Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்--உதயன் நாளிதழ்

Featured Replies

அதாவது தமிழர்களின் இன்றைய தேவை ஆட்சிமாற்றம், அதற்காக புதிய அரசு ஏதோ சாதிக்கப்போகின்றதல்ல கருத்து. ராஜபக்சவின் ஆட்சிதான் இப்போது இருக்கின்றது, அவருக்கு தண்டனை கொடுக்கவேண்டிய சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது, அதை ஏன் பயன்படுத்தக்கூடாது??? முதலில் அவரை கவனிப்போம், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம், அதற்கப்புறம் சரத்தைப்பற்றி சிந்திப்போம்.

அப்ப இன்னும் ஐந்துவருடம் களித்து வரும் தேர்தலில் வேறு ஒருவருக்கு வாக்களித்து சரத் பொன்சேகாவை பளிவாங்கினால் போச்சு எண்டுறீயளோ...??

  • Replies 84
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று விளங்கவில்லை. ஒரு பக்கம் புலம்பெயர்தமிழர் தாயகத் தமிழர் விடயங்களில் தலையிடக்கூடாது; உசுப்பேற்றக்கூடாது என்று சொல்கிறோம். மறுபக்கம் தாயத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி ஒரு முடிவை எடுத்தால் அதையும் எதிர்க்கிறோம்..! :wub: என்னதான் சொல்ல வாறீங்கள்?

இப்போது பிரச்சினை மகிந்தவா அல்லது சரத்தா நல்லவர் என்பதல்ல. இந்தத் தேர்தலைப் பயன்படுத்தி எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மேலும் வெளிக்கொண்டுவர முடியுமா என்பதே கேள்வி. இருவரில் எவர் வந்தாலும் தாயக நிலைமைகளில் மாற்றங்கள் வரப்போவதில்லை. மாறாக யார் வந்தாலும் நிலைமைகளில் இப்போது இருக்கும் ஒரு சிறு இளக்கத்தன்மைகூட இல்லாது போய்விடும் வாய்ப்பே அதிகம்.

தேர்த்லைப் புறக்கணிப்பதால், ஜனநாயக அரசியலில் விருப்பமில்லாத தமிழர்களை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யமுடியாது என்பதே சர்வதேச அரசியலில் பிரதிபலிக்கப்படும்.

மகிந்தவை ஆதரித்தால், இப்போதுள்ள நிலைமைகளே தொடரும்.

சரத்துக்கு வாக்களித்தால், கொன்றவனுக்கே தமிழர்கள் வாக்களித்தார்கள் எனும் நிலைமை ஏற்படும். ஆனால் இதன்மூலம், போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களில் மேலும் சில வெளிவரும் வாய்ப்பு உள்ளதா.. அல்லது தோற்றுப்போன தரப்பு ஏற்கனவே வெளிவந்து உறுதிப்படுத்தப்பட்ட (இளைஞர்கள் கொலைகளுக்கான காணொளி ஆதாரம்) விவகாரத்தை வைத்துக்கொண்டு ஏதாவது செய்யமுடியுமா என்றுதான் பர்க்கவேண்டும். மகிந்த தரப்பே தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் விசாரணைகள் எந்த அளவுக்கு முன்னேற்றம் பெறும்? வாய்ப்பே இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பில் ஒரு பகுதியாவது அதிகாரத்தை இழக்கும்போது விசாரணைகளைப் பொறுத்தவரையில் முன்னேற்றம் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம்.

அதனால் தாயக அரசியல் கூட்டணியின் முடிவு விவேகமானதே..

தேர்த்லைப் புறக்கணிப்பதால், ஜனநாயக அரசியலில் விருப்பமில்லாத தமிழர்களை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யமுடியாது என்பதே சர்வதேச அரசியலில் பிரதிபலிக்கப்படும்.

இதன் நிமிர்த்தம் தான் தமிழ் மக்கள் 2005 ல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோகமான ஆதரவை கொடுத்து பாராளுமண்றம் அனுப்பி வைத்தனர்... ஆனால் பலன்...??

மேற்கு நாடுகள் தங்களுக்கு தேவையானதை அமைத்து கொள்ளும் கருவிகளாக தமிழர் செயற்பட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறி...

இதில் தமிழர்கள் என்ன இன்னல்ப்படாலும் யாருக்கும் கவலை இருக்க போவதில்லை... இண்று சரத்தை ஆதரிக்கும் மேற்கு நாடுகள் சரத் பொன்சேகா ஆட்ச்சிக்கு வந்தால் அதன் பிறகு தமிழ் மக்கள் பிரச்சினை பற்றி வாய் திறப்பார்கள் எண்றா நினைக்கிறீர்கள்...???

மகிந்த ஆட்ச்சியில் இருப்பதால் அவரை வெறுக்கும் நாடுகள் மனித உரிமை குற்றச்சாட்டை கொஞ்சம் ஏற்று கொள்வது போல நடிக்கின்றன.. ஆனால் சரத் ஆட்ச்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இலங்கையில் இருக்கிறது...? அங்கே சர்வதேசம் ஏற்று கொண்ட நல்லாட்ச்சி நடக்கிறது அங்கு தமிழர்கள் எல்லாரும் நலமாக ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதை சர்வதேசம் சாதிக்கும்...

இதில் மேலும் வேடிக்கை ஒண்று இருக்கிறது... 2007 முதல் கிட்டத்தட்ட 60 000 தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டனர்... அப்போ கொஞ்சமும் மறந்து வாய் திறக்காத அமெரிக்காவும் , ஐநாவும் இலங்கையில் நடந்த தேர்தல் வன்முறைக்காக மகிந்த அரசை கண்டிக்கிறது... அவர்களின் நோக்கம் தெளிவானது.. அது சரத் ஆட்ச்சிக்கு வரவேண்டும் எண்றதே...

சரத் ஆட்ச்சிக்கு வந்தால் இந்த மேற்குலகம் என்ன செய்யும்...?? தமிழர் பிரச்சினையை தூக்கி உடப்ப்பில் போடும்... சரத் ஆயுத கலாச்சாரம் நடத்தி தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டாலும் நல்லாட்ச்சி நடப்பதாக சொல்லப்படும்...! இன்னும் ஒரு கொங்கோ, பலஸ்தீனம் போல தமிழர்கள் நிலையும் ஆகும்... மேற்குலகம் பலனை அனுபவிக்கும்...

எங்கள் பிரச்சினையை தீர்த்து வைத்தால் தான் அவர்கள் பிரச்சினை ஓயும் நிலை ஏதும் உண்டா எண்று பார்ப்பது மட்டுமே தமிழர்களின் நிலையை கொஞ்சமாவது மாற்றும்... ஆட்ச்சி மாறுவதால் எதுவும் மாறாது..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு என்பது

ஒரு கட்சியையோ

தனி நபர்களையோ

ஆட்சி மாற்றங்களையோ

கணக்கெடுப்பதில்லை

அது ஒரு இனத்திற்கு இன்னொரு இனத்தால் அநியாயம் கட்டவிழ்த்து விடப்பட்டதா

தற்போதும் தொடர்கிறதா?

செய்யப்பட்ட அநியாயங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு

அநியாயம் இழைக்கப்பட்ட இனத்திற்கு நீதி வழங்கப்பட்டுள்ளதா

அந்த இனம் இன்று நிம்மதியாக வாழ்கிறதா

வாழ வழி அமைக்கப்பட்டுள்ளதா

அதை அந்த இனம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்றுதான் பார்க்கும்

எனவே சரத்துக்கு தமிழ்மக்கள் வோட்டுப்போட்டு

சரத் வந்தால் எல்லாம் முடிந்துவிடும்

அவர் நல்லாட்சி செய்வார்

தமிழர் எல்லோரையும் தூக்கி தலையில் வைத்து ஆடுவார்

இதனால் எல்லாம் மறந்து மறக்கப்பட்டுவிடும் என்று நினைப்பது

  • கருத்துக்கள உறவுகள்

இதன் நிமிர்த்தம் தான் தமிழ் மக்கள் 2005 ல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோகமான ஆதரவை கொடுத்து பாராளுமண்றம் அனுப்பி வைத்தனர்... ஆனால் பலன்...??

