Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடி இனியும் தேவைதானா?: தெய்வீகன்

Featured Replies

புலிக்கொடி இனியும் தேவைதானா?: தெய்வீகன்

“தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் – அல்லது பேரம் பேசினால் – தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்”

- இவ்வாறான ஒரு எழுதப்படாத கோட்பாடு கடந்த மே 19 ஆம் திகதிக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினரின் மத்தியில் காணப்பட்டது. அந்த எழுதாத தத்துவத்தை தற்போது ஓர்மமாகவே நின்று அமுல்படுத்தி, “புலிகளது அடையாளங்கள் இன்றிய நிகழ்வுகளின் ஊடாக தமிழ்மக்களின் நியாயமான நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூறி மென்போக்கு அல்லது மிதவாத அரசியல் போராட்டத்தை நடத்தப்போகிறோம்” – என்று ஒரு பகுதியினர் புறப்பட்டிருக்கின்றமையை தெளிவாக காணவும் உணரவும் முடிகிறது.

இந்தக்கூற்று பிழை என்ற நிலைப்பாடு உடையவர்களும்கூட, காலப்போக்கில் தமது நிலைப்பாட்டை மாற்றுவதில் என்ன தப்பு என்ற பாதையின் பால் ஈர்க்கப்படும் வகையில் சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்ற ஆபத்தை நாம் கண்முன்னால் காண்பதால் இது தொடர்பில் ஒரு விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம், கொடியை மறுக்கின்ற புலம்பெயர்ந்த மக்களின் மத்தியில் உள்ள அந்த ஒரு பகுதியினர், தமிழ் தேசிய கொள்கைக்கும் தமிழீழ விடுதலை என்பதில் அனைவரும் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கும் மாறானவர்கள் அல்லர். ஆனால், தேசிய உணர்வு என்பது மனதில் இருந்தால் போதுமானது. சர்வதேச சமூகத்துடன் அணைந்து பணிபுரியவேண்டுமாயின் அந்த சமூகத்தை உள்வாங்குவதற்கு ஏதுவாக – அந்த சமூகத்துக்கு பிடிக்காத – விடயங்களை தவிர்ப்போம் என்ற ஒரு கொள்கையின் ஊடாக தமது செயற்பாடுகளை முன்நகர்த்துவதற்கு தலைப்பட்டுள்ளனர்.

இந்த இடத்தில்தான் தெளிவான விளக்கத்தினை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை உணரப்படுகிறது.

அதாவது, புலிக்கொடி என்று ஒற்றை சொல்லில் அழைக்கப்படும் அந்த அடையாளத்தின் பெயர் அதுவல்ல என்பதை புரிதல் மிக மிக அவசியமாகிறது. அதன் பெயர் தமிழீழ தேசிய கொடி. அதுவே சரியான சொற்பதமும் அதற்குரிய மரியாதையும் ஆகும். அது ஏன் அவ்வாறு அழைக்கப்படவேண்டும் என்பதை கீழே பார்ப்போம்.

(கொடியில் புலி இருப்பதனால் அந்த புலிக்கொடி என்று அழைக்கப்படலாம்தானே என்று வாதம் முன்வைப்பவர்கள், நாம் மாவீரர் சுடலை என்று கொச்சையாக அழைப்பதில்லை என்பதையும் தேசத்துக்காக உயிர்நீத்த அந்த புனிதர்கள் விதைக்கப்பட்ட இடத்தை அழைப்பதற்கு மாவீரர் துயிலும் இல்லம் என்ற சொற்பதத்தையே பேச்சுவழக்கில்கூட கொண்டுள்ளோம் என்ற யதார்த்தத்தினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மரியாதையும் மதிப்பும் கொடுக்கவேண்டும் என்ற உண்மைநிலையை புரிந்துகொள்பவர்கள் சொற்பதத்திற்கூட தமிழீழ தேசிய கொடியை புலிக்கொடி என்று அழைக்கமாட்டர்கள்)

தமிழீழ தேசிய கொடியின் அந்த மகத்துவம் என்ன? ஏன் நாம் அதனை என்றைக்கும் இழக்கக்கூடாது?

தமிழீழ தேசிய கொடி எனப்படுவது வெறுமனே தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி மட்டும் அல்ல. அது தமிழீழ மக்களின் கொடியும் ஆகும். ஏனெனில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகவும் அவர்களது அபிலாஷைகளுக்காகவும் அவர்களுக்கு எதிரான கொடிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக போராடி மடிந்த 30 ஆயிரம் மாவீரர்களின் இழப்புக்களின் ஊடாகவே தமிழீழ மக்களின் போராட்ட நியாயம் வெளியுலகுக்கு உணர்த்தப்பட்டது. அவர்களது அந்த உறுதியான இலட்சிய பயணத்தின் ஊடகத்தான் ஈழத்தமிழன் ஒவ்வொருவனுக்கு உலகின் எந்த மூலையிலும் ஒரு அடையாளம் கிடைத்தது. ஈழத்தமிழருக்கென்ற தேசம் ஒன்று இன்னமும் கிடைக்கவில்லை என்பது வேறு. ஆனால், அது இன்னமும் மறுக்கப்பட்டுவருகிறது என்ற யதார்த்தத்தை உலகுக்கு உணர்த்தியது தமிழீழ விடுதலைப்போராட்டமும் அதன் பாதையில் மடிந்த மாவீரர்களின் தியாகமும் ஆகும்.

