Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கரங்களுக்குள் சிக்குண்டு சிதைந்து வருகின்றது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கரங்களுக்குள் சிக்குண்டு சிதைந்து வருகின்றது!

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் எல்லமே தலைகீழாக மாறி வருகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுத கட்டுமானம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான போராளிகளும், தளபதிகளும் பலி கொள்ளப்பட்ட பின்னர், அங்கிருந்து தப்பிய விடுதலைப் புலிகள் கல்லெறிந்து கலைக்கப்பட்ட குளவிகள் போல மீண்டும் ஒரு கூடு தேடி உலகெங்கும் பறந்து திரிகின்றனர். தமக்கான ஆயுத பலத்தையும், தம் பாதுகாவலர்களையும் இழந்த ஈழத் தமிழர்கள் வாய்திறந்து பேச முடியாத நிலையில் மீண்டும் ஆயுத முனையில் அடிமைப்படுதத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் தமிழீழ மக்களுக்கான நியாயங்களுக்காகப் போராடவேண்டிய தமிழீழ மக்களின் அரசியல் சக்தியாகச் செயற்படவேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கரங்களுக்குள் சிக்குண்டு சிதைந்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களது 'இந்தியாவுடன் யுத்தச் சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம்' என்ற அவரது கூற்று இதனை உறுதிப்படுத்துகின்றது. இந்தியாவின் விருப்பங்களுக்கான அரசியல் நகர்வையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது என்பதிலான சந்தேகங்கள் தற்போது தெளிவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறித்த இறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்குள் தமிழீழ மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் காய் நகர்த்தல்களுக்கூடாகத் தமிழீழ மக்கள் எதனையும் சாதித்துவிட முடியாது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புரிந்து கொள்ளவில்லை என்று கருத முடியாது. தமிழினம் சந்தித்த மிகப் பெரிய இழப்புக்களுக்கும், அழிவுகளுக்கும் பின்னால் இந்திய கரங்களே உள்ளது என்பதை சாதாரண ஒவ்வொரு தமிழனும் புரிந்தே வைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய சார்பு அரசியல் நகர்வு ஊடாகத் தமது சுயலாப அரசியல் வியாபாரத்தை மேற்கொள்வதாகவே சந்தேகிக்க முடிகின்றது. இதற்கு இடையூறு விளைவிக்கக்கூடியவர்கள் என்று கருதப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் ஆலோசனைப்படி ஓரங்கட்டும் நடவடிக்கைகளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், என். சிறீகாந்தா, பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன், சிவநாதன் கிஷோர், கனகசபை, கனகரட்ணம், தங்கேஸ்வரி கதிர்காமன், சந்திரநேரு, ஜெயானந்தமூர்த்தி ஆகியோருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படலாம் எனத் தெரிகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. திரு. என். சிறிகாந்தா அவர்கள் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு விரோதமாக சிவாஜிலிங்கம் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு வழங்கினார் என்பதை விட, யுத்த களத்தில் ஈழத் தமிழர்கள் தோற்றடிக்கப்பட்டு, முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட பின்னர் யுத்த சூத்திரதாரியான கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதுடன், அவரது பேச்சாளர் போன்று யுத்த அவலங்களை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டு, தமிழீழ மக்களின் அதிருப்தியையும் சம்பாதித்துள்ளார். திரு. சிவானந்தன் கிஷோர் அவர்கள் முள்ளிவாய்க்காலின் பின்னர் குளிர்விட்டுப்போன அரசியல்வாதியாக சிங்கள ஆட்சியாளர்களை வலம் வந்தவர். யாருமே துணியாத வகையில் கொடூர அரசுத் தலைவரான ராஜபக்ஷ அவர்களைக் கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு கருணாவாகத் தன்னை அடையாளம் காட்டியவர். முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, சிங்கள அரசுத் தலைவர் தேர்தல் காலத்தில் விடுவிக்கப்பட்ட திரு. கனகரட்ணம் அவர்கள் யாருமே எதிர்பாராத வகையில் பல்டி அடித்து, அரசுத் தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்தவர். திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்கள் நாடு திரும்ப முடியாத உயிரச்சம் காரணமாக வெகு காலமாக இங்கிலாந்தில் தங்கியுள்ளார். ஏனையவர்கள்மீது வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் இல்லாவிட்டாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்கள் எனபதே இவர்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதற்குக் காரணமாக உள்ளது.

