Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்!”

Featured Replies

தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்!

பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை.

சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர்.

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில்

கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும்

பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும்

அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில

ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச

நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை

பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய

ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு

கடந்த தமிழீழத் தேர்தலில், தேர்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான இவரது

ஆலோசனையின் பேரில்தான் தேர்தலே நடைபெற்றது. கடந்த ஆண்டு சென்னை உட்படப்

பல்வேறு நகரங்களுக்குச் சென்று தமிழீழ ஆர்வலர்களை சந்தித்து கருத்துகளைக்

கேட்டார். அவருடன் ஜூ.வி-க்காக ஒரு பிரத்யேக பேட்டி!

”விடுதலைப்புலிகள் அடியோடு அழிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில்…

தமிழீழம் மலர வாய்ப்பு இருக்கிறதா?”

”நம்பிக்கைதான் வாழ்க்கை. இத்தனை ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தை நடத்

தியவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வந்தார் கள். இப்போது,

புலிகள் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு ராஜபக்ஷே தமிழீழ மக்களை அடியோடு

ஒழிக்கப் பார்க் கிறார். இலங்கை அரசு எவ்வித சர்வதேச விதிகளையும்

மதிப்பதில்லை. இந்தியாவும் தட்டிக் கேட்பதில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு,

கண்டிப்பாக ஈழ மக்களின் மனசாட்சியாக இருக்கும். தேர்ந் தெடுக்கப்பட்ட

உறுப்பினர்கள் தங்கள் வருங்காலத்தை நிர்ணயித்துக்கொள்வார்கள். பல முக்கிய

முடிவுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும்.”

”நாடு கடந்த தமிழீழ அரசு வெறும் வலைதள அரசாக இருக்கும் என்று கூறப்

படுகிறதே?”

”இலங்கையில் இனப்படுகொலைக்குப் பிறகு அங்கு எங்கே தமிழர் தலைவர்கள்

இருக் கிறார்கள்? எல்லோருமே வெளியில்தானே இருக்கிறார்கள். இலங்கைக்கு

அவர்களால் போகத்தான் முடியுமா? இந்தச் சூழ்நிலையில் நாடு கடந்த தமிழீழ

அரசு அமைப்பதைத் தவிர வேறு வழியிருக்கிறதா? ஜனநாயக முறையில்

உறுப்பினர்களை தேர்வு செய் திருக்கிறார்கள். ஒரு புதிய பாதையில் இயக் கம்

அடி போடுகிறது. பொறுத்துத்தான் பார்ப்போமே!”

”நீங்கள் பாலஸ்தீன அரசுக்கு உதவு கிறீர்கள். பாலஸ்தீனியர்களுக்கு நாடு

இருக்கிறது. தமிழீழ மக்களுக்கு ஒன்றுமே இல்லையே?”

”ஏன் இல்லை? இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை இலங்கை

அரசுஆக்கிரமித்து வருகிறது. தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகளாய்

வாழும் அவலம் இது. பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், இப்போது

ராஜபக்ஷே அரசை ஆதரிக்கிறது. பாலஸ்தீன விடுதலைப்போரும் தமிழீழ விடுதலைப்

போரும் ஒரே ரகம்தான். இருவரையும் தீவிரவாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள்

என்றது உலகம். இப்போது, மொத்தமுள்ள 195 நாடுகளில் 127 நாடுகள்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. பாலஸ்தீனம் சுதந்திர நாடாக

எவ்வித அச்சுறுத்தல்களும் இன்றி நிம்மதியாக வாழவிடவேண்டும் என்றும்

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சமீபத்தில் கூறியுள்ளார்.”

”பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்னையில் தலையிடும் அமெரிக்கா… இலங்கைப்

பிரச்னை யில் ஒதுங்கியிருப்பது ஏன்?”

”இஸ்ரேல்தான் காரணம். இலங்கை அரசை இஸ்ரேல் முழுமையாக ஆதரிக்கிறது.

