Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தேர்தல் உத்தியோகபூர்வற்ற முடிவுகள் - TNA 5, EPDP 3 , UNP 1;மாவை முன்னிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முழு யாழ்ப்பாண மாவட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 65, 119, இது வாக்களிக்கத் தகுதியுடைய மக்களில் வெறும் 18%. ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்தில் மட்டுமே கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 64,256, இது இங்கிலாந்திலுள்ள வாக்களிக்கத் தகுதியுடையோரில் குறைந்தது 50 %.

இனி மற்ற நாடுகளில் நடந்துமுடிந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான புள்ளிவிபரங்களைப் பார்க்கலாம்.

நோர்வே - ஆதராவான வாக்குகள் 5574, வாக்களிக்கத் தகுதியுடையோர் 8500, வீதம் 65.5%

பிரான்ஸ் - ஆதரவான வாக்குகள் 30,936, வாக்களிக்கத் தகுதியுடையோர் 35,000, வீதம் 88.4%

கனடா - ஆதரவான வாக்குகள் 48481, வாக்களிக்கத் தகுதியுடையோர் ப்100,000, வீதம் 48.5%

சுவிஸர்லாந்து - ஆதரவான வாக்குகள் 16,357, வக்களிக்கத் தகுதியுடையோர் 25,000, வீதம் 65.4%

ஜேர்மணி - ஆதரவான வாக்குகள் 22,904, வாக்களிக்கத் தகுதியுடையோர் 25000, வீதம் 91.2%

னெதர்லாந்து - ஆதரவான வாக்குகள் 2,728, வாக்களிக்கத் தகுதியுடையோர் 4,000, வீதம் 68.2%

டென்மார்க் - ஆதரவான வாக்குகள் 4,072, வாக்களிக்கத் தகுதியுடையோர் 6,500, வீதம் 62.6%

இத்தாலி - ஆதரவான வாக்குகள் 3,596, வாக்களிக்கத் தகுதியுடையோர் 4,500, வீதம் 79.9%

9 நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ள இத்தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை 200163. இது மொத்த வாக்களிக்கக் கூடிய மக்கள் தொகையில் 70 %.

சிங்களப் பயங்கரவாதத்தின் அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்டு அதன் பாராளுமன்றத்திற்குச் செல்லும் இந்த அரசியல் கூத்தையும், ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளின் அடிப்படையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் ஒப்பிடுவதை இத்துடன் விட்டு விடுங்கள். வெறும் 18% மட்டுமே வாக்களித்துப் பெற்ற வெற்றி உங்களைப் பொறுத்தவரை வெற்றியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பை கொச்சைப்படுத்த வேண்டாம்.

Edited by ragunathan

  • Replies 71
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜநாதிபதி தேர்தலில பொன்சேகா யானையில சவாரிசெய்யிறத பாக்க வந்த சனம் கூட சைக்கிலோட்டம் பாக்க வரேல்ல.

ஐநா தேர்தலுக்கு பொன்ஸ் எப்ப போட்டியிட்டார்? அது...... பாங்கி மூன் செய்யிற வேலை.

டாம்

வாக்களிக்காமல் இருப்பவர்கள் எல்லோரும் தமிழ் கூட்டமைப்பை நிராகரித்து விட்டார்கள் என்று சொல்வது முட்டாள் தனம். சும்மா விதண்டா வாதங்களை செய்யாமல் தாயகத்தில் உள்ள மக்களின் தீர்பை மதித்து அந்த தலைமையை கொச்சைப்படுத்தாமல் இருங்கோ

அவருக்கு 3 ஆசனங்கள் தமிழ்த்தேசியத் கூ தலைவருக்கு 5 ஆசனங்கள் ஆக தமிழ்மக்களின் அடுத்த தலைவர் டக்லஸ் என்று மக்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றார்கள் :lol:

ஒரு புலி எதிர்ப்பாளரின் கூற்று இது.... புலிகள் கடிநாய்கள் என்றாலும் காவல் நாய்களாக இதுவரை இருந்தார்கள் :rolleyes:

அதுவே இந்த ஈழமாக்கள் காவலுக்கு புலிநாய்கள் ஆனால் கடிக்கக் கூடாது

கல்லாவுக்கும் களியாட்டத்திற்கும் புலன் பெயர்ந்த நாய்கள் ஆனால் குரைக்கக் கூடாது - கேள்வி கேட்கக் கூடாது பொத்திக்கொண்டும் அனுப்பவேண்டும் :wub:

Edited by tamilsvoice

புலம் பெர்ந்தவர்கள் காசு கொடுக்கிறார்கள் என்பதுக்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அப்படியா?