உலகைப் பொறுத்தவரையில் (மன்னிக்கவும்) "பயங்கரவாதி"களின் பிடியிலிருந்த மக்கள் போட்ட வாக்குகளிலிருந்து தெரிவானவர்கள்தான் அவர்கள். அதனால் செல்லாது. இப்போது "பயங்கரவாதம்" இல்லாது ஒழிக்கப்பட்டுவிட்டது. :wub:

மேற்கு நாடுகள் தங்களுக்கு தேவையானதை அமைத்து கொள்ளும் கருவிகளாக தமிழர் செயற்பட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறி...

அவரவர் தத்தமது நன்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காரியம் ஆற்றுவதுதானே அரசியல். நாமும் மேற்குலக நாடுகளுக்கு என்ன தொண்டு செய்யவா வந்தோம்? நாங்களும் அவர்களை உபயோகிக்கத்தானே வந்தோம். அவர்கள் மட்டும் ஏன் செய்யக்கூடாது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இசைக்கலைஞர்

தங்களது நேரத்திற்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிநாடு....தமிழ் செண்டிமெண்டெல்லாம் புலிகளின்கையில் ஆயுதம் இருந்தவரைதான். கூட்டமைப்புக்கூட கயித்தில கட்டி வெக்கப்பட்டிருந்த காளைகள் என இங்கு யாரோ எழுதி வாசித்திருந்தேன், அதுதான் உண்மை. குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும் என்பதெல்லாம் மந்தைகளுக்கு போட்ட தீனி....... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்லும் பாதையில் ஜிகாத் செயல்படுகிறது. நீ என் பிரச்சினையைத் தீர்த்துவை.. நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்று. விளைவு, அரபு நாடுகள் முழுவதும் வெள்ளைத்தோல்தான்.

நல்லதொரு எடுத்துக்காட்டு இசைக்கலைஞன்.

ஆனால் வரும் காலங்களில் ஜிகாத் வெற்றி பெற வாய்ப்புண்டு. ஏனெனில் அவர்களின் சனத்தொகை என்பது எம்மோடு ஒப்பிடும்போது எல்லையற்றது. இஸ்லாமிய மதத்தின் தீவிரத்தின் முன்னால் தமிழ் தேசிய உணர்வு நிற்கமுடியாது. அமெரிக்கா சிதறுண்டு போனாலும் இஸ்லாம் உள்ள வரை ஜிகாத் சிதறாது. ஆனால் எமது நிலை ஒரு மொழியும் பிரதேசமும் சார்ந்தது. மிகப் பலவீனமானது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இன்னும் ஐந்துவருடம் களித்து வரும் தேர்தலில் வேறு ஒருவருக்கு வாக்களித்து சரத் பொன்சேகாவை பளிவாங்கினால் போச்சு எண்டுறீயளோ...??

நல்ல லொஜிக்காக பேசினால் மட்டும் போதாதுங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2008 ம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது இணைந்த வடகிழக்கை பிரித்ததை காரணம்காட்டி தாங்கள் பங்கெடுக்கவில்லை என்று மாகாணசபை தேர்தலை பகிஸ்கரித்த கூட்டமைப்பு இன்று யாருடன் கூட்டு வைக்கிறது. நீதிமன்றம்போய் பிரிக்கச்சொல்லி வழக்குப்போட்டு பிரித்த அதே ஜேவிபி யுடன் கூட்டுச்சேர்ந்திருக்கிறது. யூஎன்பி ஜேவிபியுடன் கூட்டுச்சேர்ந்ததே அதிசயம், இவர்களுடன் கூட்டமைப்பு கூட்டுச்சேர்ந்தது அதிசயத்திலும் அதிசயம். :wub:

உலகைப் பொறுத்தவரையில் (மன்னிக்கவும்) "பயங்கரவாதி"களின் பிடியிலிருந்த மக்கள் போட்ட வாக்குகளிலிருந்து தெரிவானவர்கள்தான் அவர்கள். அதனால் செல்லாது. இப்போது "பயங்கரவாதம்" இல்லாது ஒழிக்கப்பட்டுவிட்டது. :wub:

முதலில் பயங்கரவாதிகள் எண்று எங்களவரை சரவதேச நாடுகள் ஒடுக்குவதுக்கு என்ன வரை முறையை வைத்து இருந்தனர்...?? இலங்கை மீது இருக்கும் நலன்களை தவிர.. புலிகள் எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தி குற்றவாளிகளாக்கப்படனர்... ஜிகாத் குழுக்களை போல..

அதாவது யாழ்ப்பாணம் வவுனியா, மன்னார், மட்டு அம்மாறை, திருகோணமலை எல்லாமே ...??? அவை முழுவதும் பயங்கட வாதத்தின் பிடியிலா இருந்தது...??

புலம்பெயர்ந்த நாடுகளில் கூட பொங்குதமிழ் நடத்தி கூப்பாடு போட்டோமே... பின்னர் பாராளுமண்றங்களின் முன்னும் முக்கிய சதுக்கங்களில் எல்லாம் நிண்று ஒப்பாரி வைத்தோமே எல்லாருமே புலிகளின் பிடியில் இருப்பவர்கள் எண்றா சர்வதேசம் சொல்லியது...??

அவர்கள் தங்களுக்கு எண்று கோடு போட்டு நீண்ட கால வேலைத்திட்டதின் மூலம் வேலை செய்கிறார்கள்... அதில் அவர்களின் எப்போதுமான தெரிவு சிங்களவருக்கான ஆதரவு... இதில் தமிழர் ஒருவர் இறந்ததுக்காக எந்த நாடும் அழப்போவதில்லை...

அவரவர் தத்தமது நன்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காரியம் ஆற்றுவதுதானே அரசியல். நாமும் மேற்குலக நாடுகளுக்கு என்ன தொண்டு செய்யவா வந்தோம்? நாங்களும் அவர்களை உபயோகிக்கத்தானே வந்தோம். அவர்கள் மட்டும் ஏன் செய்யக்கூடாது? :lol:

உபயோகிக்க வேண்டாம் என்பது இல்லை எனது கருத்து ஏறி மிதிக்கவே இது அமைவாகும்... இதுக்கு நல்ல உதாரணம் இரணில் காலத்தில் புலிகள் மீதும் தமிழர்கள் மீதும் போடப்பட்ட அழுத்தங்கள்... அதுக்கும் முன்னர் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்கள்...

வாய் திறக்கும் வாய்ப்பு இல்லைதான். ஆனால் மகிந்தர் காலத்தில் நடைபெற்ற இன அழிப்பு கொஞ்சமாவது வெளிவர வாய்ப்பு உள்ளது. இளைஞர்களைக் கொன்ற காணொளி விவகாரத்தில் ஏற்கனவே சிறிது வெளிவந்துவிட்டது. இலங்கைத் தீவில் தமிழர்கள் சிங்களவர்களோடு சேர்ந்து வாழமுடியும் என்கிற சர்வதேச நிலைப்பாட்டைத் தகர்க்க இவை உதவும்.

தனக்கு சார்பான அரசு இலங்கையில் இருக்கிறது.. அது JVP , பௌத்த பிக்குக்கள், கருஜெயசூரிய போண்ற சிங்கள் துவேசிகள் நிறைந்த கூடாரத்தால் தெரிவு செய்யப்பட்ட சரத் ஆட்ச்சியில் இருக்கிறார். இவர்கள் அனைவரையும் எதிர்த்து இலங்கை நாட்டுக்கு அபகீர்த்தியை தரும் மனித உரிமை பிரச்சினையை தூண்டுவார் எண்று நீங்கள் நினைப்பது கனவாக மட்டுமே இருக்கும்...

மாறாக நீங்கள் சொல்லும் C4 காணொளி விவகாரத்திலும் மகிந்தவையும் விட இராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொண்சேகாவே அதிகமாக விசாரனைக்கு உட்படுத்த பட வேண்டியவர் ஆவார்...

இதுதான் பிரச்சினை... இன அழிப்பு என்று நாம்தான் கத்துகிறோம். பக்கத்திலிருக்கும் இந்தியாவே இதுகுறித்து மூச்சு விடுவதில்லை. சர்வதேசம் எமது பேச்சைக் கேட்கும் என்று எந்த அடிப்படையில் நம்புகிறோம்?