மேலும், அதிபர் ஒபாமா, ராஜபக்ஷே அரசை ஆதரிக்கக் காரணம் சீனா. சீனாவின்

ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருவது அமெரிக்காவுக்கு எரிச்

சலூட்டுகிறது. சீனா ராணுவ முகாம்கூட இலங்கையில் அமைக்க வாய்ப்பு

இருப்பதாக அமெரிக்கா கவலைப்படுகிறது. அதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை,

இலங்கையில் மனித உரிமைகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட ‘உப்புமா

கமிட்டி’யைக்கூட அமெரிக்கா ஆதரித் தது. இந்த விசாரணை கமிஷன் பயனற்றது.

பல் பிடுங்கப்பட்ட அந்த பாம்பு – ராஜபக்ஷே சகோதரர்கள் மீது கை வைக்கத்

துணியாது! சமீபத்தில், ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் இந்த கமிஷனை

ஆதரித்திருப்பதுதான் மிகவும் வேதனை.”

”தமிழீழ அரசு எப்படிப்பட்டதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது?”

”ஒன்று, முழு சுதந்திர நாடு என்று பிரகடனம். இதுதான் தமிழீழ மக்களின்

அதன் தலைவர்களின் ஆசை. அடுத்தது, அமெரிக்காவின் மாகாணங்களில் ஒன்றான

போர்த்தோ ரிக்கோ நாடு போன்ற அமைப்பு. இது சுதந்திர நாடு; அதேசமயம்

அமெரிக்க கூட்டாட்சியின் கீழ் வரும். மூன்றாவது, இலங்கை அரசின் கீழ் அதன்

ஆளுமைக்கு முழுவதும் உட்பட்ட சுதந்திர மாகாணம்.”

”பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசு அனுமதி மறுத்த

செயலைப்பற்றி…”

”பிரபாகரன் மீதுள்ள கோபத்தை அவர் தாய் மீது காட்டியிருக்கிறது உங்கள்

மத்திய அரசு. பார்வதி அம்மாள் என்ன தீவிரவாதியா அல்லது அரசை கவிழ்க்க சதி

செய்கிறாரா? 80 வயது மூதாட்டி எழுந்து நிற்பதற்குக்கூட திராணி அற்றவர்.

இது மனித உரிமைகள் மீறிய செயல். இந்தியாவில் மிகச் சிறந்த வழக்கறிஞர்கள்

உள்ளனர். நடுநிலைமையான நேர்மையான நீதிமன்றங்கள் உள்ளன வா? ஏன் யாரும் இதை

நீதிமன்றம் உதவியுடன் தட்டிக் கேட்கவில்லை. நாங்கள் அமெரிக்காவில்

இத்தகைய செயல்களை நீதிமன்றத்தில்தான் தட்டிக் கேட்போம். இதில் அரசியல்

செய்யக்கூடாது. பார்வதி அம்மாளை உள்ளே வர விடாதது ஓர் அற்ப சந்தோஷம்

மட்டுமே தவிர, யாரை தண்டிக்கப் பார்க்கிறீர்கள்… இறந்துபோன

பிரபாகரனையா?”

”தமிழீழ போராட்டத்தை இந்தியா எப்படி அணுக வேண்டும்?”

”அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆனால், இந்தியாவை

நேசிக்கும் அமெரிக்கன் என்ற முறையில் சில கருத்துகளை கூற முடியும்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு சொந்தமே. அந்த வகையில்

இலங்கையில் பிரபாகரன் சரித்திரம் முடிந்த பின்பும்கூட வன்மம் பாராட்ட

வேண் டாமே… ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை பழைய கண்ணோட்டத்தில்

பார்க்க வேண்டாம். மாறிவரும் ஜியோ-பொலிடிகல் அமைப்பில் சீனாவும்,

இலங்கையும் சேர்ந்தால் அது ஆபத்து. தனி ஈழம் இந்தியாவுக்கு அரணாக

இருக்கும். நான் அரசியல்வாதி அல்ல; வழக்கறிஞர். ஐரிஷ் இனத்தவன்… ஈழத்

தமிழன்கூட இல்லை. ஆனாலும், அவர்களின் வலி தெரியும். தயவுசெய்து இந்தியா

இதில் தலையிட்டு தமிழீழம் மலர உதவ வேண்டும்.’

