Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உருக்கும் உண்மைகள் 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே குட்டியண்ணா

வன்னி மண்ணில் எந்தக் கவலைகளும் இன்றி எதிர்காலம் பற்றிஎந்தவொரு சிந்தனைகளுமற்று துள்ளித்திரிந்த சிறுமிதான் சியாமளா ... சியாமளாவிற்கு இன்று வயது ஒன்பது இன்று அவளது குடும்பத்தில் யுத்தம் தாயாரை பலியெடுத்துவிட தந்தையோ வேறு திருமணம்செய்து கொண்டு பிள்ளைகளை கைவிட்டு சென்றது மட்டுமல்ல அவளது மூத்தசகோதரனோ மண்ணிற்காக போராடிய குற்றத்திற்காக இன்று தடுப்பு முகாமில் வாடுகின்றான். இவளது அடுத்த அண்ணன்தான் குட்டியண்ணா. சியாமளாவிற்கு குடும்பத்தில் மிகவும் பிடித்தஒரு உறவு இரண்டாவது குட்டியண்ணாதான்.அப்பா அம்மா இல்லாத குறையை குட்டியண்ணாவே போக்கினான். குட்டியண்ணா பாடசாலைக்கு சென்றாலென்ன கோவிலுக்கு சென்றாலென்ன. விழையாடச்சென்றாலென்ன குட்டியண்ணாவின் கைகளைப்பிடித்தபடி சியாமளா தொங்கிக் கொண்டே செல்வாள்.தன்னுடைய குடும்பத்தில் உள்ள மற்றைய சகோதர சகோதரிகளைப்பற்றி அவளிற்கு கவலையே இல்லை. இறுதி யுத்தத்த மேகங்கள் வன்னி மண்ணை முடிக்கொண்டபொது வானில் குண்டு வீச்சு விமானங்களின் சத்தம் கேட்டபோதெல்லாம் குட்டியண்ணா முதலில் தேடுவது இவளைத்தான் இவளையும் தூக்கியள்ளிக்கொண்டு ஓடிப்போய் பங்கரிற்குள் (பதுங்குகுழி)தள்ளி பாதுகாத்துக்கொள்வான்.

ஆனால் இராணுவம் முன்னேறிவர இவர்களது வீடும் காணியும் பதுங்கிய பங்கரும் பறிபோக எங்கே போவதென்று தெரியாமல் போய்க்கொண்டிருந்த குடும்பத்துடனருடன் குட்டியண்ணாவின் கைகளை பிடித்தபடி போய்க்கொண்டிருந்தாள் சியாமளா.முற்றுகைக்குள் வீழ்ந்த முல்லைத்தீவு மண்ணில் முடங்கிப்போன மக்களில் இவர்களும் அடங்கினர்..இறுதி யுத்தம் குண்டுச்சத்தங்களும் அவலக்குரலும். மரண ஓலங்கள் மட்டுமே செவிகளில் கேட்கத்தொடங்கியிருந்தது. வீட்டிற்கொருவர் போராடபோகவேண்டும் என்றிருந்த நிலைமாறி வீட்டிலிருந்த அனைவருமே போராடவேண்டும் என்கிற நிலையையும் கடந்து வீடு வாசல் அத்தனையையும் இழந்து முற்றுகைக்குள் முடங்கிப்போன அனைவருமே வயது வித்தியாசமின்றி போராடவேண்டும் என்கிற இறுதிக்கட்டம்..அப்படியொரு பொழுதில் அவளது குட்டியண்ணாவையும் காணவில்லை ..போய்விட்டான்...குட்டியண்ணா எங்கே என்று சியாமளா சகோதரியிடம் கேட்டு அழுதாள்...வருவார் அழக்கூடாது கெதியாய் வருவார். இதைத்தான் அவர்களால் சொல்ல முடிந்தது..ஒரு நாள் இரண்டு நாட்களாகி. சிலவாரத்தில் முள்ளிவாய்க்காலும் வீ்ழ்ந்துபோக அத்தனை கொடிய கோர யுத்தம் எதவும் சியாமளாவை பாதிக்கவில்லைஅவளது கேள்வி தேவை எல்லாமே குட்டியண்ணாவைப்பற்றியதாகத்தான் இருந்தது. அவளின் நச்சரிப்பு தாங்கமுடியாமல்..குட்டியண்ணா வெளிநாடு போயிருக்கிறார்..எங்களுக்கு இருக்க வீடு பிள்ளைக்கு நல்ல உடுப்பு விரும்பின சாப்பாடு எல்லாம் வாக்கக்கூடியமாதிரி உழைச்சு நிறைய காசோடை திரும்பிவருவார்.அதுவரைக்கும் அழக்கூடாது என்றொரு பொய்யை சொல்லி சியாமளாவை தேற்றி வைத்திருக்கிறார்கள் அவளது சகோதரிகள்..