அந்த வகையில் தமிழர்களது போராட்டம் எனப்படுவது 70 களின் பிற்கூறிலிருந்து புதிய பாதையில் மீளுரைக்கப்படுகிறது. அது மூன்று தசாப்தங்களக்கு மேற்பட்ட காலப்பகுதியாக வரிவடைகிறது. அந்த காலப்பகுதியில் தமிழ்மக்களின் சகல உரிமைகளும் இழப்புக்களின் ஊடாக வரலாறாக மீண்டும் பதியப்படுகிறது. அதாவது, தமிழினம் என்பது ஒரு தேசிய இனம் எனப்படுவதும் அவர்களது தாயகம் எது என்பதும் அந்த இனத்துக்கு தன்னாட்சி உரிமை உண்டு எனப்படுவது அழியாத உண்மைகளாக மீளுறுதிப்படுத்தப்படுகிறது. தமிழீழ மக்களின் இந்த தார்மீக உரிமைகள் எவ்வளவு பெறுமதியானவை நியாயபூர்வமானவை என்பதும் இடித்துரைக்கப்படுகிறது. அந்த அடிப்படை தத்துவங்கள் அனைத்தும் ஈழத்தமிழனாக பிறந்த ஒவ்வொருவனினதும் இரத்தத்தில் ஊறிய உண்மைகள்.

ஆனால், அப்படிப்பட்ட நியாயமான – தியாகங்கள் நிறைந்த போராட்டம் ஏன் மெளனிக்கப்பட்டது? அதனை ஏன் சர்வதேச சமூகம் பயங்கரவாத போராட்டமாக சித்திரித்தது? என்ற விடயங்கள் எல்லாம் பிறிதொரு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை.

இதில் முக்கியமாக புரிந்துகொள்ளவேண்டிய விடயம் யாதெனில், சர்வதேச சமூகம் அங்கீகரிக்கத்தக்க விதத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டம் நடைபெறவில்லை என்பதற்காக தமிழீழ மக்கள் தமக்கென்றுள்ள அடையாளங்களையும் தியாகம் செய்ய முடியாது என்பதே ஆகும். ஏனெனில், தமிழ் தேசிய அடையாளங்களாக நாம் பேணும் விடயங்கள் எனப்படுவை தமிழ் மக்களின் இழப்புக்களின் ஊடாகவும் தமிழர் சேனையின் தியாகத்தின் ஊடாகவும் பெறப்பட்டவை. அந்த அடையாளங்களுக்காக உயிரை துறப்பதற்குக்கூட ஒரு இனம் துணிந்ததென்றால், அந்த தியாகமும் அந்த துணிவும் அந்த தேசிய அடையாளங்களும் தமிழர்களின் பெருமையும் வீரமும் சார்ந்த விடயங்கள். அதனை விமர்சிப்பதற்கு எவருக்கும் தகுதியில்லை.

என்னை அடித்தவனை என் தந்தை அடித்தார். அங்கு என் தந்தையின் வீரமும் மானத்தை இழக்காத எந்த குடும்பத்தின் கெளரவமும் தங்கியிருக்கிறது. அதன் ஊடாக எமது குடும்பத்துக்காக கட்டிக்காத்த ஒரு மரியாதை இருக்கிறது. இவை எல்லாவற்றையும் வெளியிலிருந்த பார்க்கும் ஒருவன், குற்றவாளியான உன் தந்தையை துறந்துவிட்டு வா, நான் உனக்கு அடைக்கலமும் அளிக்கிறேன், உனக்கு தேவையானவற்றையும் தருகிறேன் என்று கூற, அதற்கு நான் உடன்படுவேனாக இருந்தால், அது எந்த வகையில் நியாயம்?

ஆகவே, ஈழத்தமிழினம் இன்னமும் தனது இலக்கை அடையாதவர்களாக – இன்னமும் துன்பச்சுமையுடனேயே பயணிப்பவர்களாக – இருக்கலாம். ஆனால், எமது இன அடையாளங்களையே இழந்துதான் அந்த இலக்கினை அடையவேண்டும் என்ற தேவை எமக்கு இல்லவே இல்லை. இருக்கவும் கூடாது. அவ்வாறு எமது இன அடையாளங்கள் என்ற விடயத்திலேயே சமரசம் செய்யும் நிலைக்கு செல்லக்கூடிய இனம் ஒன்று இலக்கினில் ஒருபோதும் உறுதியாக இருக்கப்போவதில்லை. இன அடையாளம் என்ற விடயத்தையே பேரம்பேசும் பொருளாக்கி பயணிக்கும் இனம் ஒன்று ஒன்று இலக்கினை நோக்கிய பாதையிலும் சமரசத்துடன் சந்தி பிரிந்துவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றை மிக தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதாவது, தமிழரின் தேசிய அடையாளங்களை துணிவுடன் முன்னிலைப்படுத்தி இனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் சூழ்நிலை இன்று தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு இல்லை என்பது யதார்த்தம். ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அவ்வாறு முன்னிலைப்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. பல்லின மக்கள் வாழும் நாடுகளில் தமிழனின் அடையாளம் தமிழீழ தேசிய கொடியே ஆகும். எமது இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய சக்தி எமது தேசிய கொடி. அந்த ஒரு தனிப்பெரும் அடையாளத்தை பெற்றுக்கொள்வதற்கும் அதனையே எமது வரலாறாக வரிந்துகொள்வதற்கும் எமது மக்களும் மாவீரர்களும் கொடுத்த விலை எத்தகையது என்பதை விரிவாக பார்த்தோம்.