ஜூனியர் விகடன்

Edited by நிழலி
இது ஜூனியர் விகடனில் வந்தது. ஈழம்வெப் தன் செய்தியாக போட்டுள்ளது

எம் இனத்தவரை படுகொலை செய்த இந்திய பயங்கரவாதிகளுக்கு நாம் ஏன் அரணாக இருக்க வேண்டும். உலகில் சாந்தி, சமாதானம், அமைதி நிலவ பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தவருடம் மே மாதத்தின்பின்பு தமிழீழமே இந்தியாவுக்கு யமன்.

எம் இனத்தவரை படுகொலை செய்த இந்திய பயங்கரவாதிகளுக்கு நாம் ஏன் அரணாக இருக்க வேண்டும். உலகில் சாந்தி, சமாதானம், அமைதி நிலவ பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும்.

ம்ம்ம்... எங்களுக்கு இந்தியா வேண்டாமே வேண்டாம்! எமக்கு அமெரிக்கா? ரஷ்யா? பிரித்தானியா? .. சீனா? .. லிபியா? ஈரான்? பாகிஸ்தான்? இஸ்ரேல்?... கியூபா? பலஸ்தீனம்? .... மாலைதீவு? ... இதில் பலர்? இருக்கினம். நாம் வெட்டுவோம்?கொத்துவோம்!!!

சும்மா புண்ணாக்குத்தனத்தை கொண்டு போய் கொட்டுங்கோடாப்பா குப்பையில்!!

எங்களுக்கு என்ன ஓயிலோ/தங்கமோ/வைரமோ இருக்கிறது உலகம் எல்லாம் வந்து பாய்ந்து ஆதரவு தர??

உலகப்படத்தை விரித்து வைத்து விட்டு யாழ்ப்பாணத்திலோ/வன்னியிலோ/திருமலையிலோ கை விரலை வைத்துப் பாருங்கள், எமது நிலைமை புரியும்!!!

ஏன் இந்தப் பாய்ச்சல் பாய்கிறீர்கள் நெல்லையன்.

எம்மை அழிக்க வழி செய்தவன் அவன் தானே....... இனி அவனால் என்ன இழவு வேணும் ஈழத்தமிழனுக்கு.

அவனுக்கு குடை பிடிக்க சொல்கிறீர்களா?.

இந்தியாவின் முதல் எதிரி இனி ஈழத் தமிழினம் தான்.

”தமிழீழ போராட்டத்தை இந்தியா எப்படி அணுக வேண்டும்?”

”அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆனால், இந்தியாவை

நேசிக்கும் அமெரிக்கன் என்ற முறையில் சில கருத்துகளை கூற முடியும்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு சொந்தமே. அந்த வகையில்

இலங்கையில் பிரபாகரன் சரித்திரம் முடிந்த பின்பும்கூட வன்மம் பாராட்ட

வேண் டாமே… ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை பழைய கண்ணோட்டத்தில்

பார்க்க வேண்டாம். மாறிவரும் ஜியோ-பொலிடிகல் அமைப்பில் சீனாவும்,

இலங்கையும் சேர்ந்தால் அது ஆபத்து. தனி ஈழம் இந்தியாவுக்கு அரணாக

இருக்கும். நான் அரசியல்வாதி அல்ல; வழக்கறிஞர். ஐரிஷ் இனத்தவன்… ஈழத்

தமிழன்கூட இல்லை. ஆனாலும், அவர்களின் வலி தெரியும். தயவுசெய்து இந்தியா

இதில் தலையிட்டு தமிழீழம் மலர உதவ வேண்டும்.’

சிறி, பேராசிரியர் பிரான்ஸிஸ் பாயில் இதை ஏன் தெரிவித்தார்? அவருக்கு தெரியாதா? இந்தியா எமக்கு தற்போது அழிவைத்தான் தந்து கொண்டிருக்கிறது என்று!... இந்தியாவின் கொள்கைகள் மாற வேண்டும் என்றே கோரிக்கை விடுகிறார்.

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்தது, அமெரிக்கா தலைமையிலான நேச அணிகள் ஜேர்மனி, யப்பான் போன்றவற்றை துவசம் செய்தபின்!!! இன்றும் ஜேர்மனியில் எத்தனை பேர் அப்போது கொல்லப்படனர் என்ற கணக்கு இல்லை! யப்ப்பான் இன்றும் ஹிரோஷிமா/நாகஸாகியில் போட்ட அணு குண்டு அதிர்வில் இருந்து மீள முடியவில்லை. இரு நாடுகளும் அமெரிக்கா எமது வாழ்நாள் எதிரியே என இருந்திருந்தால் ... ஜேர்மனி/யப்பான் இன்றிருக்கும் நிலைக்கு வந்திருக்க முடியுமா?