இதுவரைகாலமும் நடந்த நிகழ்வுகளில் இரண்டே இரண்டு விடயங்கள் மாத்திரமே சர்வதேச ரீதியில் ஓரளவுக்காவது தமிழர் மீதான இன்னல்களை வெளிக்கொணர்ந்து இருக்கின்றன (ஆதாரபூர்வமாக). ஒன்று கறுப்பு ஜூலை. அதை ஏதோ அரிதான ஒரு நிகழ்வுபோல நாடகமாடி சிங்களம் மறைத்துவிட்டது. இரண்டாவது நிகழ்வு, இளைஞர்களின் படுகொலை சம்பந்தமான காணொளி. இதையாவது சரியாக உபயோகிக்க வேண்டுமெனில், மகிந்தர் பதவியில் இருக்கக் கூடாது.

மற்றும்படி, தமிழர்களுக்கு பிரச்சினையே புலிகளால்தான். இதுதான் சர்வதேசத்தின் நிலைப்பாடு.

இண்டு வரைக்கும் தமிழர் தோற்று போனதுக்கு காரணமே இலங்கையில் நடப்பது இனவளிப்பு என்பதை நிரூபிக்க நாங்கள் எதுவும் செய்யவில்லை என்பதே...

இன அழிப்புக்கும் போரில் சிக்கி இறப்பதும் வேறு வேறானவை... நான் தமிழன் என்பதுக்காக கொல்லப்பட்டால் மட்டுமே அது இனச்சுத்தீகரிப்பு நடவடிக்கையும் ஆகும்...

இந்த காணொளி விடயம் கூட சிங்களவர் தமிழர்களை கொலை செய்வது தமிழன் எனும் காரணத்தினால் தான்.. இது ஒரு இன அழிப்பு.. ஆகவே தமிழர்கள் சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியாது என்பதை நீங்கள் சரத் பொன்சேகாவை வாக்கு போட்டு தெரிவு செய்த பின் சொல்ல முடியுமா...??

நீங்கள்தான் சொல்கிறீர்கள் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று. ஆதாரம் எங்கே? வெளிவந்த படங்களும் காணொளிகளும் புலிகளால் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்கள் பதில் என்ன? அல்லது அவை புலிகளால் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று வாதிடப்பட்டால் உங்கள் பதில் என்ன?

ஐநாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் வரைக்கும் சற்றலைட் படங்களாக எடுத்து வைத்து இருக்கிறார்கள்.. அவர்கள் வைத்திருப்பது மகிந்தவை மிரட்டுவதுக்கு மட்டுமே பயன் படுகிறது...

இப்போ போர் குற்றம் இளைத்த அரசாக பார்க்க படும் மகிந்தவின் ஆட்ச்சி அகன்ற பின்னர் இலங்கை ஒரு புனிதமான நாடு... அதில் மகிந்த குடும்பம் மட்டுமே குற்றம் இளைத்தவர்கள்... அவர்கள் அகன்றபின்னர் பிரித் ஓதி கழுவி விட்டால் எல்லாம் அகன்று விடும்... பின்னர் இலங்கையில் சிங்களவருக்கும் தமிழர்களுக்கும் என்ன பிரச்சினை எண்று நீங்கள் தான் எனக்கு சொல்ல வேண்டி இருக்கும்...

நீங்கள் சொல்லும் பாதையில் ஜிகாத் செயல்படுகிறது. நீ என் பிரச்சினையைத் தீர்த்துவை.. நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்று. விளைவு, அரபு நாடுகள் முழுவதும் வெள்ளைத்தோல்தான்.

மாறாக, எமது இன அழிப்பை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்ந்தால் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜிகாத் மத்திய கிழக்கில் இருந்து கொண்டு வெள்ளையர்களை குறிவைக்கிறது ஆனால் நாங்க அதை செய்யவில்லை... எங்களிடம் இப்போ ஆயுத குழுக்களும் இல்லை...

நீங்கள் ஜிகாத் என்கிறீர்கள் நான் அதை விட சிறப்பான உதாரணத்தை தருகிறன்..

சூடான் சூடான் எண்று ஒரு நாடு.. அங்கே Omar al-Bashir என்பவர் 1989ம் ஆண்டு முதல் ஆட்ச்சியில் இருக்கிறார்... இந்த சூடான் நாடு பல காலமாக மேற்கு நாடுகளின் நல்லாசியுடன் இருந்தது... இந்த சூடான் எனப்து உலக நாடுகளுகளின் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் தேவையான முக்கிய மூலப்பொருளான "அரபிக் பசை" கிடைக்கிறது...

அப்படிப்பட்ட சூடானில் டாபர் பகுதி எண்று எங்களது தமிழீழம் போல ஒரு பகுதி... அங்கே கிளர்ச்சியாளர்கள் ( பயங்கரவாதிகள் எண்றும் சொல்லாம்) போராடினர்... இந்த கிளர்ச்சியாளர்களுடனான போரில் Omar al-Bashir ன் படைகள் அனேகமாக தோல்வி முகம் கண்டன... அப்போது இஸ்லாமிய நாடுகள் Omar al-Bashir க்கு உதவ முன் வருகிண்றன... அவைகளை முண்டி அடித்து மறைமுகமாக அந்த நாட்டில் தங்களுக்கு இருக்கும் நலன் கருதி மேற்கு நாடுகளும் பெருமளவில் உதவுகின்றன... 2004ம் ஆண்டு Omar al-Bashir படையினர் மிகப்பெரிய அளவிலான பேரளிவுடன் அதாவது 400 000 மக்களின் கொலைகளின் ஊடு டாபர் பகுதியை கையகப்படுத்துகிறது...

நீங்கள் கேட்பது போல அங்கும் பெரிய அளவில் எந்தவிதமான கொலைக்கான தடயங்களோ, ஆதாரங்களோ கிடையாது... ஆனால் புலம்பெயர்ந்து இருந்த டாபர் பகுதி மக்களின் அயராத போராட்டங்களின் பயன் ஓரளவுக்கு அங்கு பிரச்சினை நடந்து இருக்கலாம் என்பதை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வந்து விடுகின்றன... ( கவனிக்கவும் ஏதும் பெரிதாக செய்யவில்லை) அதன் பின்னர் Omar al-Bashir அவர்கள் மேற்கு நாடுகளுடன் முழுமையான தொடர்புகளையும் அறுத்து கொண்டு இஸ்லாமிய நாடுகளினும் சீனாவின் உதவியுடனும் தனது செயற்பாடுகளை விரிவாக்கி தொடர்கிறார்..

2005 ம் ஆண்டு நடந்த தேர்தலில் மேற்கு நாடுகள் சூடானில் ஒரு ஆட்ச்சி மாற்றத்தை விரும்பி ஒருவருக்கு மறைமுகமாக ஆதரவினை கொடுக்கிறது... ஆனால் Omar al-Bashir மீண்டும் தேர்தலில் வெண்று சூடானின் நீண்டகால ஜனாதிபதியாகிவிடுகிறார்... இதன் பின்னர் மேற்கு நாடுகள் சுடானை பயங்கரவாத நாடாக அறிவிக்கிறது...

2008 ம் ஆண்டு சர்வதேச நீதி மண்றம் Omar al-Bashir போர் குற்றம் இளைத்தவராக அறிவித்து பிடியாணை பிறப்பித்து இருக்கிறது...

சரி டாபர் பகுதி மக்கள் என்ன செய்கினம் எண்டு கேக்க உங்களுக்கு தோண்றும்... அது இன்னும் கேவலம்... பல குழுக்களாக நிண்று டாபர் பகுதியை கட்டுப்பாட்டு குள் கொண்டாலும் அந்த பகுதிக்கு வெளியில் சூடானிய இராணுவத்துடனும், உள்ளே தங்களுக்கு தாங்களும் அடிபட்டு கொண்டு இருக்கிறார்கள்...

இந்தியாவுடன் கூட்டமைப்பு கொண்டாட்டம்... மகிந்தவுக்கு கூட்டமைப்பு ஆதரவு கிடைக்கும்..

கூட்டமைப்பு தனித்து போட்டியிடலாம்...

சிவாஜிலிங்கம் தனித்து போட்டி

சிவாஜிலிங்கம் விளைபோயிட்டார் (றோவின் விளையாட்டு)

இந்தியா சிவாஜிலிங்கத்தை திருப்பியனுப்பியது (இந்தியாவும் சிவாஜிலிங்கமும் நாடகம்)

கூட்டமைப்பு முடிவெடுக்காத கூத்தமைப்பு...