இலக்கினை அடைகிறோமோ இல்லையோ அடுத்த தலைமுறை என்ன, அதற்கு அடுத்த தலைமுறையாயினும் அதற்கு நாம் பெருமையுடன் விட்டுச்செல்லப்போகின்ற மகத்தான விடயங்கள் யாதெனில் எமது இனத்தின் அடையாளங்களும் அதற்காக நாம் கொடுத்த விலையும் அவை நடந்தேறிய வரலாறுமே ஆகும். இத்துணை பெறுமதியான தேசிய சொத்துக்களை, நித்தமும் மாறிவரும் பூகோள அரசியல் படிமுறைகளுக்கேற்ப நாம் பதுக்கி வைக்கவேண்டும் என்றும் அல்லது பயந்து ஒதுக்கவேண்டும் என்றும் நினைப்போமேயானால், அது மாண்ட மக்களும் மறைந்த மாவீரர்களும் வரைந்த தமிழரின் வரலாற்றை நாம் மாற்றி எழுத முனைகிறோம் என்றே அர்த்தமாகும்.

தெய்வீகன்.

புலிக்கொடி இனியும் தேவைதானா?: தெய்வீகன்

Edited by மோகன்
முழுமையாக்கப்பட்டுள்ளது - மோகன்

  • Replies 51
  • Views 5.1k
  • Created
  • Last Reply

ஒரு பகுதியினர் புலிக் கொடியில்லாமல் முயற்சிக்கட்டும். இன்னொரு பகுதியினர் புலிக் கொடியுடன் முயற்சிக்கட்டும். இரு பகுதியினரும் பின்னணியில் ஒன்றாக, ஒற்றுமையாக, ஒரே இலக்கை நோக்கி செயற்பட்டால் போதுமானது.

ஒரு பகுதியினர் புலிக் கொடியில்லாமல் முயற்சிக்கட்டும். இன்னொரு பகுதியினர் புலிக் கொடியுடன் முயற்சிக்கட்டும். இரு பகுதியினரும் பின்னணியில் ஒன்றாக, ஒற்றுமையாக, ஒரே இலக்கை நோக்கி செயற்பட்டால் போதுமானது.

ஆரோக்கியமான மிகவும் புத்திசாலித்தனமான கருத்து.. வரவேற்கத்தக்கது.. ஆனால் நமக்குள் இருக்கும் பிரிவினைகள் எமது இறுதி இலக்குக்கு தடையாக அமையக்கூடாது.. சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுத்து செயற்படவும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பகுதியினர் புலிக் கொடியில்லாமல் முயற்சிக்கட்டும். இன்னொரு பகுதியினர் புலிக் கொடியுடன் முயற்சிக்கட்டும். இரு பகுதியினரும் பின்னணியில் ஒன்றாக, ஒற்றுமையாக, ஒரே இலக்கை நோக்கி செயற்பட்டால் போதுமானது.

வில்லங்கமான விடயமே அதுதானே....?

புலிகொடி இமயமலையில் பறந்த தமிழனின் கொடி. அதனால்தான் புலிகள் அதை தொடர்ந்தும் ஏற்றினார்கள். இப்போது புலிகள் இல்லாவிட்டால் என்ன? அது தமிழனின் கொடி என்றுவிட்டு செயற்படலாமே?

ஏதாவது குழப்பத்தை உண்டுபண்வேண்டும் என்பது கூட பிறந்த இன்னொரு குணமாக இருக்கும்போது கொடி ஒரு தடையா?

எங்களிடம் ஒரு வேட்டி இருந்தது. அதன் தரம் போதாதென்று ஒரு பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டோம். எமக்கு ஒரு கதர் வேட்டி தரப்பட்டது. அதை நிராகரித்து பட்டு வேட்டிக்காக போராடினோம். இப்பொழுது எம்மிடம் வேட்டி இல்லை. ஏம் நிர்வாணத்தை மறைக்க ஒரு கோவணம் மட்டுமேயுள்ளது. நாங்கள் தொடர்ந்தும் முரண் நிலைப்பாட்டையே முன்னெடுப்போமாயின் கோவணமும் பறிபோய்விடும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பகுதியினர் புலிக் கொடியில்லாமல் முயற்சிக்கட்டும். இன்னொரு பகுதியினர் புலிக் கொடியுடன் முயற்சிக்கட்டும். இரு பகுதியினரும் பின்னணியில் ஒன்றாக, ஒற்றுமையாக, ஒரே இலக்கை நோக்கி செயற்பட்டால் போதுமானது.

