Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரவைக்கும் இந்தியத் தமிழ்ப் பெண்கள்.... அலரும் அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவாழ் இந்திய இளைஞர் அவர். யு.எஸ்.ஸுக்கு விமானமேறும் முன் அவசரமாக அவர் நம்மைப் பார்க்க விரும்பியதால், விமான நிலையத்தில் பிரசன்னமானோம்.

கண்ணில் ரேபான் குளிர்க்கண்ணாடி, ஆப்பிள் சிவப்பு நிறம், நெற்றியில் விழும் சுருள் முடி, சுருக்கமாகச் சொல்லப்போனால் இளவரசன் போல இருந்தார் அந்த இளைஞர்.

அப்படி என்ன பேசப்போகிறார்? சர்வதேச பயங்கரவாதம், பேரழிவு ஆயுதம், அணுசக்தி ஒப்பந்தம், டாலர் மதிப்பு உயர்வு பற்றி ஏதாவது பேசப்போகிறாரா என்றபடி அவரது முகத்தை நாம் ஏறிட்ட நேரம், அந்த இளைஞரின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர்.

‘‘விளக்கைப் பிடிச்சுக்கிட்டு கிணற்றில் விழுந்த கதை மாதிரி ஆயிட்டுது சார் என் வாழ்க்கை. என்னால் ஒரு பாவமும் அறியாத எழுபது வயதைத் தாண்டிய என் அப்பாவும், அம்மாவும் சிறைக்குப் போகப் போகிறார்கள் சார்!’’ என்று அரற்ற ஆரம்பித்தார் அவர். அது விமானநிலையம் என்பதை அவருக்கு நினைவூட்டி, ஆசுவாசப்படுத்தி பேச வைத்தோம். பெயர் வேண்டவே வேண்டாம் என்றபடி பேசத் தொடங்கினார் அவர்.

‘‘சென்னைதான் என் சொந்த ஊர். ஆசாரம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். இரண்டு அக்காள், இரண்டு அண்ணன்கள். நான் கடைக்குட்டி. அண்ணன்கள் இருவரும் கலி போர்னியா மாநிலத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களாக கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அக்காள்கள் திருமணமாகி டில்லியிலும், மும்பையிலும் வசிக்கிறார்கள். எங்களை ஆளாக்கிய அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா ஹவுஸ் ஒய்ப்.

அக்காள் இருவருக்கும் திருமணம் நடந்தபின் மூத்த அண்ணா திருமணம் செய்ய நினைத்திருந்ததால் அப்படியிப்படியென்று அவருக்கு 46 வயதாகி விட்டது. நம் கலாசாரத்துக்கு ஒத்துப் போகிற மாதிரி, குறைவாகப் படித்த, குடும்பப்பாங்கான பெண் வேண்டும் என்று அவர் விரும்பியதால் பட்டுக் கோட்டை பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்தோம்.

பட்டப்படிப்பு படித்திருந்த அவளை, அண்ணா வுக்குப் பிடித்துப்போனதால் திருமணம் நடந்தது. அண்ணனுடன் அமெரிக்கா போன அவள், போன ஒரே மாதத்தில் அண்ணாவிடம் வம்பு செய்ய ஆரம்பித்தாள். உறவுக்கு முயலும்போது ஹிஸ்டீரியா வந்த மாதிரி அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறாள். ‘நீ கிழவன். உன்னுடன் வாழ்வது நரகம். என்னைத் தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று அவள் மிரட்ட, அண்ணா நொறுங்கிப் போனார். ‘என்னைப் பிடிக்கவில்லை என்றால் திருமணத்துக்கு நீ மறுத்திருக்கலாமே?’ என்று அண்ணா சொன்னபோது, ‘வீட்டில் என் விருப்பத்தை யார் கேட்டார்கள்? ‘அமெரிக்க மாப்பிள்ளையைக் கட்டிக் கொண்டால் நீ இஷ்டம் போல இஷ்டப்பட்டபடி வாழலாம். அவனைப் பிடிக்காவிட்டால் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடுக்கலாம். நீ கேட்கிற பணத்தை அவன் கதறிக் கொண்டு உன் காலடியில் வைப்பான்’ என்றார்கள். அந்த யோசனை பிடித்திருந்ததால்தான் நான் திருமணத்துக்குச் சம்மதித்தேன்’ என்றிருக்கிறாள்.

அதிர்ந்து போன அண்ணா, ‘சீ! நீயும் ஒரு பெண்ணா?’ என்று திட்ட, அதற்காகவே காத்திருந்ததுபோல அவள், அமெரிக்க போலீஸாரிடம் போய், கணவர் தன்னை சூடு வைத்தும், மின்சாரம் பாய்ச்சியும் கொடுமைப்படுத்துவதாகப் புகார் கூறிவிட்டாள். ஆத்திரத்தில் அண்ணா அவளை கைநீட்டி அடித்துவிட, அண்ணா மீது வழக்கு விழுந்தது. அந்தப் பெண் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டாள்.

ஊருக்கு வந்த வேகத்தில் என் அப்பா, அம்மா, அண்ணன், அக்காள்கள் எல்லோர் மீதும் அவள் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்து விட்டாள். ஜீவனாம்சமாக ஒரு கோடி ரூபாய் கேட்டாள். திருமணமாகி அவள் எங்கள் வீட்டில் இருந்ததே இரண்டு நாட்கள்தான். அந்த இரண்டு நாளில் நாங்கள் ஓராயிரம் கொடுமை செய்ததாக இருநூறு பக்கப் பட்டியல் தயார் செய்து கோர்ட்டில் கொடுத்து விட்டாள்.

