Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

SMS அணியைத் தோற்கடிப்போம்

Featured Replies

அன்புள்ள தமிழ் வாசகப் பெருமக்களே!

இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டு வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதிலும் விலைக்கு வாங்குவதிலும் அரசியற் கட்சிகளும் தனிநபர்களும் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் பூர்வீகத் தாயகத்திலேயும் இத்தேர்தல் நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன.

இம்முறை தாயத்துத் தமிழர்களுக்கு மிகவும் குழப்பகரமான தேர்தலாக இது அமையப் போகிறது. இதுவரை, தட்டிக் கேட்கவென ஒரு கட்டமைப்பு இருந்தது. ஒருகட்டத்தில் வாக்கு அரசியலையும் அது தனது ஆளுமைக்குள் கொண்டுவந்து வழிகாட்டியது. அவர்கள் கைகாட்டிய திசையில் மக்களும் பயணித்தார்கள். இப்போது அந்தச் சக்தி அழிக்கப்பட்ட, அல்லது உடனடியாக மீண்டெழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் மீண்டும் தாயக அரசியல் என்பது பழைய நிலைமைக்குத் திரும்பியுள்ளது.

யார் சரியானவர்கள்? யாரை எமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்குச் சரியான விடை தற்போது தாயக மக்களின் மனங்களிலில்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு மக்களுக்குக் காண்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதிலிருந்து பிரிந்து சென்று தனியான ஓரணியை அமைத்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் மக்களின் கவனத்துக்குரிய சக்திகளாகத் திகழ்கின்றன. புலிகளால் மக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அந்தப் பரிந்துரையை முதன்மையாகக் கொண்டு வாக்குகளை அள்ளும் ஒரு நடவடிக்கையிலும் த.தே.கூ இறங்கியுள்ளது. அது தனக்கான வேட்பாளர்களைத் திரட்டியபோது யார்யாரிடம் எப்படியெப்படிக் கதைக்க வேண்டுமோ அப்படியப்படி கதைத்துக் கொண்டது. தீவிர தேசியவாதிகளிடமும் புலிகளின் ஆதரவாளர்களிடமும் கதைக்கும்போது தாம்தானே புலிகளால் வளர்க்கப்பட்ட சக்தி, எனவே எமக்குத்தானே உங்கள் ஆதரவு வரவேண்டும்? தொனியில் கதைப்பது தொடக்கம், புலத்திலே புலியைக் காட்டி தங்கள் ஆதரவு நிலையைத் தக்க வைப்பதும் இதற்கு உதாரணம்.

இதைவிட மக்கள் மனத்திலும் த.தே.கூ என்ற அந்த மாபெரும் சக்தி ஒரு மாயையாகப் பதிந்துள்ளது. ஏற்கனவே சில ஆண்டுகளாக அக்கூட்டமைப்புப் பற்றி ஏற்படுத்தப்பட்ட விம்பமும், பரப்புரையும் அவ்வளவு எளிதில் மக்களிடமிருந்து அகன்றுவிட முடியாது என்பது உண்மையும்கூட. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு த.தே.கூ இன் தலைமை தனது வெற்றியில் உறுதியாக இருப்பதுடன் தான்தோன்றித்தனமாக பல காரியங்களைச் செய்துகொண்டு வருகிறது. அதன் பின்னணியில் ஏராளமான விடயங்கள் நடந்து முடிந்துவிட்டன.

இன்றைய நிலையில் இந்த விம்பத்தை உடைத்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய தேவையுள்ளது. சம்பந்தர், மாவை, சுரேஸ் பிரேமச்சந்திரன் (SMS) ஆகியோரைக் கொண்ட அந்தக் கூட்டுத்தலைமை (இந்தக் கூட்டுத் தலைமையென்பது புலிகளாலோ மக்களாலோ ஏற்படுத்தப்பட்டதன்று; நாசகாரச் சக்திகள் தாமாகவே கைகோர்த்துக் கொண்டன.) எவ்வாறு தமிழரின் அரசியற் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முனைப்போடு செயற்படுகின்றது என்பதை வெளிக்கொணர வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இதைப்பற்றி மிகச்சிலரே ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். பலர், இந்தத் தலைமை பிழையானதெனத் தெரிந்தும், ‘வேறு வழியில்லை, இவர்களை வைத்துக்கொண்டு ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற நிலைப்பாட்டுடனோ, காலகாலமாக போதிக்கப்பட்டு வந்த ஒற்றுமைப் பூச்சாண்டிக் காரணங்காட்டியோ, முன்பே சொன்னதுபோல் இதுவரை போராட்டத்தைத் தலைமைதாங்கி வந்த சக்தியால் கைகாட்டப்பட்ட கட்டமைப்பு என்ற காரணத்தாலோ த.தே.கூட்டமைப்பை, அதன் தலைமையை விமர்சிக்கத் தயங்கிக் கொண்டுள்ளார்கள். இன்னும் சிலர் குருட்டுத்தனமான தனிப்பட்ட பக்தியால் SMS அணியினரின் பாதங்கழுவிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த SMS அணியினரைத் தோற்கடிக்க வேண்டிய தேவைபற்றிய ஆழமான, தாக்கமான கட்டுரைகள் அதிகம் எழுதப்பட்டல் வேண்டும். ஒற்றுமை என்ற பூச்சாண்டியைக் காட்டிக்கொண்டு SMS அணியைத் தாங்கிப் பிடிப்பவர்கள் உண்மையை உணர்ந்து வெளிவர வேண்டும். குருட்டுத்தனமாக SMS அணிக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் செய்தித் தளங்கள் தமது நிலையை மாற்றி தமிழ்த் தேசியத்துக்கு உண்மையான பணியை ஆற்றவேண்டும். குறைந்தபட்சம் இந்த இணையத்தளங்கள் தமது தேசியப் பம்மாத்திலிருந்தாவது தம்மைக் கழற்றிக் கொண்டுவிட வேண்டும்.

