Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசடி புகார்கள்: கல்கி ஆசிரமத்திற்கு பக்தர்கள் வருகை குறைந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தூர்: கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார் [^]கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. ஆசிரமத்தின் நிலத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு நஷ்ட ஈடு கோரி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு கல்கி பகவான் மற்றும் அவரது மனைவி அம்மா பகவான் ஆகியோர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள்.

கல்கி பகவானின் நிஜப்பெயர் விஜயகுமார். இவர் எல்ஐசி ஏஜெண்டாக இருந்தவர். அம்மா பகவானின் பெயர் புஜ்ஜம்மா இவர் தன்னை அம்மா பகவான் என்று மாற்றிய பிறகு தன்னை பத்மாவதி தாயார் என்று பக்தர்களிடம் கூறி ஆசி வழங்கினார்.

அங்குள்ள கல்கி தீட்சை பீடத்தில் அம்மா பகவானும், கோல்டன் சிட்டி கட்டிடத்தில் கல்கி பகவானும் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் மயக்க நிலையை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்திருப்பதாக விஜயவாடாவை சேர்ந்த நாராயணா என்ற பக்தர் புகார் கூறினார்.

மேலும் போதை பிரசாதம் கொடுத்து ஆசிரமத்தில் செக்ஸ் லீலை நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கல்கி ஆசிரமம் அருகே உள்ள காம்பாக்கம், தாண்டூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கும்பலாக சென்று ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காம்பாக்கம் கிராம மக்கள் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை திடீரென ஆக்ரமித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதுபற்றி காம்பாக்கம் கிராம மக்கள் கூறும்போது,

'கல்கி ஆசிரம நிர்வாகி விஜயகுமார் (கல்கி பகவான்) சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு எங்களுக்கு தந்த நிலத்தை ஏமாற்றி வாங்கிவிட்டார்.

அப்போது அவர் எங்களுக்கு ரூ.5 ஆயிரம்தான் தந்தார். இப்போது இந்த நிலத்தின் மதிப்பு லட்சக்கணக்காக மாறிவிட்டது எங்களுக்கு அவர் உரிய நஷ்டஈடு தராவிட்டால் எங்கள் நிலத்தை தரமாட்டோம்.

எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்த இவர் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களை ஏமாற்றி வருகிறார்.

தொடக்கத்தில் எங்களிடம் உள்ள நிலத்தை அடியாட்கள் மூலம் மிரட்டித்தான் வாங்கினார். நாங்கள் அவரது மோசடி பற்றி பல தடவை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை' என்றனர்.

கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.

ஆசிரமத்திற்கு வந்திருந்த ஒரு சில பக்தர்களும் பிரசாதத்தை வாங்க மறுத்துவிட்டனர். பக்தர்கள் வருகை குறைந்ததால் வருமானம் கணிசமாக குறைந்தது.

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் மயக்க நிலையை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்திருப்பதாக விஜயவாடாவை சேர்ந்த நாராயணா என்ற பக்தர் புகார் கூறினார்.

மேலும் போதை பிரசாதம் கொடுத்து ஆசிரமத்தில் செக்ஸ் லீலை நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கல்கி ஆசிரமம் அருகே உள்ள காம்பாக்கம், தாண்டூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கும்பலாக சென்று ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

AB.jpg

கிளு, கிளுப்பான படங்கள் பார்த்து கன நாள் ஆச்சுது......

இவர்களின் Blue film வீடியோ காட்சிகள் இருந்தால் இணைத்து விடுங்கப்பா.

.

Edited by தமிழ் சிறி

கல்கி பகவானும் அம்மா பகவானும் ஒருவரா ?

அண்மைக் காலமாக பிரான்சில் பல தமிழர்கள் அம்மா பகவானின் பக்தர்களாக மாறி வருகிறார்கள். அம்மா பகவான் 2015 ஆம் ஆண்டு தேவலோகத்திற்குப் போகப் போவதாகவும் இவர்கள் நம்புகிறார்கள்.

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி. மகா போலி.

எனக்கு தெரிய புத்தளம் பகுதியில் இருந்து ஒரு சிலர் (பெண்கள் உட்பட) கல்கி பகவான் கூட்டத்தினரால் கவரப்பட்டு, இந்தியா சென்று, சில மாதங்களை வீணாக்கி, தமது வேலைகளை இழந்து, படிப்பை இழந்து, ஈற்றில் கல்கி பகவான் ஒரு போலி பகவான் என்றுணர்ந்து திரும்பி வந்துள்ளனர்.

சில கிறிஸ்தவ மதமாற்ற வெறியர்கள் செய்வதைப்போலவே, கல்கி பகவான் கூட்டத்தினர் செய்யும் இன்னுமொரு கொடுமை, பாடசாலை இளம் மாணவர்களை (3 - 7 வகுப்புக்கள்) மூளைச்சலவை செய்வது. சந்திரனில் தனது முகம் தெரியும், தன்னை கும்பிட்டால் நல்லா படிக்கலாம், தன்னை கும்பிட்டால் செல்வம் பெருகும், ...... என்பன இந்த போலிகளின் ஏமாற்றல் கதைகளில் சில

இந்த வெறியர் பிடியில் இருந்து மக்கள், மாணவர்கள் தப்பவேண்டும்.

இந்தக் கள்ளக் கோஷ்டியைத்தானே நம்மவர் பணம் கொடுத்து ஐரோப்பாவிற்கு இறக்கியுள்ளார்கள்.வர வர குறவர் கூட்டத்தைவிட கேவலமாகி விட்டோம்.

Edited by sitpi

கிளு, கிளுப்பான படங்கள் பார்த்து கன நாள் ஆச்சுது......

