Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதோதோ பேசுகிறார்கள்.தமிழர்கள் தகுந்த அரலியல் தலமையின்றி இருப்பது போலவும் தன்னை தலைமையேற்கும் படி வருந்திக்கேட்பது போலவும் தான் நினைப்பதே தமிழரின் அபிலாசை என்பது போலவும் பேசுகிறார்.இதற்கு மகிந்தவின் கட்சியிலேயே சேர்ந்து கொண்டு இப்படிப் பேசுவது நல்லது.தமிழினம் நாதியற்ற இனம் அல்ல. தனக்கான தலைமையை தானே தேர்ந்தெடுக்கும். வன்னிப் பிரதேசமெங்கும் நிறுவப்படும் புத்த கோவில்களும் வெற்றிச் சின்னங்களும் தமிழ்மக்களின் மனங்களை வெல்ல உதவாது. சிங்களம் மீண்டும் ஒருஆயுதப்போராட்டத் தெரிவைத் தவிர வேறு ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் ஆட்டத்திற்கு ஆடும் சம்பந்தர் போன்ற அரசியல்வாதிகள் இந்த நிலமையை விரைவாக்குவார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. சம்பந்தர் அரசியலில் இருந்து ஒதுங்குவது அவருக்கும் நல்லது தமிழருக்கும் நல்லது.முற்றிலும் இளைஞர்களைக் கொண்ட அரசியல் கட்சி ஒன்று தமிழர்களுக்கு உடனடியாகத் தேவை.

  • Replies 85
  • Views 5.8k
  • Created
  • Last Reply

இங்கை இருக்கிற பச்சை புள்ளியள் சிவப்பு புள்ளிகளை பார்க்கும் போது சம்பந்தனுக்கு அமோக ஆதரவு இருக்கு போலகிடக்கு.?

அப்ப அடுத்த தேசியத்தலைவர் சம்பந்தனோ .?

அது சரி எங்கட தேசியத்தலைவர் ஓய்வு எடுத்துட்டாரோ.?

அப்போ இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள தான் சம்பந்தர் இந்த முடிவுக்கு வந்தாரென்று எடுத்துக்கொள்ளலாமா?

சரி அப்படியே எடுத்து கொள்ளுவம்.. அதிலை சொல்லும் விடயங்களும், எடுக்கும் கொள்கை பிரகடனங்களும் கொண்டு வரும் பாதகங்கள் தெரியாத மனிதன் எப்படி ஐயா ஒரு தேர்ந்த தலைவராக முடியும்...??

தூரநோக்கு இல்லாத ஒருவர் தலைவனாக இருக்க தகுதியானவரா...??

பாதகங்களில் முக்கியமானவை சிலது

1: - ஏற்கனவே பாராளுமண்ற உறுப்பினர்களாக இருக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் செல்லத்துரை கஜேந்திரன் முதல் அரியேந்திரன் எண்றும் பல உறுப்பினர்கள் பாராளுமண்றத்துக்குள் வரை எழுப்பிய குரலை எதிர்த்து அறிக்கை விட்டு தனது கட்ச்சியினரையே கேலிக்குள்ளாக்குகிறார்.. ( இப்படி ஒரு நடவடிக்கையை புலிகள் தங்களின் உறுப்பினர்களுக்கு எதிராக செய்ததாக வரலாறு கிடையாது... )

2:- நாங்கள் இலங்கையில் பிரிவினையை விரும்பவில்லை எண்று கூறுவதின் மூலம் சிங்களவரும் தமிழரும் இலங்கையில் சேர்ந்து வாழும் நிலை இருப்பதாக பிரச்சாரப்படுத்துகிறார்... தாங்கள் பிரிவினையை கேட்க்கவில்லை என்பதின் மூலம் அப்படி சிங்களவருக்கும் தமிழருக்கும் உள்ள பிரச்சினையைக்கூட தெளிவற்று ஆக்குகிறார்.. ( தனிநாடு கேட்க்கும் அளவுக்கு அங்கு பிரச்சினை இல்லை என்பதுதானே அவர் சொல்ல வருவது....?? )

3:- தனது இருப்பை தக்கவைத்து கொள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் முன் சொல்கிறார் எண்றே வைத்துக்கொள்ளுங்கள்... அப்படியான ஒரு இருப்புக்காக 30 வருட போராட்டத்தையும் போரரடியவர்களையும் கொச்சைப்படுத்தி தமிழர் அரசியலில் இருந்து விலக்கிவைக்கிறார்... அதாவது தமிழர் பிரச்சினனயை 30 வருடம் பின்நோக்கி நகர்த்துகிறார்...