இதனால் என் அப்பா, அம்மா, அக்காள்கள் இருவரும் 15 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவர வேண்டியதாயிற்று. அண்ணாவுக்கு வேலை போனது. வழக்குக்காக அவர் அமெரிக்காவில் இருந்து இங்குவந்து மீண்டும் அமெரிக்கா போய் புதுவேலை தேடுவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிட்டது. அண்ணாவின் மனைவி எங்கள்மேல் தொடர்ந்த பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில்தான் அடுத்த கொடுமையும் நிகழ்ந்தது’’ என்ற அந்த இளைஞர் தன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.

‘‘அண்ணாவுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து திருமணம் என்றாலே பதுங்க ஆரம்பித்த என் 2-வது அண்ணனுக்கும் வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினார்கள். கும்பகோணத்தில், முதுகலை முடித்த ஒரு பெண் கிடைத்தாள். ‘அமெரிக்க மாப்பிள்ளை, மாதம் 40,000 யு.எஸ்.டாலர் சம்பளம்’ என்றதும் அவளது வீட்டார் குதிபோட்டு வந்தனர். ‘கல்யாணம் ஆனதும் பெண்ணை அமெரிக்காவுக்கு அழைச்சுண்டு போவீர்களா? அமெரிக்க பிரஜைக்கான கிரீன் கார்டு அவளுக்குக் கிடைக்குமா?’ என்பதில்தான் பெண்வீட்டார் அநியாய ஆர்வம் காட்டினார்கள்.

திருமணம் நடந்து அண்ணன் புதுமனைவியுடன் விமானமேறினார். அங்கு போனதும் அந்தப் பெண்ணுக்கு கால் ஒரு இடத்தில் பாவவில்லை. கண்டவர்களுடன் போனில் பேசுவது, ஆண் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு நைட்கிளப்களில் சுற்றி குடித்து, கூத்தடிப்பது என்று ஆரம்பித்து விட்டாள். ‘நீ இந்தியப் பெண்தானா?’ என்று அண்ணா எரிச்சல்பட்டுக் கேட்ட போது அவள் அளித்த பதில் ‘நான் உனக்குக் கழுத்தை நீட்டியதே இதற்காகத்தான் கண்ணா!’

தகராறு முற்றி, என் 2-வது அண்ணன் அந்தப் பெண்ணை கும்பகோணத்துக்குக் கொண்டுபோய் பிறந்த வீட்டில் விட்டுவிட்டார். அவர்கள் அமெரிக்க மாப்பிள்ளையைப் பிடித்ததே வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடுத்து கோடிக்கணக்கில் கறக்கத்தான் என்பது பின்னர்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. மூத்த அண்ணாவுக்கு நேர்ந்த கதி இளைய அண்ணாவுக்குத் தெரியும் என்பதால் அவர், அந்த கும்பகோணம் பெண்ணிடம் நஷ்டஈடாக ரூ.15 லட்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தார். அவளோ, ‘ரூ.2 கோடியை வை!’ என்று ஒற்றைக்காலில் நின்றாள்.

அண்ணன் அதற்கு மசியாத நிலையில், எங்கள் மேல் வழக்கு விழுந்தது. அனைவரும் சிறைக்குப் போய் முன்ஜாமீனில் வெளிவந்தோம். வழக்கு நடந்து வந்த வேளையில் இப்போது ஒரு புரோக்கர் மூலமாக அந்தப் பெண், ரூ.50 லட்சம் கேட்க, நாங்கள் ரூ.25 லட்சத்தில் நிற்கிறோம். இந்தப் பிரச்னையில் என் அக்காள்கள் இருவரும் கூட சிறை செல்ல நேரிட்டதால் எரிச்சலடைந்த என் அத்தான்கள் ‘வழக்கு முடியும் வரை இருவரும் பிறந்த வீட்டில் வாழாவெட்டியாக இருங்கள்’ என்று அவர்களை பிறந்தகத்துக்கு அனுப்பி விட்ட கொடுமையும் நடந்தது.

நான் விசாரித்தபோது, இப்படி ஜீவனாம்சம், வரதட்சணை வழக்குத் தொடர்ந்து பல கோடிகளைக் கறப்பதற்காகவே இந்தியாவில் பலர் அமெரிக்க மாப்பிள்ளைகளைத் தேடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதில் சிக்கிய அமெரிக்க மாப்பிள்ளைகள் பலர் வேலையை மட்டுமின்றி அமெரிக்கக் குடியுரிமையையும் இழந்திருக்கிறார்கள். என் அண்ணன்களுக்கும் இதுதான் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

இதற்குள் சூடுபட்ட பூனைபோல ஆகிவிட்ட நான், ‘இந்தியப் பெண்ணா? ஐயோ வேண்டாம்!’ என்று உஷாராகி, அமெரிக்காவில் ஒரு வெள்ளைக்கார பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டேன். ஒரு வருடம் மட்டுமே என்னுடன் வாழ்ந்த அவள் எக்காரணம் கொண்டும் எனக்கு பிள்ளை ஒன்றைப் பெற்றுத் தர மறுத்துவிட்டாள். ‘ஒரு கருப்பனுடன் என்ஜாய் பண்ணலாம். ஆனால் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என்பது அவளது பாலிஸி.

