Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்: பிரித்தானியா அமைச்சர்

Featured Replies

புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்: பிரித்தானியா அமைச்சர்

புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியாவில் ஏன் அதனை தடைசெய்யவேண்டும் என கீத் வாஸ் கேள்விஎழுப்பினார் , பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அதற்கு பதிலளிக்கையில், அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தடைகுறித்து மீளாய்வுசெய்யப்படும் எனக் கூறியெதோடு மட்டுமல்லாது, பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் தமது தமிழர் தாயகக் கொள்கைகளை ஆதரிக்கலாம், அதை அரசியல் ரீதியாகக் கொண்டுசெல்லலாம், அதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் டேவிட் ஹன்சன் இக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது, தற்போத் இலங்கை அரசிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையே மேலும் முறுகல் நிலையத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியப் பாராளுமன்றில் நடந்தது விரிவாக :

தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதை யும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தடுப்புச் சட்டமூலம் நேற்றுமுன்தினம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ், விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்துபோன பின்னரும் ஏன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் அதனை வைத்திருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டேவிட் ஹன்சன் இவ்வாறு பதிலளித்தார்.

பிரிட்டிஷ் அரசு தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலைத் தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடயம் குறித்து அனைவரும் அறிவோம். அனைவரையும் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் இயக்கம் அற்றுப்போய் விட்டது. இலங்கை அரசே இது குறித்து நம்பிக்கையாகவுள்ளது. இப்படியான சூழ்நிலையில் அந்த இயக்கத்தைத் தொடர்ந்து ஏன் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் பிரிட்டன் வைத்திருக்க வேண்டும் என கீத் வாஸ் கேள்வியெழுப்பினார். விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் அதனுடன் தொடர்பில்லாத அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறான தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார் கீத் வாஸ்.

இதற்குப் பதிலளித்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன், பிரிட்டனில் பயங்கரவாத தடைச் சட் டம் கொண்டு வரப்பட்ட 2000ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கம் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டிலிருந்து அந்த அமைப்பு தமிழர் தாயகத்தை உருவாக்கும் தனது முயற்சிக்காகப் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவது சட்டவிரோதமானது என்ற போதிலும் தமிழ் சமூகத்துக்கு இந்தக் கொள்கையை ஆதரிப்பதற்கான உரிமை உள்ளது. இந்த விடயம் தொடர்பாகத் தமது கருத்துக்களை தெரியப்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு என்றார்.

பிரிட்டனுக்கு கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவை குறித்த நீண்ட பாரம்பரியமுள்ளது. மேலும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிப்பவர்கள் இதனை நாடாளுமன்ற சதுக்கத்தில் வெளிப்படுத்த அனுமதியளிக்கப்படுவது அவசியமானது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளைத் தனிநபர்கள் ஆதரவளித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நாடாளுமன்ற சதுக்கத்தில் தனி நபர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலை வைத்துள்ளோம். விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக உள்துறை அமைச்சர் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவார். மேலும் தடைகளை அகற்றுவதற்கும் அவரிடம் விண்ணப் பிக்கலாம் என்றார் டேவிட் ஹன்சன்.

http://uyarvu.com/

ஒரே செய்திக்கு இரண்டு தலைப்புக்கள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=69751

இந்தத் தலைப்பு இந்தச் செய்திக்கு பொருத்தமானதில்லை.

எழுதப்படும் கருத்துக்களை வெட்டி கொத்தும் நிர்வாக உறுப்பினர்கள்

செய்திகளிலும் கவனம் செலுத்துவார்களா?

தமிழர் தாயகக் கொள்கையை பிரி.வாழ் தமிழர்கள் ஆதரிக்கலாம் ஆனால் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது சட்டவிரோதம்
-செய்தி

புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்: பிரித்தானியா அமைச்சர்
-சுயஇன்பம்

-செய்தி

-சுயஇன்பம்

சுய இன்பம் காணுவது சட்ட விரோதம் இல்லைதானே .சட்டவிரோதமாயின் எந்தனையாவது பிரிவின் கீழ்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.theyworkforyou.com/debates/?id=2010-03-04a.1035.0

Keith Vaz (Leicester East, Labour)

It is essential that the Government keep the list of proscribed organisations under review. The Minister knows, because I have raised it with him before, the situation regarding the proscription of the LTTE. As far as everyone is concerned, the LTTE is finished. The war is over and the leader of the LTTE is dead, and the Sri Lankan Government are confident about all that. Why does that organisation remain on the list when it no longer exists?

