Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் த.தே.கூ. வில் இணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆய்வாளர் துரைரட்ணம்

Featured Replies

http://www.yarl.com/articles/files/100409_Ira_Thurairatnam_Seithi_aaivu.mp3

நன்றி: ATBC வானொலி அவுஸ்திரேலியா

இந்த றேடியோக்காரர் தாங்கள் செய்தது சரி மற்ற ஊடகங்கள் எல்லாம் ஏதோ துரோகம் செய்த மாதிரி வாறவையிட்ட பேட்டி எடுக்கினம்

தமிழர் எல்லோருமே ஒன்றாதல் வேண்டும். நன்மை அடைகின்றோமோ? இல்லையோ? ஒற்றுமையாகுதல் முக்கியம். அதன் மூலமே ஒருகுரலாக எதையும் சொல்ல முடியும். ஜனநாயகம் என்ற போர்வையில் பிரிந்து நின்று மற்றவர்களின் ஊடுருவலுக்கு இடமளித்தல் நல்லதல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைக்கில் ஓட்டக்காரர்.....கேக்கிதோ?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் த.தே.கூ. வில் மீண்டும் இணைய வேண்டும்

உந்தாளில பிரச்சனை இல்லையாமே....மற்றவைதான் உந்தாள கெடுத்தமாதிரி கதை போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்பர்களே,

மதிவதனங் அவர்கள் இன்று மட்டும் ஒரு உண்மையைச் சொல்லியிருக்கின்றார்.

கஜேந்திரகுமார் அவர்களால் பிரச்னை இல்லையாம்.

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் நாங்கள் எல்லோரும் வருகின்றோம்.

ஆனால் முதலில் கூட்டமைப்புக்கு ஒரு மத்திய குழு தேவை.

அடுத்தது அந்த மத்திய குழுவில்

கூட்டமைப்பில் இருக்கும் அங்கத்தவர்களைத் தவிர

களத்திலிருக்கும் தமிழ்த்தேசியவாதிகள் சிலரும் (கட்சி சாராத)

புலத்திலிருக்கும் தமிழ்த்தேசியவாதிகள் சிலரும்

இணக்கப்படுவார்களா?

மத்திய குழுவின் முடிவை கூட்டமைப்பு அங்கீகரிக்குமா?

மத்திய குழுவின் முடிவு மக்களின் முடிவாக ஏற்றுக்கொள்ளப்படுமா?

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் .... நேர்வே பிரகடனப்படி .... :rolleyes:

கடந்த 40 வருட அரசியலில் தன்னால் உருப்படியாக எதையும் மக்களுக்கு செய்ய முடியாது என்பதை பல தடவைகள் சம்பந்தர் நிரூபித்துள்ளார். பேசும் ஆளுமையும், அரசியல் ராஜதந்திரமும், தலைமைத்துவ பண்புகளும் சம்பந்தரிடம் மிக மிகக் குறைவு.

அவர் சக உறுப்பினர்களுடன், இளைஞர்களுடன் அரசியல் கதைக்கும் போது, அவர்கள் ஏதாவது கருத்துக்களை அழுத்தி சொல்ல முற்பட்டால் "ஐ சே உமக்கு உது விளங்காது காணும்", "ஐ சே நான் சொல்றதை கேளும் முதல்ல", "ஐ சே எனக்கு எல்லாம் தெரியும், விளங்குதே", .... என்று உச்ச தொனியில் கூறுவதோடு, மற்றவர் (இளையவர்) கருத்துக்களை உள்வாங்குவதே இல்லை என்பதை நானே நேரடியாக கண்டுள்ளேன். வேறும் பலர் இதே குறைகளை பலதடவைகள் கூறியுள்ளனர். ஜனநாயகம் பேசும் சம்பந்தனுக்கு கூட்டமைப்புக்குள்ளே ஜனநாயகத்தை பேணத் தெரியவில்லை என்பது தான் உண்மை.

