Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய கண்டுபிடிப்பு "ஆறாவது உணர்வு" தகவல்தொழில்நுட்பத்தின் இன்னுமோர் பாயச்சல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய கண்டுபிடிப்பு ஆறாவது உணர்வு தகவல்தொழில்நுட்பத்தின் இன்னுமோர் பாயச்சல்

நன்றி, ஆனந்தவிகடன்

ஒரு காகிதத்தை கம்ப்யூட்டராக இயக்க முடியுமா?

செல்போன், கேமரா பயன்படுத்தாமல் ஃபோட்டோ எடுக்க முடியுமா?

இப்படி கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் சாத்தியம் என்று கூறுவதுதான் பிரணவ் மிஸ்ட்ரி என்ற 28 வயது இந்திய இளைஞனின் வியத்தகு கண்டுபிடிப்பான 'சிக்ஸ்த்சென்ஸ்' டெக்னாலஜி'!

யார் இந்த பிரணவ் மிஸ்ட்ரி?

எம்.ஐ.டி.யின் (MIT-Massachusetts Institute of Technology) பிஎச்.டி மாணவரான பிரணவ் மிஸ்டிரி, ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்றவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் ஆய்வாளராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இரண்டறக் கலக்கும் வகையில் சிக்ஸ்த்சென்ஸ் டெக்னாலஜியை கண்டுபிடித்துள்ளார்.

நம் உடலில் பொருத்திக் கொள்ளக் கூடிய சிறு சிறு கருவிகளின் வாயிலாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நினைத்த நேரத்தில் பயன்படுத்தி பயனடைய வழிவகை செய்யும் இந்த கண்டுபிடிப்பு தான் இன்றைய தேதியில் டிஜிட்டல் உலகில் ஹாட் டாபிக்!

பிரணவ் மிஸ்ட்ரியின் டெட் இந்தியா (TED India- Technology, Entertainment and Development) அமைப்பின் முதல் மாநாடு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் இரண்டாம் வாரத்தில் மைசூரில் டெட் இந்தியாவின் மாநாடு நடைபெற்றது.

அதில் தனது கண்டுபிடிப்புகள் பற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார், பிரணவ் மிஸ்ட்ரி.

ஒரு வெள்ளைக் காகிதத் தாளின் நுனியில் மைக்ரோபோனைப் பொருத்தி, அதனை கம்ப்யூட்டராக இயக்கியவர், அதிலே 3டி கேம்ஸ் விளையாடிய போது பார்வையாளர்கள் சீட்டின் நுனிக்கு வந்தனர். அந்தக் காகிதத்தில் திரைப்படம் பார்த்தவர், அருகிலிருந்த கம்ப்யூட்டரில் உள்ள இரண்டு பத்தி எழுத்துகளை அப்படியே காகிதத்தில் எடுத்து வைத்தது அனைவரையும் சிலிர்க்க வைத்தது.

அதேபோல் கையில் சில மைக்ரோ கருவிகளை மட்டுமே பொருத்திக் கொண்டு புகைப்படம் எடுப்பது, புத்தக கடைக்குச் சென்று ஒரு புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் உள்ளிட்ட விவரங்களை அந்தப் புத்தக பக்கங்களிலேயே இன்டர்நெட்டை இயக்கி பார்ப்பது என பல விஷயங்களும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்கின் சைன்ஸ்ஃபிக்ஷன் படங்களில் வரும் அதிசயங்களை நேரில் காணும் பிரமிப்பு ஏற்படுகிறது, பிரணவ் மிஸ்ட்ரியின் டெமோவைக் கண்டபோது!

இதில் அனைவரையும் அசரவைத்த அம்சம்... "இந்த சிக்ஸ்த்சென்ஸ் தொழில்நுட்பத்தை ஒரு மாத காலத்தில் மக்களுக்கு ஓபன் சோர்ஸ்சில் இலவசமாக வழங்கப்போகிறேன்," என பிரணவ் மிஸ்ட்ரி அறிவித்ததுதான்!

பிரணவ் மிஸ்ட்ரியின் டெமோவைப் பார்க்க...

