Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாராயத்திற்கு ஓட்டு போடும் மக்கள் என யாழ்குடா நாட்டு மக்களை கேவலப்படுத்தியுள்ளார் பத்மினி சிதம்பரநாதன்..

Featured Replies

சாராயத்திற்கு ஓட்டு போடும் மக்கள் என யாழ்குடா நாட்டு மக்களை கேவலப்படுத்தியுள்ளார் பத்மினி சிதம்பரநாதன்..

சைக்கிள் சின்னத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பத்மினி சிதம்பர நாதன் குமுதம் றிப்போட்டர் பத்திரிகைக்காக வழங்கிய பேட்டியில் யாழ்ப்பாண மக்கள் பணத்திற்காகவும் சாராயத்திற்காகவும் ஓட்டுப்போட்டுவிட்டார்கள் என யாழ்ப்பாண மக்களையே தமிழ்நாட்டு பத்திரிகையில் கேவலப்படுத்தியுள்ளார்..

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித் துள்ளது. விரைவில், புதிய பிரதமர் பதவி ஏற்கப்போகிறார். அவர் நிச்சயம் தமிழராக இருக்கப் போவதில்லை.

இந்தப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னெப்போதுமில்லாத அளவுக்கு ஈழத்தமிழர்கள் தேர்தலைப் புறக்கணி த்திருக்கிறார்கள். தமிழ்ப் பகுதிகளில் வெறும் 18 சதவிகிதமே வாக்குகள் பதிவாகின. கடந்த (2004) நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்குப் பகுதிகளில் மொத்தமுள்ள 23 இடங்களில் 22 இடங்கள் வெற்றி பெற்ற த.தே.கூட்டமைப்பு மூன்று அணிகளாகப் பிரிந்து இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. தமிழினப் படுகொலைக்குத் துணைபோன இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவை அதிபர் தேர்தலில் ஆதரித்ததால் த.தே. கூட்டமைப்பிலிருந்து விலகிய சிவாஜிலிங்கத்தின் த.தே. விடுதலைக் கூட்டமைப்பும், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய கோரிக்கைகளைக் கைவிட்டதற்காக த.தே. கூட்டமைப்பிலிருந்து விலகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் த.தே. மக்கள் முன்னணியும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டன.

ராஜபக்ஷே மீண்டும் பெற்ற வெற்றி, தமிழர் கட்சிகளிடையே ஏற்பட்ட பிளவுகள் பற்றி மக்கள் முன்னணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பத்மினி சிதம்பரநாதனிடம் பேசினோம்.

நீங்கள் கடுமையாக எதிர்த்த த.தே. கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதே?

‘‘உண்மையிலேயே மக்கள் சொல்லமுடியாத மனக்காயங்களுடன் இருக்கிறார்கள். இந்தத் தேர்த லில் பெருமளவு தமிழ்மக்கள் வாக்களிக்கவே இல்லை. தங்கள் மனக்காயங்கள் ஆற்றப்படும் வரை தங்கள் எதிர்காலம் மற்றும் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய மனநிலைக்கு அவர்களால் வரமுடியாது. தங்களுடைய அ ன்றாட வாழ்க்கையை ஒழுங்குபடுத்த முடியாத சூழலில் நடந்த தேர்தலில் மிகக் குறைவான மக்களே வாக்களித்திருக்கிறார்கள். இதே சூழலில் ஏற்கெனவே நடந்த நகரசபை மற்றும் அதிபர் தேர்தல்களிலும் தமிழ்மக்கள் பெருமளவு வாக்களிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.’’

த.தே. கூட்டமைப்பை எதிர்த்த உங்களுடைய மக்கள் முன்னணி, சிவாஜிலிங்கத்தின் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் வெற்றி பெறவில்லையே?

‘‘ஊடகங்கள் எங்களுக்குப் போதிய இடம் தரவில்லை. த.தே. கூட்டமைப்பில் இருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டதும், த.தே. கூட்டமைப்பு மூன்று பிரிவாகப் பிரிந்து போட்டியிட்டிருக்கிறார்கள் என்பதும் மக்களுக்குத் தெரியவே இல்லை. இன்னும் நாங்கள் ஒரே வீட்டிற்குள் ஒன்றாக இருக்கிறோம் என்றுதான் மக்கள் நினைத்துக் கொண் டிருக்கிறார்கள்.

