Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்புக் கண்ணாடிக் கள்வனே ஏன் இந்த மெளனம்..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamils66.jpg

(முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அமெரிக்காவில் அஞ்சலி – 2010)

கறுப்புத் தான் உன் உடம்பு

மனசு என்னே வெள்ளை..

தமிழகம் ஆள வந்த முதல்வன் நீ

எங்கப்பன் நீயென்று..

கறுப்பா.. கிழவா

உன்னை

நம்பிய ஈழத்து அப்பாவிகள்

எண்ணங்கள்

மரித்த நாள்

மே 18...!

"அன்னை" சோனியாவின்

புன் சிரிப்பில் பொற்குவியல்

கண்டவனே..

மேடைகள் தோறும்

நடிகைகளை குலுங்கவிட்டு

ரசிக்கும்..

கறுப்புக் கண்ணாடிக் கள்வனே..

கவிதையும் கடிதமும்

உன் ஆயுதங்கள்..

அவையே "என் அக்னி ஏவுகணைகள்" என்றாய்

ஈழத்தமிழரை காக்கும் "நாகாஸ்திரம்" என்றாய்

ஆனால்..

அவை சாதித்ததுவோ

தமிழரின் சாவிலும்

உன் குடும்பத்து வாரிசுகளுக்கு

நாற்காலி...!

வீணனே..

குஷ்புவோடு வீணி வடித்தது போதும்

தமிழன் திராவிடன் என்று

தமிழகத்தை கூவி ஏலம் போட்டதும் போதும்..

30 மைல் தொலைவில்

"அன்னை" சோனியா பரிசளித்த

எரி குண்டுகள் வெடிக்க

அமைதி பூத்துக் குலுங்குவதாய்

கதையளக்க ஆளில்லை தேடுகிறோம்..

வா..!

ஈழத்து

கொலைக்களத்தில்

தமிழிச்சி உடல் குதறியவனுக்கு

சிங்கள இனவெறியனுக்கு

தமிழிச்சி கனிமொழியாள்

தன் கரம் பிடித்து பொன்னாடை போர்த்தியது

மறக்கவில்லை லொள்ளனே..

எங்கே உன் கவிதைகள்

வார்த்தைகள் இன்றி செத்துவிட்டனவா..??!

எங்கே உன் கடிதங்கள்

காகிதங்கள் தீர்ந்து

காணாமல் போயினவோ..??!

பொய் பேசும் உன் வாழ்வில்

மெய்யோடு உரிமையோடு

தமிழன் வாழ்வதில் பிடிப்பில்லை

நாம் அறிவோம்..

இன்னும் உன்னை

உலகத் தமிழ் தலைவன் என்று

வணங்குகிறார் சிலர்..

உலகமே முடிவெழுதிய

முள்ளிவாய்க்கால்

தமிழர் இருப்பழிக்கும்

ஓர் படுகொலையே

என்பதை ஏற்க மறுக்கிறாய்

ஏன்..??!

உன்னவள் சோனியா

மனம் கோணிடும் என்றா

ராஜீவ் ஆவி

உன்னை ஆட்டிப்படைக்கும் என்றா..??!

உலக சாதனையாய்

3 மணி உண்ணா நோன்பிருந்தவனே

எதுகையும் மோனையும் கொண்டு

தமிழனை மயக்கி

அரியாசணம் பல கண்டவனே

எங்கே உன் செம்மொழித் தமிழ்

முள்ளிவாய்க்காலுக்கு

ஓர் இரங்கல் கூடவா பாட மறுக்கிறது...???!

ஈவிரக்கம் அற்றவனே

மனிதம் தொலைத்தவனே..

தமிழர் எதிரிகள் முன்

கூனிக் கிடந்து

முதுகு வலி கண்டவனே

இன்று..

முள்ளந்தண்டை நிமிர்த்திக் கட்டி

நாற்காலியில் பவனி வருபவனே

உன்னிடம் தமிழன் என்ற உறவை

கேட்கவில்லை

மனிதன் என்ற உருவில்

உன்னை காண்பதால் கேட்கிறோம்

பெரும் படுகொலையின் அருகில்

வாழ்ந்துமா

உன்னால் அந்த அப்பாவிகளுக்காய்

ஓர் வரியில் அஞ்சலி செய்ய முடியவில்லை

உன் கவிதைகளுக்குக் கூடவா இரக்கமில்லை..?!

ஏய் தமிழகமே

நீயும்

இரக்கம் தொலைத்தாயோ...

