Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

தமிழ் வொயிஸ் எழுதிய “ மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு” என்ற கட்டுரையைப் படித்தேன். ஆக்கத்தின் மூலம் எங்கிருந்தோ தெரியவில்லை. ஆனாலும் ஒரு சில குறிப்புக்கள். ஒவ்வொருவருக்கும் எழுதுவதற்கு உரிமையுண்டு. எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை எழுத வேண்டும். அத்தோடு, எது சரி, எது பிழை என்பதைக் கண்டறியக்கூடிய திறமையும் இருத்தல் அவசியம். பக்கப்பாடு இருக்கலாகாது.

அன்றய காலகட்டத்த்கில் புலிகள் உருவாகி போராட்டத்தில் இறங்கிய பொழுது தாயகத்தின் அரசியல்வாதிகள் திரு அமிர்தலிங்கம் உட்பட, தங்களுக்கென்று இயக்கங்களை உருவாக்கி ஒன்றுக்கொன்று முரண்பட்டு, புலிகளைத்தவிர எனய இயக்கங்கள் அனைத்தும் ஒட்டுக்குளுக்களாக மாறினார்கள். ஒரு சில இந்தியாவின் தோள் ஒட்டுக்குழுவாக இயங்கிவருகின்றது. இவர்களைப்பற்றி யாராவது விவாதிக்கின்றார்களா? இல்லையே.

ஆனால், இன்றோ அதே தமிழினம் தேசியக் கூட்டமைப்புக்கு மாறாகச் செயல்படத்தொடங்கியுள்ளது. புலம் பெயர்ந்த மக்கள் தாயகத்திலுள்ள தமிழ் அரசியல் அமைப்பினை ஆழமாக் பிளவு படுத்தி ஆனந்தம் காண அவா? காரணம் என்னவோ?

தமிழ் மக்கள் அன்றய காலத்திலிருந்து ஒற்றுமை எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரியாதவர்களா? எமக்கு போட்டி, பொறாமை, அடக்குமுறை என்பன பிறப்பிலேயே வேரூண்டிவிட்டது. ஒற்றுமையின் ஆரம்பம் குடும்பம் வசிக்கும் மனை. அதாவது குடும்பத்தினில் ஒற்றுமை நிலவ வேண்டும். குடும்ப ஒற்றுமையின் பலம், கிராம ஒற்றுமைக்கு விஸ்தரிக்கப்படும். கிராம ஒற்றுமையின் எடுத்துக் காட்டு, நகரத்திற்கும், நகர ஒற்றுமையின் எடுத்துக்காட்டு நாட்டின் ஒற்றுமையையும் விஸ்தரிக்கும்.

ஒற்றுமை, இதன் விளக்கம்:

பெயர்ச்சொல்; ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஐக்கியம். ஒற்றுமைக்கு ஆங்கிலக்கருத்து ஒன்றும் உண்டு. உருவ ஒற்றுமை. பல்கலைக்கழக அகரமுதலியில் ஒற்றுமைக்கு, பல அர்த்தங்களுண்டு. இயக்க நிலை ஒற்றுமை, நீரியல் ஒற்றுமை, சாயல் தோற்ற ஒற்றுமை, கருத்து இணக்கம், கருத்து ஒருமிப்பு, கருத்து ஒருமைப்பாடு, பொதுவான இசைவு, கருத்தொன்றிப்பு, இப்படி பல, பல அர்த்தங்கள்.

ஒருமைப்பாடு, இதன் விளக்கம்:

பெயர்ச் சொல்; ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஐக்கியம். மற்றய விளக்கம்- கூட்டு ஒருமைப்பாடு, கூட்டுப் பொறுப்புணர்வு, பல்லின ஒருமைப்பாடு, கலப்பின திருமணம், congruent;- முழுதொத்த, முழு ஒற்றுமையுள்ள, முற்றிசைவான, பொருத்தம், முழுதும் பொருத்தமான, ஒத்திருக்கின்ற, consensus;- கருத்து ஒருமைப்பாடு. சமுதாய தளத்தைப் பார்த்தால், தமிழ்ச் சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் அழிப்பதற்குத்தான் முயற்சிக்கின்றார்கள்.

திரு சம்பந்தர் ஒரு பழுத்த அரசியல் பழம். சிறந்த சிந்தனையாளர். பழங்கள் அத்தனையையும் மூட்டை கட்டி ஒன்றாக வைத்திருக்கின்றார். சம்பந்தர் ஐயா இல்லையென்றால், இன்று இந்தப்பழங்கள் கொட்டி நாலா பக்கங்களிலுமாக சிதறிவிடும்.

திரு சுரெஷ் பிரேமச்சந்திரன் விவேகமும், வீரமும் படைத்த சிறந்த சிந்தனையாளர், பேச்சு வல்லமை, சாளுக்கியம், சாணக்கியம் படைத்தவர். எமது தலைவர் வே. பிரபாகரன் சிறந்த வீரன், சாளுக்கியன். ஆனால் அவரிடம் சாணக்கியமும் விவேகமும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இப்படிப்பட்ட தமிழ் மக்கள் அரவணைத்துக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு,

காலத்துக்கேற்றவாறு, சிந்தனையுடனும், சாணக்கியத்துடனும், அரசியல் தந்திரத்துடனும் செயல் படுகின்றார்கள். இன்று தனித்தமிழீழம் என்று போராடின இளைஞர்கள் எல்லோரும் சிறையில் துன்புறுத்தப்படுகின்றார்கள். வீறு கொண்ட அரசியல் இளைஞர்கள் (திரு ரவிரராஜ்) போன்றவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். புலிகளின் அரசியல் அங்கத்தவர்களும், உடகவியலாளர்களும் சிறையில். ஒரு சிலர் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால், யோகி போன்றவர்கள் தேர்தலில் நிற்பதற்கு ஆயத்தம் செய்தார்கள், தேர்தல் ஆணையரால் மறுக்கப்பட்டது.

இன்றய காலகட்டத்தில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்றால், அவர்கள்: TNA பாராளுமன்ற அங்கத்தவர்கள்தான். புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அல்ல. காலத்துக்கேற்றவாறு உறுதியான, ஆக்கபூர்வமான, ஆக்க வளம்கொண்ட, கொள்கைகளை கடைப் பிடிக்கின்றார்கள். நடக்கும் தேர்தலில் நூறு விழுக்காடு த.தே.கூ வெற்றி பெறச் செய்வது, ஈழ மக்களின் மாத்திரமல்ல, புலம் பெயர்ந்த மக்களின் கடமை கூட என்பது எனது தாழ்மையான கருத்து. பல கட்சிகளின் அங்கத்தவர்களை பாராளுமன்றத்திர்கு அனுப்புவதன் பலம் என்ன?

உண்மை என்னவெனில் சில துயரச் சம்பவங்கள் சுழலும் சக்கரம் போல எமது வாழ்க்கையில் காணக்கூடியதாக இருக்கின்றது. “ நடந்தது நடந்துபோச்சு”! அப்படியல்ல, இனிமேலாவது நடக்காமல் இருக்கவேண்டுமல்லவா?

நடக்கப் போவதை நிர்ணயிப்பது எப்படி? நடந்தவைகள், நடந்துகொண்டிருப்பவை, இவைகளில் நடந்த பிழைகள், சறுக்குகள், குட்டிக் கரணங்கள், துரோகத்தனங்கள், மோசடிகள், ராணுவ புதைகுழிகள், இவையெல்லாவற்றையும் அடையாளங்கண்டு, ஆராய்ந்து, முன்னெடுக்கப்போகும், நடக்கப் போகும் நிகழ்வுகளில் இப்படிப்பட்ட வரலாற்றுப்பிழைகள், சுழலும் சக்கரம் போல, தமிழ் மக்களைச் சுற்றி வந்து ஏப்பம் போடாமல் எமது அரசியல் பிரமுகர்கள் இருக்கவேண்டுமென்பது எமது ஆதங்கம்.

