Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கும் சுவிசுக்குபோய் வாழ்வதற்கு விருப்பம் இருக்கின்றதா?

Featured Replies

இனிய வணக்கங்கள்,

எங்களில் பலருக்கு சுவிசில் சென்று வாழ்வதற்கு விருப்பம் இருக்கலாம். நான் யாழ் நண்பர் ஒருவர் இன்று எழுதிய கருத்து ஒன்றை பார்த்துவிட்டு பலரின் சந்தேகங்களை போக்கக்கூடியவகையில் சுவிசில் வாழ்வது சம்மந்தமாக எனக்கு தெரிந்த, நான் அறிந்தவிடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இங்குள்ள தகவல்கள் நான் சுயமாக வாசித்து, கேட்டு அறிந்த தகவல்கள், இதில் பல தவறுகள் இருக்கலாம். அண்மைக்காலத்தில் சுவிஸ் அரசாங்கம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவை இங்கு உள்ளடக்கப்படவில்லை.

சுவிசின் மீது ஏன் பலருக்கு ஆசை?

மற்றவர்களுக்கு ஏன் ஆசை வருகிது எண்டுறதுக்கு முன்னர் எனக்கு ஏன் ஆர்வம் வந்தது என்று பார்த்தால்.. பாடசாலையில் படித்த காலத்தில் சமூகக்கல்வியில் சுவிஸ்லாந்து நாடுபற்றி பல விடயங்களை அறிந்தோம். முக்கியமாய் உலகில இருக்கிற சர்வதேச ஸ்தாபனங்களின் தலைமையகங்கள் சுவிசில் இருப்பதையும், சுவிஸ்லாந்து அமைதியான பிரச்சனைகள் இல்லாத ஓர் நாடு என்றும் அறிந்துகொண்டோம். அடுத்ததாக, புகழ்பெற்ற விஞ்ஞானி அல்பேட் ஐன்ஸ்ரைன் பிறந்த இடமும் சூரிச், சுவிஸ்லாந்தே. இதனால் சிறுவயதில் இருந்து எனக்கு சுவிஸ்லாந்துமீது ஓர் ஆர்வம் ஏற்பட்டது.

பொதுவாக என்று பார்த்தால்.. சுவிஸ்லாந்து இயற்கை அழகு பொருந்திய நாடு, அடுத்ததாக பணவருவாயை பெருக்கக்கூடிய நாடு என்று ஓர் அபிப்பிராயம் இருக்கின்றது.

சுவிஸ் அரசாங்கம், மக்கள் எப்படிப்பட்டவர்கள்?

வெளிநாட்டவர்கள் வந்து குடியேறுவதை, வெளியார் சுவிசில் ஆதிக்கம் செலுத்துவதை இவர்கள் அறவே விரும்புவது இல்லை - Outsiders are not welcome here. இதனால் சுவிசின் குடிவரவுக்கொள்கை ஏனைய வளர்ச்சியடைந்த செல்வந்த நாடுகளுடன் பார்க்கும்போது மிகவும் மிகவும் கடுமையானது. நம்மவர்கள் அகதிகளாக சென்று குடியேறியமையால் சுவிசினுள் கால்பதித்துக்கொண்டார்கள். ஆனால்.. இதரவழிகளில் சுவிசில் குடியேறுவது அல்லது நிரந்தரமாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இதற்கு விதிவிலக்கு... மிகப்பெரிய செல்வந்தர்கள், மற்றையது பெரிய வியாபாரிகள், மற்றையது.. சுவிசில் குடியுரிமை உள்ளவர்களை திருமணம் செய்பவர்கள், மற்றையது.. தொழில் கல்வி ரீதியாக மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்கள். உ+ம்: சத்திரசிகிச்சை நிபுணர்கள், விஞ்ஞானிகள்..

சுவிஸ்நாட்டினர் வியாபாரத்தை தமது தனிப்பட்ட வாழ்வுடன் கலப்பது இல்லை. அதாவது வியாபார விசயங்களை, தனிப்பட்ட வாழ்க்கையுடன் கலக்கமாட்டார்கள். வேலை, வியாபாரத்தின்போது ஒரு வாழ்க்கை. வீட்டுக்கு வந்ததும் இன்னொரு வாழ்க்கை.

அடுத்ததாக.. தமது தாய்மொழியிலேயே பிடிவாதமாய் பேசுவார்கள். வெளியில் காட்டாவிட்டாலும் இவர்களிடம் உள்ளார துவேசமும் அதிகளவில் இருக்கின்றது.

