Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு

Featured Replies

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு

“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” தாயக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் “கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்” அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

“தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” ஆதரவு திரட்டும் மற்றொரு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தினை கடந்த வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் கனடா கந்தசுவாமி கோவிலில், கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடத்தியிருந்தது. இவ்வாறானதொரு கொள்கை விளக்க, மற்றும் ஆதரவுப் பொதுக்கூட்டம் கடந்த 27ஆம் நாளும் கனடாவில் இடம்பெற்றிருந்தது.

“இப்போழுது விழுந்தால் இனி எப்பொழுதும் எழ முடியாத, உண்மையான தேசியத்தின் புதல்வர்களை நாடாளுமன்றம் அனுப்புவோம்” என்ற முழக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், தமிழ் மக்கள் தமது அடிப்படைக் கொள்கைகளில் ஏன் வலுவாக நிற்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தற்பொழுதும், கடந்த காலத்திலும் மேற்கொண்டுவந்த தவறான நடவடிக்கைகள் பற்றியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் எடுத்து விளக்கினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான எஸ்.திருச்செல்வம், “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” ஏன் ஆதரவளிக்க வேண்டும் என்பதை எடுத்து விளக்கியதுடன், தவறினால் ஏற்பாடும் பாதகங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

அத்துடன், யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் காணொளி வழியாக வழங்கிய சிறப்புக் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றிருந்தது.

இவரைத் தொடர்ந்து உரையாற்றிய “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” கனடா இணைப்பாளர் மதியழகன், இந்தக் கட்சியின் வெற்றியும் அதன் முக்கியத்துவமும் பற்றிக் கூறியதுடன், ஊடக, நிதி பலம் இன்றி தேர்தலில் களமிறங்கியுள்ள “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” www.tamilnationalpf.org என்ற இணையத்தளம் ஊடாக மக்கள் தமது நிதிப் பங்களிப்பினை வழங்க வேண்டும் என கோரிக்கை வடுத்துள்ளார்.

http://www.pathivu.com/index.php/news/6219/54//d,view/

8ம் திகதி விழுந்தாப்பிறகு என்ன செய்யப்போறீங்கள்.... மொட்டாக்கு போட்டுக்கொண்டு திரியப்போறியளோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் என்ன சொன்னாலும் என்ர வாக்கு கனகரத்தினம் ஐயாவுக்குத்தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியும் தோல்வியும் மனம் எனும்

தாய் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகள்

வாத்தியார்

..............

8ம் திகதி விழுந்தாப்பிறகு என்ன செய்யப்போறீங்கள்.... மொட்டாக்கு போட்டுக்கொண்டு திரியப்போறியளோ

அப்ப 100% வெல்லப்போறியள் எண்டுறீயள்.... அதுக்கு பிறகு யாழுக்கை என்ன பெயரிலை வாறியள் எண்டு பாக்கலாம்...

யாழ்ப்பாணத்திலயும் மட்டக்களப்பிலயும் வன்னியிலயும் கூட்டமைப்புத்தான் கூட வோட்டெடுக்கும். திருகோணமலையிலயும் அம்பாறையிலயும் ஒவ்வொரு ஆசனம் எடுக்கும். இத உங்களால மறுக்கேலுமோ

என்னப்பா இது.

கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கச்சொல்லுது.

அனால் உலகத்தமிழர் பேரவை இரண்டு கட்சிகளையும் ஒன்றாகும்படி சொல்லுது.

அதாரம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5619

ஆக ஊரில்தான் பிரிஞ்சு நிக்கிறார்கள் என்றில்லை புலத்திளையும்தான்... அதாவது புலத்து அமைப்புகள் கூட ஆளுக்கு ஒரு பக்கம் திரியுதுகள்.

ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு இலாபம்..

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளியண்ணை

இங்கு பிரான்சிலிருந்தும் அறிக்கை ஒன்று வந்திருக்கு..

நான் ஆராய்ந்ததில்.. இன்னும் கூட்டமே போடல..

அறிக்கை மட்டும் வந்திருக்கு.

இப்படித்தான் அண்ணை எல்லாம்

இதெல்லாம் பெரிய இடத்து விடயமாகிவிட்டது

ஆனால் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்

அவர்கள் தங்கள் வாழ்வதாரங்களை வைத்தே முடிவுகளை எடுக்கின்றார்கள்.