இக்குறிக்கோளோடு த.தே.கூ செயல் படுகிறார்களென்பது எமது அபிப்பிராயம்.

பத்து லட்சம் மலயகத் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்திற்கு வாக்களித்தவர்தான் எமது திரு G.G.Ponnampalam. அவர் வழியில் உதித்தவர்தான் திரு கஜெந்திரன் பொன்னம்பலம். தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கென்று சில தமிழ்த் துரோகிகள் உதிப்பார்கள். இன்றய காலகட்டத்தினில், திரு சிவாஜிலிங்கம், கஜெந்திரன் பொன்னம்பலம், செல்வரஜா கஜெந்திரன், பத்மினி சிதம்பரனாதன், TNA ல் இருந்து பிரிந்து சென்று போட்டி இடுவது, 21ம் நூற்றாண்டினில் தமிழர் இடும் மாபெரும் துரோகத்தனம். பத்மினி சிதம்பரநாதன் அரசியலுக்கு வந்து எதனைச் சாதிக்கவிருக்கின்றார்.

தமிழ் மக்கள் அன்று இட்ட தவறுகள்:

முதலாவது தவறு: 1833ம் ஆண்டு யாழை இலங்கையோடு இணைத்தபோது, கைகட்டி, வாய்பொத்தி நின்றது.

இரண்டாவது தவறு: 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தபொழுது, யாழின் தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு, கைகட்டி, வாய்பொத்தி நின்றது.

மூன்றாவது தவறு: பத்து லட்சம் மலயக மக்களின் குடியுரிமையை இலங்கை பறித்தபொழுது, கைகட்டி, வாய்பொத்தி நின்றது.

நான்காவது தவறு: 1956ம் ஆண்டு சிங்கள மசோதாவிற்கு கைகட்டி, வாய்பொத்தி நின்றது.

ஐந்தாவது தவறு: 1972ம் ஆண்டு குடியரசாக்கிய பொழுது கைகட்டி, வாய்பொத்தி நின்றது.

இதன் பிற்பாடு எமது அரசியல்வாதிகள் சுழலும் சக்கரம் போல செய்த தவறுகள் பல பல- எண்ணுக் கணக்கற்றவை.

ஆனால் திரு கோடீஸ்வரன் 1969 ஆண்டு சிங்களத்திற்கு எதிராக Privy Councilலில் வாதாடி வழக்கில் வெற்றி வாகை சூடினார். இதன் பிரதி பலிப்பு 1972ம் ஆண்டின் குடியரசும், கொடிய அரசியல் அமைப்பும்.

மேலே கூறியவை ஒரு சில உதாரணங்கள்.

ஆயுதப் போராட்டமென்று நாம் எதனைக் கண்டோம். வட கிழக்கு மக்கள் அழிந்ததும், பல லட்சம் மக்கள் நாடு பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்வதும், இன்றும் ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் படகு யாத்திரை செய்வதும் செயலாகிவிட்டது. இன்று வட கிழக்கில் எத்தனை மக்கள் வாழ்கின்றார்கள்? நாட்டுப் பற்றுடையவர்கள் இன்றும் நாட்டில். மற்றயவர்கள் புலம் பெயர்ந்த மண்ணில்.

ஈழ மக்களையும், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தற்காலிகத் தங்குமிடத்திலும் வதியும் மக்களையும் காரணம் காட்டி, புலம் பெயர்ந்த மக்கள் களியாட்டமும், பணச்சேகரிப்பும், இன்று புலம் பெயர் தமிழ் மக்களின் கலாச்சாரமாகிவிட்டது. முள்ளிவாய்க்காலில் 50,000 மக்களுக்கு மேல் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கூடப் பூர்த்தியாகவில்லை, ஆனால், புலம் பெயர்ந்த மக்களோ, மனோரமா என்ன, ஆட்டமென்ன, பாட்டென்ன, ஐயகோ, என்செய்வேன் பராபரமே. எல்லாமே நடப்பது கனவா? நாடக மேடையா? குழப்பமாக இருக்கின்றது.

ஆகவே, எமது அபிப்பிராயம் என்னவெனில்; த.தே.கூ மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கவில்லை, ஈழம் வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன்தான் களத்தில் நிற்கின்றார்கள். தேர்தலில் நிற்கும் த.தே.கூ அங்கத்தவர்கள் மிகவும் துணிச்சல் படைத்தவர்கள். சாணக்கியமும், சாளுக்கியமும், அரசியல் தந்திரத்துடனும், விவேகத்துடனும், துணிச்சலுடனும் தேர்தலில் நிற்கும் திரு சம்பந்தர் ஐயா அவர்களின் பழங்கள் வாழ்த்தப் படவேண்டியவர்கள். எல்லோரும் வாழ்த்துவோம். புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் ஆதரவினை த.தே.கூ க்கு அளிப்பதுதான் மிகவும் சாலச் சிறந்ததும், தார்மீகக் கடமையும் கூட என்பது எமது அபிப்பிராயம்.

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

“சிந்தனை அற்ற செயல் முட்டாள்தனம்

செயலற்ற சிந்தனை சோம்பேறித்தனம்.”

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

சித்திரை முதலாம் நாள்

Edited by Sandilyan

  • Replies 55
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பு நீங்கள் எந்தப்புற்றில் இருந்து ........

april fool.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்வாயான்

வணக்கம் அப்பு!. தங்களுடைய அடையாளத்திலிருந்தே (அல்வாயான்) தெரிகின்றது தாங்கள் ஒரு பிரதேசவாத வெறிகொண்டவரென்று. இதுதான் தமிழன் பலவீனம்.

புலிகள் செயலிழக்கப்பட்டதும் புற்றிலிருந்த விஷக் கிருமிகளும் பாம்புகளும் ஈசல்களும் இன்று வெளியே வந்து பல போர்வையில் ஆட்டங்கள் போடுகின்றது.

புலிகள் என்று சொல்லி அதற்குள்ளேயே புகுந்து துரோக வேலை பார்த்தவர்களும் இன்று பல பேரவைகளில் அங்கம் வகிக்கின்றார்கள்.

நேற்று வந்தவர்கள்கூட தாமே புலிகள் என்று பணம் களவாடினார்கள். இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

பிளவுபட்டு நிற்கும் தமிழர், அனைவரும் இணைய வேண்டும். தேர்தலுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஜி ரி வி இல் இப்போது கூட்டமைப்பினருடன் கஜேந்திரகுமார் அணியினர் இணைய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்து கொண்டிருக்கிறது. இவைகளுக்கு கஜேந்திரகுமார் அணியினர் செவிமடுப்பார்களா?

பிளவுபட்டு நிற்கும் தமிழர், அனைவரும் இணைய வேண்டும். தேர்தலுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஜி ரி வி இல் இப்போது கூட்டமைப்பினருடன் கஜேந்திரகுமார் அணியினர் இணைய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்து கொண்டிருக்கிறது. இவைகளுக்கு கஜேந்திரகுமார் அணியினர் செவிமடுப்பார்களா?

ஜனாதிபதி தேர்தலின் போதே கஜேந்திர குமார் பிரிந்து விட்டார்... அவர் பிரிய போகிறார் என்பதையும் குறியிட்டு காட்டியும் இருந்தார்... ஆனால் அதை அசட்டையாக போனால் போகட்டும் எண்று இருந்தது யார் எண்டதை கண்டு பிடியுங்கள்...

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பித்த போதே அதன் தலைமையால் பிரிவு வரும் என்பதை உணர்ந்து இருக்க வேண்டும்...

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=22623&cat=1

இதில் சித்தார்த்தன் தனக்கும் கூட்டமைப்புக்கும் இருந்த தொடர்பை வெளிப்படையாக சொல்கிறார்... புலிகளினால் நியமிக்க பட்டவர்கள் விலக்க பட்டு விட்டனர் என்பதை கூட்டமைபின் தலைமை சொன்னதையும் சொல்கிறார்...

