Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக டெல்லியில் மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WEDNESDAY, APRIL 14, 2010

இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக டெல்லியில் மாநாடு.

varam+vanki.jpg

புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போரில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற இனப்படுகொலை , மற்றம் யுத்தமுறை மீறல்கள் தொடர்பான கருத்தரங்க மாநாடு டெல்லியில் நாளை நடக்க உள்ளது. டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மற்றும் 'டூப்லின்' அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

அயர்லாந்தில் உள்ள டூப்ளின் தீர்ப்பாயம் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து இந்த தீர்ப்பாயம் விரிவாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பான கருத்தரங்க மாநாட்டை இத்தீர்ப்பாயம் டெல்லியில் நாளை நடத்துகிறது. இதில் உயர்நீதிமன்ற முன்னாள நீதிபதி ராஜிந்தர் சச்சார், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிந்தர் சச்சார், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் கிருஷ்ணையர், அனைத்துலக மனித உரிமை கழகத்தின் விராஜ் மென்டிஸ், முன்னாள் இலங்கை எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பேசுகின்றனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு பியூசிஎல் தலைவர் சுரேஷ், பியூசிஎல் முன்னாள் தலைவர் கண்ணபிரான், முன்னாள் சண்டிகர் நீதிபதி அஜித் சிங் பைன்ஸ், புரட்சிகர எழுத்தாளர் சங்க கவிஞர் வரவர ராவ், அரசியல் கைதிகள் விடுதலை குழுவை சார்ந்த பேராசிரியர் கிலானி, காஷ்மீர் அனைத்து கட்சி {ஹரியத் குழு சையத் அலிஷா கிலானி ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

உலக சீக்கிய செய்திகள் ஆசிரியர் ஜக்மோகன் சிங், அனைத்துலக மக்கள் போராட்ட லீகின் துணை தலைவர் சாய் பாபா, மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த கவிதா கிருஷ்ணன் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கு கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினை டெல்லி அரசாங்கமே நடாத்தி முடித்தது என புலிகள் தரப்பினரால் குசுகுசுப்புக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் போர்க்குற்றம் தொடர்பாக மாநாடுவேறு இந்தியா நாடாத்துக்கின்றது எனவும் இந்நியாவின் பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டும் செயற்பாடுகளில் இதுவும் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Written By ilankainet at Wednesday, April 14, 2010

போர்க் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு ஒரு மகாநாடு.

செய்யிறதையும் செய்து போட்டு இப்ப இதுக்கு ஒரு மாநாடு.........

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தான் போரை முன்னின்று நடத்தியது.பிறகென்ன மாநாடு இந்தியர்களை வைத்து இந்தியாவில் மாநாடு?

தாங்கள் தப்ப தமிழ் மாணவர்களை பயன்படுத்துகிறார்களா?

இதென்ன இந்தியாவின் பங்கை மறைக்கவா இந்த மாநாடு?

போர்க்குற்ற விசாரணைதான் வேண்டும் மாநாடு என்னத்துக்கு?

செய்தியை படிக்கும் போது இதை நடத்துபவர்கள் இந்திய பயங்கரவாத அரசுடன் இணைந்து செய்வது போல தெரியவில்லை.

இப்படிப்பட்ட மகா நாட்டை கொலைகாரர்கள் தமது நாட்டில் நடாத்த அனுமதிப்பார்களா என்ற கேள்வியும் உள்ளது. இது இந்திய பயங்கரவாதிகளின் சதி வேலையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

என்னையா செய்யவில்லை என்றலும் ஓலமிட்டு புலம்புகின்றீர்கள். செய்தாலும் புலம்புகின்றீர்கள். எந்த உலகத்தில் வாழ்கின்றீர்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பங்குபற்றுபவர்கள் பட்டியலைப்பார்த்தால் இந்திய இங்கை அரசுகளுக்கு வக்காளத்துவாங்குபவர்கள்போல் தெரியவில்லை..

ஆனாலும் மகாநாடு ஒழுங்காக நடந்துமுடிந்தாலும் அவர்களது முடிவுகள் அரசியல்ரீதியாக எவ்வளவு

செல்வாக்குப்பெறும் என்பது ........?

