Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தார் வீடு

Featured Replies

இதென்ன எப்ப பார்தாலும் பெண்பிள்ளைகளை உயர்த்தியே பேசவேண்டுமென்றால் எப்படி?. இல்லாவிட்டால் உடனே கண்ணீர் விடுகின்றது. :wink: :P

தூயவன் நான் பெண்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசவில்லை . பொதுவாக நடப்பதை தான் சொன்னன். நான் கேள்விப்பட்ட இப்படியான நிகழ்வுகளில ஆண்கள் தான் பெண்களை ஏமாத்தியதை பார்த்திருக்கிறேன். ஆனால் பெண் ஆணை ஏமாற்றியது என்பது இதுதான் 2ம் முறையாக கேள்விப்படுகிறேன்,. ஏன் தான் இப்படி எல்லாம் செய்கிறார்களோ????/ :evil: :evil: :evil: :evil:

  • Replies 428
  • Views 38.4k
  • Created
  • Last Reply

இரு பாலருக்கும் தான் கண்ணீர் வருகிது தான் ஆனா இவை விடுற கண்ணீருக்கு தான் சக்தி அதிகமாயிருக்கே?! :oops: :oops: :oops: :cry:

அப்படியா? ஆனால் எங்க வீட்ட நான் அழுதால் ஒன்டுமே நடக்காது :cry: அப்புறம் நானே கண்ணை துடைச்சுட்டு போக வேண்டியதுதான் :oops:

பெண்கள் விடுவது கண்ணீரென்று யாரையா சொன்னது. அது கண்ணீரல்ல பயங்கர ஆயுதம். அந்தக் காலத்தில் இறுதியாக அஸ்திரங்கள் பாவிப்பது போல் பெண்கள் இறுதியாகப் பாவிப்பது கண்ணீரென்ற அஸ்திரத்தைத் தான். இந்த ஆயுதத்திற்கு எவரும் தப்பியதாக இதுவரை இல்லை.

வசம்பண்ணா நீங்கள் எந்தக்காலத்தில இருக்கிறீங்கள் இப்ப அழுதா எல்லாம் காரியம் ஆகாது. வெட்டுக்குத்துதான் :P :P :P :P

தாத்தா உங்கள் ஆக்கத்தை தவறாமல் படிக்கிறேன்

இம்முறை எழுதியது உண்மைச்சம்பவம் என்று கூறியிருக்கிறீர்கள்.

என்னைப் பொறுத்தமட்டில் காதலுக்காக மருந்து குடிப்பவர்கள் முட்டாள்கள். வாழ்க்கையில் எத்தனையோ பிரியோசனமான விடயங்கள் உள்ளன அதை விட்டுட்டு ............... :x

நிச்சயமா... வாழ்க்கை என்பதில் காதல் ஒரு சின்னப் பகுதி...ஆனால் வாழ்க்கை பூராவும் ஒருவருடன் மட்டும் வர வேண்டிய ஒன்று.. அவசியமானது..! ஏமாற்றத்தை தவிர்த்தால் வேண்டாத முடிவுகள் அவசியமில்லைத்தானே..! காதலர்கள் சிந்திக்க வேண்டும்..! வலியை தந்துவிட்டு உணராதே என்பது வேடிக்கையாக யாதார்த்ததுக்கு புறம்பானதாகவே இருக்கும்..! :lol: :idea:

  • தொடங்கியவர்

முகத்தார் வீடு அங்கம் - 10

(முகத்தார் காலில் அடிபட்டு வருத்தத்தில் படுத்திருக்கிறார்)

பொண்ணம்மா : உங்களுக்கு எத்தனை தரம் சொல்லியிருப்பன் இருட்டுக்கை போகாதைங்கோ எண்டு கேக்கிறீயளே

முகத்தார் : இல்லையடியப்பா அங்காலி வளவுக்கை விறகு கொஞ்சம் பொறுக்கி வந்தா மழை காலத்திலை உதவுமெண்டு நினைச்சன்

பொண்ணம்மா : என்ன இழவு விழுந்தது கடிச்சுதோ தெரியேலை இப்பிடி வீங்கிப் போய் கிடக்கு

முகத்தார் : சா....ஒண்டும் கடிக்கேலையப்பா பக்கத்தி வளவுக்கை பொட்டுக்காலை போகேக்கை கதியால் ஒண்டு இடிச்சுப் போட்டுது அவ்வளவுதான்

பொண்ணம்மா : வயசுபோண நேரத்திலை வீட்டிலை இருக்கிறதுகளை வைச்சுச் சமாளிப்பம் எண்டில்லாமல் களவெடுக்கப் போண இப்பிடித்தான்

முகத்தார் : காலிலை அடிபட்ட வருத்திலும் பாக்க உம்மடை வருத்தம் பெரிய பாடாக்கிடக்கு கொஞ்சம் மனுசரை நிம்மதியா படுக்கவிடுமன்

பொண்ணம்மா : அடிபட்டு படுத்திருந்தாலும் மனுசனுக்கு வாய் கொழுப்பு அடங்குதோ பார்

2நாள் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டா எல்லாம் சரி வரும்

முகத்தார் : காலிலை அடிபட்டதுக்கு ஏனப்பா வயித்திலை அடிக்கிறீர் அதுசரி நீர் சமைச்சா அது பத்தியச் சாப்பாடு மாதிரித் தானே இருக்கும்

(சாத்திரியார் படலையை திறந்து கொண்டு வாறார்)

சாத்திரி : என்ன முகத்தான் சாக்குக் கட்டிலிலை படுத்திருந்து கொண்டு மனுசியோடை றோமான்ஸ் போல கிடக்கு

பொண்ணம்மா : அதுதான் இப்ப இல்லாத குறை எங்கையோ புகுந்து காலை உடைச்சுப் போட்டு வந்திருக்கிறார் இப்பதான் எட்டிப் பாக்கிறீயள் என்ன. . .

