Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் விடுதலை இராணுவம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைவானும் இனந்தெரியாத நபர்களுக்கும் அடிக்கல் நாட்டியாச்சு, எண்ண ஆரம்பிக்கலாம். :D:lol:

பெயரிலே குழப்பமாக இருகஇகிறது.... காரணம் சிங்கள அரசு தமிழ் - ஈழ- என்ற சொல்லுடன் ஒர் அமைப்பு இருக்க கூடாது என விரும்புகிறது

இந்த அமைப்பு இராணுவத்தின் விருப்புக்கு ஏற்ப பெயரிடப்பட்டுள்ளது.

சிறிது காலம் செல்லவிட்டடு விடுதலைப் புலிகளுக்கும் இந்த அமைப்புக்கும் பிரச்சினையை உருவாக்கவது போல் செய்துவிட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாளர்களையும் சரணடைந்த விடுதலைப் புலிகளை போட்டுத் தள்ளுவதிற்கும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் கூறுகிறார்கள்

நாடுகடந்த அரசு அமைக்கும் முயற்சியை குழப்புவதற்கும் புலம் பெயர்ந்த தமிழர்களின் எழுர்ச்சியை மழுங்கடிப்பதற்கும் என்றும் சொல்கிறார்கள் ..

எது எப்படியோ தமிழர்கள் இனிமேல் ஏமாறத் தயாரில்லை............. நல்லநோக்கோடு அமைக்கப்படடால் வரவேற்கலாம் .................

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைவானும் இனந்தெரியாத நபர்களுக்கும் அடிக்கல் நாட்டியாச்சு, எண்ண ஆரம்பிக்கலாம். :D:lol:

எண்ணுவதற்கு அவங்கள் என்னத்தை செய்யபோறாங்கள் அவங்கள் மதிவறண்டவங்'கள்" . புலி வந்து செய்தால்தான் எண்ணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த - இந்தியக் கூட்டின் குழந்தைதான் இந்த புதிய விடுதலை அமைப்பு.

ஆரம்பத்தில் தமிழின விடுதலை பற்றிப் பேசி, பின்னர் சிறிது சிறிதாக மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவது. பின்னர் ஒட்டுமொத்தச் சரணாகதியை சிங்களவனின் காலடியில் அடைவது.

இன்னும் எத்தனையோ வரும். பார்த்துக்கொண்டிருங்கள்.

Other PLA insiders said that one of their likely first fights would be with groups of former LTTE cadres led by the infamous Colonel Karuna.

இந்திய அரசியலுக்கும் இலங்கை அரசியலுக்கும் ஈழத்தமிழனின் பிணம் இன்னமும் தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணுவதற்கு அவங்கள் என்னத்தை செய்யபோறாங்கள் அவங்கள் மதிவறண்டவங்'கள்" . புலி வந்து செய்தால்தான் எண்ணலாம்.

அவங்கள விடுங்கோ.... இவளகாலமும் வெள்ள வானுமில்ல இனந்தெரியாதவங்களுமில்ல. சொல்ல துடங்கீட்டியளல்லோ....நீங்கள் துடங்க அவங்கள் துடங்க அதான் எண்ண துடங்கலாம். :D:lol:

அவங்கள விடுங்கோ.... இவளகாலமும் வெள்ள வானுமில்ல இனந்தெரியாதவங்களுமில்ல. சொல்ல துடங்கீட்டியளல்லோ....நீங்கள் துடங்க அவங்கள் துடங்க அதான் எண்ண துடங்கலாம். :D:lol:

வெள்ளை வான் என்டா உங்கட ஆக்களுக்கு கொண்டாட்டம் தானே...அந்த மாதிரி வசூலிக்கலாம்

வாற தேர்தலில எந்த எஜமானை நக்கிறது...ஐ மீன் சப்போர்ட் பண்ணுறது என்டு முடிவு செய்திட்டீங்களோ? :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளை வான் என்டா உங்கட ஆக்களுக்கு கொண்டாட்டம் தானே...அந்த மாதிரி வசூலிக்கலாம்

வாற தேர்தலில எந்த எஜமானை நக்கிறது...ஐ மீன் சப்போர்ட் பண்ணுறது என்டு முடிவு செய்திட்டீங்களோ? :o

நீங்கள் சரத்த நக்கலாம் அவங்கள் மகிந்தவ நக்கினால்....ஐ மீன் சப்போர்ட் பண்ணிதான் பிழையோ? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள விடுங்கோ.... இவளகாலமும் வெள்ள வானுமில்ல இனந்தெரியாதவங்களுமில்ல. சொல்ல துடங்கீட்டியளல்லோ....நீங்கள் துடங்க அவங்கள் துடங்க அதான் எண்ண துடங்கலாம். :D:lol:

என்ன புதுசா தொடங்கிறமாதிரி விழா எடுக்கிறீங்கள்? எல்லாம் பழைய சித்துதானே.............

இப்படியாவது கொஞ்ச எலி எண்டாலும் பிடிக்கலாம்?