Elugnajiru , உங்கள் பகிர்விற்கு நன்றி

பிரமிக்கவைக்கும் மிகவும் மெச்சத்தக்க ஆக்கங்கள், அத்துடன் எல்லோரும் பயன்பெறும் பொருட்டு திறந்த மூலக் காப்பமைபின் (OpenSource ) கீழ் வெளியிட்டுளதாகக் கூறுகிறார் ... ! இவரை நவீன நாயன்மாராகத்தான் கருத வேண்டும்.

திறந்த மூல உலக்கத்தின் காருணியத்தால் இவரின் கண்டு பிடிப்புகள் எங்கள் எல்லோரின் கை களிலும் தவளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

......... நன்றி பிரணாவ்

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி வரும் காலம் சாதாரண மக்களுக்கு இனிதாக அமையுமா? :D நிச்சயமாக இல்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலம் சாதாரண மக்களுக்கு இனிதாக அமையுமா? :D நிச்சயமாக இல்லை :)

இங்கேயும் இப்பொழுதும் என்றுமே இனிமையானது,

நாளையும் மறுநாளூம் எப்போதும் பயமூட்டும் பூதங்களே !.

சின்னக்குட்டி அண்ணையிண்ட வலைப்பூவுக்கு தற்செயலாய் போன இடத்தில இந்த காணொளியை பார்த்தன்.

இந்த இளைஞன் செய்வதுபோன்ற பல சித்துவிளையாட்டுக்கள் ஏற்கனவே பலரால Demonstrate பண்ணப்பட்டு இருக்கிது. இந்த துறையில அமெரிக்காவில இருக்கிற Carnegie Mellon University பல்கலைக்கழகம் பிரபலமானது.

ஆனால்.. இங்கு இவர் பல்வேறுவிதமான Demonstrationகளை ஒரே நேரத்தில செய்துகாட்டி பார்வையாளர்களிண்ட மண்டையை விறைக்கப்பண்ணிவிட்டார். விஞ்ஞான, அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நடைமுறை வாழ்வில பிரயோகம் செய்யப்படுகின்ற முறைக்கும், Testingசெய்யப்படுகின்ற முறைக்கும் இடையில பாரிய வித்தியாசங்கள் இருக்கிது.

குறிப்பாக ஒரு பொருள் அல்லது கண்டுபிடிப்பு வியாபார உலகத்தில வரும்போது பல்வேறு சிக்கல்கள் வரும். அது நல்ல விசயமாக இருந்தாலும்.. பல்வேறு நிறுவனங்களின் அழுத்ததிற்கு உள்ளாகும். சட்டரீதியாக தமது காப்புரிமை உள்ளவிடயங்களை வேறு தேவைகளுக்கு அல்லது இலவசமாக மற்றவர்கள் பயன்படுத்தும்போது இவர்கள் அவற்றை முடக்குவார்கள்.

இந்தநிலையில இவர் Open Sourceஆக தனது கண்டுபிடிப்புக்களை வெளிவிட்டாலும்.. மற்றைய இதர நிறுவனங்கள் தமது பொருட்களை இவரது பொருட்கள் பாதித்து வியாபாரத்தை முடக்குவதை விரும்பமாட்டார்கள்.

எனவே, ஆராய்ச்சி நிலையில் இருக்கும் இந்த இளைஞனின் உன்னதமான அறிவியல் சிந்தனைகள் எவ்வளவு தூரம் நடைமுறை உலகில் சாதாரண மக்களின் பாவனைக்கு செல்லும் என்பது கேள்விக்குறியே. அத்துடன்.. சட்டரீதியான சிக்கல்கள் உருவாகாமலும் இருக்கவேண்டும். அதாவது இப்படியான பொருட்கள் சாதாரண பாவனைக்கு வரும்போது அவை மக்களினால் துஷ்பிரயோகம் செய்யப்படாது இருக்கவேண்டும். அல்லாதுவிடின், கண்டுபிடிப்புக்கள் பயன்பாட்டு அளவில் வெற்றிபெற முடியாது.