சாத்திரி : என்னடாப்பா நடந்தது இஞ்சை பார் காலின்ரை கோலத்தை?

முகத்தார் : அது ஒண்டுமில்லையடா தடியெண்டு குத்திப் போட்டுது கொஞ்ச வீக்கம் எண்ணெய் போட்டனான்

சாத்திரி : (ரகசியமா) இதுதான் சாட்டு எண்டுட்டு நீயும் படுத்திடுவாய் சா. . எனக்கும் ஒரு வருத்தமும் வர மாட்டன் எண்ணுது

(யாரோ படலைத் திறந்து கொண்டு வாறது தெரியுது)

சாத்திரி : முகத்தான் யாரோ வருகினம் யார் எண்டு விளங்கேலை?

பொண்ணம்மா : அடடா. . . .வாங்கோ இஞ்சரப்பா எங்கடை செல்லத்துரை மாமான்ரை மகன் வாறார்;

முகத்தான் : வாங்கோ தம்பி இருங்கோ எனக்கும் கொஞ்சம் ஏலாமல் போட்டுது பிறகு எப்பிடி சுகங்கள் கனகாலத்துக்குப் பிறகு இஞ்சாலிப்பக்கம் என்ன தம்பி?

பொண்ணம்மா : சாத்திரியண்ணை உங்களுக்கும் தெரியும்தானே எங்கடை மாமான்ரை மகன் குடும்பத்தோடை கொழும்பிலை இருக்கிறார்;

முகத்தார் : தம்பி 90களிலை கொழும்புக்குப் போனபிறகு இப்பதான் வாறீயள் போல

ரவி : ஓம் அண்ணை எங்கை நேரம் 2பேரும் வேலைக்கும் போறதாலை லீவு கிடைக்கிறது செரியான கஷ்டம்

சாத்திரி : இல்லையப்பு வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை சனங்கள் இந்த யுத்த நிறுத்தத் தோடை எவ்வளவு காசைக் கொட்டி இஞ்சை வந்தவை நீங்கள் உதிலை இருந்து கொண்டு வரலேலாமல் போட்டுது.

முகத்தார் : அதுசரி தம்பி சாத்தியார் இப்பிடித்தான் பிறகு அப்பரும் அம்மாவும் இஞ்சை தனியத்தானே வயசு போன நேரத்திலை எங்களைப் போல முட்டு முட்டு எண்டு: பாவங்கள்

ரவி : அதுதான் எங்களோடை கூட்டிட்டுப் போவம் எண்டு வந்தனாங்கள்

முகத்தார் : இதைதான் முன்னமே செய்திருக்கலாமே தம்பி பிள்ளையளை பெத்து உள்ளுரிலையே வைச்சுக் கொண்டு பக்கத்திலை இல்லாட்டி

ரவி : முன்னமொருக்கா கூட்டிக் கொண்டு போய் வைச்சிருந்தனான் தானே அங்கத்தைய வாழ்க்கை இவைக்கு ஒத்து வராது அதுதான் பிடிச்சு அனுப்பி விட்டுட்டன்

சாத்திரி : ஏன் தம்பி என்ன வித்தியாசமான வாழ்க்கைiயா வாழினம் கொழும்பாக்கள்

ரவி : இல்லையண்ணை உங்களுக்குத் தெரியும் தானே இப்பத்தைய செலவுகள் கொழும்பிலை என்னத்துக்கும் காசு கரண்டு தண்ணி எண்டு இனி எங்கடையவை குளிக்கிதெண்டால் கிணத்தடிணிலை குளிக்கிற மாதிரி குளிப்பினம் விடிய விடிய மின்விசிறியை ஓட விடுறது எங்கடை வருமானத்துக்கு கட்டுபடியாகாது

முகத்தார் : ஏன்தம்பி இதுகள் ஒரு பிரச்சனையே அப்பா அம்மாக்கு அமைதியா எடுத்துச் சொன்னா கேக்கமாட்டினமே

ரவி : சரி அதைத்தான் விடுங்கோ இனி நாங்கள் சிங்களச் சனத்துக்கை இருக்கிறம் என்ரை மனுசியே பொட்டு வைக்காமத்தான் திரியிறவ இவர் அப்பர் காலேலை கோயிலுக்குப் போட்டு நல்லா சந்தனத்தை குழைச்சு நெத்திலை அப்பிக் கொண்டு வருவர் இதை பாக்கிற சனங்கள் எங்களை பிறகு வித்தியாசமாக வெல்லோ பாக்கிங்கள்

சாத்திரி : இப்பிடி ஒழிச்சு ஒழிச்சு வாழுற வாழ்க்கை என்னதுக்குத் தம்பி எதுக்கும் ஒரு விடிவு வரும் பாருங்கோவன்

ரவி : அப்ப அந்த விசயங்கலாலை எனக்கும் மனுசிக்கும் தான் அடிக்கடி சண்டை வருகுது என்ன செய்ய. .

