Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல் முறைமைகளேயே மாவோயிஸ தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர் ‐ இந்தியா

Featured Replies

விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல் முறைமைகளேயே மாவோயிஸ தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர் ‐ இந்தியா

18 May 10 01:52 am (BST)

தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கையில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் முறைமைகளை தற்போது மாவோயிஸ் தீவிரவாதிகள் பின்பற்றி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.

குறிப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குண்டுத் தாக்குதல் முறைமைகளை மாவோயிஸ தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.ஈ.டி எனப்படும் விருத்தி செய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த முறைமைகளை விடுதலைப் புலிகளே அதிகம் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பஸ் ஒன்றின் மீது இந்திய மாவோயிஸ தீவிரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்கள் சில நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு பொருத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குண்டுத் தாக்குதலினால் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை புலனாய்வுப் பிரிவினரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் குண்டுகளை வெடிக்கச் செய்யப் பயன்படுத்தும் நுட்பமான முறைகளை மவோயிஸ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருவதாக இந்திய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24532&cat=2

விடுதலைப்புலிகளிடமுள்ள இராணுவத் திறன்களைக் கண்டு ஒரு வித அச்சம் கொண்டதால்தான், இந்திய உதவியுடன் அழிக்கப்பட்டார்கள். அதே உத்திகளை மற்றவர்கள் பயன் படுத்துகிறார்கள். மாவோயிஸ்ட்டுக்களுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவுபோல் ஏதோவொரு நாடு, விடுதலைப்புலிகளுக்குச் சாதாரண ஆதரவைக் கொடுத்திருந்தாலும் அவர்களை அழித்திருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கும் நச்சு மற்றும் அமிலக் குண்டடிக்க ஆயத்தம்போல! :o:o

அங்கும் நச்சு மற்றும் அமிலக் குண்டடிக்க ஆயத்தம்போல! :o:o

சிந்திக்க வேண்டிய குண்டை தூக்கி போட்டு விட்டீரே

  • தொடங்கியவர்

சிந்திக்க வேண்டிய குண்டை தூக்கி போட்டு விட்டீரே

இந்தியா இலங்கையில் தொடரூந்து பாதை , விமான நிலைய விஸ்த்தரிப்புக்கள் எண்று செலவளிப்பதை போல பணத்தை வேறு நாடுகளில் செலவளிப்பதை விட உள் நாட்டு மக்களின் வாழ்வை பலப்படுத்த உதவுமானால் இப்படியான உபாதைகளை தடுக்காவிட்டாலும் குறைக்க தன்னும் முடியும்...

மக்களை தனித்து தங்களின் வாழ்க்கையை உரிமையை முடிவெடுக்க விட்டு விட்டு பின்னர் அவர்கள் பயங்கரவாதிகள் எண்று குற்றம் சாட்டுவதில் எந்த நியாயமும் இல்லை...

Edited by தயா

இந்தியா இலங்கையில் தொடரூந்து பாதை , விமான நிலைய விஸ்த்தரிப்புக்கள் எண்று செலவளிப்பதை போல பணத்தை வேறு நாடுகளில் செலவளிப்பதை விட உள் நாட்டு மக்களின் வாழ்வை பலப்படுத்த உதவுமானால் இப்படியான உபாதைகளை தடுக்காவிட்டாலும் குறைக்க தன்னும் முடியும்...

மக்களை தனித்து தங்களின் வாழ்க்கையை உரிமையை முடிவெடுக்க விட்டு விட்டு பின்னர் அவர்கள் பயங்கரவாதிகள் எண்று குற்றம் சாட்டுவதில் எந்த நியாயமும் இல்லை...

மிக சரியான கருத்து . ஈழத்தில் நடந்ததும் இப்போது இந்தியாவில் நடப்பதும் முடிவு மற்றும் இந்தியாவின் லட்சியம் ஒன்றே . அது சொல்லி தெரிய வேண்டியது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் என்ற இந்த இந்திய மத்திய அரசு சொறியன்.. சிங்களவருக்கு அனைத்து வித ஆயுதங்களையும் கொடுத்து தமிழ் மக்களை கொன்றொழிக்க உதவியதை அண்மையில் வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருந்தான்.