மனிதமற்ற தலைவர்களை

ஏன் அரியாசணம் ஏற்றி வைத்திருக்கிறாய்..

அந்நியரின் அடிமையாய்

வாழ்வதில் உனக்கொரு மகிழ்வா..!

அந்நிய சுகத்தில்..

தமிழன் என்ற உறவுமா

உனக்கு கசந்திடுச்சு..!

தாய் மண்ணே

சேய் மண் படும் அவலம்

கண்டும் ஏன்

இன்னும் இந்த மெளனம்...??!

1987 இல்

ராஜீவ் படை கொண்டு

தேடி வந்து

அழித்தான் ஈழத்து மண்ணை..!

2009 இல் அவன் சண்டாளி

படைக்கலம் கொடுத்து

இரசாயனம் வீசி அழித்தாள்

மிச்சம் மீதி

ஈழத்தமிழ் இனத்தை..!

இருந்தும்..

இன்னுமா

அவள் பின்..

உங்கள் வாழ்விற்காய்

ஏங்கிக் கிடக்கிறீர்கள்.

தூங்காதீர் தோழரே

மனித வாழ்வு நிரந்தரமல்ல..

இனத்தின் வரலாறு

அது வாழும் வரை நிலைக்கும்.

தமிழன் வரலாறிழந்த

இனம் என்ற

அவப்பெயர் தாங்க வேண்டாம்..

விழித்திடுங்கள் தோழரே தோழியரே..

எம் இனம் தமிழினம்

என்று சொல்லி வாழ்வோம்

சாவுகள் அழிவுகள் உயிர்க்கு புதிதல்ல..

இவ் வையகத்தில்

எமக்கென்றொரு

தனி வரலாறு எழுதி வைப்போம்

வாருங்கள் உறவுகளே

இரக்கமற்ற சுயநலத் தலைமைகள்

அகற்றி..

கரங்கோர்ப்போம்..!

tamil1.jpg

(முள்ளிவாய்க்கால் படுகொலையாளன் ராஜபக்சவிற்கு கருணாநிதி சார்பில் பொன்னாடை -2009)

http://kuruvikal.wordpress.com/

Edited by nedukkalapoovan

மேடைகள் தோறும்

நடிகைகளை குலுங்கவிட்டு

ரசிக்கும்..

கறுப்புக் கண்ணாடிக் கள்வனே..

உந்த புறம்போக்கிட்ட போய் நியாயம் கேட்ட எங்களை செருப்பால அடிக்க வேண்டும்

அன்னை சோனியாவின்

இனப் படுகொளையாளிகளை, பயங்கரவாதிகளை "அன்னை" என அழைக்கும் மர்மம் என்னவோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப் படுகொளையாளிகளை, பயங்கரவாதிகளை "அன்னை" என அழைக்கும் மர்மம் என்னவோ?

அப்படிதான் கருணாநிதியும் அவரின் கூட்டத்தினரும் அழைத்து வருகின்றனர். அதை பிரதிபலிப்பது போல அழைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வரிகளில் அவரின் உண்மை முகமும் காட்டப்பட்டுள்ளது. மற்றும்படி சோனியாவை அன்னையாகவோ மனிதனாகவோ என்னால் காண முடியவில்லை. அந்தப் பெயரைக் கேட்டாலே ஒரு வித பகை உணர்வுதான் எழுகிறது இயற்கையாக..!

அப்படிதான் கருணாநிதியும் அவரின் கூட்டத்தினரும் அழைத்து வருகின்றனர். அதை பிரதிபலிப்பது போல அழைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வரிகளில் அவரின் உண்மை முகமும் காட்டப்பட்டுள்ளது. மற்றும்படி சோனியாவை அன்னையாகவோ மனிதனாகவோ என்னால் காண முடியவில்லை. அந்தப் பெயரைக் கேட்டாலே ஒரு வித பகை உணர்வுதான் எழுகிறது இயற்கையாக..!

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் நெடுக்காலபோவான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் நெடுக்காலபோவான்.

நன்றி எதற்கு. விளக்க வேண்டிய கடமை நமது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தினத்தில், எமைவிட்டு, எமது எதிரியான தமிழர் விரோத இந்தியதேசம் பிரிந்த எம் சொந்தங்கள் நினைவாக, எம்கண்களில் வளியும் கண்ணீரைத் துடைத்தெறிந்தபடி, எம் மனதிலொரு உறுதிகொள்வோம், நாம் வெல்வோமென. தமிழர்கள் தாகம் தமிழீழதாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

tamils66.jpg

(முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அமெரிக்காவில் அஞ்சலி – 2010)

ஏய் தமிழகமே

நீயும்

இரக்கம் தொலைத்தாயோ...