அதைவிட மோசமாக, சம்பந்தரது போக்கை அறிந்தும் - பலர் வேண்டுகோள் விடுத்தும், பிரபாகரன் அவர்கள் கூட்டமைப்பு விடயங்களில் அதிகம் தலையிட விரும்பாமல் சம்பந்தரின் தலைமையை மாற்றாமல் விட்டதுக்கு நன்றிக் கடனாக, இத் தலைமை காரணமாக சம்பந்தர் தான் சந்திக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், பெரும்பாலும் சிற்றுண்டி புசிக்கும் வேளைகளில், "நாங்கள் வன்முறைகளில் நம்பிக்கையற்றவர்கள்", "வன்முறைகளால் எதையும் அடையமுடியாது", "தமிழ் பிரதேசங்களில் ஜனநாயகம் இல்லை" போன்ற கருத்துக்களை அடிக்கடி கூறிவந்தவர். சந்திப்புக்கு பொருத்தமில்லாத இந்த கூற்றுக்களை கேட்டு ஒருசில இராஜதந்திரிகளே முகம் சுளித்துள்ளனர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். இதன் மூலம் சம்பந்தன் நாசூக்காக சொல்லவந்த விடயத்தை நான் விபரிக்க வேண்டியதில்லை.

சுயநலம் காரணமாக அவருடைய இந்திய அடிவருடித் தனத்தை அனைவரும் அறிவர்.

எனவே சம்பந்தன் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்ய விரும்பினால் தலைமைத்துவத்தை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவுவது தான் ஒரே வழி. அல்லது தமிழ் மக்கள் மேலும் பல பின்னடைவுகளை சந்திக்கத் தயாராகவேண்டும்.

சுரேஷ் பிரேமச்சந்திரனும் சம்பந்தனுடன் இணைந்து பெற்ற இந்திய அடிவருடித்தனத்தை கைவிட்டால் பொருத்தமானவர். மாவை சேனாதிராஜா மக்களுடன் அதிகம் நிற்பவர், நல்ல சிந்தனையாளர் - அவரும் இந்திய அடிவருடித்தனத்தை கைவிட்டால் பொருத்தமானவர். கஜேந்திரன் பொன்னம்பலம் மிக மிக அற்புதமாக விவாதிக்கக் கூடியவர், ஆனால் மக்கள் பிரச்சினைகளில் அனுபவம் குறைவு, அதை அவர் வளர்த்துக் கொள்ளவேண்டும் - உப தலைவருக்கு பொருத்தமானவர்.

சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றவர்களையும் உள்வாங்க வேண்டும். அவர்களைவிட எதேச்சையாக நடந்த சம்பந்தன் உள்ளேயிருக்க, அவர்களை வெளியேற்றுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சித்தார்த்தன் தவிர்ந்த, வவுனியாவில் சத்தமின்றி நல்ல வேலைகள் செய்த சில புளட் உறுப்பினர்களையும் உள்வாங்கினால் நல்லது. அவர்கள் கூட்டமைப்பினர் பலரைவிட பலமான கள அனுபவமும், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை எதிர்கொள்ளும் விவேகமும் உடையவர்கள்.

இவர்களை ஒருகாலமும் சேர்க்கக்கூடாது பொறுத்த நேரத்தில் மீண்டும் மூன்றாம் ஆட்களின் கதை கேட்டு களுத்தை அறுப்பார்கள்.

இவர்கள் பிரிந்தது அவர்கள் விருப்பம். ஆனால் பின்பு புலம் பெயர்ந்தவர்களின் சொல்லை கேட்டு நாங்கள் கூட்டமைப்பை உடைக்கவில்லை அந்த மூன்று பேரையும் மாத்தப் போகின்றோம்.எஸ்.எம்.எஸ் இந்த மூவரையும் பாவமன்னிப்பு கேட்டால் திருப்பி எடுப்பம்.வானொலி பேட்டி என்று வேணுமென்றே அவமதித்தது.கடைசி ஒரு வயசிற்கு கூட மரியாதை கொடுக்கவில்லை.

புலிகளை யாரவது ஒரு கேள்வி ஏன் என்று எப்போதாவது கேட்டீர்களா? கேட்டிருந்தால் அவர்களும் அழிந்திருக்க மாட்டார்கள் தமிழனும் தோத்திருக்க மாட்டான்.அவ்வளவு பயம்.இப்போது சம்பந்தர் தானே என்று கண்டவன் நிண்டவன் எல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டான்.