ஈழத் தமிழர்களின் அவலம் மிகுந்த காலகட்டத்தில், அவர்களது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் தலைமையினை மேற்கொள்ள வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நகர்வுகள் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் பலம் சிதைக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கான போராடும் சக்தியாக உள்ள புலம்பெயர் தமிழர்களது முக்கியத்துவம் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்படுவது ஈழத் தமிழர்களை மீண்டும் அடிமை நிலையில் வைத்திருக்க எண்ணும் சிங்கள அரசுக்கும், ஈழத் தமிழர்களைத் தனது பிராந்திய வல்லாதிக்க நிலைப்பாட்டிற்கான பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ள இந்திய அரசுக்கும் பெரும் வாய்ப்பாக உள்ளது.

புலம்பெயர் தேசங்களின் தமிழ் அமைப்புக்களுடன் உறவுகளைப் பேணி, அதன் மூலம் புலம்பெயர் தமிழீழ மக்களது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து செயலாற்ற வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்றுவரை அதற்கான எந்த நகர்வினையும் மேற்கொள்ளாதது அதன் அரசியல் இலக்குக் குறித்த சந்தேகத்தை புலம்பெயர் தமிழ் மக்களிடம் உருவாக்கியுள்ளது. ஈழத் தமிழர்களது தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து வாழும் நிலையில், அவர்களை தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து தூர வைக்க முயலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் உள் நோக்கம் கொண்டவையாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது. சிங்கள அரசின் அச்சுறுத்தல்களுக்கும், இந்திய அரசின் அழுத்தங்களுக்கும் உட்படாத தமிழ்ச் சமூகம் ஒன்று புலம்பெயர் நாடுகளில் பலம் பெற்று வருவது உள்ளூர் அரசியலைத் தமக்கானதாக வைத்துக்கொள்ள விரும்பும் தமிழ்த் தலைமைகளுக்கு அச்சத்தைக் கொடுப்பதாகவே உள்ளது. பொருளாதார பலமும், கல்வியறிவும் மிக்க புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமது எதிர்கால அரசியல் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கலாம் என்ற அச்சமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த அச்சத்திற்குக் காரணமாக உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடமிருந்து வெகு நாட்கள் அப்படி விலகி இருக்க வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளே. அவர்கள் அனைவரும் தமிழீழத்தில் வாழும் தமது உறவுகளைக் கட்டுப்படுத்தும் பலம் கொண்டவர்கள் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டால், தமிழீழத்தில் புதியதொரு அரசியல் தலைமையை உருவாக்க வேண்டிய வெற்றிடம் ஒன்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

நன்றி - பதிவு இணையம்

பெயருக்கு ஒரு கட்ச்சி வேணும் எண்டு எங்கட ஆக்கள் ஆலா பறக்கினம். ஆனா பெயருக்கு கூட கூட்டமைப்பாக இல்லாமல் இருக்குது நிலமை. கூட்டமைப்பு இதுக்கும் மேலை கூட்டத்தோடை இருக்குமோ என்னமோ.

Edited by பொய்கை

தயவு செய்து யாராவது விளங்கப்படுத்துங்கள்.

சிறிலங்கா தேர்தல் என்று நாங்கள் முன்னர் தள்ளிநின்றோம். பின்னர் தேவைகருதி போட்டியிட்டு எம். பிகள் ஆனோம்.

புலிகளின் பிரசன்னம் இல்லாதபோது புலிகளே சிபாரிசு செய்த மனிதர்கள் சிங்கள போட்டியாளர்களுக்கு ஆதரவு செய்தால் சரி சூழ்நிலை அப்பிடி இப்பிடி என்று குளறுவதேன்... மற்றைய ஆட்களை மட்டும் ஏன் சந்தேகப்படவேண்டும்?