முகத்தார் : அப்ப நீங்கள் சொல்லுறீயள் கொப்பர் கொம்மா அங்கை வந்து சிறை வாழ்க்கை ஒண்டை வாழ வேண்டும் எண்டு என்ன

ரவி : அப்பிடியில்லை ஜயா இஞ்சை மாதிரியில்லாமல் கொஞ்சம் நாங்கள் சொல்லுறதைக் கேட்டு அஜஸ் பண்ணிப் போறதுதானே. . .

சாத்திரி : வயசுபோண நேரத்திலை அப்பு நீங்களும் வாள். . .வாள் எண்டு அவையோடை பாயாமல் பக்குவமா சொன்னா கேப்பினம்தானே அவையும் ஒரு குழந்தை பிள்ளைகள் எண்டு ஏன் நினைக்கிறீயள் இல்லை

முகத்தார் : சரி இப்ப என்ன ஞானம் வந்த மாதிரி கூட்டிக் கொண்டு போக வந்தனீர்?

ரவி : நாங்கள் இரண்டு பேரும் வேலைக்குப் போறபடியாலை பிள்ளையைப் பாக்கிறதுக்கு வேலைகாரி யொண்டை வைச்சிருந்தனாங்கள் அது திடீரெண்டு ஊருக்குப் போட்டு வராமல் விட்டுட்டுது அதுதான் அம்மாவை கூட்டிக் கொண்டு போனால் உதவியா இருக்குமெண்டுதான். . .

முகத்தார் : அப்ப தம்பி அம்மாவிலை பாசம் வந்து கூட்டிக் கொண்டு போகேலை பிள்ளை பாக்க ஆளில்லை அப்பிடித்தானே

சாத்திரி : சரி முகத்தான் அந்த அளவிலையாவது சந்தோஷம் அதுகள் கடைசி நேரத்திலையாவது பிள்ளையோடை இருக்கட்டுமன்

ரவி : அம்மாவை மட்டும்தான் கூட்டிட்டுப் போறன் அப்பர் இஞ்சைதான் இருப்பர்

முகத்தார் : இதென்ன கொடுமையப்பு கொப்பரை யார் பாக்கிறது அவருக்கு சாப்பாடு எல்லாம் கஷ்டமே தம்பி

ரவி : அதுக்குத்தான் நல்ல அகதிக்குடும்பமா ஒண்டை பாத்து வீட்டிலை இருத்தினமெண்டால் அவையோடை அப்பற்ரை சாப்பாடு விசயத்தை செட் பண்ணலாம்

முகத்தார் : தம்பி ஒண்டு கேட்டா குறை நினைக்கப்பிடாது நீர் மனுசியை 1மாதம் கொழும்பிலை விட்டுட்டு இஞ்சை வந்து நிப்பீரோ?

ரவி :அதெப்பிடி நான் இல்லாட்டி அங்கை ஒண்டு:ம் நடவாதே. . மற்றது .நானும் அப்பரும் ஒண்டே நாங்கள் இளம் ஆட்கள் இவை வயசு போணவை எங்கையிருந்தா என்ன எண்டு கேக்கிறன்

முகத்தார் : தம்பி நீர் இல்லை கனபேர் விடுகிற பிழை இதுதான் அப்பா அம்மா வயசு போணா ஒண்டா இருக்கப்பிடாதோ. .வாழ்க்கேலை தாம்பத்திய சுகமென்பது வெறும் உடம்புகளாலை ஏற்படுகிறதில்லையப்பு கணவனுக்கு மனைவி செய்யும் பணிவிடைகள் . மனைவிக்கு கணவன் செய்யும் சிறுசிறு உதவிகள் . ஒண்டாச் சாப்பிடேக்கை ஏற்படுகிற சந்தோஷம் . மனம்விட்டு கதைக்கும் போது ஏற்படுகிற மன நிறைவு இவையெல்லாம் சாகும் மட்டும் இருக்கும் நீங்கள் தான் காசு காசு ண்டு இயந்திர வாழ்க்கை வாழுறீயள் எண்டால் சந்தோஷமாக இருக்கிற அதுகளை ஏன் பிரிக்கப் பாக்கிறீயள்

சாத்திரி : இப்பிடித்தான் சில வெளிநாட்டு ஆட்களும் பிள்ளைப் பெத்து பாக்கவெண்டு அம்மாமாரைதானே கூப்பிடுகினம் அப்பாவையும் சேர்த்துக் கூப்பிடுவம் எண்டு நினைக்கினமில்லை

முகத்தார் : சாத்திரி இப்ப உன்ரைமனுசி என்ரைமனுசியை எடுத்துக் கொள் பெடியள் கூப்பிட்டும் போகேலையே பிறகென்ன. .

சாத்திரி : அது வேறொண்டுமில்லை இஞ்சையிருந்தா காலாட்டிக் கொண்டு சாப்பிடலாம் அங்கைபோணா பெண்டு நிமிந்திடாது. . .

முகத்தார் : என்ன தம்பி யோசிக்கிறீர் சும்மா எங்களுக்குத் தெரிஞ்சதைச் சொன்னம் ஆனா ஒண்டு கொழும்புக்கு கூட்டிட்டு போறதெண்டால் இரண்டு பேரையும் கூட்டிட்டுப் போம் அவ்வளவுதான்

ரவி : நான் ஏதோ யோசிச்சிட்டு வந்தன் நீங்கள் எல்லாத்தையும் குழப்பி விட்டுட்டியள் சரி அப்ப நான் போட்டு வரட்டே அண்ணை. . .