Edited by தயா

Iraivan

புதிதாகத்தோன்றும் போராட்ட விமர்சன புத்தி ஜீவிகள்.

அப்ப இவர் என்ன கடல்புறா சாண்டில்யனா ??? :(

ஏன் தலைப்பிலேயே பாரிஸ் ஈழநாடு என்று இடப்பட்டிருக்கின்றது :( இதைக் கூட பார்க்க முடியாதவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதுவது தான் வேடிக்கையானது

சாண்டிலயன் நான் எழுதியது என்று இதற்கு எதிர்வினையாக ஒரு தமிழ் இலக்காணம் படிப்பித்திருக்கின்றீர்கள்

பக்கப்பாடு இருக்கலாகாது.

நேற்று வந்தவர்கள் கூட

இதற்கு என்ன அர்த்தம் இதற்கும் ஒரு இலக்காணம் சொன்னால் நல்லது

திரு சம்பந்தர் ஐயா அவர்களின் பழங்கள் வாழ்த்தப் படவேண்டியவர்கள்

எந்த பழங்களுக்கு ??

புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் ஆதரவினை த.தே.கூ க்கு அளிப்பதுதான் மிகவும் சாலச் சிறந்ததும், தார்மீகக் கடமையும் கூட என்பது எமது அபிப்பிராயம்

நீங்கள் என்ன தமிழ்மக்களின் பக்கப்பாட்டிலா எழுதுகின்றீர்கள் நீங்களும் கூட்டமைப்பு பக்கப்பாட்டுக்காரர் தானே ?

Edited by tamilsvoice

ஜனாதிபதி தேர்தலின் போதே கஜேந்திர குமார் பிரிந்து விட்டார்... அவர் பிரிய போகிறார் என்பதையும் குறியிட்டு காட்டியும் இருந்தார்... ஆனால் அதை அசட்டையாக போனால் போகட்டும் எண்று இருந்தது யார் எண்டதை கண்டு பிடியுங்கள்...

ஏன் கண்டு பிடிப்பான் மூவேந்தர் தானே துரத்தியது

திரு சுரெஷ் பிரேமச்சந்திரன் விவேகமும், வீரமும் படைத்த சிறந்த சிந்தனையாளர், பேச்சு வல்லமை, சாளுக்கியம், சாணக்கியம் படைத்தவர்

இவருக்கு ஒரு இரக்கத் கறை இருப்பதாக சொல்லுகின்றார்களே அப்படியில்லையா ?

திரு G.G.Ponnampalam. அவர் வழியில் உதித்தவர்தான் திரு கஜெந்திரன் பொன்னம்பலம்

அமிர்தலிங்கம் ஆனந்தசங்கரி வழியில் வந்தவர் தான் சம்பந்தர்

சம்பந்தர் அடிப்படையிலேயே புலிகளை விமர்சிப்பவர் பிடிக்காது பலரினதும் கருத்து இது

-புலிகளுக்கும் இவரைப்பிடிக்காதாம் சந்தர்ப்பவாதத்திற்காக இவரை புலிகளை பாவித்தார்கள் என்று " நிலவன்-நிராஜ்டேவிட் " வானொலியில் சொன்னார்

Edited by tamilsvoice

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:( :( வணக்கம் தமிழ்ஸ் வொயிஸ்

ஆமாம் தங்களுக்கு தமிழ்ஸ் வொயிஸ் என்று தமிழருக்காக குரல் கொடுக்க யார் அதிகாரம் கொடுத்தார்கள். தமிழ் வொயிஸ் என்று மாற்றலாமே?

பாரிஸ் ஈழநாடு என்பது தெரியும்இ ஆக்கம் யார்? குழல் ஊதியது யார்? தமிழ்நாதத்தில் கோயில் மேளம்போல ஒரே ராகத்தில் அன்று ஊதியது தாங்கள் என்று ஒரு ஊகம். பிழையென்றால் எனது தவறு.

தமிழரில் உள்ள பலவீனம் என்னவென்றால்இ எடுத்த உடன் அடிஇ பிடிஇ கொலை. சிந்திப்பதில்லை. யாம் தங்களுக்குப் படிப்பிக்க வரவில்லை. ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன். கருத்துக்களை கூறுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை சண்டையாக்குவது தான் தமிழன் பிறவிக்குணமாகிவிட்டது.

தமிழீழம் என்று ஆயுதம் எடுத்த புலிகளை உலகம்தான் அழித்தது. குட்டிமணி தங்கத்துரை ஆயுதம் எடுத்து 40 வருடம். தமிழ் மக்கள் அழிந்து இன்று படகு யாத்திரை செய்யும் இனமாகிவிட்டது. இரத்தக் கறை என்று கூறினீர்கள். கூடிய இரத்தக்கறை படிந்தவர்கள் சிங்கள மக்களும் எமது தலைவரும்தான் (வே.பிரபாகரன்). எமது தலைவரை 70 களில் வளர்த்தவர்களில் (போராட்டம்)-(மூவர்) நானும் ஒருவன். இதைப்பற்றிய உண்மைகள் தெரியத் தேவையில்லை. ஆனபடியால் எமக்கு போராட்டத்தைப்பற்றி தாங்கள் அறியத்தருவது தேவையில்லாத ஒரு விடயம்.

நான் த.தே.கூ. அங்கத்தவனும் அல்ல பக்கப்பாட்டுக்காரனுமல்ல. 37 வருடம் ஆயுதம் எடுத்த வே.பிரபாகரன் விடுதலை எடுக்கமுடியாமல் அழிந்தார். அத்தோடு 3 லட்சம் மக்களை அகதிகளாக்கினார். கஜேந்திரன் பொன்னம்பலம்இ பத்மினி சிதம்பரனாதனால் முடியுமா? உண்மைகளை ஆராயாமல் எடுக்கும் முடிவு அழிவில்தான் முடியும். இன்று இவர்கள் இலங்கையில் தமிழர்கள் குரலை அழிக்க முடிவு செய்து தனிமையாக ஒரு கட்சியை ஆரம்பித்து த.தே.கூ. அழிப்பதென்று பல பிளவுகளாக பிளந்தால் யாருக்கு லாபம் என்பது கூட புரியாதவர்கள் எதற்காக அரசியல் நடத்தவேண்டும். பல தமிழ் கட்சிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தால் அது ராஜபக்ஷவிற்கு பஞ்சாமிர்தம் ஊட்டுவதுபோலாகும். இதற்குத்தான் ராஜபக்ஷ பாடுபடுகின்றார்.

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

இன்றய காலகட்டத்தினில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் தேவை வருங்கால அரசியல் அபிலாசைகளை எப்படி வென்றெடுக்க முடியும் என்பனவற்றை ராஜதந்திர முறை கையாண்டுதான் வெல்லமுடியும். கூக்குரலிட்டு எடுக்க முடியாது. இதைத்தான் த.தே.கூ. முன்னோக்கி எடுத்துச் செல்கின்றது. சிந்தியுங்கள். முள்ளிவாய்க்காலில் மக்களுக்கும் புலிகளுக்கும் அழிவு ஏற்பட்ட பொழுது தமிழ் இளையோர் பேரவைதான் மும்முரமாக பாடுபட்டது. ஔரளவு வெற்றியும் கண்டது. ஏதாவது ஒரு நாடு எம்பக்கம் சாய்ந்தார்களா? இல்லையே. பட்டு வேட்டியே தமிழனுக்கு இல்லை இப்போதைக்கு கோமணத்தையாவது வென்றெடுப்போம் பின்பு பட்டு வேட்டியை வென்றெடுப்போம் என்று ஒரு த.தே.கூ. தேர்தலில் நிற்கும் அங்கத்தவர் கூறினார். உண்மையும் அதுதான். அவருக்கு எமது பாராட்டுக்கள்.

