Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு எதிராகக் கண்மூடித்தனமாக கணனித்தாக்குதல் நடாத்தும் நெடுக்காலபோவானுக்கு எதிராக பகிரங்க மடல் :lol:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள கருத்தை நெடுக்காலபோவான் மீண்டும் ஒருமுறை வாசிப்பது நல்லது...........

இத்தனை தியாகங்களை புரிந்து வெடியாய் வெடித்த பெண்போராளிகள் புண்பட்டிருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் திரும்பமும் முயற்சிக்கவும். என்னை வாதாடி வெல்வதாலோ அதில் அப்படி ஒன்றும் இல்லை என்று ஏதாவது இடைசெருகல் செருகுவதாலோ எழுதியதை இனி அழிக்க முடியாது.

நீங்கள் போராளிகளை இதற்குள் கொண்டு வந்ததால் சொல்கிறேன்.. பெண் போராளிகளிடம் அத்துணை ஒரு துணிவை வர வழைத்ததும் ஓர் ஆண் தான். அது பிரபாகரன் என்ற ஒரு ஆணின் நாமம்.. என்பதை சுலபமாக மறந்துவிட்டீர்களே... அதெப்படி.

பிறகு அவரையும் ஆணாதிக்கவாதி பெண்களை பிடிச்சு பயிற்சி கொடுத்து.. பெண்கள் குடும்பம் நடத்தி பிள்ளை குட்டி பெற முடியாமல் செய்துவிட்டார்.. கர்ப்பிணிகளை கரும்புலிகள் ஆக்கினார்.. என்று சீறிப் பாயும் பெண்ணியங்களோடு.. நீங்களும் ஆணாதிக்க கோசம் போட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்து விடாதீர்கள்.

என்னைப் பொறுத்தவரை ஆதிக்க குணம் இருபாலாரிடமும் இருக்கிறது. பெண்கள் தமக்கு சாதகமான தளத்தில் தமது ஆதிக்கத்தை நிறுவாமல் விடமாட்டார்கள். ஆண்களும் தமக்குரிய தளத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தாமல் விடமாட்டார்கள். இதில் ஒரு சமரசம் வர வேண்டுமாயின் நிறைய விட்டுக்கொடுப்புக்களோடு.. புரிந்துணர்ந்து செயற்படும் பக்குவம் சிறுவயது முதல் வளர்க்கப்பட வேண்டும். ஆனால் அது மேற்கிலும் சரி கிழக்கிலும் சரி கவனிக்கப்படுவதாக இல்லை. அந்த நிலை வராமல்.. ஆதிக்கப் போக்கை இரு பாலாரும் கைவிடும் எண்ணத்தைக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.

இரு சாதாரண பெண்கள் தமக்குள் பேசுகிறார்கள்

பெண் 1: நான் வேலைக்குப் போகணண்டி..??!

பெண் 2: ஏண்டி.. பிள்ளைகளோட எப்படி வேலைக்குப் போகப் போற.

பெண் 1: இந்த ஆம்பிளைகளைக் கட்டுப்படுத்தனுன்னா நாங்கள் வேலைக்குப் போய் எங்களுக்கு என்று சம்பாதிச்சாத்தாண்டி அவங்களோட சரிக்குச் சமனா கதைக்கலாம். இல்லைன்னா வீட்டில சும்மா இருந்து ரீவி பாக்கிறவை தானே வீட்டைக் கவனிக்கட்டன் என்று விட்டிருவினண்டி.

பெண் 2: உந்த தமிழ் கடையள் வழிய கேட்டுப்பாரன்.. ரில் வழிய வேலை எடுக்கலாம்.

பெண் 1: நானும் தேடிக் கொண்டு தாண்டி இருக்கிறன்..!

இது உண்மையில் வீதியால் போகும் போது என் காதில் விழுந்த தமிழ் மொழி மூலச் சம்பாசணை. அந்தப் பெண்கள் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த ஆணாதிக்க கருத்தியல் விதைப்பு பெண் ஆணை அடக்க தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சிந்தனையை தூண்டி இருக்கிறதே அன்றி அவளாக தனது குடும்பம்.. சமூகம்.. அதில் தனக்குரிய பங்களிப்பு என்ன.. அதை எப்படி நிவர்த்திப்பது என்பதை புரிந்து கொள்ளச் செய்யவில்லை.

இதற்கு முக்கிய காரணம்.. இந்த ஆணாதிக்கம் என்ற கருத்தியல் விதைப்பு. ஆண்கள் தங்களை ஆட்டிப்படைப்பாங்க. அதை தடுக்க காசு உழைக்கனும். இப்படித்தான் பெண்கள் சிந்திக்கத்தூண்டப்பட்டிருக்கிறார்களே ஒழிய.. பெண்களா குடும்ப சமூகப் பொறுப்புணர்ந்து தமது பங்களிப்பைச் செய்ய முன் வரும் வகைக்கு தூண்டப்படவில்லை.

நீங்களும் அதே ஆணாதிக்க ஆண் வெறுப்புணர்வை வளர்க்கும் கைங்கரியத்தை தான் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இது மேற்படி சம்பாசணை எண்ணம் கொண்ட பெண்களையே இந்தச் சமூகத்தில் பெருக்கும். இதனால் நிச்சயம் குடும்பங்களில் நிம்மதிக்குப் பதில் சச்சரவுகளே அதிகரிக்கும்.