கையில கொஞ்சம் காசை வைத்துக் கொண்டு புலம் பெயர்தமிழன் செய்யும் அடாவடிதனத்திற்கு மண்ணில் இருந்தவர்கள் கொடுத்த அடிதான் இந்த எலக்சன் முடிவுகள்.

நீங்கள் எல்லோரும் வாசிக்க வேண்டியது கனடாவிலிருந்து வெளிவரும் "தாயகம்" பத்திரிகை.கொஞ்சமாவது அரசியலறிவை உயர்த்த அது பயன்படும்.

தமிழ் மக்களின் 10% வாக்குகளை பெற்றுவிட்டு "வென்று விட்டதாக", "மண்ணில் இருந்தவர்கள் கொடுத்த அடிதான்" என்று கதையளக்கும் இந்திய --- கைகூலிகளாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஓரிரு ஓட்டுன்னிகளிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்க முடியாது. உந்த ஒட்டுண்ணிகள் ஆரோக்கியமற்ற பிரிவினை கருத்துக்களை மட்டுமே முன்வைக்கும் என்பதை யாவரும் விளங்கிக்கொள்வர்.

Edited by நிழலி
பண்பற்ற சொல்லாடல் நீக்கப்பட்டது

தமிழ் மக்களின் 10% வாக்குகளை பெற்றுவிட்டு "வென்று விட்டதாக" பிதற்றி திரிபவர்களை .......

தமிழர் எல்லோருமே ஒன்றாதல் வேண்டும். நன்மை அடைகின்றோமோ? இல்லையோ? ஒற்றுமையாகுதல் முக்கியம். அதன் மூலமே ஒருகுரலாக எதையும் சொல்ல முடியும். ஜனநாயகம் என்ற போர்வையில் பிரிந்து நின்று மற்றவர்களின் ஊடுருவலுக்கு இடமளித்தல் நல்லதல்ல.

"உண்மை"

தமிழ் மக்களின் 10% வாக்குகளை பெற்றுவிட்டு "வென்று விட்டதாக", "மண்ணில் இருந்தவர்கள் கொடுத்த அடிதான்" என்று கதையளக்கும் இந்திய நாய்களின் கைகூலிகளாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஓரிரு ஓட்டுன்னிகளிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்க முடியாது. உந்த ஒட்டுண்ணிகள் ஆரோக்கியமற்ற பிரிவினை கருத்துக்களை மட்டுமே முன்வைக்கும் என்பதை யாவரும் விளங்கிக்கொள்வர்.

90வீதமான யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்காமல் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஆதரவளித்ததாக வெளிநாடுகளில இருக்கிற ஆக்கள் சொல்லுகினம். அவையின்ர சொல்லுக்கு கட்டாயம் எல்லாரும் கட்டுப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருகோணமலையில 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்க வேணும்.

தேசிய மகாதலைவர் கஜேந்திரகுமார் அவர்களிடம் உந்த படிப்பறிவில்லாத சம்பந்தன், மாவை, சுரேஷ் எல்லாரும் மண்டியிட்டு காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு தமிழ் காங்கிரஷ் கட்சியில சேர வேணும். உந்த ஆசான், தமிழ் வொயிஸ்காரர்களின்ர காலிலயும் ஒருக்கா சம்பந்தன் ஆக்கள் விழுந்து மன்னிப்புக்கேக்க வேணும். ஏனெண்டால் வெளிநாட்டில இருக்கிறவையின்ர சொல்லுப்படிதானே நாட்டில இருக்கிற சனமும் தமிழ் தலைவர்களும் நடக்க வேணும்.

உண்மைகள் உறைக்கும் போது, பித்துப் பிடித்து புலம்புவது என்பது இது தானோ? DAM

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 2004 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார் அல்லவா? அவர் நாடாளுமன்றத்தில் சிறு உரையாவது ஆற்றினாரா என்று கூறுங்கள் பார்ப்போம். அட, கடைசி கன்னி உரையாவது ஆற்றினாரா என்று கூறுங்கள் பார்ப்போம். அதுகூட இல்லை. இதில் பெரிதாக அவரை பெரிய இளம் தலைவர் என்று கூற வந்துவிட்டீர்கள்.