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது தமிழன் இருக்கும் நிலையில் யாரும் புலி அரசியல் செய்ய முடியாது, நரி அரசியல்தான் செய்ய முடியும்,

புலி பலத்தோடு இருந்ததால் புலியாகவே இருந்தது, புலியாகவே வாழ்ந்தது, புலியாகவே மடிந்தது.

பலம் இல்லாத நிலையில் புலி அரசியல் செய்தால் தமிழன் அதற்கு பலியாகவே நேரிடும் அதற்கு மாற்றீடாக நரி அரசியலை நான் பரிந்துரை செய்கிறேன். :huh:

நரி அரசியல் என்பது சிங்கள்வர் இடத்தில் எம்மை நல்லவரக்ளாக , வல்லவர்களாக அல்ல, காட்டிகொள்வது. அதற்க்கு கூட்டமைப்புக்கு இடப்பட்டிருக்கும் புலிசாயத்தை முதலில் துடைக்க வேண்டும், அதற்கான செயலையே சம்பந்தர் செய்கிறார் என்பது எனது கணிப்பு,

கூட்டமைப்பு 20 இடங்களில் வெண்று தலைவரிடம் சென்ற போது தலவர் சொன்னாரால் இன்னமும் வெளியில் 11பேர் இருகினம் அவயளையும் இணச்சு கொண்டு வாங்கோ என்று,

இப்போது முஸ்லிம் கட்சிகளுடன் ஏற்பட்ட இனகபாட்டை அந்த நோக்கிலேயே நான் பார்கிறேன், இதே போன்று, மேலவைகட்சி,மலயகட்சி போண்ற்வையும் இணைக்கபடவேண்டும்.

வடக்குகிழக்கில் ம்கிந்தன் தோற்க முஸ்லீம்களும் பெரும் துணையாக இருந்தனர் என்பதை நாம் மறந்து விட கூடாது.

வடக்கு கிழக்கு முழுதும் மகிந்தனுக்கோ, ஜக்கிதேசிய கட்சிக்கோ ஒரு இடம் கூட போகாது அனைத்து இடங்களிலும் சிறுபான்மையினரே வரவேண்டும், தனித்து வர முடியாத மலையகம்,கொழும்பு போண்ற பகுதிகளில் ஜக்கியதேசி கட்சியுடன் இணைந்து ஒருகுறிப்பிட்ட அளவு இடங்களை சிறுபான்மை கட்சிகள் பெற வேண்டும்.

வெண்ற பின்னர் எதிர்கட்சி வரிசையில் வீனே ஆறு வருடங்களும் இருந்து சீட்டைதேய்த்து, வெளிநடப்பு செய்வதும், உள்நடப்பு செயவதுமாக நேரத்தை வீனாக்காது, எவன் ஆட்சியில் இருகிறானோ அவனுடன் சேர்ந்து, கருணா, பிளையான், டக்கிளசிடம் இருக்கும் அதிகாரம் அமைச்சுகளை பறிந்து அவர்களை அரசியல் அனாதைகளாக்க வேண்டும், கிடைத்த அதிகாரத்தை கொண்டு, போராடத்துக்காக தம்மை தந்த எமது பிள்ளைகளையும், போராட்டதுக்கு உறுதியாக இருந்த மக்களையும் மீடக வேண்டும், வெலிகடை ,பூசா முகாம்களில் ஆண்டுகணக்காக வாடும் உறவுகளையும் மீடக வேண்டும், விடுவிக்கபட்ட மக்கள் இயல்வாழ்வு வாழ உதவ வேண்டும்,

இயல்பு வாழ்வு வாழும் மக்களுக்கிடயில் இருந்துதான் புதிய போராட்டத்துக்கான முகிழ்ப்புகள் முகிழ்கும்.

