Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை அதுவே தமிழர்களது நிலைப்பாடு: சம்பந்தன் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே தமது கொள்கையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் 60 ஆண்டு நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் தமிழர்களது நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார். அவ்வுரையின் முக்கிய பகுதிகள் பகுதி வருமாறு:

தமிழ்பேசும் மக்கள் அதாவது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இரு மாகாணங்களும் ஒன்றிணைக்கப்பட்டு அதிகாரபகிர்வாக ஒரு நிர்வாக அலகு இருக்கவேண்டும் என்ற கருத்து இருந்தது.

தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு

1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தமிழர் ஐக்கிய முன்னனி 13 வது அரசியல் சாசனத்தை முழுமையாக நிராகரித்தது. அதற்கு பின்னர் அப்போதைய அரச தலைவர் பிரேமதாச 1993 ஆம் ஆண்டு மங்கள முனசிங்க தெரிவுக்குழுவால் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்த ஆவணத்தின்படி இலங்கையில் மாகாணங்களுக்கு இந்திய மாநிலங்களில் உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அதேவிதமான அதிகாரங்கள் கொடுக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. காணி காவல்துறை அதிகாரங்கள் வரும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் அரச தலைவராகவிருந்த சந்திரிகா குமாரதுங்க காலத்தில் 1995 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலும் 2000 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் பிரேமதாச கொண்டுவந்த பிரேரணைகளுக்கு பதிலாக அமைந்தன.

1998 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசமைப்புக்கு அப்பால் சென்றது. அது சிறந்த பிரேரணையாக இருந்தது. அதன்பின்னர் 2002 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஒஸ்லோ பிரகடனம் வெளியிடப்பட்டது. ஒஸ்லோ பிரகடனம் என்னவென்றால் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் ஒருமித்த நாட்டுக்குள் ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் ஆராயப்படும் என்பதாகும்.

அதன்பிறகு தற்போதைய அரசதலைவரின் ஆட்சிகாலத்தில் 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் பெரும்பான்மையான நிபுணர் குழுவால் தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனபலட நியாயமான நடைமுறைப்படுத்தகூடிய நிறைவேற்றகூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்தகூடிய வகையில் அந்த சிபார்சுகள் அமையவில்லை.

பிரேமதாசா காலத்தில் சந்திரிகா காலத்தில் ரணில் காலத்தில் மகிந்த ராஜபக்ச காலத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.

அதற்கு பதிலாக நடைமுறைப்படுத்த கூடிய நிலை நிறுத்தகூடிய ஓர் அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதை இம்முயற்சிகள் எடுத்துகாட்டின.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 23 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டனர்.

துரதிஸ்டவசமாக மகிந்தவின் காலத்தில் தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சிகள் பின்னோக்கி சென்றன. சர்வ கட்சி மாநாடு அமைத்து தான் விரும்பியி கட்சிகளுடன் மாத்திரம் மகிந்த பேச்சுக்கள் நடத்தினார். ஒரு தீர்வும் காணப்படவுமில்லை. 18 வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை துண்டித்தார்கள்.

நாடாளுமன்றத்தின் சாதாரண சட்டங்கள் மூலமே வடக்கு கிழக்கை இணைக்கலாம் என நீதிமன்றம் கூறியபோதும் அதனை செய்வதற்கு மகிந்த தயாராகவிருக்கவில்லை.

மன்மோகன் சிங்கை சந்தித்து இதுபற்றி முறையிட்டபோது வடக்கு கிழக்கை பிரிக்கவிடமாட்டோம் என உறுதிமொழி தரப்பட்டது. ஆனால் மகிந்த தான் நினைத்ததை செய்துமுடித்துவிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு

எம்மை பொறுத்தவரையில் தமிழ் தேசிய பிரச்சனைக்கு பின்வரும் இரண்டு விடயங்களின் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும். ஒன்று தமிழ் மக்கள் தேசிய இனம் மற்றையது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வடக்கு கிழக்கு பகுதியல் வாழ்ந்துவருகின்றார்கள். எனவே எமது மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.

