Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனதிபதி தேர்தலும் மக்களும் - POET

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் ஈழத்தில் வாடும் மக்கள் என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மிகவும் நேர்த்தியாக எழுதப் பட்ட கட்டுரைகள் பல தினம் தினம் எங்கலைப் போன்ற புலம் பெயர்ந்தவர்களால் எழுதப் படுகிறது. எனினும் நெருக்கடிக்குள் அன்ராட வாழ்வுக்கே அல்லாடும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாமல் அவர்களுக்கு போதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் புலம் பெயர்ந்து குடும்பங்களோடு பாதுகாப்பாக இருக்கும் எங்களுக்கு மக்களின் அவசரப் பிரச்சினைகளையும் முன்னுரிமை அட்டவணைகளையும் கற்பனையில் உணர்ந்து கொள்ளுதல் இயலாது. காலிக் கோப்பைகளுடன் தொடர்ந்து கண்ணீரும் சென்னீரும் வடிக்கும் மக்கள் தொலைபேசியிலும் கடிதங்களில் அழுத்திச் சொல்லும் விடயங்களுக்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் பியர் கிண்ணங்களுடன் தீப்பொறி பறக்க நாங்கள் விவாதிக்கும் விடயங்களுக்கும் இடையில் அடிப்படையில் அதிக சம்பந்தங்கள் இல்லை. இது துர் அதிஸ்ட்ட வசமானது. பல விடயங்களில் மக்கள் இலகுவாக முடிவெடுக்கக்கூடிய அனுபவத்தோடு இருக்கிறார்கள். குறுங்கால அடிப்படையில் அவர்கள் 100 விழுக்காடு சரியாக சிந்திக்கிறார்கள். அதை நாங்கள் ஆதரிக்க வேணும். நீண்டகால அடிப்படையில் சரியான முடிவுகளை கண்டடைய மட்டும் அவர்களுக்கு எங்கள் ஆலோசனையும் ஆதரவும் தேவைப் படுகிறது. மக்களிடம் கற்றுக்கொண்டு மக்களுடன் கலந்துரையாடுவதன் மூலமாக மக்களுக்கும் கற்றுக் கொடுக்கிற உறவை இனியாவது நாம் உருவாக்க வேணும். போராளிகளின் தவறுகள் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எமது மக்கள் இனக்கொலை ஆபத்தை எதிர்கொண்டபோது மக்கலைக் காக்க மேற்க்கு நாடுகளின் ஆதரவை வென்றெடுப்பதா அல்து மேற்க்கு நாடுகளுக்குச் சவால் விடும் வகையில் அவர்களால் தடை செய்யப்பட்ட சின்னங்களுடன் வீதியில் இறங்குவதா எது அவசியம் என்று மக்களைக் கேட்டிருந்தால் அவர்கள் மிகச் சரியான பதிலை சொல்லியிருப்பார்கள். எதிர்காலத்திலாவது மக்களோடு கலந்துரையாடாமல் மக்களுக்காக அரசியல் நடத்தும் போக்கை நாம் கைவிட வேண்டும். மக்களுக்கு வெளியில் இருந்து மக்களுக்காகப் போராடுவது என்கிற கோட்பாடு ஏற்க்கனவே தோற்றுப்போய்விட்டது. என்கிறதுதான்

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஆரம்பத்தில் நான் கிழக்கு மாகாணத்திலும் பின்னர் வன்னியிலும் பயணம் செய்தேன். சென்ற தேர்தலின்போது கிழக்குமாகானம் வன்னி யாழ் மக்களில் பலருடைய மனநிலையும் போராளிகளின் முடிவுகளும் நேர் எதிராக முரண்பட்டே இருந்தது. மக்கள் இராணுவ மோதல் தீவிரமடையாமல் தவிர்ப்பதை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தார்கள். ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த எங்களையும் விடுதலைப் புலிகளின் அறிஞர்களையும் விட மிகத் தெளிவாக மக்கள் சிந்தித்ததார்கள் என்பது எனக்கு இப்ப நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது.

