Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாய

திகதி: 30.04.2010 // தமிழீழம்

உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை பொங்குதமிழில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

இந்த செவ்வியில் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய ராஜபச்ச தெரிவித்திருப்பதாவது:

கடந்த வருடம் ஏப்ரல் 24 ம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபச்சவின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன்.

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம். இந்தியா சிறிலங்கா அதிகாரிகள் குழவாக மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது என இந்தச் செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடாத சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.

வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் செயற்பாடுகள் பற்றி கோத்தபாய விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாவது:

இந்திய நிலைப்பாடு என்பது இந்த யுத்தத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்தது. 1987 ஆண்டு ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை வடமராட்சியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது. அதன் பின்னான காலத்தில் இப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தோம்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும் இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியத் தரப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரத்துறையின் செயலாளர் சிவசங்கர மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம்.

நாம் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்தோம். சிக்கலான விடயங்கள் எழும்போதெல்லாம் நாம் கூடிப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டோம். இதனால் எமது இராணுவம் எந்தவிதமான தடைகளும் இன்றி தமது இராணுவ நடவடிக்கையைத் தொடர முடிந்தது என கோத்தபாய இந்திய அதிகாரிகளுடன் இருந்த இறுக்மான உறவையும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் இந்தியா காட்டிய ஈடுபாட்டையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

கோத்தபாயவின் இந்த சுய வாக்குமூலம் இவ் உண்ணாவிரதம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது அன்றைய தினம் அதிகாலை எவருக்கும் அறிவிக்காது, தான் அண்ணா சமாதிக்கு முன்னர் திடீரென உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார். தமிழக இந்திய ஊடகங்களும் அவ்வாறே எழுதியிருந்தன.

ஆனால் கோத்தபாயவின் நேர்காணலில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு முதல்நாளே இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளமை இந்த உண்ணாவிரதம் என்பதே இந்திய அரசும் தமிழக முதல்வரும் இணைந்து நடத்திய நாடகமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கோத்தபாய தனது நேர்காணலில், இந்திய அதிகாரிகளுடன் ஏற்பட்ட சந்திப்பை அடுத்து சகல இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக தாம் அறிக்கை விட்டதன் மூலம் தமிழகத்திலிருந்து எழுந்திருக்ககூடிய ஆபத்தை தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல்வர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, வன்னியில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தனக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். திமுக ஆதரவு ஊடகங்களும் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவே பிரச்சாரப்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் நேர்காணலைப் பார்க்கும்போது எழும் கேள்வி – இந்த உண்ணாவிரதம் முதல்வர் கருணாநிதியும் இந்திய அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டு நாடகமா அல்லது இந்திய அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து கருணாநிதியை இத்தனை சுலபமாக ஏமாற்றிவிட்டார்களா என்பதுதான்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8581&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கூட்டு நடவடிக்கைளினால்த்தான் எம் உறவுகள் கொத்துக்கொத்தாக அழிந்தது ஊர் உலகறிந்த விடயம்.

இதற்கு பரிகாரமாக செம்மொழித்தலைவன் கருணாநிதிக்கு செங்கம்பள வரவேற்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கொடுங்கள்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும் இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியத் தரப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரத்துறையின் செயலாளர் சிவசங்கர மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம்.

நாம் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்தோம். சிக்கலான விடயங்கள் எழும்போதெல்லாம் நாம் கூடிப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டோம். இதனால் எமது இராணுவம் எந்தவிதமான தடைகளும் இன்றி தமது இராணுவ நடவடிக்கையைத் தொடர முடிந்தது என கோத்தபாய இந்திய அதிகாரிகளுடன் இருந்த இறுக்மான உறவையும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் இந்தியா காட்டிய ஈடுபாட்டையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

இதற்கு அவசியமே இருந்திருக்காது. பெருமளவு இந்திய ராணுவ படுகொலையாளிகள் வன்னி மண்ணில் இருந்தது, வெற்றிகரமான இனப்படுகொலைகளில் அவர்களின் பங்களிப்பு பெரியது என்பது எல்லாருக்கும் தெரியும். இது இப்பிடியிருக்க இவர்கள் சொல்லித்தான் வன்னியில் என்ன நடக்குது என்று இந்திய படுகொளையாளிகளுக்கு தெரிய வேண்டியதில்லை.

தங்களுக்கு மட்டுமே உரிமையில்லாத யுத்த வெற்றியை தங்களுக்கு மட்டுமே உரிமையாக்க முயல்வதை கோத்தபயாவின் அறிக்கைகள் நிருபிக்கின்றன.

சிங்களத்தின் இராஜதந்திர வழியிது. இலங்கை தனது வழிக்கு என்ன வழிநின்றும் எவரையும் கொண்டுவந்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டு. இவ்வளவிற்கும் காரணம் எம்மிடத்தில் அடகு வைப்பதற்குக் கூட எதுவுமில்லாமைதான்.

எப்போழுது இந்தியா நாணயம் (காசு) சிறிலங்காவில் பாவிக்கபோகிறார்களாம்?