ஐநாவின் சாசனங்களில் சமூக பொருளாதார கலாசார விழுமியங்கள் சம்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத்தில் இவை அடங்கியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு இந்த உரிமைகள் உண்டு. சொந்த மண் உண்டு. சொந்த கலாசாரம் உண்டு. சொந்த பாரம்பரியம் உண்டு. சகலதையும் அடைவதற்கு உரித்து உண்டு. இதை எவரும் மறுக்கமுடியாது.

இதை அடைவதற்கு சர்வதேச சட்டங்களின் முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு. இதுவே தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் அரசியல் தீர்வாக இருக்கும்.

எதிர்வரும் அரச தலைவர் ஊடாகவும் அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஊடாகவும் அதற்கான வழிகள் பிறக்கலாம்.

மகிந்தவின் ஆட்சி என்ன செய்கின்றது

எதிர்வரவுள்ள அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான முடிவு அனைவருடனும் ஆலோசித்து அவர்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே எடுக்கப்பட்டது.

மகிந்தவுடன் மூன்று மணித்தியாலங்கள் பேச்சு நடத்தினேன். வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீளகுடியேற அனுமதிக்குமாறு அவரிடம் கேட்டேன். வலி-வடக்கில் இடம்பெயர்ந்தவர்கள் இருபது வருடங்களாக தமது இருப்பிடங்களுக்கு செல்லமுடியாதாவாறு தடுக்கப்பட்டுள்ளனர்.

மீளக்குடியமர்வை அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் ஆரம்பித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றுமாறு கேட்டார். ஆனால் இரண்டு தேர்தல்களும் முடிவடைந்தபின்னர் படிப்படியாக அவற்றை செய்வதாக மகிந்த கூறினார்.

இராணுவ குடியேற்றம் பற்றியும் இராணுவ மயமாக்கல்கள் பற்றியும் கேட்டேன். ஏ-9 வீதியின் இரண்டு பக்கத்திலும் காணி அபகரிப்பு நடந்துகொண்டிருக்கிறது. காவல்துறை நிலையத்திற்கு 50 ஏக்கர் காணி எனவும் இராணுவ முகாமுக்கு 500 ஏக்கர் காணி எனவும் அபகரிக்கப்படுகிறது. காவல்துறை நிலையம் அமைக்க இரண்டு ஏக்கர் போதாதா?

இறுதியாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தபோது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவையா ஆதரிக்க போகின்றீர்கள் என கேட்டார். நீங்கள் தானே எமக்கு வழிகாட்டினீர்கள். வடக்கு மாகாண ஆளுனர் இராணுவ தளபதியாக இருந்தவர். கிழக்கு மாகாண ஆளுனர் கடற்படை தளபதியாக இருந்தவர் என திரும்பி அவரிடம கேட்டேன்.

புலத்து தமிழர்களின் பங்களிப்பு

புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் எமது உரிமை போராட்டத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். போரின் ஒரு கட்டத்தில் பெரும் உதவிகளை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். முன்னர் செய்த அதே உதவிகளை எங்கள் மக்களின் புனர்வாழ்வு கட்டமைப்பு சம்பந்தமாக உதவிகளும் அந்த அளவுக்கு இருக்கவேண்டும் என அவர்களிடம் கேட்டுள்ளேன். அதனை நிச்சயம் செய்வோம் என கூறியுள்ளனர்.

பண உதவி மட்டுமல்ல நிபுணத்துவ உதவியும் ஆலோசனைகளும் எமக்கு வேண்டும் என தெரிவித்துள்ளோம். அவர்கள் அதனை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.

அனைவரது பங்களிப்புடன் எமது மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் உழைப்போம்.

