Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்கெல்லாம் நோபல் பரிசு கொடுத்தார்களே!!!????

Featured Replies

லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஓ2 செல்போன் நிறுவனம் தன்னிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கி எனப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார்.

ஆனால் அந்த நிறுவனம் இதை மறுத்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஓ2 என்ற நிறுவனத்திடம் ஐபோன் ஒன்றை வாங்க விண்ணப்பித்திருந்தார் வெங்கி. ஆனால் அந்த போனுக்கான சேவையை அளிக்க 3 மாத கட்டணமான 325 டாலரை டெபாசிட்டாக கட்ட வேண்டும் என ஓ2 நிறுவனம் வெங்கியிடம் கூறியுள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் வெங்கி. காரணம், வழக்கமாக இதற்கு டெபாசிட் தொகையெல்லாம் கோரப்படாது. வங்கிக் கணக்கில் சிக்கல் உள்ளவர்கள், கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தாதவர்களிடம் தான் டெபாசிட் கோரப்படும்.

ஆனால், அப்படி எந்தத் தவறும் செய்யாத தன்னிடம் மட்டும் டெபாசிட் கேட்ட செயல் இனவெறியாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கோபத்துடன் கூறியுள்ளார் வெங்கி.

இதுகுறித்து வெங்கி கூறுகையில், இது மிகவும் வினோதமாக இருக்கிறது. இதை இனவெறி பிரச்சினையாக நான் கருதாவிட்டாலும் கூட இனவெறியுடன் கூடிய செயலாகவே நான் பார்க்கிறேன்.

ஒரு செயலுக்கு உரிய காரணம் இல்லாவிட்டால் நிச்சயம் அது இனவெறியாகவே இருக்க முடியும். அவர்களது அணுகுமுறை தவறு என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளவேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி ஒரு நிலைமை யாருக்கும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மிகவும் அபத்தமாக இருக்கிறது இது என்று கோபத்துடன் கூறினார்.

தற்போது லண்டனில் தங்கி ஆய்வுப் பணிகளை நடத்தி வருகிறார் வெங்கி என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் வெங்கியின் புகார்களை ஓ2 நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெங்கட்ராமன ராமகிருஷ்ணன் தனது பெயரை விண்ணப்பத்தில் வெங்கி என்று எழுதியிருந்ததால்தான் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

மேலும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஒரு அமெரிக்க குடிமகன். அவரது பெயர் இங்கிலாந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும் இங்கிலாந்தில் இதற்கு முன்பு அவர் ஒருமுறை கூட செல்போனை வாங்கியதில்லை. எனவே அவர் குறித்த தகவல்கள் யாரிடமும் இல்லை.

எனவேதான் அவரது நம்பகத்தன்மை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் டெபாசிட் கோரப்பட்டது. மேலும் அவரது பெயரும் மிகச் சுருக்கமாக, வெறுமனே வெங்கி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததால் இதைக் கேட்க வேண்டியதாயிற்று என்று விளக்கியுள்ளார்.

இதற்கிடையே, லண்டனில் வசித்து வரும் இந்தியரான லார்ட் மேகநாத் தேசாய், வெங்கியின் புகாரை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், வெங்கி கூறும் புகார் நிச்சயம் இனவெறி என்று எடுத்துக் கொள்ளக் கூடியது இல்லை.

இது யாருக்கு வேண்டுமானாலும் நடைபெறலாம். இதை இனவெறிச் செயலாக நிச்சயம் பார்க்க முடியாது.

செல்போன்கள் என்பதை மிகவும் முக்கியமானவை, பாதுகாப்பு தொடர்பானவை. இதை கவனமாக கையாள வேண்டியது அவசியமாகிறது. அனைவரும் இதை சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

Read: In English

இதை வெங்கி பிரச்சினையாக்கியிருப்பது வருத்தம் தருகிறது. எனக்கு இதுபோல நடந்திருந்தால் நிச்சயம் நான் பிரச்சினையாக்கியிருக்க மாட்டேன் என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால், அப்படி எந்தத் தவறும் செய்யாத தன்னிடம் மட்டும் டெபாசிட் கேட்ட செயல் இனவெறியாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கோபத்துடன் கூறியுள்ளார் வெங்கி.