சுவிசில் நாங்கள் எவ்வளவு காலம் தங்கிநிற்க முடியும்?

அமெரிக்க, கனேடிய, அவுஸ்திரேலியா போன்ற கடவுச்சீட்டுக்களை உடையவர்கள் மூன்றுமாதம் நிற்கமுடியும். அதற்குமேல் நிற்பதற்கு வெளியில் சென்றுவரவேண்டும். கனடா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் வீசா எடுக்கத்தேவையில்லை. விருந்தினர் வீசாவில் தங்கிநிற்கும்போது சுவிசில் வேலை செய்யமுடியாது. அப்படி களவாக வேலை செய்து காவல்துறையிடம் பிடிபட்டால் பிறகு மீண்டும் வருவது கடினம்.

கைநிறைய காசு இருந்தால்.. சுவிசில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி பெற்று அங்கு தங்கமுடியும். சுவிஸ் நாடு பெரிய வியாபாரிகளை, சுவிசில் பெரிய வியாபாரங்கள் ஆரம்பிப்பவர்களை, பெரிய முதலீட்டாளர்களை எப்போதும் வாங்கோ வாங்கோ என்று வரவேற்கும்.

சுவிசில் அதிக அதிகாரம் உடையவர்கள் யார்?

சுவிசில் காவல்துறைக்கு அதிக அதிகாரம் இருக்கின்றது. பெரும்பாலான கட்டைப்பஞ்சாயத்து செய்வது எல்லாம் காவல்துறைதான். காவல்துறைதான் நாட்டாண்மை. காவல்துறையை பகைத்துக்கொண்டால் நமது கதி அரோகரா. ஏனைய நாடுகள் போல் அல்லாது காவல்துறை மக்களின் பொதுவான நிருவாக விடயங்களில் [civil administration] மூக்கை நுழைத்து அதிக தலையீட்டை செய்கின்றது.

சுவிசில் வேலை பெறுவது எப்படி?

சுவிசில் சுவிஸ் நாட்டு பிரஜைகள் அல்லாதவர்கள் வேலை எடுப்பது என்பது மிகவும் கடினமானது. ஏனைவர்களுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்ற நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிசில் வேலை எடுப்பது இலகுவானது. சட்டநடைமுறை என்ன சொல்கின்றது என்றால்.. ஒரு நிறுவனம் வேலைக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை எடுக்கும்போது முதலில் அந்த வேலையை செய்வதற்கு சுவிஸ் குடிமக்கள் ஒருவரும் கிடைக்காமல் இருக்கவேண்டும், அப்படியான நிலமையில் இரண்டாவது முன்னுரிமை ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும். அதன்பிறகு இதரநாட்டை சேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்ட வேலை கொடுக்கப்படலாம்.

பெரும்பாலான நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு ஓர் அடிப்படை தகமையாக ஜேர்மன் மொழியில் புலமை பெற்று இருத்தல் எதிர்பார்க்கப்படும். வெளிநாட்டவர்களுக்கு மிகவும் சிக்கலை கொடுக்கின்ற விடயம் இதுதான். வேலை நேர்முகத்தேர்வின்போதும் வெளிநாட்டவர்கள் சித்திபெற முடியாமல் போவதற்கு மொழி தெரியாமல் இருத்தலே காரணம். இதற்காகவே வெளிநாடுகளில் ஜேர்மன் மொழியினை கற்பிக்கும் பல கல்விக்கூடங்கள் கடைபரப்பி இருக்கின்றன.

வேலை கொடுத்துள்ள ஆவணத்தை காவல்துறை பரிசீலனை செய்து அவர்களும் உடன்பட்ட பிற்பாடே சுவிசில் வேலை செய்வதற்குரிய அனுமதி வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும். கடைசியில் குறிப்பிட்ட பிரதேசத்துக்குரிய காவல்துறை பச்சைக்கொடி காட்டவேண்டும்.

விதிவிலக்கு: சுவிசில் உள்ள சர்வதேச நிறுவனங்கள்.. உதாரணமாக சர்வதேச அமைப்புக்கள்.. ஐ.நா.. பெரியநிறுவனங்கள்.. கூகிழ் மைக்கிரோசாப்ட் போன்றவை.. இங்கு வெளிநாட்டவர்கள் வேலை செய்வதற்கு மேற்கூறிய கட்டுப்பாடுகள் இல்லை.