இவர்களின் Blue film வீடியோ காட்சிகள் இருந்தால் இணைத்து விடுங்கப்பா.

புளு பிலிம் பாக்க ஆசையா இருந்தா ஒரு ஆச்சிரமத்தை தொடங்குங்கள் சிறி! :):D:huh:

  • கருத்துக்கள உறவுகள்

கல்கி பகவானும் அம்மா பகவானும் ஒருவரா ?

அண்மைக் காலமாக பிரான்சில் பல தமிழர்கள் அம்மா பகவானின் பக்தர்களாக மாறி வருகிறார்கள். அம்மா பகவான் 2015 ஆம் ஆண்டு தேவலோகத்திற்குப் போகப் போவதாகவும் இவர்கள் நம்புகிறார்கள்.

ஆமாம் இணையவன்

இங்கு அதற்கு பொறுப்பாக இருப்பவர் எனது உறவினர்தான்....

கல்கி பகவானும் அம்மா பகவானும் ஒருவரா ?

அண்மைக் காலமாக பிரான்சில் பல தமிழர்கள் அம்மா பகவானின் பக்தர்களாக மாறி வருகிறார்கள். அம்மா பகவான் 2015 ஆம் ஆண்டு தேவலோகத்திற்குப் போகப் போவதாகவும் இவர்கள் நம்புகிறார்கள்.

அவர்கள் சொல்லும் தேவலோகம் கொக்கா -------அது அடிச்சா தேவலோகமேதான். சும்மா கிடப்பீங்களா, பன்னாடை பரதேசிகள் என்று எத்தனைபேர் சுத்துறதுக்கு வெளிக்கிட்டிருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி

கனகாலமா எனக்குள்ள ஒரு கேள்வி இருந்தது

சொர்க்கத்துக்கு கூட்டிப்போறம் சொர்க்கத்துக்கு கூட்டிப்போறம் என்று சாமிமார் சொல்கிறார்களே அது என்ன என்று.

இப்ப கிளியராப்போச்சு

எந்த சொர்க்கத்தை காட்டினம் என்று.

தீமையிலும் ஒரு நன்மை

அதுசரி

கனகாலமா எனக்குள்ள ஒரு கேள்வி இருந்தது

சொர்க்கத்துக்கு கூட்டிப்போறம் சொர்க்கத்துக்கு கூட்டிப்போறம் என்று சாமிமார் சொல்கிறார்களே அது என்ன என்று.

இப்ப கிளியராப்போச்சு

எந்த சொர்க்கத்தை காட்டினம் என்று.

தீமையிலும் ஒரு நன்மை

இமய மலைச்சாரலில் நூற்றுக்கணக்கான சாமியர்கள் தவம் புரிவதென்று சொல்லிக்கொண்டு இந்த மாதிரியான சமாச்சாரங்களில்தான் ஈடுபடுகின்றார்கள். அதுவே அவர்களுக்கு சொர்க்கம் தேவலோகம்.இவர்களில் கொஞ்சம் பணம் பார்க்க நினைப்பவர்கள் இந்த நரிக்குறவர் கோலம்பூண்டு சாமியாராகிவிடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி

தாங்கள் அந்த பக்கம் போனீர்களா..?

சொர்க்கத்தை கண்டீர்களா..?

யாராவது சொர்க்கத்துக்கு போக விரும்பினால் சிறீலங்கா தூதரகங்களிலை இப்பவே விசாவுக்கு விண்ணப்பிக்குமாறு கோரி இருக்கிறார்கள்... கடவுச்சீட்டு தேவை எண்று இல்லை... ரிக்கட்டுக்கு வேறை வளியே இல்லை TMVP, EPDP அலுவகங்களை தான் நாட வேண்டும்...

அதுக்கும் முன்னம் எல்லாரும் இலங்கை போக வேணும்.. :D மறக்காமல் புலம்பெயர்ந்த நாடுகளி நடந்த போராட்டங்களில் புலிக்கொடியோடை நிண்ட படங்களோடை போகவும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தன்நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்கும் வரை இப்படியான் சாமியார்களின் வாழ்வு சொர்க்கம் தான்.சில வருடங்களுக்கு முன் இலங்கை சாமியார் ஒருவர் மூலம் இப்படியான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் மாறினார்களா? இல்லை. இன்றும் இப்படியான சம்பவம் இடம்பெற்றது.மக்கள் வரும் காலத்தில் மாறுவார்களா என்றால் இல்லவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கல்கி பகவானும் அம்மா பகவானும் ஒருவரா ?

அண்மைக் காலமாக பிரான்சில் பல தமிழர்கள் அம்மா பகவானின் பக்தர்களாக மாறி வருகிறார்கள். அம்மா பகவான் 2015 ஆம் ஆண்டு தேவலோகத்திற்குப் போகப் போவதாகவும் இவர்கள் நம்புகிறார்கள்.

இல்லை இணையவன்,

கல்கி பகவான் ஆண் படத்தில் தாடியுடன் இருப்பவர், அவரின் பெஞ்சாதி தான் அம்மா பகவான்.

மொத்தத்தில் ஒரு குடும்பத்துக்குள்ளையே..... இரண்டு கடவுளும் இருப்பது,

கோயில் கோயிலாக தேடி அலைய வேண்டியதில்லை. ஒரே இடத்திலேயே வைத்து எமது தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

புளு பிலிம் பாக்க ஆசையா இருந்தா ஒரு ஆச்சிரமத்தை தொடங்குங்கள் சிறி! :D^_^:D

ஆச்சிரமம் தொடங்கினால் , புளூ பிலிமிலை நடிக்கவும் வேண்டி வந்திடுமோ.... எண்டு பயமாயிருக்கு, சூறாவளி. :D:D

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.