இந்தச் சீரழிந்த அரசியல் கலாசாரத்திலும் வடக்கில் யாழ் மாவட்டத்தில் 6362 பேர் எங்களை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். இது அங்கே பதிவான வாக்குகளில் 4.28 சதவிகிதம். இங்கே ஒருவித பயச்சூழல் நிலவுகிறது. அரசியல் பிரசார கூட்டங்களுக்கு யாரும் வருவதில்லை. வந்தாலும் லைட் வெளிச்சத்தில் நிற்க மாட்டார்கள். மறைந்து இருந்துதான் பிரசாரங்களைக் கேட்பார்கள். இந்த நிலையில் எங்களுக்குக் கிடைத்த ஆதரவு ஆறுதலாக இருக்கிறது; உறுதியாக இருக்கிறது. இது எங்களது முதல் வெற்றிப்படி.’’

அரசியல் கலாசாரம் சீரழிந்துவிட்டது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

‘‘கணிசமான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்கவே இல்லை. தேர்தலில் ஓர் இடத்தில் கூட மக்கள் வரிசையில் நின்று வாக்களித்ததாக நாங்கள் காண முடியவில்லை. பெ ரும்பாலும் கையூட்டுப் பெற்றவர்கள் மட்டுமே இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் உங்கள் தமிழ்நாட்டு அரசியல் கலாசாரம் இங்கேயும் தொடங்கிவிட்டது. அதனால்தான் இங்கே அரசியல் கலாசாரம் மிகவும் சீரழிந்துவிட்டது என்று சொல்கிறோம். தேர்தல் நாளன்று எங்களிடம் வந்த ஒருவர், ‘வாக்களிக்க சாராயம் தருவீர்களா?’ என்று நேரடியாகவே கேட்டார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கொள்கைக்காக வாக்களித்தனர். இப்போது தமிழர்கள் சாராயத்துக்கும், காசுக்கும் வாக்களிக்கத் தயாராகிவிட் டார்கள். அதையும் வெளிப்படையாகக் கேட்கிறார்கள். மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு சில கிராமங்களில் இன்னும் கொள்கைகளுடன் இருக்கிறார்கள்.’’

த.தே. கூட்டமைப்பு வெற்றி பெற்றதற்கு திருமங்கலம் பாணி தேர்தல் நடந்ததுதான் காரணமா?

‘‘ஆம். த.தே. கூட்டமைப்பினர் பெருமளவு பணத்தை செலவு செய்துள்ளனர். அவர்களது தொண்டர்கள் பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்தனர். கூலிக்கு வேலை செய்யும் தொழிலாக அரசியல் ஆகிவிட்டது. ஓட்டுப் போட காசும், சாராயமும் கேட்கும் நிலைமை இவர்களால்தான் வந்திருக்கிறது.’’

த.தே. கூட்டமைப்பினர் நாடாளுமன்றம் செல்கின்றனர். அவர்களால் தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா?

‘‘த.தே. கூட்டமைப்பினரால் கௌரவமான தீர்வை தமிழ்மக்களுக்குப் பெற்றுத் தர முடியாது. ஏற்கெனவே அவர்கள் தேர்தல் அறிக்கையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தீர்வுக்கு எதிராக இலங்கை அரசிடமிருந்து அதிகாரங்களைக் கேட்டுப் பெறுவது என்ற தீர்வை முன்வைத்தனர். இந்தத் தேர்தல் வெற்ற¤ மூலம் அதிகாரப் பகிர்வு என்கிற தீர்வை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று கூட்டமைப்பினர் சொல்வார்கள்.’’

நீங்கள் குறிப்பிடும் அரசியல் கலாசார சீரழிவுக்கு புலிகள் இயக்கம் இல்லை என்பதை ஒரு காரணமாக சொல்லலாமா?

‘‘நிச்சயம் சொல்லலாம். புலிகள் இயக்கம் இருந்த காலங்களில் கொள்கைகள்தான் முக்கியமானவையாக இருந்தது. த.தே. கூட்டமைப்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றியெல்லாம் கவலையின்றி வாக்களித்தனர். 2004 தேர்தலில் முதன்முதலாக நான் போட்டியிட்டபோது என் முகம் கூட யாருக்கும் சரியாகத் தெரியாது. ஆனால் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். இப்போது கூட்டமைப்பில் இருந்து எங்களை வெளியேற்றிவிட்டு, கொள்கையிலிருந்து தாமும் வெளியேறி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி த.தே.கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது.’’