சும்மா வெறும் மாடு சொன்னால் எடுபடாது மணிகட்டினமாடு என்றால்தான் ...........

எடுபடும் என்று சொல்லுறவை .

இவ்வமைப்பினர் எவ்வளவுதூரம் உலக அரங்கில் ஆதிக்கம் செலத்துகின்றனர்

அல்லது வெறும் செல்லாக்காசுகள்தானா என்பதில்தான் மகாநாட்டின் பலன்கள் அமையும்.

மணிகட்டினவையோ என்று பொறுத்திருந்து பார்ப்பம்

Edited by naanal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச் செய்தியை எழுதியவரும் சரி கருத்தெழுதியவர்களில் சிலரும் சரி .. இந்தியா என்ற பெரிய நாட்டில் வாழும் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்பதுபோலவும், அங்கு நடைபெறும் எல்லா விடயங்களும் அங்குள்ள மத்திய அரசின், அல்லது அதன் உளவுத்துறையின் ஏற்பாட்டில்தான் நடக்கிறது என்பது போலவும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

ஈழத்தமிழர்கள் வி்டயத்தில் ஆதரவான, இந்தியாவின் நடத்தையை கண்டிக்கிற இலட்சக்கணக்கான மக்கள் அங்கு (வெவ்வேறு மாநிலங்களில்) வாழ்கிறார்கள் என்பதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை மாற்றுகிற அளவு சக்தி மிக்கவர்களாக இல்லை என்பது உண்மையெனினும், அவர்கள் இந்தியர்களாக இருப்பதனால் அவர்களது முயற்சிகளை நாம் தட்டிக்கழிக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து.

நீதியரசர் கிருஸ்ணய்யர் நீண்ட காலமாகவே ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக கருத்துக்கூறிவரும் உலகறிந்த கல்வியாளர். பெரியார் திராவிடக்கழக கொளத்தூர் மணி பற்றி நான் குறிப்பிடத் தேவையில்லை.

Edited by MI7

மாநாட்டை நடத்பவர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்குத் துணைபோபவர்களாகத் தெரியவில்லை. ஆயினும் அவர்களது அமைப்பு எவ்வளவு பலம்மிக்கது அல்லது அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடியது என்பது தெரியவில்லை?

Edited by ampalathar

இந்த மாநாட்டில் இடம்பெறும் கருத்துக்களால் கொஞ்சம் இனப்படுகொலைகளை பற்றி இந்திய மக்களிடையே தெளிவிக்க சிறந்த வாய்ய்ப்பு .

ஆனால் நம்ம ஆளுகள்தான் எங்க போனாலும் தமிழ் பற்றுன்னு வீண் ஜம்பம் மற்றும் வீறாப்பான பேச்சையும் தமிழிலேயே அடிப்பார்களே . இங்கே கொஞ்சம் தமிழ் பற்றை தூர வைத்து விட்டு அதை கொஞ்சம் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அடித்தால் எதோ கொஞ்சம் மீடியாக்கலாவது கவர் செய்யும் . பின் யாராவது ஒருத்தர் தொடர்ந்து எதையாவது இனப்படுகொலைகளை பற்றி பிற ஊடகங்களில் எழுதுவார்கள் . இது சரியான சமயம் . ஏனெனில் இப்போது இந்தியாவில் சூடான செய்திகள் ஏதும் இல்லாது வேலை வெட்டியின்றி நிறைய பேர் ஏதாவது வசமா கிடைக்குமா என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் பொழப்பு கொடுத்த மாதிரி ஆச்சு . இனப்படுகொலைகளை பற்றி கொஞ்சம் வெளியே கொண்டு வரவும் நல்ல சந்தர்ப்பம் .

