Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. நிபுணர் குழு தேவையற்ற தலையீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. நிபுணர் குழு தேவையற்ற தலையீடு

அரசாங்கம் கடும் கண்டனம்

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க விசேட நிபுணர்குழுவை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருப்பதை கடுமையாக எதிர்த்திருக்கும் அரசாங்கம், இந்த நடவடிக்கையானது இறைமையுள்ள நாடொன்றின் மீதான தேவையற்ற தலையீடு என்று சாடியுள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;இலங்கை சார்பாக நிபுணர் குழுவொன்று ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் 2010 ஜூன் 22 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்நியமனத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக எதிர்க்கின்றது.

இலங்கை 30 வருட காலமாகப் பயங்கரவாதப் பேரழிவினால் நாசமாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகமோசமான பயங்கரவாத அமைப்பு எனக் கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்கள் மற்றும் நினைக்கக்கூடாத அளவிலான பயங்கரவாதம் என்பனவற்றிற்கு இலங்கை மக்கள் இக்கால கட்டத்தில் துன்பப்பட்டனர். நீண்டதும் கடினமானதுமான போராட்டத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக நாட்டின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்துள்ளதுடன், அதன் மக்களது வாழ்க்கையை மீள்கட்டமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ளுகின்றது. இதன் ஒரு கட்டமாக இலங்கையின் ஜனாதிபதி "கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்%27 என்பதற்கான ஆணைக்குழுவொன்றை விசாரணைச் சட்ட ஆணைகள் சரத்தின் கீழ் நியமித்துள்ளதுடன், இது இலங்கை நியதிச் சட்டத்தின் ஓர் அங்கமாகும். மீண்டும் வலுவளிக்கின்ற முறையானதொரு நீதியூடாக தேசிய ஒற்றுமையை மேலும் வலுவாக்கும் பொருட்டான பெரும் பங்கீட்டினை ஆணைக்குழு மேற்கொள்ளும் என்பதை அரசாங்கம் திடமாக நம்புகின்றது.

இலங்கை வலுவுள்ள சுதந்திரமான நீதித்துறையைக் கொண்டுள்ள இறைமையுடைய நாடாகும் என்பதுடன், நீதி நிர்வாகத்திற்கு உட்பட்ட முறைமையைக் கொண்டுள்ளதாகும். இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்தியும் பாதுகாத்தும் வருகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டமுறை அமைப்புகளினால் இது உண்மையில் ஐயத்திற்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முரண்பாட்டு நிலைகள் முடிவடைந்த பின்னர் பிற விடயங்கள் உட்பட மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு என்பதை மெச்சி ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானமொன்றைச் சம்பிரதாயமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கான நிபுணர்குழுவை நியமித்துள்ளமை நியாயமற்றதும் இறைமை படைத்த ஒரு நாட்டின் மீதான தேவையற்ற தலையீடுமாகும். அத்தோடல்லாது இத்தலையீடானது இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் நடைபெறுகின்ற இவ்வேளையில், அதற்கு எதிரான சுயநலவாதிகள் இதனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.

செயலாளர் நாயகம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் 2009 மே 23 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகம் விடுத்த இணை அறிக்கையில் “இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு (எல்.ரி.ரி.ஈ.) மிடையே நடைபெற்ற இராணுவ நடவடிக்கையின்போது சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் நடைபெற்றதான குற்றச்சாட்டுகள் எதுவும் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

நன்றி - தினக்குரல்

விசாரணை ஒரு வருடம் நடக்கும். அப்புறம் ஒரு மறு விசாரணை . அதற்குள் சிங்களன் ஈழ மக்கள் எல்லோரையும் கலப்பினமாக / கஞ்சிக்கு அலைபவனாக / குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கி விடுவார்கள். அப்போது ஐநா உணவுத்திட்டத்தின் கீழ் எல்லா நாடுகளும் பிச்சை ஈழ மக்களுக்கு போடும். அதற்குள் மிச்சம் உள்ள நம்மவர்கள் பலரை பணத்திற்காக வாழ இந்திய பண முதலாளிகள் கற்றுக்கொடுத்து விடுவார்கள். சிலர் வாழ வழியின்றி வேலையின்றி / உணவின்றி அடிமை வாழ்விற்கு பழகிபோவார்கள்.

அப்போதும் என் புலம் பெயர் ஈழ உறவுகள் இங்கிலிஷ்காரன் எவனாவது நொட்டுவான் என எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கும்.