ராஜபக்ஷேவின் வெற்றியால் தமிழர்களின் உரிமைகள் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதா?

‘‘அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், தமிழ்மக்களுக்கான தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தராது என்பது மட்டும் நிச்சயம்’’ என்று முடித்துக்கொண்டார் பத்மினி சிதம்பரநாதன்.

வே.வெற்றிவேல்

சாராயத்திற்கு ஓட்டு போடும் மக்கள் என யாழ்குடா நாட்டு மக்களை கேவலப்படுத்தியுள்ளார் பத்மினி சிதம்பரநாதன்..

தேர்தல் நாளன்று எங்களிடம் வந்த ஒருவர், ‘வாக்களிக்க சாராயம் தருவீர்களா?’ என்று நேரடியாகவே கேட்டார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதில் என்ன கேவலப்படுத்தல் உள்ளது? பணத்துக்காக உயிரை சர்வசாதரணமாக எடுக்கும் நிலையில் வீதிக்கொரு கோஸ்டி உருவாகிக்கொண்டிருக்கையில் சாராயத்துக்கு ஓட்டு சாத்தியமற்றதா?

யாழ்ப்பாணம் பாரதி வீதியில் வசித்து வந்த 73 வயதுடைய சின்னையா செல்லத்துரை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏ 9 வீதி பகுதியில் பாழடைந்த வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் இந்த இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 15 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியபோது தங்கநகைகளையும் குறித்த ஒரு பணத்தொகையையும் தம்முடன் எஐத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மானிப்பாய் பார்வதி நலன்புரி நிலையத்தில் 13 வயது மாணவன் ஒருவனை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது

குறித்த வானில் மேலும் சில சிறுவர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தலில் 60% மக்கள் தங்கள் கொள்கைக்காகவும் விரக்தியினாலும் 20% மக்கள் அச்சுறுத்தலினாலும் வாக்களிக்கவில்லை.

அளிக்கப்பட்ட வாக்குகளில் குறைந்தது 1% வாக்குகளாவது சலுகைகளுக்காகவே அளிக்கப்பட்டது.

வாத்தியார்

.............

பத்மினி "ஆன்ரி" எப்போது இதற்கு மறுப்பறிக்கை விடப்போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்,

அவர் இப்படி ஒரு கருத்தைக் கூறவில்லை என்றால் மறுப்பறிக்கை கட்டாயம் வரும்.

உண்மையாக நடந்ததை கூறியிருந்தால் எதற்கு மறுப்பறிக்கை?

வாத்தியார்

................

இறைவன்,

அவர் இப்படி ஒரு கருத்தைக் கூறவில்லை என்றால் மறுப்பறிக்கை கட்டாயம் வரும்.

உண்மையாக நடந்ததை கூறியிருந்தால் எதற்கு மறுப்பறிக்கை?

வாத்தியார்

................

அநேகமாக அவர் அப்படிக் கூறியிருக்கமாட்டார் என்பதுதான் எனது எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்,

அவர் அப்படிக் கூறாவிட்டாலும் சலுகைகளுக்காக வாக்களிக்கும் மக்கள் ஈழத்தில் இன்னும் இருக்கின்றார்கள் என்பது எனது எண்ணம்.

வாத்தியார்

.................

இறைவன்,

அவர் அப்படிக் கூறாவிட்டாலும் சலுகைகளுக்காக வாக்களிக்கும் மக்கள் ஈழத்தில் இன்னும் இருக்கின்றார்கள் என்பது எனது எண்ணம்.

வாத்தியார்

.................

சலுகைகளும் இப்போது தேவைதான். ஆனால் சாராயத்திற்காக வாக்களிப்பதென்பது, எண்ணிக்கையில் சொல்லப்படக் கூடியவர்களாகத்தானிருக்கும்.

  • தொடங்கியவர்

இறைவன்,

அவர் அப்படிக் கூறாவிட்டாலும் சலுகைகளுக்காக வாக்களிக்கும் மக்கள் ஈழத்தில் இன்னும் இருக்கின்றார்கள் என்பது எனது எண்ணம்.

வாத்தியார்

.................