குட்டியண்ணா இன்று உயிருடன் இருக்கின்றானா??அல்லது ஏதோவொரு இரகசிய இராணுவத்தடுப்புமகாமில் வாடுகின்றானா என்பது எவரிற்கும் தெரியாது. சியாமளா சகோதரிகளுடன் மணல்காடு அகதி முகாமில் குட்டியண்ணா வெளிநாட்டிலிருந்து திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறாள். முகாமிற்கு தொலைபேசிமூலம் சியாமளாவுடன் கதைத்தபொழுது அவள் என்னிடம் கேட்டது மாமா நீங்கள் வெளிநாட்டிலை இருந்துதானே கதைக்கிறீங்கள் உங்களிற்கு குட்டியண்ணாவை தெரியுமா???என்பதுதான்.அப்பொது எனக்கு சியாமளாவின் கதை முழுதுமாகத்தெரியாததால் நானும் தட்டுத்தடுமாறி "பிள்ளை வெளிநாடு பெரிய இடம் இஞ்சை உங்கடை குட்டியண்ணாவை தேடுறது கஸ்ரம் ....கண்டு பிடிச்சால் உங்களோடை கதைக்க வைக்கிறேன்.என்று சொல்லி முடித்தேன்.பின்னர் அவளது சகோதரி முழுவிபரங்களும் சொன்னபொழுதுதான். சியாமளாவின் குட்டியண்ணா வெளிநாட்டில் எங்காவது கிடைக்கமாட்டானா என்கிறதொரு நப்பாசை எனக்குள் தோன்றியது..இப்படி பலநூறு சியாமளாக்கள் தங்கள் குட்டியண்ணாக்களின் வருகைக்காக எதிர்பார்த்து அந்த முகாம்களில் வாடிக்கிடக்கிறார்கள்..எங்களால் குட்டியண்ணாக்களாக மாறமுடியாது ஆனால் குட்டியண்ணா உயிருடன் இருந்தால் என்னென்ன தன் தங்கைக்கு செய்வாரோ அதையாவது எம்மால் செய்ய முடியுமல்லவா????????

சியாமளா என்கிற சிறுமியின் குரலை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.

குட்டியண்ணாவின் வருகைக்காகக் காத்திருக்கும் சியாமளா

shiyamala-1.png

Edited by sathiri

உடல் ஊனமுற்ற கையோட புருசனை விட்டுட்டு ஓடுகிற மனுசி, மனுசி செத்த உடனை பிள்ளைகளை விட்டுட்டு ஓடுற புருசன்... வெளிநாட்டு கலாச்சாரத்தை காறித்துப்புற நமட ஆக்கள்... கொஞ்சம் ஊருக்கையே நம்மளச் சுத்தி என்ன நடக்கிது, நாங்கள் என்ன செய்கிறம், நம்மட ஆக்களின்ட கலாச்சாரத்தை கண்ணாடியில பார்க்கிறது நல்லதோ..? வெளிநாட்டிலையாவது பரவாயில்லை.. விவாகரத்து செய்தாலும்.. விட்டுட்டு ஓடினாலும்.. பெற்றோர் சட்டரீதியாய் பிள்ளைகள், துணையுக்கு பொருளாதார ஆதரவு கொடுக்கவேண்டிய கடப்பாடு உள்ளவர்களாய் இருக்கிறீனம். ஆனால்.. ஊரிலை.. ?