சாத்திரி : முகத்தான் நீ சரியான ஆள் என்ன சும்மா வந்த பெடியனை குழப்பி விட்டுட்டாய் பெடி போய் இப்ப மனுசிட்டை வாங்கிக்கட்டப் போகுது. .

முகத்தார்: யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் சரியோ? . . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் கதைக்கரு நல்லாய் இருக்குது முகம்ஸ். பாவம் எத்தனை பெற்றோர்கள் இப்படி படுகிறார்கள். நல்ல அழகாய் சொல்லியிருக்கிறியள்.

அது சரி பத்தியம் என்றா உங்க வீட்டிலை பட்டினி என்று அர்த்தமா..?? அப்ப கணவனை விட்டிட்டு வெளிநாடு வரமாட்டன் என்றவையிட கதை இப்ப தான் புரியுது. ம் ம் கொடுத்துவைச்சவை :wink: :P

ஆகா ... அட்வைஸ்சாலயே நெஞ்சத்தொடூறீங்கள் முகத்தார்.. சொன்னது ரவிக்கு எண்டாலும் எனக்குச் சொன்னமாதிரி இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு முகத்தார். இப்போது இது தான் எங்கள் சமுதாயத்தில நடக்கின்ற முக்கியமான பிரச்சனைகளில ஒன்று.

நல்லாயிருக்கு முகத்தார் அங்கிள் வயசானாலும் அம்மா அப்பாக்கு அவைக்கெண்டு மனசும் இருக்கும் தானே

இந்தப் பிரச்னைக்கு முடிவுதான் என்ன

உண்மையிலயே இது ஒரு பெரிய பிரச்சினைதான், இதுக்கு முடிவுதான் என்ன? இந்தபிரச்சினையை எடுத்த முகத்தாரண்ணக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு அங்கிள் சமுகத்தில நடக்கிறத புட்டு புட்டு வைக்கிறிங்க... :lol::lol::D

முகத்தார்

நகைசுவையோட ஆரம்பித்த முகத்தார் வீடு இப்போ சமூகத்தில் நடக்கும் பட பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து செல்கிறது. நல்லா இருக்கு அங்கிள் மேலும் தொடருங்கள்

சும்மா சொல்லக் கூடாது முகத்தார் சொன்னாலும் சொன்னீங்கள் சில விடயங்களை சுருக்கென்று தைக்கிற மாதிரி.

இந்த தொடரும் நல்லாயிருக்கு அங்கிள்...... வயது போன முதியவர்களின் நிலையை நன்றாக சொன்னீர்கள். புலம் பெயர்ந்த மக்கள் தான் இதை கட்டாயம் வாசித்து திருந்த வேணும்

முகத்தார் உங்களின் ஒவ்வொரு தொடரும் எம் சமூகத்தில் நடக்கும் விடயங்களைத் தொட்டுச் செல்கிறது.

உங்களின்பணி மேலும் தொடரணும்.

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் வீடு

அங்கம் 11

முகத்hரின் வீட்டு தொலை பேசி அடிக்கிறது முகத்தார் எடுக்கிறார்

முகத்தார் கலோ ஓ ஓ நான் வெளிக்கிட்டன் இந்தா 5 நிமிசத்திலை வாறன்

பொண்ணம்மா அதுதானே பாத்தன் என்னடா பொழுது பட்டிட்டிது இன்னும் உங்களிற்கு ரெலிபோன் வரேல்லையே எண்டு யோசிச்சன் யாரது சாத்திரியோ இல்லாட்டி சின்னப்புவோ?

முகத்தார் இஞ்சாரும் ஏன் சத்தம் போடுறீர் இரவுக்கு இடியப்பம் அவிச்சு சொதியும் வைச்சிட்டன் பிறகு நான் வந்த உடைனை டக்கெண்டு கிறைண்டரிலை சம்பல் அடிச்சா சரி

பொண்ணம்மா அதுக்கில்லையப்பா நீங்கள் நல்ல பிள்ளையா வீட்டிலை இருந்தாலும் உந்த சாத்திரியும் சின்னவும் தான் உங்களை பழுதாக்கிறது

முகத்தார் அதில்லையப்பா 2 நாளைக்கு பிறகு இண்டைக்குதான் மழை விட்டு கொஞ்சம் வெய்யில் அடிக்கிது அதுதான் பக்கத்திலை உள்ள பார்க்கிலை போய் கதைப்பம் எண்டு கூப்பிட்டாங்கள் உடைனை வந்திடுவன்

பொண்ணம்மா சரி சரி வரேக்கை நிதானமா 2 காலிலை வாங்கோ நீங்கள் வந்துதான் சம்பல் அரைக்கவேணும்

முகத்தார் பார்க்கிற்கு வர சின்னப்புவும் தோழில்: ஒருபையுடன் வருகிறார் இருவரும் கைகளை உயர்த்தி மாறி மாறி தட்டி கொள்கின்றனர்

முகத்தார் எட உதென்னடா உன்ரை காதிலை கிடந்த வளையத்தை காணேல்லை புதிசா ஒரு தோடு போட்டிருக்கிறாய் மினுங்கிது