இதைப்பருங்கோ:

இந்தியா இரத்தவெறி

கருணாநிதி ஒரு வேடதாரி தொரோகி

கருணா ராஜ துரோகி

பிள்ளையான் ஒட்டுக்குழு

டக்கிலஸ் ஒட்டுக்குழு

சனாதிபதித் தேர்தல் சிறிலங்கா தேர்தல்

சரத் கொலைகாரன்

மகிந்த இரத்தவெறி பிடிச்ச அரக்கன்

கூட்டமைப்பு ஒரு கூத்தமைப்பு

புலிகளும் இன்றில்லை

தேர்தலும் வருகுது

இப்ப சொல்லுங்கோ நாங்கள் எல்லாம் என்ன செய்யப்போறம்?

சம்பந்தர் கூடாதென்றால் நல்லவங்கள் எல்லாரும் ஒண்டா சேர்ந்து தனிய ஒரு கட்சி தொடங்கி கேளுங்கோவன்.

ஏன் சமந்தரின்ர முழங்கையை பிடிப்பான்.

போற போக்கைப் பார்த்தால் இந்தமுறை டக்கிலஸ் தான் அதிகமான வாக்குல பெற்று வெற்றிபெறுவான் போலகிடக்கு.

தயவு செய்து யாராவது விளங்கப்படுத்துங்கள்.

இப்ப சொல்லுங்கோ நாங்கள் எல்லாம் என்ன செய்யப்போறம்?

சம்பந்தர் கூடாதென்றால் நல்லவங்கள் எல்லாரும் ஒண்டா சேர்ந்து தனிய ஒரு கட்சி தொடங்கி கேளுங்கோவன்.

ஏன் சமந்தரின்ர முழங்கையை பிடிப்பான்.

போற போக்கைப் பார்த்தால் இந்தமுறை டக்கிலஸ் தான் அதிகமான வாக்குல பெற்று வெற்றிபெறுவான் போலகிடக்கு.

நானும் சில கேள்வியை உங்களிட்டை கேக்கிறனே...

தமிழர்களின் அண்றாட வாழ்வு பிரச்சினை இந்த தேர்தல் மூலம் தீர்த்து வைக்கப்படுமா...?? மக்களின் மீள் குடியேற்றம் இந்த தேர்தலின் மூலம் சரியான முறையில் நடை பெறுமா...?? கைது செய்ய பட்டு இருக்கும் போராளிகள் இந்த தேர்தலின் பயனாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க படுமா...?? சரி அண்றாட பிரச்சினைகளை விடுவோம்...

இந்த தேர்தலின் முடிவுகள் அரசியல் ரீதியில் தமிழ் மக்களின் இருப்பு இலங்கையில் உறுதி செய்யப்படுமா...??? அரசியல் ரீதியில் தீர்வை பெற்றுத்தருமா...??

குறைந்தது என்ன நன்மைகள் தான் இருக்கும்...?? இதுவரைக்கும் இருந்தவர்கள் என்ன இதுக்காக நடவடிக்கைதான் எடுத்தார்கள்...???

முதலில் தமிழ் மக்களின் அண்றாட வாழ்வை சீராக்க வேண்டியதை செய்யுங்கள்... மக்களை நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுங்கள்... இதில் யார் வெற்றி பெற்றாலும் இவைகள் எதுவும் மாறப்போவது இல்லை என்பதுதான் உண்மை... அப்படியான ஒரு நிம்மதியான வாழ்க்கையை தாயகத்தில் வாழும் போது யோசிக்கலாம் யார் தலைமை ஏற்பது எண்று...

அங்கை சனம் பட்டினியாலும் வறுமையாலும் வாடிக்கொண்டு இருக்கு போது தலைமை யார் எனும் போட்டி அவசியமா....???

அந்த மக்களின் துயரை யார் துடைத்தாலும் அவர்களுக்கு என் ஆதரவு...

Edited by தயா

நீங்கள் சொல்வதைத்தான் நானும் கேட்கிறேன்..

இந்த தேர்தலால் எந்த பயனும் இல்லை.. அப்படி இருக்க இந்த தேர்தலுக்கு இப்ப மல்லுக்கட்டி இருக்கிற ஒற்றுமையையும் குழப்பிப்போட்டு என்ன செய்யப்போறம்?