எதோ இந்தியா உதவி செஞ்சதனால இலங்கை புலிகளை வென்றது போல பிரமையை இலங்கை அரசு சார்பு தமிழர்கள் இன்னும் புலம்புவது போல புலம்பி ஈழ தமிழர்களை இந்திய உணர்விலிருந்து பிரித்து பிசினஸ் செய்கிறார்கள் . அது உண்மை என வைத்து கொண்டாலும் இந்திய உதவியால் ஆயிரக்கணக்கில் கொலை . இந்தியா இடத்தில வேறு நாடு இருந்து இருந்தா லட்சகணக்கில் கொலை நடந்து இருக்கும் . இது தான் உண்மை .

இப்படி ஒரு மகாநாட்டை டெல்கியில் நடக்க விடுவதே சிங்களவனுக்கு ஆகத் துள்ளாதையுங்கோ என்றொரு செய்தி கொடுக்கத்தான்.இந்தியா சிங்களவனுக்கோ தமிழனுக்கோ சார்பான நாடல்ல.எவன் கை கொஞ்சம் எழும்புதோ அப்போது மற்றவனைக் கொஞ்சம் தட்டிக் கொடுக்கும்.

இதை விளங்காமல் நாங்கள் எந்த காட்டு கத்து கத்தினாலும் ஒரு பிரயோசனமில்லை.இது இந்தியா மாத்திரமல்ல உலகமே இந்த ஒரு ஒழுங்குமுறயில் தான் இயங்குது.கடைசி நாங்கள் இந்தியாவிற்கருகில் இருந்து விட்டோம் வேறு வல்லரசுக்களுக்கு பக்கத்தில் இருந்து போராடுபவர்களை கேட்டுப் பாருங்கள் (சவுத் அமெரிக்க நாடுகள்,அயலான்ட்,செஸ்னியா,தீபெத்) இந்தியா எவ்வளொவோ திறம் என்பார்கள்.

கட்டப் பொம்மன் படம் எல்லாம் இனி சரிவராது.சிங்களவனுக்கு உது தெரியும்.அவன் என்ன மாதிரி எல்லோருடனும் காய் நகர்த்துகின்றான்.நாங்கள் எல்லாவற்றிற்கும் அடியடா பிடியடா என்றால் இப்படியே அழிந்து கொண்டே போகவேண்டியதுதான்.

இது புலிகளைவிட மற்ற அரசியல் தலைவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. முள்ளிவாய்க்கால் போன்றோரு நிலை வராமல் விட்டிருந்தால் தான் அதிசயம்.சனம் சாகிறதென்பது உலகிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இதை தெரிந்திருந்தும் தமது பிழைப்பிற்காக வாலாட்டி நின்ற புலம் பெயர் தமிழரில்தான் முழுப் பிழையும்.

இது பெரிய தியறி இல்லை.அன்றாடம் நமக்கு வேலையில் நடக்கும் நிகழ்வு போன்றதே.எத்தனை கேவலமான பொஸ் மாரை நாம் அனுசரித்து போவதில்லையா? அகற்காக நாம் அவனுக்கென்ன அடிமையாக இருக்கின்றோம்.அவனிடம் நாம் அனுசரித்து கொண்டுவரும் பணத்தில் தானே நாம் சுதந்திரமாக வீட்டில் குழந்தை குட்டிகளுடன் வாழுகின்றோம்.

இந்தியா தன்னை பிக்பொஸ் என்று சொல்லுது கொஞ்சம் அனுசரித்து போவதுதான் புத்தி.

யோவ் அர்ஜுன் . ஜாக்கிரத ஓவரா மனசுக்கு பட்டத எழுதுன நாலு பேர் சேர்ந்து வந்து துரோகி பட்டம் கட்டி சைடுல தள்ளிருவோம் ஆமாம்

.... இதை விளங்காமல் நாங்கள் எந்த காட்டு கத்து கத்தினாலும் ஒரு பிரயோசனமில்லை.இது இந்தியா மாத்திரமல்ல உலகமே இந்த ஒரு ஒழுங்குமுறயில் தான் இயங்குது.கடைசி நாங்கள் இந்தியாவிற்கருகில் இருந்து விட்டோம் வேறு வல்லரசுக்களுக்கு பக்கத்தில் இருந்து போராடுபவர்களை கேட்டுப் பாருங்கள் (சவுத் அமெரிக்க நாடுகள்,அயலான்ட்,செஸ்னியா,தீபெத்) இந்தியா எவ்வளொவோ திறம் என்பார்கள். ....