SMS அணியைத் தோற்கடிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இந்த வலைத்தளம், அந்நோக்கத்தை நிறைவேற்ற தன்னாலான சகல வழிகளிலும் முயற்சிக்கும். இந்த நோக்கில் தமது எண்ணங்களைப் பகிர நினைத்தும் களம் கிடைக்காமல் காத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு இது நிச்சயம் களம் அமைத்துக் கொண்டும்.

வாசகப் பெருமக்களின் ஆதரவோடு இந்தப் பரப்புரை முன்னெடுக்கப்படும். SMS அணியின் அராஜகங்கள், அவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கான வலுவான பரப்புரையை இத்தளம் முன்னெடுக்கும். தமிழர் தாயகத்தில் உண்மையான, நேர்மையான அரசியற் சக்தியை உருவாக்க உருவாக்க நினைக்கும் எவருமே எம்மோடு இணைந்து பயணிக்கலாம்.

தொடர்ந்தும் படைப்புக்களில் சந்திப்போம்.

நன்றி.

-நிர்வாகம்.

http://defeatsms.com/?p=6

நேற்று கனடாவில் உள்ள ஈழவேந்தன் ஐயாவின் வசிப்பிடம் எஸ்.எம்.எஸ் அணியினரால் முற்றுகை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா முகவர்கள், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான ஈழவேந்தன் வீட்டிற்குச் சென்று மறைமுகமான மிரட்டல் விடுத்ததாக நம்பகமான கனடாத் தகவல் ஒன்று சங்கதிக்குத் தெரிவித்தது.

குறித்த முக்கியமான இரு முகவர்கள் ரொரண்டோவில் உள்ள ஈழவேந்தனின் இருப்பிடம் சென்று தேர்தல் முடியும் வரையாவது, குறிப்பாக சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோரைப் பற்றி பகிரங்கமாக எதுவும் பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக அத்தகவல் தெரிவிக்கின்றது (அதாவது எஸ்.எம்.எஸ் அணியினர் என அழைக்கப்படும் அம் மூவரைப்பற்றிய உண்மைகளை எவரிடமும் கூற வேண்டாம் என கேட்டுள்ளனர்).

இந்த நடவடிக்கையானது தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி நிலையே தெட்டத்தெளிவாக விளக்கி நிற்பதாக குறித்த தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஈழத்தில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முற்றாக நிராகரித்து வருவதாகவும், வடபகுதியிலும், திருமலையிலும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முண்ணணிக்கு ஈழத்தமிழ் மக்கள் பாரிய ஆதரவினை வழங்கி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தோல்வி அடைந்து விடுவோம் எனும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் நம்பகரமான தாய்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி வெளிநாட்டு பத்திரிகையளில வாறமாதிரியும் எழுதி போடுங்கோ! உந்தி SMS அணிய நார் நாரா கிழிச்சு தும்பு தும்பாக்குங்கோ! 2000 ஆண்டிலயிருந்து கூட்டமைப்பு தமிழர் ஒற்றுமை அதுக்கு உதாரணமா எங்கட கூட்டமைப்பு பாருங்கோ எண்டு பேச்சுவாத்தை நேரம் சொன்னதுகள மறந்திடுங்கோ. முக்கியமா சம்பந்தர் கிழவன்பற்றியும் அவருக்கும் இத்தாலிச்சோனியா தமிழ்நாட்டுக்கருணாநிதி கிழவரோட உள்ள உறவுகளயும் அம்பலப்படுத்துங்கோ. காத்திகைப்பூ துவக்கு நெருப்போட கவர்ச்சியா ஒரு படத்தயும் அனுப்பி வைக்கவேணும் இல்லாட்டா நடக்கிறதுகள ஒருத்தருமே நம்பமாட்டினம். :rolleyes::)