புலத்தில் இருந்து ஏன் பணம் அனுப்புகிறார்கள்? அது அவர்களின் சொந்தங்கள் உறவுகள் பந்தங்கள் இதை பணத்திநூடே அளவிட முடியாது. அப்படியான உறவுகள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று ஏன் புலத்தில் உள்ளவர்கள் உணரவில்லை?

இதை யோசிக்கும் போது இறுதிக்கட்ட சண்டையில் உயிர் பிரிந்த தாயின் மார்பில் பாலருந்த துடிக்கும் குழந்தையின் காட்சிதான் நினைவிற்கு வருகின்றது. இதை கேட்பதற்கும் பார்பதன்ற்கும் புலத்தில் உள்ள மக்களுக்கு முடியாது... அந்த கொடுமையை நினைக்கவே முடியாது அனால் நிலத்தில் இது நடந்தது அதை அந்த மக்கள் அனுபவித்தவர்கள் நேரில் கண்டவர்கள்.

எத்தினை வீதம் மக்கள் வாக்களித்தார்கள் என்பது முக்கியமில்லை என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தனிப்பட்ட மனிதர்களின் வெற்றி தோல்வி பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. எங்கள் மக்கள் வாழ என்ன செய்யபோறம் அதுதான் முக்கியம்.

இப்போது எந்த சூழலில் மக்கள் அகப்பட்டிருக்கிரார்களோ அந்த சூழலுக்கு ஏற்ரமதிரித்தான் நடக்கவேண்டி உள்ளது.

டக்கிளசுக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தால் அவன் கொடுக்கும் அற்பச் சலுகைதான் சனத்துக்கு தேவை என்று பொருள். நீங்கள் உங்களுக்குள் அடிபட்டால் சனம் தாங்கள் உண்டு தன்ர பாடு உண்டென்று நினைப்பதி என்ன தவறு?

அடுத்த தேர்தலில் அவன் இதை விட கூட வென்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை? அப்படித்தான் இன்று நிலைமை. தனிநாடு கேட்டு வாக்கு கேட்டால் சனம் போடாது. ஏன் தனிநாட்டுக்கும் இலங்கை அரசியல் வாக்குக்கும் சம்பந்தம் இல்லை. சில சரியான கொள்கைகள் பிழையான சந்தர்ப்பத்தில் இப்படித்தான் முடியும்.

கஜேந்திரர்களின் கொள்கை பிழை இல்லை அனால் அதுக்கு சரியான சந்தர்ப்பம் இதுவல்ல.

தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறாத கூட்டமைபுக்கு பின்னால் ஒற்றுமை எனும் கோசத்தை வைத்து மந்தகள் போல பின் தொடர சொல்லி தமிழ் மக்களை கேட்பது முட்டாள்களின் செயலாகத்தான் அமையும்...

கடந்த 40 வருட அரசியலில் தன்னால் உருப்படியாக எதையும் மக்களுக்கு செய்ய முடியாது என்பதை பல தடவைகள் சம்பந்தர் நிரூபித்துள்ளார். பேசும் ஆளுமையும், அரசியல் ராஜதந்திரமும், தலைமைத்துவ பண்புகளும் சம்பந்தரிடம் மிக மிகக் குறைவு.

அவர் சக உறுப்பினர்களுடன், இளைஞர்களுடன் அரசியல் கதைக்கும் போது, அவர்கள் ஏதாவது கருத்துக்களை அழுத்தி சொல்ல முற்பட்டால் "ஐ சே உமக்கு உது விளங்காது காணும்", "ஐ சே நான் சொல்றதை கேளும் முதல்ல", "ஐ சே எனக்கு எல்லாம் தெரியும், விளங்குதே", .... என்று உச்ச தொனியில் கூறுவதோடு, மற்றவர் (இளையவர்) கருத்துக்களை உள்வாங்குவதே இல்லை என்பதை நானே நேரடியாக கண்டுள்ளேன். வேறும் பலர் இதே குறைகளை பலதடவைகள் கூறியுள்ளனர். ஜனநாயகம் பேசும் சம்பந்தனுக்கு கூட்டமைப்புக்குள்ளே ஜனநாயகத்தை பேணத் தெரியவில்லை என்பது தான் உண்மை.