அரசுடன் இணைந்து இருந்து கொண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கு எங்காவது ஆப்புவைகலாமா என்று அராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவுடன் நேசமாக நடந்து கொண்டு சீனாசமப்ந்தமானவற்றுக்கு ஆதரவுகொடுக்கவேண்டும் அரசுடன் நட்பு பாரட்டி கொண்டு மேற்குலகத்துடன் அரசுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் இரகசிமக ஈடு பட வேண்டும்,

விடுவிக்க பட்ட அரசியல் உறுப்பினர்களை கூட்டமைப்புக்குள் உள்வாங்கி கொள்ள வேண்டும், வருங்கால கூட்டமைப்பின் தலைமை அவர்களிடமே கொடுக்கபட வேண்டும்,

ஜேவிபியால் ஒரு அரசியல் கட்சியாக வரமுடியும் என்றால் புலிகளால் வர ஏன் முடியாது. ஜேவிபி அரசியல் கட்சியாக வர என்ன வழியை பின்பற்றியது என்பது பற்றி ஆராட்சி செய்ய வேண்டும்.

தனிமனிதனோ, மனிதர்களோ முக்கியம் இல்லை, கூட்டமைப்புதான் முக்கியம், கட்சிதான் முக்கியம்,

ஒருலட்சம் மக்களினதும் 30000 போரளிகளினது உயிர்களை மிதிப்பவருக்கு அமிர்தலிங்கத்தின் வரலாறு பாடமாக அமையும், இருப்பதை காப்பாற்றி கொள்வோம்.

Edited by சித்தன்

இப்படி எல்லாம் நடக்க இந்திய வல்லாதிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் பாலகுமார் அண்ணா தலைமையில் ஈரோஸ் களமிறங்கி வென்று வந்தது போல் கூட்டமைப்பு செயற்பட்டால் நிச்சயம் வரவேற்கலாம். பாலகுமார் அண்ணா தலைமையில் ஈரோஸ் கொழும்பில் இருந்து அரசியல் செய்த போது தமிழீழத்தை உச்சரிக்காது தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் சம்பந்தர் போல் கண்டபடி அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கவில்லை.

சம்பந்தர் சிங்கள மக்களோடு உறவாடி அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்க்கமான தீர்வை சிங்கள மக்களிடம் இருந்து பெற்றுத்தரவே இவ்வாறு சொல்கிறார் என்று கொண்டாலும்.. இது தொடர்பில் தமிழ் மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டிய கடமையை சம்பந்தன் தட்டிக்கழிக்கக் கூடாது. தமிழ் மக்கள் பல இன்னல்கள் மத்தியில் மன உழைச்சலோடு வாழும் இன்றைய காலத்தில் சிங்கள மக்களையே மட்டும் குறிவைத்துக் கருத்துரைத்துக் கொண்டிருக்க முடியாது. சம்பந்தர் தமிழ் மக்களுக்குமான தனது செய்தியை சொல்ல வேண்டும்.

அதைவிடுத்து.. தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதறடிக்கும் வகையில் கருத்துக்களை வைத்து சர்வதேசத்தை சிங்களவர்களின் கடும்போக்கு நிலைப்பாட்டை நோக்கி அங்கீகரிக்க நகர்த்திவிட்டு சிங்கள மக்களிடம் மனமாற்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை எட்ட முடியாது. சர்வதேசம் சிங்களத்தின் நிலைப்பாட்டை திடமாக அங்கீகரிக்கும் போக்கு தமிழர்களின் நிலைப்பாட்டை அங்கீகரிப்பதிலும் அதிக சாத்தியப்பாட்டைக் கொண்டது என்பதை சம்பந்தன் போன்றவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்கள் அல்ல.

தமிழ் மக்களின் அபிலாசை என்ன என்பதை உள்ளதை உள்ளபடி சிங்கள மக்களுக்கு விளக்கி அதில் சிங்கள மக்கள் பயப்பிடும் படி எதுவும் இல்லை என்று காட்ட வேண்டுமே தவிர தமிழ் மக்களின் அபிலாசைகளுக்குப் புறம்பான செய்திகளை சிங்கள மக்களிடம் சமர்ப்பித்துப் பெறும் போலியான தோற்றப்பாட்டுடனான மனமாற்றங்கள் சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி இரு இனங்களிடையேயும் இன்னும் நம்பிக்கையீனங்களையே வலுப்படுத்தச் செய்யும்.