  • கருத்துக்கள உறவுகள்

கருணா நிதி உண்ணா விரதம் தொடங்கியவுடன் "" நாம் யுத்த தவிர்ப்புப் பிரதேசங்களில் சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஒரு அறிக்கை விட்டோம்"" என்று கூறும் கோத்தபாய ,தாக்குதல்களை நிறுத்தியதாகக் கூறவில்லை. போர்க் குற்ற விசாரணையின் போது (அப்படி ஒன்று நடந்தால்) இதை ஒரு ஒப்புதல் வாக்கு மூலமாக எடுத்துக் கொள்ளலாம்.

வாத்தியார்

.............

நடந்த இந்த நாசகாரத்தை கோத்தபாயா சொல்லும் வரைக்கும் ஊகிக்கமுடியாத கபோதிகளா நாங்கள்.

இன்னும் சொல்லப்போனால் சமாதான ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் இருந்தே போடப்பட்ட நாசகார வேலைகளும் எங்களுக்குத் தெரியும்.

உங்கள் கூட்டு நடவடிக்கைளினால்த்தான் எம் உறவுகள் கொத்துக்கொத்தாக அழிந்தது ஊர் உலகறிந்த விடயம்.

இதற்கு பரிகாரமாக செம்மொழித்தலைவன் கருணாநிதிக்கு செங்கம்பள வரவேற்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கொடுங்கள்.

15811110.png

Edited by suryaa

எப்போழுது இந்தியா நாணயம் (காசு) சிறிலங்காவில் பாவிக்கபோகிறார்களாம்?

இந்திய பயங்கரவாதிகளின் நாணயம் இங்கு வருமென கனவா?

விரைவில் ஈழக் காசு தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும்.

இந்திய பயங்கரவாதிகளின் நாணயம் இங்கு வருமென கனவா?

விரைவில் ஈழக் காசு தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும்.

ஆசான் சிறிலங்கா காசு தென்னிந்தியாவில் பயன்படுத்தினாலும் பயன்படுத்துவார்கள் ,ஆனால் ஈழகாசு என்பது கனவுதான்

உங்கள் கூட்டு நடவடிக்கைளினால்த்தான் எம் உறவுகள் கொத்துக்கொத்தாக அழிந்தது ஊர் உலகறிந்த விடயம்.

இதற்கு பரிகாரமாக கருணாநிதிக்கு செங்கம்பள வரவேற்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கொடுங்கள்.

கொலைஞரின் வைப்பாட்டிகள் அவரை இலங்கைக்கு விடுவார்களோ தெரியவில்லை.

ஆசான் சிறிலங்கா காசு தென்னிந்தியாவில் பயன்படுத்தினாலும் பயன்படுத்துவார்கள் ,ஆனால் ஈழகாசு என்பது கனவுதான்

சென்னையை உருவாக்கிய பல்லவர்கள், ஈழத்தமிழர் என்பது தெரியாது போல?

இவற்றையெல்லாம் மறைக்கத் தான் இந்திய பயங்கரவாதிகள் முயல்கிறார்கள்.

சென்னையை உருவாக்கிய பல்லவர்கள், ஈழத்தமிழர் என்பது தெரியாது போல?

இவற்றையெல்லாம் மறைக்கத் தான் இந்திய பயங்கரவாதிகள் முயல்கிறார்கள்.

நீங்கள் கொமேடி கிமடி பண்ணவில்லைதானே? :D

கருணா நிதியுடன் சேர்ந்து உண்ணாவிரத நாடகம் போட்டது எவ்வாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கூட பத்தாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா நிதியுடன் சேர்ந்து உண்ணாவிரத நாடகம் போட்டது எவ்வாறு

அய்யா கோத்தபய சொன்னதை பாருங்கள், உண்ணவிரதத்திற்கு முதல் நாளே பொந்திய மேனன் கூப்பிட்டு பேசி இருக்கிறார். ஆனால் கலைங்கரின் வாதம் காலையில் தான் முடிவெடுத்ததாக கூறிக்கொண்டு வந்து உண்ணாவிரத பந்தலில் அமர்ந்தார்.

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு சந்தேகம் உண்டு அதாவது உண்ணாவிரதம் இருந்த அன்றே ஏற்பட்ட சந்தேகம். 6 மணிநேரம் உண்ணாவிரத பந்தலில் உட்கார்ந்தார் எனக்கு தெரிந்து Scan எடுக்கும் முன் வயிற்றை காலியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள் அதற்காக செய்தாரோ.

மேலும் தயாளுவும் ராஜாத்தியும் பந்தலுக்கு வந்தவுடன் இவர் அறிக்கை விட்டார். பண்டார பீதாம்பரம் போர் நிறுத்தம் ஏறபட்டுவிட்டதாக கொடுத்த தகவலின்படி உண்ணாவிரதத்தை கைவிடுவதாக தெரிவித்தார்.

துரோகி கருணாநிதியின் உண்மை முகம் ‍ மறு படியும் ஒருக்கா பாருங்கோ..

கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க

கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,

கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க

சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!

உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து

செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ

கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,

தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க

துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,

ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட

தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்

சப்பாணிக் கழுதையே - இனி

எப்போதும் மறவாது தமிழினம் - உனை

எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!

தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,

முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்

முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்

சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!

எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்

வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்

சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்

சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று

உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்

மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை

உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்

ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்

அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை

கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்

இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!

தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!

முடிந்தது உன் ஆட்சி!

மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!

அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை

அப்படியே பொசுக்கட்டும்!

ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!

அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!

அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!

அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது

சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

Edited by பையன்26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.