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ..... ... ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு மகாநாட்டை டெல்கியில் நடக்க விடுவதே சிங்களவனுக்கு ஆகத் துள்ளாதையுங்கோ என்றொரு செய்தி கொடுக்கத்தான்.இந்தியா சிங்களவனுக்கோ தமிழனுக்கோ சார்பான நாடல்ல.எவன் கை கொஞ்சம் எழும்புதோ அப்போது மற்றவனைக் கொஞ்சம் தட்டிக் கொடுக்கும்.

இதை விளங்காமல் நாங்கள் எந்த காட்டு கத்து கத்தினாலும் ஒரு பிரயோசனமில்லை.இது இந்தியா மாத்திரமல்ல உலகமே இந்த ஒரு ஒழுங்குமுறயில் தான் இயங்குது.கடைசி நாங்கள் இந்தியாவிற்கருகில் இருந்து விட்டோம் வேறு வல்லரசுக்களுக்கு பக்கத்தில் இருந்து போராடுபவர்களை கேட்டுப் பாருங்கள் (சவுத் அமெரிக்க நாடுகள்,அயலான்ட்,செஸ்னியா,தீபெத்) இந்தியா எவ்வளொவோ திறம் என்பார்கள்.

கட்டப் பொம்மன் படம் எல்லாம் இனி சரிவராது.சிங்களவனுக்கு உது தெரியும்.அவன் என்ன மாதிரி எல்லோருடனும் காய் நகர்த்துகின்றான்.நாங்கள் எல்லாவற்றிற்கும் அடியடா பிடியடா என்றால் இப்படியே அழிந்து கொண்டே போகவேண்டியதுதான்.

இது புலிகளைவிட மற்ற அரசியல் தலைவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. முள்ளிவாய்க்கால் போன்றோரு நிலை வராமல் விட்டிருந்தால் தான் அதிசயம்.சனம் சாகிறதென்பது உலகிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இதை தெரிந்திருந்தும் தமது பிழைப்பிற்காக வாலாட்டி நின்ற புலம் பெயர் தமிழரில்தான் முழுப் பிழையும்.

இது பெரிய தியறி இல்லை.அன்றாடம் நமக்கு வேலையில் நடக்கும் நிகழ்வு போன்றதே.எத்தனை கேவலமான பொஸ் மாரை நாம் அனுசரித்து போவதில்லையா? அகற்காக நாம் அவனுக்கென்ன அடிமையாக இருக்கின்றோம்.அவனிடம் நாம் அனுசரித்து கொண்டுவரும் பணத்தில் தானே நாம் சுதந்திரமாக வீட்டில் குழந்தை குட்டிகளுடன் வாழுகின்றோம்.

இந்தியா தன்னை பிக்பொஸ் என்று சொல்லுது கொஞ்சம் அனுசரித்து போவதுதான் புத்தி.

.சனம் சாகிறதென்பது உலகிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

இது மட்டுமே உண்மை, இதுதான் உலகத்துக்கு தேள்வையானது, இதையே நாமும் செய்து இருக்க வேண்டும், இதையே நாம் செய்ய ஊக்குவிக்கபடுகிறோம், எதிர்காலம் கொழும்பு இந்த நிலைமைக்கே தள்ளப்படும், இப்போது இடைவேளை மட்டுமே விடப்பட்டிருக்கிறது. நிரந்தரமான தீர்வுகள் கிடைக்காத நாடுகளில் இதுவே நடை பெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு மகாநாட்டை டெல்கியில் நடக்க விடுவதே சிங்களவனுக்கு ஆகத் துள்ளாதையுங்கோ என்றொரு செய்தி கொடுக்கத்தான்.இந்தியா சிங்களவனுக்கோ தமிழனுக்கோ சார்பான நாடல்ல.எவன் கை கொஞ்சம் எழும்புதோ அப்போது மற்றவனைக் கொஞ்சம் தட்டிக் கொடுக்கும்.

