Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவின் வெற்றியின் பின்னணியும் பின் விளைவுகளும்

Featured Replies

மேற்குலக அரச தந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கைத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் என்றும் எதிர்வு கூறினர் . முடிவுகள் அவர்களின் எதிர்வு கூறல்களுக்கு நேர்மாறாக அமைந்தன. அவர்கள் இலங்கையின் அரசியல் போக்கையும் அதன் பரிமாணங்களையும் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. தேர்தலில் முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்பவை:

இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர்தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தனிச் சிங்களப் பகுதிகளில் ராஜபக்ச பொன்சேக்கா எடுத்த வாக்குகளிலும் பார்க்க இரு மடங்கு வாக்குக்கள் எடுத்துள்ளார். மொனராகலவில் ராஜபக்ச முப்பத்து நாலாயிரம் வாக்குக்களையும் சரத் பொன்சேக்கா பதினையாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணமாவட்டத்தில் பொன்சேக்கா நூற்றி ஏழாயிரம் வாக்குக்களையும் ராஜபக்ச நாற்பத்தி இரண்டாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார். ஒட்டுக்குழுக்களின் அட்டகாசம் பேரூந்துகளில் கொண்டு சென்று இறக்கப்பட்ட சிங்களவர்கள் இப்படிப்பல அட்டகாசங்களுக்கு மத்தியிலும் வன்னி மாவட்டத்தில் ராஜபக்ச 24 ஆயிரம் வாக்குக்களைமட்டுமே பெற்றார். பொன்சேக்கா 61ஆயிரம் வாக்குகள் பெற்றார்.

தமிழர்களும் கலந்து வாழும் கொழும்பு மாவட்டத்தில் ராஜபக்ச அறுநூற்றி பதினையாயிரம் வாக்க்குகளும் பொன்சேக்கா ஐநூற்றி முப்பதி முன்றாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார். இம்முடிவை சிங்களவர்கள் அதிகம் வாழும் மஹரகம தொகுதியின் வாக்களிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அங்கு ராஜபக்ச 59 ஆயிரம் பொன்சேக்கா 35 ஆயிரம்.

முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் கல்முனைத் தொகுதியில் ராஜபக்சவைவிட பொன்சேக்கா மூன்று மடங்கு வாக்குக்களைப் பெற்றுள்ளார்.

மலையகத் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தனிச் சிங்களப் பகுதிகளைப்போல் ராஜபக்ச பொன்சேக்காவைவிட இருபங்கு வாக்குக்கள் பெறமுடியவில்லை. மத்தளை மாவட்டத்தில் ராஜபக்ச 157 ஆயிரம் பொன்சேக்கா 100 ஆயிரம். மாத்தளைத் தேர்தல் தொகுதியில் ராஜபக்ச 27 ஆயிரம் வாக்குக்கள் பொன்சேக்கா 26ஆயிரம் வாக்குக்கள். மலையகத் தமிழர்களும் போரில் ராஜபக்ச நடந்துகொண்டமைக்கு எதிராக வாக்களித்தனர் என்று துணிந்து கூறலாம்.

செல்லாக் காசாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க

இலங்கையின் இரு முன்னாள் பிரதம மந்திரிகளின் மகளும் இருதடவை இலங்கைக் குடியரசுத் தலைவியாக இருந்தவருமான சந்திரிக்கா பண்டார நாயக்க சரத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். அவரது பரம்பரைச் சொத்தாகக் கருதப் படும் அத்தனகல்ல தொகுதியில் மஹிந்த ராஜபக்ச பெரு வெற்றி ஈட்டியுள்ளார். பெரும் நிலப் பிரபுவான அவரது தந்தையால் பெரும் தொகைப் பணம் செலவழித்து உருவாக்கப் பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரது குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கைநழுவிப்போனதுடன் அவரது வாரிசு தனது அரசியல் எதிர்காலத்தை இழந்துள்ளார்.

சுயநிர்ணய உரிமை அற்ற தமிழர்கள்

தமிழர்களுக்கு இலன்க்கையில் சுய நிர்ணய உரிமை கிடையாது அவர்கள் வாக்களிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை இத்தேர்தல் உணர்த்தி நிற்கிறது. தமிழர்கள் ஏன் எனக்கு வாக்களிக்கவில்லை அதற்கு செய்ய வேண்டியதென்ன என்ற சிந்தனையில் யாரும் இறங்கப்போவதில்லை. மாறக அவர்களை எப்படிப் பழிவாங்கலாம் என்ற போக்குத்தான் இனிக்காணப்படும். ஜே ஆர் ஜயவர்தனேயும் இதைத்தான் செய்தார்.