அந்த அமெரிக்கப் பெண்ணுக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ் இருந்ததால் அவளை டைவர்ஸ் செய்து விட்டேன். இனி என் வாழ்வில் திருமண பந்தமே கூடாது என்று ஒரு சன்னியாசி போல லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்தேன். ஆனாலும் விதி ‘இந்தியப் பெண்’ வடிவத்தில் வந்து என்னைப் டித்துக் கொண்டது’’ என்ற அந்த இளைஞர் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு சோகக் கதையைத் தொடர்ந்தார்.

‘‘என் வாழ்வில் இனி திருமணமே வேண்டாம் என்றிருந்த நிலையில், என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள், ‘ராஜகுமாரன் மாதிரி இருக்கும் நீ சும்மா இருப்பதா? உன் அந்தஸ்துக்குத் தக்கபடி ஒரு பெண்ணைப்பார். எந்தப் பிரச்னையும் வராது’ என்று ஆசை காட்டினார்கள். எனக்காக அவர்களே மேட்ரிமோனியல் விளம்பரம் செய்தார்கள்.

அந்தவகையில் என் இ-மெயிலுக்கு பெண்களின் பெற்றோர்கள் பலர் பயோடேட்டா அனுப்பினார்கள். ஆனால் ஒரு பெண் தன்னிச்சையாக அவளே அவளது பயோடேட்டாவை அனுப்பியிருந்தாள். புகைப்படத்தில் அப்சரஸ் மாதிரி அவள் அழகாக இருந்தாள். அவளை நான் தொடர்பு கொள்ளாத நிலையிலும் அவள் விடாமல் எனக்கு இ-மெயில் அனுப்பினாள். திடீரென ஒருநாள் சாட்டிங்கில் பேசினாள்.

‘‘நான் பேரழகி. என்னைத் துரத்தும் எந்த ஆண் மகனையும் எனக்குப் பிடிக்காது. நான் விரும்புகிற ஆணை நான்தான் துரத்தித் துரத்தி காதலிப்பேன் என்று என் ஜாதகம் சொல்கிறது. அவன் என்னைவிட வயதில் சின்னவன் என்றும் ஜாதகத்தில் இருக்கிறது. அதுபோல எனக்கு 32 வயது. உனக்கு 31 வயது. நான் தேடிய ஆண்மகன் நீதான்’’ என்று அவள் சாட்டிங்கில் பிதற்ற ஆரம்பித்தாள்.

அவள் பைத்தியமோ என்று நினைத்து தவிர்த்துப் பார்த்தேன். அவளோ போனில் வாய்விட்டுக் கதற ஆரம்பித்தாள். ஒருவேளை பணத்துக்காக வெளி நாட்டு மாப்பிள்ளைகளை வளைக்கும் மணப்பெண் கும்பலைச் சேர்ந்தவளோ என்ற சந்தேகத்தில், தமிழகத்தில் உள்ள என் நண்பர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரம்.

அவள் தமிழ்நாட்டின் முக்கிய நகரமொன்றில் வசிக்கும் கோடீஸ்வர வைர வியாபாரியின் மகள். முதுகலை முடித்தவள். வீட்டில் அவளுக்கு வேலை செய்ய மட்டுமே மூன்று வேலைக்காரிகள் இருக்கிறார்கள். அவளது பங்களாவில் மொத்தம் 9 கார்கள். அவளது அப்பா அவளுக்காக சிம்லா முதல் கன்னியாகுமரி வரை மாப்பிள்ளை தேடிவருகிறார். அவளோ அனைத்து வரன்களையும் தட்டிக் கழித்து வருகிறாள். ‘பேரழகி என்ற கர்வத்துடனேயே மகள் வயதாகி கிழவியாகி விடுவாளோ?’ என்ற பயத்தில் அவளது அப்பா இருக்கிறார். இவையே நான் தெரிந்து கொண்ட தகவல்கள்.

அந்தப் பெண் மீண்டுமொருமுறை என்னிடம் பேசியபோது, ‘இந்தியப் பெண்கள் எல்லோருமே பிளாக்மெயிலர்கள்’ என்ற நான், என் அண்ணன்களின் கதைகளைச் சொன்னேன். கோபப்பட்ட அவள், ‘என்னையும் அப்படி நினைத்து விட்டாயா?’ என்று பொங்கினாள். திடீரென ஒரு நாள் திடுதிப்பென அவள் டூரிஸ்ட் விசாவில் அமெரிக்கா வந்து, என்முன் நின்றபோது திகைத்துப் போய் விட்டேன்.