அப்படியானால் 2004 ம் ஆண்டுத் தேர்தலிலும் மக்கள் மதுவிற்கு வாக்களித்தார்களா?? மதுவிற்கு வாக்களித்தார்கள் என்று ஒத்துக்கொள்கிறீர்களா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாராயத்திற்கு ஓட்டு போடும் மக்கள் என யாழ்குடா நாட்டு மக்களை கேவலப்படுத்தியுள்ளார் பத்மினி சிதம்பரநாதன்

ம்....பிரியாணிக்கு வாக்களிச்சினம் எண்டு சொல்லியிருக்கோணுமோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னதில் தவறில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல.. இந்திய உபகண்டம் பூராவும் சன நாய் அகம் துடைத்தழிக்கப்பட்டு அது மறுமலர்ச்சி ஊட்டப்பட வேண்டும்.

மக்களை கஸ்டத்துக்குள் தள்ளிவிட்டு.. பின்னர் அவர்களை மீட்க வரும் மீட்பர்களாக அவதாரம் எடுத்து வரும் ஆயுத சண்டித்தன.. வன்முறை.. அரசியல் ஜனநாயகம் அல்ல.

மக்களை குடிக்கும் சலுகைக்கும் பணத்திற்கும் ஏங்க வைத்து வாக்கு வாங்குவது ஜனநாயகம் என்று எங்கும் சொல்லப்படவில்லை.

இராணுவ அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு இராணுவ ஆதிக்கத்துக்குள் மக்களை வைத்துக் கொண்டு துணை இராணுவக் குழுக்களை அரசியல் கட்சிகளாக இனங்காட்டிக் கொண்டு சமூகச் சீரழிவுகளை கட்டவிழ்த்துவிட்டு வாக்குச் சேகரிக்கும் பேடித்தனங்களும் ஜனநாயகம் என்று கூறப்படும் நிலை இந்திய உபகண்டம் எங்கனும் விரிந்து கிடக்கிறது.

குடும்ப அரசியல் கோலோஞ்சிக் கிடக்கிறது. இதுதான் ஜனநாயகமா. இப்படியே போனால் நிச்சயம் மக்கள் ஜனநாயகத்தை வெறுத்து ஒதுக்கும் நிலையும் தீவிரவாத கொள்கைகளுமே வளரும். இந்திய உபகண்டம் அதற்கு சாட்சியாக நிற்கப் போவது மட்டும் உறுதி.

இந்திய உபகண்ட நாடுகள் எங்கனும் ஜனநாயகம் மறுமலர்ச்சி அடைய வேண்டும். குடும்ப அரசியல்.. இராணுவ பிரச்சன்ன வாக்குப்பதிவுகள்.. துணை இராணுவக் குழுக்கள் அரசியல் கட்சிகளாக இயங்குதல்.. உட்பட சமூக விரோத செயல்களை ஊக்குவித்தல்.. வன்முறைகளால் மக்களை அச்சுறுத்தி வாக்கு வசூலித்தல் என்று அனைத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளும் ஜனநாயகம் ஆக்கப்பட்டிருப்பது.. கொடுமை. வேதனைக்குரியது.

இப்படியே போனால் அமெரிக்க ஜனநாயகம்.. இந்த உலகில் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாது. அணுகுண்டுகளை நிலைநிறுத்தி வைத்துவிட்டு ஜனநாயகத்தை திணிப்பதையே செய்ய முடியும். அது மக்கள் ஆட்சியல்ல. அமெரிக்காவின் வல்லாதிக்க சர்வாதிகார ஆட்சியாகவே அது நோக்கப்படும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாராயத்திற்கு ஓட்டு போடும் மக்கள் என யாழ்குடா நாட்டு மக்களை கேவலப்படுத்தியுள்ளார் பத்மினி சிதம்பரநாதன்

சரி சரி....மாகாணசபை லெக்சன் வருது தயார்பண்ண வேணாமோ?

புலம்பெயர்ந்த இருக்கிறவை சைக்கில் ஓட றெடியாம்..... சாராயம் ஊத்த தருவினமோ கேட்டு இப்பவே துடங்கினாதான் முதலமைச்சியா வரலாம்... இலவச அறிவுரை தந்திருக்கு. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி....மாகாணசபை லெக்சன் வருது தயார்பண்ண வேணாமோ?