அதைவிட மோசமாக, சம்பந்தரது போக்கை அறிந்தும் - பலர் வேண்டுகோள் விடுத்தும், பிரபாகரன் அவர்கள் கூட்டமைப்பு விடயங்களில் அதிகம் தலையிட விரும்பாமல் சம்பந்தரின் தலைமையை மாற்றாமல் விட்டதுக்கு நன்றிக் கடனாக, இத் தலைமை காரணமாக சம்பந்தர் தான் சந்திக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், பெரும்பாலும் சிற்றுண்டி புசிக்கும் வேளைகளில், "நாங்கள் வன்முறைகளில் நம்பிக்கையற்றவர்கள்", "வன்முறைகளால் எதையும் அடையமுடியாது", "தமிழ் பிரதேசங்களில் ஜனநாயகம் இல்லை" போன்ற கருத்துக்களை அடிக்கடி கூறிவந்தவர். சந்திப்புக்கு பொருத்தமில்லாத இந்த கூற்றுக்களை கேட்டு ஒருசில இராஜதந்திரிகளே முகம் சுளித்துள்ளனர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். இதன் மூலம் சம்பந்தன் நாசூக்காக சொல்லவந்த விடயத்தை நான் விபரிக்க வேண்டியதில்லை.

சுயநலம் காரணமாக அவருடைய இந்திய அடிவருடித் தனத்தை அனைவரும் அறிவர்.

எனவே சம்பந்தன் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்ய விரும்பினால் தலைமைத்துவத்தை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவுவது தான் ஒரே வழி. அல்லது தமிழ் மக்கள் மேலும் பல பின்னடைவுகளை சந்திக்கத் தயாராகவேண்டும்.

சுரேஷ் பிரேமச்சந்திரனும் சம்பந்தனுடன் இணைந்து பெற்ற இந்திய அடிவருடித்தனத்தை கைவிட்டால் பொருத்தமானவர். மாவை சேனாதிராஜா மக்களுடன் அதிகம் நிற்பவர், நல்ல சிந்தனையாளர் - அவரும் இந்திய அடிவருடித்தனத்தை கைவிட்டால் பொருத்தமானவர். கஜேந்திரன் பொன்னம்பலம் மிக மிக அற்புதமாக விவாதிக்கக் கூடியவர், ஆனால் மக்கள் பிரச்சினைகளில் அனுபவம் குறைவு, அதை அவர் வளர்த்துக் கொள்ளவேண்டும் - உப தலைவருக்கு பொருத்தமானவர்.

சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றவர்களையும் உள்வாங்க வேண்டும். அவர்களைவிட எதேச்சையாக நடந்த சம்பந்தன் உள்ளேயிருக்க, அவர்களை வெளியேற்றுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சித்தார்த்தன் தவிர்ந்த, வவுனியாவில் சத்தமின்றி நல்ல வேலைகள் செய்த சில புளட் உறுப்பினர்களையும் உள்வாங்கினால் நல்லது. அவர்கள் கூட்டமைப்பினர் பலரைவிட பலமான கள அனுபவமும், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை எதிர்கொள்ளும் விவேகமும் உடையவர்கள்.

எனவே சம்பந்தன் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்ய விரும்பினால் தலைமைத்துவத்தை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவுவது தான் ஒரே வழி. அல்லது தமிழ் மக்கள் மேலும் பல பின்னடைவுகளை சந்திக்கத் தயாராகவேண்டும்.

கடைசி தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனத்தையாவது கொடும் ஆண்டவரே.

தமிழ் மக்களின் 10% வாக்குகளை பெற்றுவிட்டு "வென்று விட்டதாக" பிதற்றி திரிபவர்களை .......

தமிழ் மக்களின் 10% வாக்குகளை பெற்றுவிட்டு "வென்று விட்டதாக" பிதற்றி திரிபவர்களை .......