பழைய ஈரோஸ் காறர் ஒருவர் தண்ணியை போட்டுவிட்டு ரோட்டிலை நிண்டு ஒருக்கா அறிக்கை விட்டு கொண்டு நிண்டார்... பிரபாகரனாலை முடியாட்டி பொறுப்பை என்னட்ட தந்தால் நான் ஒரு கிழமைக்குக்கை எல்லாத்தையும் முடிச்சு காட்டுவன் எண்டு... அதுமாதிரித்தான் இதுவும் கிடக்கு...

உந்த கோணேசும் TELO விலை இருந்து பிரிஞ்சு PLOTE போன கூட்டத்திலை ஒண்டு போல கிடக்கு...

தமிழக மாவோக்களோடு தொடர்ப்பாம் எண்டுறார்... PLO வுடனும் கியூபாவுடனும் தொடர்பாம்... இது இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து தமிழக மாவோக்களுக்கு விரிக்கும் வலையா...?? அல்லது சீனாவும் இலங்கையும் சேர்ந்து இந்திய நிறுவனங்களை அப்புறப்படுத்தும் சதியா...???

வோச்... After the பிறேக்.......

"மக்கள் விடுதலைப் படை": தமிழர் நலனுக்கு எதிராக உதித்த புதிய சதி?!

சிறிலங்காவில் போர் முடிவடைந்து விட்டது என்று அரசு அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அங்கு மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிப்பதற்கான சூழல் தோன்றி உள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.

மக்கள் விடுதலை படை [ People's Liberation Army - PLA ] என்ற பெயரில் கிழக்கில் உருவாகியுள்ள புதிய இயக்கம் ஒன்று சிறிலங்காவில் ஆயுதப் பேராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தி டைம்ஸ் [The Times ] என்ற பிரித்தானிய ஏடு தனது செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

"தமிழர்களின் தனித் தாயமான தமிழீழத்தை அடையும் வரையும் சிறிலங்கா அரச மற்றும் படையினரின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக நான்கு மாதங்களுக்கு முன்னதாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது" எனவும், “இந்தப் போராட்டம் இப்போதைக்கு ஓயாது” எனவும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கோணேஸ் தம்மிடம் சொன்னதாக தி டைம்ஸ் இணையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாதுகாப்பான மறைவிடம் ஒன்றில் கடந்த வாரம் தி டைம்ஸ் ஊடகவியலாளர் கோணேசைச் சந்தித்துப் பேசினாராம்.

“கடந்த மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் 'மக்கள் விடுதலைப் படை'யை ஒருங்கிணைத்துக் கட்டியெழுப்பி உள்ளோம். விரைவிலேயே நடவடிக்கைகளில் இறங்குவோம். ஜனநாயக, பொதுவுடமை விடுதலையை வடக்குக் கிழக்குக்கு (தமிழ் ஈழம்) பெற்றுத் தருவதே எமது இலக்கு” என கோணேஸ் விபரித்தாராம்.

தமது இயக்கத்தில் இப்போது 300 பேர் வரையிலான தீவிர செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்ன கோணேஸ், வன்னித் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 280,000 பேரில் இருந்து 5,000 தொண்டர்கள் வரையில் விரைவில் தம்மோடு இணைத்துக் கொள்வார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டாராம்.

இந்த இயக்கம் விடுதலைப் புலிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என வலியுறுத்திய கோணேஸ், "மக்கள் விடுதலைப் படை"யின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளும் தமது இயக்கத்தில் இணைந்து கொள்ளலாம் என விளக்கினாராம்.

இப்போது தனது 40 வயதுகளில் இருக்கும் கோணேஸ் - தான் 1980-களில் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தாராம். அவரது பயிற்சியாளர்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனராம்.

“பாலஸ்தீன விடுதலைப் படை, கியூபா மற்றும் இந்திய மார்க்சிஸ்டுகள் ஆகியோருடன் நாங்கள் இப்போதும் தொடர்பில் இருக்கின்றோம். அவர்களும் எங்களைப் போன்றே தமது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்” எனவும் கோணேஸ் தெரிவித்தாராம்.

“இங்கே எங்களது எதிரி சிறிலங்கா அரசு மட்டும் தான். நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே சண்டையிடுகிறோம். நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்லர். சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் அவர்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு” என்று தமது நோக்கத்தை கோணேஸ் விளக்கினாராம்.

அதே நேரம் - கோணேஸ் என்பவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வருகையில் - அவரது மக்கள் விடுதலைப் படை இயக்கத்தில் சேருவதற்குக் காத்திருப்பதாகச் செசால்லப்பட்ட மூவரைச் சந்திக்கும் வாய்ப்பு "டைம்ஸ்" செய்தியாளருக்குக் கிடைத்ததாம்.

அந்த மூவரும் 15, 16 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக - திடீரெனத் தோன்றியிருக்கும் இந்த "மக்கள் விடுதலைப் படை" பற்றிச் செய்திகள் வெளியாகின்ற போதும் அதன் பின்னணி தொடர்பாக அரசியல் மற்றும் இராணுவ நோக்கர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இது சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினரின் ஒரு புதிய வேலைத் திட்டம் போலத் தோன்றுவதாகச் சில அவதானிகள் கருதுகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் அகியோரை வைத்து சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் முன்னர் "சித்து விளையாட்டு" ஒன்றை ஆட முற்பட்டனர்.