அந்தக்குழந்தையின் குரலைக்கேட்டேன் கண்ணீரே வந்துவிட்டது பவம் எந்தவித அரசியல் விழையாட்டுக்களும் தெரியாத அப்பாவிக் குழந்தை அது தனக்கு கிடைத்த உதவிக்கு நன்றிதெரிவித்திருக்கின்றது. பல புனை கதைகளிற்கு பக்கம் பக்கமாய் பாராட்டும் பதிலும் எழுதும் எமக்கு ஒரு குழந்தையின் உண்மை கதைக்கு அதன் குரலைக்கேட்ட பின்னரும் அதற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஒரு கருத்தாவது எழுதமனம்வராது போகின்ற அளவிற்கு எம்மிடம் இன்னமும் மனிதம் செத்துப்போய்விடவில்லை அந்தக் குழந்தை நன்றாக இருக்க இறைவன் அருள்புரிவாராக.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் மனிதம் செத்துப்போய்விடவில்லை அந்தக் குழந்தை நன்றாக இருக்க இறைவன் அருள்புரிவாராக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடல் ஊனமுற்ற கையோட புருசனை விட்டுட்டு ஓடுகிற மனுசி, மனுசி செத்த உடனை பிள்ளைகளை விட்டுட்டு ஓடுற புருசன்... வெளிநாட்டு கலாச்சாரத்தை காறித்துப்புற நமட ஆக்கள்... கொஞ்சம் ஊருக்கையே நம்மளச் சுத்தி என்ன நடக்கிது, நாங்கள் என்ன செய்கிறம், நம்மட ஆக்களின்ட கலாச்சாரத்தை கண்ணாடியில பார்க்கிறது நல்லதோ..? வெளிநாட்டிலையாவது பரவாயில்லை.. விவாகரத்து செய்தாலும்.. விட்டுட்டு ஓடினாலும்.. பெற்றோர் சட்டரீதியாய் பிள்ளைகள், துணையுக்கு பொருளாதார ஆதரவு கொடுக்கவேண்டிய கடப்பாடு உள்ளவர்களாய் இருக்கிறீனம். ஆனால்.. ஊரிலை.. ?

எனக்கென்னமோ வெளிநாட்டிலை கொஞ்சப்பேர்தான் கலாச்சாரத்தை கட்டிப்பிடிச்சு கொண்டு கதறுகிற மாதிரித்தெரியிது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில காலம் யாழில் அவ்வப்போது எழுதினாலும் தற்போது ஒருவிதமான நேரப் பிரச்சனையில் உள்ளதால் கிட்டத்தட்ட முற்று முழுதாகவேஹு எழுதுவதை நிறுத்தி விட்டேன்..

இந்த பிள்ளையின்/இவரை போன்றவர்களினது பிரச்சனை எங்களுக்கு பெரிதாக, அல்லது ஒரு கவனத்துக்குரியாதாக இல்லாமால் இருப்பதர்ற்கு காரணம், ஒன்று நாங்கள் அல்லது எங்களில் பலர் இதேபோன்ற நிலைமைகளை கடந்து/கவனித்து வந்திருப்போம் அல்லது கடக்க முயற்சி செய்து கொண்டிருப்போம். ஆதலால் இவை எங்களுக்கு ஒரு செய்தியே அல்ல...ஆனால் இதுவே ஒரு அரசியல் சார்ந்த பிரச்சனையாக இருந்தால் கூட்டுச்சேர்ந்து உரக்க குரல் கொடுப்போம். எங்களில் பலருக்கு ஊரில் இந்தியர் உடன் அல்லது புலம் பெயர் தேசத்தில் இந்தியர்,சீனாகாரர் பழக மிக கடினப்பட்டிருப்போம், (விதி விலக்குகள் இருக்கலாம்) அடிப்படை என்னவென்றால் அவர்கள் வளர்ந்து வந்த வருகின்ற சமுதாயம் மிக கடினாமானது, அதில் இருந்து ஒருவர் முன்னுக்கு வருவது என்றால் மற்றவனை தள்ளி விழுத்தி முண்டியடித்து தான் வரவேண்டும், அது அவர்களுக்கு இயல்பானது, ஆனால் அதை எம்முடன் பழகி விட்டு ஒரு நாள் / ஒரு கிழமை/ ஒரு வருடம் எமது கவலைஜீனங்களை, அல்லது வேறு வழிகளை பாவித்து முன்னுக்கு/ அல்லது விலத்தி செல்லும் போது நாங்கள் ஏமாற்றப்பட்ட உணர்வை அடைகிறோம்/ அடைந்திருப்பீர்கள்...

