Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேபியுடன் தொடர்பு என பரப்பப்படும் வதந்தி உள்நோக்கம் கொண்டது: ருத்ரகுமாரன்

Featured Replies

திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சிஇ நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.'

இவ்வாறு இணையத்தளம் ஒன்றுக்கு (நநடயஅநநெறள.உழஅ) அளித்த செவ்வியொன்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கேள்வியொன்றிற்கு ருத்ரகுமாரன் அளித்துள்ள பதில் விபரம் பின்வருமாறு:

திரு செ. பத்மநாதன் தலைவர் அவர்களால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகள் செயலகத்தின் தலைமைப் பொறுப்பாளராக 01.01.2009 அன்று முதல் நியமிக்கப்பட்டவர்.

இவர் 05.08.2009 அன்று மலேசியாவில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிகளுக்கு முரணான அக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கையொன்றினை விடுத்திருந்தோம்.

இவரது கைது தொடர்பாக பின்னர் வந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் எனக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சிறிலங்கா ஊடகங்களில் அவரைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் அவர் தற்போது சிறிலங்காவின் ஓர்அரசியல் கைதி. சிறிலங்கா அரசுஇ தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று.

எனவே அவர் மட்டுமல்லஇ தமிழீழ விடுதலைப் புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக் கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து விமர்சிப்பது சுலபம்.

திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப பொறுத்த வரையில்இ நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப் பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம்.

இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 16.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து விடுத்த முன்மொழிவில்இ இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.

இவை மட்டுமன்றிஇ நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை (வசயnளியசயnஉநல ) முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப் போகிறவர்கள் திரு கேபியோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல.

இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்டஇ சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத்தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

இவ்வாறு திரு ருத்ரகுமாரன் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவர் உப்பிடிதான் அறிக்க விடுவார்......வட்டுக்கோட்டை தீர்மானத்தார் திருத்தங்கள் செய்யச்சொல்லி சொன்னதா கேள்விப்பட்டன் செய்தாச்சுதோ? :wub:

நீங்கள் தான் உந்த இரண்டுடனும் ஒத்துவர மாடிங்களே பின்ன ஏன் இதைப் பற்றி அதிகம் அலட்டுவான்?

நீங்கள் தான் உந்த இரண்டுடனும் ஒத்துவர மாடிங்களே பின்ன ஏன் இதைப் பற்றி அதிகம் அலட்டுவான்?

  • கருத்துக்கள உறவுகள்

உவர் உப்பிடிதான் அறிக்க விடுவார்......வட்டுக்கோட்டை தீர்மானத்தார் திருத்தங்கள் செய்யச்சொல்லி சொன்னதா கேள்விப்பட்டன் செய்தாச்சுதோ? :wub:

இந்த அறிக்கையில் வதந்திகள் பரப்புவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்களில் நீங்களும் முக்கியமான ஒருவர் என்று நிரூபித்திருக்கிறீர்கள்.

உவர் உப்பிடிதான் அறிக்க விடுவார்......வட்டுக்கோட்டை தீர்மானத்தார் திருத்தங்கள் செய்யச்சொல்லி சொன்னதா கேள்விப்பட்டன் செய்தாச்சுதோ? :wub:

கலப்படமற்ற மாற்றுக்கருத்து! ....... உந்த அரசியலும் புலி அழிப்புடன் ஓய்வு கண்டுட்டுது! :wub:

Edited by Nellaiyan

இவர் 05.08.2009 அன்று மலேசியாவில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிகளுக்கு முரணான அக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கையொன்றினை விடுத்திருந்தோம்.

இவரது கைது தொடர்பாக பின்னர் வந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் எனக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

முன்னுக்குபின் முரணாகவுள்ளதே.

நாடு கடந்த அரசு தொடர்பான அறிவித்தல் வந்தநாள் முதல் வெளி வந்த அறிக்கைகளில், முறண்பாடுகள் வெளிப்படையாக உணரும்படியே உள்ளது. கூட்மைப்பினருக்கு இந்தியா கொடுக்கும் அழுத்தம் இப்போது கூட்டமைப்பைக் கூத்து அமைப்பாக்கி உள்ளது. தமிழ்த்தேசிய எழுச்சியை அழிக்கச் செயற்படும் சக்திகளின் இராசதந்திரம் தாயகத்தில் வெற்றி அடைந்து வருகின்றது.