புலம்பெயர்ந்த இருக்கிறவை சைக்கில் ஓட றெடியாம்..... சாராயம் ஊத்த தருவினமோ கேட்டு இப்பவே துடங்கினாதான் முதலமைச்சியா வரலாம்... இலவச அறிவுரை தந்திருக்கு. :lol::lol:

அரசுகள்.. தேர்தல்களை மக்கள் மீது திணிப்பதை தடுக்க சட்டம் கொண்டு வரணும். இந்தத் தேர்தல் கொடுமைகளை எப்படித்தான் சமாளிக்கப் போகுதுகளோ உலக மக்கள். அதுகள் தேர்தல் வேணாம் என்று நின்றாலும்.. கதிரையில குந்தி இருந்து வரிப்பணத்தில வெட்டி வயிறு வளர்க்கிறதுகள்.. சனத்தை சும்மா இருக்க விடுகுதுகள் இல்லை. இதில இதுக்கு சனநாயகம் என்று ஒரு பெயர். அதுக்கு அமெரிக்கா என்ற பெயரில் ஒருவர் தானைத்தளபதி. :lol: :lol: :D

சாராயத்திற்கு ஓட்டு போடும் மக்கள்

ராஜபக்ஷேவின் வெற்றியால் தமிழர்களின் உரிமைகள் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதா?

பாதை திறந்தாச்சு, திறந்தவெளி சிறைச்சாலை திறந்தாசு, சாப்பாடு போக்குது தமிழர்களுக்கு இனி என்ன பிரக்சினை இருக்கின்றது?

இப்படி சொல்கின்றார் மகிந்த.

  • கருத்துக்கள உறவுகள்

பாதை திறந்தாச்சு, திறந்தவெளி சிறைச்சாலை திறந்தாசு, சாப்பாடு போக்குது தமிழர்களுக்கு இனி என்ன பிரக்சினை இருக்கின்றது?

இப்படி சொல்கின்றார் மகிந்த.

பாதையை மூடியவனும் யானே.. சாப்பாட்டுக்கு தடை போட்டவனும் யானே.. குண்டு கொட்டியவனும் யானே.. கொலைக்களம் செய்தவனும் யானே.. இன்று உபயம் அளிப்பவனும் யானே. ஏன்னா.. எனக்கு ஆமா போடா இருக்கு கூட்டம் இன்னும்.. தமிழர் என்று கொண்டு.

மகிந்தவின் சந்தியில்.. சிந்து.

எது எப்படி இருந்தாலும் இலங்கை வரலாற்றில் மகிந்த சாதிச்சவர் தானே? துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட வைத்தவர் தானே :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படி இருந்தாலும் இலங்கை வரலாற்றில் மகிந்த சாதிச்சவர் தானே? துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட வைத்தவர் தானே :lol::lol:

ஓமோம் மகிந்த கொழும்பில இருந்து கொண்டு ஆடுரா ஆடுராமா என்று பல்டி அடிச்சுக் கொண்டு வன்னிக்கு வந்து விரட்டி அடிச்சவர்.. அதில துண்டைக் காணம் துணியக் காணம் என்று ஓடினவை.

மகிந்தவின்ர வெள்ளை வேட்டியில ஒரு தூசி கூட பட்டதில்ல.. அவர் வந்து விரட்டி அடிச்சாராம். அதில ஓடிட்டாங்களாம். ஓடினது.. இவரின்ர முற்பிறவி எதிரிகளாம். நீங்கள் எல்லாம் தமிழர்கள்.. அதிலும் விடிவெள்ளிகள் என்ற நாமம் வேற.

விரட்டி அடிக்க.. கஸ்டப்பட்ட அமெரிக்கனும்.. இந்தியனும்.. சீனனும்.. ரஷ்சியனும்.. சொலவாக்கியனும்.. பாகிஸ்தானியும்.. ஜப்பான்காரனும்.. இஸ்ரேல்காரனும்.. வியட்நாமியனும்.. தான் ஏண்டா.. இதில கைவைச்சம் என்று கொண்டிருக்கிறாங்க. இருந்த நூலையும் விட்டிட்டு பட்டத்தை எப்படி பிடிக்கப் போறம் என்று கொண்டு. :lol: :lol:

இன்று இராணுவதோடு சேர்ந்து யாழ் சனங்கள் விளையாட்டுப்போட்டி அது இது என்று வைக்கின்றார்கள் என்றால் அது அவர்களின் சுயவிருப்பின்மையால் தானா? இதுவரை இனம் தெரியாதோரின் துப்பாக்கிகளுக்கு பயந்தவார்கள் இன்று அவர்கள் விரட்டி அடிக்கபட்ட பின் சுயவிருப்புடன் ஈடுபடுகின்றார்களா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இராணுவதோடு சேர்ந்து யாழ் சனங்கள் விளையாட்டுப்போட்டி அது இது என்று வைக்கின்றார்கள் என்றால் அது அவர்களின் சுயவிருப்பின்மையால் தானா? இதுவரை இனம் தெரியாதோரின் துப்பாக்கிகளுக்கு பயந்தவார்கள் இன்று அவர்கள் விரட்டி அடிக்கபட்ட பின் சுயவிருப்புடன் ஈடுபடுகின்றார்களா இல்லையா?

விரட்டி அடிக்கப்பட்டாயிற்று. சுய விருப்பும் வந்தாயிற்று. வந்த வேலையும் முடிந்தாயிற்று. மூட்டை கட்டிக்கிட்டு ஊருக்குப் போக வேண்டியதுதானே. ஏன் இன்னும் அடுத்தவன் வளவிற்க ஆயுதத்தோட நின்று கொண்டு விளையாட்டுப் போட்டி நடத்த வேணும். விளையாட்டுப் போட்டிக்கு ஆயுதமா நீதிபதி. இல்லையே. சுயவிருப்போட விளையாட வாறவை முன் ஏன் ஆயுதத்தை நீட்டிக் கொண்டு முன்னும் பின்னும் அலையுறீனம். ஆக்கள் கற்பழிக்கப்படுகினம். கடத்தப்படுகினம். கொல்லப்படுகினம்..! உதுகளையும் சுயவிருப்பில செய்யச் சொன்னவையோ...????! :lol: :lol:

ஆக்கள் கற்பழிக்கப்படுகினம். கடத்தப்படுகினம். கொல்லப்படுகினம்..! உதுகளையும் சுயவிருப்பில செய்யச் சொன்னவையோ...????!

மச்சினிச்சியில் மகளையும், மகளில் மச்சினிசியையும் காண்பவர்கள் அங்க்கும் இருப்பதால் தான் இவை எல்லாம் நடைபெறுகின்றன. அங்கே உள்ள பெண்களில் பலர் உத்தமிகள் தானே. :lol:

மச்சினிச்சியில் மகளையும், மகளில் மச்சினிசியையும் காண்பவர்கள் அங்க்கும் இருப்பதால் தான் இவை எல்லாம் நடைபெறுகின்றன. அங்கே உள்ள பெண்களில் பலர் உத்தமிகள் தானே. :lol:

உங்கள் அக்கா, தங்கை, மனைவி போல் யாழில் உள்ள மற்றவர்களையும் நினைப்பது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் டாம்,

2004 இல் மட்டுமல்ல 1977 இல் கூட வாக்குகளுக்காக சமையல் பாத்திரத்திலிருந்து புடவையீறாக பணம் வரை வழங்கப்பட்டது.

சுய நலன் சார்ந்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை இவை எல்லாம் இருந்து கொண்டேயிருக்கும்.

வாத்தியார்

..............

இந்திய உபகண்ட நாடுகள் எங்கனும் ஜனநாயகம் மறுமலர்ச்சி அடைய வேண்டும். குடும்ப அரசியல்.. இராணுவ பிரச்சன்ன வாக்குப்பதிவுகள்.. துணை இராணுவக் குழுக்கள் அரசியல் கட்சிகளாக இயங்குதல்.. உட்பட சமூக விரோத செயல்களை ஊக்குவித்தல்.. வன்முறைகளால் மக்களை அச்சுறுத்தி வாக்கு வசூலித்தல் என்று அனைத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளும் ஜனநாயகம் ஆக்கப்பட்டிருப்பது.. கொடுமை. வேதனைக்குரியது.

.

இதை எங்களின் வாழ்நாளில் காணமுடியாது,சில வேளை எங்களின் பூட்டபிள்ளைகளின் காலத்தில் நடக்க வாய்பு உண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அக்கா, தங்கை, மனைவி போல் யாழில் உள்ள மற்றவர்களையும் நினைப்பது தவறு.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கைக்காக வாக்களிக்கும் மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனர் என்பதே உண்மை.பத்மினி சொன்னதில் தவறு இருப்பதாகப் படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.