :o

செய்தியை வெளியிட்டது ஜிரிவி இல்லை எண்டு நினைக்கிறன். குளோபல் ரமில் நியூஸ் - GTN

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை வெளியிட்டது ஜிரிவி இல்லை எண்டு நினைக்கிறன். குளோபல் ரமில் நியூஸ் - GTN

தவறுதலாக ஜிரிவி என்று பதியப்பட்டுவிட்டது. செய்தி திருத்தப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்லஒரு கருத்து நெடுக்காலபோவானுடையது. அதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் முழுமக்களின் போராட்டத்தை ஒன்றுதிரட்ட முன்வந்தவர்களும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்து நிற்பவர்களும் ஒருமித்த மக்கள்சக்தியை

சிங்களபேரினவாதத்துக்கு எதிரான போராட்டங்களில் புலத்தில் கூர்மைப்படுத்துவதற்கு சிங்களஅரசின் கொடுமைகளை சொல்லி மக்களை

அணிதிரட்டுவதைவிட்டுவிட்டு தலைவர்அரசியல் செய்யவில்லை என்றும் ராசதந்திரநகர்வு போதாது என்றும் தலைவரையும் போராளிகளையும்

புதிதாக குற்றம்கண்டுபிடித்து மேதாவிப் போராட்டம் செய்யவெளிக்கிடுவது ஒருபோதும் ஒருபோதுமே சரிவராது!!!

முதலில் புதிதாக ராசதந்திரநகர்வுப் போராட்டங்களை செய்யவெளிக்கிட்டு இருக்கும் மேதாவிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள தவறுகிறார்கள்!

புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்!!!!

அது என்னவென்றால் 'பிரபாகரன்' என்ற பெயருக்கும் தமிழீழமக்களுக்குமான ஒருமித்த ஆத்ம உணர்வை!

இந்தப் பெயரை மறுத்து அல்லது நிராகரித்து அடுத்த கட்டத்துக்கு நகர உண்மையான விடுதலையை வேண்டுபவர்களால் முடியாது.

'பிரபாகரன்' என்ற பெயருக்கும் தமிழீழமக்களுக்குமான ஒருமித்த ஆத்ம உணர்வை!

இந்தப் பெயரை மறுத்து அல்லது நிராகரித்து அடுத்த கட்டத்துக்கு நகர உண்மையான விடுதலையை வேண்டுபவர்களால் முடியாது.

புலம்பெயர்தேசத்தில், கிட்டு அண்ணைக்குப் பின், சமாதானக்காலத்திற்கு முன், என இந்த இடைப்பட்டகாலத்தில் புலம் பெயர்தேசத்தில் அமைப்புச் செயற்பாட்டாளர்களாக தலைவருக்கு விசுவாசமில்லாதவர்களைத் தேடிப்பிடித்து, உள்வாங்கப்பட்டு செயற்பாட்டாளர்களாக்கப்பட்டு ஒரு புதிய பண்பாடு வளர்க்கப்பட்டுவிட்டது.

இந்தக் குழுவில் முக்கியமானவர்கள் சமாதான காலத்தில் அமைப்பு செயற்பாட்டுத் தளத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தார்கள். பலர் தெடர்ந்தும் வேலை செய்து வந்தார்கள். இது ஒரு நீண்ட வரலாறு. யாழ் இணையம் இந்த விடயங்களை பதிவு செய்வதற்கு அனுமதிக்குமோ தெரியாது.

மக்கள் விழிப்பு அடையாதவரை இந்த துரோகங்கள் தொடர்கதையாகத்தான் இருக்கும்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது
எத்தினையாந்தரம்? :o

ராஜபக்ச சிங்கள அரசு மட்டுமல்ல.. 35 வருடமா விடுதலைப்புலிகளை வைத்து இனவாதம் பேசி வயிறு வளர்த்த சிங்கள மற்றும் தமிழ் முஸ்லீம் பத்திரிகைகளுக்கு தீனி போடவும் தமது அரசியல் நகர்வுகளை மறைக்கவும்.. ராம் என்ன பிரபாகரனைக் கூட உயிர்ப்பித்துக்காட்டுவார்கள்.

ஒரு ராமோ அல்லது ஒரு பிரபாகரனோ போராட்டத்தை நடத்தப் போவதில்லை. நடத்திவதானால் ஒட்டுமொத்த மக்களும் தான் நடத்தனும். அதற்காக தயாரிப்புக்களை செய்வதை விடுத்து.. சிங்களவன் திசை திருப்பி மக்களின் கவனத்தை உணர்வுகளை சிதைக்க நிற்பதற்கு நீங்களும் துணை போவதுதான் இன்னும் இன்னும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

ஜிரிஎன் போன்ற ஊடகங்கள் செய்ய எவ்வளவோ இருக்கின்றன. இப்படியான ஆதாரமற்ற சிங்கள ஊடகங்களை நம்பிய செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதிலும் வேறு மக்கள் அவலங்களை உலகின் கண்களுக்கு கொண்டு வரலாம். அதைச் செய்யமாட்டார்கள்..???! :o :o

:o:D:wub::):D :D :lol: :lol:

ராம் காயமடைந்தது உண்மை! இன்னமும் கைது செய்யப்படவில்லை என்பதும் உண்மை! சும்மா வீணே பழி சுமத்தி நீங்கள் பொய்யர்கள் ஆவதும் உண்மை!