சின்னா அதையேன் கேக்கிறாய் என்ரை பேர பெடியோடை விழையாடி கொண்டிருக்கேக்கை எங்கையோ விழுந்திட்டிது அதுதான் சின்னாச்சி ஒரு வைர ழூக்குத்தயொண்டு போடாமல் வைச்சிருந்தவள் அதை எடுத்து மாட்டிட்டன் வடிவா இருக்கே

முகத்தார் உன்ரை வயசுக்கு உது தோவை இப்ப அந்தா சாத்திரி வாரான் அதாரது ஒரு சின்ன பிள்ளையோடை ஊமை பாசையிலை கதைச்சு கொண்டு வாறான். உவன் திடீரெண்டு ஊமையாயிட்டானா இல்லாட்டி அந்த பிள்ளை ஊமையோ தெரியாது

சாத்திரி என்னடாப்பா எப்பிடி சுகங்கள் எனக்காக ஒரு அஞ்சு நிமிசம் பொறுக்க ஏலாதோ? அதுக்கிடையிலை தொடங்கிட்டியள்

சின்னா சே சாத்திரி ஊமையாகேல்லை அந்த பிள்ளை தான் ஊமை போல பாவம் சின்ன வயது

சாத்திரி என்டாப்பா கதைக்கிறியள் யார் ஊமை எங்கை ?

முகத்தார் இல்லை சாத்திரி நீ அந்த பிள்ளையோடை ஊமை பாசையிலை கதைச்சு கொண்டு வந்தாய் அதுதான்

சாத்திரி அட கறுமம் நானும் ஊமையில்லை அந்த பிள்ளையும் ஊமை இல்லை இது என்ரை மருமகளடா என்ரை தங்கச்சி ஒருத்தி யெரமனியிலை இருக்கிறாள் தெரியும்தமானே அவளின்ரை மகள்

முகத்தார் ஓ பிறகேன் மருமகளோடை கையை காலை ஆட்டி ஊமை மாதிரி கதைச்சு கொண்டு வந்தனி

சாத்திரி அதையேன் கேக்கிறாய் வெளியிலை சொன்னாலும் வெக்ககேடு பிள்ளைக்கடாப்பா தமிழ் தெரியாது எனக்கு டொச்சு தெரியாது தமிழும் கொஞ்சம் பிறெஞ்சும்தான் எனக்கு தெரியும் அதுதான் சர்வதேச மெழியான கை பாசையிலை கதைச்சு கொண்டு வந்தனாங்கள்

சின்னா எட தமிழ் தெரியாதோ ஏன் தாய் தகப்பன் படிப்பிக்கேல்லையே இப்ப இஞ்சை தமிழ் பிள்ளையளிற்கு தமிழ் தெரியாதெண்டிறது ஒரு ஸ்ரைலா போச்சுது

முகத்தார் இது இஞ்சை கனபேர் இப்பிடித்தான் சின்னனிலை அந்த நாட்டு மொழியோடை தமிழையும் சேத்து படிப்பிச்சா பிள்ளைக்கு குழம்பி விளங்காதாம் எண்டினம் அதெல்லாம் சும்மா புலுடா

சாத்திரி உண்மையாவோ அப்ப தமிழ் விளங்கும் எண்டிறியா சின்ன பிள்ளையளிற்கு

முகத்தார் ஓமடாப்பா ஒரு எட்டுவயது பிள்ளைக்கு ஆறு மொழியை கிரகிக்க கூடிய தன்மை இருக்கெண்டு விஞ்ஞான ரீதியாவே சொல்லுறாங்கள் அதை விட குழந்தையளிற்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழியை பழக்கிறதாலை எந்த பிரச்சனையும் இல்லையெண்டு குழந்தையளிற்கான வைத்தியர் மாரே சொல்லினம்

சின்னா அதெண்டா உண்மைதான் இஞ்சை பார் ஒரு குடும்பத்திலை ஒவ்வொரு சகோதரங்களும் ஒவ்வொரு நாட்டிலை இருக்கினம் அதுகள் ஒரு நல்லநாள் பெரு நாளிற்கு ஒண்டா சேரேக்கை அதுகளின்ரை பிள்ளையள் பாவங்கள் ஒண்டுக்கு இங்கிலிஸ் தான் தெரியும் மற்றதுக்கு டொச்சு மற்றது பிரெஞ்சு ஒண்டோடை ஒண்டு கதைச்சு விழையாட ஏலாது என்ன கொடுமை

முகத்தான் பாவங்கள் பிள்ளையள் தங்கடை சகோரங்களோடையே கதைக்கேலாத நிலைமை இவையளிற்கு உள்ள ஒரேயொரு தெடர்பு மொழி தமிழ் மட்டும்தான் அதை பழக்காமல் விட்டிட்டு நாளைக்கு ஊருக்கு போனல் கூட அதுகளின்ரை சொந்தங்களோடை பேரன் பேத்தியோடை ஆசையா கதைக்க கூட முடியாது

சின்னா அதை அவையளின்ரை அப்பர் அம்மா யோசிக்க வேணும் இஞ்சை அவையளிற்கும் நேர பிரச்சனைதான் எண்டாலும் கொஞ்சம் எண்டாலும் முயற்சி எடுத்து பிள்ளையளிற்கு தமிழை சொல்லி குடுக்கலாம்

சாத்திரி எங்கை எனக்கு இன்னொரு பெக் ஊத்து வீட்டை போய் தங்கைச்சிக்கு போடுற போடிலை பிள்ளை தமிழ் கதைக்கவேணும் இல்லாட்டி நான் சாத்திரி இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் நல்ல விடயம் எடுத்து அழகாய் சொல்லியிருக்கிறியள் சாத்திரி. சின்னப்பிள்ளையளுக்கு 12 மொழிக்கு கிட்ட கிரகிக்கும் தன்மை இருக்கு என்று எங்கையோ கேட்ட நினைவு.