நல்ல ஒரு கருத்து

உங்களுக்கு வேட்டி இருந்ததோ?????????? ... ம்ம்ம்ம்ம்ம்.... கோவணமும் இல்லாமல் அம்மணமாக திரிந்தனீங்கள்!

48 முதல் இன்று வரை உங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது, ஆ??????? இவர் சொல்கிறார் 48 தொடக்கம், புலி ஆயுதம் தூக்கிய 83 வரை தமிழர்கள் சந்தோசமாக இருந்தார்களாம்???????????

.... உங்கை ஒருவர்(வி.பு.மு.போ/வி.பு.பு.போ/கே.பி.வ.க/...) முன்பு ஒருக்கால் பம்பலப்பிட்டி கடற்கரையில் ஒரு புத்தி சுவாதீன முற்ற தமிழ் இளைஜன் வருவோர் போவோருக்கு சிறிய கற்களை எறிந்து கொண்டிருந்தான், அதில் ஒரு கல் அங்கு வந்த சிங்கள பொலிஸில் பட, அவனை அடித்திருக்கிறார்கள், அவனோ "ஐயோ அம்மா, ஐயோ அப்பா" என்று குழறியிருக்கிறான். அவனை அவர்கள் கடலுக்குள் துரத்தி சென்று அடித்து கொன்றது உலக தொலைக்காட்சிகளிலேயே இடம்பெற்றது. ... அச்சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லும்போது ... "அவன் ஐயோ அம்மா, அப்ப என்ற படியாலேயே அடித்துக்கொன்றுள்ளனர், மாறாக அவன் மகே அம்மெ, தாதே என்றிருந்தால் விட்டிருப்பார்கள்" ... இதை சொல்லி அவர் மேலே, இச்சம்பவம் தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு என்று ஒன்றில்லை என்பதை காட்டுகிறது. எமக்கான பாதுகாப்பை எம் பிரதேசத்திலாவது பொலிஸ் அதிகாரத்துடன் கூடிய தீர்வை எடுக்க வேண்டிய தேவையுள்ளது, .... என்று கூறியவர் ... நமோ நமோ தாயே பாட பின்பு சென்று விட்டார்.

என்ன இருந்தாப்போல பின்னுறீயள்...??

நாய்கள் மாதிரி தம் சொந்த இனத்தை கண்டதும் கடித்து குதறும் இனம் இலங்கைத்தமிழனே அன்றி வேறொருவரும் இல்லை நாங்கள் கண்ட மிச்சம் என்ன? இப்படி வாழ்ந்தால் இது தான் நிலை என்று உலகு உதாரணம் காட்டும் அளவுக்கு எங்கள் நிலை வந்து விட்டது.

சரி தமிழர் கடிச்சு குதறுகினம்... வேறு இனங்களில் எங்கு இப்படியான பிரச்சினை இல்லை எண்டு சொல்லுங்கோவன்...?? யூதர்கள்...?? அங்கையும் உள்ளை தலையை விட்டு பாருங்கோ ஆயிரம் புடுங்குப்பாடுகள்...!

அக்கரைக்கு இக்கரை பச்சை எண்டு அங்கலாய்க்கும் சனத்துக்கு இது ஒரு தொழிலாகவே நீண்டகாலமாய் போச்சுது...

Edited by தயா

உங்களுக்கு வேட்டி இருந்ததோ?????????? ... ம்ம்ம்ம்ம்ம்.... கோவணமும் இல்லாமல் அம்மணமாக திரிந்தனீங்கள்!

48 முதல் இன்று வரை உங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது, ஆ??????? இவர் சொல்கிறார் 48 தொடக்கம், புலி ஆயுதம் தூக்கிய 83 வரை தமிழர்கள் சந்தோசமாக இருந்தார்களாம்???????????

.... உங்கை ஒருவர்(வி.பு.மு.போ/வி.பு.பு.போ/கே.பி.வ.க/...) முன்பு ஒருக்கால் பம்பலப்பிட்டி கடற்கரையில் ஒரு புத்தி சுவாதீன முற்ற தமிழ் இளைஜன் வருவோர் போவோருக்கு சிறிய கற்களை எறிந்து கொண்டிருந்தான், அதில் ஒரு கல் அங்கு வந்த சிங்கள பொலிஸில் பட, அவனை அடித்திருக்கிறார்கள், அவனோ "ஐயோ அம்மா, ஐயோ அப்பா" என்று குழறியிருக்கிறான். அவனை அவர்கள் கடலுக்குள் துரத்தி சென்று அடித்து கொன்றது உலக தொலைக்காட்சிகளிலேயே இடம்பெற்றது. ... அச்சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லும்போது ... "அவன் ஐயோ அம்மா, அப்ப என்ற படியாலேயே அடித்துக்கொன்றுள்ளனர், மாறாக அவன் மகே அம்மெ, தாதே என்றிருந்தால் விட்டிருப்பார்கள்" ... இதை சொல்லி அவர் மேலே, இச்சம்பவம் தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு என்று ஒன்றில்லை என்பதை காட்டுகிறது. எமக்கான பாதுகாப்பை எம் பிரதேசத்திலாவது பொலிஸ் அதிகாரத்துடன் கூடிய தீர்வை எடுக்க வேண்டிய தேவையுள்ளது, .... என்று கூறியவர் ... நமோ நமோ தாயே பாட பின்பு சென்று விட்டார்.