புலத்தில் வாழும் மக்கள் புலத்து அமைப்புகளின் பின் அணிதிரண்டு தாயக விடுதலைக்கு சகல வழிகளிலும் துணை நின்று செயற்பட்டார்கள். மே 19 இன்பின் புலத்திலிருந்து வெளிப்பட்ட அறிக்கைகள், புலத்தில் தமிழ்த்தேசிய சக்திக்குள் குழுக்கள் உயிர்ப்புடன் இருந்து இயங்கியது வெளிப்படையாகி புலத்து மக்களின் எழுச்சி, உறை நிகை;குச் செல்கின்றது.

பிரதேச நோய், குழுநோய், தனி நபர்விசுவாசநோய் இந்த நோய்கள் தமிழ்த்Nசியத்தின் உயிரைக்குடிக்கின்றது.

புலத்தில் அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்த நோயின் தாக்கமும், சர்வதேச சக்திகளின் அழுத்தமும் தான் மூலகாரணம்

தாயகத்தில் வாழும் மக்களிற்கு மாற்று வழியில்லாது கூத்தமைப்புகளின் பின்னால் செல்வதைத்தவிர வேறு வழியில்லை.

புலத்து மக்களை அணிதிரட்டுவதற்கு .................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவொரு தமிழனும் ஒற்றுமையாக தனது கடமையை செய்தால்இ இந்த நிலை எமக்கு வந்திருக்காது. இனியாவது செய்வோமா? நாட்டில்இ எமது தலைவர்கள்இ மேலும் பலரும் சோரம் போகிறார்கள்இ எமது மக்களை விற்கிறார்கள் சில சக்திக்குஇநாம்இ இனியாவது ஒற்றுமையாக வலுவான கருத்துக்களை வைத்து விவாதம் செய்துஇ ஆரோக்கியமான முடிவுகளை எடுத்துஇ செயல் வடிவம் கொடுக்கவேண்டிய தருணம் இது.

நாடுகடந்த அரசு குழுவில்இ பல அறிஞர்கள்இ பிரான்சிஸ் போயல்இ பீட்டர் சளுரஉhயடம (சுவீடன் தமிழ் அறிஞர்) போன்ற பலகாலமாக எமக்காக குரல் கொடுப்பவர்கள்இ உலக சட்ட அறிஞர்கள் உள்ளார்கள். நாடு கடந்த அரசை அமைக்க எமது முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.

முன்னுக்குபின் முரணாகவுள்ளதே.

கடத்த பட்டதாக நம்பும் வண்ணம் ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்து இருந்தனர் எண்டு சொன்னால் சரியாக இருக்குமா. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தர் குழுவினர் மக்களினால் தூக்கிஎரியபடுவார்கள் என்று நம்புகிறேன். சிவாஜிலிங்கம், கஜேந்திரன் கட்சியினரை ஆதரித்து வெற்றியடைய செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் குழுவினர் மக்களினால் தூக்கிஎரியபடுவார்கள் என்று நம்புகிறேன். சிவாஜிலிங்கம், கஜேந்திரன் கட்சியினரை ஆதரித்து வெற்றியடைய செய்யலாம்.

பொறுத்திருந்து பார்க்கலாம்

நாடுகடந்த அரசு குழுவில்இ பல அறிஞர்கள்இ பிரான்சிஸ் போயல்இ பீட்டர் சளுரஉhயடம (சுவீடன் தமிழ் அறிஞர்) போன்ற பலகாலமாக எமக்காக குரல் கொடுப்பவர்கள்இ உலக சட்ட அறிஞர்கள் உள்ளார்கள். நாடு கடந்த அரசை அமைக்க எமது முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.

இவர்கள் எமக்காக செயற்பட்டோர், எம்மைப்போல் இவர்களுக்கும் போக்கிடம் இல்லை,

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இந்தியாவின் தாளத்திற்கு கூத்தாடுகின்றார்கள்.

புலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றப்போகும் அமைப்பு வெகு மக்கள் விருப்பு நோக்கி செல்லுமா?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பியுடன் தொடர்பு இல்லை என்பதை நம்புவோம்.

நீதிமன்றங்களில் வழக்குகளை நடாத்தி தமிழர்களின் உரிமையை மீட்டுத்தருவார் என்றும் நம்பிஇருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.