- என்று அவர் உரையாற்றினார்.

http://www.nerudal.com

இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

- தினக்குரல் - தை 11, 2010

யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தமிழ் மக்கள் தொடர்பாகவும் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் இந்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினை தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்தீர்மானங்கள் வருமாறு;

1. பொருளாதார தீர்மானம்

கடந்த முப்பது ஆண்டு காலமாக இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக சிதைந்து, சின்னாபின்னப்பட்டு, சீரழிந்து நிற்கும் வடக்குகிழக்கு பிரதேச உட்கட்டுமானங்களை மீள்வித்து;

வாழ்வாதாரங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும், வன்னி மக்கள் உள்ளிட்ட சகல மக்களது வாழ்வாதாரங்களை மீள்வித்து;

எமது பிரதேசத்து உற்பத்தி வளங்களை இனங்கண்டு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு;

எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பு உருவாக்குதலுக்கும் உழைத்தலுக்கும் இந்த செயற்பாடுகளைத் திட்டமிடவும் அமுலாக்கவும் கண்காணிக்கவும் கூடிய நிபுணத்துவ தகமை பெற்றவர்களின் சேவைகளை அணிதிரட்டி நடவடிக்கை எடுக்கவும்;

உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டார்களை ஊக்குவித்து தொழில்துறை மேம்பாட்டிற்காக உழைக்கவும், இழந்தவற்றை மீள்வித்து அபிவிருத்திப் பாதையில் முன் செல்லவும் அவற்றிக்காக அரசசார்பற்ற நிறுவனங்களதும் சர்வதேச சமூகத்தினதும் ஒத்துழைப்பைப் பெறவும் காத்திரமான நடவடிக்கைகளை இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொள்ள வேண்டும் என இச்சபை தீர்மானிக்கிறது.

2. அரசியல் பிரேரணை

தமிழ்த் தேசிய இனத்தின் நியாயபூர்வமான அபிலாசைகளை உள்வாங்கிக் கொள்ளும் அரசியல் யாப்பு இந்நாடு சுதந்திரமடைந்த காலத்திலோ அன்றிப் பின்னரோ நடைமுறையில் இருக்கவில்லை. இதனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே இற்றை வரை நிலவுகிறது. மாறிமாறி வந்த அரசுகள் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் பற்றிப் பிரஸ்தாபித்தது மட்டுமன்றித் தமிழ்த் தரப்புடன் ஒப்பந்தங்களையும் செய்து கொண்டாலும்கூட இவை யாவும் செயல் வடிவம் பெறவில்லை.

இதனால் தமிழர் தரப்பின் அரசியல் போராட்டம் சாத்வீக ரீதியிலும் ஆயுதப்போராட்ட ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்த இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகிறது. இத்தகைய தீர்வும் தமிழ் மக்கள் காலாகாலமாக முன்வைத்த தமது அபிலாசைகளான தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையில், எம் மக்களிடமுள்ள இறைமை அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் இருத்தல் வேண்டும் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சி வற்புறுத்துகிறது.

3. உயர் பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்பட வேண்டும். இரு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் தேசிய இன மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படாமையால் ஏற்பட்டிருந்த போராட்டங்களினாலும் ஆயுதப் போரினாலும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டு இடம்பெயர்ந்து, அகதிகளாய் அலைகின்றனர்.

தமிழர் தாயகப் பிரதேசங்கள், கடல் பிரதேசங்கள் அரச இராணுவப் படைகளினால் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்து விட்டதாக அரசு அறிவித்துவிட்டது.

எனவே உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக நீக்கப்பட்டு மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும்.

அந்த மக்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கி வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும்.

ஐ.நா. அகதிகள் புனரமைப்பு, மீள் குடியேற்றங்களுக்கான பிரகடனங்களும் தரமும் மீள்குடியேற்ற நடைமுறைகளில் பின்பற்றப்பட வேண்டும்.