நிர்வாணமாக நிற்பதாக உணர்ந்தவர்கள் குறைந்த பட்சம் களத்தில் ஒரு சில காலமாவது போராடினார்கள்!

நிர்வாணமாக நிற்பதாக வெறும் கூக்குரல் இட்டவர்கள் ஆளை விட்டால் காணும் என்று ஓடி வந்தார்கள்!

இன்று மீண்டும் இங்கு வந்தும் கூக்குரல் இடுகிறார்கள்! இவர்கள் இங்கு கோட்டு சூட் போட்டு இருக்கிற கோவணத்தையும் அவிழ்க்க நிற்கிறார்கள்!

நீங்கள் என்னதான் சொன்னாலும் இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையினர் பிரிக்கப்படாத இலங்கையில் தான் வாழப்போகின்றார்கள். தங்களுடைய தலைவிதி சிங்களவரின் தலைவிதியோடு பின்னிப்பிணைந்தது.

இலங்கைத் தமிழர்கள் அடியுண்டு போன நொறுங்குண்ட மக்கள் பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைமை.

தமிழர்கள் பகுத்தறிவுக்கொவ்வாத முரண் நிலை அரசியலைத் தவிர்த்து யதார்த்தமானதோர் அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும்.

கடும் போக்கைக் கடைப்படிப்போமாயின் நாம் மேலும் ஒடுக்கப்பட்டுவிடுவோம். சிங்கள வல்லூறுகள் மேலும் மேலும் எம்மை அழிக்க முயல்கையில் புலம் பெயர் முட்டாள்களின் கொள்கைகளும், தமிழ்நாட்டு கோமாளிகளின் கூத்துக்களும் அதற்குத் தூப மிடுகின்றன.

இன்று தமிழ்தேசியக் கூட்டமைப்பு தனது கடந்தகால விடுதலைப்புலிகள் அரசியலில் இருந்து மெல்ல விடுபட முயல்கின்றது.

இன்று ராஜபக்ஸ அரசு உச்சத்தில் இருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகாரத்தில் இருக்கும் அவருடன் நாம் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.

சிங்கள கடும்போக்காளர்கள் எம்மை மேலும் நசுக்கவே முனைவர். நாம் எம்மைத் தற்காத்துக்கொண்டு அம்முயற்சியை எதிர்க்க வேண்டும்.

ஓன்றுபட்ட ஸ்ரீலங்கா என்ற வரையறைக்குள் நின்றபடியே சிங்கள தீவிர செயற்பாடுகளை நாம் கட்டுப்படுத்தி முன்செல்லவேண்டும். அவர்களுடனான உரையாடல் பிரிவினை பற்றியதாக அன்றி உலகம் முளுவதும் ஏற்றுக்கொள்ளப்படும். மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் பன்மைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.

ஒரு நாளில் அல்லது இரவோடிரவாக மாற்றங்களைக் கொணர வல்ல மந்திரக் கோல் யார்கையிலும் இல்லை. இது ஒரு பகீரத முயற்சி. வேறு வழியில்லை.

எமது மக்கள் முழுமையாக மீளக் குடியமரவேண்டும். உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்;படவேண்டும். பாரிய புனர் நிர்மாணப்பணி காத்திருக்கின்றது. 10000க்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்தோடு மீள இணைக்கப்படவேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோர் விடுவிக்கப்படவேண்டும். விவசாயம் மீன்பிடி சிறுகைத்தொழில் எல்லாம் புத்துயிர்ப்புப் பெற்று பொருளாதாரம் மேம்பட வேண்டும். சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படுதலும் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படுதலும் அவசியம் செய்வதற்கு எவ்வளவோ உண்டு.

தமிழராகிய நாம் சிங்கள மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டவேண்டும். அரசியல் ஏற்பாடுகளுக்காக கொழும்பின்மீது வெளியார் அழுத்தத்தைப் பிரயோகிக்க முயல்வதில் அர்த்தமில்லை. நிர்ப்பந்தத்தின் பேரில் சிங்களவர்கள் இணங்கினாலும் அவர்கள் திரைக்குப் பின்னால் அதைச்செயலிழக்கச்செய்வர். (13 வது திருத்தத்திற்கு நேர்ந்தது போல)

நடைமுறைச்சாத்தியமானது என்வென்றால் இப்பொழுதிருக்கும் மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதாகும். முழுமையான முறைமையை வலுப்படுத்துவதாகும். முழுமையான சமஸ்டி முறைமையை ஒரு தூர இலக்காக வைத்துக்கொண்டு சிங்களவர்களோடும் முஸ்லிம்களோடும் சேர்ந்து செயற்படவேண்டும்.

