Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தமது கணவருக்கு ஜனாதிபதி வழங்கிய பரிசு கடத்தல் ‐ அனோமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடத்திச் சென்று சிறைவைத்த நடவடிக்கையானது 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களுக்கு சமாதானத்தை உருவாக்கிய தமது கணவருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய பரிசு என அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார். ஜெனரல் பொன்சேக்காவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜெனரல் ஒருவரை அரசாங்கம் இவ்வாறு நடத்துமாயின் எதிர்காலத்தில் நாட்டு மக்களை நடத்தும் விதத்தை எண்ணிப் பார்க்க முடியாது.

சரத் பொன்சேக்கா இரகசியமான இடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டிருந்தால் ஏன் இரகசியமாக தடுத்துவைக்க வேண்டும். ஜெனரல் பொன்சேக்கா கைதுசெய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.30 அளவில் அவர் அலுவலகத்திலிருந்த போது இராணுவத்தினர் சென்று கைதுசெய்தமை பிரச்சினைக்குரியது எனவும் அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார்.

எனது கணவர் சாதாரண பிரஜை. சாதாரண பிரஜையைக் கைதுசெய்வதற்கு நடைமுறைகள் உள்ளன. சாதாரணமாக காவல்துறையினரே கைதுசெய்வர். எனினும், இராணுவ அதிகாரிகளும் படையினரும் இணைந்து எனது கணவரைக் கைதுசெய்துள்ளனர். இதன் தலைவராக மேஜர் ஜெனரல் மானவடு என்பவர் செயற்பட்டுள்ளார். அவரை நான் நன்கு அறிவேன். இராணுவச் சட்டத்தின்படி அவர் கைதுசெய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். எனக்கும் இராணுவச் சட்டம் தெரியும். எனக்குத் தெரிந்த வகையில் இராணுவச் சட்டத்தின்படி ஒரு இராணுவ அதிகாரியைக் கைதுசெய்வதற்கு அவரைவிட உயர் அதிகாரியொருவர் இருக்கவேண்டும். அதேபோல் கைதுசெய்வதிலும் நடைமுறைகள் இருக்கின்றன. இது கைது அல்ல. கடத்தல். அவரைத் தூக்கிச் சென்றுள்ளனர். நான் சாதாரண பிரஜை என இதன்போது எனது கணவர் கூறியுள்ளார். சாதாரண பிரஜை என்ற வகையில் நான் காவல்துறையில் சரணடைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மானவடு காவல்துறையினர் கீழே இருப்பதாகக் கூறியுள்ளார். அது பொய்யாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் எந்தக் காவல்துறை அதிகாரியும் இருக்கவில்லை. இந்தப் பொய்யைக் கூறியே அவரைக் கைதுசெய்துள்ளனர். உண்மையில் இது கடத்தலாகும். 30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவருக்கு வழங்கும் பரிசு இதுவா என நான் கேட்கிறேன்.

அவர் அர்ப்பணிப்புடன் யுத்தத்திற்கு பங்களிப்பு வழங்கியதை நான் அறிவேன். அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தேவை இருந்திருந்தால் பிரபாகரன் கொல்லப்பட்டவுடன் அவர் அதனைச் செய்திருக்கலாம். அவருக்கு அவ்வாறான தேவை எதுவும் இருக்கவில்லை. அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் சீருடையுடன் அரசியலில் ஈடுபடவில்லை. இவை அனைத்தையும் செய்த பின்னர் இறுதியில் விலங்கொன்றை கொண்டுசெல்வதைப் போல் எனது கணவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அதேவேளை, மானவடுவுடன் சென்ற ஏனைய அதிகாரிகள் எனது கணவரைக் கைதுசெய்வதைத் தவிர்க்க முயன்றபோது மானவடு அவர்களை கடுமையாக திட்டியுள்ளார். இவனைக் கொண்டுசெல்லுங்கள் போன்ற வார்த்தைகளை மானவடு பயன்படுத்தியுள்ளார். இன்று எனக்கு நேர்ந்துள்ளது நாளை உங்களது கணவன்மார்களுக்கும், தந்தையருக்கும் ஏற்படக்கூடும்.

