Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து திடீரென வெளியேறினார் பீரிஸ்

Featured Replies

தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து திடீரென வெளியேறியதாகத் தெரிய வருகின்றது.

National Press club இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்காக குறித்த மண்டபத்திற்கு காலை பத்து மணியளவில் வந்த ஜி.எல். பீரிஸ் திடீரென காரணம் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு எதுவித காரணமும் தெரிவிக்காது வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வெளியேறிச் சென்றது குறித்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

National Press club இனால் இந்த ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதை கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரதுங்கவிற்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: http://www.eelamweb.com

சார்பான கேள்விகளைக் கேட்க அவரால் ஏற்பாடு செய்த தமிழின விரோத உடகவியலாளர் வரவில்லை போலும்.

சார்பான கேள்விகளைக் கேட்க அவரால் ஏற்பாடு செய்த தமிழின விரோத உடகவியலாளர் வரவில்லை போலும்.

அதான் நம்ம ஈழ உறவுகளள கொஞ்ச பேர் இதுக்குன்னே காத்துகிட்டே இருப்பங்கலாமே . அவர்களை அனுப்ப வேண்டியது தானே

  • கருத்துக்கள உறவுகள்

National Press club இனால் இந்த ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதை கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரதுங்கவிற்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி கேட்டே பிச்சு எடுத்து விடுவாங்க என்று பீரிசுக்கு நிச்சயமாக தெரியும்.பீரிசுக்கு ஆங்கிலம் தெரியலாம் ஆனால் உண்மைகளை மறைக்க முடியாதே!! ஆதலால் தான் இந்த chicken out.

  • கருத்துக்கள உறவுகள்
:D நீங்க வேற, அந்தாளுக்கு வயித்தக் கலக்கியிருக்குமோ என்னவோ??
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவின் பாதுகாப்புச் சபை-பொதுச் சபை-மனித உரிமைகள் கவுன்சில் ஆகியன எம்மைக் கேள்வி கேட்கலாம். ஆனால் சர்வதேச மன்னிப்புச் சபை எங்களுக்குப் பாடம் நடத்தத் தேவையில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்ட அவர், நியூயோர்க்கில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலே யே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் ஆராயப்படுகின்றன. இது தொடர்பில் ஆராய்ந்த மனித உரிமைகள் கவுன்சில் இலங்கைக்கு எதிராகச் சட்ட நடவ டிக்கைகள் தேவையில்லை எனத் தீர்மானித்துள்ளது.இந்த நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை தொடர்பில் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக் களை முன்வைத்து வருகின்றது. ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் கருத்துக்களை ஒரு சர்வதேச சமூ கத்தின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது.

அவர்கள் எங்களுக்கு எதனை யும் கூறத் தேவையில்லை. அவர் கள் வெளியிடும் கருத்துக்களை நாங்கள் செவிமடுக்கவும் போவ தில்லை. சர்வதேச மன்னிப்புச் சபை யைப் போன்று நெருக்கடிகளை ஆராயும் சர்வதேச குழு, மனித உரி மைகள் கண்காணிப்பகம் போன்ற வை கூட எங்களை வழி நடத்தத் தேவையில்லை.

ஐ.நா. அமைப்புக்களைத் தவிர ஏனைய எவரும் எங்களைக் கேள்வி கேட்க முடியாது. புலிகளின் கொலை களைக் கண்டிக்காதவர்கள் எம் மை மன்னிப்புக் கேட்க வைக்க முயற்சிக்கின்றார்கள். இவர்களின் சட்டங்களை நாங் கள் மதிக்கப் போவதில்லை. இலங்கையைக் கால்பந்தாக வைத்து விளையாட மன்னிப்புச் சபை நினைக்கின்றது.இதற்கு நாங்கள் ஒருபோதும் அடி பணியமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்

வலம்புரி, யாழ்ப்பாணம்

வாத்தியார்

...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.