மூன்று வேளை சத்துணவு பிள்ளைகளுக்கு சத்துணவு சனி ஞாயிறு தமக்கு விஷ்கி கோழி என்று உண்டு சக்கரை வியாதியாலும் கொழுப்பு வியாதியாலும் அல்லல்பட்டு சனிஇ ஞாயிறு கேளிக்கைகளில் ஈடுபடும் பெரும்பான்மை புலம் பெயர்ந்த மக்களுக்கு என்னய்யா தெரியும் யாழ் மக்களின் துயரங்களும் துன்பங்களும். இலங்கை இராணுவம் உடல் உறவுப் பசியால் அல்லல்பட்டு தமிழ் யுவதிகளை இலவசமாக கற்பளிக்கும் இந்தக் காலகட்டத்தினில் எமக்குள் சண்டை தேவையா?

அன்றோஇ இயக்கங்கள் தோன்றிஇ மக்கள் ஒற்றுமையைக் குலைத்தார்கள்.

இன்றோஇ அரசியல் கட்சிகள் தோன்றி இருக்கின்றன தமிழர் ஒற்றுமையைக் குலைப்பதற்கு.

நாம் எந்தப் பாதையை நோக்கிச் செல்கின்றோம்? யாருக்காவது தெரியுமா?

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Edited by Sandilyan

சாண்டில்யன்

ஆமாம் தங்களுக்கு தமிழ்ஸ் வொயிஸ் என்று தமிழருக்காக குரல் கொடுக்க யார் அதிகாரம் கொடுத்தார்கள். தமிழ் வொயிஸ் என்று மாற்றலாமே?

எனது பெயரை எப்படி வேண்டுமானாலும் வைப்பேன் அதைக் கேட்கும் உரிமம் உமக்கு கிடையாது தவிர நான் தமிழர்களின் அதிகார குரல் என்று சொல்லி உம்மைப் போல் இலக்கணப் பாடம் எடுக்கவில்லை

ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன். கருத்துக்களை கூறுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை சண்டையாக்குவது தான் தமிழன் பிறவிக்குணமாகிவிட்டது

யார் சண்டையாக்குவது நாமும் எமது கருத்தைத் தான் எழுதி வருகின்றோம் யாருக்கும் பாடம் எடுக்கவில்லை

பாரிஸ் ஈழநாடு என்பது தெரியும்இ ஆக்கம் யார்? குழல் ஊதியது யார்? தமிழ்நாதத்தில் கோயில் மேளம்போல ஒரே ராகத்தில் அன்று ஊதியது தாங்கள் என்று ஒரு ஊகம். பிழையென்றால் எனது தவறு.

உமது ஊகத்தையும் கற்பனையையும் வைத்து சாண்டில்யன் என்ற பெயருக்கேற்ப கடல்புறா ஜலதீபம் என்று கதை வேண்டுமானால் எழுதுங்கள்

இரத்தக்கறை படிந்தவர்கள் சிங்கள மக்களும் எமது தலைவரும்தான் (வே.பிரபாகரன்). எமது தலைவரை 70 களில் வளர்த்தவர்களில் (போராட்டம்)-(மூவர்) நானும் ஒருவன்.

தலைவருக்கு துப்பாக்கி எடுத்து சுடச் சொல்லிக்கொடுத்தவரா ? உம்மைப்போல் சுயதம்பட்டம் அடிப்பதிலிருந்தும்

சிங்கள மக்களின் சுரேஸ் பிரேமச்சந்திரனின் இரத்தக்கறையும் தலைவரின் இரத்தக்கறையும் ஒன்று என்றும்

37 வருடம் ஆயுதம் எடுத்த வே.பிரபாகரன் விடுதலை எடுக்கமுடியாமல் அழிந்தார். அத்தோடு 3 லட்சம் மக்களை அகதிகளாக்கினார்.

கூறியதிலிருந்தும் நீர் யார் என்று சொல்லி அறியத்தேவையில்லை

நான் த.தே.கூ. அங்கத்தவனும் அல்ல பக்கப்பாட்டுக்காரனுமல்ல.

இப்படி சொல்லி சொல்லியே இங்கே பலர் பாட்டுப்பாடுகின்றார்கள்

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

சிந்திக்கத் தெரியாமலா இங்கு எல்லோரும் இருக்கின்றார்கள் ? உங்கள் கருத்தை திணிக்காதீர்கள்

நாம் எந்தப் பாதையை நோக்கிச் செல்கின்றோம்? யாருக்காவது தெரியுமா?

37 வருடம் ஆயுதம் எடுத்த வே.பிரபாகரன் விடுதலை எடுக்கமுடியாமல் அழிந்தார். அத்தோடு 3 லட்சம் மக்களை அகதிகளாக்கினார். இவரின் பாதையில் செல்லுகின்றோம்

நீங்கள் எந்தப்பாதையில் உங்களுக்காவது தெரியுமா ? அப்படியானால் நீங்கள் தலைமை தாங்கலாமே ? தலைவரையே வளர்த்தவர் ஆயிற்றே

அல்வாயான்

வணக்கம் அப்பு!. தங்களுடைய அடையாளத்திலிருந்தே (அல்வாயான்) தெரிகின்றது தாங்கள் ஒரு பிரதேசவாத வெறிகொண்டவரென்று. இதுதான் தமிழன் பலவீனம்.

வணக்கம் மருதங்.. .. .. கேணி

தங்களுடைய பெயரிலும் தெரிகின்றது தாங்களும் ஒரு தவளை என்று. வார்த்தையைக் கவனித்துக் கொட்டவேண்டும். தங்களுடைய எழுத்திலிருந்து தெரிகின்றது தாங்கள் ஒரு கல்வித் தரம், பண்பு, கண்ணியம், கட்டுப்பாடு, குறைந்தவரென்று. தங்களுடன் உரையாடுவது time waste. இத்துடன் இந்த உரைகளை முடித்துக்கொள்வோம்.

வணக்கம் நுணாவிலன்

தாங்கள் வைத்திருக்கும் பெயரிலேயே தெரிகின்றது தங்களுடைய ஊர் பேதமும் துவேஷமும். நான் ஈழவனுடைய கேள்விக்கு விடை அளிப்பதற்கு இங்கு வரவில்லை. ஒவ்வொருவனுக்கும் தன்னுடைய கருத்தைக் கூறுவதற்கு சுதந்திரம் உள்ளது. உங்களில் ஒரு சிலரின் அதிகாரச் சிந்தனை, தங்களுடைய சொல்லைத்தான் மக்கள் கேட்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்.

வணக்கம் தமிழ்ஸ் வொயிஸ்

ஆமாம் தங்களுக்கு தமிழ்ஸ் வொயிஸ் என்று தமிழருக்காக குரல் கொடுக்க யார் அதிகாரம் கொடுத்தார்கள். தமிழ் வொயிஸ் என்று மாற்றலாமே?

பாரிஸ் ஈழநாடு என்பது தெரியும்இ ஆக்கம் யார்? குழல் ஊதியது யார்? தமிழ்நாதத்தில் கோயில் மேளம்போல ஒரே ராகத்தில் அன்று ஊதியது தாங்கள் என்று ஒரு ஊகம். பிழையென்றால் எனது தவறு.

இதிலிருந்து நீங்கள் இதை எல்லோரிடமும் காட்டுகின்றீர்கள் தற்செயலாக செய்யவில்லை என்று நிரூபனம் ஆகின்றது

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

“சிந்தனை அற்ற செயல் முட்டாள்தனம்

செயலற்ற சிந்தனை சோம்பேறித்தனம்.”

இதை நிர்வாகம் தனிநபர் தாக்குதல் என்று எல்லாவற்றையும் நீக்கி சிலரின் சுயரூபங்களை மூடிமறைக்க வேண்டாம்

Edited by tamilsvoice

..... திரு சம்பந்தர் ஒரு பழுத்த அரசியல் பழம். சிறந்த சிந்தனையாளர். பழங்கள் அத்தனையையும் மூட்டை கட்டி ஒன்றாக வைத்திருக்கின்றார். சம்பந்தர் ஐயா இல்லையென்றால், இன்று இந்தப்பழங்கள் கொட்டி நாலா பக்கங்களிலுமாக சிதறிவிடும்.