ஆபத்துக்கள்:

சுவிஸ்லாந்தை சுற்றி ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா என்று நாடுகள் சுற்றி காணப்படுகிது. சுவிசை சுற்றி எங்காவது ஓர் இடத்தில் கடலுடன் தொடர்பு இல்லை. எல்லாப்பக்கத்திலும் நிலப்பரப்பே இருக்கின்றது. எனவே, ஏதாவது பெரிய போர் [உலக யுத்தங்கள்] வந்தால் அல்லது பாரிய இயற்கை அழிவுகள் வந்தால்.. கடல்மூலம் இவர்கள் இலகுவாக தப்பமுடியாது [விமானப்போக்குவரத்து, ஏனைய நிலப்பரப்பினூடான போக்குவரத்துக்கள் முடக்கம் அடையக்கூடிய ஓர் நிலையில்..]. பொறியினுள் அகப்பட்ட எலிபோல நசிந்துகொள்ளவேண்டியதுதான்.

சாரம்சம்:

ஆகமொத்தத்தில் கூட்டிக்கழித்து பார்த்தால்.. சுவிஸ் எனப்படுகின்ற கனவுலகம்.. தூரத்தில் நின்று பார்ப்பதற்கு அழகானதாய் இருக்கலாம். ஆனால்.. ஏனைய நாடுகளுடன், ஏனைய நாடுகளில் உள்ள வசதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பெரிதாக சொல்லிக்கொள்வதற்கு என்று இல்லை. பலர் சுவிசைவிட அவுஸ்திரேலியா சிறந்த நாடு என்று கூறுகின்றார்கள். சுவிசில் இருக்கின்ற பல தமிழர்கள் கனடாவுக்கு வருகின்றார்கள். சுவிசைவிட கனடா நம்மவர்களில் பலருக்கு பிடித்துள்ளது. முக்கிய காரணம் கனடாவில் கல்வி, தொழில் விடயங்களில் அதிக கட்டுப்பாடுகள் நெருக்கடிகள் இல்லை. மருத்துவம் இலவசம், ஆங்கிலமொழி பிரதான மொழியாக இருப்பதால் தொடர்பாடல் இலகு. இன்னும் பல..

எனவே யாருக்காவது கனடா, அவுஸ்திரேலியா ஆக்களுக்கு சுவிசுக்கு போக விருப்பம் எண்டால்.. விருந்தினர் வீசாவிலபோய் ஜாலியாய் இருந்துபோட்டு வாங்கோ. நீங்கள் வீட்டில இருந்து கணணிக்கால வேலை செய்பவர் எண்டால் பிரச்சனை இல்லை. மூன்றுமாதம் அங்கு தங்கிவிட்டு.. பின்னர் ஒருக்கால் ஜேர்மனிப்பக்கம், இல்லாட்டிக்கு பிரான்சுக்கு போய் ரெண்டுகிழமை இருந்துபோட்டு மீண்டும் விருந்தினர் வீசாவில இன்னோர் மூன்றுமாதம் இருக்கலாம்.

இங்கு இறுதியாக ஓர் விடயம் சொல்லவேணும். எனது பார்வையில் ஐரோப்பாவில் வாழ்வது சர்வதேச ரீதியில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறந்த இடம்போல தெரிகின்றது. காரணம் இவர்களின் TIME ZONE.. நேரம், பூமியின் அமைவிடம், ஏனைய நாடுகளுடன் இலகுவாக தொடர்பாடல் செய்தல் எனும் வகையில் பார்க்கும்போது ஐரோப்பா மிகச்சிறந்த ஓர் இடம். கனடா, அவுஸ்திரேலியா எல்லாம் ஓர் மூளையுக்க இருக்கிது. அத்துடன் ஐரோப்பாவில் இருந்து விமானத்தில் பிரயாணம் செய்வது இலகுவானது, கட்டணமும் ஒப்பீட்டளவில் குறைவு.