‘உன் மீது நான் உயிராய் இருக்கிறேன். உன் மேல் எந்த வழக்கும் போட மாட்டேன் என்று வெற்று பேப்பரில் நான் கையெழுத்துப் போட்டுத்தரத் தயார்’ என்று அவள் உருகினாள். ‘நான் ஏற்கெனவே திருமணமாகி டைவர்ஸ் பெற்றவன்’ என்ற உண்மையை அவளிடம் சொன்னேன். அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘உனக்கு எத்தனை கல்யாணம் ஆகியிருந்தால் என்ன? என் புருஷன் நீதான்’ என்று என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளை ஊருக்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

ஊருக்குப் போனபிறகும் போன்கால், சாட்டிங், இ-மெயில் தொடர்ந்தது. ஒருநாள் என் இல்லத்துக்கு ஒரு பார்சல் வந்தது. பிரித்தபோது அதில், அவள் கையெழுத்துப் போட்ட வெற்று ஸ்டாம்ப் பேப்பர்கள் இருந்தன. ‘இனியும் நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தால் என் பிணம்தான் வீட்டில் கிடக்கும்’ என்று அவள் மிரட்ட, உடனே ஊருக்கு விமானமேறினேன். அப்பா, அம்மாவிடம் பேசி, இரண்டே நாளில் பத்திரிகை அச்சடித்து, சுமார் 300 பேரை அழைத்து, ஒரு கோயிலில் என் திருமணம் நடந்தது. ஒரு வார காலத்துக்குப் பின் அவளுக்கு ஒரு மாதகாலம் தாற்காலிக விசா எடுத்துக¢கொண்டு அமெரிக்கா புறப்பட்டேன்’’ என்ற அந்த இளைஞர் மீண்டும் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு வேகமாகக் கதை சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஒரு வாரம்தான் அவள் நல்லமாதிரி இருந்தாள். என் குடும்ப நண்பர்கள் இருவர் என் வீட்டுக்கு வந்த போது அவளும், நானும் சமையல் செய்து உணவு பரிமாறினோம். செக்ஸில் என்னைவிட அவள் ஆர்வமாக இருந்தாள். புதுப்புது வித்தைகளைச் சொல்லித் தந்தாள். ‘இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டபோது, ‘படித்துத் தெரிந்து கொண்டேன். ஃப்ரெண்ட்ஸ் சொல்லித் தந்தார்கள்’’ என்றாள்.

அப்பாவியாக அவள் சொன்னதை நம்பினேன். ஆணுறை பயன்படுத்தாமல் ஒருமுறைகூட அவள் என்னை நெருங்கவிடவில்லை. ‘கணவன், மனைவிக்குள் ஆணுறை எதற்கு?’ என்று நான்கேட்ட போது, ‘தாற்காலிக விசாவில்தானே என்னை இங்கே கூட்டி வந்திருக்கிறாய்? கிரீன்கார்டு வாங்கிக் கொடு. உனக்கு குழந்தையைச் சுமப்பது பற்றி அப்போது யோசிக்கிறேன்’ என்றாள்.

அதன்பின் ஊருக்குக் கிளம்பிய அவள், அங்கிருந்து போன் செய்தபோது கேட்ட முதல் கேள்வியே, ‘கிரீன் கார்டு எப்போது கிடைக்கும்?’ என்பதுதான். ‘ஒரு வருடம் என்னுடன் தங்கினால்தான் கிரீன் கார்டு கிடைக்கும். தாற்காலிக விசாவில் வந்து என்னுடன் தங்கு’ என்று நான் சொன்னபோது, தனக்கு குளிர்க் காய்ச்சல் என்று பினாத்திய அவள்,

‘உன்னிடம் ஒரு வாரத்தில் என்ன சுகம் கண்டேன்? உன் நண்பருக்கும் அவர் மனைவிக்காகவும் என்னை வெங்காயம், காய்கறி வெட்ட வைத்து விட்டாயே? நீ என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தாய். அதனால்தான் எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது’ என்றாள். ‘நான் எப்போது உன்னை செக்ஸ் டார்ச்சர் செய்தேன்?’ என்று கேட்டபோது, ‘என் மேல் அமர்ந்து நீ ஏதோ செய்ததில் என் தொடையில் ரத்தம் கன்றிப்போய் விட்டது’ என்று பச்சை பச்சையாக ஏதேதோ சொன்னாள்.

அவளுடன் செல்போனில் பேசிய அந்த நேரம் பீப்பீப் ஒலி எழுந்ததால் என் பேச்சை அவள் பதிவு செய்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். ‘இவள் யார்? ஏன் இப்படி நாடகமாடுகிறாள்?’ என்று அதிர்ச்சியாக இருந்தது. மீண்டுமொரு முறை தமிழக நண்பரை அழைத்து அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். அப்போது கிடைத்த தகவல்கள் அதிர வைத்தன.

‘அவள் பல ஆண்களுடன் தொடர்புள்ளவள். பிடித்த ஆண் கிடைத்தால் அவனை அடைந்தே தீரும் ஒரு மாதிரியான சைக்கோ அவள். திருமணம், தாலி, குடும்பம் இதிலெல்லாம் அவளுக்கு நம்பிக்கையில்லை. திடீரென வெளிநாட்டு ஆண்கள் மேல் மோகம் முட்டியதால், ஒரு கிரீன் கார்டு வாங்கி அமெரிக்காவில் செட்டிலாகிவிடும் எண்ணத்தில் திருமணம் செய்திருக்கிறாள்.