இதை விளங்காமல் நாங்கள் எந்த காட்டு கத்து கத்தினாலும் ஒரு பிரயோசனமில்லை.இது இந்தியா மாத்திரமல்ல உலகமே இந்த ஒரு ஒழுங்குமுறயில் தான் இயங்குது.கடைசி நாங்கள் இந்தியாவிற்கருகில் இருந்து விட்டோம் வேறு வல்லரசுக்களுக்கு பக்கத்தில் இருந்து போராடுபவர்களை கேட்டுப் பாருங்கள் (சவுத் அமெரிக்க நாடுகள்,அயலான்ட்,செஸ்னியா,தீபெத்) இந்தியா எவ்வளொவோ திறம் என்பார்கள்.

கட்டப் பொம்மன் படம் எல்லாம் இனி சரிவராது.சிங்களவனுக்கு உது தெரியும்.அவன் என்ன மாதிரி எல்லோருடனும் காய் நகர்த்துகின்றான்.நாங்கள் எல்லாவற்றிற்கும் அடியடா பிடியடா என்றால் இப்படியே அழிந்து கொண்டே போகவேண்டியதுதான்.

இது புலிகளைவிட மற்ற அரசியல் தலைவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. முள்ளிவாய்க்கால் போன்றோரு நிலை வராமல் விட்டிருந்தால் தான் அதிசயம்.சனம் சாகிறதென்பது உலகிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இதை தெரிந்திருந்தும் தமது பிழைப்பிற்காக வாலாட்டி நின்ற புலம் பெயர் தமிழரில்தான் முழுப் பிழையும்.

இது பெரிய தியறி இல்லை.அன்றாடம் நமக்கு வேலையில் நடக்கும் நிகழ்வு போன்றதே.எத்தனை கேவலமான பொஸ் மாரை நாம் அனுசரித்து போவதில்லையா? அகற்காக நாம் அவனுக்கென்ன அடிமையாக இருக்கின்றோம்.அவனிடம் நாம் அனுசரித்து கொண்டுவரும் பணத்தில் தானே நாம் சுதந்திரமாக வீட்டில் குழந்தை குட்டிகளுடன் வாழுகின்றோம்.

இந்தியா தன்னை பிக்பொஸ் என்று சொல்லுது கொஞ்சம் அனுசரித்து போவதுதான் புத்தி.

கொஞ்ச பேர் மாலை தீவை பிடிச்சவை தெரியுமோ இந்தியா அனுசரணையோடு தான்? பிறகு எல்லாம் பிசகியவுடன் என்ன நடந்தது என்பதை நான் சொல்ல தேவையில்லை.

பிறகு முகுந்தனை போட்டு தள்ள மீரான் மாஸ்டரை பாவித்தது.சித்தார்த்தன் மட்டும் குறைவோ??

ரெலோவின் இயக்க பிரிவுக்கு தாசை பாவித்தது.

பின்னர் ஈபிடிபிக்குள் பிளவுக்கு சுபத்திரனை பாவித்தது.

பிறகு மக்களை காக்க வெளிக்கிட்ட இந்திய கூலி படை செய்த அராஜகங்கள் சொல்லில் அடங்காது. இவர்களுக்கு துணை போன ஆட்கள் இன்று மக்களால் இனம் காணப்பட்டுள்ளார்கள். கள்ள வாக்கு பெற்று வந்தவர்கள் எல்லோரையும் நன்றாகவே தெரியும்.

எப்படி தமிழ் மக்கள் விடுதலை என வெளிக்கிட்டவர்கள் தறுதலையானவர்கள் என தெரிவிக்க முடியுமா? புலிகளில் பிழை இருக்கலாம். ஆனால் கடைசி வரை தமது மக்களுக்காக இரத்தம் சிந்தியவர்கள் அவர்கள் மட்டுமே.

உங்களது வெறுப்புக்களை புலிகள் மீதோ அல்லது தமிழ் மக்கள் மீதோ காட்டாமல் நீங்கள் யாரென கூறி எழுதுங்கள்.