திரு சுரெஷ் பிரேமச்சந்திரன் விவேகமும், வீரமும் படைத்த சிறந்த சிந்தனையாளர், பேச்சு வல்லமை, சாளுக்கியம், சாணக்கியம் படைத்தவர். எமது தலைவர் வே. பிரபாகரன் சிறந்த வீரன், சாளுக்கியன். ஆனால் அவரிடம் சாணக்கியமும் விவேகமும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ....

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

சித்திரை முதலாம் நாள்

சாண்டில்யன்!

ஓரளவு வாசித்துச் சிரிக்கக்கூடிய உங்களது மிகச்சிறந்த முட்டாள் தினச் செய்திக்கு நன்றி.

வணக்கம் ஜயா !

உங்கள் வயதில் பாதி தான் நான் நீங்கள் என்னை ஊகிக்க முடியாது

என்னை ஊகித்து தோற்றுப்போனதால் உங்களை ஊகிக்கும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு

நீங்கள் கனடா -நக்கீரரா ? உங்கள் எழுத்துக்களை பார்த்தேன் ஒத்துப்போகின்றது !!! இல்லை என்றால் மன்னிக்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ் வொயிஸ்

ஒரு பழமொழி- ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று.

நான் எனது அபிப்பிராயத்தை ஆராய்ந்து என்னுடைய கருத்தை எழுதியிருந்தேன். அதற்கு நீர் கோபப்பட்டு பண்பில்லாமல் எழுதுகின்றீர். எனக்கும் பண்பில்லாமல் எழுதத்தெரியும். ஆனால் எனது பெற்றார் பண்போடு வளத்தனர். நான் எனது கருத்தை ஒருவருக்கும் திணிக்கவில்லை. எனது கருத்துத்தான். உமக்கு பிடிக்கவில்லை யென்றால் அதை விட்டுவிடவேண்டும். நீர் தான் உமது கருத்தை என்மேல் திணிக்க முயலுகின்றீர். நீர் ஏழு வருடத்திற்கு முன்புதான் பிரச்சாரம் என்ற பெயரில் நுழைந்தீர். உம்முடைய சரித்திரமே எனக்குத் தெரியும்.

வே.பிரபாகரனும் இதே பிழையைத்தான் விட்டார். முட்டாளைப்போல முடிவெடுப்பதும்இ அதன்பின் வேதனைப்படுவதும் அவருக்கு வியாதியைக் கொடுத்தது. உமக்கும் இரத்தக்கொதிப்பு என்பது எமக்குத்தெரியும்.

உமக்கு கருத்துகள் எழுதவேண்டுமென்றால்இ நீரே தயவு செய்து எழுதலாம். மற்றவர்களை அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து அடக்க முயலவும் வேண்டாம்இ உமது கருத்தை திணிக்க முயலவும் வேண்டாம். இது நல்லூருமல்லஇ அராலியும் அல்லஇ இது புலம் பெயர்ந்த நாடு. யாழில்தான் உந்துவலி முறையிலும் தாதா முறையிலும் மக்களை அச்சமூட்டி தங்கள் வழிக்குக் கொண்டுவர முயலுவார்கள். அதனால்தான் எல்லோரும் படகு யாத்திரை. மற்றவர்கள் எழுதும் கட்டுரைகளைக் காப்பி பண்ணுவதை தவிர்த்தால் நல்லது?? ஒரு அபிப்பிராயம். திணிக்கவில்லை??

குளிசையைப் போட்டால் நல்லது. இரத்தக்கொதிப்புக் குறையும்.

ஆசானுக்கு

இப்படியே சொல்லிச் சொல்லி தமிழர்களை தங்களைப்போல முட்டாள்கள் 177 வருடங்கள் முட்டாள்களாக்கினார்கள்இ ஆக்குகின்றார்கள்.

உம்மைப் போன்றவர்களுக்கு நான் விடை எழுதுவது எனது நேரத்தை வீணடிப்பதாகும். தொடர்ந்து தங்களைப்போன்றவர்கள் எழுதினாலும் நான் வாசிக்கப் போவதில்லை. ஏன்? முட்டாள்கள்

எழுத்துக்கள்??

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சாண்டில்யன்.. நீங்கள் தமிழ்வொயிஸை சாட்டுவைத்து தலைவரின் செயற்பாடுகளை ஏகமனதாக விமர்சனம் செய்து வருகிறீர்கள்.

விவேகம்.. சாணக்கியம் போன்ற பதங்களை எல்லாம் அள்ளிவிடுகிறீர்கள்.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்பதை சம்பந்தனா.. பிரபாகரனா உலகறியச் செய்தனர்...??! முள்ளிவாய்க்காலில் 50,000 தமிழ் மக்கள் பலியிடப்பட்ட போது அவர்களின் பிரதிநிதியாக சிறீலங்கா சிங்களப் பாராளுமன்றத்தில் வீற்றிருந்த சம்பந்தன்.. அந்த மக்களை பாதுகாக்க ஏன் தவறினார்..??! சிங்கள அரசிடம் கோரி அல்லது சர்வதேசத்தின் ஜனநாயகப் பிரதிநிதியான அவர் சர்வதேசத்திடம் கோரி.. ஒரு தற்காலிக யுத்த நிறுத்தத்தை அறிவித்து மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்திருக்கலாம் தானே.

அன்று கூட புலிகளும் புலம்பெயர் மக்களும் கத்தியதால் தான் உலகின் தலைநகரங்களில் விழுந்து புரண்டதால் தான் செஞ்சிலுவைச் சங்கமாவது அங்கு போக முடிந்தது. அங்கு ஒரு போர்க்குற்றம் நடந்தேறியது என்பதை உலகம் உச்சரிக்க வைத்துள்ளது.

தமிழீழம் என்பது ஏதோ பிரபாகரனின் ஆயுத முனையில் இருந்து பிறந்தது போல கதையளக்கிறீர்கள். தமிழீழம் என்பது தந்தை செல்வாவினது தோல்வியடைந்த சிங்கள அரசுடனான சமாதானங்களின் மீது பிறந்தது. தலைவர் பிரபாகரன் அல்ல ஆயுதம் தூக்கியது. 1977 இல் ஆயுதத்தை தூக்கத் தூண்டியவர்கள் இன்றைய சாணக்கியர்கள். வெள்ளை வேட்டி ஜிப்பாகாரர்கள். யோகேஸ்வரன் போன்றவர்கள் 5000 தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினால் தான் சிங்களப் படைகளை யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டி தமிழீழம் அமைப்பேன் என்று கூட கூறினார். அந்த வெள்ளை ஜிப்பாக்கள்.. கூறிவிட்டு.. சிங்கள கதிரைகளில் இடம்பிடிக்க போய்விட்டார்கள். ஆனால் சிந்தித்தது தமிழ் இளைஞர்கள். ஆயுதப் போராட்ட உலக வரலாறுகளை சரிவர ஆராய்ந்துதான் பிரபாகரனும் போராடினார்.

எவன் எல்லாம் தமிழீழம் என்று ஆயுதம் தூக்கினானே.. அவன் (பிரபாகரனைத் தவிர) எல்லாம் பின்னர் தமிழீழம் வேண்டாம்.. ஆயுதமும் வேண்டாம் சிங்கள அரியாசணை போதும் என்ற நிலைக்கு வந்தது.. உங்களின் பதத்தில் சாணக்கியம்.

பிரபாகரனுக்கு அரசியல் விவேகம் அறிவு இருக்கவில்லை என்றால்.. 37 வருடமாக மற்றவர்கள் என்ன காக்கா கலைத்துக் கொண்டா இருந்தார்கள். பிரபாகரன் அரசியல் ரீதியாக தமிழீழம் அமையப் பாடுப்பட்டவர்களை தண்டிக்கவும் இல்லை சுடவும் இல்லை. அவர் தண்டித்தது எல்லாம் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து தங்களின் சொந்த அரசியல் வயிறு வளர்த்தவர்களை மட்டுமே.