புலத்தில் இருந்து வடக்கு-கிழக்கு தமிழர்கள் மீது சவாரி விடுகின்ற மனோபாவத்தை விட்டுவிடுங்கள்.

எது எப்படி இருந்தாலும் தோல்வியுற்ற கஜேந்திரன் அணி திருந்தியதாக இல்லை. 82 வீதமான மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருப்பதாக அவர்களும் அவர்களுக்காக வக்காளத்து வாங்கிய புலத்து இணைய மற்றும் வானொலி ஊடகங்களுடன் அவர்களுக்காக ஒத்து ஊதிய ஆய்வாளப்பெருந்தகைகளும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

இங்கே எழும் மில்லியன் டொலர் கேள்வி யாதெனில், கடந்த அரச தலைவர் தேர்தலையும்தான் பெருமளவிலான மக்கள் புறக்கணித்திருந்தனர். அதாவது, கடந்தமுறை வாக்களித்திருப்பவர்களில் 50 ஆயிரம் பேர் இம்முறை குறைவு. ஆகவே, அப்போதாவது கஜேந்திரன் அணியினருக்கு மக்கள் தேர்தலில் ஆர்வம் இன்மையாக இருக்கின்றார்கள் என்று புரிந்திருக்க வேண்டும் அல்லவா?.

இவ்வாறான நிலை இருக்கும்போது தாம் போட்டியிட்டாலும் பெருமளவிலான மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?

இதில் இன்னொரு வேடிக்கையான விடயத்தினையும் இங்கே கூறவேண்டும். புலம்பெயர் தமிழ் இணைய ஊடகங்கள் செய்த அடாவடி ஒன்று என்றால் தமிழ் வானொலிகள் சில உதாரணத்துக்கு கனடாவில் சிரிஆர், ஐரோப்பாவில் ஐபிசி, அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் ஒலி ஆகியவை (இவைதான் நான் அறிந்தவரை ஒருபக்க சார்பாக நடந்தவை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நார், நாராக கிழித்து கேள்வி கேட்பதும் அவர்களை கீழ்த்தரமாக விமர்சிப்பதனையும் தமக்கு சார்பாக உரையாடக்கூடிய ஆய்வாளப் பெருந்தகைகளை வைத்து எந்தளவு மோசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க முடியுமோ அந்தளவுக்கு விமர்சித்தார்கள். அதில் சிரிஆர் ஒருபடி மேலே போய் நிதி சேகரித்தும் கொடுத்தது.

தோல்வியுற்ற பின்னர் ஒரு ஆய்வாளர் இவ்வாறு தெரிவித்தார். அதாவது, கஜேந்திரன் அணி தோல்வியுற்றதற்கு நிதி இன்மையும் (?) ஒரு காரணம் என்றால் வீரகேசரி, உதயன், தினக்குரல் ஆகியன இவர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்கிறார். இந்த ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தது சரியாக இருப்பின் நான் ஏற்றுக்கொள்வேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலத்தில் இருக்கின்ற சிலரின் ஆட்டத்துக்கு பிளவுபடுத்தி ஒற்றுமையைக் குலைத்த செயலை கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்துக்காக உழைத்த மேற்படி ஊடகங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.

நிதி இன்மை என்பது சரியான பூசி மெழுகல் விடயம் என்பதனை இந்த இடத்தில் கூறியாக வேண்டும். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களின் தாளத்துக்குத்தான் கஜேந்திரன் அணி ஆடியது என்பது பலருக்கும் நன்கு தெரிந்த விடயம். சிந்திக்கத் திறன் உள்ளவர்கள் ஓரளவு இதனை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளந்துவிட்டு சென்று தனித்துப் போட்டியிட விரும்பினார்கள் எனில் நிதி பற்றி சிந்திக்காமலா இவர்கள் வெளியேறி இருப்பார்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வக்காளத்து வாங்கும் எனக்கும் கூட கூட்டமைப்பு மீது கடும் விமர்சனங்கள் உள்ளன. அதில் உள்ள ஒரு சிலர் விடுகின்ற தனிப்பட்ட பிழையினால் ஒட்டுமொத்த அமைப்பையும் பிழை கூறக்கூடாது. பிளவுகளை வெளிக்காட்டாது, அதனை சரி செய்து ஓர் அணியில் திரண்டிருந்தால் ஈபிடிபியிடம் மேலதிகமாக 2 ஆனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஓர் ஆசனத்தையும் இழந்திருக்க வேண்டி இருந்திருக்காது.