தமிழர்களைப்பொறுத்தவரை கிடைக்கமுடியாததற்கு ஆசைப்படுதல் தற்கொலைக்கொப்பானது. அடையக்கூடியதை ஏற்றுக்கொள்ளுதல் புத்திசாலித்தனமானது.

அதை நான் கூறவில்ல சில பத்திரிகையாளர்களின் கூற்றை இங்கு மீளப்பதிகிறேன்!

Edited by Bond007

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது இக்கருத்துக்கு இடப்பட்ட ஒரு சிவப்பு புள்ளியை அகற்றி விட்டுள்ளேன்

எவ்வாறாயினும் என் இனம் மூச்சுவிடட்டும் முதலில்

முதலிலை புலியையும் புலிக்கொடியையும் விமர்சிப்பவர்கள் புலிகளுக்கு நிகராக உங்களை வளர்த்து கொள்ளுங்கள்... புலிகளுக்கு நிகராக உங்களை வளர்த்து மக்களின் ஆதரவை வைத்துக்கொண்டு புலியை வாரலாம்...

புலிக்கொடி என்பது தமிழர்களின் கொடி... அதை பிடிக்க சொல்லுவதோ, பிடிக்க கூடாது எண்று சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது... அது மக்களின் விருப்பில் தங்கி இருக்கின்றது...

சரி தமிழர் கடிச்சு குதறுகினம்... வேறு இனங்களில் எங்கு இப்படியான பிரச்சினை இல்லை எண்டு சொல்லுங்கோவன்...?? யூதர்கள்...?? அங்கையும் உள்ளை தலையை விட்டு பாருங்கோ ஆயிரம் புடுங்குப்பாடுகள்...!

அக்கரைக்கு இக்கரை பச்சை எண்டு அங்கலாய்க்கும் சனத்துக்கு இது ஒரு தொழிலாகவே நீண்டகாலமாய் போச்சுது...

தமிழ் உலகத்தவருடன் ஆத்திரம் உடையவர்கள் எப்படி மற்ற உலகத்தவரை பற்றி சிந்திக்கவோ பார்க்கவோ போயினம்,ஒன்லி தமிழுலகத்தப்பற்றி நோட்டை சொல்லுவினம் :D:D

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது இக்கருத்துக்கு இடப்பட்ட ஒரு சிவப்பு புள்ளியை அகற்றி விட்டுள்ளேன்

எவ்வாறாயினும் என் இனம் மூச்சுவிடட்டும் முதலில்

ஆனால் இந்த திரியின் தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை

அதிலும் இனியும் தேவையா என்பது......?

அம்மா தேவையா என்பது போன்றது அது எனக்கு....

ஆனால் அம்மாவை சில காரணங்களுக்காக சில காலம் மறைத்துவைக்க வேண்டி வந்தால்.....???

ஒரு பகுதியினர் புலிக் கொடியில்லாமல் முயற்சிக்கட்டும். இன்னொரு பகுதியினர் புலிக் கொடியுடன் முயற்சிக்கட்டும். இரு பகுதியினரும் பின்னணியில் ஒன்றாக, ஒற்றுமையாக, ஒரே இலக்கை நோக்கி செயற்பட்டால் போதுமானது.

இதற்கு ஒரு பச்சை போட்டுள்ளேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இந்த திரியின் தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை

அதிலும் இனியும் தேவையா என்பது......?

அம்மா தேவையா என்பது போன்றது அது எனக்கு....

ஆனால் அம்மாவை சில காரணங்களுக்காக சில காலம் மறைத்துவைக்க வேண்டி வந்தால்.....???

கஸ்ரபட்டு வளர்த்த தாயை சிலர் தமது பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பது இல்லை, கொளரவம் இல்லையாம் தாய்வந்தால். :D:D:D

கடும் போக்கைக் கடைப்படிப்போமாயின் நாம் மேலும் ஒடுக்கப்பட்டுவிடுவோம். சிங்கள வல்லூறுகள் மேலும் மேலும் எம்மை அழிக்க முயல்கையில் புலம் பெயர் முட்டாள்களின் கொள்கைகளும், தமிழ்நாட்டு கோமாளிகளின் கூத்துக்களும் அதற்குத் தூப மிடுகின்றன.

ஐயா, கடும்போக்கு/கடுப்பில்லாதபோக்குகள் இருக்கட்டும்! 48இலிருந்து இற்றுவரை என்னத்தை தந்தான்? என்னத்தை தருகிறான்? என்னத்தை தரப்போகிறான்? என்பதை சொல்லுங்கள் ... பின்பு நாங்கள் ஒன்றாக இருக்க யோசிப்போம்!