போர்குற்றம் மேற்குலகம் எதிர் ராஜபக்சக்கள்

ராஜபக்ச மேற்குலக விரோதிகளான சினா, ஈரான், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளுடன இணைந்து செயற்பட்டமை மேற்குலகை ஆத்திரமூட்டச் செய்து அவருக்கு மிக இலகுவாகக் கிடைக்க வேண்டிய தேர்தல் வெற்றியை சற்று சிரமப்பட்டு கிடைக்கச் செய்தது மேற்குலகம். இனி போர்குற்றம் என்ற ஆயுதத்தை பயன் படுத்தி அவரை அடி பணிய வைக்க மேற்குலகம் முனைப்புக்காட்டும். அவர் மேற்குலகுடன் இணங்கிப் போவாரா அல்லது முரண்படுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போர்குற்றத்திற்கான முதல் தர சாட்சி சரத் பொன்சேக்கா. அவரை மஹிந்த அரசு கைது செய்து ஆயுத ஊழல் போன்ற குற்றச் சாட்டுக்களில் சிறையிலிட்டு வெளிவராமல் செய்யலாம்.

தன்வினையால் சுடப் படும் பொன்சேக்கா.

தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் ஒன்றாக ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் தன்னுடன் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 400 பேர்வரை அங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவருடனும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 400 பேருடனும் கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா முகாமிட்டுள்ளார் என்றும் தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக அமைந்தால் இராணுவ புரட்சி ஒன்றைமேற் கொள்வதற்காகவே பொன்சேகா இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என்றும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்கா தப்பி ஓடவிடாமல் அவரைக் கைது செய்ய இந்த முன்னேற்பாடா?

சரத் பொன்சேக்கா தமிழர்களுக்கு செய்த அநியாயத்திற்கு இனி அநுபவிப்பார். சரத் பொன்சேக்காவைப் பொறுத்தவரை அரசன் அன்று கொல்வான் என்றால் ராஜபக்சக்களை நின்று கொல்வது யார்?

http://www.thinamurasam.com

Edited by இளைஞன்
தொடுப்பு நீக்கப்பட்டுள்ளது

நடந்து முடிந்ததை வைத்துப்பார்த்தால்

தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்ட விடயம் என்னவென்றால்... இரண்டு அரக்கர்களில் யார் வென்றாலும் வென்றவன் ஒரு அரக்கன்தான்... அவனால் எங்களுக்கு எந்த நமையும் இல்லை தீமையே மிஞ்சும்..

கடந்த நான்கு வருடங்களாக இராசபக்ச குடும்பம் செய்த அநியாங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை... அவர்களோடு சேர்ந்த ஒட்டுண்ணிகளின் தரம் திரும்பவும் சொல்லவேண்டியதில்லை. சரத் இல்லாவிட்டாலும் இவங்கள் வேறு ஒரு தளபதியை வைத்து இந்திய மற்றும் ஏனைய ஆசிய அணியாயக்கரர்களையும் வைச்சு தமிழ் மக்களை கொன்றோளித்திருப்பர்கல்தான்.

இப்போ நடந்ததில் நாம் எதிர்பார்க்காதது எதுவும் இல்லை...

1) இரண்டில் ஒரு அரக்கன் வென்றான்

2) தமிழர்கள் தம்மைக் கொன்ற ராசபக்சவுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

3) என்பது வீதத்துக்கு மேல் தேர்தலை புறக்கணித்து தமிழ்மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

4) வாக்களித்த மக்களும் நல்லதோ கெட்டதோ தமது ஒற்றுமை குலையாமல் இருக்க கூட்டமைப்பின் மானம் போகாமல் இருக்கவும் சரத்துக்கு வாக்களித்தார்கள். (இல்லது போனால் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லைய என்று ஒரு கூட்டம் கிளம்பும்).

சரி இதெல்லாம் முடிஞ்சுது அடுத்தது என்ன... சிங்களவனை விடுவம் அவன் அடிபட்டு நாறட்டும்... ஆர்கண்டது நாளைக்கே ராசபக்ச சகோதர்கள் தங்களுக்குள்ளேயும் அடிபடுவார்கள். இது சிங்களத்தின் குணாம்சம். இவ்வளவுகாலமும் புலிகள் பொது எதிரி என்பதால் சிங்களவங்கள் பெரிசா அடிபடவில்லை இப்போது சரத் ஒரு தொடக்கம்.. இது முடிவில்லாமல் தொடரவேண்டும்.