‘கார்டு கிடைக்கத் தாமதமானால் கணவன் மீது அமெரிக்க போலீஸில் டார்ச்சர் புகார் கொடுத்து, இந்தியாவில் ஜீவனாம்ச வழக்குத் தொடுத்தால் அமெரிக்க கிரீன் கார்டு கிடைத்துவிடும்’ என்று சில வக்கீல்கள் அவளுக்கு யோசனை சொல்லியிருப்பதால் தற்போது அந்த முடிவில் அவள் இருக்கிறாள். அதனால்தான் செக்ஸ் டார்ச்சர் பற்றி போனில் பேசியபோது அதைப் பதிவு செய்திருக்கிறாள். இது போக ஒரு மருத்துவரிடம் போய், தனக்குத் தொடையில் காயம், மார்பில் காயம் என்று சர்டிஃபிக்கேட் தர முடியுமா? என்று கேட்டிருக்கிறாள். அதற்காக தன்னையே அந்த மருத்துவருக்குத் தந்திருக்கிறாள்.

திருமணத்துக்கு முன் டூரிஸ்ட் விசாவில் அவள் அமெரிக்கா வந்திருந்தாள் அல்லவா? அப்போது உடனடி பாஸ்போர்ட், விசாவுக்காக சம்பந்தப்பட்ட சிலருடன் அவள் சில இரவுகளைக் கழித்திருக்கிறாள். இதையெல்லாம் எனக்குத் தெரிவித்த நண்பர், ‘எழுபது வயதைத் தாண்டிவிட்ட உன் அப்பா, அம்மா மீதும் அவள் வழக்குத் தொடுக்கும் மூடில் இருப்பதால் உஷாராக இருந்து கொள்’ என்று எச்சரித்தார்.

அதிர்ந்து போன நான் அடுத்த விமானத்தில் சென்னை வந்தேன். அவளைச் சந்தித்தபோது, ‘ஓ! டார்லிங். ரொம்ப முடியலை’ என்று குலாவினாள். அவள் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் என்மீது புகார் தந்து என்னையும், என் வயதான பெற்றோரையும் சிறைக்கு அனுப்பப் போவது உறுதி. அதற்காக யாருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அவள் தயங்க மாட்டாள். இனி என் கதி என்ன? அடிக்கடி நான் இங்கே வந்து அலைய வேண்டியிருக்குமா? கடவுளே! ஒன்றுமே புரியவில்லையே.

அந்த மனப்பாரத்தைச் சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன். இந்திய மணமகள்கள் என்றால் அமெரிக்க மாப்பிள்ளைகளை இனி எட்டியிருக்கச் சொல்லி உங்கள் பத்திரிகையில் எச்சரிக்கைக் கட்டுரை எழுதுங்கள்’’ என்று சொல்லிவிட்டு ரோலிங் சூட்கேசை இழுத்துக் கொண்டு விமானத்தை நோக்கி நகர்ந்தார் அந்த இளைஞர்.

அவர் சென்ற திசையையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Edited by நிழலி
உண்மையான மூலத்தை பிரசுரிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்தால் திருமணம் செய்யும் ஆசையே போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஜாக்கிரதை .........என்ற காலம் போய் ஆண்கள் ஜாக்கிரதையா?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளுக்கு தாயகத்தில் இருந்து வந்த பெண்களே அதுவும் வளர்ந்த பின் வந்தவர்களே இவ்வாறு நடந்து கொள்கின்ற போது... இந்திய தமிழ் பெண்கள் மட்டுமல்ல.. இலங்கைத் தமிழ் பெண்களும் தான்.

ஆண்கள்.. அலறிப் பயனில்லை.. யூஸ் அண்ட் துறோ தான்.. பெண்களைப் போலவே நாமும் வாழப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். ஒரு தரப்பு மட்டும் அன்பு பாசம்.. குடும்பம்.. கலாசாரம்.. பண்பாடு என்று பார்க்கப் போனால்.. பெண்கள்.. தலையில் ஏறி மிளகாய் அரைத்து பிரஞ் பிரட் சாப்பிட்டு விட்டு ஏப்ப விட்டுப் போவார்கள்..! :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாடுகளுக்கு தாயகத்தில் இருந்து வந்த பெண்களே அதுவும் வளர்ந்த பின் வந்தவர்களே இவ்வாறு நடந்து கொள்கின்ற போது... இந்திய தமிழ் பெண்கள் மட்டுமல்ல.. இலங்கைத் தமிழ் பெண்களும் தான்.

ஆண்கள்.. அலறிப் பயனில்லை.. யூஸ் அண்ட் துறோ தான்.. பெண்களைப் போலவே நாமும் வாழப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். ஒரு தரப்பு மட்டும் அன்பு பாசம்.. குடும்பம்.. கலாசாரம்.. பண்பாடு என்று பார்க்கப் போனால்.. பெண்கள்.. தலையில் ஏறி மிளகாய் அரைத்து பிரஞ் பிரட் சாப்பிட்டு விட்டு ஏப்ப விட்டுப் போவார்கள்..! :lol::D

நானும் அண்டுதொடக்கம் தலைகீழாய்க்கூட நிண்டு யோசிச்சுப்பாத்தன்

ஒரு இழவும் விளங்கமாட்டன் எண்டுது

ஆரோ ஒருசிலுமிசக்காரி இந்த மனுசனை

இருத்தி ஆற அமர நிதானமாய் அந்தமாதிரி தலையிலை சம்பல் அரைச்சுப்போட்டாளவை :icon_idea:

ஆராய்யிருக்கும்?????????