அண்ணோய் ஒருவிசயம் கேள்விப்பட்டியளோ.... இந்த பையித்திக்காரங்களின்ர கதையக்கேட்டு நானும் இவங்களோட சேர்ந்து நிண்டிட்டன் எண்டு ஏசிப்போட்டு கஜேந்திரகுமார் கொழும்புக்கு போவிட்டாராம். கொழும்பில இருந்து விநாயகமூர்த்தி ஐயாவுக்கு கோல் எடுத்து வாழ்த்தினவராம். கெதியில சம்பந்தன் ஐயாவையும் விநாயகமூர்த்தி ஐயாவையும் தான் சந்திக்க போறன் எண்டும் லண்டனுக்கு போவிட்டு வந்து சந்திக்கிறன் எண்டு சொன்னவராம். கஜேந்திரகுமார் இண்டைக்கு இல்லாட்டி நாளைக்கு லண்டனுக்கு வாறாராம். கெனடியும் ஏசிப்போட்டு போவிட்டாராம். இப்ப கஜேந்திரனும் பத்மினி அக்காவும் யோசிச்சுக்கொண்டு இருக்கினமாம். பத்மினி அக்காவும் தான் லண்டனுக்கு போகப்போறன் எண்டும் மகளோட போய் இருக்கப்போறன் எண்டு சொல்லுறாவாம். அப்ப அங்க கஜேந்திரன்தான் தனிய சைக்கிள் ஓடவேணும். இஞ்சஇருந்தும் ஆராவது போனால் அவரோட கூட ஓடலாம்.

Edited by நிழலி
பண்பற்ற சொல்லாடல் நீக்கப்பட்டது

தம்பி DAM சொல்வது உண்மையாகவே இருந்து எல்லாரும் ஒன்றுபட்டால் நல்லது தான். அரசியல் பழத்துக்கு புத்தி வந்ததாக தகவல் கிடைக்கவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

[b]விசுகு, நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் என்று தான் அடம் பிடிக்கிற ஆள் போலை .....

.

எதற்கெடுத்தாலும்

வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது சரியென்றால்..

நான் இப்படியே இருந்துவிட்டுப்போகின்றேன்

ஆனால் இன்று கூட்டமைப்பை எதிர்த்தவர்கள்

எவன் வென்றாலும் பரவாயில்லை கூட்டமைப்புக்கு குழிபறிப்போம் என்று இங்கு எழுதியவர்கள்

மக்களின் புறக்கணிப்பை தம் வாக்குகளாக்கி..

அதைவிட கொடுமை புறக்கணிப்பால் முன்னுக்கு வந்த டக்லசை தலைவர் என்பதும் மிகவும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல

மக்கள்மீதான இவர்களது கோணல் பார்வையையும் உணர்த்தி நிற்கிறது

நான் என்றும் ஒரேவழியில் நிற்பதற்கு காரணம்

மக்கள் அதை வழிமொழிகிறார்கள் என்பதாலேயே....

ஓம் ஓம் உங்கட வளியிலைதான் நிக்கினம்... 15% மான மக்கள் கூட்டமைப்பை ஆதரிச்சவை எண்டால் இன்னும் ஒரு 15 விகிதம் பிள்ளையானையும், டக்கிளசையும், ஐதேகவையும், சுந்தந்திர கட்ச்சியையும் ஆதரித்து நிக்கிது... அது உங்களுக்கு மகிழ்ச்சிதான்... ஆக அந்த கூட்டத்தில் நீங்கள் சொன்னால் பிழையாக எப்பவும் இருக்காது...

ஆனால் 70 % மேலை இலங்கை அரசியல் வாதிகளை புறக்கணிச்சு நிக்குதுகள்... அதிலை நாங்களும் ஒரு அங்கம்... நாங்கள் எல்லாம் தலைமையை தெரிவு செய்ய தெரியாத கேணயள்... கூட்டமைப்பும் சம்பந்தரும் எங்களுக்கு செய்ய போற நன்மைகளை கண்டு கொள்ளை தூரப்பார்வையும் இல்லை... அதாலை நீங்களே எங்களுக்கான முடிவை எடுத்து கொள்ளுங்கோவன்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் 70 % மேலை இலங்கை அரசியல் வாதிகளை புறக்கணிச்சு நிக்குதுகள்... அதிலை நாங்களும் ஒரு அங்கம்... நாங்கள் எல்லாம் தலைமையை தெரிவு செய்ய தெரியாத கேணயள்... கூட்டமைப்பும் சம்பந்தரும் எங்களுக்கு செய்ய போற நன்மைகளை கண்டு கொள்ளை தூரப்பார்வையும் இல்லை... அதாலை நீங்களே எங்களுக்கான முடிவை எடுத்து கொள்ளுங்கோவன்...