அடுத்தது சர்வதேசச்சமூகம்... உவங்களை நம்ப முடியாது... தாக்கு நோகாமல் ஏதாவது கிடைக்குமென்றால் நாளைக்கே ராசபக்ச வுடன் உறவை புதுப்பிர்த்துகொல்வார்கள். எங்களுக்கு நீதி செய்யிறதிலும் பார்க்க அவர்களுக்கு பூகோள அரசியல் இலாபம் முக்கியம்.

எங்கள் முடி எங்களின் செயற்பாட்டிலேயே தங்கிவுள்ளது... நாம் அடுத்து என்ன செய்யப்போகிறோம்?

Edited by Sooravali

எங்கள் முடி எங்களின் செயற்பாட்டிலேயே தங்கிவுள்ளது... நாம் அடுத்து என்ன செய்யப்போகிறோம்?

நாம் அடிக்கடி செய்யும் எமது ஒற்றுமையை குலைக்கும் செயற்பாடுகளில் ஒன்று:

எந்த ஆதாரமும் இல்லாமல், சில நிகழ்வுகளை விருப்பத்துக்கு திரித்து அல்லது கோர்த்து, அவசரப்பட்டு கற்பனைகளின் உதவியுடன் எம்மவர்கள் மீது சந்தேக முத்திரை குத்தி இன்பமுறும் சிறுசெயல்.

ஒரு சிலரின் இந்தப் புத்தியும், அதை உடன் நம்பி சேறு வீசும் அனைவரினதும்

பின்புத்தியும் மாறும்வரை எம்முள் பிளவுகள் அதிகரித்துச் செல்லும்.

எதிரிகளை கண்டபடி தாக்குங்கள், பிளவு படுத்துங்கள் - கவலையில்லை. இன்னும் எமது வீரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பவர்களை தாக்குங்கள், அப்பாவித் தமிழர்களை கொலை செய்பவர்களை தாக்குங்கள், இதற்கு உதவுபவர்களை தாக்குங்கள்.

ஆனால் கடந்த வருட படுகொலைகளின் பொது எதிர்க் குரல் கொடுத்தவர்களை, என்ன பின்புலமோ, தொடர்ந்து குரல் கொடுத்தவர்களை கற்பனை முடிச்சுகளின் அடிப்படையில் அவசரப்பட்டு தாக்காதீர்கள்.

சில இணையத்தளங்கள் இந்த வேலைகளை செய்கின்றன. அதில் எம்மை உடைக்கும் வகையில் எழுதுபவர்களை அடையாளம் கண்டு அவதானமாக இருங்கள்.

முதலில் திருத்த முயலவேண்டும். தொடர்ந்து பொறுமையுடன் முயலவேண்டும். முடியாவிட்டால் பின்னர் துரோகி ஆக்கிக்கொள்ளலாம்.

ஈழத் தமிழர் மீது சந்தேக முத்திரை குத்த விரும்பினால், குத்துவதை பலதடவைகள் சிந்தித்து, உறுதியான ஆதாரங்களை தேடிப்பிடித்து, விளைவுகளையும் யோசித்து அதன் பின் செய்யுங்கள்.

அவர்கள் அதை அறியாமையால் செய்திருக்கலாம். அதன் பாரிய பின் விளைவுகளை சிந்திக்காது சிறு - குறுகிய கால நன்மைக்காக செய்திருக்கலாம். நாம் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே. தவறுகளை பண்புடன் சுட்டி திருத்த முயல வேண்டும் - திருந்த சிறிது கால (சில மாதங்கள்) அவகாசம் கொடுக்க வேண்டும்.

நீண்டகாலமாக சிங்கள, இந்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழரை அழிக்க தூண்டுதலாகவும், துணையாகவும் இருப்பவர்களை நான் இந்த எம்மவர்களினுள் அடக்கப் போவதில்லை. ஆனால் அவர்களும் (எதிரிகளுடன் இணைந்து தமிழினப் படுகொலை செய்யாதவர்கள்) திருந்தி வந்தால், அதனை பகிரங்கமாக அறிவித்தபின் - குறிப்பிட்ட கால (சில வருடங்கள்) அவதானிப்பின் பின்னர் ஏற்றுக்கொள்ள தயாரானவர்களாக நாம் இருக்க வேண்டும்.

அப்போது மட்டும் தான் நாம் பலமுள்ளவர்களாக மாறமுடியும்..

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் சில வகைகளில் தமிழருக்கு சாதகமானது.