எமது ஆயுதப் போராட்டம் தோற்றதற்குக் காரணம்.. மதில் மேற் பூனைகளாக விளங்கிய சம்பந்தன் போன்றவர்களும் தான். உலக அரங்கில் எமது போராட்டம் பயங்கரவாதமாக சிங்கள் இந்திய ஆளும் வர்க்கத்தால் சித்தரிக்கப்பட்ட போது அதனை மெளனமாக இருந்து ஏற்றுக் கொண்டு அரசியல் செய்தவர்கள் இவர்கள். இறுதியில் அல்குவைடா தீவிரவாதம் செய்த அமெரிக்க பேரழிவுக்குப் பின்னரான உலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எமது போராட்டம் உள்ளடக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதற்கு முதன்மைக் காரணம்.. பிரபாகரன் அல்ல. எமது விடுதலைப் போராட்டத்தை தூண்டிவிட்டுவிட்டு.. அதன் பின்னர் அதனை வன்முறை.. தீவிரவாதம் என்று உச்சரித்துக் கொண்டு சிங்கள அரியாசணங்களை அலங்கரித்த தமிழர்களே. அவர்கள் வேறு யாருமல்ல.. பிரபாகரன் வளர்த்தெடுத்த தமிழ் தேசியத்தை உச்சரித்து இன்று அரசியல் செய்து கொண்டிருப்பவர்களே.

பிரபாகரன்.. ஆயுதப் போராட்டத்தில் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் வளர்த்தெடுத்த தமிழ் தேசியம்.. தமிழீழம் போன்ற கொள்கைகள் மடியவில்லை. மடியவும் மாட்டாது. காரணம் அவை மக்களின் கொள்கைகளும் கூட. பிரபாகரனை சிங்கள தேசம் தனித்து நின்று அழிக்கவில்லை. தமிழர்களும் உலகமும் கூடி நின்று அழித்தார்கள் அதனையும் நீங்கள் உங்களின் சாணக்கியமாக வரைந்து காட்டுங்கள்.

Edited by nedukkalapoovan

ஜனாதிபதி தேர்தலின் போதே கஜேந்திர குமார் பிரிந்து விட்டார்... அவர் பிரிய போகிறார் என்பதையும் குறியிட்டு காட்டியும் இருந்தார்... ஆனால் அதை அசட்டையாக போனால் போகட்டும் எண்று இருந்தது யார் எண்டதை கண்டு பிடியுங்கள்...

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பித்த போதே அதன் தலைமையால் பிரிவு வரும் என்பதை உணர்ந்து இருக்க வேண்டும்...

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=22623&cat=1

இதில் சித்தார்த்தன் தனக்கும் கூட்டமைப்புக்கும் இருந்த தொடர்பை வெளிப்படையாக சொல்கிறார்... புலிகளினால் நியமிக்க பட்டவர்கள் விலக்க பட்டு விட்டனர் என்பதை கூட்டமைபின் தலைமை சொன்னதையும் சொல்கிறார்...

சம்பந்தர் என்பவர் தனிமனிதனாக இருக்கட்டும். அதற்காக தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது சரியா? பிரிந்து எதைச் சாதிக்கலாம் என்று எனக்குப் புரியவில்லை. விடுதலைப் புலிகளால் காக்கப்பட்ட ஒருமைப்பாடு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் சிதைக்கப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

:( இறைவன்,

முன்னர் ஓரிடத்தில் ஜீ.டீ.என் தொலைக்காட்சியில் இவ்வமைப்புக்கள் இரண்டும் இணைய வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள் என்று சொல்லியிருந்தீர்களே?? இப்போது மீண்டும் தூக்கிக்கொண்டு முருங்கை மரத்தில் ஏறுகிறீர்கள்?? உங்களுக்கு கஜேந்திரனைக் குறை சொல்வது முக்கியமா? அல்லது கூட்டமைப்பு மீண்டும் ஒன்றுபடுவது முக்கியமா?? முதலில் ஒரு முடிவிற்கு வாருங்கள், பிறகு எழுதுவோம்.

:( அப்ப, புலம்பெயர்ந்தவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்கிறீர்கள், நல்லது நீங்கள் எங்கேயிருந்துகொண்டு இந்த நாவலை எழுதினீர்கள்?? வன்னியிலா அல்லது வதை முகாமிலா?? ஏன் கேட்கிறேன் என்றால், அப்படியிருந்தால் இக்கட்டுரைக்கு அது இன்னும் வலுச் சேர்ப்பதாக இருக்குமே, அதனால்த்தான்.

:( இறைவன்,

முன்னர் ஓரிடத்தில் ஜீ.டீ.என் தொலைக்காட்சியில் இவ்வமைப்புக்கள் இரண்டும் இணைய வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள் என்று சொல்லியிருந்தீர்களே?? இப்போது மீண்டும் தூக்கிக்கொண்டு முருங்கை மரத்தில் ஏறுகிறீர்கள்?? உங்களுக்கு கஜேந்திரனைக் குறை சொல்வது முக்கியமா? அல்லது கூட்டமைப்பு மீண்டும் ஒன்றுபடுவது முக்கியமா?? முதலில் ஒரு முடிவிற்கு வாருங்கள், பிறகு எழுதுவோம்.

ரகுநாதன் :(

கஜேந்திரகுமாரிடம் நான் குறைகாண்பது முக்கியமல்ல. அவரது செயற்பாடு முற்றிலும் பிழையானது. இன்று தமிழர்கள் தாயகத்திலும் புலத்திலும் பிரிந்து நின்று வேறுபடுகின்றார்களென்றால் அது கஜேந்திரன் செயற்பாட்டினால்தான். சம்பந்தர் , சம்பந்தர் என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஒட்டு மொத்தத் தமிழர்களிடையே கஜேந்திரகுமார் பிளவினை உண்டாக்கியிருக்கிறார். இது தேர்தல்காலச் செயற்பாடுபோல் தோற்றத்திலிருந்தாலும் தமிழ்அரசியலிலே இரு துருவங்களை உண்டாக்கிவிடும். கஜேந்திரகுமார் எங்கு பிழைவிட்டுள்ளார் என்பதைச் சொல்வது குறைகூறலாகாது. தமிழருடைய அரசியற்பலம் என்றும் ஒன்றாக இருக்கவேண்டும்.

சம்பந்தர் என்பவர் தனிமனிதனாக இருக்கட்டும். அதற்காக தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது சரியா? பிரிந்து எதைச் சாதிக்கலாம் என்று எனக்குப் புரியவில்லை. விடுதலைப் புலிகளால் காக்கப்பட்ட ஒருமைப்பாடு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் சிதைக்கப்பட்டிருக்கிறது.

புலிகள் அமைப்பு ஒரே நாளின் தமிழர்களின் ஆதரவோடு வானத்தில் இருந்து குதித்து வந்துவிடவில்லை. உண்மையில் தமிழ் மக்கள் ஒரு அரசியல் கட்ச்சிக்கு பின்னாலை மட்டும் நிற்பதும் எதையும் கொண்டு வந்து தந்துவிட போவதும் இல்லை.