மீள் குடியேற்றப்படும் போது உடன் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபா குடும்பமொன்றிற்கு வழங்க வேண்டும் என்றும் தங்கள் வீடுகள், உடைமைகள், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும், உயிர் இழந்தோர், அங்கவீனமானோர், விதவைகளானோர், நோய்வாய்ப்பட்டுள்ளோர்களுக்கும் நட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தகுந்த நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு அரசை வற்புறுத்துகிறது. சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது.

4. தமிழர் தாயகப் பிரதேசத்திலிருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய ஆயுதப் படைமுகாம்களும் ஆயுதப்படையினரும் விலக்கப்பட்டு தமிழர் தாயக மக்கள் சுதந்திரமான நடமாட்டம் அரசு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

5. இலங்கையில் குறிப்பாக ஜனநாயக அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், மக்கள் உயிர் வாழும் உரிமை பாதுகாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

6. அரசியல் காரணங்களுக்காவும் காட்டிகொடுப்புகளினாலும் வெறும் சந்தேகத்தினாலும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவும கூட விசாரணையின்றி தடுப்புக் காவலிலுள்ள சிறைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்கிறது இம்மாநாடு.

7. போர் முடிவுற்ற நிலையில் அரசிடம் சரணடைந்த 12,000 க்கும் அதிகமான இளைஞர்களின் பெயர் விபரங்களை உடன் பகிரங்கப்படுத்தபட வேண்டுமென்றும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்பதுடன் அவர்கள் புனர்வாழ்வுக்காகவும் புதிய வாழ்க்கையின் பொருட்டும் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு வற்புறுத்துகிறது.

8. போரில் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென்பதுடன், அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் போதிய நட்டஈடு வழங்கப்படுதலும் வேண்டும் எனவும் அழிக்கப்பட்ட மக்களின் உடைமைகள் மதிப்பிடப்பட்டு அவற்றிற்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்றும் இம் மாநாடு வற்புறுத்துகிறது.

9. தமிழர் தாயகப் பிரதேசங்களில் இந்துக் கோவில்கள் சூறையாடப்பட்டு பௌத்த சின்னங்கள் நிலைநாட்டப்படும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாலும் தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் மொழி, கலை, கலாசாரங்கள் சீர்குலைக்கப்பட்டுத் தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் பௌத்த சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாலும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெரும் நிலப்பரப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஆயுதப் படைகளின் கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாலும் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மைத்துவம் வீழ்த்தப்பட்டும், பலவீனப்படுத்தப்படும் வகையில் பிரதேச மற்றும் இனக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் அரசின் நேரடியான மறைமுகமான இத்தகைய நிகழ்ச்சித் திட்டத்தை உடன் தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

10. இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்குறித்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் தேவைப்பட்டால் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானங்களின் அடிப்படையிலும் கொள்கை அடிப்படையிலும் அணிதிரளக்கூடிய தமிழ்,முஸ்லிம் மக்களின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டுமென்றும் புலம்பெயர்ந்த தமிழர் தாயக மக்களின் அமைப்புகளையும் கூட்டிணைக்க வேண்டுவதுடன், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் நாடுகளிடமும் ஐ.நா. அமைப்புகளிலும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினைத் திரட்டுவதற்குப் பொருத்தமான தக்க நிபுணத்துவம்,ஆற்றல், அனுபவம் மிக்கவர்களையும் ஈர்த்துத் தமிழ் பேசும் மக்களின் விடிவையும் விடுதலையையும் ஈட்டுவதற்கு உறுதிபூண வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

11. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த ஆறுமாத காலத்துள் மேற்குறித்த தீர்மானங்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதுடன், தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்குமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் எதிர்கால அரசை வற்புறுத்துகின்றது இம்மாநாடு.