  1. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின் விருப்பத்தை புரிந்து கொண்டு தமிழரும், தமிழர் தலைமையான கூட்டமைப்பும் இந்த முறை செயற்பட்டுள்ளது, அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளால் நட்புடன் நோக்கப்படத்தக்க ஒன்று.

  2. தமிழரின் ஆதரவையும் மீறி, ராஜபக்ஷ வென்றது, அமெரிக்க, ஐரொப்பிய அரசுகளின், சீன இந்திய கூட்டு பலத்துக்கு எதிரான தோல்வியாகும். இந்த அரசுகள் இதனை அப்படியே விட்டுவிட போவதில்லை. தமிழர் தமக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தால், தமிழர் மீது நம்பிக்கை வைத்து இந்திய சீன கூட்டு ஆதிக்கத்துக்கு எதிரான தமது போட்டிக்கு அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் தமிழரின் ஆதரவை எதிர்பார்க்க கூடும். இந்த ஆதரவை கொடுத்து, அதற்குரிய பிரதிபலனாக எமது மக்களின் உரிமைகளை பெற்று கொடுப்பது எமது அறிவிலும் ஆற்றலிலும் தங்கியுள்ளது.

  3. ராஜபக்ஸ சகோதரர்களின் ஆட்சி ஊழல் மலிந்த சர்வாதிகார ஆட்சியாகவும், அமெரிக்க, ஐரோப்பிய எதிர்ப்பு ஆட்சியாகவும் தொடரும் சாத்தியமே அதிகமாக காணப்படுகிறது.

நீங்கள் சொன்ன மூன்றும் கிட்டத்தட்ட ஒன்றுதான்..

மூன்று விடயங்களுமே சர்வதேச அரசியல் நகர்வுகள் என்று போதுமைப்படுத்தலாம். சர்வதேச அரசியல் எப்பவும் ஒரேமாதிரி இருந்ததில்லை இருக்கபோவதும் இல்லை. சர்வதேசத்தை குறிப்பாக மேற்கை முழுமையாக நம்ப முடியாது. அவர்களின் இலக்கு எங்களுக்கு உதவுவதில்லை எங்களை வைத்து சிறிலங்காவை எவ்வாறு வழிக்கு கொண்டுவாறதேன்று.

இவ்வாறுதான் இந்திரா காலத்திலும் தமிழினம் இந்தியாவை நம்பி பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இருந்து எல்லாம் திரும்ப சொல்லத்தேவை இல்லை.

மேற்கை முழுக்க நம்பாமல் அவர்களே எங்களை அல்லது எங்கள் விசயங்களை ஒதுக்கமுடியாமல் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனுக்கு இலங்கைக்குள்ள கால் வைக்காட்டில் நித்தா வராது.. சிங்களவன்களை அடிபடவிட்டிட்டு காப்பாத்திறன் பேர்வழி எண்டு பகிரங்கமா உள்ள வந்தாலும் வந்திடுவான்கள்..! :lol:

நடந்து முடிந்ததை வைத்துப்பார்த்தால்

தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்ட விடயம் என்னவென்றால்... இரண்டு அரக்கர்களில் யார் வென்றாலும் வென்றவன் ஒரு அரக்கன்தான்... அவனால் எங்களுக்கு எந்த நமையும் இல்லை தீமையே மிஞ்சும்..

கடந்த நான்கு வருடங்களாக இராசபக்ச குடும்பம் செய்த அநியாங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை... அவர்களோடு சேர்ந்த ஒட்டுண்ணிகளின் தரம் திரும்பவும் சொல்லவேண்டியதில்லை. சரத் இல்லாவிட்டாலும் இவங்கள் வேறு ஒரு தளபதியை வைத்து இந்திய மற்றும் ஏனைய ஆசிய அணியாயக்கரர்களையும் வைச்சு தமிழ் மக்களை கொன்றோளித்திருப்பர்கல்தான்.

இப்போ நடந்ததில் நாம் எதிர்பார்க்காதது எதுவும் இல்லை...

1) இரண்டில் ஒரு அரக்கன் வென்றான்

2) தமிழர்கள் தம்மைக் கொன்ற ராசபக்சவுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

3) என்பது வீதத்துக்கு மேல் தேர்தலை புறக்கணித்து தமிழ்மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

4) வாக்களித்த மக்களும் நல்லதோ கெட்டதோ தமது ஒற்றுமை குலையாமல் இருக்க கூட்டமைப்பின் மானம் போகாமல் இருக்கவும் சரத்துக்கு வாக்களித்தார்கள். (இல்லது போனால் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லைய என்று ஒரு கூட்டம் கிளம்பும்).