சுவிஸ் பற்றிய மிகுதி விடயங்களை சுவிஸ் பற்றி அதிக அனுபவ ஞானம் உள்ள மிச்ச ஆக்கள் சொல்லுங்கோ. :D

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

-----

-----

சுவிசில் இருக்கின்ற பல தமிழர்கள் கனடாவுக்கு வருகின்றார்கள். சுவிசைவிட கனடா நம்மவர்களில் பலருக்கு பிடித்துள்ளது. முக்கிய காரணம் கனடாவில் கல்வி, தொழில் விடயங்களில் அதிக கட்டுப்பாடுகள் நெருக்கடிகள் இல்லை. மருத்துவம் இலவசம், ஆங்கிலமொழி பிரதான மொழியாக இருப்பதால் தொடர்பாடல் இலகு. இன்னும் பல..

-----

சுவிஸ் பற்றிய மிகுதி விடயங்களை சுவிஸ் பற்றி அதிக அனுபவ ஞானம் உள்ள மிச்ச ஆக்கள் சொல்லுங்கோ. :)

எம்மவர்கள் கனடாவை விரும்பி வருவதற்கு இன்னுமொரு காரணம் .....

ஒரு இடியப்பம் அஞ்சு சதமாம் , அதோடை இடியப்பம் வாங்கினால் சம்பல் சும்மா தருவார்களாம் உண்மையோ ..... :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மவர்கள் கனடாவை விரும்பி வருவதற்கு இன்னுமொரு காரணம் .....

ஒரு இடியப்பம் அஞ்சு சதமாம் , அதோடை இடியப்பம் வாங்கினால் சம்பல் சும்மா தருவார்களாம் உண்மையோ

:D

Edited by காவடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் ஒரு 5 நட்சத்திர விடுதி... ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக நீங்கள் பணம் செலுத்த வேண்டும். :D

தனி நபர் வருமானம் அள்ளோ அள்ளென்று இருந்தாலும் செலவீனமும் அதிகம்.

நான் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்திருக்கிறேன். ஆனாலும் ஒரு பாதுகாப்பான சூழல் அமைதியான சூழல் என சுவிசைத்தான் எனது மனது உணர்ந்து கொள்கிறது. முக்கியமாக சுவிஸ் கிராமமாகவே இன்னும் இருக்கிறது. அது ஒருவித நெருக்கத்தன்மையை உருவாக்குகிறது.

மற்றும்படி சுவிசிலிருந்து கனடா செல்பவர்கள் கனடா நல்லதென்கிறார்கள். கனடாவிலிருந்து இங்கு வருபவர்கள் நீங்களெல்லாம் 8 மணிநேர உழைப்போடு ரிலாக்சாக இருக்கிறீர்கள் என்றும் அதிக சம்பளம் எடுக்கிறீர்கள் என்றும் சொல்கிறார்கள்.

அதைவிட முக்கியமாக பிரான்சா இந்தப்பக்கத்தால 3 மணித்தியாலம் ஜெர்மனியா அந்தப் பக்கத்தால 4 மணித்தியாலம் என .. எல்லாம் அருகில் இருக்கிறதால் வெளிநாட்டுப்பயணம் என்ற பெரிய ஏற்பாடெல்லாம் இல்லை. சும்மா போயிட்டு வரலாம். அண்மையில் ஸ்பெயினுக்கு காரில் போய் வந்தேன்.

இதையும் வாசிக்கலாம் :) ( எல்லாம் ஒரு விளம்பரம்தான்)

http://sayanthan.com/?p=36

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு இந்த இலங்கையையே தாண்ட முடியல எனக்கு என்னது சுவிசா அகா இப்பவே கண்ண கட்டுதே334h.gif

  • தொடங்கியவர்

ஆஹா.. அழகிய கனடா திருநாட்டுக்காரரை இடியப்பத்தை வச்சு மட்டம் தட்டுறாங்கள். தமிழ்சிறீ, இடியப்பம் மாத்திரம் இல்லை.. கொத்துரொட்டி, புட்டு, புரியாணி, கட்டுச்சோறு, கட்டாதசோறு, தோசை, இட்லி, வடை, பாயாசம் எண்டு சுமார் 3.50 டாலர் தொடக்கம் 5.00 டாலர் பணத்துக்கு நல்ல சாப்பாட்டை தமிழ் கடைகளில நாங்கள் பெறக்கூடியதாய் இருக்கிது. ஒரு சோற்றுப்பாசல், இதர உணவுப்பொட்டலங்கள் இரண்டுபேர் சாப்பிடக்கூடிய அளவுக்கு போதுமானவை. ஆனால்.. இந்த வசதிகள் எல்லாம் நம்மவர்கள் அதிக அளவில செறிந்து வாழ்கின்ற டோரோண்டோ பெரும் நிலப்பிரதேசத்தில மாத்திரம்தான் இருக்கிறது.