அவ்வாறு குறித்த காலத்துள் தீர்வுகள் எட்டப்படாதுவிட்டால் சிறப்புத் தேசிய மாநாட்டைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென்பதுடன், அவ் இலக்குகளை அடைவதற்கு மக்களை அணிதிரட்டும் பொருட்டு ஜனநாயக மற்றும் சாத்வீக வழி முறைகளில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

12. போரினால் பேரவலத்தில் வீழ்ந்து கிடக்கின்ற தமிழ் பேசும் மக்களினதும் தாயகப் பிரதேசங்களிலும் பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்கவும் விருத்தி செய்யவும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டவேண்டுமென்றும் சம கல்வி,சம வேலைவாய்ப்பு எனும் திட்டங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் பொருத்தமான நிபுணத்துவத்தை ஈர்க்க வேண்டுமென்பதுடன், மனிதவளம்,ஆற்றல்,கடின உழைப்பு மிகுந்துள்ள எம் மக்களிடம் வேலைவாய்ப்பினை உருவாக்கவும் தொழில்நுட்பத்தைப் பெருக்கவும் பொருத்தமான சிறு மற்றும் பெருந்தொழில்களைத் தமிழ் பேசும் மக்களின் பிரதேசத்தில் உருவாக்குவதற்கும் தேசிய மட்டத்தில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

ஈழத்து தமிழர் காதில் அய்யாமார் தேசியம்,தாயகம் மற்றும் சுயநிர்ணயம் எண்டு அழகான பூ சுற்றல்.அதேவேளை,அரசியல் தொழிலை நடத்த இந்தியா பற்றி புகழாரம் ஒருபுறம்.

வட-கிழக்கை பிரித்ததற்கே வாய் திறவாத,பகிரங்கமாக கருத்துகூட சொல்லவக்கில்லாத இந்திய தேசம்,தமிழருக்கு உரிமை பெற்றுத் தரும் என்று றீல் வேறு.

எல்லாம் எங்களை பிடித்த முடசனி....

டக்கிளஸ், கருணா, பிள்ளையான், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் எண்டு இருக்கும் பட்டியலில் சிங்களவனுக்கு குடை பிடிச்சு கொண்டு தமிழர் நல்வாழ்வு எண்டு கதை விடும் கூட்டம் பெருகி கொண்டுதான் இருக்கு...

இப்ப சரத்துக்கு காவடி எடுக்கிறதை தமிழர் தேசியம் எண்ட பெயருக்கை கொண்டு வந்து விதைக்கினம்.... இதை சொல்லுறவைக்கு ஒரு நம்பிக்கை என்ன எண்டா தமிழன் எண்டா மடையர்கள் எண்டு..

நாளைக்கு சரத் பதவிக்கு வந்தால் இலங்கை அரசில் அமைச்சு பதவிகளிலும் போய் உக்கார்ந்து கொள்வார்கள் இந்த தேசிய வாதிகள்... சரத் செய்த கொலைகளுக்கும் இரண்டகங்களும் இண்டுவரைக்கும் கொஞ்சம் அல்ல... இதை மௌனமாக அங்கீகரிக்கிறார்கள் இவர்கள்... இதையே கருணாவும் , டக்கிளசும் செய்தால் தூரோகி எண்டுவினம்...

Edited by தயா

mentalproblems.gifambulancehitsman.gif

Edited by Nellaiyan

funny-pictures-15-cents-stop.jpg

கொஞ்சுறது கூட்டமைப்பு.... கடிக்கிறது... ???

Edited by தயா

xray5.gif
fn.CLUDK.jpg

என்ர அய்யோ... :(

  • கருத்துக்கள உறவுகள்

என்ர அய்யோ... :(

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே..

அதற்கு என்றே சிலர் இங்கு........

... இங்கு தமிழ்த்தேசியம்/தமிழ்த்தேசியவாதிகள் எனும் பெயரில் பலர் .... நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ... சிங்களத்துக்கும், ஒட்டும்/ஒட்டில்லா குழுக்களுக்கும் உதவிக்கொண்டிருக்கிறார்கள்!!! ... இவர்களுடைய புலத்து அரசியலும், கட்டும் துரோகிப்பட்டங்களும் ... இலங்கையில் இருக்கும் ஒட்டும்/ஒட்டில்லா குழுக்களையும்தான் பலப்படுத்துகின்றன!!! அதைவிட அங்கிருந்து செய்யக்கூடியவைகளை செய்வோரையும் துரத்தி அடித்து அக்குழுக்களில் சேர்க்கிறார்கள்!!!