தெரிவு செய்யப்பட்ட இந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் புலத்தில் உள்ள மக்களின் துணையுடனும் அரசிடம் இருந்து கிடைக்கக்கூடிய நிதி உதவிகளையும் பெற்று வடக்கு-கிழக்கு மக்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது விடின் இப்போது இருக்கின்ற ஆசனங்கள் மேலும் வீழ்ச்சியடையும். இதிலும் தமிழ்த் தேசியம் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு கஜேந்திரன் அணி மீண்டும் போட்டியிட்டால் கூட்டமைப்புக்கு இனிவரும் காலத்தில் ஒட்டுமொத்தமாக 5 ஆசனங்கள் கூட கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கும்.

கற்பனை உலகில் புலத்தில் உள்ளவர்கள் சஞ்சரிப்பதனை விட்டு நிஜ உலகில் சஞ்சரிக்க வேண்டும்.

இல்லை எனில் தந்தை செல்வா கூறியதனை மீண்டும் நினைவுபடுத்திப் பாருங்கள்.

நிர்மலன்! உங்கள் நல்ல கருத்துக்கள் சில அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டியவை.

இவர்களை ஒருகாலமும் சேர்க்கக்கூடாது பொறுத்த நேரத்தில் மீண்டும் மூன்றாம் ஆட்களின் கதை கேட்டு களுத்தை அறுப்பார்கள்.

இவர்கள் பிரிந்தது அவர்கள் விருப்பம். ஆனால் பின்பு புலம் பெயர்ந்தவர்களின் சொல்லை கேட்டு நாங்கள் கூட்டமைப்பை உடைக்கவில்லை அந்த மூன்று பேரையும் மாத்தப் போகின்றோம்.எஸ்.எம்.எஸ் இந்த மூவரையும் பாவமன்னிப்பு கேட்டால் திருப்பி எடுப்பம்.வானொலி பேட்டி என்று வேணுமென்றே அவமதித்தது.கடைசி ஒரு வயசிற்கு கூட மரியாதை கொடுக்கவில்லை.

புலிகளை யாரவது ஒரு கேள்வி ஏன் என்று எப்போதாவது கேட்டீர்களா? கேட்டிருந்தால் அவர்களும் அழிந்திருக்க மாட்டார்கள் தமிழனும் தோத்திருக்க மாட்டான்.அவ்வளவு பயம்.இப்போது சம்பந்தர் தானே என்று கண்டவன் நிண்டவன் எல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டான்.

கையில கொஞ்சம் காசை வைத்துக் கொண்டு புலம் பெயர்தமிழன் செய்யும் அடாவடிதனத்திற்கு மண்ணில் இருந்தவர்கள் கொடுத்த அடிதான் இந்த எலக்சன் முடிவுகள்.

நீங்கள் எல்லோரும் வாசிக்க வேண்டியது கனடாவிலிருந்து வெளிவரும் "தாயகம்" பத்திரிகை.கொஞ்சமாவது அரசியலறிவை உயர்த்த அது பயன்படும்.

கேள்வி கேட்காமல் மக்களை ஒருவழிப்படுத்தி போராட்டத்தை வழி நடாத்தி சென்றமையால் தான் 30 வருடம் போராடினார்கள் என்ற அனுதாபம் வந்தது.

சமாதானம் வந்தததும் சன்நாயகம் கேள்வி சுதந்திரம் எல்லாம் கிடைத்ததும் விடுதலை செத்து போச்சு.

