Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‌சிறு‌நீரக‌க் க‌ற்களு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‌சிறு‌நீரக‌க் க‌ற்களு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்

‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் த‌‌ற்போது இளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌ம் கூட தோ‌ன்று‌கிறது. இத‌ற்கு பல காரண‌ம் இரு‌ந்தாலு‌ம், இதனை ச‌ரிபடு‌த்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம்.

கடுமையான வ‌லி, ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் போ‌ன்றவ‌ற்றை இது ஏ‌ற்படு‌த்த‌க் கூடு‌ம்.

இத‌ற்கு, ‌சில எ‌ளிய வை‌த்‌திய முறைக‌ள் உ‌ள்ளன. ஆயு‌‌ர்வேத‌த்‌தி‌ல் இவை கூற‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதாவது, வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை அதாவது செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி என வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். இ‌ந்த ‌கிழமைக‌ளி‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெ‌ய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து லேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி, அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கருவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌ம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெது‌ப்பான ‌நீரை‌ப் பருகுத‌‌ல் ந‌ல்லது.

மேலு‌ம், ‌காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது.

‌வீ‌ட்டு வேலைகளையு‌ம் சு‌றுசுறு‌ப்புட‌ன் செ‌ய்து வருவது உடலு‌க்கு ந‌ல்ல உட‌ற்ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vidivelli

Posted Today, 05:22 PM

விளக்கெண்ணை என்றால் என்ன? மண் எண்ணையா?

நான் நினைக்கிறேன் தேங்காய் எண்ணெய்யைதான் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்று334t.gif :lol:

ஆமணக்கு எண்ணை

Ricinus_communis5.jpgCastor_beans.jpg

imag from wikimedia.org

விளக்கெண்ணெய்(Castor Oil) - விஜயகுமாரி பாஸ்கரன்

விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் “ஆமணக்கு” எனும் தாவரம், இந்தியாவில் பரவலாக எல்லாப் பாகங்களிலும் எண்ணெய்க்காகப் பயிரிடப்படுகிறது. உடலிற்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்த வகை எண்ணெய் ஆமணக்கு விதைகளிலிருந்து வடித்தெடுக்கப்படுகிறது.

வெளிர்ப்பச்சையும், மஞ்சளும் கலந்த நிறமாகவோ அல்லது நிறமற்றதாகவோ இருக்கும். ஏதோ ஒரு வகை லேசான வாசனையும், கசப்பு சுவையும் குமட்டலை உண்டு பண்ணும் தன்மையுங் கொண்டது. குடல் சுவர்கள் சுருங்கி உணவுப் பொருளைத் துரிதமாகச் செல்வதை ஊக்குவிக்கிறது. பெயிண்ட், இங்க், கேசத் தைலங்கள், சோப்பு முதலியவை தயாரிக்க இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது. இம்மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.

ஆமணக்கு விதையிலிருந்து பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்று இரண்டு வகையாய் எடுக்கப்படுகின்றன. வித்துகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, இயந்திரத்தின் மூலமாய் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய் பச்சை எண்ணெய் எனப்படும். ஓர் அகண்ட கடாயில் நான்கு பங்கு நீர்விட்டு அதில் பருப்புகளை இடித்து ஒரு பங்கு சேர்த்து, தீயிட்டு எரிக்க, நெய் கக்கி நீர் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து சேர்த்து அதில் கலந்துள்ள நீரை அனலில் வைத்துப் போக்கினதே ஊற்றின எண்ணெய் எனப்படும். இருவகை முத்துகளின் எண்ணெயில் எது மலினமற்றுத் தூய்மையாயும், வைக்கோல் நிறமாயும், நறுமணத்துடனுமிருக்கிறதோ அதுவே மேலானது. எது அதிக மஞ்சள் நிறமாயும், கனமாயும், தெவிட்டலாகவுமிருக்கிறதோ அது தாழ்ந்தது.

வித்தின் ஓட்டை நீக்கிப் பருப்பைப் பச்சையாக அரைத்தாவது அல்லது ஒன்றிரண்டாய் நசுக்கி அனலில் வதக்கியாவது, கட்டிகளின் மீது வைத்துக் கடடிவர, கட்டிகள் எளிதில் பழுத்து உடையும். இவ்வித்தின் பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட வயிற்றுவலி, கல்லடைப்பு, நீரடைப்பு, பக்கவலி முதலியன தணியும். - http://www.tamilvanan.com/content/2009/10/23/castor-oil/

...