சம்பந்தன்.. இவற்றை எல்லாம் சிந்திக்கத் தெரியாதவரல்ல. அந்த வகையில்.. அவரின் இந்த அறிவுக்கள் குறித்த அவர் தமிழ் மக்களுக்கு அவர்களின் பிரதிநிதி என்ற வகையில் சரியான விளக்கம் அளிக்க வேண்டும். இன்றேல் சம்பந்தன் தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தமிழன் இருக்கும் நிலையில் யாரும் புலி அரசியல் செய்ய முடியாது, நரி அரசியல்தான் செய்ய முடியும்,

புலி பலத்தோடு இருந்ததால் புலியாகவே இருந்தது, புலியாகவே வாழ்ந்தது, புலியாகவே மடிந்தது.

பலம் இல்லாத நிலையில் புலி அரசியல் செய்தால் தமிழன் அதற்கு பலியாகவே நேரிடும் அதற்கு மாற்றீடாக நரி அரசியலை நான் பரிந்துரை செய்கிறேன். :huh:

தனிமனிதனோ, மனிதர்களோ முக்கியம் இல்லை, கூட்டமைப்புதான் முக்கியம், கட்சிதான் முக்கியம்,ஒருலட்சம் மக்களினதும் 30000 போரளிகளினது உயிர்களை மிதிப்பவருக்கு அமிர்தலிங்கத்தின் வரலாறு பாடமாக அமையும், இருப்பதை காப்பாற்றி கொள்வோம்.

நன்றி

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது.

ஆனந்தசங்கரியின் மூளையில் ஒருபாகத்தை சம்பந்தனுக்கு மாற்றி வைத்துவிட்டார்கள் போல் உள்ளது.

இங்கு விழுந்தடித்து கருத்து கூறும் எத்தனை பேர் இந்த பதிவை பார்த்திருக்கிறீர்கள்? அதில் உள்ள ஒலிப்பதிவை கொஞ்சம் பொறுமையோடு செவி மடுத்திருக்கிறீர்கள்.

30 நிமிட ஒலிப்பதிவு. என நினைக்கிறேன்.

சமூகவியல் மானுடவியல் பேராசிரியர் கவிஞர் திரு கதிரவேலு சேரன் அவர்கள் நாடு கடந்த அரசு பற்றி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டி

http://www.yarl.com/articles/node/997

Edited by KULAKADDAN

... இருப்பை நிலை நிறுத்தல், அரசியல் சாணக்கியம், தந்திரம் ..... (இவற்றை எழுதி மீண்டும் ....!!)

... ஏறக்குறைய 40 வருடகால சிங்கள அடக்குமுறையாளர்களுக்கு எதிரான சாத்வீக/ஆயுதப் போராட்டத்தின் பின் இந்திய இராணுவம் தாயகத்தில் நுளைந்து, யுத்தம் இந்திய இராணுவத்துக்கு எதிராகவும் நடந்தபோது .... நாம் 40வருட எதிரியுடன் கை குலுக்கினோம்!!! நடைபெற்று பல வருடங்களால்ல!!!! ... அப்போ அதுகும் துரோகமா????????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன யாழில் டக்கிளஸ் 11 தொகுதியிலும் வெல்லுவார், வன்னியில் 5 இல் 4 ஐ சித்தார்த்தன் வெல்லுவார், கிழக்கை கருணாவும் பிள்ளையானும் பங்கு போட்டு கொள்ளுவார்கள். இதுதான் புலம் பெயர் தமிழரின் உள்ளம் கனிந்த விருப்பம் என்றால் எனக்கு வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.

இப்படி நடந்தால் புலம்பெயர் தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆலவட்டம், கொடி தூக்கிய மாதிரி "தமிழ்த் தலைவர்களுக்கும்" தூக்குவார்கள்..

சரி இப்ப எங்களுக்கு யார் தான் தலைவர். :lol:

இதில் என்ன சந்தேகம்? சரத் போன்சேகாதான் :lol:

அப்பு கிருபன், இங்கு ஒருவரும் சரத்தின் மீது காதல் கொண்டோ, கட்டிப்பிடிப்பார்/படுப்பார் என்று கருதியோ ஆதரவு கொடுக்கவில்லை!!!

1) ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்.