ஈழத்தமிழனை பொறுத்த மட்டில் தலைவர் பிரபாகரன் தான் சரியானவர். அவரால் மட்டும் தான் ஒன்று சேர்த்து 30 வருடம் இழூக்க முடிந்தது.

இனி எந்த கொம்பனாலும் அந்த காரியம் முடியவே முடியாது.

பிரிந்து இருந்து அழிந்து சாவதே மேல்

"தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி" இம்முறை தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூடப் பெறவில்லை என்றாலும் தேசியக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதிலும் கடைப்பிடிக்க வைப்பதிலும் அது முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளதை நாம் அவதானிக்கலாம். அதாவது தாம் தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்னிறுத்தி தேர்தலில் நின்றதுடன்இ சமஸ்டி என வழி தவறிப்போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நாமும் "தாயகம் தேசியம்இ தன்னாட்சி உரிமை" என்ற கோட்பாடுகளை (கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இது இல்லை) முன்வைத்தே தேர்தலில் நிற்கின்றோம் என மக்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவிக்க வைப்பதற்கான அழுத்தத்தையும் பயத்தையும் போதியவு இந்தக் கட்சி கொடுத்தது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவு செய்யப்பட்ட இந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் புலத்தில் உள்ள மக்களின் துணையுடனும் அரசிடம் இருந்து கிடைக்கக்கூடிய நிதி உதவிகளையும் பெற்று வடக்கு-கிழக்கு மக்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது விடின் இப்போது இருக்கின்ற ஆசனங்கள் மேலும் வீழ்ச்சியடையும். இதிலும் தமிழ்த் தேசியம் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு கஜேந்திரன் அணி மீண்டும் போட்டியிட்டால் கூட்டமைப்புக்கு இனிவரும் காலத்தில் ஒட்டுமொத்தமாக 5 ஆசனங்கள் கூட கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கும்.

கற்பனை உலகில் புலத்தில் உள்ளவர்கள் சஞ்சரிப்பதனை விட்டு நிஜ உலகில் சஞ்சரிக்க வேண்டும்.

இல்லை எனில் தந்தை செல்வா கூறியதனை மீண்டும் நினைவுபடுத்திப் பாருங்கள்.

நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை.ஆனால் நடக்காது.இங்கு புலத்தில் போராட்ட காலத்தில் போராட்டத்துக்கு வழங்கிய பங்களிப்பில் கால்வாசி கூட பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்வதில்லை.இனி உந்த எம்பி மாரையும் தேடிப்பிடிப்பது கடினம்.அடுத்த 6 வருசத்துக்கு இவையை கானக்கிடைக்காது.இப்படி நிலமை இருந்தால் சனம் நீங்கள் சொல்வதையோ அல்லது அரசியல் வாதிகள் சொல்வதை கேக்க மாட்டினம்.தங்கள் கை தான் தமக்கு உதவி என்று இருப்பதை விட வேறு வழி.

கூட்டமைப்புக்குள் நாங்கள் எல்லோரும் வருகின்றோம்.

ஆனால் முதலில் கூட்டமைப்புக்கு ஒரு மத்திய குழு தேவை.

அடுத்தது அந்த மத்திய குழுவில்

கூட்டமைப்பில் இருக்கும் அங்கத்தவர்களைத் தவிர

களத்திலிருக்கும் தமிழ்த்தேசியவாதிகள் சிலரும் (கட்சி சாராத)

புலத்திலிருக்கும் தமிழ்த்தேசியவாதிகள் சிலரும்

இணக்கப்படுவார்களா?

மத்திய குழுவின் முடிவை கூட்டமைப்பு அங்கீகரிக்குமா?

மத்திய குழுவின் முடிவு மக்களின் முடிவாக ஏற்றுக்கொள்ளப்படுமா?

வாத்தியார்

..............

இதுதான் ஆக்க பூர்வமான சிந்தனை..

இவர்களை ஒருகாலமும் சேர்க்கக்கூடாது பொறுத்த நேரத்தில் மீண்டும் மூன்றாம் ஆட்களின் கதை கேட்டு களுத்தை அறுப்பார்கள்.