.... தானும் படுக்காது, தள்ளியும் படுக்காது ... என்ற நிலையில்தான் இவர்கள்!!! ... இவர்கள் ஒன்றும் செய்யவும் போவதில்லை செய்தாலும் செய்பவைகளும் எடுபடப்போவதுமில்லை!!!!

... இங்கு தமிழ்த்தேசியம்/தமிழ்த்தேசியவாதிகள் எனும் பெயரில் பலர் .... நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ... சிங்களத்துக்கும், ஒட்டும்/ஒட்டில்லா குழுக்களுக்கும் உதவிக்கொண்டிருக்கிறார்கள்!!! ... இவர்களுடைய புலத்து அரசியலும், கட்டும் துரோகிப்பட்டங்களும் ... இலங்கையில் இருக்கும் ஒட்டும்/ஒட்டில்லா குழுக்களையும்தான் பலப்படுத்துகின்றன!!! அதைவிட அங்கிருந்து செய்யக்கூடியவைகளை செய்வோரையும் துரத்தி அடித்து அக்குழுக்களில் சேர்க்கிறார்கள்!!!

.... தானும் படுக்காது, தள்ளியும் படுக்காது ... என்ற நிலையில்தான் இவர்கள்!!! ... இவர்கள் ஒன்றும் செய்யவும் போவதில்லை செய்தாலும் செய்பவைகளும் எடுபடப்போவதுமில்லை!!!!

உமக்கு ஏற்ற நல்ல ஒரு பழமொழியை தெரிஞ்சு வைச்சு இருக்கிறீ...

சரத் சிங்களவன் இல்லை அவனுக்கு காவடி தூக்கிறது நேரடியாக சிங்களவனுக்கு செய்யும் சேவை... இண்டைக்கு உலக அரங்கிலை இலங்கைக்கு கெட்ட பெயர் எண்டால் அது மகிந்த கொம்பனியால்தான்... இந்த கெட்ட பெயரை சரிக்கட்டவே சிங்களவனுக்கு மாற்று அரசு தேவைப்படுகிறது... செல்வாக்கை சரி செய்த சிங்களவன் தமிழர்களை அதுக்கு பிறகு கண்டு கொள்வான் எண்டு நம்புற கூட்டத்தை நான் ஒண்டும் செய்ய முடியாது...

மகிந்த சரத் எண்ட இரண்டு எதிரியிலை பலமான எதிரி சரத் பொன்சேகா... அவனை ஆதரிப்பதின் மூலம் சிங்கள ஆட்ச்சியாளரை இன்னும் பலமாக்கிறது சரியாக படுகிறது உங்கட அறிவுக்கு...

மகிந்த சர்வதேச நாடுகளின் அதிர்ப்தி பட்டியலிலும், சரத் ஆரதவு பட்டியலிலும் இருக்கிறான்... போர் குற்றம் எண்டு சொல்லப்படுவதில் முக்கிய குற்றவாளியான இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆட்ச்சிக்குவந்தால் போர் குற்றம் எல்லாம் விசாரிக்க படும் எண்டு தமிழர் சிலர் கனவு காண்பதுதான் ஆச்சரியம்...

மகிந்த சரத் எண்ட இரண்டு எதிரியிலை பலமான எதிரி சரத் பொன்சேகா... அவனை ஆதரிப்பதின் மூலம் சிங்கள ஆட்ச்சியாளரை இன்னும் பலமாக்கிறது சரியாக படுகிறது உங்கட அறிவுக்கு...