2) ஒட்டு/ஒட்டில்லாத குழுக்கள் ஒதுக்கப்படும் என்று விரும்பினார்கள்.

3) மேற்குலகின் அழுந்தங்கள் இருப்பின், சரத் ஆட்சிக்கு வந்தால் மகிந்த கும்பல யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தலாம்.

... இவைகள் நடக்குமோ, நடக்காதோ என்ற நிலையிலும் ஒரு நம்பிக்கையில் தான்!!!

.... இல்லை .... புலம்பெயர் தமிழ் மக்கள், நீங்கள் கூறுவதுபோல், பிரபாகரனை நிராகரித்து, சரத்தை ஏற்று விட்டார்களோ தெரியாது! :lol:

நரித்தனம் சம்பந்தனுக்கு புதுசு இல்லைத்தான்... அதே போல சம்பந்தனை விட நரித்தனம் சிங்களவனுக்கும் புதுசு இல்லை...

தன்னாட்சி, சுயநிர்ணயம், இறமை எண்டதுக்கு தலைமுழுக்கு போட்டு ஒண்று பட்ட இலங்கை கோசம் போடும் கூட்டமைப்பு தேசியம் எண்ட வார்த்தையை மட்டும் ஏன் ஒட்டி வச்சு கொண்டு இருக்கு...?? மேற்குறிப்பிட்ட மூண்டும் இல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்ட பேர் மட்டும் எதுக்கு... புலிச்சாயத்தை கழுவுறது போல அதையும் கழுவிப்போட்டு புதுசா வரவேண்டியது தானே...???

இலங்கை தமிழர் கூட்டமைப்பு எண்டு....!

... இருப்பை நிலை நிறுத்தல், அரசியல் சாணக்கியம், தந்திரம் ..... (இவற்றை எழுதி மீண்டும் ....!!)

... ஏறக்குறைய 40 வருடகால சிங்கள அடக்குமுறையாளர்களுக்கு எதிரான சாத்வீக/ஆயுதப் போராட்டத்தின் பின் இந்திய இராணுவம் தாயகத்தில் நுளைந்து, யுத்தம் இந்திய இராணுவத்துக்கு எதிராகவும் நடந்தபோது .... நாம் 40வருட எதிரியுடன் கை குலுக்கினோம்!!! நடைபெற்று பல வருடங்களால்ல!!!! ... அப்போ அதுகும் துரோகமா????????????

... சுய தணிக்கை ...

Edited by Nellaiyan

இதில் என்ன சந்தேகம்? சரத் போன்சேகாதான் :lol:

எங்கட நரித்தனம் உபயத்தால் நாளைக்கு நடக்கும் பாராளுமண்ற தேர்தலில் மகிந்தவோடை கூட்டாம் எண்டுகினம்... அப்பதான் கருணாவையும் டக்கிளசையும் மகிந்தவிட்ட இருந்து கழட்டி விடலாம் எண்டு எங்கட சனம் அதுக்கு கதைவிடும்...

... இருப்பை நிலை நிறுத்தல், அரசியல் சாணக்கியம், தந்திரம் ..... (இவற்றை எழுதி மீண்டும் ....!!)

... ஏறக்குறைய 40 வருடகால சிங்கள அடக்குமுறையாளர்களுக்கு எதிரான சாத்வீக/ஆயுதப் போராட்டத்தின் பின் இந்திய இராணுவம் தாயகத்தில் நுளைந்து, யுத்தம் இந்திய இராணுவத்துக்கு எதிராகவும் நடந்தபோது .... நாம் 40வருட எதிரியுடன் கை குலுக்கினோம்!!! நடைபெற்று பல வருடங்களால்ல!!!! ... அப்போ அதுகும் துரோகமா????????????

... சுய தணிக்கை ...

Edited by Nellaiyan

அப்ப அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் கைகுலுக்காமலே செத்து போனாரோ...??? :lol::lol::o என்ன கொடுமை இது..?

கை குலுக்கிறது பிழை இல்லை.. சரணாகதி அடைஞ்சவையை வைச்சுக்கொண்டு கைகுலுக்கிறது கேவலம் எண்டுறது தான் கேவலம்...!