நேற்று குண்டு போட்டு அழிக்கப்பட்ட சேர்பியா, இன்று ஐரோப்பிய பிரதிநிதித்துவத்துக்காக அடிபடுகிறது. லிபியா அமெரிக்காவுடன் உறவை புதுப்பிக்கிறது. கிழக்கு தீமோர் இந்தோனேசியாவுடன் உறவுகளை வளர்க்கிறது ... சரித்திரத்தை திரும்பிப் பாருங்கள் இவர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்று!!

நாங்கள் மட்டும் வாழ்நாள் பூராக இந்திய எதிர்பாளிகளாக இருக்க வேண்டுமா??? இங்கு புலத்தில் இருந்து கொண்டு சுலபமாக "ஆம்" என்று பதிலளிக்கலாம்! ஆனால் உண்மை அவைகளுக்கு மாறானது!! .... எம் மக்களுக்கு அழிவு மட்டுமல்ல, வாழ்வு ஒன்று என்று இருக்குமாயின், அது இந்தியாவினால்தான்" ....

எதோ இந்தியந்தான் எமக்கு அழிவை செய்கிறான் என்று மட்டும் சொல்கிறோமே ஒழிய, நாம் ஒன்றும் அங்கு செய்யவில்லையா??

மறப்போம், உறவுகளை வளர்ப்போம்! ... அதற்கு பெயர் மண்ணியிடுவது என்றால், அது நடந்து விட்டுப் போகட்டும்!! ... எம் தாயகத்தில் உள்ள மக்களின் நல்வாழ்வுக்காக/எதிர்காலத்துக்காக ..!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

.

நெல்லையன், நீங்கள் உதாரணம் காட்டிய நாடுகளான அமெரிக்கா, ஜேர்மனி, யப்பான்.....

வெவ்வேறு மொழிகளையும், மதங்களையும் சார்ந்தவர்கள். அடி பட்டு , ஒற்றுமையாகி விட்டார்கள்.

ஆனால்..... ஒரே மதத்தை பெரும்பான்மையாகவும், ஒரே மொழியை பெரும் பான்மையாக கொண்ட தமிழகத்தை அடக்கிய இந்தியாவும் எமக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் தந்திரிராமல் இருந்திருக்கலாம்.

.

ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த இந்திய தமிழனின் முதல் எதிரி.

87ல் சிங்கள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவத்தன சொன்னார் ... "நண்பர்களாக இருந்து எம்முடன் அடிபட்டவர்களை பிரித்து, நான் இன்று நண்பர்களை அடிபட விட்டிருக்கிறேன்" .. என்று! .... இந்தியாவுடன் ஈழத்தமிழர்களின் நட்புறவுக்கு விரும்பாத சக்திகள், இன்று எமக்கான குரல் எனும் பெயரில், திரும்பத் திரும்ப குட்டையை குழப்புகின்றன. அதற்கு எம் உணர்ச்சிவசப்பட்ட விசிலடித்தானுகள் அடிமையாகின்றன.

... ஈழத்தமிழர்களின் விடிவில் உண்மையான அக்கறை உள்ள புலத்தில் உள்ள அனைவரும் விரும்புவது, புலம் பெயர் தமிழீழ அரசோ, ஏனைய அமைப்புகளோ இந்தியாவுடன் எம் நல்லுறவுகளை புதுப்பிக்க முயற்ச்சி எடுக்க வேண்டும் என்பதே!!! இது காலத்தின் தேவையுமாகும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

:) இந்தியாவுடனான நல்லுறவைப் புதுப்பித்தல் என்பது இந்தியா எம்முடன் நடந்துகொள்ளும் முறையின் தங்கியிருக்கிறது. நெல்லைய்யன் நீங்கள் சொல்லிய உதாரணங்களிலிருப்பது உண்மைதான். ஆனால் அமெரிக்கா அந்த நாடுகளுக்குச் செய்த பின்னாலான உதவிகள் அளப்பரியவை. அதுமட்டுமல்லாமல் ஒருகட்டத்தில் அவற்றின் சுதந்திரத்தைக் கைய்யளித்து விட்டு நாடு திரும்பியது. ஆனால் இந்தியா அப்படிச் செய்யுமா?? நான் நினைக்கவில்லை, தனது பிராந்திய நலனுக்காக ஈழத்தமிழரின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை அது தொடர்ந்தும் நசுக்குமென்றே நான் நினைக்கிறேன்.