போரட என்று போன பல பேர் ரோ விடம் விலை போனார்கள் என்றால் பிறகு இவர்களுக்கென்ன போராட்டம்.

விலை போவது வேறு அனுசரித்து நடப்பது வேறு.டெல்கியில் இருக்கும் போது பல ரோ வினருடன் எனக்கு தொடர்பு இருந்தது.நாங்கள் ஒளிக்க நினைக்கும் விடயங்களை கூட இவர்களுக்கு எப்படியோ கசிந்துவிடும். முன்பும் ஒருமுறை எழுதியிருந்தேன் முக்கிய ரோ அதிகாரி என்னிடம் சொன்னார்" உங்களது இயக்கங்களில் சூத்தை இருக்கின்றது எனத்தெரியும் அதை அடைக்க முயற்சிக்கின்றோம், இப்போ பார்த்தால் சிலது விசப் பல்லுகள் போல கிடக்கு, புடுங்கிப் போடுவம்" என்றார்.

இதை டெல்கியில் இருந்த ரிப்போட்டர்கள் பலரும் சொன்னார்கள். பங்களாதேசில் "முத்தி வாகினி' களுக்கு நடந்தது, உங்களுக்கு நடக்கக் கூடாது என்றால் முடிந்தவரை அவர்களிடம் தள்ளி இருங்கள் என்று.ராஜீவ் பிரதமராகி முதலாவது கூட்டத்திலேயே இயக்கத் தலைவர்களை "போய்ஸ்" என்று விளித்தார் அதற்கு அப்போதே வை.கோ ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

எங்களுக்கு இன்னமும் புரியாத அரசியல் இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு,பல இனத்தவரை கொண்டது.அன்றாடம் அங்கு நடக்கும் இறப்புகளும்,குற்றங்களும்,பாலியல் வல்லுறவுகளும் எண்ணிலடங்காதவை.நியாயம்,அநியாயம் பார்த்து அவர்கள் ஆட்சி நடாத்துவதில்லை.அவர்களை எட்ட வைக்காமல் நாங்கள் அங்கு போனது பெரும் பிழை,அதை விளங்கியவுடன் பட்டும் படாமல் விலகியிருக்கலாம்,அதைவிட்டு எதிர்த்தால் இல்லாமலே போய் விடுவோம்.

டெல்கியில் தனி ஒருவனாக அய்.அய்.டி ,நேரு யுனிவேர்சிட்டியில் 2 நாட்கள் எமது பிரச்சனை பற்றி அப்போதே கண்காட்சி வைத்தேன்.ஒரு சைக்கிள்,ஒரு ஜோல்னா பை,பெரிய தாடி,சப்பாத்தியும் பருப்பும், ஜயோ அது ஒரு நிலாக்காலம்.நோத்,சவுத் அவனியூக்களில் சைக்கிளில் திரிந்த காலம்,பாழாய்போன நினைவுகள்

புலத்தில் இது போன்ற மகாநாடுகளை நடத்தும் எண்ணம், அரசு, அவைக்காரருக்கு இல்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டினி கிடந்து செத்தாலும் இந்தியாவில குத்தின அரிசியெண்டா வேண்டாம்....எண்டு ஆளாளுக்கு :lol:

யோவ் அர்ஜுன் . ஜாக்கிரத ஓவரா மனசுக்கு பட்டத எழுதுன நாலு பேர் சேர்ந்து வந்து துரோகி பட்டம் கட்டி சைடுல தள்ளிருவோம் ஆமாம்

பட்டினி கிடந்து செத்தாலும் இந்தியாவில குத்தின அரிசியெண்டா வேண்டாம்....எண்டு ஆளாளுக்கு

அது தான் இவர்கள் உலகால் கவனிக்க படாத இனமாக இருக்கின்றனர் :lol::(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரட என்று போன பல பேர் ரோ விடம் விலை போனார்கள் என்றால் பிறகு இவர்களுக்கென்ன போராட்டம்.