ஓமடாப்பா ஒரு எட்டுவயது பிள்ளைக்கு ஆறு மொழியை கிரகிக்க கூடிய தன்மை இருக்கெண்டு விஞ்ஞான ரீதியாவே சொல்லுறாங்கள் அதை விட குழந்தையளிற்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழியை பழக்கிறதாலை எந்த பிரச்சனையும் இல்லையெண்டு குழந்தையளிற்கான வைத்தியர் மாரே சொல்லினம்

ஆகா தமிழ் படிப்பிக்க வைக்கதா பெற்றோர்களுக்கு அடி இன்று.... நல்லாயிருக்கு..

சாத்திரி

பிள்ளைகளின் மொழி விடயத்தில் நீங்கள் எழுதியது அனைத்தும் உண்மை.

சாத்திரி நல்லா இருக்கு நீங்கள் எழுதியது. புலம்பெயர் நாடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு கட்டாயம் தமிழ் படிப்பிக்க வேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

முகத்தார் வீடு அங்கம் 12

(முகத்தாருக்கு இன்னும் உடம்பு சுகமில்லாதபடியால் டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. . . . . ஆஸ்பத்திரியில்)

டாக்டர் : எத்தனை நாளா கால் வலி உங்களுக்கு இருக்கு

முகத்தார் : பொட்டுக்கிலாலை புகுந்த நாளிலை இருந்து ஜயா. .

டாக்டர் : என்ன பொட்டுக்கிலாலையோ ?

பொண்ணம்மா: (என்ன லூஸ் மாதிரி சொல்லுறீயள்) இல்லை டாக்குத்தர் இவருக்கு இப்பிடித்தான் சம்மந்த சம்மந்தமில்லாமல் பேசுறார் கால் தடக்கி விழுந்து போனார்

டாக்டர் : சரி வாயைத் திறவுங்கோ பாப்பம் என்ன ஒரே இருட்டாக் கிடக்கு இன்னும் கொஞ்சம் திறவுங்கோ. . . அம்மா நீங்கள் ஒருக்கா வெளியிலை போறீயளே நீங்கள் நிக்கிறதிலை மனுசன் வாயை திறக்கப் பயப்படுகுது

முகத்தார் : என்ன ஜயா காலிலை அடிபட்டதுக்கு வாய்க்கை பாக்கிறீயள்

டாக்டர் : எல்லாம் எங்களுக்குத் தெரியும் சேட்டை கழட்டுங்கோ செக் பண்ணனும் . . . . .என்ன நெஞ்சிலை வைச்சுப்பாக்க பாட்டுச் சத்தம் கேக்குது

முகத்தார் : ஜயா காதிலை மாட்டியிருக்கிற வோக் மன்னை கழட்டுங்கோ முதலிலை

டாக்டர் : எல்லா ரெஸ்டும் செய்யாமை வடிவா எதுவும் சொல்லேலாது எதுக்கும் நீங்கள் கொழுப்பை பக்கத்துக்கு சேர்க்காம பாத்துக் கொள்ள வேணும் உங்கடை வயசு அப்படி.?

முகத்தார் : அப்ப ஜயா நான் மனுசியை கொஞ்ச நாளைக்கு கொழும்புக்கு அனுப்பி விடுறன் என்ன

டாக்டர் : அது உங்கடை இஷ்டம் முதலிலை ரெஸ்ட் எடுக்கிறதுக்குஎழுதித்தாறன் அதை எடுத்துக் கொண்டு வாங்கோ என்ன

முகத்தார் : இப்ப ஜயா கொஞ்சம் வலி குறையிற மாதிரி எதாவது குளிசை எழுதித் தந்தீங்கள் எண்டா நல்லம்

டாக்டர் : குளிசை தேவையிலை ஊசி ஒண்டு போட்டு விடுறன் டக் கெண்டு வலி குறைஞ்சிடும்

முகத்தார் : அப்ப ஜயா நான் வேட்டியை கொஞ்சம் இறக்கி விடட்டே. . .

டாக்டர் : அது உங்கடை விருப்பம் ஆனா நான் ஊசியை கையிலைதான் போடப் போறன்

முகத்தார் : ஜயா இந்த ரெஸ்ட்டுகள் எல்லாம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலை எடுக்கலாம் தானே

டாக்டர் : அங்கையெல்லாம் ஏன் போறீயள் என்ரை சொந்தக்கார பெடியள் லாப் வைச்சிருக்கிறான் அங்கை போய் எடுங்கோ டக் எண்டு றிசல்ஸ் தெரியும் இந்தாங்கோ

(முகத்தார் துண்டையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். . . . வீட்டில். . .)