சரி, இந்தியாவுக்கெதிராக நாம் என்ன செய்தோம் என்கிறீர்கள்? ரஜீவைப் போட்டதையா அல்லது பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்ததையா?? ராஜீவைப் போடவேண்டி ஏன் வந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?? அது சரியா பிழையா, தேவையானதா இல்லையா என்பது வேறு விடயம்.

இந்தியா எம்மை நண்பர்களாக நடத்துமிடத்து நிச்சயம் எமது ஆதரவு அவர்களுக்கிருக்கும். ஆனால் தொடர்ந்தும் எதிரியாகவே எம்மைப் பார்க்கும்போது எமக்கு முன்னாலிருக்கும் தெரிவுகள் என்ன நெல்லைய்யன்?? எனக்குப் புரியவில்லை. இதுவரை இந்தியா எமது நலனில் அக்கறை கொண்டு செய்த ஒரு செயலைத்தானும் சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்!

அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை பேராசிரியர் பிரான்சிஸ் பாயில்.

எல்லாரும் எல்லாம் முடிஞ்சாப்பிறகுதான் அட்வைஸ் குடுக்குறினம்....முதலே எழுதியிருக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் எல்லாம் முடிஞ்சாப்பிறகுதான் அட்வைஸ் குடுக்குறினம்....முதலே எழுதியிருக்கலாம். :)

உங்கடை, மண்டையுள்ளை அட்வைஸ் ஏறுமா?

நக்சலைட்டுகளை வெற்றிகரமாக ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார் : இலங்கை அறிவிப்பால் அதிர்ந்து போன இந்திய ராணுவம் குமுதம்

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான ஆலோசனைகளையும், அதற்கான பயிற்சிகளையும் இந்தியாவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர்,மேற்குவங்கம்,ஒரிசா,பிகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ராணுவ அதிகாரிகள் உள்பட அப்பாவி மக்களும் பலியாகினர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், இப்பிரச்னையில் இந்தியாவுக்கு உதவத்தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

உலவின் மிகப்பெரிய இயக்கமாக கருதப்பட்ட விடுதலைப்புலிகளை தாங்கள் வீழ்த்தியிருப்பதாகவும், இதன்மூலம் இலங்கை போர்ப்படையினருக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளதாகவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கருத்துரையாளர் சிவசங்கர் மேனனிடம், இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்திய அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு தங்களால் உதவ முடியும் என்று இலங்கை தூதர் கூறியதாகவும் தெரிகிறது.

இலங்கை அதிகாரியின் இந்த பேச்சு இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் புலிகளைத் தோற்கடித்ததை மறைத்துவிட்டு, இவ்வாறு இலங்கை கூறியிருப்பது இந்திய ராணுவ அதிகாரிகளிடம் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அப்ப இரண்டு நாட்டு இராணுவத்திற்கிடயிலும் சண்டை வரும். இதனால் தமிழீழம் மலரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இரண்டு நாட்டு இராணுவத்திற்கிடயிலும் சண்டை வரும். இதனால் தமிழீழம் மலரும்.

ஏதாவது வில்லங்கமாகத்தான் கதைக்க வந்து இருக்கிறீர்களா?

ம்ம்ம்... எங்களுக்கு இந்தியா வேண்டாமே வேண்டாம்! எமக்கு அமெரிக்கா? ரஷ்யா? பிரித்தானியா? .. சீனா? .. லிபியா? ஈரான்? பாகிஸ்தான்? இஸ்ரேல்?... கியூபா? பலஸ்தீனம்? .... மாலைதீவு? ... இதில் பலர்? இருக்கினம். நாம் வெட்டுவோம்?கொத்துவோம்!!!