பொம்புளையள் எண்ட சொல்லைக்கேட்டாலே மனுசன் குந்தியிருக்கிறபக்கம் மிளகாய்த்தூள் அடிச்சமாதிரியெல்லே துள்ளிக்குதிக்குது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும் இது மாதிரியான கொடுமைகள் நடந்து விடுகின்றனவே...

பெண்களுக்கு வரதட்சணை கொடுமை சட்டம் இருப்பது போல் ஆண்களுக்கும் ஒரு சட்டம் வேண்டும் போலயே...

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புணர்வு கைகூடி வராத ஆண்களுக்கு இப்படி நடப்பது சகஜம்தானே..! :)

ஒருத்தர் 46 வயதுவரைக்கு அக்காமாருக்காக பொறுத்திருந்தாராம். பிறகு கல்யாணம் கட்டி ஏமாந்தாராம். ஏன்.. அந்த அக்காமாருக்கு சீதனம் குடுத்து கட்டிவைக்கிறதுதான் இவரின்ர வேலையா? திருமணத்தை வெறும் வியாபாரமாக்கி தாங்கள் வெறும் நுகர்வோராக மட்டும் இருக்க நினைத்தால் இதுதான் கதி.

தம்பிக்காரனைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இப்பிடியே அழுது புலம்பவேண்டியதுதான். :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அண்டுதொடக்கம் தலைகீழாய்க்கூட நிண்டு யோசிச்சுப்பாத்தன்

ஒரு இழவும் விளங்கமாட்டன் எண்டுது

ஆரோ ஒருசிலுமிசக்காரி இந்த மனுசனை

இருத்தி ஆற அமர நிதானமாய் அந்தமாதிரி தலையிலை சம்பல் அரைச்சுப்போட்டாளவை :D

ஆராய்யிருக்கும்?????????

பொம்புளையள் எண்ட சொல்லைக்கேட்டாலே மனுசன் குந்தியிருக்கிறபக்கம் மிளகாய்த்தூள் அடிச்சமாதிரியெல்லே துள்ளிக்குதிக்குது :)

என்ன நினைச்சீங்க.. எங்கட தலை என்ன அம்மி கல் என்றா..??! அதுவும் இல்லாமல்.. அவை நம்ம தலையில கை வைக்க விட்டிருவமா என்ன..அவை அரைக்க முதலே நாங்க அலேட் ஆகிடுவமில்ல..! நான் ஊர் உலகத்தில நடக்கிறதை வைச்சுச் சொல்லுறன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புணர்வு கைகூடி வராத ஆண்களுக்கு இப்படி நடப்பது சகஜம்தானே..! :)

ஒருத்தர் 46 வயதுவரைக்கு அக்காமாருக்காக பொறுத்திருந்தாராம். பிறகு கல்யாணம் கட்டி ஏமாந்தாராம். ஏன்.. அந்த அக்காமாருக்கு சீதனம் குடுத்து கட்டிவைக்கிறதுதான் இவரின்ர வேலையா? திருமணத்தை வெறும் வியாபாரமாக்கி தாங்கள் வெறும் நுகர்வோராக மட்டும் இருக்க நினைத்தால் இதுதான் கதி.

தம்பிக்காரனைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இப்பிடியே அழுது புலம்பவேண்டியதுதான். :D

வெள்ளைக்காரன் 46 வயசில கட்ட வந்தாலும் நம்மட பொட்டையள் பின்னால ஓடுவினம். உங்கின டேட்றிங் என்று போறவை யாரோட என்ன பண்ணினம் என்று கண்டிருக்கிறியளோ. நான் கண்டிருக்கிறன்.. யுனில படிக்கிற ஒருத்தி.. ஒரு பணக்கார வெள்ளை என்ற உடன அவனோட டேற்றிங் அதுஇதென்று சுத்தினத. அப்படிப்பட்ட ஜென்மங்களைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்றதையும் சொன்னா நல்லம்.

பெண்கள் இப்ப எல்லாம் மனசைப் பார்க்கிறதில்ல.. இரண்டு தான் பார்ப்பினம். ஒன்று பணம்... மற்றது விசா..! அந்தக்காலத்திலும் கவுண்மேந்து மாப்பிள்ளை என்றால் தான் கட்டுவினம். இந்தக் காலத்தில வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் தான் ரசிச்சு ருசிச்சு கட்டுவினம். இந்தக் கொடுமைகளை வியாபாரம் இல்லாமல் என்னென்று சொல்லுறீங்க. எங்கட சமூகத்தில திருமணம் என்பது வியாபாரமே. அதுதான் தாலிகட்டி பத்திரப்படுத்த வேண்டி இருக்கினம். :D

அமெரிக்காவில் ஒரு வெள்ளைக்கார பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டேன். ஒரு வருடம் மட்டுமே என்னுடன் வாழ்ந்த அவள் எக்காரணம் கொண்டும் எனக்கு பிள்ளை ஒன்றைப் பெற்றுத் தர மறுத்துவிட்டாள். ‘ஒரு கருப்பனுடன் என்ஜாய் பண்ணலாம். ஆனால் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என்பது அவளது பாலிஸி.

அந்த அமெரிக்கப் பெண்ணுக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ் இருந்ததால் அவளை டைவர்ஸ் செய்து விட்டேன்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

ஒரு மோட்டு தமிழனால் பல மோட்டு தமிழர்களுக்கு எழுதப்பட்டிருக்கும் ஒரு வினோத கற்பனை.

