Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நக்சலைட்டுகளை வெற்றிகரமாக ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார் : இலங்கை அறிவிப்பால் அதிர்ந்து போன இந்திய ராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நக்சலைட்டுகளை வெற்றிகரமாக ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார் : இலங்கை அறிவிப்பால் அதிர்ந்து போன இந்திய ராணுவம்

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான ஆலோசனைகளையும், அதற்கான பயிற்சிகளையும் இந்தியாவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர்,மேற்குவங்கம்,ஒரிசா,பிகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ராணுவ அதிகாரிகள் உள்பட அப்பாவி மக்களும் பலியாகினர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், இப்பிரச்னையில் இந்தியாவுக்கு உதவத்தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

உலவின் மிகப்பெரிய இயக்கமாக கருதப்பட்ட விடுதலைப்புலிகளை தாங்கள் வீழ்த்தியிருப்பதாகவும், இதன்மூலம் இலங்கை போர்ப்படையினருக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளதாகவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கருத்துரையாளர் சிவசங்கர் மேனனிடம், இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்திய அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு தங்களால் உதவ முடியும் என்று இலங்கை தூதர் கூறியதாகவும் தெரிகிறது.

இலங்கை அதிகாரியின் இந்த பேச்சு இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் புலிகளைத் தோற்கடித்ததை மறைத்துவிட்டு, இவ்வாறு இலங்கை கூறியிருப்பது இந்திய ராணுவ அதிகாரிகளிடம் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

- குமுதம்

உலவின் மிகப்பெரிய இயக்கமாக கருதப்பட்ட விடுதலைப்புலிகளை தாங்கள் வீழ்த்தியிருப்பதாகவும், இதன்மூலம் இலங்கை போர்ப்படையினருக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளதாகவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கருத்துரையாளர் சிவசங்கர் மேனனிடம், இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

காலமடா சாமி :lol::D

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியெ ஒருக்கா எப்படி பாகிஸ்தானை அடிக்கலாம் எண்டும் சொல்லிவிடுங்கோ!

வாத்தியார்

.............

கேக்கிறவன் கேனயன் எண்டால் எருமை மாடும் என்னமோ செய்யுமாம்... பொத்திக்கிட்டு இருங்கடா..

இந்திய வல்லாதிக்கத்திற்கு இதுவும் வேண்டும்... தமிழீழம் இந்தியாவுக்கு எப்போதும் நண்பனாகவே இருக்கும் எண்டு படிச்சு படிச்சு சொல்லியும் கேட்டாங்களா.. அநியாயமாக நமக்கிருந்த பொக்கிஷத்தை அழித்து விட்டாங்களே... உங்களுக்கு இருந்த ஒரே நண்பனையும் இழந்துவிட்டீர்கள்.. இனி இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருப்பது தான் ஒரே வழி.. எங்கள் இனத்தை வாழ வையுங்கடா.. அது காலம் பூரவும் உங்களுக்கு நன்றியுடையதாய் இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

It is a well chronicled fact that it was India that instigated the northern insurgency in Sri Lanka during the Indira Gandhi era to destabilize Sri Lanka that was then seen as pro-western. In recent months India has got a little nervy with Sri Lanka's galloping ties with China, and clearly wants to establish a firmer foothold in north Sri Lanka.

For years the Sri Lankan Foreign Ministry kept this issue on the backburner for obvious reasons. A consulate is usually opened up only in areas where a country has many of its citizens living. Just the other day, India opened up a visa section in Jaffna to facilitate northerners obtaining their visas to travel to India without having to come to Colombo. While this was a salutary move, strategic studies analysts are more than a little concerned at the need to open up a consulate in Jaffna when there are no Indian citizens, or certainly not in large numbers to warrant the opening up of a consulate.