விலை போவது வேறு அனுசரித்து நடப்பது வேறு.டெல்கியில் இருக்கும் போது பல ரோ வினருடன் எனக்கு தொடர்பு இருந்தது.நாங்கள் ஒளிக்க நினைக்கும் விடயங்களை கூட இவர்களுக்கு எப்படியோ கசிந்துவிடும். முன்பும் ஒருமுறை எழுதியிருந்தேன் முக்கிய ரோ அதிகாரி என்னிடம் சொன்னார்" உங்களது இயக்கங்களில் சூத்தை இருக்கின்றது எனத்தெரியும் அதை அடைக்க முயற்சிக்கின்றோம், இப்போ பார்த்தால் சிலது விசப் பல்லுகள் போல கிடக்கு, புடுங்கிப் போடுவம்" என்றார்.

இதை டெல்கியில் இருந்த ரிப்போட்டர்கள் பலரும் சொன்னார்கள். பங்களாதேசில் "முத்தி வாகினி' களுக்கு நடந்தது, உங்களுக்கு நடக்கக் கூடாது என்றால் முடிந்தவரை அவர்களிடம் தள்ளி இருங்கள் என்று.ராஜீவ் பிரதமராகி முதலாவது கூட்டத்திலேயே இயக்கத் தலைவர்களை "போய்ஸ்" என்று விளித்தார் அதற்கு அப்போதே வை.கோ ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

எங்களுக்கு இன்னமும் புரியாத அரசியல் இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு,பல இனத்தவரை கொண்டது.அன்றாடம் அங்கு நடக்கும் இறப்புகளும்,குற்றங்களும்,பாலியல் வல்லுறவுகளும் எண்ணிலடங்காதவை.நியாயம்,அநியாயம் பார்த்து அவர்கள் ஆட்சி நடாத்துவதில்லை.அவர்களை எட்ட வைக்காமல் நாங்கள் அங்கு போனது பெரும் பிழை,அதை விளங்கியவுடன் பட்டும் படாமல் விலகியிருக்கலாம்,அதைவிட்டு எதிர்த்தால் இல்லாமலே போய் விடுவோம்.

டெல்கியில் தனி ஒருவனாக அய்.அய்.டி ,நேரு யுனிவேர்சிட்டியில் 2 நாட்கள் எமது பிரச்சனை பற்றி அப்போதே கண்காட்சி வைத்தேன்.ஒரு சைக்கிள்,ஒரு ஜோல்னா பை,பெரிய தாடி,சப்பாத்தியும் பருப்பும், ஜயோ அது ஒரு நிலாக்காலம்.நோத்,சவுத் அவனியூக்களில் சைக்கிளில் திரிந்த காலம்,பாழாய்போன நினைவுகள்

அப்படி ஒரு காலம் இருந்தது உண்மைதான் ஆனால் இபோது நிலமை கைமீறி போய்விட்டது, சீனா என்று இலங்கைக்குள் நுளைந்ததோ அபோதே இந்தியா சிங்கிள் ரீக்கு சிங்கி அடிக்க தொடங்கி விட்டது, அதற்கான ஒரு ஜில்மால் விளையாட்டுதான் உது ஆனால் ரூ லேட்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் அர்ஜுன் . ஜாக்கிரத ஓவரா மனசுக்கு பட்டத எழுதுன நாலு பேர் சேர்ந்து வந்து துரோகி பட்டம் கட்டி சைடுல தள்ளிருவோம் ஆமாம்

ஏன் எப்பொழுதுமே துரோகியென முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயம்,

அல்லது தேசியப் பற்றாளன் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடவேண்டுமென்ற ஏக்கம்.

இந்த இரண்டு துருவங்களுக்கும் அப்பால் இது இரண்டிற்கும் இடையில் யதார்த்தமாகச் சிந்தித்துச் செயற்படும்

பெருந்தொகை மக்களும் இருக்கிறார்களே.

உண்மையில் எமது நிலை என்ன?

எமது பலம் எது? பலவீனம் எது?

உலக நடப்பு எவ்வாறு உள்ளது?

இவற்றைச் சிந்தித்து நடைமுறைச் சாத்தியமானவர்களாகச் செயற்படுவதில் தயக்கமென்ன?

இதில் தவறு என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.