ஐயா, கடும்போக்கு/கடுப்பில்லாதபோக்குகள் இருக்கட்டும்! 48இலிருந்து இற்றுவரை என்னத்தை தந்தான்? என்னத்தை தருகிறான்? என்னத்தை தரப்போகிறான்? என்பதை சொல்லுங்கள் ... பின்பு நாங்கள் ஒன்றாக இருக்க யோசிப்போம்!

பாஸ்போட் எடுத்து வெளி நாடு ஓடிவர சுதந்திரம் தந்தான்! அது போதாதா?

வந்த அரசியல் தீர்வுகளை உதறித் தள்ளியது யார் தவறு? மாகாண சபையை பலப்படுத்த இந்தியா உதவிசெய்த போது அதை உதறித் தள்ளியது யார் தவறு?

பிரேமதாச கொழும்பில் கூட்டி சென்று தமிழீழம் தவிர எதுவும் தருவேன் என்று கூற அந்த பிரேமதாசவையே போட்டுத்தவறியது யார் தவறு?

சந்தர்பங்கள் வந்த போது அதை புறந்தள்ளி விட்டு மீண்டும் பழைய புரணத்தை கதைப்பதில் பிரியோசம் இல்லை! 48 58 83 இவை வரலாறு! இதற்குள் எமக்கு வந்த சந்தர்பங்களை நாம் மறைத்து கூக்குரல் இடுவது சந்தர்ப்ப வாத அரசியல்!

ஓன்றுபட்ட ஸ்ரீலங்கா என்ற வரையறைக்குள் நின்றபடியே சிங்கள தீவிர செயற்பாடுகளை நாம் கட்டுப்படுத்தி முன்செல்லவேண்டும். அவர்களுடனான உரையாடல் பிரிவினை பற்றியதாக அன்றி உலகம் முளுவதும் ஏற்றுக்கொள்ளப்படும். மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் பன்மைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.

ஐயா! உங்கள் போன்றோர் ஒருமைத்தனமை/பன்மைத்தன்மை கதைத்துக் கொண்டு ...

* நாங்கள் சிங்கள இடங்களில் வாழ்வில்லையோ? அவ்வாறே அவனும் வட/கிழக்கில் வாழட்டும்

* சிங்கள பகுதியில் இந்து ஆலயங்கள் இல்லையா? புதிதாக கட்டவில்லையா? அவ்வாறே அவனும் புத்தகோயிலை கட்டட்டும்

* முஸ்லீங்கள் எவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் வாழ்கிறார்களோ, அவ்வாறே தமிழர்கள் வாழப்பழக வேண்டும்

* வட/கிழக்கு தமிழர்களின் தாய்கம் என்பதெல்லாம் ஏக முடியாது

* ...

... ஆமா இவைகளா பன்முதத்தன்மை?????????? அதற்கு மேல் கொழும்பில் தமிழர்கள் வாழ்வது குடியேற்றியதால் அல்ல! சிங்களவன் வந்து யாழில் காணி வாங்கி வீடு கட்டி குடியேறட்டும், தடுக்கவில்லை. ஆனால் குடியேறுதல் வேறு!!!! குடியேற்றுதல் வேறு!!! உங்கள் தரவழியின் கக்கூசு கொள்கைகள் அவனை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது. கொழும்பில் தமிழன் இந்துக்கோயில் கட்டினால், அது அவனது சொந்தப்பணத்தில்! புத்த கோயில்கள் வட/கிழக்கில் கட்டப்படுவடு/பட்டுக்கொண்டிருப்பது எந்தப்பணத்தில்????

.... 48 தொடக்கம் தொடர்ந்த ஜனநாயகப்போராட்டத்தை இனி இவர் தொடங்கப் போகிறாராம்!!!! அதற்கு சிங்களம் அடி பணியப்போகுதாம்!!!!

தமிழர் தேசிய கொடி - விலங்கு - பறவை - பூ : இவற்றை எமது தேசிய அடையாளங்கள்.

எல்லா இனங்களும் போல் தமிழ் இனமும் தனக்குரிய அடையாளங்களை கொண்டது.

இவை பற்றி விவாவிப்பதற்கு எதுவும் கிடையாது.

தமிழராகிய நாம் சிங்கள மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டவேண்டும். அரசியல் ஏற்பாடுகளுக்காக கொழும்பின்மீது வெளியார் அழுத்தத்தைப் பிரயோகிக்க முயல்வதில் அர்த்தமில்லை. நிர்ப்பந்தத்தின் பேரில் சிங்களவர்கள் இணங்கினாலும் அவர்கள் திரைக்குப் பின்னால் அதைச்செயலிழக்கச்செய்வர். (13 வது திருத்தத்திற்கு நேர்ந்தது போல)

இவர் சொல்ல வந்தது இதைத்தான்!!!!!!!!!!!! ... அதற்காகத்தான் இவ்வளவு ஆலாபனைகளும்!!!!!!!!!! ... என்ன ...

* உந்த புலத்திலிருந்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்துங்கள்!!! ...