ஆனால் பெரிசுகள் வாய் அவதாரங்களையும் முடி அவதாரங்களையும் கதிரை அவதாரங்களையும் ஒன்றாய்ப்போட்டு குளப்பியண்ணை..

இப்ப தாங்களே குளம்பி .... பல குழுக்களாகி .....நிற்கினம்

அது அவை அவையின்ர பிரச்சினை.....

அதுக்கு நாங்கள் தலையைக்குடுத்தால்...

நாங்களும் ......

அதனால எம்மால் முடிந்த அளவுக்கு மக்களுடைய சொல்லைக்கேட்டு அவையின்ர தேவைகளை நிறைவு செய்வம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு

உத நேரடியா திருகோணமலையில சொன்னீங்களெண்டா....சம்மந்தர் ஐயாவ ஈசியா வெல்லப்பண்ணிப்போடலாம். :)

சொன்னா அது சரியாகத் தான் இருக்கும்.எத்தனை தமிழரின் வாழ்க்கையும் கெடுத்து பின் உண்ட வீட்டிலெயே களவும் எடுத்க ஆளல்லோ.

Edited by arjun

தமிழ் கனேடிய பட்டதாரிகன் சங்கம் என்று ஒரு அமைப்பு உள்ளது

Tamil Canadian Graduates Association

இது அரசியலில் சம்பந்தப்படாது நடுநிலை பேணும் அமைப்பு. ஆனால் இதன் பெயரை பாவித்து கூட்டமும் நடத்தி அறிக்கையும் விடுகிரார்கள்?

தமிழ் கனேடிய பட்டதாரிகள் சங்கம் (TCGA) இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட கட்சியினை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு எந்த ஒரு அறிக்கையினையும் விடவில்லை

தமிழ் கனேடிய பட்டதாரிகள் சங்கம் (TCGA Reg.No 1792481) இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட கட்சியினை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவோ அல்லது தேர்தலில் யாரையும் ஆதரிக்க வேண்டும் என்றோ எந்த ஒரு அறிக்கையினையும் விடவும் இல்லை என்பதனை மிகத் தெளிவாகவும் திட்ட வட்டமாகவும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அண்மையில் பத்திரிகை, வானொலி, இணையத் தளங்கள் போன்றவற்றில் மக்கள் தப்பாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக எமது அமைப்பின் பெயரை முன்னுக்குப் பின் மாற்றம் செய்து எமது அமைப்பின் பெயரால் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. இது அந்த அறிக்கைக்கும் எமக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை. என்பதயும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று எமது மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதே எமது நோக்கம்.

தமிழ் கனேடிய பட்டதாரிகள் சங்கம் Tamil Canadian Graduate Association (TCGA) ஈழத்திலும் சரி புலத்திலும் கட்சி அரசியல் சார்பாக எந்த நிலைப்பாட்டுடன் இல்லை என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது உறுப்பினர்கள் தமது விருப்பத்திற்கேற்ப அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது அவர்களது தனிப்பட்ட முடிவுகள் ஆகும்.

நாங்கள் யார்?

நாம் தமிழ் கனடிய பட்டதாரிகளின் ஓர் அமைப்பு . கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் ச்ட்டபூர்வமக பதிவு செய்து இயங்கும் இலாப நோக்கற்ற ஒரு சமூக அமைப்பு. எமது பதிவு இலக்கம் (Reg.No): 1792481 .(Tamil Canadian Graduates Association (TCGA) is a Not-for-Profit Organization). எமது இணய முகவரிகள்;

www.tamilgraduates.ca , www.justice4tamils.com

யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணம், பேராதனை, மொரட்டுவா, கொழும்பு, இந்தியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கல்விப்பீடங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் கல்வி கற்ற, கற்பித்த தமிழர்களின் அமைப்பு. எம்முடன் info@tamilgraduates.ca என்னும் மின்ன்ஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

எமது நோக்கம்

தற்போது ஈழத்தில் இருக்கக் கூடிய போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவிகளை வழங்குவதும்.

வெளிநாடுகளில் ஊடகங்கள், அரசியல்வாதிகள், பொது மக்கள் ஆகியோருக்கு ஈழத்தமிழர்கள் சார்பாக குரல் கொடுப்பதும்.

உள்ளூர் வெளியூர் தொண்டர் நிறுவனங்களுடன் இணைந்து எமது மக்களுக்கு உதவுவதும்.