எல்லாரும் இயங்கட்டும் எல்லாவளியிலும் இயங்கட்டும். தனிச்சையாக தமிழர்களின் தலைவிதியை முடிவெடுக்கும் அருகதை கொண்ட உண்மையானவர் யாரும் இண்று இல்லை. அப்படி ஒருவரை தமிழ் மக்கள் கண்டு கொள்ளும் வரைக்கும் யாருக்கு பின்னும் நிரந்தரமாக நிற்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே, எமது அபிப்பிராயம் என்னவெனில்; த.தே.கூ மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கவில்லை, ஈழம் வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன்தான் களத்தில் நிற்கின்றார்கள். தேர்தலில் நிற்கும் த.தே.கூ அங்கத்தவர்கள் மிகவும் துணிச்சல் படைத்தவர்கள். சாணக்கியமும், சாளுக்கியமும், அரசியல் தந்திரத்துடனும், விவேகத்துடனும், துணிச்சலுடனும் தேர்தலில் நிற்கும் திரு சம்பந்தர் ஐயா அவர்களின் பழங்கள் வாழ்த்தப் படவேண்டியவர்கள். எல்லோரும் வாழ்த்துவோம். புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் ஆதரவினை த.தே.கூ க்கு அளிப்பதுதான் மிகவும் சாலச் சிறந்ததும், தார்மீகக் கடமையும் கூட என்பது எமது அபிப்பிராயம்.

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

“சிந்தனை அற்ற செயல் முட்டாள்தனம்

செயலற்ற சிந்தனை சோம்பேறித்தனம்.”

நல்லது. தங்களது அபிப்பிராயப்படி த.தே.கூ. தாயகத் தமிழர்களின் அமோக ஆதரவுடன் தேர்தலில் வென்று எமது மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தரும்.

அவர்கள் அமோக ஆதரவுடன் வெல்வார்களா என்ற கேள்வி இருந்தாலும், அதைப் பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வரமுன்னரே தேர்தல் முடிவுகள் வந்துவிடும்.

எனவே அதைவிடுத்து த.தே.கூ. எவ்வாறு தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்று விளக்கினால் நல்லது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனப்படி தமிழர்களுக்கு பெற்றுத் தரவுள்ள தீர்வு, வட-கிழக்கு இணைந்த நிரந்தரமான தாயகம், தேசியம், சுய நிர்ணய உரிமை (இதற்குள் பிரிந்துபோகும் உரிமையும் உள்ளது) போன்ற அடிப்படையான விடயங்களை உறுதிப்படுத்தவில்லை. மாறாக தமிழர்களின் இறமையைச் சிங்களவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் வகையில்தான் உள்ளது. அதாவது சிங்களவர்கள் தமது இறமையை தொடர்ந்தும் பேணிக்கொண்டு இருக்கத் தமிழர்கள் தங்களினதைப் பங்கிட முனைகின்றது. இந்தச் சராணகதி அரசியல்தான் த.தே.கூ. பழுத்த தலைமைகளின் இராஜதந்திர நகர்வு என்றால், அதன் மூலம் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என்று தமிழர்களை நம்பவைப்பது வெறும் ஏமாற்றுவேலையும், வெற்றுக்கோஷமுமாகவே இருக்கும்.

இப்படியான வெற்றுக் கோஷங்களால் பதவிக்கு வந்தாலும் வடகிழக்கு மாகாணங்களில் சிங்கள அரசு நிதானமாகச் செயற்படுத்திவரும் சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதும், தமிழர்களின் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் செயல்களைத் தடுத்து தேசியத்தை உரமிட்டு வளர்ப்பதும், தமிழர்களை தாங்கள் அடிமைப்பட்ட/தோல்விகண்ட இனம் என்ற உணர்வில் இருந்து வெளியே கொண்டுவருவதும் த.தே.கூ. தலைகளால் முடியாது. ஏனெனில் அவர்கள் சுயபுத்தியில் சிந்திக்காது சில சக்திகளின் கைப்பொம்மையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜனநாயகப் பண்புள்ள ஒரு கட்சியாக இருந்தால், ஒரு பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, முழுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானங்களை விவாதித்து நிறைவேற்றவேண்டும். இப்படியான உட்கட்சி ஜனநாயகம் கூட இல்லாமல், ஒரு சிலர் தங்கள் கைகளில் அதிகாரங்களை வைத்திருக்கும் கூட்டணியைத் தமிழர்களின் தலைமையாக்க முனைவது தமிழர்களை அதலபாதாளத்தில்தான் கொண்டுபோய் விடும். எனவே படகு யாத்திரைகள் தொடரத்தான் செய்யும்.

முப்பது நாப்பது வருடங்கள் அரசியலில் இருந்து எதையும் சாதிக்கமுடியாதவர்கள், அடுத்த சில வருடங்களில் எதையும் சாதிக்கப்போவதில்லை. மாறாகப் புதிய சிந்தனைகளுடன் வருவோருக்கு நந்தியாகவே இருப்பார்கள். எனவே நந்திகள் அகலும்வரை தமிழர்களுக்கு நிச்சயமான எதிர்காலம் இல்லை.

எமது தலைவரை 70 களில் வளர்த்தவர்களில் (போராட்டம்)-(மூவர்) நானும் ஒருவன்.

சிறுவனாக இருக்கும்போது பாலர் பாடசாலையில் கற்பிக்கும் குருதான் முதலில் அறிவை ஊட்டுகின்றார். எனினும் சிறுவன் வளர்ந்து மேலும் அறிவைப் பெருக்கி ஒரு விஞ்ஞானியாக வரும்போது, அவனின் அறிவைவிட தனக்குக் அதிகம் உள்ளது என்று தற்போதும் பாலர்பாடசாலையிலேயே கற்பிக்கும் குரு சொல்லுவது போலுள்ளது. உண்மையான குரு சீடனின் உயர்ந்த நிலையைப் பற்றி பெருமைப்படுவார். சீடன் தாழ்ந்திருந்தால் அதற்குத் தானும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வில் இருப்பார்.

... எனது பெற்றார் பண்போடு வளத்தனர். ....

ஆசானுக்கு

இப்படியே சொல்லிச் சொல்லி தமிழர்களை தங்களைப்போல முட்டாள்கள் 177 வருடங்கள் முட்டாள்களாக்கினார்கள்இ ஆக்குகின்றார்கள்.

உம்மைப் போன்றவர்களுக்கு நான் விடை எழுதுவது எனது நேரத்தை வீணடிப்பதாகும். தொடர்ந்து தங்களைப்போன்றவர்கள் எழுதினாலும் நான் வாசிக்கப் போவதில்லை. ஏன்? முட்டாள்கள்

எழுத்துக்கள்??

நீங்களே மார்தட்டிக் கொள்வதுபோல், "உங்கள் பெற்றோர் உங்களை எப்படி பண்புடன் வளர்த்தார்கள்" என்பது உங்கள் பதிலைப் பார்க்க நன்றாக விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் என்பவர் தனிமனிதனாக இருக்கட்டும். அதற்காக தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது சரியா? பிரிந்து எதைச் சாதிக்கலாம் என்று எனக்குப் புரியவில்லை. விடுதலைப் புலிகளால் காக்கப்பட்ட ஒருமைப்பாடு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் சிதைக்கப்பட்டிருக்கிறது.

கூட்டு என்பது கொள்கைகளின் அடிப்படையில்தான் இருந்தது. விடுதலைப்புலிகளினால் காக்கக்பட்ட கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டவர்களுடன் தொடர்ந்தும் கூட்டில் இருப்பது கொள்கைகளுக்கு விசுவாசம் காட்டுவதைவிட்டு, தலைமைகளைக்கு விசுவாசம் காட்டுவதாகத்தான் அமையும்.

கொள்கைகளை இறுகப்பற்றியதனால்தான் விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்கால் வரை சென்று நந்திக்கடலில் ஒட்டுமொத்தமாக முடிந்துபோனார்கள். கொள்கைகளை விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கைவிட்டிருந்தால், நாம் இன்று த.தே.கூ.வைப் பற்றி விவாதிக்கவேண்டிய தேவை இருந்திருக்காது.

22 பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தோடு இருந்த த.தே.கூ. முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தடுக்கக் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை. எனவே ஒருமைப்பாட்டைப் பேணிக்கொண்டு இவர்களால் எதுவும் செய்யமுடியும் என்று நம்புவது வீண்.

விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் தமிழர்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலையில் உள்ளனர். தத்தளிப்பவனுக்குப் பற்றிக்கொள்ளக் கிடைக்கும் பலகைத்துண்டு போல சிலர் த.தே.கூ.வை பார்க்கின்றார்கள். எனினும் தத்தளிப்பவன் பார்வையில் தெரியும் பலகைத்துண்டு உண்மையில் ஒரு முதலை என்பதுதான் எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

ததே கூட்டமைப்பு உடைந்ததற்குக் காரணம் ததேகூட்டமைப்பின் தலைமைதான் இந்தத் தலமையை மீண்டும் தெரிவு செய்வது முட்டாள்தனமாகும். ஒரு கூட்டமைப்பை;பை உறுதியாகப் பேண முடியாத தலமை தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் என்று சரியாகச் சிந்திக்கும் எந்தத் தமிழ்மகனும் நம்ப மாட்டான்.சம்பந்தன் ஆயுதப் போராட்டகாலத்திற்கு முந்திய அரசியல்வாதி.ஆயுதப் போராட்டத்திற்கு முன்பும் தமிழரின் தீர்வு தொடர்பாக எதையும் செய்ய வில்லை.ஆயதப்போராட்டத்தின் போதும் காத்திரமான முறையில் பங்காற்றவில்லை.இனியும் எதையும் அவரால் சாதிக்கப் போவதுமில்லை.மாறாக தமிழரின் பிரதிநிதித்துவம் திருமலையில் கேள்விக்குறியாக இருப்பது.தேசியப் பட்டியல் மூலம் கிடைக்கக் கூடிய ஆசனத்தை ஏற்கனவே இழந்து விட்டது போன்றவைதான் அவர் இதுவரை சாதித்த சாதனைகள்.அதாவது தமிழரை படுகுழியில் தள்ளியதுதான் அவருடைய அரசியல் ஆளுமையின் வெளிப்பாடு.அவருக்குப் போதுமான சந்தர்பத்தைத் தமிழினம் கொடுத்து விட்டது. பாராளுமன்றக் 30 வருடங்களாக கதிரையைச் சூடேற்றியது போதும்.இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வதே தமிழர் நலன் குறித்துச் சிந்திக்கும் அரசியல்வாதிக்கு அழகு.

தமிழீழத் தேசியத் தலைவருக்கு வழிகாட்டியவர்(சாண்டில்யன்) தலைவர் தவறுகளைச் செய்து விட்டார் என்று சொன்னால் அது வழிகாட்டியவரின் தவறு தானே. நாங்கள் தான்(சாண்டில்யன்) தலைவரை வழிநடத்தினோம் என்று சொல்வதை நம்ப தமிழர்கள் ஒன்றும் இளிச்ச வாயர்கள் இல்லை.

நான் எனது அபிப்பிராயத்தை ஆராய்ந்து என்னுடைய கருத்தை எழுதியிருந்தேன். அதற்கு நீர் கோபப்பட்டு பண்பில்லாமல் எழுதுகின்றீர். எனக்கும் பண்பில்லாமல் எழுதத்தெரியும். ஆனால் எனது பெற்றார் பண்போடு வளத்தனர். நான் எனது கருத்தை ஒருவருக்கும் திணிக்கவில்லை. எனது கருத்துத்தான். உமக்கு பிடிக்கவில்லை யென்றால் அதை விட்டுவிடவேண்டும்.

நீர் தான் உமது கருத்தை என்மேல் திணிக்க முயலுகின்றீர்.

இதுவரை பண்பாக யார் எழுதிவருகின்றார்கள் என்றும் தவிர யார் திணிக்கின்றார்கள் என்பது இங்கு வாசிப்பவர்களுக்கு தெரியும் சாண்டில்யன் உமது பெற்றோர்கள் வளர்த்த இலட்சணம் தெரிகின்றது

நீர் ஏழு வருடத்திற்கு முன்புதான் பிரச்சாரம் என்ற பெயரில் நுழைந்தீர். உம்முடைய சரித்திரமே எனக்குத் தெரியும்.

நீர் உண்மையிலே உமது பெற்றோருக்கு பி******ல் நிரூபியும் அதை விட்டு விட்டு உம்முடைய சரித்திரமே எனக்குத் தெரியும் நான் தான் புலிகளை வளர்த்தேன் என்று கோசம் போடாதீர் சவால் விடுகின்றேன்

வே.பிரபாகரனும் இதே பிழையைத்தான் விட்டார். முட்டாளைப்போல முடிவெடுப்பதும்இ அதன்பின் வேதனைப்படுவதும் அவருக்கு வியாதியைக் கொடுத்தது. உமக்கும் இரத்தக்கொதிப்பு என்பது எமக்குத்தெரியும்.

என்ன ஒரு தேசிய உணர்வாளர்

கயேந்திரனுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள் அவரால் தான் இங்கே சம்பந்தர் வாதிகளை இனம் காண முடிந்திருக்கின்றது உங்களைப் போன்ற சிலருக்கு யாழ் இணையம் மலம் கழிக்கும் இடம் போலும்

இப்படி எழுதிய ஒருவரின் கருத்தை நிர்வாகம் தூக்கியது அதனால் தான் அவர்கள் இன்னும் புலிவேடத்துடன் யாழில் உலா வருகின்றார்கள்

உமக்கு கருத்துகள் எழுதவேண்டுமென்றால்இ நீரே தயவு செய்து எழுதலாம். மற்றவர்களை அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து அடக்க முயலவும் வேண்டாம்இ உமது கருத்தை திணிக்க முயலவும் வேண்டாம். இது நல்லூருமல்லஇ அராலியும் அல்லஇ இது புலம் பெயர்ந்த நாடு. யாழில்தான் உந்துவலி முறையிலும் தாதா முறையிலும் மக்களை அச்சமூட்டி தங்கள் வழிக்குக் கொண்டுவர முயலுவார்கள். அதனால்தான் எல்லோரும் படகு யாத்திரை. மற்றவர்கள் எழுதும் கட்டுரைகளைக் காப்பி பண்ணுவதை தவிர்த்தால் நல்லது?? ஒரு அபிப்பிராயம். திணிக்கவில்லை??

ஆகா என்ன ஒரு பண்பு :(

குளிசையைப் போட்டால் நல்லது. இரத்தக்கொதிப்புக் குறையும்.

முதலில் நீர் ஒரு மனநோயாளி முதலில் மனநோய்க்கு மருந்தெடுக்கவும்

உம்மைப் போன்றவர்களுக்கு நான் விடை எழுதுவது எனது நேரத்தை வீணடிப்பதாகும். தொடர்ந்து தங்களைப்போன்றவர்கள் எழுதினாலும் நான் வாசிக்கப் போவதில்லை. ஏன்? முட்டாள்கள்

எழுத்துக்கள்??

இதை எத்தனை பேருக்கு பிரதி பண்ணுகின்றீர்கள் இப்படிச் சொல்லிச் சொல்லித் தான் நழுவி வருகின்றீர்கள் நீர் வாசிக்கவேண்டும் என்று எழுதவில்லை ஆனாலும் நீர் வாசிக்காமல் இருக்கமாட்டீர் அது உமது மனநோய் :(

  • கருத்துக்கள உறவுகள்

:) தமிழ்க்குரல்,

இங்கே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உங்கள் மேல் தனிப்பட்ட ரீதியாக முன்வைக்கப்படுவதாக பாசாங்கு செய்யப்பட்டாலும் உண்மையிலேயே தேசியத்தலமையை தாக்கித்தான் முன்வைக்கப்படுகிறதென்பது தெளிவாகிறது.

இதை எழுதுபவர் சம்பந்தரின் கையாகக்கூட இருக்கலாம். ஆகவே எமது நியாயங்களை அவர்கள் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஆனால், பழமை களைந்து புதியவை உருவாகும் நேரமிது. வரலாறு இவர்களைக் குப்பைக்கூடைக்குள் கூட்டித்தள்ளும்.அவர்களுக்கே இது நன்கு தெரியும்.

நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் செய்வது சரியே.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.