கூட்டமைப்பு பெரமபோசுதைலும் கூடி ஆராய்தலும்

கூட்டமைப்பு சரத்துக்கு ஆதரவு

கூட்டமைப்பு விலை போய்விட்டது... சரத் வெல்லக்கூடாது... மகிந்தவும் கெட்டவன்... சரத்தும் கெட்டவன்... யாரும் எங்களுக்கு உரிமை தரமாட்டான்... தனியக்கேட்டவனும் கெட்டவன்... சரத்துக்கு ஆதரவும் கெட்டவன்... ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுத்தவங்கள் தொரோகிகள் (கருணா தனக்கு கொல்லியான் ) வாக்களிக்காமல் விட்டாலும் ஒருத்தன் வெல்வான்...

எங்களுக்கு ஒரு தெளிவான திட்டம் ஏதாவது? எனக்கு இதுவரை......... என்னவோ பண்ணுவம்... ஊரில சனம் ருக்கும்வரை.....

இதிலே சொல்லாதது போர்க்குற்றம்... இது இந்த தேர்தலில் அடிபடவில்லை... இது இலங்கையிலும் இல்லை.

ஆக நாடுகடந்த அரசுக்கு ஆதரவாவது தருவீர்களா? ஒரு கோதாரியும் இல்லையெண்டால்... நீங்கள் நாங்கள் இங்கு எழுதி என்ன பயன்.

இசைக்கலைஞன்,

சர்வதேசத்துக்கு ஏதோ இலங்கையில் நடப்பவை பற்றி ஒன்றும் தெரியாது போலவும், நாம் படம் எடுத்து ஆதாரம் காட்டினால்தான் அவை நம்பும் போலவும் உங்கள் கருத்துகள் இருக்கின்றன. உலகின் அனைத்து நாடுகளுக்கும் தெரியும் இலங்கையில் நடப்பது இனவழிப்புத்தானென்று. எம்மிடம் இருக்கும் ஆதாரங்களை விட சர்வதேசத்தின் கைகளில் வலிமையான ஆதாரங்கள் இருக்கின்றன. நேரடிச் செய்மதிப் படங்களிலிருந்து இராணுவ புலநாய்வு முயற்சிகள் மூலம் பெறப்பட்டவை என்று ஏராளமாக அவைக்கு இருக்கின்றன

ஆனால், அந்தந்த நாடுகளின் பிராந்திய, வர்த்தக நலனுக்காக அவை இலங்கையில் நடப்பது பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் தான் என்று சாதிக்கின்றன. இனவழிப்புத்தான் என்பதை ஏற்க மறுக்கின்றன. ஏனெனில் இலங்கையில் அவற்றின் நலன்கள் ஏராளம். இந்த நலன்களுக்கு இலங்கையில் இருந்த ஒரே ஒரு எதிர்ப்புச் சக்தி தமிழர்களின் சுதந்திரப் போராட்டமும் அதனை தீர்க்கமாக முன்னெடுத்த விடுதலைப் புலிகளும்தான்

இன்று புலிகளின் இயங்கு நிலையை நிறுத்தியாச்சு. மிச்சம் இருப்பது தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டட்திற்கான நியாயமான காரணங்கள் பற்றிய மக்களின் புரிதல்கள். இந்தப் புரிதல்கள் இருக்கும் வரை புலிகளின் தோல்வி என்பது தற்காலிகமானது என்பது சர்வதேசத்திற்கு நன்கு புரியும். எனவே தமிழ் மக்களின் அரசியல கோரிக்கைக்கான ஆதாரங்களை நீர்த்துப் போகச்செய்வதே அடுத்த கட்டம். அதனைத் தான் சரத் பொன்சேகா மூலமும், அதற்கு த.தே.கூ இனை ஆதரவு கொடுக்கச் செய்வதன் மூலமும் சர்வதேசம் செய்ய முயல்கின்றது. இந்த முறை (புலிகள் அற்ற களச் சூழலில்) தமிழ் மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் தற்போதைய இலங்கை அரசின் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான வாக்காகவே சர்வதேசம் கொள்ளும். ஒற்றையாட்சி முறையினுள் தமிழ் மக்கள் வாழத்தயார் என்றுதான் அவர்கள் அதனை எடுத்துக் கொள்வர். சரத் தமிழ் மக்களின் வாக்கு மூலம் தெரிவானால், இலங்கை அரசிடம் தீர்வொன்றை முன்வைக்க கோரும் சர்வதேசத்தின் உதட்டளவிலான கோரிக்கைகள் கூட முற்றாக அற்றுப் போயிடும்

நீங்கள் சொல்வது போல், சரத் வந்தால் மகிந்த செய்த போர்க்குற்றங்கள் பற்றி சில வெளிவருதால் என்ன பயன் ஏற்படும் என்று சொல்லுங்கள்? ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்று வெளியே வருவதால் வேண்டுமென்றால் ஒரு சில தனிநபர்கள் தண்டிக்கப்படக் கூடும் (அதற்கான நிகழ்தகவும் கூட நூற்றுக்கு ஒரு விகிதமே)...ஆனால் தமிழ் மக்கள் மீது இத்தகைய பாரிய போர்க்குற்றங்களைப் புரியக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்த பிரதான அரசியலமைப்பில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்லுங்கள். வெறும் தனிநபர்கள் மீதான தண்டனை தமிழ் மக்கள் இலங்கையில் வாழமுடியாது என்பதை தோற்றுவிக்க போதுமானது என்று எப்படிச் சொல்கின்றீர்கள்? எல்லாவற்றுக்கும் மூல காரணமான தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான அரசியலமைப்பில் எந்தவித மாற்றங்களைக் கொண்டு வராமல் செய்யப்படும் வேறு அனைத்தும் தமிழ் மக்களின் நிம்மதியான அரசியல் உரிமைகளுடனான வாழ்வை நாசமாக்கவே செய்யும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் இன்று இந்தியா புறப்பட்டனர். இந்தியா அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் அழைப்பின் பேரில் இவர்கள் டெல்லி செல்வதாக கூட்டமைப்பு தெரிவித்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்திய அரசாங்கத்தினை கூட்டமைப்பு சந்திக்க வேண்டும் என சம்பந்தன் கேட்டிருந்தார் ஆனால் இந்திய அரசாங்கம் திகதியினை வழங்கவில்லை இப்போது தான் வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆகவே இன்று கூட்டமைப்பு இந்தியா புறப்படுகின்றது.இந்தியா செல்லும் கூட்டமைப்பில் வழமையாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினை சம்பந்தன் அவர்கள் வெட்டி விட்டே செல்வதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா செல்லும் அணியினர் 16 ம் திகதி வரை இந்தியாவில் இருப்பர் எனவும் அங்கு மன்மோகன்சிங் அல்லது வெளிவிவகார அமைச்சரினை சந்திப்பர் எனவும் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதனை யோசித்து செய்யும்படி இந்திய தரப்பால் கூட்டமைப்பிற்கு கூறப்பட்டது. ஆனால் பின்னர் அது குறித்து இந்திய தரப்பினர் அமைதியாக இருந்து விட்டதாக கூறப்படுகின்றது. இப்போது இந்தியாவும் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக கூறப்படுகின்றது.

இதே வேளை தமிழரசு கட்சியின் மா நாடு முடிய சம்பந்தன், மாவை சேனாதிராசா மற்றும் பலர் அங்கிருந்த முக்கியஸ்தர்களிடம் கலந்துரையாடும் போது கூட்டமைப்பில் ஆங்கிலம் நன்கு பேசக்கூடியவர்கள் படித்தவர்கள் குறைவு என்றும் இதனால் பல சிக்கல்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளனர். அத்துடன் பேருக்கு முன் சில பட்டங்கள் இருக்கவேண்டும் அல்லது கல்வியறிவு உள்ளவர்களாக இருக்கவேண்டும் என விவாதித்துள்ளனர்.