இதுகுறித்து வெங்கி கூறுகையில், இது மிகவும் வினோதமாக இருக்கிறது. இதை இனவெறி பிரச்சினையாக நான் கருதாவிட்டாலும் கூட இனவெறியுடன் கூடிய செயலாகவே நான் பார்க்கிறேன்.

ஒரு நோபல்பரிசு எடுத்த மனிசன் கதைக்கிற கதையே இது?

சருகு ஆமையை மெத்தையிலை படுக்கவைச்சாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.

அததுகள் தங்கடை குணத்தை காட்டாமல் விடாதுகள்.

வெங்கி எங்கடை ஊரிலை வேறை அர்த்தம்

...

மேலும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஒரு அமெரிக்க குடிமகன். அவரது பெயர் இங்கிலாந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும் இங்கிலாந்தில் இதற்கு முன்பு அவர் ஒருமுறை கூட செல்போனை வாங்கியதில்லை. எனவே அவர் குறித்த தகவல்கள் யாரிடமும் இல்லை.

எனவேதான் அவரது நம்பகத்தன்மை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் டெபாசிட் கோரப்பட்டது. மேலும் அவரது பெயரும் மிகச் சுருக்கமாக, வெறுமனே வெங்கி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததால் இதைக் கேட்க வேண்டியதாயிற்று என்று விளக்கியுள்ளார்.

...

இதுக்கு மேல என்ன விளக்கம் வேணுமாம்? :lol:

பெயரை சுருக்கி வெங்கி என்று வைத்ததுக்கு பதிலாக 'சங்கி மங்கி' என்று சுருக்கி இருந்தால் கூட பேருக்கு தெரிஞ்சு இருக்கும். :lol:

IPHONE 3GS ஒண்றை வாங்குவதுக்கு பிரித்தானியாவில் 600 நிமிடங்கள் உதிரி நிமிடங்களாகவும் கணக்கற்ற தரவுகள் தரவிறக்கம் கொண்ட கணக்கை ஆரம்பிக்க மாதம் £35செலுத்தும் திட்டத்தில் மேலதிகமாக £199 பண்ஸ்கலை செலுத்தியே ஒண்றை வாங்க முடியும்... 1200 நிமிடங்கள் கணக்கற்ற தரவுகள் தரவிறக்கம் என்னும் திட்டமான £45திட்டத்துக்கு £99 பவுன்ஸ்களை கட்டனமாக செலுத்தினாலே வாங்க முடியும்...

இதில் வெள்ளைகளுக்கு கறுப்பர்களுக்கு எண்று வித்தியாசம் கிடையாது..

இலவசமாக பேசும் நிமிடங்கள் கொடுத்து கூடவே 550 பவுன்ஸ் பெறுமதியான பேசியை இலவசமாக கொடுப்பார்களா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கும் செய்தித்தாள் , தொலைக்காட்சியில் எல்லாம் படம் வரவேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்கும் போல??

நோபல் பரிசு வாங்கியவர் ஏன் இப்படி சின்ன புள்ளதனமா நடந்துக்கணும்????

  • கருத்துக்கள உறவுகள்

இதுகுறித்து வெங்கி கூறுகையில், இது மிகவும் வினோதமாக இருக்கிறது. இதை இனவெறி பிரச்சினையாக நான் கருதாவிட்டாலும் கூட இனவெறியுடன் கூடிய செயலாகவே நான் பார்க்கிறேன்.

ஒரு செயலுக்கு உரிய காரணம் இல்லாவிட்டால் நிச்சயம் அது இனவெறியாகவே இருக்க முடியும். அவர்களது அணுகுமுறை தவறு என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளவேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி ஒரு நிலைமை யாருக்கும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மிகவும் அபத்தமாக இருக்கிறது இது என்று கோபத்துடன் கூறினார்

.