போர் வெறியரும் பேச்சு வார்த்தைகளை முடக்குவதிலேயே குறியாக இருந்தவருமான ஜனாதிபதி சந்த்ரிகா பண்டார நாயக்கவின் கட்ச்சியைச்சேர்ந்த அவரைவிட தீவிர நிலை எடுத்த மகிந்த ராஜபக்சவுக்கும் பிரதமர் பதவிக் காலத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த மிதவாதியான ரணில் விக்கிரமசிங்காவுக்கும் இடையிலான தேர்தலாகவே மேற்ப்படி தேர்தலைப் பார்த்தனர். இரண்டு வேட்ப்பாளர்களுக்கிடையில் போரை யார் இறுதிப் போராக தீவிரப் படுத்த மாட்டார்கள்? என்கிற கேழ்வி மட்டும்தான் இருந்தது. அவர்கள் எதிரியின் போரையும் போராளிகளின் கட்டாயப் பிள்ளை பிடிப்பு பயணத்தடையையும் தவிர்க்கக் கூடிய ஒரு சூழலை ஏற்படுத்துவதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். யுத்தம் தீவிரமடைந்தால் பேரழிவும் போராளிகளின் தோல்வியும் நிச்சயம் என்பதை அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். அவர்களது முதற்க்கவலையாக ஏற்க்கனவே போராளிகளாக இருக்கும் தங்கள் பிள்ளைகள் பற்றியதாகவும் போர் தீவிரமடைகையில் போராளிகளாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப் படக்கூடிய தங்கள் குஞ்சுகளையும் பற்றியதாக மட்டுமே இருந்ததை நான் தெளிவாக அவதானித்தேன். ஆனால் போராளிகளதும் புலம்பெயர்ந்த ஆர்வலர்களதும் நிலைபாடு மிகத் தீவிரமான கருத்து நிலை வாதமாக இருந்தது. போராளிகளுடன் பேசும்போது அவர்கள் கலத்தில் வாழும் மக்களைவிட புலம் பெயர்ந்தவ தமிழர்களுடந்தான் நெருக்கமாக இருக்கிற ஆபத்தான போக்கை துணிச்சலுடன் சுட்டிக் காட்டினேன். முஸ்லிம் உறவுகள் வெளிவிவகாரம் இராஜதந்திரம் தொடர்பாக மட்டுமன்றி பயணத்தடை வன்னிமக்களை பாதிக்கும் வரிமுறை தொழில்வாய்ப்புகளை மக்களிடமிருந்து போராளிகள் எடுத்துக் கொள்ளுவது என்பவை தொடர்பாகவும் நான் வன்னியில் தீவிரமாகப் போராடியதும் இதனால் அமரர் கஸ்றோ அவர்கள் என்னை அழித்துவிட விரும்பியதும் ஒன்றும் இரகசியமானதல்ல.

இந்தியா ரணில் அமரிக்காவின் கையாள் அவரை ஆதரிக்க வேண்டாம் என்கிற சமிக்ஞைகளை வன்னிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நான் வன்னியில் இருக்கும்போது மகிந்தவின் துதுவர் கிழிநொச்சிக்கு வந்து போனதாக பேச்சிருந்தது. சிலர் பசில் ராஜபக்சவே வந்ததாகச் சொன்னார்கள்.

போ தொடர்பாக மக்கள் தெளிவாக இருந்தார்கள். ஆய்வு கோட்ப்பாட்டு விவாதங்களை அறியாத மக்கள் தீர்க்க தரிசனமாகச் சொன்ன விடயங்கள் எனக்கு இப்பவும் ஆச்சரியம் தருகிறது. புலிகள் கெரிலா தன்மையை இழந்து நேரடி இராணுவமாகி வருவதையும் எதிரி ஆழ ஊடுருவுதல் போன்ற கெரிலா உத்திகலை அதிகரிப்பதையும் அவர்கள் அனுபவ ரீதியாக உணர்திருந்தனர். முன்னம் இரானுவம் காடுகளுக்குள் இறங்க பயப்படும். இப்பா அவர்கள் காடுகளுக்குள் ஊடுருவுகிறார்கள் போராளிகள் இப்ப ராணுவம்போல வீதிகளில் நின்றுகொண்டு காடுகளுக்கு செல்ல தயங்குகிறார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். இனி போர் வந்தால் சிங்களவன் வென்றுவிடுவான் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்ததற்க்கு இராணுவத்தின் அதிகரிக்கும் ஆழ ஊடுருவும் நடவடிக்கைகளும் நேரடி யுத்தத்தில் சிங்களவரின் தொகைக்கு நிகராக முடியாது என்று மக்களில் பலர் கருதினார்கள். இதனால்தான் அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கும் முடிவுக்கு வந்தார்கள். இதனால்தான் போராளிகள் பகிஸ்கரிப்பு என்கிற பெயரில் மக்கள் வாகளிக்கச் செல்வதைத் தடை செய்தார்கள்.