சரி இதெல்லாம் முடிஞ்சுது அடுத்தது என்ன... சிங்களவனை விடுவம் அவன் அடிபட்டு நாறட்டும்... ஆர்கண்டது நாளைக்கே ராசபக்ச சகோதர்கள் தங்களுக்குள்ளேயும் அடிபடுவார்கள். இது சிங்களத்தின் குணாம்சம். இவ்வளவுகாலமும் புலிகள் பொது எதிரி என்பதால் சிங்களவங்கள் பெரிசா அடிபடவில்லை இப்போது சரத் ஒரு தொடக்கம்.. இது முடிவில்லாமல் தொடரவேண்டும்.

அடுத்தது சர்வதேசச்சமூகம்... உவங்களை நம்ப முடியாது... தாக்கு நோகாமல் ஏதாவது கிடைக்குமென்றால் நாளைக்கே ராசபக்ச வுடன் உறவை புதுப்பிர்த்துகொல்வார்கள். எங்களுக்கு நீதி செய்யிறதிலும் பார்க்க அவர்களுக்கு பூகோள அரசியல் இலாபம் முக்கியம்.

எங்கள் முடி எங்களின் செயற்பாட்டிலேயே தங்கிவுள்ளது... நாம் அடுத்து என்ன செய்யப்போகிறோம்?

உங்கள் கணிப்பு மிகச் சரியானதே. எங்கும் எதிலும் தமிழர் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ராஜபக்ஷவின் வெற்றியில் சில சிங்களவர் கூட வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டுக் குழுக்கள் மட்டுமே மிகச் சந்தோஷப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வரும் வேளையில் மகிந்தாவுக்கு ஆதரவுடன் இருந்து சரத் வெல்லுவாரோ என நினைத்து கட்சி மாறிய சிங்கள அமைச்சர்கள் இனி எப்படி மகிந்தாவிடம் போகப் போகிறார்களோ?. மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனுக்கும் கடைசி நேரத்தில் சரத்துக்கு ஆதரவு அளித்தார். இனி அவவுக்கும் சங்கு தான். ஆனால் மகிந்தா சீனா, ஈரான் பக்கம் அதிகம் செல்லாவிட்டால் மேற்கத்தைய நாடுகள் மகிந்தாவுக்கு உதவி செய்யும், சீனா, ஈரான் பக்கம் சென்றால் மனித உரிமை மீறல்களை வைத்து பூச்சாண்டி காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனுக்கும் கடைசி நேரத்தில் சரத்துக்கு ஆதரவு அளித்தார். இனி அவவுக்கும் சங்கு தான்.

தராக்கியின் இவ்விணைப்பில் உள்ளதைப் படித்தபின்பு தோன்றியதை எழுதினேன். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

தராக்கியின் இவ்விணைப்பில் உள்ளதைப் படித்தபின்பு தோன்றியதை எழுதினேன். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

உங்களுக்கு உள்ளுக்குள்ளாள இருந்து ஆரோ முன்னமே சொல்லிட்டாங்கள் போலகிடக்கு. :lol::lol:

பொன்சேகா நீதிமன்றம் செல்ல முடிவு

ஜனாதிபதித் தேர்தல் முடிவினை ஏற் றுக்கொள்ள மறுத்துள்ள எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன் சேகா நீதி மன்றில் தாம் நீதி கோரப் போகி றார் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவினை ஏற் றுக்கொள்ள மறுத்துள்ள எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன் சேகா நீதி மன்றில் தாம் நீதி கோரப் போகி றார் எனத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சினமென் லேக் ஹோட்டலில்

இரணுவத்தினரின் முற்றுகைக்குள் சிக்குண்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு செய்தியாளர்களை சந்தித்த வேளை இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார காலத்தில் மக்கள் காட்டிய உற்சாகம் இறுதி முடிவில் தென்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள சரத் பொன்சேகா "இந்த முடிவை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதற்கு எதிராக நீதி மன்றில் மனுதாக்கல் செய்யப் போகிறோம்' என்று குறிப்பிட்டார்.

மேலும் தாம் தங்கியுள்ள ஹோட்டலிற்கு வெளியே உருவாகியுள்ள அசாதாரண நிலை குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

http://www.lankasrinew.com/

'நாட்டை விட்டுப் போகிறேன்'

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா

தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

"இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது." என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் ஃபொன்சேகா கூறினார்.

நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் பிபிசிடம் தெரிவித்தார்.

விடுதியில் முற்றுகை

முன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.

இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.

விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.

விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.