கையில கொஞ்சம் காசை வைத்துக் கொண்டு புலம் பெயர்தமிழன் செய்யும் அடாவடிதனத்திற்கு மண்ணில் இருந்தவர்கள் கொடுத்த அடிதான் இந்த எலக்சன் முடிவுகள்.

நூறு வீதம் அல்ல இருநூறு வீதம் உண்மை. அது இஞ்சை இருக்கிறதுகளுக்கு எங்க விளங்கப்போகுது. 80 வீதமான சனம் வாக்களிக்கமால் இருந்து கஜேந்திரன் குழுவுக்கு ஆதரவு அளிந்ததாக புது வியாக்கியானம் பண்ணுகுதுகள். இதுகள் ஒரு காலமும் திருந்தபோறதில்லை. ஆனால் இதுகள் கொஞ்சக்காலத்தில இருந்த இடம்தெரியாமல் காணாமல் போவிடுங்கள்.

கடந்த 40 வருட அரசியலில் தன்னால் உருப்படியாக எதையும் மக்களுக்கு செய்ய முடியாது என்பதை பல தடவைகள் சம்பந்தர் நிரூபித்துள்ளார். பேசும் ஆளுமையும், அரசியல் ராஜதந்திரமும், தலைமைத்துவ பண்புகளும் சம்பந்தரிடம் மிக மிகக் குறைவு.

அவர் சக உறுப்பினர்களுடன், இளைஞர்களுடன் அரசியல் கதைக்கும் போது, அவர்கள் ஏதாவது கருத்துக்களை அழுத்தி சொல்ல முற்பட்டால் "ஐ சே உமக்கு உது விளங்காது காணும்", "ஐ சே நான் சொல்றதை கேளும் முதல்ல", "ஐ சே எனக்கு எல்லாம் தெரியும், விளங்குதே", .... என்று உச்ச தொனியில் கூறுவதோடு, மற்றவர் (இளையவர்) கருத்துக்களை உள்வாங்குவதே இல்லை என்பதை நானே நேரடியாக கண்டுள்ளேன். வேறும் பலர் இதே குறைகளை பலதடவைகள் கூறியுள்ளனர். ஜனநாயகம் பேசும் சம்பந்தனுக்கு கூட்டமைப்புக்குள்ளே ஜனநாயகத்தை பேணத் தெரியவில்லை என்பது தான் உண்மை.

அதைவிட மோசமாக, சம்பந்தரது போக்கை அறிந்தும் - பலர் வேண்டுகோள் விடுத்தும், பிரபாகரன் அவர்கள் கூட்டமைப்பு விடயங்களில் அதிகம் தலையிட விரும்பாமல் சம்பந்தரின் தலைமையை மாற்றாமல் விட்டதுக்கு நன்றிக் கடனாக, இத் தலைமை காரணமாக சம்பந்தர் தான் சந்திக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், பெரும்பாலும் சிற்றுண்டி புசிக்கும் வேளைகளில், "நாங்கள் வன்முறைகளில் நம்பிக்கையற்றவர்கள்", "வன்முறைகளால் எதையும் அடையமுடியாது", "தமிழ் பிரதேசங்களில் ஜனநாயகம் இல்லை" போன்ற கருத்துக்களை அடிக்கடி கூறிவந்தவர். சந்திப்புக்கு பொருத்தமில்லாத இந்த கூற்றுக்களை கேட்டு ஒருசில இராஜதந்திரிகளே முகம் சுளித்துள்ளனர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். இதன் மூலம் சம்பந்தன் நாசூக்காக சொல்லவந்த விடயத்தை நான் விபரிக்க வேண்டியதில்லை.

சுயநலம் காரணமாக அவருடைய இந்திய அடிவருடித் தனத்தை அனைவரும் அறிவர்.

எனவே சம்பந்தன் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்ய விரும்பினால் தலைமைத்துவத்தை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவுவது தான் ஒரே வழி. அல்லது தமிழ் மக்கள் மேலும் பல பின்னடைவுகளை சந்திக்கத் தயாராகவேண்டும்.