அந்த நாளில் மக்கள் போரையும் தோல்வியையும் எண்ணியும் தங்கள் பிள்ளைகளை பிடிக்கப் போகிற சூழல் உருவாகப்போவதை எண்ணியும் கலங்கியதை நான் பார்த்தேன். மகிந்தவின் வெற்றிச் சேதியை பலர் ஒரு சாவிட்டுச் சேதியைப் போலவே எதிர்கொண்டார்கள்.

மக்கள் சரியா பிழையா என்கிற எனது கேழ்விக்கு காலம் பதில் சொல்லிவிட்டது.

இன்று நான் மக்கள் மதியில் இல்லை எனினும் தமிழகம் வந்துபோகிற தொலைபேசியில் என்னோடு தொடர்புகொள்கிற வேறு வழிகலில் எனக்கு கிடைக்கிற தகவல்களின்படி பாதுகாப்பையும் மீழ்குடியேற்றத்தையும் சமூக பொருளாதார வாழ்வை ஆரம்பிப்பதற்க்கான வளங்ளையும் வெளியயும் space உறுதிப் படுத்துவதுமே அவசர அரசியலாக உள்ளது.

இந்த நிலையில் அவர்கள் மகிந்தவை உதைத்துத் தள்ளுவதன்மூலம் தங்கள் இலக்கை அடையலாம் என்று கருதுகிறார்கள் என்றே தோன்றுகிறது. தீவிரமான போரை சாத்தியமாக்கிய ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக பாராளுமன்ற முறைமைக்கு திரும்புவது மீழ்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம்.

இந்த நிலையில் அவர்கள் தமிழ் வேட்ப்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கும் சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. சென்ற தேர்தல் பகிஸ்கரிப்பு மகிந்தவை வெற்றிபெற வைக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது என்கிற சந்தேகம் மக்களிடம் இருந்தது. ஒரு தமிழ் வேட்ப்பாளர் போட்டியிடுவதையும் அவர்கள் மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் நோக்கமுள்ளதாகவே பார்ப்பார்கள். இத்தகைய நிலையில் அவர்கள் தமிழ் வேட்ப்பாலர்களை ஆதரிப்பதற்க்குப் பதிலாக மகிந்தவுக்கும் ஜனாதிபதி ஆட்ச்சி முறைக்கும் எதிராகவே வாக்களிப்பார்கள். எனவே அரசியல் ரீதியாக மட்டுமன்றி ஈழக் கோரிக்கைக்கான மக்கள் ஆனை பெறும் அடிப்படையிலும் தனித்துப் போட்டி இடுவது வரலாற்றுத் தவறாக அமைந்து விடலாம்.

சமிபாட்டுக் குறைபாட்டால் அவதிப்படுகிற நாங்கள் உயிர் ஆபத்துக்கலுக்கு மத்தியில் பசியும் பிணியுமாக முகாம்களிலும் வெளியிலும் நொந்து நூலாகிப்போய்க் கிடக்கும் எங்கள் மக்கள்மீது சந்தேகம் கொள்வதற்க்கு எந்த முகாந்திரமுமில்லை. போராட்டம் போராட்டம் என்கிற எங்கள் குரல்களைவிட வாழ்க்கையும் போராட்டமும் என்கிற எமது மக்களின் குரல் வலியதாகும்

Edited by poet

நன்றி பொயட். ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை வாசித்த பலரின் கட்டுரைகளுக்குள் நியாயமானதும்,உண்மையானதும்

உங்கள் கட்டுரைதான். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர் எத்தனை பேர் இந்த மனநிலையில் அல்லது அதை விளங்கிக்கொள்ளும் நிலையில் உள்ளார்கள் என்றால் கேள்விக்குறிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவின் அதிபர் தேர்த்தல் என்பது வல்லாதிக்கஅரசுகளில் போட்டிக்களம். இதனை தமிழமக்கள் எவ்வாறு கையாள்வது என்பதை புலத்தில் உள்ள அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் நாம் சொல்ல என்ன இருக்கின்றது. ஆனால் புலத்தின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சிங்களவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தம்மை யாh என தமிழ்மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள் முதலில் இவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும். வெளிநாட்டிலிருந்து புலத்து மக்களை விமர்சனம் செய்பவர்கள் ஒருக்கால் குடும்பத்துடன் அங்கு போய் களநிலையை பார்க்கவும். அப்போது தான் உங்களுக்கும் பிறந்தமண்ணின் மீதான பாசம் நிரந்தரமாகும்.