உப்படியான கல்குலேஷனுகள்தான் ... எம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது!!! ... அங்கு அரசியல் பொறுப்பாளர் வேக்கன்ஸியாக இன்னும் உள்ளதாம் , அப்பிளை பண்ணும்!!! :(

உப்படியான கல்குலேஷனுகள்தான் ... எம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது!!! ... அங்கு அரசியல் பொறுப்பாளர் வேக்கன்ஸியாக இன்னும் உள்ளதாம் , அப்பிளை பண்ணும்!!! :(

உது காரணத்தின் ஒரு துளி மட்டும் தான்.. அதை விடுவம்

சரத் ஆட்ச்சிக்கு வந்தால் போடப்போகும் ஆட்டம் எல்லாம் நானும் பாக்கத்தான் போறன்...

தேர்தல் முடிஞ்சாப்பிறகு நீர் எப்படி இருக்கிறீர் எண்டதையும் பாக்கலாம்... நான் சாகமாட்டன் இருப்பன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு ஏற்ற நல்ல ஒரு பழமொழியை தெரிஞ்சு வைச்சு இருக்கிறீ...

சரத் சிங்களவன் இல்லை அவனுக்கு காவடி தூக்கிறது நேரடியாக சிங்களவனுக்கு செய்யும் சேவை... இண்டைக்கு உலக அரங்கிலை இலங்கைக்கு கெட்ட பெயர் எண்டால் அது மகிந்த கொம்பனியால்தான்... இந்த கெட்ட பெயரை சரிக்கட்டவே சிங்களவனுக்கு மாற்று அரசு தேவைப்படுகிறது... செல்வாக்கை சரி செய்த சிங்களவன் தமிழர்களை அதுக்கு பிறகு கண்டு கொள்வான் எண்டு நம்புற கூட்டத்தை நான் ஒண்டும் செய்ய முடியாது...

மகிந்த சரத் எண்ட இரண்டு எதிரியிலை பலமான எதிரி சரத் பொன்சேகா... அவனை ஆதரிப்பதின் மூலம் சிங்கள ஆட்ச்சியாளரை இன்னும் பலமாக்கிறது சரியாக படுகிறது உங்கட அறிவுக்கு...

மகிந்த சர்வதேச நாடுகளின் அதிர்ப்தி பட்டியலிலும், சரத் ஆரதவு பட்டியலிலும் இருக்கிறான்... போர் குற்றம் எண்டு சொல்லப்படுவதில் முக்கிய குற்றவாளியான இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆட்ச்சிக்குவந்தால் போர் குற்றம் எல்லாம் விசாரிக்க படும் எண்டு தமிழர் சிலர் கனவு காண்பதுதான் ஆச்சரியம்...

தானாடவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

உது காரணத்தின் ஒரு துளி மட்டும் தான்.. அதை விடுவம்

சரத் ஆட்ச்சிக்கு வந்தால் போடப்போகும் ஆட்டம் எல்லாம் நானும் பாக்கத்தான் போறன்...

தேர்தல் முடிஞ்சாப்பிறகு நீர் எப்படி இருக்கிறீர் எண்டதையும் பாக்கலாம்... நான் சாகமாட்டன் இருப்பன்...

அது கட்சி தாவுவதில் எதும் பிரச்சனை மானம் சூடு சொறனை எதாவதில் ஒன்று உள்ளவனுக்குதான் பிரச்சனையான விடயம். புலிகள் கொடிகட்டி பறந்தபோது தீட்டம் தீட்டியது நாம்தான் என்று மார்தட்டி கொண்டோம். பின்பு விட்ட பிழையால்தான் எல்லமே பிழைத்தது என்று பிளேட்டை மாற்றி போட்ட எங்களுக்கு சரத் வென்றால் என்ன தோத்தால் என்ன?

பிளேட்டை மாத்திபோட்டு இங்கே தட்டி கொண்டிருப்போம். நீங்கள் என்னத்தை புதுசா பார்க்கபோறீங்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.