http://www.sundaytimes.lk/100523/Columns/political.html

இந்தியா வடக்கில் தூதரகம் அமைப்பது பற்றி கொழும்புப் பத்திரிகை எழுதியது இது..! சீனாவை உள்ளே விட்ட இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா முயற்சிக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைந்துபோய்விட்டன. வெறும் தூதரகக்கிளையை அமைத்து கண்காணித்து என்ன ஆகப் போகிறது? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோதனை மேல் சோதனை பொதுமடா சாமி, வார்த்தைகள் ஜாலம் என்றால் தாங்காது இந்தியா. தாங்கியே ஆகவேண்டும் காலத்தின் கட்டாயம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் இந்தியா இலங்கையைத் தனது கைக்குள் இருந்து நழுவவிட்டது தமிழனுக்குச் செய்த நம்பிக்கை துரோகத்தின் விளைவு தான். அதன் விளைவை அறுவடை செய்யும் காலம் மிகத்தூரத்தில் இல்லை. பாவங்களில் கொடிய பாவம் நம்பிக்கைத்துரோகம். சுண்டக்காய்ச் சிங்களவன் இந்தியப்பெரும் அரசிற்கு எதரிகாலத்தில் சவாலாக இருக்கப்போவதன் அத்தியாயங்களின் தொடக்கம். வாழ்க வளர்க! துரோகிகள் அழிக.

  • கருத்துக்கள உறவுகள்

.

மாநிலத்துக்கு, மாநிலம் இந்தியா ஒரு கொள்கையை கடைப்பிடிக்கின்றது.

நதிகளுக்கு குறுக்கே அணை கட்டுவதை, இந்தியா எப்போதும் ஆபத்து என்று தெரிந்தே..... அதனை அனுமதிக்கின்றது.

ஆனால் இந்திய அரசியல்வாதிகளின் ஊழல், பெண்பித்து, சினிமா போன்றவை மூலம் வெளியே தெரியாவிட்டாலும்..... என்றோ பாதிக்கப் பட்டவன் தனது வெறுப்பைக் காட்டவே செய்வான்.

இதுவே இந்தியாவுக்கு ஆபத்தாக முடியலாம். அப்போது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் தங்கள் பங்கிற்கு கிற்றார் வாசிக்கும்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.

முடிந்தால் அந்த பத்தியை இங்கு இணைத்துவிடமுடியுமா நண்பரே? நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் அந்த பத்தியை இங்கு இணைத்துவிடமுடியுமா நண்பரே? நன்றி

http://tamil.webdunia.com/newsworld/news/international/1005/14/1100514057_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

.

எல்லாரும் நல்ல விபரமாகத்தான்..... விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பது நல்ல விடயம். :D

.

  • கருத்துக்கள உறவுகள்

நக்சலைட்டுகளுடன் ஈழத்தமிழர்கள் தொடர்புகளை மேம்படுத்தி தமிழகத்தினதும், இந்தியாவினதும் குடும்ப ஆட்சிப் பாரம்பரியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தோள் கொடுக்க வேண்டும். இந்திய யூனியன் சிதைந்தாலன்றி வங்காள விரிகுடர் பிரதேசத்தில் தமிழ்த் தேசியம் வளர்ச்சியடைய முடியாது. பல மானிலங்களில் உள்ள பின்தங்கிய கிராமப்புறங்களில் நக்சலைட்டுகள் செல்வாக்குப் பெற்றிருப்பதோடு அப்பிரதேசங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறார்கள். இதனைச் சாதகமாக்கி நக்சலைட்டுகளின் செல்வாக்கை விரிவுபடுத்த புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவமுடியும்.

இலங்கையை நெருக்குவாரத்திற்குள்ளாக்கி தமிழருக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு எமக்குத் துரோகமிழைத்த இந்தியாவுக்கு உண்டு. அது நடைபெறுவது சாத்த்pயமில்லையாதலால் இந்தியாவை ஈழத்தமிழர்கள் நெருக்கு வாரத்திற்குள்ளாக்கிப் பழிதீர்த்துக் கொள்வதே சரியான ராஜதந்திரமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.