சுவாமி.. அது ஒன்றும் கஸ்டமான காரியம் இல்லை. யாராவது ஒரு வெளிநாட்டு பொண்ணை பார்த்து திருமணம் செய்து இல்வாழ்வுக்குள் நுழைந்துகொள்ளவேண்டியதுதானே. இல்வாழ்க்கை விருப்பம் இல்லை என்றால்.. வழமையாக நம்மவர்கள் செய்வதுபோல் இந்தியாவுக்குபோய் பிறகு இத்தாலிக்குபோய் பிறகு சுவிஸ் எல்லைக்குள்ள நுழைந்ததும் அகதி என்று சொல்லி கைகளை உயர்த்தவேண்டியதுதானே. தற்போதுள்ள நிலமை காரணமாக தமிழ் அகதிகளிற்கு சுவிஸ் அரசாங்கம் சற்று கருணை காட்டுவதாக அறியப்படுகின்றது.

சயந்தன், எனக்கும் ஐரோப்பாவில் பிடித்த ஓர் விடயம்.. சுற்றிவரவுள்ள பல நாடுகளுக்கு இலகுவாக பிரயாணம் செய்யலாம். இங்கு நாங்கள் கிழக்குப்பத்தால பத்துமணித்தியாலம் காரில ஓடினாலும், மேற்குப்பக்கதால பத்துமணித்தியாலம் ஓடினாலும், வடக்காக அப்படி ஓடினாலும்.. ஒரே நாட்டுக்கை கனடாவுக்கைதான் நிற்பம். தெற்குப்பக்கமாக ஓடினால் அமெரிக்கா.. பிறகு அமெரிக்காவுக்குள் தெற்காக நாற்பது மணித்தியாலம் ஓடினால்தான் அடுத்தநாடான மெக்ஸிக்கோவை அடையமுடியும். :D

ஆனால் உங்களுக்கு ஏதாவது உலகயுத்தங்கள் வரேக்கதான் இருக்கிது பிரச்சனை. இரண்டாவது, முதலாவது உலகமகாயுத்தங்களின்போது ஐரோப்பாவில இருந்த சனங்கள்பட்ட கொடுமைகள் அவலங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

கனடா வந்தால் அடைஞ்சு போய் விடிவீர்கள் ஆனால் கனடாதான் தமிழனின் இரண்டாவது தமிழீழம்.இடியப்பம் 5 சதத்தில் இருந்து சுடசுட ஆட்டுக்குடல்கறிவரைக் கிடைக்கும்.நான் லண்டனில் இருக்கும் போது எத்தனை இடம் சுத்தி அடிச்சேன் கல்யாணம் முடித்து கனடா வந்தேன்.கொலிடேயென்று வருசத்திற்கொருக்கா வெளிக்கிட்டா ஒழிய கண்டபடி சுத்தமுடியாது.ஒரு முறை fளோரிடா காரில் போனேன் 26 மணித்தியால ஓட்டம் நின்று நின்று தான் போனேன் இருந்தாலும் வாழ்க்கை வெறுத்து விட்டது. இது மாதிரி இந்தியாவிலும் சென்னையில் இருந்து கன்னியாகுமாரி பயணமும் விடுமுறையை வெறுக்கப்பண்ணிவிட்டது

இனி ஒரேயடியாகப் போய் பிள்ளையானின் கிழக்கு மாகாணத்தில் காலை நீட்டிக்கொண்டு படுப்பம் என்று பார்க்கின்றேன்.

மச்சான்,

சுவிஸ் பற்றிய விபரங்களை உங்களை போல் அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராயவில்லை. ஆனால் சுவிஸ் எனக்கும் பிடித்த நாடு. அங்கு போய் வாழ முயற்சிப்பேனா இல்லையா தெரியவில்லை. சுவிசின் அழகு, மலைப்பாங்கான தரைத்தோற்றம் என்னை மிகவும் கவர்ந்தது.

கனடாவில் போது மொழிப்பிரச்சனை, மற்றும் ஒப்பீட்டளவில் நிறம் சார்/ இனக்குழுமம் சார் ஒதுக்கல்கள் ஐரோப்பிய நாடுகளிலும் குறைவாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் கனடாவுடன் ஒப்பிடும் போது ஐரோப்பா என்னை அதிகம் கவர்கிறது.