குண்டு சட்டிக்க குதிர ஒட்டுறது எண்டுறது இதுதானுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் 46 வயசில கட்ட வந்தாலும் நம்மட பொட்டையள் பின்னால ஓடுவினம். உங்கின டேட்றிங் என்று போறவை யாரோட என்ன பண்ணினம் என்று கண்டிருக்கிறியளோ. நான் கண்டிருக்கிறன்.. யுனில படிக்கிற ஒருத்தி.. ஒரு பணக்கார வெள்ளை என்ற உடன அவனோட டேற்றிங் அதுஇதென்று சுத்தினத. அப்படிப்பட்ட ஜென்மங்களைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்றதையும் சொன்னா நல்லம்.

பெண்கள் இப்ப எல்லாம் மனசைப் பார்க்கிறதில்ல.. இரண்டு தான் பார்ப்பினம். ஒன்று பணம்... மற்றது விசா..! அந்தக்காலத்திலும் கவுண்மேந்து மாப்பிள்ளை என்றால் தான் கட்டுவினம். இந்தக் காலத்தில வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் தான் ரசிச்சு ருசிச்சு கட்டுவினம். இந்தக் கொடுமைகளை வியாபாரம் இல்லாமல் என்னென்று சொல்லுறீங்க. எங்கட சமூகத்தில திருமணம் என்பது வியாபாரமே. அதுதான் தாலிகட்டி பத்திரப்படுத்த வேண்டி இருக்கினம். :D

நெடுக்ஸ்..

இதையேதான் நானும் சொல்லுறன். எங்கட சமூகத்தில் திருமணம் என்பது ஒரு வியாபாரம். இங்கே பதியப்பட்ட கட்டுரையில், ஒரு ஆண் ஏமாந்துவிட்டு அழுது புலம்புகிறார். இந்தச் சம்பவத்தில் தவறு ஏமாந்த ஆண்களிடமே என்று சொல்ல வருகிறேன்.

ஒரு ஆணிடம் ஏமாந்துவிட்டு ஒரு பெண் அழுது புலம்பினால் அதில் அந்தப் பெண்ணில் தான் தவறு என்பேன். நம்ம பொருட்களை நாம்தானே பத்திரமாக வச்சுக்கொள்ள வேணும்..?! :):D

எங்கள் ஊரில் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்காக உள்ளூர் காதலனை உதறித் தள்ளிவிட்டு போன பெண்கள் ஏராளம். காதலிச்சதுக்காக வெளிநாடு வந்து, உழைத்து, கடன் வாங்கி தம் காதலிகளை தம் ஊருக்கு எடுத்து விட்ட ஆண்களை விட, உள்ளூர் காதலனை உதறிய ஈழ தமிழ் பெண்கள் ஏராளம். அதே நேரத்தில், வெளிநாடு வந்தும் காதல் உணர்வால் களத்தில் நின்ற போராளியின் மனதைக் கூட மாற்றி, தன்னுடன் சேர்த்துக் கொண்ட எம் பெண்களும் சிலர் உள்ளனர் (ஒப்பீட்டளவில் இவர்களைப் போலுள்ளவர்கள் மிகக் குறைவு)

தமிழகத்தில் இதன் வடிவம் வேறு போல்......

சரோஜா/ சென்னை 68 போன்ற படங்களில் நடித்த முக்கியமான ஒருவ(ர்)ன் என் நல்ல நண்பன். அவர் டுபாயில் சொந்த வர்த்தக நிலையம் வைத்திருக்கின்றார். அவருக்கும் இந்த கட்டுரையில் வந்ததைப் போல் ஒரு பெண் வந்து, கட்டி 25 ஆம் நாளில், அவனின் பெற்றோரை போலி வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிறைக்கு தள்ளியவர். டைரக்டர் வெங்கட் பிரபு போன்றோர் தலையிட்டும் கூட அந்தக் குடும்பத்தை சரிக்கட்ட முடியவில்லை. இறுதியில் வழக்கு தொடுத்து நண்பன் கூட்டம் வென்றனர். அந்தப் பெண் திருமணம் முடித்து 10 ஆம் நாள், தன் காதலனுடன் கன்னியா குமரிக்கு போனதை என் நண்பன் அறிந்ததில் இருந்து பிரச்சனை ஆரம்பித்தது. ஆனால் சிறை சென்றது அவனது குடும்பம் :)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

"திருமணம் என்பது எல்லோராலும் அங்கிகரிக்கபட்ட ஒரு விபச்சாரம்"

இதில் விலைகள் கொடுப்பனவுகள் வரவுகள் செலவுகள் பற்றி ஆளமாக ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.................. நீண்டகால ஒப்பந்தத்திற்கு விரும்புவோர்கள். தவிர சாட்அடித்தோமா தாலிய கட்டினோமா என்றால்? என்ன இது சின்னபுள்ளதனமா எல்லோ இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் இப்ப எல்லாம் மனசைப் பார்க்கிறதில்ல.. இரண்டு தான் பார்ப்பினம். . :)

பல ஆண்களும் இரண்டைதான் பார்க்கினம் இப்படியானதுகள் நடக்க அதுவும் ஒரு காரணம். கண்களை கொஞ்சம் அசைத்து அக்கம் பக்கமும் பாக்கலாமே? பாhத்தால் யாரை கட்டுகிறோம் என்பதும் தெரியுமில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுப்புணர்வு கைகூடி வராத ஆண்களுக்கு இப்படி நடப்பது சகஜம்தானே..! :)

ஒருத்தர் 46 வயதுவரைக்கு அக்காமாருக்காக பொறுத்திருந்தாராம். பிறகு கல்யாணம் கட்டி ஏமாந்தாராம். ஏன்.. அந்த அக்காமாருக்கு சீதனம் குடுத்து கட்டிவைக்கிறதுதான் இவரின்ர வேலையா? திருமணத்தை வெறும் வியாபாரமாக்கி தாங்கள் வெறும் நுகர்வோராக மட்டும் இருக்க நினைத்தால் இதுதான் கதி.