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர்கள்தான் தமிழர்களது பிரதிநிதிகள்......

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர்கள்தான் தமிழர்களது பிரதிநிதிகள்......

உங்கள் 10 பேருக்கு தலைவர். எங்கள் 70 பேருக்கும் தலைவரோ...???

தமிழ் மக்களுக்கு 25 பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்... அதிலை 14 வைச்சு இருக்கிறவை பிரதி நிதிகள் தான்... ஒரு காலத்திலை டக்கிளசும் , EPRLF ம் இதை விட அதிகமாக வைத்து இருந்தவை... அவையும் தமிழர்களின் பிரதிநிதிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை உறைக்கும்

ஒத்துக்கொண்டால் சரியாகும்

இல்லையென்றால் தொடர்ந்து கடிதான்.....

Edited by விசுகு

உண்மை உறைக்கும்

ஒத்துக்கொண்டால் சரியாகும்

இல்லையென்றால் தொடர்ந்து கடிதான்.....

முதலிலை நாங்கள் உங்கட தலைமையை தமிழர்கள் ஒதுக்கி வைத்து விட்டோம் எண்டதை மனதிலை நிப்பாட்டி கொள்ளுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2004 விருப்புவாக்கு கிங் குயினுக்கு என்ன நடந்தது.

விடியப்புறம் வெடிச் சத்தமும் கேக்கேல்ல.

இரவு பகலா சைக்கிலோடியும் இந்த நிலையெண்டா.... :)

  • கருத்துக்கள உறவுகள்

:) விசுகு,

இருக்கிறதை விட்டுப்போட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட நீங்கள் ஒன்றும் முட்டாள் இல்லைத்தான். ஆனால் பறக்கிறதுக்கு இதுவரையிலும்(ஏன் இப்போதும்கூட) ஆதரித்து வந்த நீங்கள் எப்படி சம்பந்தர் பேசுவதுபோலப் பேசத் தொடங்கினீர்கள்?? தனியீழம் வேண்டாம், அது பறக்கிற விஷயம். ஒற்றையாட்சிக்குள் சிங்களவனுடன் சமயோசிதமாக சமரசம் செய்வோம், இந்தியா வந்து பின்னால் நிக்கும் எண்டெல்லாம் எப்போதிருந்து பேசத் தொடங்கினீர்கள்??

ஆக, இந்த 35 வருடத்தில் 40,000 மாவீரகளும், 150,000 தமிழர்களும் மாண்டு செய்த தியாகங்களை ஒற்றை நாளில் சம்பந்தர் என்கிற தனிப்பட்ட ஆளிற்காக தூக்கியெறிந்துவிட்டு வந்து நிற்கிறீர்கள்?!

வாழ்க உங்கள் அரசியல் ஞானமும், தெளிவும். நாளைக்கே சம்பந்தரையும் ஏதாவது காரணத்தைக் காட்டி கழற்றி விடாட்டீச் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை மன்னிக்கவும்,

எங்களுக்குள் நாங்கள் ஒரு வரையறுக்குள் சொல்லாடல் செய்யலாம்.

அதற்காக மதிவதனங் போன்றவர்களின் கருத்தை ஏற்பது போல் நீங்கள்

ஏதோ கூறியதால் அப்படி எழுதி விட்டேன்.

ஈழத் தமிழர்களின் விடிவிற்கு இப்படிப்பட்ட விவாதங்கள் அவசியம்.

ஆனாலும் எல்லாம் ஒரு வரையறுக்குள் இருக்க வேண்டும்.

தனி நபர் தாக்குதல்களை முற்றாக நிறுத்த வேண்டும்.

வாத்தியார்

.............