அறுபது வருசமா தேர்தலில் போட்டியிட்டு என்னத்தை கண்டம்? இருந்தாலும் தேர்தல் என்று வந்தவுடன இடம் கேட்டு சண்டை. எங்களுக்கு தேர்தல் பிரச்சனையா அரசியல் பிரைச்சனையா?

தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வைத் தரப் போகின்றவர்கள் யாராக இருக்கும். தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு இருந்த ஒரே பலமும் வல்லாதிக்க சூழ்ச்சிகளினால் நசுக்கப்பட்டிருக்கிறது.

இத் தருணத்தில் கூட்டமைப்பு என்ற அமைப்பு முக்கியமானது. அந்த அமைப்பு பல அழுத்தங்களுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பது நமக்கு இப்போது புலப்படுகிறது. அதனால் இந்த அமைப்பிற்கு எதிரான இன்னொரு அமைப்பைத் தோற்றுவிப்பதனால் தமிழர் இலாபமடைய முடியாது. ஆகவே அதனை எவரும் செய்யக் கூடாது. மாற்று அமைப்புக்களைத் தோற்றுவிக்காது நன்மை கருதும் தமிழுணவாளர்கள் சிறப்பாகச் செயற்பட வேண்டும். இதில் இரகசியமாகச் செயற்பட வேண்டிய தருணமம் உண்டு.

ஜயா இறைவன்!

கூட்டமைப்பு அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அதற்காக பெயருக்காக கூட்டமைப்பு இருந்தால் போதுமா? இன்றைய அவர்களின் செயல்பாடுகளில் இருந்து உண்மையான நோக்கம் புரியவில்லையா? வரும் செய்திகள் உண்மையா, பொய்யா சரியாக உறுதியாகவில்லை ஒரு கதைக்கு உண்மையானால் இந்த கூட்டமைப்பு என்னத்தை சாதிக்கப்போகுது. இவர்களினால் தமிழர்களிற்கு பேராபத்து தான் ஏற்படும்.

சுருக்கமாக சொல்லப்போனால் கூட்டமைப்புக்கு தன்னம்பிக்கையும் இல்லை, கொள்கையில் உறுதியும் இல்லை. இந்த அமைப்பு கொள்கையில் இருந்து விலகாமல் இயங்கினால், இன்னொரு அமைப்பு உருவாகவேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை அல்லது விருப்பம்?

இணைவோம் தமிழராய்!

Edited by Valvai Mainthan

தமிழரைத் தமிழரே எவ்வளவு காலத்திற்கு எதிர்த்துக் கொண்டிருப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான் தமிழரின் ஒரே பிரதிநிதித்துவம் என்கிற நிலை இருப்பது நல்லதல்ல. முன்பு புலிகள் இருந்தபோது அவர்களின் நோக்கத்திலும் முயற்சிகளிலும் எதுவித சந்தேகத்துக்கும் இடமிருந்ததில்லை. ஆகவே அவர்கள் ஏகப் பிரதிநிதிகளாக இருக்க முடிந்தது. ஆனால் அத்தகைய நம்பிக்கையை கூட்டமைப்பு வென்றெடுத்துவிடவில்லை. காரணங்கள் பல. ஆனால் இருப்பவர்களில் ஓரளவு நம்பிக்கைக்கு உரியவர்கள் அவர்களே. அவர்களும் இருந்துவிட்டுப் போகட்டும்.

கூட்டமைப்பு இந்தியாவின் சொல்லுக்கு ஆடலாம். தேர்தல் என்னவோ தமிழராகிய நாங்கள் வெறுத்து ஒதுக்கிய ஸ்ரீலங்காவின் தேர்தல். அதில் கூட்டமைப்பு இந்தியாவுக்கு வால்பிடித்தால்தான் என்ன..! ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. இந்தியாவின் சொல்லுக்கு ஆடும் செல்லாக்காசுகளாக அவர்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே.