நாம் இவற்றுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். அரசாங்கம் இவ்வாறு தரம் தாழ்ந்துள்ளமை குறித்து நான் கவலையடைகிறேன். எனக்கு நேர்ந்ததைப் போன்று உங்களுக்கும் நேராதிருப்பதற்காக அனைத்துப் பெண்களும் ஒன்றிணைய வேண்டும். பெண்கள் என்ற வகையில் இதற்கெதிராக ஏதேனும் ஒன்றைச் செய்தாகவேண்டும். அதற்காக என்னுடன் ஒன்றிணையுங்கள் என அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக அனோமா பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேக்கா கைதுசெய்யப்பட்டுள்ளதை காணாமல் போன இராணுவத்தினரின் பெற்றோர்களின் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது:‐

ஜெனரல் சரத் பொன்சேக்கா கைதுசெய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக காணாமல் போன இராணுவத்தினரின் பெற்றோர்களின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர் கைதுசெய்யப்பட்டதானது முழு இலங்கைக்கு மாத்திரமல்லாது முழு இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட களங்கம் எனவும் இந்தப் பாரிய அவச்செயல் குறித்து இலங்கையர்கள் என்ற வகையில் முக்கியமாக இராணுவக் குடும்ப உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் மிகவும் கவலையடைவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

30 வருடகாலமாக பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் இராணுவ குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பை அவமதிப்புக்குள்ளாக்கும் செயல் கீழ்த்தரமான செயல் என இதனை காண்கின்றோம். உலகில் எந்த நாட்டிலும் இடம்பெறாத இவ்வாறான அவச் செயல் குறித்து நாம் கவலையடைகிறோம் எனவும் காணாமல் போன இராணுவத்தினரின் பெற்றோர்களின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

அன்னம்மா.. நீங்கள் ரொம்ப லேட்..! முந்தி ஆட்களைக் கடத்தேக்குள்ளையே நீங்கள் இந்தமாதிரி சவுண்டுகளை விட்டிருக்க வேணும்..! :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Wife fears for Sri Lanka general Sarath Fonseka

The wife of the arrested former presidential contender, General Sarath Fonseka, says he has been "abducted" and that she has no idea where he is.

A tearful Anoma Fonseka demanded access to her husband saying she needs to hand over essential medication to him.

Gen Fonseka was detained by security forces at his office on Monday. The government says he will be court-martialled for "military offences".

Gen Fonseka was defeated by incumbent Mahinda Rajapaksa in last month's poll.

President Rajapaksa won about six million votes to Gen Fonseka's four million. But the general rejected the results and vowed to challenge them in court.

An official told the BBC the general had violated armed forces rules by engaging in politics while still in uniform and that he would be tried in a military court for this.

Military law still covered Gen Fonseka despite his retirement, officials said.

Military spokesman Maj Gen Prasad Samarasinghe told the Associated Press news agency that the general had not been cut off from friends.

"Family members are allowed to see him and he has been allowed to obtain legal advice also," he said.

'Treated like an animal'

But Mrs Fonseka said her husband had been "treated like an animal" as he was forcibly removed from his office.

She expressed shock that he had been picked up by someone of a lower rank.

Opposition politicians, who rallied around the retired military man as their presidential candidate last month, expressed their shock at the arrest and she appealed to the authorities to be reasonable in their treatment of him.

Opposition members described as "despicable" the operation in which, they said, a dozen military officers had dragged him from the room by his hands, feet and collar as he resisted.

One of the politicians present, Rauff Hakim, described the government as a "fascist" one which had now embarked on a political witch hunt.

Bitter rivalry

Gen Fonseka was in charge of Sri Lanka's army when it defeated the Tamil Tiger rebels last year after 25 years of civil war.

But they fell out over who should take credit for the victory and both fought the election boasting of their roles in the war.

Shortly before he was detained, Gen Fonseka told reporters that he would be prepared to go before any international investigation into war crimes allegedly committed by Sri Lankan troops in the final stages of that war.

The Defence Secretary, Gotabhaya Rajapaksa, insists that the government is not open to any possible probe of that kind.

The BBC's Charles Haviland in Colombo says the arrest was dramatic but not unexpected and there must now be questions about whether this is the start of a bigger clampdown on the opposition.

After the election, the government had accused Gen Fonseka of divulging sensitive information to the public, and of plotting both a coup and to assassinate the president and his family.

Gen Fonseka has vehemently denied the charges.

He said he feared an assassination attempt against him and had been told that airports would not allow him to leave the country.

bbc

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி வேட்ப்பாளர் ரெடி :D

எமது அம்மாமார், சகோதரிகள், சகோதரர்கள், பிள்ளைகள் என பல தமிழர்கள் விட்ட கண்ணீருக்கு சிங்களவர்கள் நீங்கள் எல்லோரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்

தமிழின படுகொலையாளர்களுக்கு இது போதாது அம்மையாரே!