Edited by vathiyar

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் கருத்தெழுதும் சககருத்தாளனது கருத்துக்கு கருத்தெழுதாது

அவனை

முட்டாள் என்றும்

விசரன் என்றும்

பைத்தியக்காறன் என்றும்

விசுக்கோத்து என்றும்............. எப்போ எழுதத்தொடங்கினார்களோ அன்றே கருத்துக்களம் செத்துவிட்டது.

எதற்கும் அடங்காத மக்களின் தீர்ப்புகளுக்கு தலைவணங்காத மக்களின் நலனைவிட தமது தனிப்பட்ட சில தனிஆதிக்க சக்திகளின்

திணிப்புகளே இங்கே நடக்கின்றன.

இவை ஆரோக்கியமான கருத்தாடலோ அல்லது ஆரோக்கியமான பங்களிப்புகளோ அல்ல.

இவை துளியும் எமது மக்களுக்கோ எமது இலட்சியங்களுக்கோ நன்மை தராது என்பதைவிட இருப்பதையும் பிரித்து சிறுசிறு குழுக்களாக்கி அந்த குழுக்களுக்குள் தமது எழுத்துக்களின் வலிமையை தொடர்ந்து பலப்பரீட்சை செய்ய மட்டுமே உதவும்

எந்த ஆதிக்கசக்திகளுக்கும் அல்லது எந்த தனிக்குழுக்களுக்கும் அல்லது எந்த இதுபோன்ற எழுத்துக்களுக்கும் கருத்து எழுதியோ அல்லது இவர்களின் அடாவடித்தனத்துக்கு எழுதி என்னை நான் குறைத்துக்கொள்ளவிரும்பவில்லை.

எனது மக்களுக்கான எமது தாயகத்துக்கான எனது வழியில் எனது பங்களிப்பு தொடரும்.

நன்றி. வணக்கம்

களத்தில் கருத்தெழுதும் சககருத்தாளனது கருத்துக்கு கருத்தெழுதாது

அவனை

முட்டாள் என்றும்

விசரன் என்றும்

பைத்தியக்காறன் என்றும்

விசுக்கோத்து என்றும்............. எப்போ எழுதத்தொடங்கினார்களோ அன்றே கருத்துக்களம் செத்துவிட்டது.

எதற்கும் அடங்காத மக்களின் தீர்ப்புகளுக்கு தலைவணங்காத மக்களின் நலனைவிட தமது தனிப்பட்ட சில தனிஆதிக்க சக்திகளின்

திணிப்புகளே இங்கே நடக்கின்றன.

இவை ஆரோக்கியமான கருத்தாடலோ அல்லது ஆரோக்கியமான பங்களிப்புகளோ அல்ல.

இவை துளியும் எமது மக்களுக்கோ எமது இலட்சியங்களுக்கோ நன்மை தராது என்பதைவிட இருப்பதையும் பிரித்து சிறுசிறு குழுக்களாக்கி அந்த குழுக்களுக்குள் தமது எழுத்துக்களின் வலிமையை தொடர்ந்து பலப்பரீட்சை செய்ய மட்டுமே உதவும்

எந்த ஆதிக்கசக்திகளுக்கும் அல்லது எந்த தனிக்குழுக்களுக்கும் அல்லது எந்த இதுபோன்ற எழுத்துக்களுக்கும் கருத்து எழுதியோ அல்லது இவர்களின் அடாவடித்தனத்துக்கு எழுதி என்னை நான் குறைத்துக்கொள்ளவிரும்பவில்லை.

எனது மக்களுக்கான எமது தாயகத்துக்கான எனது வழியில் எனது பங்களிப்பு தொடரும்.

நன்றி. வணக்கம்

எந்த விதமான சீண்டுதலும் இல்லாது உங்களுக்கு உங்களது பாணியில் பதில் அளிக்கப்படவில்லை... கூட்டமைபின் உடைவுக்கு நான் தான் காரணம் நான் தான் தூண்டி விட்டு உடைத்தேன் எண்று இதே களத்தில் எழுதிய போது அறிவார்த்தமாக தான் எழுதினீரோ...??

தயா, தவிச்ச முயல் அடிப்பதை நிப்பாட்டுங்கள்.. பாவம் விசுகு.. யார் பெத்த புள்ளயோ..... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.