ம‌ரத்தில் இருந்து கீழே விழுந்த அப்பிள் மூலம், பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என, கண்டு பிடித்த ஐசாக் நியூட்டனின் ஞாபகம் தான் வருகின்றது. நியூட்டனின் ஆராய்ச்சி கூடத்தில் ஒரு பூனையை வளர்த்து வந்தார். ஆராய்ச்சிக்கூடம் பூட்டியிருக்கும் சமயங்களில் பூனை வெளியே சென்று வர சிறிய ஓட்டை ஒன்றை சுவரில் ஏற்படுத்தியிருந்தார். சிறிது காலத்தில் பூனை குட்டித்தாச்சியாகி...... குட்டியும் போட்டு விட்டது.

இப்போ நியூட்டன் பூனையின் குட்டிகள் வெளியே போய் வர வழி இல்லையே என்று..... தாய்ப்பூனை போய் வாற பெரிய ஓட்டைக்கு பக்கத்தில் குட்டிகள் போய் வர‌ சிறிய ஓட்டை ஒன்றை போட்டு விட்டார்.

இவ்வளவு பெரிய விஞ்ஞானிக்கு தாய்ப்பூனை போகும் ஓட்டையால் குட்டிப்பூனை போய் வரும் என்று ஏன் சிந்திக்க முடியவில்லை.

வெங்கியின் செயலை பார்க்க, அப்படித்தான் தெரிகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் வெங்கி ஒரு 250 பவுண் கொடுத்து ஒரு ஐபோனை வாங்கிட்டுப் போறது. இதற்குப் போய் இனவெறியா..??! அதற்காக இங்கிலாந்து வர்த்தக மையங்கள் இனவெறிகாட்டுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது இங்கு தாராளமாக இருக்கிறது.. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் அது இருந்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது..! :o

அது சரி இதற்கும் நோபல் பரிசிற்கும் என்ன தொடர்பு..???! :lol: :lol:

.

வெங்கியின் செயலை பார்க்க......

மரத்தில் இருந்து கீழே விழுந்த அப்பிள் மூலம், பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என, கண்டு பிடித்த ஐசாக் நியூட்டனின் ஞாபகம் தான் வருகின்றது. நியூட்டனின் ஆராய்ச்சி கூடத்தில் ஒரு பூனையை வளர்த்து வந்தார். ஆராய்ச்சிக்கூடம் பூட்டியிருக்கும் சமயங்களில் பூனை வெளியே சென்று வர சிறிய ஓட்டை ஒன்றை சுவரில் ஏற்படுத்தியிருந்தார். சிறிது காலத்தில் பூனை குட்டித்தாச்சியாகி...... குட்டியும் போட்டு விட்டது.

இப்போ நியூட்டன் பூனையின் குட்டிகள் வெளியே போய் வர வழி இல்லையே என்று..... தாய்ப்பூனை போய் வாற பெரிய ஓட்டைக்கு பக்கத்தில் குட்டிகள் சிறிய ஓட்டை ஒன்றை போட்டு விட்டார்.

இவ்வளவு பெரிய விஞ்ஞானிக்கு தாய்ப்பூனை போகும் ஓட்டையால் குட்டிப்பூனை போய் வரும் என்று ஏன் சிந்திக்க முடியவில்லை.