புதிய திசையினில் பயணிக்கும் நமது போராட்டத்துக்கு பன்முகப்பட்ட செயற்பாடுகளே இப்போது அவசியம். தமிழர் அழிவுக்கு பெருமளவில் காரணிகளாக அமைந்த இந்தியா, சீனா மற்றும் மேற்குலகக் கூட்டணியைச் சமாளிக்க ஒரு தலைமை போதாது. அந்த அடிப்படையில் இந்தியாவைக் கையாள அல்லது இந்தியாவின் சொல்லுக்கு ஆட, தாயக அரசியல் அமைப்பான கூட்டமைப்பு இருக்கட்டும்.

தமது செயல்பாடுகளினூடாக மேற்குலக நாடுகளில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் சமுகத்தைச் சார்ந்தது.

சீனாவுக்குத்தான் தமிழர் தரப்பில் இப்போது யாருமில்லை. அவர்களுக்குத் தேவையான ஒரு அமைப்பு தாயகத்தில் தோன்றும் ஒரு நிலை வந்தால், சிங்களவன் எமக்கெதிராக எந்தச் சக்திகளை உபயோகித்தானோ, அதே சக்திகளைக் கையாள்வதன்மூலம் தமிழர்கள் தமக்கேயான ஒரு தேசத்தை, தமிழீழத் தாயகத்தை வென்றெடுப்பார்கள் என்பதில் ஐயமேதும் இல்லை. :o

தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வைத் தரப் போகின்றவர்கள் யாராக இருக்கும். தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு இருந்த ஒரே பலமும் வல்லாதிக்க சூழ்ச்சிகளினால் நசுக்கப்பட்டிருக்கிறது.

இத் தருணத்தில் கூட்டமைப்பு என்ற அமைப்பு முக்கியமானது. அந்த அமைப்பு பல அழுத்தங்களுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பது நமக்கு இப்போது புலப்படுகிறது. அதனால் இந்த அமைப்பிற்கு எதிரான இன்னொரு அமைப்பைத் தோற்றுவிப்பதனால் தமிழர் இலாபமடைய முடியாது. ஆகவே அதனை எவரும் செய்யக் கூடாது. மாற்று அமைப்புக்களைத் தோற்றுவிக்காது நன்மை கருதும் தமிழுணவாளர்கள் சிறப்பாகச் செயற்பட வேண்டும். இதில் இரகசியமாகச் செயற்பட வேண்டிய தருணமம் உண்டு.

கூட்டமைப்பு உதவாது இந்தியாவுக்கு வால் பிடிக்குது... (முன்னம் சிவாஜிலிங்கம் இப்ப கூட்டமைப்பு).

கூட்டமைப்பு உடையவுங்க்கூடாது

உங்களை கேட்டால் என்ன செய்யலாம் எண்டு சொல்லுவிங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாகவும் உறுதியாகவும் சொல்கிறேன். உண்மையாக தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்கள் காலம் தாழ்த்தாது இணையவேண்டும், தமிழரின் தலைவிதியை மாற்றவேண்டும்.

இணைவோம் தமிழராய்!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இந்தியாவின் ஆட்டத்திற்கு ஆடுமாக இருந்தால் அப்படி ஒரு தலமையைச் தெரிவு செய்வதிலும் தலமையே இல்லாது இருக்கலாம்.ஏனெனில் இந்தியாவின் தீர்வுத்திட்டத்தில் தமிழருக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது.ஈபிடிபி இல் இருந்து தமிழர் விரோத செயற்பாடுகளைச் செய்த விக்கினேஸ்வரன் யாருடைய ஏற்பாட்டில் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப் படுகிறார்?கூட்டமைப்பு தேர்தலில் வென்று எமக்காக எதையும் பெற்றுத் தரப் போவதில்லை.அதன் சொந்தப் பாராளுமன்ற உறுப்பினரையே விடுவிக்க முடியாமல் கையாலாகல் இருந்த நிலமையில் மகிந்தவே அவரை விடுவித்து தனக்குப் பயன்படுத்திக் கொண்டார்.இந்த நிலமையில் தமிழர்களை எப்படி விடுவிக்கப் போகின்றனர்.இந்த நிலமையில் கூட்டமைப்பு தொடர்ந்து தவறான பாதையில் செல்லுமாயின் தமிழரின் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கூடிய அர்ப்பணிப்பும் விவேகமும் வேகமும் கொண்ட இளைஞர்கள் தலமையில் புதிய அணி ஒன்று உருவாகி தமிழர்களின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். யாழ் பல்கலைக்கழக சமூகம் இதுபற்றிச் சிந்திப்பது நல்லது.அப்பதான் இந்தியாவுக்கும் உறைக்கும் கூட்டமைப்புக்கும் உறைக்கும்.கூட்டமைப்பின் தமிழர் விரோத நடவடிக்கை பிடிக்காதவர்கள் அங்கே இருந்து பிரிந்து வரவேண்டும்.தமிழர் நலனைச் சிந்திக்காத இந்தியாவின் நலனை விரும்பும் கூட்டமைப்பு இருப்பதிலும் பார்க்க உடைவதே நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருகிறத அழிச்சுட்டு என்னப்பு செய்ய போறீக, என்ன வோபோங்க அரசியலே வெறுத்து போச்ச :o:D