அடுத்துவரும் தேர்தலில் ஆட்களை நியமிக்கும் போது அதற்கேற்பவே நியமிக்கவேண்டும் என கூறியுள்ளனர். இதன்படி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பலரை நீக்கிவிட்டு ( விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்ட எம்.பி க்கள் இதில் முக்கியமாக நீக்கப்படவுள்ளனர்) புத்திசாலிகள் ஆங்கிலம் கதைக்க கூடியவர்கள் என பலரை புதிதாக களமிறக்க தீர்மானித்துள்ளது தமிழரசு கட்சி.

இந்த புதிய பட்டியலில் உயர் நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன், தற்போது பிள்ளையானுடன் இருக்கும் விக்னேஸ்வரன், ஆனந்த சங்கரி, சட்டவாளர் உமேந்திரன்,சாந்தி சச்சிதானந்தம், சி.வி.கே சிவஞானம் ஆகியோர் இடம்பெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

எது எப்படி இருப்பினும் கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் அதே நேரம் விடுதலைப்புலிகளால் தேர்தலிற்காக நியமிக்கப்பட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கணிசமானவர்களுக்கு அடுத்த முறை சீட்டு கிடைக்காது என்பதுதான் நிலமை.

இதே வேளை இந்திய அரசாங்கம் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை செய்யும்படியே கூட்டமைப்பினை வலியுறுத்தி வருகின்றது. அத்துடன் கூட்டமைப்பு மக்களிற்குள் புனர்வாழ்வு திட்டங்களை செய்யவேண்டும் என்றும் அதற்காக இந்திய அரசு கொழும்பு தூதரகம் ஊடாக உதவிகளை வழங்கும் என்று கூறியுள்ளது. இந்த உதவிகளில் சில திட்டங்களுக்காக நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களிற்கு கோழி வளர்ப்பு திட்டம், துவிச்சக்கரவண்டி வழங்குதல் போன்ற திட்டங்களை செய்வதற்கு கூட்டமைப்பின் ஒரு சில முக்கிய எம்.பிக்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல விடுதலைப்புலிகளின் நாமம் கூட எள்ளளவும் இருக்க கூடாது என்பதில் இலங்கை அரசாங்கத்தைவிட இந்தியாதான் அதிக வேகத்துடன் செயற்படுகின்றது என்பது தெளிவு. ஆனால் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் சேர்ந்து போய்த்தான் எதனையும் செய்ய முடியும் என்ற அடிப்படையில் அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்தும் நிலையிலேயே உள்ளனர்.

இவ்வாறு மதில் மேல் பூனைகள் போல் இருந்து அப்பப்போ இருக்கும் பலத்தோடு சேர்ந்து தமது அரசியல் இருப்பிடத்தை எவ்வாறு புதுப்பித்தும், நிலை நிறுத்தியும் செல்லும் சில கூட்டமைப்பின் மூத்தோர்களை தான் அண்மையில் உதயன் ஆசிரியர் தலையங்கமும் சம்பந்தனின் ஆழுமை பற்றி புகழ்ந்தது. ஆகவே நாமும் அரசியலில் அவர்கள் சுட்ட பழங்களாக உள்ளனர் என தைத்திரு நாளில் புகழ்ந்திடுவோம்.

http://www.eelanatham.net/news/important

விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் தலை தூக்குவதினை சிங்கள அரசினை விட சம்பந்தன் ஐயா தான் ஒரு போதும் விரும்பமாட்டார். தேசியம், சுயநிர்ணய உரிமை, ஆட்சி மாற்றம், இந்திய மனது மறுகின்றது என கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டு அமிர்தலிங்கத்தினை போன்று அரசியல் நாடத்துவார்கள். தமிழ் மக்களின் கொள்கையில் உறுதியாக உள்ள எவரையும் அரசியலில் இறங்க சம்பந்தன் ஐயா அனுமதிக்கவும் மாட்டார்.

Edited by உமை

நல்ல லொஜிக்காக பேசினால் மட்டும் போதாதுங்கோ!

அப்ப சரத்துக்கு வாக்கை போடுங்கோ எண்டு சொல்லி போட்டு அமத்தி கொண்டு இருக்க வேணுமாக்கும்...

விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் தலை தூக்குவதினை சிங்கள அரசினை விட சம்பந்தன் ஐயா தான் ஒரு போதும் விரும்பமாட்டார். தேசியம், சுயநிர்ணய உரிமை, ஆட்சி மாற்றம், இந்திய மனது மறுகின்றது என கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டு அமிர்தலிங்கத்தினை போன்று அரசியல் நாடத்துவார்கள். தமிழ் மக்களின் கொள்கையில் உறுதியாக உள்ள எவரையும் அரசியலில் இறங்க சம்பந்தன் ஐயா அனுமதிக்கவும் மாட்டார்.

அண்மைக்காலமாக அடிக்கடி இப்படி ஊரில் இருந்து கேள்விப்படுகிறேன்... இந்திய உளவு படையின் கட்டுக்குள் ஆடுவதாக தான் சொல்கிறார்கள்...

தமிழ் மக்கள் கொண்று ஒளித்த காலங்களில் டெல்லியில் போய் தவம் இருந்து விட்டு வந்தனர்... இப்போது வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்க்க புரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

தயா / நிழலி..

தனிநபர் மீதான போர்க்குற்ற விசாரணை ஒரு நாட்டைப் பாதிக்குமா என்று கேட்டிருக்கிறீர்கள். ஒரு நாட்டின் அதிபராக இருந்தவர் போர்க்குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவரது ஆட்சிக்காலத்தில் அவர்கள் சொல்லி வந்த சமாதானங்கள், வெளிவிட்ட அறிக்கைகள் போன்றவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகின்றது. அவ்வாறான ஒரு நிலை தோன்றும்போது, நிலைமைகள் எமக்குச் சாதகமாகவே மாறும் எனக் கொள்ளவேண்டும். அந்த இளைஞர்களின் படுகொலையை ஏன் ஓரிரு ராணுவ அதிகாரிகளின் தலையில் சுமத்தி சிங்களம் தப்பியிருக்கக் கூடாது? (பின்னர் அவர்கள் மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று கூறி விடுவித்தும் இருக்கலாமே) காரணம் உண்டு. அவ்வாறு அவர்கள் தப்பித்துக்கொள்ள முனையும் பட்சத்தில், இன்னும் எத்தனை இதேமாதிரியான குற்றங்கள் நடைபெற்றன என்கிற கேள்வி எழும். அதைத் தவிர்த்துக்கொள்ளவே, சிங்களம் இன்னும் அக்குற்றங்களை மறுதலித்து வருகிறது. காணொளி இப்போது உண்மையென நிறுவப்பட்டுவிட்டதால் இனிமேல் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும், போர்க்குற்றங்களை ஒருசில தனிநபர்கள் மீது சுமத்திவிட்டு அந்த நாடு தப்பித்துக்கொள்ளலாம் என்றால் சேர்பியாவுக்கு ஏன் இந்த நிலை? சூடானைப் பற்றிப் பேசியிருந்தீர்கள். சூடானின் பஷார் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப் பாடாமல் இல்லை. ஆனால் சர்வதேச விசாரணை ஒரு நடத்தப்படாமல் எதையுமே நிறுவ முடியாது. குற்றச்சாட்டுக்கள் என்பவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. ஆதாரபூர்வமாக நிறுவப்படும் பட்சத்தில் மட்டுமே அதை ஒட்டி கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

கொசொவோவில் போராடிய அமைப்புகூட பயங்கர வாத அமைப்பு எனப் பிரகடனப்படுத்தப் பட்டதே. அதனால் அது விடுதலை அடையாது போய்விடவில்லை. சேர்பியா ஏற்கனவே மாட்டிக்கொண்ட புண்ணியத்தால் அதுவும் விடுதலை அடைந்தது.

ஈழத்தில் நடந்தது சர்வதேசத்துக்குத் தெரியாதா என்று கேட்டிருக்கிறீர்கள். தெரியாமல் இல்லை. ஆனால் ஆதாரம் இல்லை என்றே சொல்ல வருகிறேன். செய்மதியில் குண்டுவிழுந்த குழிகளையும், கிழிந்த தார்ப்பாய்களையும் காட்டினால் அது சிங்களம் செய்த அராஜகம்தான் என்று எப்படிச் சொல்வீர்கள்?