என் தமிழ் நாட்டு உறவுகள் போராடி நல்லா மேடையில பேசி / குXXX பின்னால வட இந்தியகாரனோடு பேரம் பேசி தேர்தலில் சீட்டு வாங்கி ஜெயிக்க பார்க்கும்.

உண்மையான இன பற்றாளர்கள் நொந்து வெந்து சாவார்கள்.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மட்டும் அரிச்சந்திரன் போல இன படுகொலை பற்றி அப்போதும் பேசுவார்கள்.

தன் வாழ்க்கைக்கே பல மணி நேரம் போராடும் தமிழர்களை சிலர் மானங்கெட்டவர்கள் / அடிமைகள் / இனப்பற்று இல்லாதவர்கள் என ஒரு கூட்டம் தூற்றும்.

அப்போதும் நாம் யாழ் களத்தில் யார் காலை எப்படி இழுக்கலாம் ? / யாருக்கெல்லாம் துரோகி பட்டம் சுமத்தலாம் ?/ எப்படி உள்ளுக்குள்ளே அடித்து கொள்ளலாம்? / இந்தியாவை மட்டும் திட்டிக்கொண்டு காலம் கடத்தி மறைமுகமாக சிங்கள நாய்களுக்கு எப்படி வழி அமைத்து கொடுக்கலாம் என நாம் நல்லா யோசித்து எழுதி எழுதியே காலம் தள்ளலாம்.

விசாரணை என்பதெல்லாம் இல்லையாம். நேரடியான சாட்சியங்கள் தேவையில்லையாம். நிபுணத்துவத்தை வைத்து இந்த நிபுணர் குழுவினர் என்ன செய்வார்கள். வெறும் அறிக்கையாகத்தானிருக்கப்போகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&st=100&gopid=594350&

=================================================================

Dear honourable members of UN panel,

Subject: UN panel on Sri Lanka

I write to congratulate You all, together with my family and friends for being appointed as the members for the Panel of of three by the UN to investigate into War Crimes and crimes against humanity in Sri Lanka.

This brutal war was conducted by the Sri Lankan government in a peculiar way by kicking out all media, NGOs, HRW Organizations, Aid Workers, UNHCR, UNHCF, Red Cross to hide all war crimes. They have also kicked various foriegn members of parliament, UN members ( Gordon Weiss) and foreign journalists. Now, they have declared of bannning you all!

This war was without witness. It will be a herculian task to collect all the information of War Crimes from difference sources and in different directions. Since late evidences of War Crimes are coming out and found to be true.

I earnestly urge you to collect all the information from HRW, Amnesty Intetrnational, UNHCR, UNICEF, Red Cross and others quickly and deliver justice to the minority Tamils in Sri Lanka. I take this opportunity to forward few links below regarding War Crimes and Crimes against humanity in Sri Lanka. I will be pleased to forward more information in future.

Yours truly,

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் டமிழர்கள்.. இந்தக் குழுவிற்கு தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். குறிப்பாக வன்னிப் போரில் முகங்கொடுத்து இப்போ அகதிகளாக மேற்கு நாடுகளுக்கு வந்திருப்பவர்களிடம் இருந்து சாட்சியங்களை திரட்டி இந்த நிபுணத்துவக் குழுவின் பார்வைக்கு கொண்டு வரலாம். இப்படி எத்தனையோ வகையில் தமிழர்கள் செயற்பட வழி இருந்தும்.. மீண்டும்.. தமக்குள் புங்குப்படுவதையே செய்து காலத்தை வீணடித்துக் கொண்டு திரிகிறார்கள். திருந்தாத ஜென்மங்கள். :lol:^_^:(

வணக்கம். வாத்தியார்

எமது விடுதலைக்கு முதல் எதிரியாக இந்தியாவே இருந்து வருகின்றதென்பதை நாம் உரத்துக்கூறவேண்டும். இந்தியா எம்மைத் தொடர்ந்து அழித்து வருகின்றது. எமது தற்போதைய தலைமைகள் தொடர்ந்து இந்தியாவிற்குச் சாமரம் வீசி உரிமைகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் செயற்படுகின்றன.

இந்தியா எமக்குச் செய்த அழிவுகளை வெளிப்படுத்துவதற்கு நாம் ஒரு பிரச்சார இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டும். சர்வதேசத்தில் இந்தியாவின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும்.

இதுவும் மிக மிக அவசியமான நடவடிக்கை.

இந்திய பயங்கரவாதிகள் ஜனநாயக வேடத்தில் சுதந்திரமாக நடமாட, நீதி நியாயம் நேர்மையானவர்களுக்கு கிடைக்காது. தர்மம் நிலைக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.