இருகிறத அழிச்சுட்டு என்னப்பு செய்ய போறீக, என்ன வோபோங்க அரசியலே வெறுத்து போச்ச :D:lol:

:D எப்பவும் எதிரி நினைக்கிறதை புத்திசாலித்தனமா செய்யிறதுதானே எங்களுக்கு வேலை.

இதையும் செய்வம்.. எதுவும் இருக்கும் மட்டும்தான் பிரச்சனை. முடிச்சு போச்சென்றால் ஒரு பிரச்சனையும் இல்லை.

கூட்டமைப்பையும் கலைச்சு உந்த நாடு கடந்த அரசையும் கலைச்சிட்டா சரி அங்காலை ஒரு பிரச்சனையும் இல்லை. :o

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இருக்கிறது தமிழருக்கு என்னத்த பெரிசா செய்தது என்று பட்டியல் போடுங்க பார்ப்போம்?

நீங்கள் சொல்வதைத்தான் நானும் கேட்கிறேன்..

இந்த தேர்தலால் எந்த பயனும் இல்லை.. அப்படி இருக்க இந்த தேர்தலுக்கு இப்ப மல்லுக்கட்டி இருக்கிற ஒற்றுமையையும் குழப்பிப்போட்டு என்ன செய்யப்போறம்?

அறுபது வருசமா தேர்தலில் போட்டியிட்டு என்னத்தை கண்டம்? இருந்தாலும் தேர்தல் என்று வந்தவுடன இடம் கேட்டு சண்டை. எங்களுக்கு தேர்தல் பிரச்சனையா அரசியல் பிரைச்சனையா?

எங்களுக்கு தேர்தலும் பிரச்சினை இல்லை இப்போதைக்கு அரசியலும் பிரச்சினை இல்லை...

முக்கிய பிரச்சினை அடிப்படை வாழ்வு... சனம் பிச்சை காறரை விட கேவலமாக இருக்கிறது... அங்கை எதுவுமே இல்லை.. நாங்கள் அரசியல் செய்து இந்தியனுக்கு அடிமையாக இருந்து அவனை வளர்த்து விட்டு போவதுக்கு சிங்களவனுக்கு அடிமையாக இருந்து போட்டு போகலாம்... எங்கட வழங்களை சிங்களவன் எங்கட ஊரிலை வைச்சே அனுபவிப்பான் ஆனால் இந்தியன் இந்தியாவுக்கு கொண்டு போவான்... இதுதான் சுருக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

இருகிறத அழிச்சுட்டு என்னப்பு செய்ய போறீக, என்ன வோபோங்க அரசியலே வெறுத்து போச்ச :D:lol:

:D எப்பவும் எதிரி நினைக்கிறதை புத்திசாலித்தனமா செய்யிறதுதானே எங்களுக்கு வேலை.

இதையும் செய்வம்.. எதுவும் இருக்கும் மட்டும்தான் பிரச்சனை. முடிச்சு போச்சென்றால் ஒரு பிரச்சனையும் இல்லை.

கூட்டமைப்பையும் கலைச்சு உந்த நாடு கடந்த அரசையும் கலைச்சிட்டா சரி அங்காலை ஒரு பிரச்சனையும் இல்லை. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.