முகத்தார் : பாத்தியே ஒண்டுமில்லை எண்டு சொல்லக் கேக்காம கூட்டி வந்தாய் டாக்குத்தர் காய்ஞ்சு போய் இருக்கிறார்போல எல்லா ரெஸ்ட்டையும் எடுக்கட்டாம்

பொண்ணம்மா: நல்லம் என்ன வியாதிகள் இருக்கு எண்டு அறியலாம்தானே இப்ப கொஞ்ச நாளா நீங்கள் என்னோடை எதிர்த்துக் கதைக்கேக்கையே எனக்கு சாதுவா விளங்கினது இப்ப நல்லாதாப் போச்சு. . .

முகத்தார் : என்னப்பா என்னை வைச்சு அந்த மனுசன் வியாபாரம் செய்யப் பாக்குது நீர் என்னடா எண்டா சேர்;ந்து பாடுறீர்

பொண்ணம்மா: படிச்ச மனுசர் சொல்லேக்கை கேக்க வேணும் எல்லாம் உங்கடை நன்மைக்குத்தானே சொன்னவர்

முகத்தார் : அப்ப என்னதுக்கு மனுசன் பிறைவேட்டா திறந்து வைச்சுக் கொண்டு கவுண்மேட் ஆஸ்பத்திரியிலை ரெஸ்ட்டும் எடுக்க வேண்டாமாம் உழைப்புக்கெல்லோ

பொண்ணம்மா : இப்ப என்ன. . . நான் பொட்டு வைச்சு கலர் சீலை உடுக்கிறது உங்களுக்கு பிடிக்கேலை எண்டா ரெஸ்ட் ஒண்டும் எடுக்காம இருங்கோ

முகத்தார் : என்னடியப்பா சும்மா கால் வருத்தம் இதுக்குப் போய் என்னை பாடேலை ஏத்தப் பாக்கிறியே சரி. . .சரி. . .போய்தான் பாப்பம்

(கொஞ்ச நேரம் அலுப்பாக்கிடக்கெண்டுட்டு றோட்டிலை போய் நிக்கிறார் முகத்தார் அந்த நேரம் சின்னப்பு அதாலை வாறது தெரியுது )

சின்னப்பு : முகத்தான் என்ன றோட்டிலை சாத்திரி சொன்னவன் நான் சின்ன வருத்தம் எண்டு நினைச்சன் கால் வீக்கம் சரிவரேலை போலக்கிடக்கு

முகத்தார் : இப்பதான் ஆஸ்பத்திரிக்கு போட்டு வந்தனான் எல்லா ரெஸ்ட்டும் எடுக்கவேணுமாம் அது சரி யார் உதிலை சைக்கிலை வாறது தெரிஞ்ச பெடினாக்; கிடக்கு

சின்னப்பு : இவர் எங்கடை மாஸ்டரின்ரை பெடியன் மாலன்போலக் கிடக்கு. பெடி டாக்குத்தருக்கு படிக்கிறான்; பொறு. . .பொறு மறிப்பம் ஆளை தம்பி நிப்பாட்டு அப்பு எங்கை இஞ்சாலை?

மாலன் : என்னப்பு நடு றோட்டிலை சைட்டிலை வாங்கோ. .

சின்னப்பு : தம்பியை பாக்கிறதே வலு கஷ்டம் இப்ப ஹாயா வாறீர் என்ன மாதிரி படிப்புகள் எல்லாம் முடிஞ்சுதோ?

மாலன் : இந்த வருஷத்தோடை சரியப்பு முடிச்ச கையோடை அவுஸ்ரேலியாவுக்கு போறதுக்கு றை பண்ணுறன்

முகத்தார் : ஏனப்பு எதாவது மேற்படிப்பு படிக்கிறதுக்கோ

மாலன் : அப்படியில்லை ஜயா நாங்கள் இஞ்சை முடிச்சபடியாலை வடக்கு கிழக்கிலைதான் வேலை செய்ய வேணும் இஞ்சத்தைய ஆஸ்பத்திரிகளிலை எங்கடை அறிவை வளர்க்கிற மாதிரி வசதிகள் இல்லையே

முகத்தார் : தம்பி வசதி எண்டு எதைச் சொல்லுறீர் இங்சை இருக்கிற சனங்களுக்கு ஒரு சேவை செய்தாலே மனநிறைவுதானே

மாலன் : என்ன சேவை எண்டு சொல்லுறீயள் எங்களை போடுறதெண்டால் கிராமத்து ஆஸ்பத்திரிக்குத்தான் போடுவங்கள் இங்கை காய்ச்சலுக்கும் தடிமனுக்கும் குளிசை எழுதிக் குடுத்துக் கொண்டிருந்தால் எங்கை முன்னேறுறது.

முகத்தார் : தம்பி கிராமத்தில் வேலை செய்ய குடுத்து வைச்சிருக்கனும் அப்பு அந்த படிப்பறிவு குறைந்த மக்கள் உங்களை மாதிரி படிச்ச ஆட்களுக்கு தருகிற மரியாதையும்; அன்பும் எந்த இடத்திலும் கிடைக்காது.

சின்னப்பு : ஓம் தம்பி கடவுளை கண்ணாலை காணுறமோ இல்லையே உங்களை மாதிரி டாக்குத்தர்மாரைத்தானே கடவுளா நினைச்சுப் பாக்கிறம்

மாலன் : நீங்கள் இப்பிடிச் சொல்லுறீயள் அப்பர் சொல்லுறார் எங்கையன் வெளியிலை போய் செட்டில் ஆகிவிடச் சொல்லி. . . .