இந்தியா தமிழர்களை 1987 மற்றும் 2009 இல் அழித்து சாதனை செய்ததை தமிழர்கள் இலகுவில் மறக்கப் போவதில்லை. சிங்களவனுக்கு இந்தியா ரடார் வழங்கலாம் என்றால் ஏன் புலிகள் மாவோயிஸ்டுக்களுக்கு போர் தந்திர உதவி வழங்கக் கூடாது.

மாவோயிட்டுக்களுக்கு சீன ஆதரவும் புலிகளின் ஆதரவும் இருக்கும் என்றால் அவர்களை இந்தியா ஒன்றும் புடுங்க முடியாது..! 75 இந்தியப் படைகள் கொல்லப்பட்ட தாக்குதலை அடுத்து சிதம்பரம் சவால் விட்டான்.. அதற்கு பதிலடி கொடுத்தனர் மாவோயிஸ்டுக்கள். இறுதில் மக்கள் பயணித்த பஸ்ஸை இந்தியப் படைகள் மனிதக் கேடயமாகப் பாவித்ததன் விளைவு அப்பாவி மக்களின் உயிரிழப்பும் நேர்ந்துள்ளது.

இந்தியப் படைகள் அப்பாவி மக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் பயணம் செய்வதை மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதை சிதம்பரம் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தி இருந்தால் இந்த தாக்குதலில் அப்பாவி மக்களின் இழப்புக்களை தவிர்த்திருக்கலாம். இந்தியப் படைகள் 1987 - 90 களில் ஈழத்திலும் பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தத் தாக்குதலில் அதே பஸ்ஸில் பயணித்த 20 இந்திய பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்திருந்தனர் என்ற உண்மையை மறைத்து மாவோயிஸ்டுக்கள் பொதுமக்களை தாக்குகின்றனர் என்று புலிகள் மீது சுமத்திய அதே பல்லவியை பாடுகிறது இந்திய வல்லாதிக்க பிசாசு. அதுமட்டுமன்றி மாவோஸ்யிட்டுக்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தும் அதிகாரம் தனக்கு தேவை என்று கோரி இருக்கிறான் இந்த சிதம்பரம்.

இவர் மாவோயிஸ்டுக்களிடம் தோற்கப்போவது மட்டும் உறுதி..! அவர்களுக்கு சீனா எப்போதும் போல பூரண ஆதரவை வழங்கி இந்தியாவை பலவீனப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. மாவோயிஸ்டுக்களோடு இணைந்து ஈழத்தமிழர்களும் இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தை பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை பயன்படுத்த தவறக் கூடாது. இந்தியாவின் பிளவில் பலவீனப்படுத்தலில் தான் எமக்கான விடுதலையும் பொருந்தி இருக்கிறது.

ஈழத்தமிழர்கள் வெறுமனவே மேற்குலகை மட்டும் நம்பிக் கொண்டிராமல் பன்முகப்படுத்திய வகையில் உலக ஆதரவு சக்திகளை திரட்டி தேசிய விடுதலை என்ற அந்த இலட்சியத்தை அடைய அவற்றை பயன்படுத்தினால் மட்டுமே பிராந்திய வல்லாதிக்க பேரினவாத எதிரிகளை வென்று தேசிய விடுதலையை சாத்தியமாக்க முடியும்.

Edited by nedukkalapoovan

இந்திய பயங்கரவாதிகளை நிலைகுலைய வைக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாவோயிஸ்ட் வீரர்களுக்கு மகாத்மா காந்தி விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பயங்கரவாதிகளை நிலைகுலைய வைக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாவோயிஸ்ட் வீரர்களுக்கு மகாத்மா காந்தி விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்.

:o:o

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசாங்கம் ஒரிரு கட்ச்சி சார்ந்தது. இந்தியா எல்லா கட்ச்சிகலையும் மக்களையும் குறிப்பது. ஒரிரு கட்ச்சிகளோடும் அவர்களது செயல்பாடுகளோடும் முரண்படுவது எதிராவதும் வேறு ஒட்டு மொத்த இந்தியாவையும் பகைப்பது வேறு. அப்படி ஒரு நிலைபாட்டில் நாம் எங்கள் உரிமைப்போரை வெற்றி பெறுவது சாத்தியமில்லை. ஆயுதங்களை மெள்னிக்க சொன்னபோது போராளித் தலைமை இந்தியா பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் முக்கியமானது.ஆழும் கட்சியை ஒட்டுமொத்த இந்தியா என கொள்வது சரியான அரசியல் அல்ல. ரெலோ இந்திய கையாட்க்கள் என ரெலோவை அழித்ததில் இருந்து தீவிரப் பட்டு ஐபிகேஎஃப் மோதலும் கொலைகளும் தொடர்ந்த ராஜீவ் கொலை தொடர்ந்து தீவிரப் பட்ட இந்தியாவின் எதிர்நிலை இவை பற்றியெல்லாம் இரு தரப்புத் தவறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து ஆராய்வது அவசியம்.

நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மேற்க்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில்தான் எங்கள் கப்பலை செலுத்தியாகவேணும்.

இலங்கை வடகிழக்கை கபளீகரம் செய்ய ஆரம்பத்தில் இருந்தே சீனா இலங்கை அரசின் நண்பன். இதை நாம் மறந்துவிடலாகாது. சீனாவும் மாவோயிஸ்டுகளும் வென்று நிலமையை மாற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு கடல் வற்றி கருவாடு தின்னும் எதிர்பார்ப்புத்தான். வரலாற்றை முன்னெடுத்துச் செல்ல முனைகிறவர்கள் நமது எங்கோ பிழைத்துப்போன வெளியுறவுக் கொள்கைகளை மீழாய்வு செய்வதும் சகல நாடுகளோடும் கதவுகளை எல்லாம் திறந்து வைத்து முதலில் இருந்து திறந்த மனதுடன் வெளி உறவு அரசியலை ஆரம்பிப்பதும் காலத்தின் அவசியம். கடந்த காலங்களுக்குள் சிறைப் பட்டுவிடாமல் எதிர்காலத்துக்கு நாம் செல்ல வேண்டும். எப்படியும் வெற்றி பெறுவதுதான் முள்ளிவாய்க்கால் மாவீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்

நாடுகடந்த அரசு தமிழர் கூடணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பணி புரிந்தால் மட்டுமே ஈழத் தமிழரின் குரல் ஆகமுடியும். தமிழர் கூட்டணி தனது சமூக நீதிக் கொள்கையை மேம்படுத்தி ஒடுக்கப் பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை தலைமையிலும் நாடாளுமன்றத்துள்ளும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர்கள் களத்தில் வாழும் தமிழ் மக்களின் குரலாக முடியும்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் பயணித்த பஸ்ஸை இந்தியப் படைகள் மனிதக் கேடயமாகப் பாவித்ததன் விளைவு அப்பாவி மக்களின் உயிரிழப்பும் நேர்ந்துள்ளது.

இந்தியப் படைகள் அப்பாவி மக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் பயணம் செய்வதை மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதை சிதம்பரம் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தி இருந்தால் இந்த தாக்குதலில் அப்பாவி மக்களின் இழப்புக்களை தவிர்த்திருக்கலாம். இந்தியப் படைகள் 1987 - 90 களில் ஈழத்திலும் பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தத் தாக்குதலில் அதே பஸ்ஸில் பயணித்த 20 இந்திய பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்திருந்தனர் என்ற உண்மையை மறைத்து மாவோயிஸ்டுக்கள் பொதுமக்களை தாக்குகின்றனர் என்று புலிகள் மீது சுமத்திய அதே பல்லவியை பாடுகிறது இந்திய வல்லாதிக்க பிசாசு.

உப்பிடி எத்தினை அப்பாவி தமிழரின்ர உயிர்களை எடுத்துப்போட்டு உரமெண்டும் விதையெண்டும் நியாயப்படுத்தி இருப்பீங்கள்.... :o

  • தொடங்கியவர்

உப்பிடி எத்தினை அப்பாவி தமிழரின்ர உயிர்களை எடுத்துப்போட்டு உரமெண்டும் விதையெண்டும் நியாயப்படுத்தி இருப்பீங்கள்.... :o

ஓம் ஓம் நாங்கள் தான் பலி எடுத்தனாங்கள்... நீங்கள் தான் சாட்ச்சி... வேறை என்ன...??

  • கருத்துக்கள உறவுகள்

மாவோயிட் போராளிகளினால் இராணுவம் இறந்தால் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிப் பொதுமக்கள். இந்தியப் பயங்கரவாத நாட்டின் இராணுவத்தினால் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் என்றால் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள். இது தான் காந்தி தேசத்தின் கொள்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.