ஒரு கொலைக்குற்றம் நடந்தாலே, குற்றவாளியை அடையாளம் காணுதல், கொலைக்கான காரணத்தை அறிதல், கொலை செய்யப் பயன்பட்ட ஆயுதத்தைக் கைப்பற்றுதல், குற்றவாளி சம்பவம் நடந்த இடத்தில் அந்த நேரத்தில் இருந்ததற்கான அறுதியான ஆதாரத்தை (விஞ்ஞான பூர்வமான ஆதாரம்; கண்ணால் கண்டேன் என்று சொல்லும் சாட்சிகள் அல்ல) சமர்ப்பித்தல் எனப் பல கட்டங்கள் இருக்கின்றன. சிங்களத்தைப் பொறுத்தவரையில், அதன்மீது வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே இதுநாள்வரை சுமத்தப்பட்டு வந்திருக்கிறது. தற்போதுதான் சில அறுதியான ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இதை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வதிலேயே நமது வெற்றி தங்கியுள்ளது.

அதைச் செய்துமுடிக்க எந்தப் பேயுடன் குடும்பம் நடத்தினாலும் தகும். :wub:

இந்தக் காணொளியில், சர்வதேச போர்க்குற்ற வழக்குகளில் பங்குபற்ற சட்டத்தரணியின் பேட்டியைப் பாருங்கள். போர்க்குற்றம் நடைபெற்றிருந்தால் ஒருநாள் அது வெளிச்சத்துக்கு வந்தே தீரும். அதற்கான வழித்தடத்தை அமைத்துக்கொடுப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Dublin analysis complements Alston's findings on execution-video

[TamilNet, Thursday, 14 January 2010, 11:56 GMT]

A point-by-point rebuttal to Sri Lanka experts' response on the authenticity of Channel-4 video is being presented to the War-Crimes Tribunal being held in Dublin on the 14th and 15th of this month, spokesperson for the US-based pressure group, Tamils Against Genocide (TAG) said Thursday. The report complements UN Special Rapporteur, Prof. Philip Alston's, findings that the video is authentic. The rebuttals expose faulty assumptions, and erroneous conclusions made by Sri Lanka experts, whose "independence" was questioned by Alston, the report said.

The report identifies eleven issues raised by the Sri Lanka experts and shows that the issues are based on "either erroneous technical analyses, or arbitrary and/or unsubstantiated assertions."

VideoReportTAGpic_84771_200.jpg

The report points out that one of the key errors the Sri Lanka experts made was to calculate the distance between the weapon and the victim based on the video/audio delay measured from the recording. The report details how three other factors contribute to the "delay" of the audio, and that the distance should not be calculated assuming the delay is "only" due to the speed of sound.

Further, an analysis received from a technical expert from popular cell-phone manufacturer is also included in the report.

Summary of findings from two forensic firms based in Colorado, the Image and Sound Forensics (ISF), and Firearms & Ballistics Consultants, are included in the report. TAG said notarized affidavits are available for any legal matters arising from these findings.

Philip Alston, the Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions, in a press meet earlier this month called for wider investigations into allegations of war crimes in Sri Lanka after three forensic experts hired by Alston and two previous independent analyses by Times On Line (UK), and TAG confirmed the authenticity of the video broadcast by Channel-4 in August. :wub:

  • தொடங்கியவர்

போரின் ஒரு கட்டத்தில் அகாசி சிறீ லங்காவந்திருந்தபோது (எல்லோருமெதிர்பார்த்தது போரை நிறுத்துவதற்கு வந்தார் எண்டு)பத்திரிகையாளர் மாநாட்டில் மனுசன் சொன்னது,"புலிகளுடன் இணக்கதிற்கு வருவற்கு தான் எவ்வளவோ முயன்றார் எண்டு".

மகிந்தவிற்கு நோகாமலும், தமிழரை புலிகளிடமிருந்து அன்னியப்படுத்துவது போலுமிருந்தது கருத்து.இன்று பார்வைக்கு புலிகள் இல்லை.அதனால்,சரத் வந்ததும் த.தே.கூ வின் வாயை சுலபமாக அடக்கி(தமிழர் தேசியம்,பாரம்பரியபூமி,சுயநிர்ணயம் போன்ற வார்த்தைகளை தங்களிடம் தவிர்க்குமாறு வேண்டி),ஏதேதோ சிங்கள-தமிழ் மக்கள் உடன்பாடு,இணக்கப்பாடு,சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்ற தோரணையில் காலத்தை ஓட்டி,தேவையானவற்றை சரத் மூலமாக அமெரிக்க அந்நிய சக்திகள் அடைய முயலும் என்பது மட்டும் இப்போதைக்கு வெள்ளிடை மலையாக புரிகின்றது.இந்தியாவும் தன் பேருக்கு சுயாட்சி,அதிகாரப்பகிர்வு என்று கூட்டமைப்பை துணையாக கொண்டு முடிந்ததை சுருட்டப்பார்க்கும்.

ஆக சரத் வந்தால் நாங்கள் மகிந்தவை பழி வாங்கி விட்டோம்.அப்பாடா தலைவலி முடிந்தது என்று கூட்டமைப்பு தனது கை தேர்ந்த கலைகளை,சித்து விளையாட்டுக்களை மறைமுகமாக அமையும் அரசுடன் தொடரும்.ஈழ தமிழரின் போரட்டம்,கனவு என்று கிழிந்த பாயுடன் மட்டுப்பெறும்.

மகிந்த இருந்தால் இன்னும் ஈழ பிரச்சனை (புண் )ஆறவில்லை என்று கிளம்பியிருக்கும் நெருப்பையாவது அணையாமல் கொண்டு செல்லலாம் என்பது எனது கருத்து.

எமது போராட்டம் என்பது இப்படியான அறிக்கை அரசியலில் இருந்து வெளியே வந்த சில மாதங்கள் ஆகிவிட்டன. புலிகளின் காலத்துடன் அகாசி, பிளேக் போன்றவர்களின் சில்மிசங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. இப்போது நடைபெறும் அரசியல் தாயகத்துக்கு வெளியேதான் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மேலே நான் இணைத்திருக்கும் தமிழ்நெற் செய்தியைப் பாருங்கள். சிங்கள அரசின் திறனாளர்களால் பொய்யான காணொளி என அறிவிக்கப்பட்டதை டப்ளினில் நடந்த ஆய்வின் முடிவில் நிராகரித்துள்ளார்கள்.

சரத் பொன்சேகா இதுவரை கோதபாயவை மட்டும்தான் காட்டிக் கொடுத்துள்ளான். மற்றும்படி தனது ராணுவம் அப்பழுக்கற்றது என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறான். ஒரு வேளை சரத் பதவிக்கு வரும் பட்சத்தில் அவனும் ஒரு பொய்யன் என நிறுவப்படும் வாய்ப்புகளே உள்ளன. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சரத்துக்கு வாக்கை போடுங்கோ எண்டு சொல்லி போட்டு அமத்தி கொண்டு இருக்க வேணுமாக்கும்...

மன்னிக்கவேண்டும் தயா!!!

உங்களது விவாதம் தமிழர்களின் வாக்கு சரத்துக்கா? ராஜபக்சவுக்கா? என்பது வெளிப்படையானதாக இருந்தாலும், இதைவிட பல பாரதூரமான விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

நான் தனிப்பட்ட முறையில் பதிலளிப்பதாக இருந்தால் இந்த தேர்தலே தமிழர்களுக்கு தேவையில்லாத ஒன்று என்பதை உறுதியாக கூறுவேன்.

இங்கு நாங்கள் அதாவது தமிழர்கள் வாக்கு பதிந்தால் என்ன பதியாவிடில் என்ன இரண்டுபேரில் ஒருவர் ஜனாதிபதியாவது உறுதி, அதையாவது நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் தானே?

அதுமட்டுமல்லாது இதுவரை காலமும் தங்களை தமிழ்த்தேசிய அரசியல் கட்சி என்று கூறிக்கொண்ட கூட்டணியும் பல துண்டுகளாக உடைக்கப்பட்டுவிட்டன அந்த துண்டுகளும் இன்னும் சிறுதுண்டுகளாக சிதறடிக்க முடிவாகிவிட்டன.

தயா! வெளிநாடுகளில் இருந்துகொண்டு அதாவது கணனிக்கு முன் சொய்சாக குந்திக்கொண்டு, எதையும் நினைத்தமாதிரி பதிவு செய்யலாம், விமர்சகர்களிடமிருந்து பாராட்டுக்களையும் பெறலாம்.