இதுவரையில் நாம் என்ன செய்துள்ளோம்

“Justice4tamils” என்ற உப அமைப்பினை உருவாக்கி ஈழத்தமிழ் மக்கட்கு நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அவலங்களை வெளி உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றோம்.

http://www.justice4tamils.com/campaign.aspx

இதன் செயற்பாட்டிற்காக Billboard Campaign at Yonge/Bloor, St.George Subway station. June 2009

50,000 flyers titled “ Refugee camps in SriLanka”, “Pray for us”, “Save Us” இத் துண்டுப் பிரசுரங்கள் ரொரன்ரோ, ஒட்டாவா, வாஷிங்டன் ஆகிய நகரங்களில் விநியோகிக்கப் பட்டன.

2000 துண்டுப் பிரசுரங்களை கனடா, அமெரிக்கா, ஐ. நா சபை ஆகிய இடங்களில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.

ஒட்டாவா நகரத்தின் 75 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் உட்புறத்தில் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் “Speak for silenced” என்ற விளம்பர (Page4).சட்டங்களை செப்ரெம்பர்29 – ஒக்டோபர் 29 இல் அநுமதிபெற்று செய்திருந்தோம்.

நவம்பர் 18 தொடக்கம் டிசம்பர் 14 வரையில் Ottawa Metro நாளிதளில் 5 விளம்பரங்களை பிரசுரம் செய்தோம். (pages 5,6,7,& 8)

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்த க.பொ.த உயர்தர மாணவ மாணவியர்க்கு பிரதியாக்கிகளையும்(Photo copy machine), தாள்களையும் கொழும்பு தமிழ் சங்கங்கத்தினூடாக கொடுத்து மாணவ மாணவியர்க்கு க.பொ.த உயர்தர பரீட்சை தயார் படுத்தலுக்கு உதவி புரிந்தோம்.

போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு Children aid Rehabilitation and Education Program ( CREP) மூலமும் இடம் பெயர்க்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களுக்கு வாழ்வாதர அடிப்படை உதவிக்காக கத்தோலிக்க நலன்புரி சமூகம் அமைப்பின் மூலமும் மொத்தமாக $12,000 டொலர்களையும் கொடுத்து உதவியுள்ளோம்.

இனியும் தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்துக்கு துணையாக பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம். அவற்றில் சில

போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் உள்ள கிணறுகளை துப்புரவு செய்து அவற்றை பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்தக் கூடிய நிலைக்கு கொண்டுவருதல்.

போரினால் அழிக்கப்பட்டிருந்த வீடுகளைக் கட்டுவதற்குத் தேவையான சீமேந்து கற்களை உருவாக்கும் குடிசைக் கைத்தொழிலை உருவாக்குதல் போன்றன.

மெழுகுவர்த்தி உருவாக்கும் தொழிற்சாலை (குடிசைக் கைத்தொழிலை)

மீன்பிடி வலை உருவாக்கும் தொழிற்சாலை

இவற்றினை எவ்வாறு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் எனபது பற்றிய எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஏப்ரல் 11ம் திகதி West shore community center,1011-1015 Bayly St. West Pickering, ON., L1W 1L3 View MapQuest Map இல் நடைபெற இருக்கும் நிகழ்வில் பங்கு பற்றி எங்கள் முயற்சிகளுக்கு உங்களது அதரவினை வழங்குங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேம். உங்கள் ஆதரவில் தான் மேற்கொண்டு எமது பணி தொடர இருக்கின்றது.

Edited by rajcan

அப்ப பதிவு இணையத்தளம் பொய் செய்தியை போட்டுதோ.....

கனேடிய தமிழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் அமைப்பின் அறிக்கை

குறிப்பிட்ட ஒரு இணைய செய்தித்தளம் எமது அமைப்பை ஒத்த பெயருடைய இன்னொரு அமைப்பிடமிருந்து ஒரு நடுநிலை அறிக்கையை பெற்று, ஏதோ அந்த அமைப்புத்தான் உண்மையான அமைப்பு போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்கின்றது.

எமது அமைப்பின் செயற்பாடுகளிட்கும் அவ் அமைப்பின் செயற்பாடுகளிட்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அப்படி சம்பந்தம் இருப்பதாக நாம் எங்குமே கூறியதும் இல்லை. எமது அமைப்பு கனேடிய பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே அங்கத்தவர்களாக கொண்டது. எமது செயற்பாடுகள் பற்றி கனேடிய தமிழ் வானொலியில் தெளிவாக விளக்கியிருந்தோம்.