நாய்படாப்பாடு படுகிறார்கள் தமிழ் அரசியல்கட்சியினர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அணியினர் யாரென்று விளங்கவில்லை...கனடாவில் அப்படி ஒரு பலமான அணி செயல்படுகிறதா....என்னமோ நடக்கிது இங்கே....எமது மக்கள்விவேகிகள்...உறுதியானவர்களும் கூட...தேசியத்துக்கான தீர்ப்பை வழங்குவார்கள்......

நாய்படாப்பாடு படுகிறார்கள் தமிழ் அரசியல்கட்சியினர்.

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு வருகிறார்கள் தமிழர்கள்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும்

இன்றையநிலையில் எமது எழுத்துக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்

ஒருவருக்கு ஒருவர் வசைபாட தொடங்கினோம் எனில் அது எம்மீது நாமே தூற்றுவதாகவே அமையும்

பல உச்ச தியாகங்களின் பெயர்களும் இதற்குள் அடங்கும்

அதைவிட புலிகள் இல்லாது வரலாற்றை எழுதமுடியாதது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை நாம் தூற்றும்போது களங்கப்படப்போவதும் அவர்கள்தான்.

அதைவிட எமது எதிரிகள் செய்ய முடியாதவேலைகளையும் தகவல்களையும் கூட நாமே கொடுத்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

இதனால்தான் அன்றிலிருந்து நான் எமக்குள் ஒற்றுமையை வற்புறுத்தியும் பிரிவுகள் ஏற்படுத்தப்படுவதை எதிர்த்தும் எழுதிவருகின்றேன்.

எதற்கு எடுத்தாலும் பிழைகண்டு பிடித்தும் சாட்டுக்கள் சொல்லியும் காரணங்களை தேடிக்கண்டுபிடித்தம்தான்......

இழக்ககூடாத எமது பலத்தை நாம் இழந்தோம்

இதிலிருந்து கூட நாம் எம்மை கணிக்கவில்லை எனில்எமக்கு எதற்கு போராட்டம் என்பதே உண்மை.

அதனால்தான் பலமில்லாத எமது களநிலை அறியாத எழுத்துக்களை இங்கு கண்டால் எமது மக்களை பலிகொடுக்கும் நோக்கம் கொண்டதாக மட்டுமே நான் கணித்து ஆவேசப்படுகின்றேன்.

மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு எவருமே தயாரில்லாதபோது...

மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு நீங்கள் தயாரா என இப்படி எழுதுபவர்கள் முதலில் தங்கள் நெஞ்சில் கைவைத.து முடிவு எடுத்தபின்னே எழுதவேண்டுகின்றேன்

  • தொடங்கியவர்

காத்திகைப்பூ துவக்கு நெருப்போட கவர்ச்சியா ஒரு படத்தயும் அனுப்பி வைக்கவேணும் இல்லாட்டா நடக்கிறதுகள ஒருத்தருமே நம்பமாட்டினம்

கார்த்திகைப் பூ வுக்கு பதிலாக கருணாவின் படத்தை போடுங்கோ :rolleyes:

  • தொடங்கியவர்

நாய்படாப்பாடு படுகிறார்கள் தமிழ் அரசியல்கட்சியினர்.

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு வருகிறார்கள் தமிழர்கள்..

எதிர்த்து நிற்க துணிவும் திடசங்கற்பும் இல்லாமையினால் தான் புலம் பெயர் தமிழ் ஊடகங்களிலும் அமைப்புக்களிலும் சரி தமிழர்களிலும் சரி துரோகிகளும் உளவாளிகளும் இலகுவாக ஊடுருவிக்கொண்டு போகின்றார்கள் அதிலும் ரோ பாய் விரித்து படுத்திருக்கின்றது :rolleyes:

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது?. அவ்வாறு வாக்களிப்பதாயின் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது?. அவ்வாறு வாக்களிப்பதாயின் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

ஆருக்கும் வாக்களிக்கலாம் உந்த ஒட்டு குழுக்களுக்கும் , சிங்கள் கட்சிகளையும் தவிர்த்து யார் தமக்கு உண்மையாக இருகிரார்களோ, அவர்களுக்கு வாக்களிக்கலாம், மக்களின் முடிவின் பின்னர் தோற்றவர் திருந்த வேணும். கீரைகடைக்கும் ஒரு எதிர்கடை இருப்பது நல்லதுதான் இதுதான் ஜனநாயகப்பண்புகள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கணிப்பு தவறி...