சமிபாட்டுக் குறைபாட்டால் அவதிப்படுகிற நாங்கள் உயிர் ஆபத்துக்கலுக்கு மத்தியில் பசியும் பிணியுமாக முகாம்களிலும் வெளியிலும் நொந்து நூலாகிப்போய்க் கிடக்கும் எங்கள் மக்கள்மீது சந்தேகம் கொள்வதற்க்கு எந்த முகாந்திரமுமில்லை. போராட்டம் போராட்டம் என்கிற எங்கள் குரல்களைவிட வாழ்க்கையும் போராட்டமும் என்கிற எமது மக்களின் குரல் வலியதாகும்

உங்களின் சில கருத்துகள் தொடர்பாக எனக்கு வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும் (முக்கியமாக தமிழர் ஒருவர் தேர்தலில் நிற்பது தொடர்பானதும், மகிந்தவை விட சரத்தின் வெற்றி மேலும் துயரம் தரும் என்பதை உணர்வதாலும்) உங்களின் கருத்துகள் சரியாக இருக்கின்றன பொயட். முக்கியமாக கடைசி வரிகள் எமக்கானதும், ஈழத்தில் இருக்கின்ற மக்களினதுக்குமான இடைவெளியை காத்திரமாக உணர்த்துகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலுக்கு பின்னர் நடந்த யாழ் வவுனியா நகரசபைத் தேர்தல்களை மக்கள் ஏக் புறக்கணித்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை?ஏனென்றால் தடுப்பதற்கு புலிகளும் இல்லை.யார் மீது குற்றம் சுமத்தலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கட்டுரை எடிற் பண்ண முடியவில்லை 1897 என்பதை 1987 என மாற்றுக. விடை பெறுகிறேன் தோழ தோழியர்களே.

வணக்கம்.

கவிஞர் அவர்களே.

90 இற்கு முன்பே நோர்வேக்கு சென்று சேர்ந்து விட்டீர்கள்.

நோர்வேஜிய கொள்கை வகுப்பாளர் மட்டத்தில்.

தமிழர், ஈழத்தமிழர்விடுதலைப்போராட்டம், விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்துருவாக்கத்திற்கு.

உங்களைப் போன்றோரின் கருத்துக்கள் திடமான அடித்தளத்தை இட்டிருக்கும். எம்மினத்தின் பலம் பலவீனம் எல்லாவற்றையும், உங்களைப் போன்ற முன்னோடிகளின் ஊடாகத்தான் சர்வதேசசமூகம், அறிந்து கொண்டது.

எமது விடுதலைப்போராட்டம் சிதைக்கப் பட்டதற்குக் களத்தில் இருந்த பல துறைசார் பொறுப்பாளர்களை இலகுவாக குற்றம் சாட்டி விட்டு, தப்பிப்பது எல்லோருக்கும் மிக இலகுவாக இருக்கின்றது. புலத்தில் எமக்கு அருகில் இருந்து செயற்பட்ட முறையை யாரும் விமர்சிப்பதாகத் தெரியவில்லை. சர்வதேசத்தால் எமது விடுதலைப்போராட்டம் நாசமாக்கப் பட்டுள்ளது. நமக்கு அருகில் இருந்தவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைக் கண்டுகொள்ளாது, மிக இலகுவாக அணிகள் என்ற சொல்லாடலைப்பாவிக்கின்றீர்கள். நீங்கள் உண்மையாக விமர்சனங்களை முன்வைப்பவராக இருந்தால், புலத்தில் எப்படி அணிகள் உருவாகியது என்ற உண்மையை விமர்சனங்களை முன்வைக்கலாமே!

தமிழ்க் கவிஞரது கவனத்துக்கு....