மனிதமற்ற தலைவர்களை

ஏன் அரியாசணம் ஏற்றி வைத்திருக்கிறாய்..

அந்நியரின் அடிமையாய்

வாழ்வதில் உனக்கொரு மகிழ்வா..!

அந்நிய சுகத்தில்..

தமிழன் என்ற உறவுமா

உனக்கு கசந்திடுச்சு..!

தாய் மண்ணே

சேய் மண் படும் அவலம்

கண்டும் ஏன்

இன்னும் இந்த மெளனம்...??!

1987 இல்

ராஜீவ் படை கொண்டு

தேடி வந்து

அழித்தான் ஈழத்து மண்ணை..!

2009 இல் அவன் சண்டாளி

படைக்கலம் கொடுத்து

இரசாயனம் வீசி அழித்தாள்

மிச்சம் மீதி

ஈழத்தமிழ் இனத்தை..!

இருந்தும்..

இன்னுமா

அவள் பின்..

உங்கள் வாழ்விற்காய்

ஏங்கிக் கிடக்கிறீர்கள்.

தூங்காதீர் தோழரே

மனித வாழ்வு நிரந்தரமல்ல..

இனத்தின் வரலாறு

அது வாழும் வரை நிலைக்கும்.

தமிழன் வரலாறிழந்த

இனம் என்ற

அவப்பெயர் தாங்க வேண்டாம்..

விழித்திடுங்கள் தோழரே தோழியரே..

எம் இனம் தமிழினம்

என்று சொல்லி வாழ்வோம்

சாவுகள் அழிவுகள் உயிர்க்கு புதிதல்ல..

இவ் வையகத்தில்

எமக்கென்றொரு

தனி வரலாறு எழுதி வைப்போம்

வாருங்கள் உறவுகளே

இரக்கமற்ற சுயநலத் தலைமைகள்

அகற்றி..

கரங்கோர்ப்போம்..!

எங்களின் மனக்குமுறல்களும், எண்ணோட்டங்களும் பெரும்பாலும் மாயைகளிலும் மற்றவை அச்சுறுத்தல்களிலும் மெல்ல அமிழ்ந்துகொண்டிருக்கின்றன. நாம் உணர்வுக் குருடர்களாவதற்கு முன் எஞ்சியுள்ள எழுச்சிகளையும் அற்பங்களினால் திசைதிருப்பும் வேலைகளைச் செய்ய அடிவருடிகள் பல..ம்..எத்தனை கோடாரி காம்புகளடா நம்மினத்தினுள்..!இதில் கறுப்புக்கு என்றுமே முதலிடம்.

வேதனையிலும், சாதனை செய்து இன்னுயிரை தாய் மண்ணிற்காக ஈகை செய்து மாண்டவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...

  • கருத்துக்கள உறவுகள்

கயவர்களை துகிலுரியும் வரிகள்! :o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும் படுகொலையின் அருகில்

வாழ்ந்துமா

உன்னால் அந்த அப்பாவிகளுக்காய்

ஓர் வரியில் அஞ்சலி செய்ய முடியவில்லை

உன் கவிதைகளுக்குக் கூடவா இரக்கமில்லை..?!

கொலைகாரக் கூட்டாளியிடமிருந்து இரங்கல் கவிதையா?

  • கருத்துக்கள உறவுகள்

தூங்காதீர் தோழரே

மனித வாழ்வு நிரந்தரமல்ல..

இனத்தின் வரலாறு

அது வாழும் வரை நிலைக்கும்.

தமிழன் வரலாறிழந்த

இனம் என்ற

அவப்பெயர் தாங்க வேண்டாம்..

விழித்திடுங்கள் தோழரே தோழியரே..

எம் இனம் தமிழினம்

என்று சொல்லி வாழ்வோம்

சாவுகள் அழிவுகள் உயிர்க்கு புதிதல்ல..

இவ் வையகத்தில்

எமக்கென்றொரு

தனி வரலாறு எழுதி வைப்போம்

வாருங்கள் உறவுகளே

இரக்கமற்ற சுயநலத் தலைமைகள்

அகற்றி..

கரங்கோர்ப்போம்..!

சுய நலத் தலைமைகள் இருக்கும் வரை...

வாத்தியார்

...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.