நீங்கள் எச்சரிக்கும் ஒட்டுக்குழு வென்றுவிட்டால்....?

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கணிப்பு தவறி...

நீங்கள் எச்சரிக்கும் ஒட்டுக்குழு வென்றுவிட்டால்....?

ஏனையவர்கள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யவில்லை என எடுக்கலாம் தானே.

அல்லது கள்ள வாக்கு மூலம் ஒட்டுக்குழு வென்றிருக்கலாம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் கணிப்பு தவறி...

நீங்கள் எச்சரிக்கும் ஒட்டுக்குழு வென்றுவிட்டால்....?

இவர்களை விட ஒட்டு குழுக்கள் பெட்டர் என மக்கள் முடிவு எடுத்து விட்டதையே காட்டும், தேர்தல் நீதியாக நடந்தால் அதுக்குதானே வளி இல்லை. :rolleyes:

"மக்கள் எதை பெற அருகதை இருக்கிறதோ, அதற்கேற்ற தலைவர்களே அவர்களுக்கு வாய்ப்பர்"

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி எழுதவும்

நான் அதற்கு சிரிக்கவும்

நன்றாக இருக்கிறது

ஆனால் இது இத்துடன் முடிந்துவிட்டால்...?

இதனுடைய விளைவுகள் தமிழனை எங்கு கொண்டுபோய்விடும் சித்தர்...?

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எது வேண்டும் என்று நினைக்கின்றார்களோ-அது கிடைக்கும்.

மக்கள் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்கின்றார்களோ-அங்கே செல்வோம்.

மக்கள் எவரை தெரிவு செய்கின்றார்களோ-அவர்களை ஆதரிப்போம்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.....10 கட்சி 20 சுயேட்சைக்குழு!!

போற போக்கில மனைவி,பிள்ளகளையும் ரோ என்று சந்தேகப்படுவார்கள் போலிருக்கு.

கனடாவிற்கு வந்தோமா நாலைப் படிச்சோமா என்றில்லாமல் இன்னமும் ரோ வந்திட்டது,புலனாய்வுத்துறை பூந்திட்டுது என்று ட்ரகுலா படம் பார்த்த கணக்கு.நாலு நல்ல புத்தகத்தை வாசியுங்கோப்பா கனாவிற்கு வந்ததற்கு பிரயோசனமாக இருக்கும்.

எதிர்த்து நிற்க துணிவும் திடசங்கற்பும் இல்லாமையினால் தான் புலம் பெயர் தமிழ் ஊடகங்களிலும் அமைப்புக்களிலும் சரி தமிழர்களிலும் சரி துரோகிகளும் உளவாளிகளும் இலகுவாக ஊடுருவிக்கொண்டு போகின்றார்கள் அதிலும் ரோ பாய் விரித்து படுத்திருக்கின்றது :wub:

ஆர் ஆரை எதிர்க்க வேண்டும் என்று ஒரு பட்டியலைப் போடுங்கோ.

அதைபார்த்திட்டு எதிர்த்து நில்லுங்கோ எண்டால் எங்கை போய் நிக்கிறது..

Edited by Sooravali

ஏனையவர்கள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யவில்லை என எடுக்கலாம் தானே.

அல்லது கள்ள வாக்கு மூலம் ஒட்டுக்குழு வென்றிருக்கலாம்!!

ஒட்டுக்குழு வென்றால் கள்ள வாக்கு..

ஏன் சனம் ஒட்டுக்குழுவே பெட்டரெண்டு நினைக்கதேன்று நாம் யோசிக்கக்கூடாது?

இப்ப ஒட்டுக்குளுக்கள் தான் ஒழுங்கா இருக்கு.. மத்தக்குளுக்க்லேல்லாம் சிதறிக்கிடக்கு.

ஒட்டுக்குழு செய்யவேண்டிய வேலைகளை மத்தக்குளுக்கள் தங்களுக்குள் செய்யுதுகள். அப்ப சனம் என்ன நினைக்கும்?

  • தொடங்கியவர்

போற போக்கில மனைவி,பிள்ளகளையும் ரோ என்று சந்தேகப்படுவார்கள் போலிருக்கு.

நீங்கள் றோ என்றால் உங்கள் மனைவியும் பிள்ளையும் அதுவும் அதே குட்டை தானே

பேர் தான் தமிழ்வொய்ஸ்,ஆனால் ஒழுங்கான தமிழ் தெரியாது போலிருக்கு. நான் றோ என்றால் பிறகேன் மனைவி,பிள்ளைகளை றோ என்று சந்தேகிக்கின்றேன்.உங்களுக்கெலாம் நாங்கள் விளக்கம் எழுதிக்கொண்டு,

.

Edited by arjun

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.