இங்க தான் நீங்கள் நியூட்டனை தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

எல்லாருக்கும் எல்லா உரிமையும் சமனாக அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை தாய் பூனையும் குட்டிப்பூனையும் ஒருசேர வெளியே போகனும் என்றால் என்ன நிலை. ஒன்று காத்திருந்து போக வேண்டும். அதுமட்டுமன்றி குட்டிப்பூனை பாய்ந்து போக கஸ்டப்படும். அதுதான் நியூட்டன் பிறிதொரு துளையை இட்டு அதற்கு செளகரியம் செய்து கொடுத்தார். சின்னப்பிள்ளைகள் என்று உதாசீனம் செய்யும் எமது சமூகத்தில் சின்னவர்களுக்கும் சம உரிமை அளிக்க வேண்டும் என்பதை நியூட்டனின் இந்தக் கதை அருமையாகச் சொல்லி இருக்கிறது. அதை விளங்காம..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

செல்போன்கள் என்பதை மிகவும் முக்கியமானவை, பாதுகாப்பு தொடர்பானவை. இதை கவனமாக கையாள வேண்டியது அவசியமாகிறது. அனைவரும் இதை சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

இது ரெம்ப ஓவர். இந்தப் பிரச்சனை ஒப்பந்த சந்தாக்காரர்களுக்கு மட்டும் தான். pay as you go வைத்திருக்கும் குஞ்சு குருமன் எல்லாம் நாளுக்கொரு சிம்மைப் போட்டு விளையாட்டுக்காட்டிக் கொண்டு திரியுதுகள்.. இது பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனையா தெரியல்லையோ...???!

ஒருவேளை வெங்கிக்கும் எதிராளிகள் இருப்பார்கள் போல. அதுதான் நேரம் பார்த்து கடாசிறார்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

-----

இங்க தான் நீங்கள் நியூட்டனை தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

எல்லாருக்கும் எல்லா உரிமையும் சமனாக அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை தாய் பூனையும் குட்டிப்பூனையும் ஒருசேர வெளியே போகனும் என்றால் என்ன நிலை. ஒன்று காத்திருந்து போக வேண்டும். அதுமட்டுமன்றி குட்டிப்பூனை பாய்ந்து போக கஸ்டப்படும். அதுதான் நியூட்டன் பிறிதொரு துளையை இட்டு அதற்கு செளகரியம் செய்து கொடுத்தார். சின்னப்பிள்ளைகள் என்று உதாசீனம் செய்யும் எமது சமூகத்தில் சின்னவர்களுக்கும் சம உரிமை அளிக்க வேண்டும் என்பதை நியூட்டனின் இந்தக் கதை அருமையாகச் சொல்லி இருக்கிறது. அதை விளங்காம..! :lol:

நியூட்டன், சம உரிமையை சிந்தித்தவராக இருந்தால்.......

கடுவன் பூனையும், சௌகரியமாக வந்து போக..... தாய்ப்பூனைக்கு பக்கத்திலை இன்னுமொரு ஓட்டையும் போட்டிருப்பார் அல்லவா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நியூட்டன், சம உரிமையை சிந்தித்தவராக இருந்தால்.......

கடுவன் பூனையும், சௌகரியமாக வந்து போக..... தாய்ப்பூனைக்கு பக்கத்திலை இன்னுமொரு ஓட்டையும் போட்டிருப்பார் அல்லவா? :lol:

நியூட்டனின் பூனை பெண்பூனை. அது வெளியில் போய் தன்பாட்டில் கடுவனை தேடிக் கொண்டு வேலை முடிச்சுக் கொண்டு வரும். அழையா விருந்தாளிக்கு ஓட்டை போட்டு வைக்க நியூட்டன் அந்தளவுக்கு அறிவற்றவரா என்ன..?!! :lol::o

ஓ...... அது தான் நியூட்டன் கலியாணம் கட்டாமல் இருந்தவர் போலை......

தனது பெண் பூனை வெளியில் போய் அலுவலை முடிக்க வேண்டும் என்றும்.

ஆணாகிய நியூட்டன் தனது இச்சைகளையும் திருமணம் முடிக்காமல், அவ்வப்போது வெளியே போய் செய்ய வேண்டும் என்பது சுயநலம் தானே..... :lol::lol:

நோபெல் பரிசு வாங்கியதால் - வெங்கி தனது உணர்வுகளை (சரியோ / பிழையோ) வெளிப்படுத்தும் சுதந்திரத்தை இழந்துவிட்டாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.