நண்பர்களே எரித்திரியாவிலும் இவ்வார இராணுவ நடவடிக்க எடுக்கப்பட்டது. விடுதலைவீரர்கள் கைகளிலிருந்து நிலப்பரப்பௌ முற்றாக பரிக்கப்பட்டது.

பின் என்ன நடந்தது? அவர்கள் தங்கள் பின்புலாமாக சூடானை பாவித்தனர். இன்று எரித்திரியா ஒரு நாடானது.

எம்மௌ பொருத்தாவாட்டில் வித்தியாச. எல்லாம் ஒத்துபார்க்க முடியாட்டியும் முடிவு எப்பட்டியே சொல்லலாம். நமக்கு தப்பிக்க நாடு இல்லை கடல் ஆகவே தீவின் விடுதலைக்கு ஆயிரம் தடங்கள் அதையும் தாண்டும் தமிழன் வீரம் வெள்ளும்.

ஆக மொத்தம் மீண்டும் விடுதலை போர் வெடுக்கும் என்பதை விட போர் தொடர்வும் என்பது யாதார்த்தமான உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராம் காயமடைந்தது உண்மை! இன்னமும் கைது செய்யப்படவில்லை என்பதும் உண்மை! சும்மா வீணே பழி சுமத்தி நீங்கள் பொய்யர்கள் ஆவதும் உண்மை!

உங்கட பாதுகாப்பில இருக்கிறமாதிரி எழுதுறியள்!!!!!!!!! :o

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைச் சுற்றி வளைத்து சிறிலங்கா அரசால் இழைத்து வரும் கொடுமைகளே ஒட்டு மொத்த தமிழர்களையும் போராடுவதை விட வேறு வழியில்லை என்ற நிலைமையைக் கொண்டு வரும்.அனைத்து மக்களும் என்று பரி பூரணமாக எழுச்சி அடைவார்களோ அன்றே விடுதலை சாத்தியம்.புலம் பெயர்ந்த தமிழர்கள் அதற்கான தார்மீக ஆதரவைத் திரட்டுவதில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும்.முக்கியமாக செயற்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இளையோரே முதன்மைப் படுத்தப்பட வேண்டும்.பழசுகளைப் போட்டால் பதவிக்காக அடிபட்டு எல்லாவற்றையும் கெடுத்து விடுவார்கள்.

:lol::o

:o:lol:

:D:D

:D

:wub::)

ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம்..

மிகப்பெரிய விலை கொடுத்து பெற்ற மிகச்சிறிய படிப்பனவு!

சில அறிவாளிகள் லண்டனில் நிம்மதியான காற்றை சுவாசிக்கவும் உதவுகிறது!

எதையெடுத்தாலும் ரெண்டாக்குவதிலையே நில்லுங்கோண்ணா..... :o

முக்கியமாக செயற்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இளையோரே முதன்மைப் படுத்தப்பட வேண்டும்.

பழசுகளைப் போட்டால் பதவிக்காக அடிபட்டு எல்லாவற்றையும் கெடுத்து விடுவார்கள்.

குழப்பம் காச்சுவதற்க்கு பயன்படுத்தபடும் வார்த்தை பிரயோகங்களில் ஒண்டு..

புலவர்,, தாங்கள் ஒரு எடுப்பார் கைபுள்ளேயா.. அல்லது துரோகியா....?

நண்பர்களே எரித்திரியாவிலும் இவ்வார இராணுவ நடவடிக்க எடுக்கப்பட்டது. விடுதலைவீரர்கள் கைகளிலிருந்து நிலப்பரப்பௌ முற்றாக பரிக்கப்பட்டது.

பின் என்ன நடந்தது? அவர்கள் தங்கள் பின்புலாமாக சூடானை பாவித்தனர். இன்று எரித்திரியா ஒரு நாடானது.

எம்மௌ பொருத்தாவாட்டில் வித்தியாச. எல்லாம் ஒத்துபார்க்க முடியாட்டியும் முடிவு எப்பட்டியே சொல்லலாம். நமக்கு தப்பிக்க நாடு இல்லை கடல் ஆகவே தீவின் விடுதலைக்கு ஆயிரம் தடங்கள் அதையும் தாண்டும் தமிழன் வீரம் வெள்ளும்.