ஆனால் களத்தின் நிலைமையோ தலைகீழானது என்பதையும் மனதில் நிறுத்தி விமர்சனங்களை பதிவது நல்லது.

உங்களது இந்த விவாதில் பல விடயங்களை ஆதாரங்களுடன் பதிவு செய்ய விரும்பியும் சில விடயங்கள் என்னை தடுக்கின்றன.

முக்கியமாக உங்களது வார்த்தைப்பிரயோகத்தை கவனத்தில் கொள்ளவும்.

நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சிங்களவருக்கு வாக்களிப்பதின் மூலம் இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையையும், சிங்கள அரசியல் யாப்பையும் அங்கீ கரிக்கிறீர்கள்... இதுவரை காலமும் உங்களுக்கு பிரச்சினையாக இருந்த இவை அனைத்தும் பிரச்சினை அற்றும் வேறு ஒண்று பிரச்சினையாகவும் இருக்கிறது...

ஆக ஒரு சிறிய கோட்டுக்கு அருகில் மிகப்பெரிய கோட்டை போட்டு தங்களின் தலைமையை உங்களை அங்கீகரிக்க வைக்கிறது சிங்களம்... நாளை இதே அரசியல் யாப்பின் அடிப்படையில் தமிழர்களுக்கு தீர்வு எண்ற ஒண்றை வழங்கினாலும் வாங்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு இருக்கிறது.. அதைவிட வேறு வளியும் இல்லை.. அப்படி தீர்வு எண்று எதை தருவார்கள் எண்றால் உண்மையில் ஒண்றும் இல்லை... இப்போது இருக்கும் ஒண்றையே வேறு ஒரு பெயரில் தரப்போகிறார்கள்...

சிங்கள அரசியல் யாப்பை தாயக தமிழர்கள் அங்கீகரித்து சிங்கள ஜனாதிபதிக்கு வோட்டு போடுகிறார்கள் எண்று வைத்துக்கொள்ளுங்கள்... இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் நாடுகடந்த அரசாங்கத்துக்கு ஏதாவது தேவையும் மதிப்பும் இருக்கும் எண்று நினைக்கிறீர்களா...??

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இருந்தால் இன்னும் ஈழ பிரச்சனை (புண் )ஆறவில்லை என்று கிளம்பியிருக்கும் நெருப்பையாவது அணையாமல் கொண்டு செல்லலாம் என்பது எனது கருத்து.

நீங்களும் நானும் இருக்கும் நாட்டிலிருந்து அடுத்த கட்டத்துக்கு எப்பவும் ஏதும் செய்யலாம்தான்

ஆனால்

ஈழத்தில் மகிந்தவின் 8 வருட ஆட்சியில் (2+6 = 8)ஒரு தமிழனும் இருக்கமாட்டான்

அப்புறம் எதுக்கு யாருக்கு போராட்டம்....???

தயா / நிழலி..

தனிநபர் மீதான போர்க்குற்ற விசாரணை ஒரு நாட்டைப் பாதிக்குமா என்று கேட்டிருக்கிறீர்கள். ஒரு நாட்டின் அதிபராக இருந்தவர் போர்க்குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவரது ஆட்சிக்காலத்தில் அவர்கள் சொல்லி வந்த சமாதானங்கள், வெளிவிட்ட அறிக்கைகள் போன்றவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகின்றது. அவ்வாறான ஒரு நிலை தோன்றும்போது, நிலைமைகள் எமக்குச் சாதகமாகவே மாறும் எனக் கொள்ளவேண்டும். அந்த இளைஞர்களின் படுகொலையை ஏன் ஓரிரு ராணுவ அதிகாரிகளின் தலையில் சுமத்தி சிங்களம் தப்பியிருக்கக் கூடாது? (பின்னர் அவர்கள் மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று கூறி விடுவித்தும் இருக்கலாமே) காரணம் உண்டு. அவ்வாறு அவர்கள் தப்பித்துக்கொள்ள முனையும் பட்சத்தில், இன்னும் எத்தனை இதேமாதிரியான குற்றங்கள் நடைபெற்றன என்கிற கேள்வி எழும். அதைத் தவிர்த்துக்கொள்ளவே, சிங்களம் இன்னும் அக்குற்றங்களை மறுதலித்து வருகிறது. காணொளி இப்போது உண்மையென நிறுவப்பட்டுவிட்டதால் இனிமேல் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிடும் அனைத்து விதமான முனெடுப்புக்களும் சர்வதேச ஊடகங்களில் இடம் பிடித்த செய்திகள் அண்று... C4 காணொளியை கூட தமிழர்களின் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் ( சிங்களவர்கள் இணைந்த ) குழுவின் அயராத முயற்ச்சியின் பலன் மட்டுமே... இதை ஐநா தன்னிச்சையாக எடுத்து விசாரிக்கிறது என்பது கூட தவறாக இருக்கலாம்... பின்புலத்தில் கடுமையாக வேலை செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை...

ஐநா முதல் அமெரிக்காவரை இப்படியான குற்றச்சாட்டுகளை எடுத்து கொள்கிறார்கள் எண்றால் கூட அதுக்கு காரணம் இலங்கையில் இருப்பது தங்களுக்கு ஒவ்வாத ஆட்ச்சி என்பதினால் தான்...

மேலும், போர்க்குற்றங்களை ஒருசில தனிநபர்கள் மீது சுமத்திவிட்டு அந்த நாடு தப்பித்துக்கொள்ளலாம் என்றால் சேர்பியாவுக்கு ஏன் இந்த நிலை? சூடானைப் பற்றிப் பேசியிருந்தீர்கள். சூடானின் பஷார் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப் பாடாமல் இல்லை. ஆனால் சர்வதேச விசாரணை ஒரு நடத்தப்படாமல் எதையுமே நிறுவ முடியாது. குற்றச்சாட்டுக்கள் என்பவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. ஆதாரபூர்வமாக நிறுவப்படும் பட்சத்தில் மட்டுமே அதை ஒட்டி கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

கொசொவோவில் போராடிய அமைப்புகூட பயங்கர வாத அமைப்பு எனப் பிரகடனப்படுத்தப் பட்டதே. அதனால் அது விடுதலை அடையாது போய்விடவில்லை. சேர்பியா ஏற்கனவே மாட்டிக்கொண்ட புண்ணியத்தால் அதுவும் விடுதலை அடைந்தது.

காரணம் சுலபமானது... சூடான் சீன , இஸ்லாமிய சார்பு நாடு, பொஸ்னியாவை கைகளுக்குள் வைத்திருக்கும் சேர்பியா ரஸ்யாவின் கூட்டு நாடு...

அமெரிக்க கூட்டு நாடுகளின் நட்பு நாடுகளில் சேர்பியா, சூடானை விட அதிகமான மனித உரிமை மீறல்கள் நடந்து இருக்கின்றன... அவை எதையும் அமெரிக்க நட்பு நாடுகள் கிளறியது கிடையாது... உதாரணத்துக்கு ஜேர்மனி, இத்தாலி போண்றவை இரண்டாம் உலகப்போரின் போதும் கிட்லரும் முசோலினியும் மட்டுமே கொடுங்கோலராக சித்தரிக்க பட்டனர் அந்த நாடுகளை சேர்ந்த வீரர்கள் மக்கள் நல்லவர்களாக பாதுகாக்க பட்டனர்... அமெரிக்கா வியட்நாமிலும், ஈராக்கிலும், ஆப்கானிலும்... இங்கிலாந்து எழுபதுகளில் Fork land தீவுகளிலும்.. இந்தியா இலங்கையிலும், பங்களதேசிலும்... பாக்கிஸ்தான் உள்நாட்டிலும் சில வெளிநாடுகளிலும்... செய்தன செய்து கொண்டும் இருக்கின்றன.... இந்த வரிசையில் இலங்கையும் சேர்ந்து கொள்ளும்...

நேச நாடுகளிம் ஆதரவு பட்டியலில் இருக்கும் ஜேர்ஜியாவில் கூட அடக்கு முறைகள் நடக்கினறன... ஒசிற்றேற்றியா எனும் நாடு கூட திக்கிதிணறி சுதந்திரம் கேக்கின்றது.... ஆனால் மேற்கு நாடுகள் ஜோர்ஜியாவை எதிர்த்து போர்குற்றம் எண்று எதையாவது அறிவிப்பார்கள் எண்றா நினைக்கிறீர்கள்...??