... அங்கை ஒண்டும் மிச்சமில்லை, ஏதோ ஒண்டு இருக்கிறது எண்டால் உந்த கூட்டமைப்புதான்!!! அதையும் இல்லாமல் செய்ய அவன் முயற்சிக்கிறான்!! .... நாங்கள் ஏதோ வெட்டி விழுத்தினவர்கள் கணக்கில், சொல்லுக்கு பின்னடை வரி வரியாக எழுதிக் கொண்டிருக்கிறம்!!!!

... கள்ளனோ, நல்லவனாகவோ இருக்கட்டும், ஆனால் அவன் சொல்கிறான் நாம் "தாயகம், தேசியம், தன்னாட்சி" கோட்பாட்டின் அடைப்படையில் செயற்படுவதாக!!! இப்போதைக்கு ஏற்போம் .... நாளை அதனை மீறி ஏதும் செய்ய முடியுமாயின் செய்யலாம்!!! ... இது இருப்பதையும் எட்டி உதைத்து துரத்துவது போல!!

முடிந்தது, தட்டச்சுக்கு முன்னிருந்து(இங்கு பயமில்லைத்தானே) அவன் துரோகி, இவன் துரோகி ... புளிச்சலுகளை தட்டி முடித்து விட்டு ஒரு இணையத்தில் போட்டு விட்டால், வெட்டி விழுத்திப் போட்டோம் என்ற நினைப்பு!! ... அது போதும்!!!

அங்கு நாளுக்கு நாள் குடியேற்றங்கள், கலாச்சார அழிவுகள், .... உதுகளை தடுக்க/போராட ஏதும் செய்யுங்கள், அதனை விட்டு விட்டு ...........( http://www.tamilnet.com/art.html?catid=79&artid=31131

)

... அப்ப அப்பாப்பிள்ளையும் கை குலுக்கினார், பிரபாகரனும்(சார்பாக) குலுக்கினார் ... ஒரே தட்டில் ????????????....!!!!!!!!!!!

Edited by Nellaiyan

ஒண்டுக்கும் முடியாதவைதான் யாழுக்கை வாறவை தட்டச்சிலை புடுங்க முடியாதவை எண்டு ஏளனம் சொல்லுறவை பிறகு எதுக்கு இங்கை யாழுக்கை இருந்து முக்க வேண்டும் எண்டுதான் புரியவில்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் சொல்வதெல்லாம் வாசிக்க நல்லாத்தான் இருக்கிறது.ஆனால் நடைமுறைச்சாத்தியம் இல்லை.தமிழ்மக்களின் நிலைப்பாடுபற்றி தமிழ்மக்களக்கே குழப்பம் வரும்படி பேசும் சம்பந்தர் எப்படி சிங்கள மக்களுக்கு கொள்கை விளக்கம் கொடுக்கப் போறார்.இவர் விளக்கம் குடத்து அவங்களுக்கு விளங்கி எங்களுக்கு உரிமைகளை வெள்ளித்தட்டில் தூக்கித் தருவார்கள் .அந்த விடயம் தலைவருக்குத் தெரியாததால 30 ஆயிரம் போராளிகளும் 1 இலட்சம் மக்களும் அழிந்ததுதான் கண்ட மிச்சம்.

சம்பந்தருக்கும் அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் எதிராக கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்மக்கள் கூட்டமைப்பின் மீதே ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

அப்போ இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள தான் சம்பந்தர் இந்த முடிவுக்கு வந்தாரென்று எடுத்துக்கொள்ளலாமா?

கருத்துக்கான தலைப்பை நாம் ஆழமாக உற்றுநோக்குவதை கடந்து செல்லவேண்டிய தேவை இருக்கின்றது. கீழே உள்ள சம்மந்தரின் கூற்றில் சிங்கள சகோதரர் என்ற பதமும் தீங்கை ஏற்படுத்துவது நோக்கம் இல்லை என்ற கூற்றும் இறுதியில் அன்பாக கூறுவதாக முடிக்கப்படுகின்றது. தாயக மக்கள் எந்தக் கதியில் இருக்கின்றார்கள் என்பதை இந்த அறிக்கை ஊடாக புரிந்து கொள்ள முடிந்தால் அது ஆரோக்கியமானதாக இருக்கும். எம்மை சிங்களம் மனிதராகவே மதிக்காமல் மிதித்து துவைத்துள்ள நிலையில் அனைத்து தீங்கையும் செய்துகொண்டிருக்கும் நிலையில் ஈவிரக்கமற்று எம்மக்களை நடத்தும் நிலையில் இவை அனைத்தையும் நாங்கள் உங்களுக்கு செய்யமாட்டோம் என்றவகையிலேதான் சம்மந்தரின் கூற்று அல்லது மன்றாட்டம் இருக்கின்றது.