ஆக மொத்தம் மீண்டும் விடுதலை போர் வெடுக்கும் என்பதை விட போர் தொடர்வும் என்பது யாதார்த்தமான உண்மை

இளையோரே முதன்மைப் படுத்தப்பட வேண்டும்.பழசுகளைப் போட்டால் பதவிக்காக அடிபட்டு எல்லாவற்றையும் கெடுத்து விடுவார்கள்.

இப்போது சிறியவர், பெரியவர் என்பதல்ல பிரச்சனை தேசிய உணர்வும், ஒன்றிணைந்து இயங்கும் தகைமையுமே தேவையாக இருக்கின்றது. பெரியவர்கள், தேசிய உணர்விற்கு முதன்மை கொடுக்காது, சேர்ந்தியங்கும் பண்பில்லாது இயங்கியதோடு அந்தப்பிராந்தியம், இந்தப்பிராந்தியம், அந்த நகரம், இந்த நகரம் என பொது நோக்கில்லாது , பிரிவினைகளை ஊட்டி இது தான் நிர்வாக முறை என்பதை இளையவர்களுக்கும் பழக்கிவட்டார்கள்.

இன்று தலைமை ஏற்கப்புறப்பட்டவர்களும், பின் இருந்து காய்நகர்த்தும் முன்னாள் செயற்பாட்டாளர்களுக்கும், தேசிய உணர்வும், தேசிய தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதற்குரிய குணச்சிறப்பும், தலைமைத்துவப் பண்பும் இருந்திருக்குமேயானால் மே 19 இற்குப்பின் உலகத்திடம் எமக்கான நியாயத்தைக் கேட்பதற்கு அணிதிரள்வதற்கு முடியாத அரசியல் அனாதைகளாக இருக்கும் நிலை ஏற்பட்டிருக்குமா?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கலைவாணி

உங்களுடைய கருத்தில் உள்ள நடிப்பும், அதில் உள்ள நயவஞ்சகச் செயற்பாடுகளையும் நாங்கள் ஒன்றும் புரிந்து கொள்ளாதவர்கள் அல்ல. அருச்சுனன் என்கின்ற நபரும், இதே வேலையைத் தான் யாழ்களத்தில் செய்து வருகின்றார் என்பதை அனைவரும் அறிவோம். ஏதோ நீங்கள் தேசியப்பற்றாளர்கள் போலக காட்டிக் கொண்டு, புலத்தில் உள்ள அமைப்புக்கள், தனிநபர்கள் மீது ஆதாரமில்லாமல் வசை பாடுவதன் மூலம், அவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்த முனைவது தெளிவாகவே தெரிகின்றது.

உண்மையில் இன்றைய சூழ்நிலையில் சிங்கள அரசுக்குத் தலையிடியாக இருப்பது, புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் தான். அதனால் அந்த அமைப்புக்கள் மீது அவதூற்றினை விதைப்பதன் மூலம், மக்களுக்கிடைய பிரிவினையை உருவாக்குவது தான் தேவையாகவும் இருக்கின்றது. இந்த இருவரது கருத்துக்களையும் நோக்கும்போது, அவ்வாறன தோற்றத்தையே தருகின்றது. இவர்கள் ஏதோ ஆதாரவாக எழுதுகின்றார்கள் என்பது போல காட்டும் தோற்றத்தில் அசாட்டையாக இருந்திடலாது.

களநிர்வாகத்தினர், இவ்வாறான ஆதாரமற்ற விதத்தில் நஞ்சுக்கருத்துக்களை விதைப்பவர்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.எந்த நஞ்சுக்கருத்துக்களையும், குற்றச்சாட்டினை விதைப்பவர்களும் ஆதாரங்கள் அற்ற வித்தில் எழுதுவதை யாழ்களத்தில் தடை செய்ய வேண்டும் என்பதைப் பரிந்துரை செய்கின்றேன். யாழ்களம் சமத்துவான கருத்தியத் தளம் என்பதற்கு அப்பால், அதற்கு சமூகப்பொறுப்பும் உள்ளது என்பதே என் நம்பிக்கையுமாகும்.

தூயவனின் நிலைபாடே எனதும்...! தனிபட்ட குரோதங்கள் குழுமங்களை புரியாமை போன்ற தவறுகளால் பலர் நஞ்சுகளை கக்குவதற்கு யாழ்களம் ஒரு சிறந்த இடமாக இப்போது இருக்கின்றது. இதில் நிர்வாகம் உரிய கடமையை செய்வது நன்று. கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் பகிhந்துகொள்ளலாம்......... ஆனால் ஆதாரமற்ற காழ்புணர்வுகளால் சேறாவது அதைகாவும் யாழ்களமுமே என்பதை புரிந்தால் நன்று!

மே19உடன்.. யாழில் பெரிய மாற்றம். :o

தமிழர்களின் எதிர்காலத்தைப்பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.