கடத்திச் சென்று சிறைவைத்த நடவடிக்கையானது 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களுக்கு சமாதானத்தை உருவாக்கிய தமது கணவருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய பரிசு என அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார்.

30,000 இற்கு மேற்பட்ட மக்களை 30 கிழமைகளில் கொன்றவருக்கு - இந்த பரிசு போதாதுதான்.

எமது அம்மாமார், சகோதரிகள், சகோதரர்கள், பிள்ளைகள் என பல தமிழர்கள் விட்ட கண்ணீருக்கு சிங்களவர்கள் நீங்கள் எல்லோரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்

முற்றிலும் மறுக்க, மறைக்க முடியாத உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இவ்வளவு செய்தும் சர்வதேச உலகும் மனித உரிமை விழுமியங்களும் கண்மூடி பார்த்துக்கொண்டிருப்பதென்றால் சிறிலங்கா அரசின் தற்போதைய நடவடிக்கைகள் உலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலில்படிதான் தொடர்ந்தும் அரங்கேறிவருவதாக எண்ணத்தோன்றுகின்றது. போர்காலத்தில் நிகழ்ந்த மனிதபேரவலத்திற்கும் தமிழினஅழிப்புக்கும் உண்மைச் சாட்சியான பொன்சேகாவுக்கு மகிந்தா வாய்ப்பூட்டு போடுவதால் இலங்கையில் அரசியல் அமைதியொன்று ஏற்படுமாயின் சர்வதேசத்துக்கு குறிப்பாக அமெரிக்கா நோர்வே ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகளுக்கு அதைவிட பெரிய இலாபம் இருக்கமுடியாது. சரத் பொன்சேகா வாய்திறந்தால் வெளிவரப்போகும் உண்மைகள் மேற்குறித்த நாடுகள் சிறிலங்காவுக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்கியதற்காகவோ பணஉதவியாக அல்லது இராஜதந்திர நடவடிக்கைகளுடாகவோ சம்பந்தப்பட்டிருப்பது நிருபிக்கப்படும்போது அவர்களை இக்கட்டான ஒரு நிலைமைக்கு தள்ளிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலை எழுதிக்கிடக்கிற வசனங்களை பாக்கேக்கை

மகிந்த நல்லவன் போலை கிடக்கு

எமது பெற்றோர்கள்,சகோதரர்கள்,சகோதரிகள்,எமது உற்றார்,உறவினர்கள்,ந்ண்பர்கள்......... பட்ட அவலத்துக்கு இது போதாதம்மா!!!!!!!!!! :lol::)

மேலை எழுதிக்கிடக்கிற வசனங்களை பாக்கேக்கை

மகிந்த நல்லவன் போலை கிடக்கு

மகிந்தவிற்கு மட்டுமல்ல, அன்ன ஆகாரமின்றி தமிழர்களைக் கொன்றொழித்த, கொன்றழிக்க உதவியவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட வேண்டும்.

:lol::) நாயைப் போன்று இழுத்துச் செல்லப்பட்டார் பொன்சேகா: மனோ கணேசன் :lol::lol:

http://uyarvu.com/

பொன்னரின் இளைய மகள்

http://thissidesrilanka.blogspot.com/2010/02/where-is-my-father.html

  • கருத்துக்கள உறவுகள்

.

முள்ளி வாய்க்காலில் தமிழன் விட்ட கண்ணீருக்கு,

பதில் கண்ணீர் இவ்வளவு விரைவில் நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா ஏபிசி நிறுவனத்துக்கு தெரிவிக்கையில்இ எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நான் அஞ்சுகிறேன்.

நான் மிக மிக கவலையுடன் இருக்கிறேன். தற்போது அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூடத் தெரியவில்லை. அவரை அழைத்துச் சென்றவர்கள்இ எங்கே கொண்டு சென்றுள்ளோம் என்பதைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை.

எனது கணவரை இந்த அரசு கைது செய்யவில்லை. மாறாக கடத்திச் சென்றிருக்கிறது. எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும். எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை.

யாரிடம் போய் உதவி கேட்பதும் என்றும் தெரியவில்லை. யாராவது எனது குமுறலைக் கேட்டு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

சங்கதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.