சும்மா புண்ணாக்குத்தனத்தை கொண்டு போய் கொட்டுங்கோடாப்பா குப்பையில்!!

எங்களுக்கு என்ன ஓயிலோ/தங்கமோ/வைரமோ இருக்கிறது உலகம் எல்லாம் வந்து பாய்ந்து ஆதரவு தர??

உலகப்படத்தை விரித்து வைத்து விட்டு யாழ்ப்பாணத்திலோ/வன்னியிலோ/திருமலையிலோ கை விரலை வைத்துப் பாருங்கள், எமது நிலைமை புரியும்!!!

சரி இந்தியா இதுவரை வாழவைத்தை நாடு எண்ற ஒண்றை உம்மால் காட்ட முடியுமா..??? சரி இந்திய அரசு தனது நாட்டுக்குள் இருக்கும் மக்களையாவது நிம்மதியாக வாழ விடுகிறதா...?? எங்களை வாழ விட..?

ஆனால் இந்தியாவால் நாசமாக போன நாடுகளை பலவற்றை என்னால் காட்ட முடியும்... அதில் பங்களாதேஸ், பாக்கிஸ்தான், காஸ்மீர், திபெத், நேபாளம் எண்று இந்தியாவால் சீரளிந்த நாடுகள் ஏராளமாக இருக்கின்றன...

ஆனால் சீனாவுக்கு பக்கத்தில் அங்கீகாரமே இல்லாது சீனாவை எதிர்த்து ஒரு சிறு நாடு இருக்கிறது... அதன் பெயர் தாய்வான்...! இந்தியாவை எதிர்த்து ஈழம் இருக்க முடியும் எண்று சொல்வதுக்கு அந்த ஒருநாடே போதும்..

எக்கச்சக்கமா சீரளிச்சு இருக்கு!!!! :)

எக்கச்சக்கமா சீரளிச்சு இருக்கு!!!! :)

இந்தியா வாழ வைச்சது வரதராச பெருமாளை மட்டும் தான்... அவரோடை போனதுகள் அங்கை வலசரவாக்கத்திலையும், அசோக் நகரிலையும், மடிப்பாக்கத்திலையும் பவுடர் வித்து திரிஞ்சதுகள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா வாழ வைச்சது வரதராச பெருமாளை மட்டும் தான்... அவரோடை போனதுகள் அங்கை வலசரவாக்கத்திலையும், அசோக் நகரிலையும், மடிப்பாக்கத்திலையும் பவுடர் வித்து திரிஞ்சதுகள்..

சீரளிச்சுத்தாளே!!!! :):)

சீரளிச்சுத்தாளே!!!! :):)

அப்ப பவுடர் விக்கிறது உங்களுக்கு வாழ்க்கையோ...??

ம்ம்ம்... எங்களுக்கு இந்தியா வேண்டாமே வேண்டாம்! எமக்கு அமெரிக்கா? ரஷ்யா? பிரித்தானியா? .. சீனா? .. லிபியா? ஈரான்? பாகிஸ்தான்? இஸ்ரேல்?... கியூபா? பலஸ்தீனம்? .... மாலைதீவு? ... இதில் பலர்? இருக்கினம். நாம் வெட்டுவோம்?கொத்துவோம்!!!

சும்மா புண்ணாக்குத்தனத்தை கொண்டு போய் கொட்டுங்கோடாப்பா குப்பையில்!!

எங்களுக்கு என்ன ஓயிலோ/தங்கமோ/வைரமோ இருக்கிறது உலகம் எல்லாம் வந்து பாய்ந்து ஆதரவு தர??

உலகப்படத்தை விரித்து வைத்து விட்டு யாழ்ப்பாணத்திலோ/வன்னியிலோ/திருமலையிலோ கை விரலை வைத்துப் பாருங்கள், எமது நிலைமை புரியும்!!!

அப்ப சிங்களவனிடம் என்ன இருக்கிறது. இதே உலகம் பாய்ந்து பாய்ந்து வந்து ஆதரவு கொடுப்பதற்கு ????

ஆனால் சீனாவுக்கு பக்கத்தில் அங்கீகாரமே இல்லாது சீனாவை எதிர்த்து ஒரு சிறு நாடு இருக்கிறது... அதன் பெயர் தாய்வான்...! இந்தியாவை எதிர்த்து ஈழம் இருக்க முடியும் எண்று சொல்வதுக்கு அந்த ஒருநாடே போதும்..