புலிக்கொடி இனியும் தேவைதானா?: தெய்வீகன்

... தோல்வியுற்ற ஆயுதப்போராட்ட பின்னடைவு எமது மக்களின் எதிர்காலத்தை சூனியமாகக்கும் அரசியல் பின்னடைவாக மாறாது இருக்கும் பொருட்டு .... சர்வதேசம் /பிராந்திய நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு, இக்கொடி தடைக்கல்லாக இருக்குமேயானால் இதனை விடுத்து முன்னகருதல் ... எமது அரசியல் சாணக்கியமாகும்!!!

ஐயா! உங்கள் போன்றோர் ஒருமைத்தனமை/பன்மைத்தன்மை கதைத்துக் கொண்டு ...

* நாங்கள் சிங்கள இடங்களில் வாழ்வில்லையோ? அவ்வாறே அவனும் வட/கிழக்கில் வாழட்டும்

* சிங்கள பகுதியில் இந்து ஆலயங்கள் இல்லையா? புதிதாக கட்டவில்லையா? அவ்வாறே அவனும் புத்தகோயிலை கட்டட்டும்

* முஸ்லீங்கள் எவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் வாழ்கிறார்களோ, அவ்வாறே தமிழர்கள் வாழப்பழக வேண்டும்

* வட/கிழக்கு தமிழர்களின் தாய்கம் என்பதெல்லாம் ஏக முடியாது

* ...

... ஆமா இவைகளா பன்முதத்தன்மை?????????? அதற்கு மேல் கொழும்பில் தமிழர்கள் வாழ்வது குடியேற்றியதால் அல்ல! சிங்களவன் வந்து யாழில் காணி வாங்கி வீடு கட்டி குடியேறட்டும், தடுக்கவில்லை. ஆனால் குடியேறுதல் வேறு!!!! குடியேற்றுதல் வேறு!!! உங்கள் தரவழியின் கக்கூசு கொள்கைகள் அவனை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது. கொழும்பில் தமிழன் இந்துக்கோயில் கட்டினால், அது அவனது சொந்தப்பணத்தில்! புத்த கோயில்கள் வட/கிழக்கில் கட்டப்படுவடு/பட்டுக்கொண்டிருப்பது எந்தப்பணத்தில்????

.... 48 தொடக்கம் தொடர்ந்த ஜனநாயகப்போராட்டத்தை இனி இவர் தொடங்கப் போகிறாராம்!!!! அதற்கு சிங்களம் அடி பணியப்போகுதாம்!!!!

30 வருட கால போராட்டம் சிதறிய காரணம் பற்றி சிந்திக்க மறுக்க முனைபவர்கள் மீண்டும் இன்னுமொரு 30 வருடம் முக்கி இன்னுமொரு முள்ளிவாய்காலில் கொண்டுபோய் விடவே கொடுக்கு கட்டி நிற்கிறார்கள்! ஒரு மழுமையான சுயவிமர்சனத்தை நேர்மையாக செய்ய நாம் தயாரில்லை. நம் தவறை மறைத்து அடுதவன் மீத பழி போட்டு தப்புவது சுலபம்! அரசின் ஆத்துமீறல்கள் அனைத்தக்கும் குரல் கொடுப்பது அவசியம்! அமரிக்காவில் கறுப்பர்கள் அமரிக்கர்களாகவே பாராடினார்கள்! தென்ஆபிரிக்காவில் தென ஆபிரிக்கர்களாகவே போராடினார்கள்! நாம் ஆண்ட பரம்பரை தான் ஆனால் சர்வதேச எல்லைகள் பலவும் மாறிய பின்னரும் பிரிந்துபோக அடம்பிடிப்பது நம்மை இன்னமும் அன்னியப்படுத்தும்! இலங்கையில் முழமையான ஜனநாயகம் தழைக்க அனைத்து இனங்களும் ஒன்று பட்டு போராடினால் நிங்கள் சுட்டிக்காட்டிய பலவற்றை தடுக்க முடியும்!

சிங்கள மக்களும் நம் வலியை உணராமல் இல்லை

இதுவும் ஒரு சிங்கள தோழர் எழுதியது!

இவர் சொல்ல வந்தது இதைத்தான்!!!!!!!!!!!! ... அதற்காகத்தான் இவ்வளவு ஆலாபனைகளும்!!!!!!!!!! ... என்ன ...

* உந்த புலத்திலிருந்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்துங்கள்!!! ...

சொல்லாததை திரிக்க வேண்டாம்! வெளியார் அழுத்தம் என்பது அரசியல் தீர்வு பற்றியதே! மனித உரிமை மீறல்களுக்ககு உள்நாட்டிலேயே பலத்த அழுதம் உள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித உரிமை மீறல்களுக்ககு உள்நாட்டிலேயே பலத்த அழுதம் உள்ளது!

:D:D :D :D

21ம் நூற்றாண்டின் மிகப்பெரும் காமடி.

ஸீரியசாய் பேசும் போதே இப்புடி காமெடி எடுத்து விடுகிறீங்களே ..... எப்புடி பாஸ் முடியுது? :D

Edited by காட்டாறு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.