நாங்கள் பெரும்பாண்மை சிங்கள சகோதரருக்கு மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ஒருபோதும் நாங்கள் எவ்விதமான தீங்கையும் ஏற்படுத்துவது எங்களுடைய நோக்கம் அல்ல.

எமது மக்களான, தமிழ்,முஸ்லிம், மலையக மக்களும் இந்த நாட்டில் சம பிரஜைகளாக சுயமரியாதையுடனும், கௌரவத்துடன் வாழவேண்டியத்திற்கும ;அவர்களின் உரித்தை அடைவதற்கு எமது முயற்சி எடுக்கப்படுகின்றது என்பதை அன்பாகக் கூறி வைத்துக்கொள்ள விரும்புகிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

தேசியவாதம் என்பது புலத்திலும் நிலத்திலும் ஒரேவிதமான ஆழுமையை கொண்டிருக்கவில்லை. புலத்தில் நாடுகடந்த அரசு குறித்து நகர்கின்றனர், நிலத்தில் சிங்கள பேரினவாத நெருக்கடிகளுக்கு உள்ளாக உயிரையும் வாழ்வையும் தக்கவைப்பது குறித்து நகர்கின்றனர். இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கின்றது. இது சம்மந்தரின் கருத்தாக நாம் எடுக்கவியாலது. இது நெருக்கடிக்குள் வாழும் மக்களின் பொதுக் கருத்தாகவே அணுகவேண்டும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு கிருபன், இங்கு ஒருவரும் சரத்தின் மீது காதல் கொண்டோ, கட்டிப்பிடிப்பார்/படுப்பார் என்று கருதியோ ஆதரவு கொடுக்கவில்லை!!!

1) ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்.

2) ஒட்டு/ஒட்டில்லாத குழுக்கள் ஒதுக்கப்படும் என்று விரும்பினார்கள்.

3) மேற்குலகின் அழுந்தங்கள் இருப்பின், சரத் ஆட்சிக்கு வந்தால் மகிந்த கும்பல யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தலாம்.

... இவைகள் நடக்குமோ, நடக்காதோ என்ற நிலையிலும் ஒரு நம்பிக்கையில் தான்!!!

.... இல்லை .... புலம்பெயர் தமிழ் மக்கள், நீங்கள் கூறுவதுபோல், பிரபாகரனை நிராகரித்து, சரத்தை ஏற்று விட்டார்களோ தெரியாது! :lol:

தமிழர்கள் எப்போதும் ஹீரோக்களை வழிபடுபவர்கள்தானே. முள்ளிவாய்க்காலில் போரை வென்ற சரத்தையும் ஹீரோவாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் சொல்லலாம். எப்போதுமே எவருக்கும் பின்னால் கூட்டமாக போகும் குணம் இருக்குத்தானே.

தேசியவாதம் என்பது புலத்திலும் நிலத்திலும் ஒரேவிதமான ஆழுமையை கொண்டிருக்கவில்லை. புலத்தில் நாடுகடந்த அரசு குறித்து நகர்கின்றனர், நிலத்தில் சிங்கள பேரினவாத நெருக்கடிகளுக்கு உள்ளாக உயிரையும் வாழ்வையும் தக்கவைப்பது குறித்து நகர்கின்றனர். இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கின்றது. இது சம்மந்தரின் கருத்தாக நாம் எடுக்கவியாலது. இது நெருக்கடிக்குள் வாழும் மக்களின் பொதுக் கருத்தாகவே அணுகவேண்டும்.

நெருக்கடியுக்குள் இருக்கும் மக்கள்... இதுதான் உண்மையும் ஜதார்த்தமும் கூட... இதை சம்பந்தர் ஜனாதிபதி தேர்தலில் போதும் பிரச்சாரங்களின் போதும் கவனத்தில் எடுத்தாரோ...??? இல்லையே...??