தயா, முதலில் தாய்வானின் வரலாற்றைப் போய்ப்பாரும். ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் தாய்வான் எனும் தேசம், சீனா ஆண்ட ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்டது. அக்காலத்தில் பல தேசங்கள் உருவானது உண்மைதான். சீனாவின் பெருகும் பொருளாதாரமும், அதியுயர் இராணுவ வளர்ச்சியும் இன்னும் எவ்வளவு காலம் தாய்வான் தாக்குப்பிடிக்கும் என்ற கேள்வி?

தாய்வான் என்ன, கியூபாவையும் கூறலாம், அப்போது ஏதோ நடைபெற்று விட்டது. அப்பிழையை இனியும் உலக வல்லரசுகள் அனுமதிக்குமா?

:) இதுவரை இந்தியா எமது நலனில் அக்கறை கொண்டு செய்த ஒரு செயலைத்தானும் சொல்லுங்களேன்.

அண்மையில் BTFஇன் ஒரு மூத்த உறுப்பினர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தபோது கூறினார் .."நாங்கள் விட்ட மிகப்பெரிய தவறி 87ல் ஜே.ஆர்/ராஜீவ் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தென்று! அவ்வொப்பந்தத்தில் வட/கிழக்கு இணைப்பே எம்மவர் ஏற்க முடியாமல் தொங்கியிருந்ததாகவும், ஆனால் இந்திய அரசு வட/கிழக்கில் இருக்கும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக ஒரு உறுதி மொழியை எல்லா இயக்கங்கள்/கட்சிகளுக்கு வழங்கியதாம். ... அவ்வுறுதியின் பிரகாரம் சிறிது காலத்தில் இந்திய படைகள் பாதுகாப்பிருக்க சிங்கள குடியேற்றவாசிகள் இயக்கங்களால் துரத்தி அடிக்கப்பட்டபின் நடத்தப்பட இருந்த வட/கிழக்கிற்க்கான இணைப்பு இலகுவாக பூர்த்தி அடைத்திருக்கும் என்பதே!!

... கால ஓட்டத்தில் ஏற்ற/இறக்கங்கள், நெழிவு/சுழிவுகள் போன்ற அரசியல் சாணக்கியங்களை விட்டு விட்டோம். இன்று சிலுவை சுமக்கிறோம் ... வேதனை!

தயா, முதலில் தாய்வானின் வரலாற்றைப் போய்ப்பாரும். ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் தாய்வான் எனும் தேசம், சீனா ஆண்ட ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்டது. அக்காலத்தில் பல தேசங்கள் உருவானது உண்மைதான். சீனாவின் பெருகும் பொருளாதாரமும், அதியுயர் இராணுவ வளர்ச்சியும் இன்னும் எவ்வளவு காலம் தாய்வான் தாக்குப்பிடிக்கும் என்ற கேள்வி?

தாய்வான் என்ன, கியூபாவையும் கூறலாம், அப்போது ஏதோ நடைபெற்று விட்டது. அப்பிழையை இனியும் உலக வல்லரசுகள் அனுமதிக்குமா?

தாய்வான் இண்றுவரைக்கும் ஐநாவின் அங்கீகாரம் பெற்ற தனி நாடு கிடையாது... சீனாவின் அச்சுறுத்தலுடன் இருக்கும் ஒரு குட்டித்தீவு அது... ஹொங் ஹொங்கை போல சீனாவின் நெருக்குதலுக்குள் இருக்கும் நாடுதான் அது...

எரித்திரியா சுதந்திரம் அடைஞ்சும் நீண்ட காலம் இல்லை, கிழக்கு தீமோர் சுதந்திரம் அடைந்தும் நீண்ட காலம் இல்லை மெண்டினீக்கோ சுதந்திரம் அடைந்தும் அண்மையில் தான்... படுகொலைகளில் இலங்கைக்கு எந்தளவும் குறைவு இல்லாத அடக்குமுறைக்கு உட்பட்ட இனங்கள் வாழும் பொஸ்னீயாவும், தென் சூடானும் சுதந்திரத்துக்கான எதிர்ப்பு குறைந்த நாடுகள்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.