அறிவியல் ரீதியாக மட்டும் இந்த இளைஞனின் கண்டுபிடிப்புக்களை, சிந்தனைகளை பாராட்டலாம்.

பின்விளைவுகள் என்று பார்த்தால்.. இப்படியான பிரயோகங்கள்.. மருத்துவ ரீதியாக, உடல் நலன்களிற்கு எல்லாம் ஆரோக்கியமானதா என்று பரிசோதனைகள் செய்து பார்க்கவேண்டும். விரலினால் புகைப்படம் எடுக்கலாம். பிரச்சனை இல்லை. நாளை விரலில் ஏதாவது கதிர்த்தாக்கம் மூலம் புற்றுநோய் வந்தால் யார் பதில் சொல்வது..? இவர் தனது ஆராய்ச்சிகளின்போது எப்படியான Precautionsஐ எடுத்தார் என்று தெரியாது. ஆனால்.. பலரும் இவரது பாணியில் முயற்சி செய்துபார்க்கும்போது அது உடல்நலத்திற்கு பாரிய தீங்கை ஏற்படுத்தலாம்.

என்ன இருந்தாலும்..

இந்த இளைஞனுக்கு பாராட்டுக்கள்~! பாராட்டுக்கள்~! பாராட்டுக்கள்~!

  • கருத்துக்கள உறவுகள்

"ஆறாவது உணர்வு" அருமையான கண்டுபிடிப்பு.

கடந்த நூறாண்டுகளில் .... தொழில் நுட்பத்துறையிலும் , மருத்துவத்துறையிலும் உலகம் வேகமாக முன்னேறி வருகின்றது.

பாராட்டுக்கள் பிரணவ் மிஸ்ட்ரி.

அவர் வேண்டாம் எண்றாலும் இந்தியா காப்பீடு கோராமல் விடாது.... உந்த தொழில் நுட்பம் எங்கட கைகளில் வருவதுக்கு பல லட்ச்சங்கள் தேவைப்படும் வண்ணம் செய்து விடுவார்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

யோசிக்க தேவை இல்லை. பில் அண்ணா எல்லாவற்றையும் வாங்கி விடுவார்.ஆறாவது உணர்வு என்ன எத்தனை உணர்வு வந்தாலும் பில் அண்னை காசால் அடித்து விடுவார்.

யோசிக்க தேவை இல்லை. பில் அண்ணா எல்லாவற்றையும் வாங்கி விடுவார்.ஆறாவது உணர்வு என்ன எத்தனை உணர்வு வந்தாலும் பில் அண்னை காசால் அடித்து விடுவார்.

பில் அண்ணை எங்கட தலையிலை பெரிய பில்லாய் கட்டி விடுவார் எண்டிறீயள்.. :)

இவரின் "கண்டுபிடிப்பு" அப்படி ஒண்றும் பெரிதாக இல்லை. Object recognition technology இன்னும் எவ்வளவோ முன்னேற இருக்கிறது. ஆரம்ப்பக் கட்டத்தில் தான் இருக்கின்றோம்.

http://www.popularmechanics.com/technology/industry/4217348.html

http://www.microsoft.com/surface/

  • கருத்துக்கள உறவுகள்

பில் அண்ணை எங்கட தலையிலை பெரிய பில்லாய் கட்டி விடுவார் எண்டிறீயள்.. :)

தயா அண்ணா , பில் அண்ணா பில்லா கட்டுகிறாரோ , கல்லாய் கட்டுகிறாரோ என்பது எம்மில் தான் தங்கி உள்ளது. லினிக்ஸ் போன்ற இலவச operating system உள்ளபோது பில்லை நாம் நாடுவது எம்மில் பிழையோன்னா? :)

  • கருத்துக்கள உறவுகள்

பில் அண்ணை எங்கட தலையிலை பெரிய பில்லாய் கட்டி விடுவார் எண்டிறீயள்.. :)

:):wub:

பிரனாவ் மிஸ்த்றி அப்படி என்னதான் பிரமாதமாக செய்தார்: பிரனாவ் மிஸ்த்றியின் 6ஆம்புலன்

Edited by ஜெகுமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.