Jump to content

Recommended Posts

Posted

குட்டி, பலா இலையில் கூழ் குடிப்பது..... கூழுக்கு தனிச்சுவையை தரும் என்பது முற்றிலும் உண்மை.

நீங்கள் குறிப்பிடும் பலா இலையில் செய்த பிளாவை குளக்காட்டான் தனது படத்தில் காட்டியுள்ளார், அதனை பனுவல் என்று குறிப்பிடுகின்றார்.

'பனுவல்' இதன் பெயரைத் தான் மறந்து போனேன், நன்றி சிறி அண்ணா! :mellow: அப்பப்பா வீட்டில் தான் பலாமரம் இருந்தது, அதனால் அவர் தான் பனுவல் செய்து வைப்பார்... எங்கள் வீட்டில் 2 சிறிய வடலி தான் இருந்தது, வீட்டில் கூழ் காய்ச்சும் போதெல்லாம் அதை வெட்டித் தான் பிழா செய்து கூழ் குடிச்ச ஞாபகம். (இன்றைக்கு கூழ் காய்ச்சலாமா என்று அப்பா கேட்டதும், வடலி வெட்டுவதற்குத் தேங்காய் உடைக்கிற கத்தி என்ர கையில் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கோவன், இப்ப நினைச்சாலும் சிரிப்பா இருக்கு...)ஆடு அறுக்க முதல்... என்று ஒரு பழமொழி ஞாபகம் வருமே... :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லை தமிழ் சிறி, அவர் பனை ஓலை பிழாவை குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். கள்ளுத்தவறணைக்களில் இருப்பதை போன்றது. நான் படத்தில் காட்டிய பலா இலை பனுவல்?? ஐ குறிப்பிடவில்லை.

குளக்காட்டான், பிற்காலத்துக்கு உதவும் என்று.... குட்டி இரண்டு வடலியை நட்டுப் போட்டு வந்திருக்கிறார்.

சீ...... எனக்கு இந்த யோசனை வராமல் போச்சுதே...... :)

எனக்கு கூழ் என்டால் காரசாராமாய் இருக்க வேனும்.கண்னாலும் மூக்காலும் தணன்னி வரவேனும். :) சிலர் தேங்கய் சொட்டு சேர்த்து குடிப்பினம்.எனக்கு அது சரிப்பட்டு வராது.அது சரி சிறி ஏன் பாதி நன்டு :rolleyes: சாப்டாட்டு விசயத்தில கஞ்சத்தனம் கூடாது :lol:

கழுவின பாதி நண்டு - 8

ஒரு பாதி நண்டு இல்லை சஜீவன். எட்டுப் பாதி நண்டு போடவேணும். நண்டை முழுசாய் போட்டால் சட்டியில் இடம் காணாமல் போய் விடும்.

பிறகு கிடாரத்திலை தான் கூழ் காய்ச்ச வேணும். :lol:

'பனுவல்' இதன் பெயரைத் தான் மறந்து போனேன், நன்றி சிறி அண்ணா! :lol: அப்பப்பா வீட்டில் தான் பலாமரம் இருந்தது, அதனால் அவர் தான் பனுவல் செய்து வைப்பார்... எங்கள் வீட்டில் 2 சிறிய வடலி தான் இருந்தது, வீட்டில் கூழ் காய்ச்சும் போதெல்லாம் அதை வெட்டித் தான் பிழா செய்து கூழ் குடிச்ச ஞாபகம். (இன்றைக்கு கூழ் காய்ச்சலாமா என்று அப்பா கேட்டதும், வடலி வெட்டுவதற்குத் தேங்காய் உடைக்கிற கத்தி என்ர கையில் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கோவன், இப்ப நினைச்சாலும் சிரிப்பா இருக்கு...)ஆடு அறுக்க முதல்... என்று ஒரு பழமொழி ஞாபகம் வருமே... :)

குட்டி, வீட்டில் சமையல் அறைப்பக்கம் போகாத ஆண்கள் எல்லோரும்,

கூழ் காய்ச்ச மட்டும் முன்னுக்கு நிற்பது ஏன்?