ஆனால் - அது அம்பலமாகி அவர்களது திட்டங்கள் தோல்வியுற்ற நிலையிலேயே இந்தப் புதிய வேலைத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாகக் கருதப்படுகின்றது.

தம்மிடம் சரணடைந்துள்ள மற்றும் கைதாகியுள்ள விடுதலைப் புலிப் போராளிகளையும், ஏற்கெனவே தம்மோடு இணைந்து செற்படும் தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் இந்தப் புதிய நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் பயன்படுத்தக்கூடும்.

அதே வேளை - தமது பிடியிலுள்ள 11,000 முன்னாள் போராளிகளினது விடுதலையைப் பின்போடுவதற்கும், அவர்களில் ஒரு சில ஆயிரம் பேர்களைக் "காணாமல் போக"ச் செய்துவிட்டு - அவர்கள் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்துவிட்டார்கள் என்று உலகிற்குச் சொல்லிவிடவும் இந்த ஏற்பாடு சிறிலங்கா அரசுக்குப் பயன்படலாம்.

இது தமிழ் மக்களை ஏமாற்றி - அவர்களை ஒரு குழப்பத்தில் வைத்திருப்பதற்கான எற்பாடுகளில் ஒன்று எனவும், அதே வேளையில் - "தமிழ் பயங்கரவாதம்" இன்னும் அழிந்துவிடவில்லை என்ற விதமாகக் கதைகளைப் பரப்பி - எதிர்வரும் தேர்தல் சமயத்தில் சிங்கள மக்களிடம் வாக்கு வேட்டையாடும் ஒரு முயற்சி எனவும் அவதானி ஒருவர் கருத்துக் கூறினார்.

அதே வேளையில் - தொடர்ந்தும் அதே பழைய "பயங்கரவாதப் பூச்சாண்டி"யைக் காட்டி, உலகையும் ஏமாற்றி - தம் மீது வரக்கூடிய சர்வதேச அழுத்தங்களைத் தமக்குச் சாதகமாக வளைத்து எடுக்கும் ஒரு முயற்சியாகவும் சிறிலங்கா அரசு இதனைச் செய்வதாக இன்னொரு அவதானி கருத்துக் கூறினார்.

அதே வேளை - இந்த விடயத்தை ஒரு வெறும் உள்நாட்டு விடயமாக மட்டும் பார்த்துவிட முடியாது.

வேறு ஒரு கோணத்திலிருந்து நோக்கும் போது - தமது பிடியை விட்டு நழுவிப் போய்க்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களைப் போட்டு - அதனைத் திரும்பவும் தமது வழிக்குக் கொண்டுவரும் நோக்கோடு - ஏதோ ஒரு பெரிய வெளிச்சக்தி கூட தமது புலனாய்வாளர்கள் மூலமாக - இலங்கைத் தமிழ் இளைஞர்களையும் பாவித்து - இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடலாம் என்று கருதவும் இடமுண்டு.

கோணேஸ் என்பவர் சொல்லியிருக்கும் கதைகளையும், பேசியுள்ள விதங்களையும் பார்க்கும் போது - வெளிச் சக்தி ஒன்றின் ஈடுபாடு இதில் இருப்பது போலவே தெளிவாகத் தோன்றுவதாக அவதானி ஒருவர் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனைக் கேள்விப்பட்டதிலிருந்து, புலம்பெயர் சனங்கள் தம்மையும், தமது பிள்ளைகளையும்,தம் சகோதரங்களையும் இந்த அமைப்பில் சேர்த்து விடுவதற்காக ஓடுபட்டு திரிவதாக ஒரு செய்தி அடிபடுகின்றது. இந்த விசயம் உண்மையா அல்லது வதந்தியா என தெரியவில்லை...

நிதிப்பொறுப்பாளர் பதவி தருவாங்களாயிருந்தால் நானும் இணையத்தயார். :D

  • தொடங்கியவர்

இந்த புதிய அமைப்பின் அறிக்கையை பார்த்துவிட்டு. இதுக்கும் பாலஸ்தீனத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லையாம் எண்டு அந்த நாட்டின் சிலங்கா தூதுவர் அறிக்கையும் விட்டிருக்கிறார். இப்படியான ஒரு பெயரை கேள்விபடவே இல்லையாம்.

அதுமாத்திரம் இல்லை சிறிலங்கா அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு என்றும் தாங்கள் ஆதரவாம்.

தாங்களே நடுத்தெருவில அதுக்குள்ள புலிகளுக்கு எதிரான போர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராம்.

உங்களுக்கு இஸ்ரேயல் காரன் வைப்பாண்டி ஆப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன தமிழனை அழிக்கிறது என்டால் எதிர் எதிர் முகாமில்

உள்ளவர்கள் கூட போட்டி போட்டுக்கொன்டு வாறங்கள் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.