ஆனால் உண்மையில் மற்றவர்களை எய்த்து வாழுகிற உணர்வு/ செயற்பாடுகள் பொதுவானவை..அல்லாவிடில் யாரும் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது..அது டார்வின் சொன்னமாதிரி "தக்கென பிழைக்கும்".. இந்த நிலைதான் இந்த சிறுமிக்கும், இவரை போன்றவர்களுக்கும் நடக்கிறது..அவர்களுக்கு உதவுவது ஆத்தில போடுவது போன்றது, அவர்களுடைய தேவைகள் மிகப்பெரியவை..ஆனால் அவற்றை முன்னெடுத்து செய்வதரற்கு யாரும் (பலரும்- எங்கும் எப்போதும் விதி விலக்குகள் உள்ளன தானே) விரும்பவில்லை.. முன்னர் சிரித்திரனில் படித்த பகிடி ஒன்று ..ஆசிரியர் (மெலிந்த) மாணவனை கேட்பார் " தம்பி அப்பா சாப்பாடு வாங்கி தாரதில்லையோ?" என்று அதற்கு அந்த மாணவன் சொல்லுவான் "அப்பா உழைக்கிறது அவர் குடிக்கவே காணாது, அதில் என்னவென்று எனக்கு சாப்பாடு தர முடியும்?" என்று ..

அது போல இங்குள்ள உழைப்புகள்( புலம்பெயர் தேசத்தின்) அவர்களை முன்னிறுத்தி செயற்படுத்தினாலும் பலவழிகளிலும் வீணாவதே உண்மை..தங்களால் இயன்ற வழிகளில் உதவுகிற நேசக்கரங்களுக்கும், இப்படியான சம்பவங்களை கதைகளாகவும் தருகிற சாத்திரிக்கும் நன்றிகளும் வணக்கங்களும்..

  • கருத்துக்கள உறவுகள்

உடல் ஊனமுற்ற கையோட புருசனை விட்டுட்டு ஓடுகிற மனுசி, மனுசி செத்த உடனை பிள்ளைகளை விட்டுட்டு ஓடுற புருசன்... வெளிநாட்டு கலாச்சாரத்தை காறித்துப்புற நமட ஆக்கள்... கொஞ்சம் ஊருக்கையே நம்மளச் சுத்தி என்ன நடக்கிது, நாங்கள் என்ன செய்கிறம், நம்மட ஆக்களின்ட கலாச்சாரத்தை கண்ணாடியில பார்க்கிறது நல்லதோ..? வெளிநாட்டிலையாவது பரவாயில்லை.. விவாகரத்து செய்தாலும்.. விட்டுட்டு ஓடினாலும்.. பெற்றோர் சட்டரீதியாய் பிள்ளைகள், துணையுக்கு பொருளாதார ஆதரவு கொடுக்கவேண்டிய கடப்பாடு உள்ளவர்களாய் இருக்கிறீனம். ஆனால்.. ஊரிலை.. ?

இவர் ஒரு வெள்ளைகாரராகத்தான் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் எமது பண்புடைய கலாச்சாரத்தை இப்படி இகழ இவரால் முடிந்திருக்காது. ஏன் வெள்ளைகாரர்கள் மனைவியை விட்டுவிட்டு ஓடுவது இல்லையோ? மனைவிமார் கணவனை கொலை செய்தே வேறு மணங்கள் செய்ததும் நடந்திருக்கின்றது.

எமது கலாச்சாரத்தை இகழும் இவருடைய கருத்து எப்படி அங்கிகரிக்கபட்டுள்ளது என்பது புரியாமலிருக்கின்றது. நிர்வாகம் கவனத்தில் எடுக்காதுவிட்டது வேதனையானது.

(வேறு வழியில்லை மற்றவனுடைய அழுக்கை காட்டிதான் நாம் சுத்தம் என்று கருதுவதற்கு பழக்கிவிட்டார்கள் அதைவிடலாம் என்றால் சண்டைக்கும் வருகிறார்கள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில காலம் யாழில் அவ்வப்போது எழுதினாலும் தற்போது ஒருவிதமான நேரப் பிரச்சனையில் உள்ளதால் கிட்டத்தட்ட முற்று முழுதாகவேஹு எழுதுவதை நிறுத்தி விட்டேன்..