தம்பிக்காரனைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இப்பிடியே அழுது புலம்பவேண்டியதுதான். :D

நீங்கள் பொறுப்புணர்வு என்று எதை சொல்கிறிர்கள் என்று தெரியவில்லை...

ஆனால் திருமணங்கள் வியாபாராமாக்க படுகின்றன என்பதற்க்கு இது நல்ல உதாரணம்...

அதற்க்கு இன்றைய நமது வாழ்க்கை முறையும் ஒரு காரணமே...

வெளிநாட்டு மாப்பிள்ளைகளை ஏமாற்ற என்றெ ஒரு கூட்டம் உள்ளது....

எந்த வெளிநாட்டு மாப்பிள்ளை இன்று பெண் பார்த்து திருமணம் செய்கிறான்....

விமான நிலையத்தில் இருந்து மண்டபத்திற்க்கு வருவது வந்த உடன் தாலி கட்டுவது அடுத்த மூன்றாம் நாளே பறந்து விடுவது...

இவர்களின் குடும்பத்தாற்க்கும் பெண்னை பற்றி எதுவும் தெரியாது.....

யாரென்றே தெரியாத ஒருவளை அல்லது ஒருவனை எப்படி தம் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை...

இது குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் செய்தி அல்ல இன்று பதியப்படும் வரதட்சனை கொடுமை குற்றங்களில் பாதியேனும் இது சார்ந்தவையாகவே இருக்கிறது....

Edited by tamil nanban

ஒரு குடும்பதற்குள் வந்த 3 பெண்களும் அப்படியிருப்பார்களா? :) எங்கயோ உதைக்கிறமாதிரி இருக்கே :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பொறுப்புணர்வு என்று எதை சொல்கிறிர்கள் என்று தெரியவில்லை...

பொறுப்புணர்வு என்று நான் சொல்லவருவது, அவரவர் செயல்களுக்கு அவரவரே பொறுப்பேற்றுக்கொள்ளும் பக்குவநிலையை. திருமணம் செய்வது என்று முடிவெடுத்த பிறகு மாப்பிள்ளையோ, பெண்ணோதான் அதன் வெற்றி தோல்விக்குப் பொறுப்பாளியாகின்றார். பிறகு அவன் சொன்னான் இவள் சொன்னாள் என்று பழிபோடுவதில் அர்த்தமில்லை. :)

திருமணம் என்பதே ஐந்து நாள் கிரிக்கட் விளையாட்டு மாதிரிதானே. சிலசமயம் மாப்பிள்ளை ஏமாற்றுவார். சிலசமயம் பெண் ஏமாற்றுவார். இருவரும் அனுசரித்து விளையாடினால் டிராவில் முடிந்துவிடும். சுபம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு குடும்பதற்குள் வந்த 3 பெண்களும் அப்படியிருப்பார்களா? :) எங்கயோ உதைக்கிறமாதிரி இருக்கே :D

திருமணம் என்பதே ஐந்து நாள் கிரிக்கட் விளையாட்டு மாதிரிதானே. சிலசமயம் மாப்பிள்ளை ஏமாற்றுவார். சிலசமயம் பெண் ஏமாற்றுவார். இருவரும் அனுசரித்து விளையாடினால் டிராவில் முடிந்துவிடும். சுபம். :D

:D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மோட்டு தமிழனால் பல மோட்டு தமிழர்களுக்கு எழுதப்பட்டிருக்கும் ஒரு வினோத கற்பனை.

குண்டு சட்டிக்க குதிர ஒட்டுறது எண்டுறது இதுதானுங்கோ...

வேடிக்கை வினோத கற்பனை நிகழ்ச்சி..எங்கட B.H. அப்துல்கமீதின் மொழியில்....

((((வெள்ளைக்காரி கருப்பனுக்கு பிள்ளை பெறமாட்டா என்பது, அக்கோய் நம்ம ஒபாமாவே அப்படித்தானுங்க வந்தாரு :( )))

இந்த ஆணை பெண் ஏமாற்றுவதும் பெண்ணை ஆண் ஏமாற்றுவதும் காலம் முழுவதும் நடக்கும் விடயங்கள்...தனிப்பட்ட ஒருவர் அல்லது இருவரின் அனுபவங்கள்

"அதிரவைக்கும் இந்தியத் தமிழ்ப் பெண்கள்.... அலரும் அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள்" என்ற வகையறைக்குள் வரா. அது அதை வைத்து வியாபாரமாக்கும் பத்திரிகை நண்பர்களுக்குத்தான் தீனி...

Edited by Volcano

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.