David Hanson (Minister of State (Crime and Policing), Home Office; Delyn, Labour)

The LTTE has been a proscribed organisation since the Terrorism Act 2000 came into force because, since the 1970s, the group had carried out numerous terrorist attacks in Sri Lanka as part of its campaign to secure a Tamil homeland. Although support for the LTTE is unlawful, the Tamil community has the right to support that aim, and to discuss and make their views known on the matter. We have a long and proud tradition of freedom of speech and assembly, and it is important that those who support the Tamil case can express their views in Parliament square. Clear action can be taken under proscription legislation if individuals support organisations that are proscribed, but I have no problems with individuals demonstrating in Parliament square, provided that they are not demonstrating support for an organisation that is proscribed under these rules.

Ultimately, it is for the police to consider whether to take action on these matters. We provide a framework and the police make the operational decisions and determine whether charges should be brought under the relevant legislation for this and other proscribed organisations.

சுய இன்பம் காணுவது சட்ட விரோதம் இல்லைதானே .சட்டவிரோதமாயின் எந்தனையாவது பிரிவின் கீழ்

நிச்சயமாக சட்டவிரோதம் இல்லை. தாராளமாகக் காணலாம். ஒருவகையில் சுதந்திரமானதும் கூட. தவறென்று நான் சுட்டிக்காட்டவில்லை. ஒ சிற்பத்தை கலையாகவும் பார்க்கலாம் காமமாகவும் பார்க்கலாம் இன்னும் பல உணர்ச்சிகளோடு பார்க்கலாம் எல்லாம் மனித இயல்புதானே !! ஒப்பீட்டளவில் அறிவார்ந்த சமூகமாகவும் ஏராளமான புத்திஜீவிகளை உடைய இனமாகவும் இறுமாப்புகள் கூடிய இனமாகவும் நாம் இருப்பதால் அவரவர் விரும்பியவகையில் இருப்பது இயல்புதானே !

பிரித்தானியாவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டமிலாமல் செய்ய வேண்டிய ஒரு விடயம் - சூழ்நிலைகளை பாவித்து இந்த ஐரோபிய தடைகளை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது. உடன் செய்வார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் மீதான போர் இப்போதும் சென்று கொண்டே இருக்கின்றது. இது ஒரு பனிப்போராக இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் தமிழர்களுக்கு உள்ளார்ந்த ரீதியான எதிர்ப்புக்கள் உள்ளன. புலிகள் இராணுவரீதியில் ஒடுக்கப்பட்டபின் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் தமிழர்களை இனம் காண உலகளாவிய நாடுகள் சிரமப்படுகின்றன. இதனால் தான் தமிழர் சார்பாகச் சில அறிக்கைகளை வெளிவிடுவதன் மூலம் தங்கள் பக்கம் இழுத்துப் பின்னர் அவர்களை சிறை தள்ளிவிடலாம் என்ற சிந்தனைகளும் இருக்கின்றன. உலகம் முற்று முழுதாகத் தமிழர் போராட்டத்தை ஒடுக்கும் சோக்கம் தான் கொண்டுள்ளன. நோர்வே புலிகளுடன் எப்படி அணைத்து தங்கள் வழிக்கு இழுத்துப் பின்னர் இந்தியாவுடனும் சிங்களவனுடனும் சேர்ந்து அழித்ததோ அதே போன்ற போக்கை வெளியலகிலும் கடைப்பிடிக்கலாம். கடைப்பிடிக்கின்றன. தமிழர்களும் அதற்கேதுவாக திட்டங்களைக் கொண்டு மூனைப்புடன் செயற்படவேண்டும். முன்னின்று செயற்படுபவர்களை இனம் காண்பதே இவர்களின் குறி.