மலை ஆமணக்கு தாவரம் ரத்தன் கோட், பார்ஸி காஸ்டர், மொகல் காஸ்டர், சந்த்ரஜ்யோத், சந்திரகோடா, பாகிஎராண்ட் ஜமால்கோட்டா ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இதன் பழங்கள் கொட்டைப்பாக்கு அளவுக்குப் பெரியவை. இதற்குள் 3 அல்லது 4 விதைகள் இருக்கும். இவை டிஸம்பர் ஜனவரியில் காய ஆரம்பிக்கும். அப்போது இவை பிய்க்கப்பட்டு காயவைத்து தோலுரிக்கப்படுகின்றன. இதன் விதைகள் மிகவும் வழவழப்பான எண்ணெயைக்கொண்டிருக்கும். இதில்மிகவும் குறைவான அளவு விஷம் இருக்கிறது. அதுவே வயிற்றை சுத்தம் செய்யும் குணத்தை விளக்கெண்ணெய்க்கு வழங்குகிறது.

ஆகவே இந்த எண்ணெயைக்கொண்டு உண்ண உபயோகப்படுத்த முடியாது. இதனில் இருக்கும் விஷத்தை எடுக்கும் பல வழிகள் இருக்கின்றன. பிரேஸிலில் இருக்கும் சில தோட்டங்களில் விஷமற்ற ஆமணக்கு தயாரிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனர்கள் விளக்கெண்ணெயிலிருந்து வார்னீஷ் தயாரிக்கிறார்கள். இங்கிலாந்தில் இது கம்பளி சுற்றும் இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் விளக்கெண்ணெயை மாட்டுவண்டிகளின் அச்சில் வழவழப்பு தரவும் மற்ற இதர விவசாயப்பொருட்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

மலை ஆமணக்குப் புண்ணாக்கு மிகவும் சிறப்பான உரமாக பயன்படுத்தப்படுகிறது. மிக அதிகமான அளவில் இது உருவாக்கப்பட்டால் இறக்குமதி செய்யப்படும் உரங்களிலிருந்து ஓரளவு விடுதலையை விவசாயிக்கு வழங்கலாம்.

3 வருடத்தில் இது 3 மீட்டர்கள் ஆமணக்குச் செடி வளர்கிறது. மணல் மற்றும் கல் உவர் நிலங்களில் கூட இந்த தாவரம் வளமையாக வளர்கிறது. இதனை வேலியாகக் கூட வளர்க்கிறார்கள்.

காய்ந்த சூழ்நிலை இதில் மிக அதிக அளவு எண்ணெய் இருக்க உதவுகிறது. ஒரு மாதத்தில் 3 அல்லது 4 முறை கோடையில் பாசனம் செய்வது நன்றாக வளர உதவுகிறது.

கோடையில் இதன் இலைகளில் மெழுகு போன்ற படிவம் தோன்றி அதிக தண்ணீரை இழக்காமல் பார்த்துக்கொள்கிறது. மிக அதிகமான வறட்சியைக்கூட இந்த செடிகள் தாங்கும்.

பயோடாஸல் தயாரிக்கும் போது கிடைக்கும் உபரிப்பொருளான கிளிசரின் சோப்புகள் தயாரிக்கவும் உதவுகிறது.

----

CopyrightThinnai.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெம்ப நன்றி ஜெகுமார். படங்களுடன் கூடிய விரிவான உங்களுடைய விளக்கம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜெயக்குமார் உங்கள் தகவலுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிந்த ஒருவர் சொன்னது. அவருக்கு சிறுநீரகக் குழாயில் கல் ஏற்பட்டபோது முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கும்படி ஆயுள்வேத வைத்தியர் சொன்னாராம்..! அதைக் குடிப்பதற்குப் பதில் தற்கொலை செய்துகொள்ளலாம் போல் இருந்ததாம்..! ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல இவர் குறிப்பிட்ட நாட்களுக்கு அந்தச் சிகிச்சையைத் தொடர்ந்ததன் விளைவாக கல் வெளியேறிவிட்டதாம்..! ஆகவே முள்ளங்கி ஜூசையும் யாரும் மறக்க வேண்டாம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

.

சிறுநீரக்கல் தோன்றாமல் இருக்க..... தினமும் ஆகக் குறைந்தது மூன்று லீட்டர் திரவ பதார்த்தம் அருந்த வேண்டும்.

உலகின் பெரிய சிறுநீரகக்கல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெய்லி மூண்டு பியர் அடியுங்கோ

விசயம் முடிஞ்சுது

கல்லும் அண்டாது கத்தரிக்காயும் நெருங்காது

  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீரக கல் வராமல் தடுப்பதற்கு முள்ளங்கி மட்டுமல்ல...வாழைப்பு,வாழைத் தண்டு கிரான்பெறி யூஸ் எண்டு இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி

Posted Today, 05:04 AM

டெய்லி மூண்டு பியர் அடியுங்கோ

விசயம் முடிஞ்சுது

கல்லும் அண்டாது கத்தரிக்காயும் நெருங்காது

lion.jpg

குமாரசாமி தாத்தாவுக்கு அடியேனின் சரக்கு இதை தான் நான்......... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்! கு.சா! பியர் நல்லது. கல்லை ஈரல் இழுத்துக்கொண்டு வெளியே வந்துவிடும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.