சுரேஷ் பிரேமச்சந்திரனும் சம்பந்தனுடன் இணைந்து பெற்ற இந்திய அடிவருடித்தனத்தை கைவிட்டால் பொருத்தமானவர். மாவை சேனாதிராஜா மக்களுடன் அதிகம் நிற்பவர், நல்ல சிந்தனையாளர் - அவரும் இந்திய அடிவருடித்தனத்தை கைவிட்டால் பொருத்தமானவர். கஜேந்திரன் பொன்னம்பலம் மிக மிக அற்புதமாக விவாதிக்கக் கூடியவர், ஆனால் மக்கள் பிரச்சினைகளில் அனுபவம் குறைவு, அதை அவர் வளர்த்துக் கொள்ளவேண்டும் - உப தலைவருக்கு பொருத்தமானவர்.

சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றவர்களையும் உள்வாங்க வேண்டும். அவர்களைவிட எதேச்சையாக நடந்த சம்பந்தன் உள்ளேயிருக்க, அவர்களை வெளியேற்றுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சித்தார்த்தன் தவிர்ந்த, வவுனியாவில் சத்தமின்றி நல்ல வேலைகள் செய்த சில புளட் உறுப்பினர்களையும் உள்வாங்கினால் நல்லது. அவர்கள் கூட்டமைப்பினர் பலரைவிட பலமான கள அனுபவமும், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை எதிர்கொள்ளும் விவேகமும் உடையவர்கள்.

எனவே சம்பந்தன் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்ய விரும்பினால் தலைமைத்துவத்தை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவுவது தான் ஒரே வழி. அல்லது தமிழ் மக்கள் மேலும் பல பின்னடைவுகளை சந்திக்கத் தயாராகவேண்டும்.

இதுவும் கனடா பட்டதாரிகள் சங்கத்தின் கதை போல தானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SMS ச தோற்கடிக்கிறது தான் கொள்கை குறிக்கோள் எண்டு சொன்னீங்கள். அதுக்குத்தான் இரவு பகலா களத்தில சைக்கில் ஓடினீங்கள். இல்லாத பொல்லாத கதையெல்லாம் சொல்லி துரோகிப்பட்டம் குடுத்தீங்கள் (இப்ப என்ன குறைவோ) உள்ளுக்கு விட்டா ஒண்டா படுத்து ஒண்டா இருக்கிறமாதிரி இருந்து நஞ்சு குடுக்கமாட்டியள் (முன் பின் செய்யாததே) எண்டு என்ன உத்தரவாதம்? :)

"தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி" இம்முறை தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூடப் பெறவில்லை என்றாலும் தேசியக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதிலும் கடைப்பிடிக்க வைப்பதிலும் அது முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளதை நாம் அவதானிக்கலாம். அதாவது தாம் தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்னிறுத்தி தேர்தலில் நின்றதுடன்இ சமஸ்டி என வழி தவறிப்போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நாமும் "தாயகம் தேசியம்இ தன்னாட்சி உரிமை" என்ற கோட்பாடுகளை (கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இது இல்லை) முன்வைத்தே தேர்தலில் நிற்கின்றோம் என மக்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவிக்க வைப்பதற்கான அழுத்தத்தையும் பயத்தையும் போதியவு இந்தக் கட்சி கொடுத்தது.

ஒரு நாடு இரு தேசம் இதுதான் தமிழ் தேசியக் கொள்கையா....சும்மா போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்....நமது இலக்கு தமிழீழம்தான், அதற்கு ஒரு சில குறுக்குவழிகள் தேவை....அதை இந்த தமிழ் கூட்டமைப்பை வைத்து மூவ் பண்ண முயற்சிக்க வேண்டும்...சும்மா லூசுத்தனமா...வெளிநாட்டிலிருந்து குழையடிச்சு பேயாட்டப்படாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிவி யள் றேடியோக்கள கையுக்க வச்சுக்கொண்டு பே...பே... யெண்டு கத்தி இங்கதான் கனபேருக்கு பே புடிச்சிருக்கு. குழையடிச்சு பேயோட்டுறத இங்க ஆரம்பிச்சா நல்லாயிருக்கும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.