ஜனாதிபதித் தேர்தலில் ஈழத்தில் வாடும் மக்கள் என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மிகவும் நேர்த்தியாக எழுதப் பட்ட கட்டுரைகள் பல தினம் தினம் எங்கலைப் போன்ற புலம் பெயர்ந்தவர்களால் எழுதப் படுகிறது. எனினும் நெருக்கடிக்குள் அன்ராட வாழ்வுக்கே அல்லாடும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாமல் அவர்களுக்கு போதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் புலம் பெயர்ந்து குடும்பங்களோடு பாதுகாப்பாக இருக்கும் எங்களுக்கு மக்களின் அவசரப் பிரச்சினைகளையும் முன்னுரிமை அட்டவணைகளையும் கற்பனையில் உணர்ந்து கொள்ளுதல் இயலாது. காலிக் கோப்பைகளுடன் தொடர்ந்து கண்ணீரும் சென்னீரும் வடிக்கும் மக்கள் தொலைபேசியிலும் கடிதங்களில் அழுத்திச் சொல்லும் விடயங்களுக்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் பியர் கிண்ணங்களுடன் தீப்பொறி பறக்க நாங்கள் விவாதிக்கும் விடயங்களுக்கும் இடையில் அடிப்படையில் அதிக சம்பந்தங்கள் இல்லை. இது துர் அதிஸ்ட்ட வசமானது. பல விடயங்களில் மக்கள் இலகுவாக முடிவெடுக்கக்கூடிய அனுபவத்தோடு இருக்கிறார்கள். குறுங்கால அடிப்படையில் அவர்கள் 100 விழுக்காடு சரியாக சிந்திக்கிறார்கள். அதை நாங்கள் ஆதரிக்க வேணும். நீண்டகால அடிப்படையில் சரியான முடிவுகளை கண்டடைய மட்டும் அவர்களுக்கு எங்கள் ஆலோசனையும் ஆதரவும் தேவைப் படுகிறது. மக்களிடம் கற்றுக்கொண்டு மக்களுடன் கலந்துரையாடுவதன் மூலமாக மக்களுக்கும் கற்றுக் கொடுக்கிற உறவை இனியாவது நாம் உருவாக்க வேணும். போராளிகளின் தவறுகள் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எமது மக்கள் இனக்கொலை ஆபத்தை எதிர்கொண்டபோது மக்கலைக் காக்க மேற்க்கு நாடுகளின் ஆதரவை வென்றெடுப்பதா அல்து மேற்க்கு நாடுகளுக்குச் சவால் விடும் வகையில் அவர்களால் தடை செய்யப்பட்ட சின்னங்களுடன் வீதியில் இறங்குவதா எது அவசியம் என்று மக்களைக் கேட்டிருந்தால் அவர்கள் மிகச் சரியான பதிலை சொல்லியிருப்பார்கள். எதிர்காலத்திலாவது மக்களோடு கலந்துரையாடாமல் மக்களுக்காக அரசியல் நடத்தும் போக்கை நாம் கைவிட வேண்டும். மக்களுக்கு வெளியில் இருந்து மக்களுக்காகப் போராடுவது என்கிற கோட்பாடு ஏற்க்கனவே தோற்றுப்போய்விட்டது. என்கிறதுதான்

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஆரம்பத்தில் நான் கிழக்கு மாகாணத்திலும் பின்னர் வன்னியிலும் பயணம் செய்தேன். சென்ற தேர்தலின்போது கிழக்குமாகானம் வன்னி யாழ் மக்களில் பலருடைய மனநிலையும் போராளிகளின் முடிவுகளும் நேர் எதிராக முரண்பட்டே இருந்தது. மக்கள் இராணுவ மோதல் தீவிரமடையாமல் தவிர்ப்பதை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தார்கள். ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த எங்களையும் விடுதலைப் புலிகளின் அறிஞர்களையும் விட மிகத் தெளிவாக மக்கள் சிந்தித்ததார்கள் என்பது எனக்கு இப்ப நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது.