எங்கள் வீட்டிலும் அப்பா, மற்றும் சித்தப்பா ஆகியோர் தான் கூழ் காய்ச்ச முன்னுக்கு நிற்பார்கள்.

கூழ் ஆண்களுக்கான சமையல் முறையோ...... :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரிய அளவில் செய்வதால் குடும்ப தலைவர்களை தேடுகிறார்களோ......? இருந்தாலும் பெண்களின் சிறு உதவி தேவை. மீன் தலை ( பெரிய தலை மீன் ) :lol: போடுவதால் தலைவர்களுக்கு ( குடும்ப) முன்னிடமோ? நாங்களும்வருடமொருமுறை காய்ச்சும் போது ஆண் மக்களை தான் முன் நின்று செய்யவிடுவது குறைந்தது பத்து பேராவது இருப்போம். சிறார்களுக்கு வேறு வகை உணவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பெரிய அளவில் செய்வதால் குடும்ப தலைவர்களை தேடுகிறார்களோ......? இருந்தாலும் பெண்களின் சிறு உதவி தேவை. மீன் தலை ( பெரிய தலை மீன் ) :lol: போடுவதால் தலைவர்களுக்கு ( குடும்ப) முன்னிடமோ? நாங்களும்வருடமொருமுறை காய்ச்சும் போது ஆண் மக்களை தான் முன் நின்று செய்யவிடுவது குறைந்தது பத்து பேராவது இருப்போம். சிறார்களுக்கு வேறு வகை உணவு.

fish-head-2.jpgcast_fish_head.jpg

கூழுக்கு மீன் தலை போடுவதால் தான், குடும்ப தலைவர்கள் கூழ் காய்ச்ச முன்னுக்கு நிற்கிறார்கள் என்னும் அரிய கண்டுபிடிப்பை, கண்டுபிடிச்ச நிலாமதி அக்காவுக்கு பாராட்டுக்கள். :lol:

.

Edited by தமிழ் சிறி
Posted

குளக்காட்டான், பிற்காலத்துக்கு உதவும் என்று.... குட்டி இரண்டு வடலியை நட்டுப் போட்டு வந்திருக்கிறார்.

சீ...... எனக்கு இந்த யோசனை வராமல் போச்சுதே...... :D

எல்லாம் பனையும் பனை சார்ந்த பொருட்களின் ஈர்ப்பு சிறி அண்ணா :lol:^_^:lol:

...

குட்டி, வீட்டில் சமையல் அறைப்பக்கம் போகாத ஆண்கள் எல்லோரும்,

கூழ் காய்ச்ச மட்டும் முன்னுக்கு நிற்பது ஏன்?

எங்கள் வீட்டிலும் அப்பா, மற்றும் சித்தப்பா ஆகியோர் தான் கூழ் காய்ச்ச முன்னுக்கு நிற்பார்கள்.

கூழ் ஆண்களுக்கான சமையல் முறையோ...... :)

எங்கட வீட்டில அம்மா வாரம் முழுதும் சமைப்பா, வார இறுதியில்(ஞாயிறு)அம்மாவுக்கு சமையலறைப் பக்கம் விடுமுறை.

அப்பாவின் சமையால் என்றால் வீடே ஒரு களைகட்டும்... :lol: விதம் விதமாக ஆர்வமா, ரசிசுச் சமைப்பார்... சாப்பிடும் போது சாப்பாடு ருசி மட்டும் அதில இருக்காது, அவரின் ரசனையும் அன்பும் கலந்து இருக்கும்... :lol:

கூழ் காய்ச்சும் நாட்களில் கலனில் கள்ளு வாங்கி வைச்சுப் போட்டுத் தான் கூழ் காய்ச்சவே ஆரம்பிப்பார்கள்... 6, 7 வயிற்றுக்குள்ள இருக்கிற கிருமி எல்லாம் கழுவிக் கொண்டு வெளிய போகும் என்று சொல்லி அப்பப்பா கள்ளுத் தருவர், அதைக் குடிச்சுப் போட்டு

வயிறைப் பிடிச்சுக் கொண்டு ஓடுப்பட்டுத் திரிஞ்ச ஞாபகம் இருக்கு... :D



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.