அதற்கு காரணம் சயந்தனும் நீங்களும் சொன்னது போல

பல நாடுகள் மிகவும் நெருக்கமாக இருப்பதால், ஒரு 3 நாள் விடுமுறை கிடைத்தாலே ஒரு விடுமுறையை வேறு நாட்டில் கழிக்கும் சந்தர்ப்பம் உண்டு. கனடாவில் ஒரு நகரில் இருந்து அடுத்த நகருக்கு/ மானிலத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 1-2 வாரம் வேண்டும்.

நாடுகளில் இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், கட்டடங்கள். கனடாவில் 100 + வருடம் உள்ள கட்டிடங்களை காண்பதே அரிது. அத்துடன் வீதிகள் நம்ம ஊர் வீதிகள் மாதிரி வளைந்து நெளிந்து செல்லும். கனடாவில் உள்ளது போல் சதுர றூள் கொப்பியை விரித்து போட்டது போல் இருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா என்றால் Toronto மட்டும் பொருள் படாது.பலரின் கருத்தும் Toronto வை மையமாக வைத்துதான் எழுதியிருக்கிறார்கள். W W W இற்க்கு famous ஆன இடங்களும் இங்கதான் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்ல மறந்திட்டன்

2010 Winter Olympic இற்க்கு எல்லோரையும் வருக வருக என Vancouver நோக்கி வரவேற்கிறோம். நேரப்பற்றாக்குறையால எல்லோரையும் தனித்தனியா வரவேற்க ஏழாமல் போனதுக்கு மன்னிக்கவும்.

கனடா சார்பாக 100 மீற்றர் ஓட ஆக்கள் வேற தேடினமாம்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவும் சுவீஸும் பொருளாதரீதியில் நல்ல நாடுகள். லண்டனும் :D


சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

அர்ஜுன், எனது பல நண்பர்கள் யூகேயில இருந்து கனடாவுக்கு வந்துபோய் இருக்கிறார்கள், பலர் நிரந்தரமாக வந்து குடியேறி இருக்கிறார்கள். எல்லாருக்கும் யூகே கனடாவைவிட பிடித்து இருக்கிது. இதற்கான காரணம் என்ன என்று என்னால் சரியாக சொல்லத்தெரிய இல்லை. இவையள் இஞ்ச இருந்து யூகேயை பற்றி புளுகிக்கொண்டு இருப்பீனம். ஆனால்.. கனடாவில இருந்து யூகேயுக்குபோய் வாற ஆக்களுக்கு யூகே பெரிசாக பிடிக்கிறது இல்லை. என்ன மர்மம் எண்டு எனக்கு தெரிய இல்லை.

குளக்காடன், கனடா தெருக்கள், நிலப்பரப்பு சதுர றூள் கொப்பியை விரித்து போட்டது போல இருக்கிது எண்டுறது நல்ல உவமானம். பிளேனில இருந்து பார்க்கேக்கையும் அமெரிக்கா, கனடாவில எல்லாம் நீளவாக்காயும், குறுக்குவாக்காயும் வெட்டுத்துண்டுகள் மாதிரித்தானே தெரியும். எனக்கு சுவிசில பிடிக்காதவிசயம் இந்தமலைகள் - மலைப்பிரதேசம்தான். சிறீ லங்காவில இருந்தபோது அங்குள்ள மலைப்பிரதேசமான நுவரெலியா, மாத்தளை, கண்டி பிரதேசங்களுக்கு போய் வந்து இருக்கிறன். எனக்கு என்னமோ மட்டமாய் நிலத்தோட இருக்கிற யாழ்ப்பாணம், திருகோணமலை இதுகள்தான் அதிகம் பிடிச்சு இருக்கிது. மலையும், மலை சார்ந்த இடத்தையும்விட எனக்கு கடலும் கடல் சார்ந்த இடமும் அதிகளவில பிடிச்சு இருக்கிது. நான் சூரிச்சுக்கு போனது இல்லை. ஆனால்.. சூரிச் ஒப்பீட்டளவில அதிகளவில தட்டையான நிலப்பரப்பு எண்டு சொன்னார்கள். அப்பிடி இருந்தால் பரவாயில்லை. மலைப்பிரதேசமாக இருந்தாலும்.. ஓரளவு தட்டையான பிரதேசமாயும் கலந்து இருந்தால் போக்குவரத்துக்கும் இலகுவானது.