போர் வெறியரும் பேச்சு வார்த்தைகளை முடக்குவதிலேயே குறியாக இருந்தவருமான ஜனாதிபதி சந்த்ரிகா பண்டார நாயக்கவின் கட்ச்சியைச்சேர்ந்த அவரைவிட தீவிர நிலை எடுத்த மகிந்த ராஜபக்சவுக்கும் பிரதமர் பதவிக் காலத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த மிதவாதியான ரணில் விக்கிரமசிங்காவுக்கும் இடையிலான தேர்தலாகவே மேற்ப்படி தேர்தலைப் பார்த்தனர். இரண்டு வேட்ப்பாளர்களுக்கிடையில் போரை யார் இறுதிப் போராக தீவிரப் படுத்த மாட்டார்கள்? என்கிற கேழ்வி மட்டும்தான் இருந்தது. அவர்கள் எதிரியின் போரையும் போராளிகளின் கட்டாயப் பிள்ளை பிடிப்பு பயணத்தடையையும் தவிர்க்கக் கூடிய ஒரு சூழலை ஏற்படுத்துவதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். யுத்தம் தீவிரமடைந்தால் பேரழிவும் போராளிகளின் தோல்வியும் நிச்சயம் என்பதை அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். அவர்களது முதற்க்கவலையாக ஏற்க்கனவே போராளிகளாக இருக்கும் தங்கள் பிள்ளைகள் பற்றியதாகவும் போர் தீவிரமடைகையில் போராளிகளாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப் படக்கூடிய தங்கள் குஞ்சுகளையும் பற்றியதாக மட்டுமே இருந்ததை நான் தெளிவாக அவதானித்தேன். ஆனால் போராளிகளதும் புலம்பெயர்ந்த ஆர்வலர்களதும் நிலைபாடு மிகத் தீவிரமான கருத்து நிலை வாதமாக இருந்தது. போராளிகளுடன் பேசும்போது அவர்கள் கத்தில் வாழும் மக்களைவிட புலம் பெயர்ந்தவ தமிழர்களுடந்தான் நெருக்கமாக இருக்கிற ஆபத்தான போக்கை துணிச்சலுடன் சுட்டிக் காட்டினேன். முஸ்லிம் உறவுகள் வெளிவிவகாரம் இராஜதந்திரம் தொடர்பாக மட்டுமன்றி பயணத்தடை வன்னிமக்களை பாதிக்கும் வரிமுறை தொழில்வாய்ப்புகளை மக்களிடமிருந்து போராளிகள் எடுத்துக் கொள்ளுவது என்பவை தொடர்பாகவும் நான் வன்னியில் தீவிரமாகப் போராடியதும் இதனால் அமரர் கஸ்றோ அவர்கள் என்னை அழித்துவிட விரும்பியதும் ஒன்றும் இரகசியமானதல்ல.

இந்தியா ரணில் அமரிக்காவின் கையாள் அவரை ஆதரிக்க வேண்டாம் என்கிற சமிக்ஞைகளை வன்னிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நான் வன்னியில் இருக்கும்போது மகிந்தவின் துதுவர் கிழிநொச்சிக்கு வந்து போனதாக பேச்சிருந்தது. சிலர் பசில் ராஜபக்சவே வந்ததாகச் சொன்னார்கள்.

போ தொடர்பாக மக்கள் தெளிவாக இருந்தார்கள். ஆய்வு கோட்ப்பாட்டு விவாதங்களை அறியாத மக்கள் தீர்க்க தரிசனமாகச் சொன்ன விடயங்கள் எனக்கு இப்பவும் ஆச்சரியம் தருகிறது. புலிகள் கெரிலா தன்மையை இழந்து நேரடி இராணுவமாகி வருவதையும் எதிரி ஆழ ஊடுருவுதல் போன்ற கெரிலா உத்திகலை அதிகரிப்பதையும் அவர்கள் அனுபவ ரீதியாக உணர்திருந்தனர். முன்னம் இரானுவம் காடுகளுக்குள் இறங்க பயப்படும். இப்பா அவர்கள் காடுகளுக்குள் ஊடுருவுகிறார்கள் போராளிகள் இப்ப ராணுவம்போல வீதிகளில் நின்றுகொண்டு காடுகளுக்கு செல்ல தயங்குகிறார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். இனி போர் வந்தால் சிங்களவன் வென்றுவிடுவான் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்ததற்க்கு இராணுவத்தின் அதிகரிக்கும் ஆழ ஊடுருவும் நடவடிக்கைகளும் நேரடி யுத்தத்தில் சிங்களவரின் தொகைக்கு நிகராக முடியாது என்று மக்களில் பலர் கருதினார்கள். இதனால்தான் அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கும் முடிவுக்கு வந்தார்கள். இதனால்தான் போராளிகள் பகிஸ்கரிப்பு என்கிற பெயரில் மக்கள் வாகளிக்கச் செல்வதைத் தடை செய்தார்கள்.