இந்த பிள்ளையின்/இவரை போன்றவர்களினது பிரச்சனை எங்களுக்கு பெரிதாக, அல்லது ஒரு கவனத்துக்குரியாதாக இல்லாமால் இருப்பதர்ற்கு காரணம், ஒன்று நாங்கள் அல்லது எங்களில் பலர் இதேபோன்ற நிலைமைகளை கடந்து/கவனித்து வந்திருப்போம் அல்லது கடக்க முயற்சி செய்து கொண்டிருப்போம். ஆதலால் இவை எங்களுக்கு ஒரு செய்தியே அல்ல...ஆனால் இதுவே ஒரு அரசியல் சார்ந்த பிரச்சனையாக இருந்தால் கூட்டுச்சேர்ந்து உரக்க குரல் கொடுப்போம். எங்களில் பலருக்கு ஊரில் இந்தியர் உடன் அல்லது புலம் பெயர் தேசத்தில் இந்தியர்,சீனாகாரர் பழக மிக கடினப்பட்டிருப்போம், (விதி விலக்குகள் இருக்கலாம்) அடிப்படை என்னவென்றால் அவர்கள் வளர்ந்து வந்த வருகின்ற சமுதாயம் மிக கடினாமானது, அதில் இருந்து ஒருவர் முன்னுக்கு வருவது என்றால் மற்றவனை தள்ளி விழுத்தி முண்டியடித்து தான் வரவேண்டும், அது அவர்களுக்கு இயல்பானது, ஆனால் அதை எம்முடன் பழகி விட்டு ஒரு நாள் / ஒரு கிழமை/ ஒரு வருடம் எமது கவலைஜீனங்களை, அல்லது வேறு வழிகளை பாவித்து முன்னுக்கு/ அல்லது விலத்தி செல்லும் போது நாங்கள் ஏமாற்றப்பட்ட உணர்வை அடைகிறோம்/ அடைந்திருப்பீர்கள்...

ஆனால் உண்மையில் மற்றவர்களை எய்த்து வாழுகிற உணர்வு/ செயற்பாடுகள் பொதுவானவை..அல்லாவிடில் யாரும் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது..அது டார்வின் சொன்னமாதிரி "தக்கென பிழைக்கும்".. இந்த நிலைதான் இந்த சிறுமிக்கும், இவரை போன்றவர்களுக்கும் நடக்கிறது..அவர்களுக்கு உதவுவது ஆத்தில போடுவது போன்றது, அவர்களுடைய தேவைகள் மிகப்பெரியவை..ஆனால் அவற்றை முன்னெடுத்து செய்வதரற்கு யாரும் (பலரும்- எங்கும் எப்போதும் விதி விலக்குகள் உள்ளன தானே) விரும்பவில்லை.. முன்னர் சிரித்திரனில் படித்த பகிடி ஒன்று ..ஆசிரியர் (மெலிந்த) மாணவனை கேட்பார் " தம்பி அப்பா சாப்பாடு வாங்கி தாரதில்லையோ?" என்று அதற்கு அந்த மாணவன் சொல்லுவான் "அப்பா உழைக்கிறது அவர் குடிக்கவே காணாது, அதில் என்னவென்று எனக்கு சாப்பாடு தர முடியும்?" என்று ..

அது போல இங்குள்ள உழைப்புகள்( புலம்பெயர் தேசத்தின்) அவர்களை முன்னிறுத்தி செயற்படுத்தினாலும் பலவழிகளிலும் வீணாவதே உண்மை..தங்களால் இயன்ற வழிகளில் உதவுகிற நேசக்கரங்களுக்கும், இப்படியான சம்பவங்களை கதைகளாகவும் தருகிற சாத்திரிக்கும் நன்றிகளும் வணக்கங்களும்..

அடுத்த தலைமுறையினரிற்கு கல்வியினை வழங்குவதே எம்முடைய நோக்கமாகும்..இதில் வேறு எதிர்பார்ப்புக்கள் எதுவும் கிடையாது உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.