உதாரணமாகக் இலங்கைத்தமிழர் செறிந்து வாழும் கனடாவில் வருடத்திற்கு 1000 சிங்களவர்களை குடியேற்றும் திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. என நம்பகமாக அறிகின்றோம். அத்துடன் கனடா ஆர். சி. எம், பி. என்னும் பிரிவு தமிழர்களின் ஒற்றுமையைச்சிதைப்பதற்கு தமிழர்களுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கும் விதத்தில் செயங்படுகின்றன என்றும் அறியக்கிடக்கின்றது. அதாவது தமிழர் சமுதாயத்தை மக்களிடையே ஒரு ஆகடு கெட்ட சமுதாயம் என்ற உணர்வலைகளை உருவாக்குதல் போன்ற தொழிற்பாடுகள் இன்றல்ல முன்னர் இருந்தே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு விலைபோகும் தமிழர்கள் தான் முக்கிய காரணம். விலைபோகும் தமிழர்கள் "எட்டப்பர் கூட்டம்" அவர்களை வைத்தே இவர்கள் செய்கின்றார்கள். வருடத்திற்கு 1000 சிங்களவர்களைக் குடியமர்த்தி தமிழர்களின் தொகைக்கு நிகராகச்சரிசெய்து வீதிப்போராட்டங்கள் நடைபெறும் பொழுது அவர்களை எதிராகத்தூண்டிவிட்டு கலகங்களை உண்டுபண்ணல். இதனால் மக்களின் வெறுப்புணர்வை அதிகரித்தல். எங்கள் உரிமைப்போராட்டத்தின் முன் நாங்கள் சரிசெய்யவேண்டிய பல விடயங்கள் நிறையவே உண்டு. எங்கள் பணயம் இன்றுடன் முடிவதில்லை. ஒரு பொது அமைப்புத் தேவை. தொடர்ந்து மற்றைய தலைமுறையும் திட்டங்களை உடுத்துச்சல்லும்போதுதான் பணயம் நிறைவுபெறும். கைகுலுக்கிக் கதைப்பவனையும், முதுகைத்தடவிக்கதைப்பவனையும் கண்ணை மூடி நம்பிணதால் தான் நாம் இடையில் அறுக்கப்பட்டோம். மீண்டும் இது தொடர் கதையாகக்கூடாது. புலிகள் மீதான தடையை நீக்கலாம். புலிகள் இல்லை என்று எண்ணினால் தடை இருந்தால் என்ன இல்லாவிடடால் என்ன? ஒரு பாதகமும் இல்லையே. இங்கே தான் சூழ்ச்சி ஆரம்பமாகின்றது. புலிகள் சமாதானத்தில் இருந்தபோது ஏன் தடை செய்தார்கள்? தமிழர்கள் தெளிவாகச் சிந்திக்கவேண்டும். பாலுக்கும் காவல் ப+னைக்கும் தோழன் இந்த நிலை தொடர்கின்றது.

நம்ப நட! நம்பி நடக்காதே!

இதை மனதில் வைத்துக்கொண்டு தைரியமாக காரியமாற்றவேண்டும். காரணமின்றி பயந்து பயந்து சாதிக்கப்போவது ஏதுமில்லை.

தமிழனுக்கு இந்த நிலை தமிழனால் ஒழிய வேறு எவராலும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்ற சொற்பதமில்லாது விடுதலைப்புலிகள் என்ற பெயரின்கீழ் அரசியற் கட்சியொன்று பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்டு அதற்கான உத்தியோகபூர்வ அனுமதியும் கிடைத்துள்ளது போலத்தோன்றுகின்றது.

இது ஒரு நல்ல சகுனமேயாகும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவிற் கிடைக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நல்லது நடந்தால் அதுவும் விரைவில் நடந்தால் நல்லது.

தமிழீழம் என்ற சொற்பதமில்லாது விடுதலைப்புலிகள் என்ற பெயரின்கீழ் அரசியற் கட்சியொன்று பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்டு அதற்கான உத்தியோகபூர்வ அனுமதியும் கிடைத்துள்ளது போலத்தோன்றுகின்றது.

இது ஒரு நல்ல சகுனமேயாகும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவிற் கிடைக்கக்கூடும்.

நல்லதே நடக்கட்டும்..........

எல்லாம் நல்லதிற்கே.

நான் இங்கு வானொலி கேட்க தொடங்கிய நாள் தொட்டு நேயர்களை இணைக்கும் கலந்துரையாடல்களில் ஒருவர் எப்பவும் வருவார். எது நடந்தாலும் அவர் எல்லாம் நல்லதிற்கே என்றுதான் சொல்லுவார்.இது இவர் ரனில்,சந்திரிக்கா,ராஜபக்ச எல்லோரும் எலக்சன் வென்றபோதும் சொன்னார்.எல்லாம் நல்லதிற்கே தமிழீழம் வர இவர்கள் தான் தலைவர்களாக வரவேண்டும் என்று.படு பாவி முள்ளிவாய்க்கால் அழிவிற்கும் சொன்னார் எல்லாம் நல்லதிற்கே இனி ஒரு தீர்வு கட்டாயம் வரும் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.