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை, ...............

தேர்தல் முடிந்தாலும் அறிக்கை போர் முடியாது போல!

எமது அமைப்பு கனேடிய பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே அங்கத்தவர்களாக கொண்டது

என்று கூறியுள்ளர்கள். தமது அமைப்பை தமிழில் "கனேடிய தமிழ் பல்கலைக்கழக பட்டதாரிகள்" என்று கூறுகிறார்கள். அவர்களது இலைச்சனை "TUGO"(TAMIL UNIVERSITY GRADUATE ORGANIZATION? - தமிழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் அமைப்பு என்ட்று கொள்ளலாம்). கனேடிய சொல்லை காணவில்லை? தமிழுக்கு பின் தொக்கு நிற்கிறதோ? கூகிள் தேடலில் TUGO விற்கு சைவர்!

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் ........

பகுத்து அறிக!

அப்பாடியோ

போதுமடா சாமி... இனிமேலாச்சும் இப்பிடி செய்யாமல் இருங்கோ...

ஊரில சனங்கள் வாக்களிச்சதுங்க்களும் அளிக்காததுகளும் சரி அவர்களுக்கு இருக்கும் பிரச்னையை புலத்தில் இருப்பவர்கள் கொஞ்சமெண்டாலும் விளங்குவது நல்லது.

இனியும் நீங்கள் திருந்தாவிட்டால் நிலத்துக்கும் புலத்துக்கும் இடையில் வரும் இடைவெளியை தடுக்க முடியாது.

சூறாவளி அண்ண இதை நீங்கள் இஞ்சை இருக்கிற சிலதுகளுக்கு நூறு முறை சொன்னாலும் புரியாதுகள். இனிமேலாவது யதார்த்தத்தை புரிஞ்சு கொண்டு தாயகத்தில் உள்ள மக்களின் மனஉணர்வுகளை புரிந்து கொண்டு நடவுங்கோ

சூறாவளி அண்ண இதை நீங்கள் இஞ்சை இருக்கிற சிலதுகளுக்கு நூறு முறை சொன்னாலும் புரியாதுகள். இனிமேலாவது யதார்த்தத்தை புரிஞ்சு கொண்டு தாயகத்தில் உள்ள மக்களின் மனஉணர்வுகளை புரிந்து கொண்டு நடவுங்கோ

என்னமன உனர்வு எல்லம் மூடுங்கோ எண்டு தான் சொல்லுகினம்.

என்னமன உனர்வு எல்லம் மூடுங்கோ எண்டு தான் சொல்லுகினம்.

இல்லை

நடைமுறைக்கும் உணர்வுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கச் சொல்லினம்.

இன்றும் நிலத்தில் தாயகக் கனவை எல்லோரும் கைவிடவில்லை. ஆனால் அதுக்கான காலம் இதுவல்ல என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. அனால் புலத்தில் நிலைமை வேறு... எமது பணியை நாம் செய்தால் நிச்சயமா சரியான இடத்தில் சந்தித்து பயணிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்திலயும் மட்டக்களப்பிலயும் வன்னியிலயும் கூட்டமைப்புத்தான் கூட வோட்டெடுக்கும். திருகோணமலையிலயும் அம்பாறையிலயும் ஒவ்வொரு ஆசனம் எடுக்கும். இத உங்களால மறுக்கேலுமோ

:rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

சொன்னா அது சரியாகத் தான் இருக்கும்.எத்தனை தமிழரின் வாழ்க்கையும் கெடுத்து பின் உண்ட வீட்டிலெயே களவும் எடுத்க ஆளல்லோ.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த ஆட்கள் சோத்துபாசல்கள் தான். இப்போ யாரென்று விளங்கும். :rolleyes::wub:

யாழ்ப்பாணத்திலயும் மட்டக்களப்பிலயும் வன்னியிலயும் கூட்டமைப்புத்தான் கூட வோட்டெடுக்கும். திருகோணமலையிலயும் அம்பாறையிலயும் ஒவ்வொரு ஆசனம் எடுக்கும். இத உங்களால மறுக்கேலுமோ

டாம் சொன்னா சொல்லு தான். :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.