முகத்தார் : பாத்தியே சின்னப்பு பெடியளுக்கு கொஞ்சமெண்டாலும் மனமிருந்தாலும் இந்த பெத்ததுகள் சுயநலத்தோடை நடக்கிறது ரொம்பச் சரியில்லை கண்டியோ

சின்னப்பு : தம்பி படிப்பை முடிக்க கஷ்டப்பட்ட எத்தனையோ சனம் வெளியிலை போய் படிச்சிட்டு எங்கடை ஈழத்துக்கு சேவை செய்ய விருப்பப் பட்டிருக்கினம் இஞ்சை இருக்கிற நீங்கள் போக வெளிக்கிடுகிறீயள்

முகத்தார் : தம்பி இதிலை நீர்தான் முடிவெடுக்க வேணும் அப்பர் அம்மாக்கு எடுத்துச் சொல்ல வேணும்

சின்னப்பு : அதோடையப்பு இந்த தொழிலை தேர்ந்தெடுத்த நீங்கள் சேவை மனப்பாங்கு இருக்கவேணும் பணத்துக்கு அடிமையாகப்பிடாது தம்பி

மாலன் : நீங்கள் சொல்லுறது விளங்குது கூடப் படிச்சவங்கள் எல்லாம் வெளியிலை போக வெளிக்கிடேக்கை நாங்களும் போண என்ன எண்டுதான.;. . .

முகத்தார் : தம்பி நீர் எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு பெடியன் மற்றாக்களைப் பற்றி பிறகு பாப்பம் அப்பரோடை கதையும் வசதி கிடைச்சா நானும் சொல்லுறன்

சின்னப்பு : சரி முகத்தான் தம்பிட்டை கேளன் கால் வருத்ததுக்கு என்ன செய்ய வேணுமெண்டு ஏதோ ரெஸ்ட்டுகள் எடுக்க வேணுமெண்டாய்

மாலன் : எதுக்கும் ஜயா ஒரு எக்ஸ்ரே எடுத்து காலைப் பாருங்கோ பெரிசாத் தெரியாட்டிக்கும் பாத்தால் பயமில்லைத்தானே

முகத்தார் : தம்பி சின்ன வருத்தமெண்டு மனுசிக்கு கேக்க சொல்லிப் போடாதையப்பு இப்பதான் கொஞ்சம் றெஸ்ட்டா இருக்கிறன்

சின்னப்பு : சரி தம்பி உம்மையும் வழியிலை மறிச்சு குழப்பிப்போட்டம் போட்டு வாரும்; என்ன . . . . . .

(இது எவரையும் குத்திக் காட்டுவதற்காகவல்ல எமது படித்தவுறவுகள் 90 வீதம் நாட்டுக்கு சேவை செய்யத்தான் இருக்கிறார்கள் ஆனா ஒரு 10 வீதம் எண்டாலும் சுயநலத்துக்காக வெளியிலை போவது கவலையான விடயமல்லவா)

தம்பி படிப்பை முடிக்க கஷ்டப்பட்ட எத்தனையோ சனம் வெளியிலை போய் படிச்சிட்டு எங்கடை ஈழத்துக்கு சேவை செய்ய விருப்பப் பட்டிருக்கினம் இஞ்சை இருக்கிற நீங்கள் போக வெளிக்கிடுகிறீயள்

சரியாச் சொன்னீர்கள் தாத்தா,

இங்கு பல இளைஞர்கள் தாம் படித்து முடித்தபின் தமிழீழத்திற்குப் போகவேண்டும் என்ற கனவுடனே பல்கலைக்கழகம் போகிறார்கள். இவ்வளவத்திற்கும் இவர்கள் தம் 4,5 வயதில் இங்கு வந்தவர்கள் அல்லது இங்கேயே பிறந்தவர்கள். இவ்வருட தலைவரின் உரையின் பின் தமது கனவு நனவாகப்போகின்றது என்பதில் மிகவும் மகிழ்வாக உள்ளார்கள்.

மனசைக் கனக்க வைக்கிற விடயத்தைத்தான் முக்கத்தார் கையில எடுத்திருக்கிறீங்கள். நாங்களும் காரணம் தெரியாம நாடு விட்டு நாடு வந்தாச்சு... எதையோ கடமை எண்டு ஆரம்பித்து அதுவே வாழக்கையும் ஆச்சுது... ஆனால் ஊருக்குப் போகவேணும் எண்ட ஏக்கம் மட்டும் குறைய இல்லை.... அதுவும் ஒருக்கா ஊருக்குப் போய்வந்தாப் போல இன்னும் அதிகமாயிட்டுது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் வீடு றோட்டுக்கு வந்திட்டுது நல்ல கருப்பொருளோட. ஊரில இருக்கிற ஆக்களே கொழும்பு போன்ற இடங்களிற்கு தங்களுக்கு வேலைவாய்ப்பத்தேடினம் என்று எங்கோ வாசித்த நினைவு. நல்லாய்த்தான் சொல்லியிருக்கிறியள். :P

Ó¸ò¾¡÷à Üò¨¾ Äñ¼É¢ø ¦ÅÇ¢Å¡È "Ò¾¢Éõ" Àò¾¢Ã¢¨¸Â¢Ä ¸ñ¼ §À¡Ð ºó§¾¡ºÁ¡¸×õ ¦ÀÕ¨Á¡¸×õ þÕó¾¢îÍ. Å¡úòÐì¸û «ôÒ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.