இலங்கையில் தேர்தலில் மகிந்தவே வெல்வான் என்பது வெளிப்படையாக இருந்த போது ஆட்சி மாற்றம் பற்றியும் மகிந்த பற்றி தூற்றும் போது வராத அறிவா இப்ப வந்து விட்டது...??

இண்று கூட்டமைப்பு அலறுவதுக்கு காரணம் மகிந்த மீது தூற்றி அள்ளிக்கொட்டியவைகள் தான்... தனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கிறது எண்றும் சம்பந்தன் சொல்லி இருக்கிறார்.. அதுக்கும் இதுக்கும் கூட சம்ப்ந்தம் உண்டு...

சம்பந்தரின் தூரநோக்கற்ற செயலுக்கு இது கூட நல்லதொரு எடுத்துக்காட்டு...

என்ன செய்வது சிங்களம் குறித்த தீர்க்கமான புரிதல் யாருக்கும் இல்லை என்பது தூரதிஸ்டமானது. எதிர்க்கட்சி வேட்பாளரும் அதே நேரம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த கதாநாயகனுமான பொன்சேகவையே ராணுவக்காவலில் வைக்க மகிந்தர் தயங்கமாட்டார் என்பதை சம்மந்தர் முதலில் நினைத்துப்பார்த்திருக்காமல் இருந்திருக்கலாம்.பென்சேகவுக்கே இந்தக் கதி என்றால் சம்மந்தர் எந்த மூலைக்குள்?

தற்போதைய அரசியற் சூழ்நிலையில் களத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு ஒத்திசைவாகப் புலத்திலும் அரசியல் செய்வது தற்கொலைக்குச் சமமானது. சம்பந்தரின் கருத்து சந்தர்ப்பவாதக்கருத்தா? இராசதந்திரக் கருத்தா? எதுவாகவும் இருக்கட்டும், புலத்தில் நாம் எமது உச்ச இலக்கை முன்வைத்து பரப்புரைகளை முன்னெடுப்பதே, களத்தில் இயங்கும் தமிழர் நலன் பேணுவதில் முதன்மை நிலையில் இயங்கும் அரசியல் சக்திக்குப் பலம் சேர்க்கும்.. இராணுவ அழுத்தத்திற்குள் இயங்கும் ஒரு சன நாயக அமைப்பின் குழப்பமான செய்திகள் தமிழ்த்தேசிய எழுச்சியை மழுங்கடித்துவிடும். எனவே புலத்தில் நாம் எமது தமிழ்தேசிய எழுச்சியைத் தக்க வைப்பதற்கு தேவையான வேலைத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான முடிவுகளை அடிப்படையாக வைத்து தாயகத்திலும் அவ்வாறனதோர் கருத்துக் கணிப்பை நடாத்த முன்வருமாறு ஐநாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இதைவிட்டு விட்டு எங்களுக்கு பிரிவினை வேண்டாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அவர்கள் தாற பிச்சையை வாங்கிக் கொண்டு இருப்போம் என்பது எல்லாவற்றையும் குழப்பி அடிக்கும் செயலாகும். இது சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணைகளைக் கிடப்பில் போட உதவவும்.கடைசியில் மகிந்தவையும் பொன்சேகாவையும் கோத்தபாயவையும் சிங்களவர்களையும் காப்பாற்றத்தான் உதவுமே ஒழிய

முகாமில் உள்ள மக்களை மீள் குடியேற்றவோ அவர்களுக்கான நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளவோ உள்ளே இருக்கும் போராளிகளை நிபந்தனையின்றி விடுவிக்கவோ உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்கவோ குடியேற்றங்களைத் தடுக்கவோ முடியாது.இவ்வளவையும் செய்ய முடியாத தீர்வு எதற்கு? தமிழர்களே(தமிழ்த்தலைவர்களே) அக்கறையற்று இருக்கும் போது வெளி நாட்டுக்காரன் எதற்கு அக்கறைப் படப் போகின்றான். உண்மையில் சம்பந்தர் நேர்மையானவராக இருந்தால் தமிழ் மக்களால் கொடுக்கப்பட்ட தனது எம்பி பதவியை(இன்னும் ஆகக் கூடியது 3மாதம்தான்) தூக்கி எறிந்து விட்டு இப்படியான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.இப்பொழுது சொல்ல அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.