அந்த நாளில் மக்கள் போரையும் தோல்வியையும் எண்ணியும் தங்கள் பிள்ளைகளை பிடிக்கப் போகிற சூழல் உருவாகப்போவதை எண்ணியும் கலங்கியதை நான் பார்த்தேன். மகிந்தவின் வெற்றிச் சேதியை பலர் ஒரு சாவிட்டுச் சேதியைப் போலவே எதிர்கொண்டார்கள்.

மக்கள் சரியா பிழையா என்கிற எனது கேழ்விக்கு காலம் பதில் சொல்லிவிட்டது.

இன்று நான் மக்கள் மதியில் இல்லை எனினும் தமிழகம் வந்துபோகிற தொலைபேசியில் என்னோடு தொடர்புகொள்கிற வேறு வழிகலில் எனக்கு கிடைக்கிற தகவல்களின்படி பாதுகாப்பையும் மீழ்குடியேற்றத்தையும் சமூக பொருளாதார வாழ்வை ஆரம்பிப்பதற்க்கான வளங்ளையும் வெளியயும் space உறுதிப் படுத்துவதுமே அவசர அரசியலாக உள்ளது.

இந்த நிலையில் அவர்கள் மகிந்தவை உதைத்துத் தள்ளுவதன்மூலம் தங்கள் இலக்கை அடையலாம் என்று கருதுகிறார்கள் என்றே தோன்றுகிறது. தீவிரமான போரை சாத்தியமாக்கிய ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக பாராளுமன்ற முறைமைக்கு திரும்புவது மீழ்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம்.

இந்த நிலையில் அவர்கள் தமிழ் வேட்ப்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கும் சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. சென்ற தேர்தல் பகிஸ்கரிப்பு மகிந்தவை வெற்றிபெற வைக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது என்கிற சந்தேகம் மக்களிடம் இருந்தது. ஒரு தமிழ் வேட்ப்பாளர் போட்டியிடுவதையும் அவர்கள் மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் நோக்கமுள்ளதாகவே பார்ப்பார்கள். இத்தகைய நிலையில் அவர்கள் தமிழ் வேட்ப்பாலர்களை ஆதரிப்பதற்க்குப் பதிலாக மகிந்தவுக்கும் ஜனாதிபதி ஆட்ச்சி முறைக்கும் எதிராகவே வாக்களிப்பார்கள். எனவே அரசியல் ரீதியாக மட்டுமன்றி ஈழக் கோரிக்கைக்கான மக்கள் ஆனை பெறும் அடிப்படையிலும் தனித்துப் போட்டி இடுவது வரலாற்றுத் தவறாக அமைந்து விடலாம்.

சமிபாட்டுக் குறைபாட்டால் அவதிப்படுகிற நாங்கள் உயிர் ஆபத்துக்கலுக்கு மத்தியில் பசியும் பிணியுமாக முகாம்களிலும் வெளியிலும் நொந்து நூலாகிப்போய்க் கிடக்கும் எங்கள் மக்கள்மீது சந்தேகம் கொள்வதற்க்கு எந்த முகாந்திரமுமில்லை. போராட்டம் போராட்டம் என்கிற எங்கள் குரல்களைவிட வாழ்க்கையும் போராட்டமும் என்கிற எமது மக்களின் குரல் வலியதாகும்

  • கருத்துக்கள உறவுகள்

பரதன் எழுதியவற்றைக் கவிஞர் கவனிக்க வேண்டுகிறேன்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு அட்டை இல்லாமலே புலத்தில் இருந்துகொண்டு யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று விவாதிப்பபர்கள் நம்மவர்கள். தாயக மக்களின் விருப்பங்களுக்கும் புலம்பெயர் மக்களின் விருப்பங்களுக்கும் அதிக இடைவெளி உண்டு. வாக்கு அட்டை உள்ள மக்கள் தமது சொந்தப் புத்தியில் முடிவைத் தெளிவாக எடுப்பார்கள். அது வாக்குச் சாவடிக்குப் போகாமல் இருப்பதாகவும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.