பீசி தமிழன், நீங்கள் சொல்லிற விசயமும் உண்மைதான். கனடா எண்ட உடன நாங்கள் பெரும்பாலும் டொரோண்டோ பெரும்பாகத்தை வச்சுத்தான் கருத்து சொல்லிறது. இது ஒரு stereotype எண்டு நினைக்கிறன், இப்பிடியான பொதுவான மனநிலை எங்களுக்கு ஏற்பட்டு போச்சிது. கனடா சார்பாக 100மீற்றர் ஓடுறதுக்கு ஆக்கள் வேணுமாமோ..? நாங்களும் ஓடமுடியும்.யாழிலையே ஓடக்கூடிய பலர் இருக்கிறம். கடைசியாய் வாறது ஒரு பொருட்டு இல்லை எண்டால் ஓடலாம்.

குமாரசாமி அண்ணா, எங்களுக்கு வழமையாகவே உடம்பில கொழுப்பு அதிகம். இஞ்ச குளிரி நாடுகளுக்கை இருந்து எல்லாருக்கும் கொழுப்பு கூடிப்போச்சிது. அதான் அப்பிடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நல்ல கருத்துகள் இன்னும் கொஞ்சம் ஆழமமாக ஆராய்ந்தால் நல்லம்...

நான் கனடாவை சார்ந்தவன் என்றபடியால் அதை கொஞ்சம் கூட்diத்தான் சொல்லுவேன் ...அப்படி சொல்லுவ்வத்தல்ல ஏதும் நடக்கும் உன்று சொல்லமாட்டேன் ...

எந்த நாடு எங்களுக்கு நல்லம் எண்டால் அங்கே எங்களுக்குள்ள உரிமைகள் நாங்கள் அடைந்துள்ள உயர்நிலைகள் உடன் தொடர்புபட்டது...கனடாவில் நிறைய தமிசர்கள் பலவிதமான உயர் பதவி வகிக்கிறார்கள் ... எனக்கு தெரிந்தவகையில் USA உள்ள தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பெரிய பெரிய பதவிகளில் உள்ளார்கள் ...அது எல்லாருக்கும் தெரிந்திருக்கும் ...USA தனியே திறமையை பார்க்கும் நாடு ( பெரும்பாலான நேரங்களில்) கருப்பு வெள்ளை , இங்கிலீஷ் சிங்களம்.. ஒன்றும் பார்ப்பதில்லை ..கூடுதலான நேரங்களில். கனடா கொஞ்சம் இருக்கு வெள்ளை விளையாட்டு ஆனாலும் எங்கட ஆட்கள் கொஞ்சம் ஓகே ...கனடா இப்ப பெரிய பிரச்சனை மற்றைய குடிவரவாளர்கள் ..சீனா,இந்திய, லெபனீஸ், மற்றைய எண்ணை வள நாட்டுக்காரர்கள் எங்களுடன் சரியான போட்டி

பிறகு வாறன்

  • கருத்துக்கள உறவுகள்

------

பல நண்பர்கள் யூகேயில இருந்து கனடாவுக்கு வந்துபோய் இருக்கிறார்கள், பலர் நிரந்தரமாக வந்து குடியேறி இருக்கிறார்கள். எல்லாருக்கும் யூகே கனடாவைவிட பிடித்து இருக்கிது. இதற்கான காரணம் என்ன என்று என்னால் சரியாக சொல்லத்தெரிய இல்லை. இவையள் இஞ்ச இருந்து யூகேயை பற்றி புளுகிக்கொண்டு இருப்பீனம். ஆனால்.. கனடாவில இருந்து யூகேயுக்குபோய் வாற ஆக்களுக்கு யூகே பெரிசாக பிடிக்கிறது இல்லை. என்ன மர்மம் எண்டு எனக்கு தெரிய இல்லை.

----

----

அதிலை மர்மம் ஒண்டும் இல்லை மச்சான் ,

அதைத்தான் சொல்லுறது (2`ஆவது) தாய் நாட்டுப்பற்று என்று. :)

  • தொடங்கியவர்

எரிமலை.. அப்பிடி சொல்லிறதுக்கு எண்டும் இல்லை. அமெரிக்காவில நியூஜேர்சி, நியூயோர்க் பக்கம் ஏராளம் அகதித்தமிழர் இருக்கிறீனம்.

ஓ.. அது நாட்டுப்பற்றோ தமிழ்சிறீ.. அப்படி இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.