சரத் பொன்சேகா இலங்கையின் ஜாதிபதியானால் அந்த கௌரவ கொலைகாற நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒண்று...

ஈழத்தில் நடந்தது சர்வதேசத்துக்குத் தெரியாதா என்று கேட்டிருக்கிறீர்கள். தெரியாமல் இல்லை. ஆனால் ஆதாரம் இல்லை என்றே சொல்ல வருகிறேன். செய்மதியில் குண்டுவிழுந்த குழிகளையும், கிழிந்த தார்ப்பாய்களையும் காட்டினால் அது சிங்களம் செய்த அராஜகம்தான் என்று எப்படிச் சொல்வீர்கள்?

ஒரு கொலைக்குற்றம் நடந்தாலே, குற்றவாளியை அடையாளம் காணுதல், கொலைக்கான காரணத்தை அறிதல், கொலை செய்யப் பயன்பட்ட ஆயுதத்தைக் கைப்பற்றுதல், குற்றவாளி சம்பவம் நடந்த இடத்தில் அந்த நேரத்தில் இருந்ததற்கான அறுதியான ஆதாரத்தை (விஞ்ஞான பூர்வமான ஆதாரம்; கண்ணால் கண்டேன் என்று சொல்லும் சாட்சிகள் அல்ல) சமர்ப்பித்தல் எனப் பல கட்டங்கள் இருக்கின்றன. சிங்களத்தைப் பொறுத்தவரையில், அதன்மீது வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே இதுநாள்வரை சுமத்தப்பட்டு வந்திருக்கிறது. தற்போதுதான் சில அறுதியான ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இதை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வதிலேயே நமது வெற்றி தங்கியுள்ளது.

நடமாடும் சாட்ச்சிகள் இலங்கையின் இன்னும் இருக்கிறார்கள் இசை... நடந்து முடிந்த அனர்த்தத்தை நேரடியாக அனுபவித்து பார்த்தவர்களை விடவா சிறப்பான சாட்ச்சிகளை இவர்களால் தேட முடியும் என்கிறீர்கள்...

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இலங்கை அரசினால் முகாம்களுக்குள் அடைபட்டு வன்னியில் இருந்து வந்து முகாமிலுள் இருந்தவர்கள் எனும் அத்தாச்சி பத்திரங்கள் இலங்கை அரசினால் வழங்க பட்ட ஆதாரங்களுடன் மனித உரிமையாளர்களுக்கு சாட்ச்சியம் அளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்... ஆனால் சாட்ச்சியம் பெற்று கொள்ளத்தான் யாரும் தயாராக இல்லை...

ஏன் இங்கிலாந்திற்கு வந்த கிருஸ்ண வேணி அவர்களே சிறப்பான உதாரணம்.... யாராவது சாட்ச்சியம் பெற்றார்கள் அல்லது பெறுவார்கள் எண்றா நினைக்கிறீர்கள்...??

அதைச் செய்துமுடிக்க எந்தப் பேயுடன் குடும்பம் நடத்தினாலும் தகும். :D

நாளைக்கு நீங்கள் கருணாவையும், டங்கிளசையும் கூட ஏற்று கொள்ள வேண்டி இருக்கும்...

இந்தக் காணொளியில், சர்வதேச போர்க்குற்ற வழக்குகளில் பங்குபற்ற சட்டத்தரணியின் பேட்டியைப் பாருங்கள். போர்க்குற்றம் நடைபெற்றிருந்தால் ஒருநாள் அது வெளிச்சத்துக்கு வந்தே தீரும். அதற்கான வழித்தடத்தை அமைத்துக்கொடுப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும்.

அது எல்லாம் நேச நாடுகளின் கூட்டுக்குள் வராத நாடுகளின் பட்டியலில் இருப்பவர்களுக்கு... நேச நாடுகளின் நட்பு நாடுகள் எண்றும் குற்றம் புரிவது இல்லை.. இதுதான் நீண்டகால உலக ஒழுங்கு... \

சிங்களவர் எதிரி நாடுகளாக இருக்கும் மட்டுமே குற்றம் புரிந்தவர்... நட்பாயிட்டா நல்லவர்கள்...

Edited by தயா

சரத் பொன்சேகா இதுவரை கோதபாயவை மட்டும்தான் காட்டிக் கொடுத்துள்ளான். மற்றும்படி தனது ராணுவம் அப்பழுக்கற்றது என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறான். ஒரு வேளை சரத் பதவிக்கு வரும் பட்சத்தில் அவனும் ஒரு பொய்யன் என நிறுவப்படும் வாய்ப்புகளே உள்ளன. :D

இந்த நிரூபிக்கிறது எண்டு சொல்கிறீர்களே... யார் இதை செய்ய போகிறார்கள்....?? நானும் நீங்களுமா..??? எனக்கு விளங்கவில்லை எதை நீங்கள் நம்புகிறீர்கள். யாரை நம்புகிறீர்கள் எண்று...

  • கருத்துக்கள உறவுகள்

நடமாடும் சாட்ச்சிகள் இலங்கையின் இன்னும் இருக்கிறார்கள் இசை... நடந்து முடிந்த அனர்த்தத்தை நேரடியாக அனுபவித்து பார்த்தவர்களை விடவா சிறப்பான சாட்ச்சிகளை இவர்களால் தேட முடியும் என்கிறீர்கள்...

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இலங்கை அரசினால் முகாம்களுக்குள் அடைபட்டு வன்னியில் இருந்து வந்து முகாமிலுள் இருந்தவர்கள் எனும் அத்தாச்சி பத்திரங்கள் இலங்கை அரசினால் வழங்க பட்ட ஆதாரங்களுடன் மனித உரிமையாளர்களுக்கு சாட்ச்சியம் அளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்... ஆனால் சாட்ச்சியம் பெற்று கொள்ளத்தான் யாரும் தயாராக இல்லை...

ஏன் இங்கிலாந்திற்கு வந்த கிருஸ்ண வேணி அவர்களே சிறப்பான உதாரணம்.... யாராவது சாட்ச்சியம் பெற்றார்கள் அல்லது பெறுவார்கள் எண்றா நினைக்கிறீர்கள்...??

தற்போது நேரப்பற்றாக்குறை காரணமாக உங்கள் நீண்ட பதிலில் இப்பகுதிக்கு மட்டும் எனது கருத்தை எழுதுகிறேன். மன்னிக்கவும்.

நடமாடும் சாட்சியங்களோ, கிருஷ்ணவேணியோ நவீனகால குற்றவிசாரணைகளில் முக்கியத்துவம் குறைந்தவை. வெறும் சாட்சிகளின் வாக்குமூலங்களால் கொலைவழக்குகளில் தவறான தண்டனை பெற்று சிறைகளில் அடைபட்டிருப்பவர்கள் பலர். மேற்குலக நாடுகள் சாட்சிகளை விடுத்து விஞ்ஞான முறைக்கு புலன்விசாரணைகளுக்கு முன்னேறி விட்டன. நான் இணைத்த காணொளியில், ஜெஃப்ரி ரொபெர்ட்சன் சொல்லவருவதும் அத்தகைய ஒரு விசாரணையைத்தான். ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு வாக்குமூலங்கள் உபயோகப்படலாமே தவிர, குற்றத்தை நிறுவ அவை பயன்பட மாட்டா.

இன அழிப்புக்கான தமிழர் அமைப்பும் நோட்ரி பப்ளிக்கின் முத்திரையுடன் கூடிய சில சாட்சிப் பத்திரங்களைக் கையளிப்பதாகக் கூறியிருக்கிறது. ஆனால் அதை ஆரம்பகட்டத்துக்கு வேண்டுமானால் உபயோகிப்பார்களேதவிர, குற்றத்தை நிறுவ அவை மட்டும் போதாது. தீர்ப்பில் ஒரு பாகமாக மட்டும் வேண்டுமென்றால் அவை இடம்பெறக்கூடும்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு இன்னமும் தண்டனைகள் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மேற்குலக நாடுகளிலோ, ஐநா விசாரணைகளிலோ இவ்வாறு செய்யப்படுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.