அதுதான் இன்று விவாகரத்துக்களும்.. மறுமணங்களும்.. காதல் சோடிகளை அடிக்கடி மாற்றுவதும் பெருகிக் கொண்டு போகிறது. மனிதன் தன்னால் தனக்குரிய சமூகத்துக்குரிய பங்களிப்புப் பற்றி சிந்திக்க முடியாதபடி.. போலிக் கருத்தியல்கள் உலகெங்கும் சில மேதாவிகளால்.. பரப்பப்பட்டு வந்ததன் விளைவே இது.

ஒரு போதும்.. ஒரு பெண் சிங்கம் தன் துணையை கட்டுப்படுத்த என்று தனக்கு உணவு தேடாது. மாறாக தன் குழுமத்திற்கு என்று தான் தேடும். தன்னை ஒரு ஆண் சிங்கம் வந்து பாதுகாக்கும் என்று எண்ணி பெண் சிங்கம் எதிரிகளிடம் அடிவாங்கிக் கொண்டிராது. தானே எதிரிகளை எதிர்த்து சண்டை இடும். பாருங்கள்.. இயற்கைக்கு அமைய வாழும் அந்தப் பெண்ணிற்கும்.. ஆணாதிக்க சிந்தனை இருக்கு அதனை தகர் என்று வெறியூட்டப்பட்டு வளர்க்கப்பட்ட பெண்ணின் சிந்தனைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை. இதில் எது சமூகத்தின் இருப்புக்கு வெற்றிக்கு அவசியம். சிந்தியுங்கள்..!!! :lol:

Edited by nedukkalapoovan

என்னைப் பொருத்தவரைக்கும் ஆண்கள், பெண்கள் இருவருமே பலம், பலவீனம் படைத்தவர்கள் தான். ஒரு சில ஆண்களின் பலவீனத்தை வைத்து ஆண்வர்க்கமே சரி இல்லை என்று சொன்னால் அது சரி இல்லை. அதே போல, ஒரு சில பெண்களின் பலவீனத்தை வைத்தும் பெண்கள் எல்லாரும் ஆண்களை விட குறைந்தவர்கள் என்று முடிவு எடுப்பதும் சரி இல்லை.

...

இன்னும் சிங்களவன்.. எமது பெண்களை கிள்ளுக்கீரையாய் பாவித்து சீரழிக்கிறான்.. தமிழ் பெண்களை விபச்சாரிகளாக்கிக் கொண்டிருக்கிறான்.. நாங்கள் இப்படி படம் போட்டு வாய் வீரம் பேசிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். சிங்களவன் செய்யும் கொடுமைகளை இந்த பொடி பிள்ட் பெண்கள் போய் தடுத்து நிறுத்துவார்களா..??! அல்லது தமிழ் பெண்கள் பொடி பில்டர்களாகி சிங்களவனோடு மோதி தமது சகோதரிகளை காக்கத்தான் முடியுமா...???! :lol::D

இது நல்லாக இல்லை...

தெரியாமல் தான் கேட்கிறேன், தமிழ் பெண்கள் பொடி பில்டர்களாகித்தான் சிங்களவனோடு மோத வேண்டுமா? பெண்கள் அங்கே ஆண் போராளிகளுக்கு நிகராக களத்தில் இறங்கி போராடவில்லையா? 'எமது இனத்தின் தற்பாதுகாப்புக் கவசங்களாக நான் கரும்புலிகளை உருவாக்கினேன்.' என்ற தேசியத் தலைவரின் கூற்றுக்கு அமைய அதில் பெண்களின் பங்கு இருந்ததில்லையா? சிங்களவன் மூலம் ஈழப் பெண் போராளிகள்/பெண்கள் கொடுமைகளை ஏன் அணுபவிக்கிரார்கள்? விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பெரும் பங்கு எடுத்தார்கள் என்ற காரணம் இல்லையா??

அண்மையில் பத்திரிக்கை ஒன்றில் படித்தேன், ஒரு தீயணைப்பு அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் ஆண்கள் ஒரே ஒரு பெண் மட்டும் தான் அங்கே வேலைக்கு சேர்ந்தது இருக்கிறார். அங்கு உள்ள ஆண் அதிகாரிகளால், சகா பாலியல் சம்பந்தப் பட்ட சேட்டைகளும், வார்த்தைப் பிரயோகங்களும். இப்படி ஒரு வேலை தளம் இருந்தால், எப்படி பெண்கள் சரி சமமாக இருப்பார்கள்? துணிந்து ஒரு பெண் வேலைக்கு சேர்ந்தும், அங்கே நிலைத்து நிக்க முடியாத நிலை யாரால் உருவானது?

இன்று எத்தனையோ ஆண்கள் திருமண வயதைத் தாண்டியும் தங்கள் குடும்பச் சுமையைச் சுமக்கிறார்கள் அதே நேரம் ஆண்கள் இல்லாத வீடுகளிலும் சரி, ஆண்கள் இருந்தும் இல்லாத வீடுகளிலும் சரி பெண்களும் தங்கள் குடும்பப் பொறுப்பை சிறுவயது முதல் சுமக்கிறார்கள்.

எதோ ஒன்று இல்லாவிட்டால், இனொரு விதத்தில் அவர்களும் சமமானவர்கலாகத் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறன்.

மருதங்கேணி எழுதியதை இப்பொது தான் பார்த்தேன்.

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொருத்தவரைக்கும் ஆண்கள், பெண்கள் இருவருமே பலம், பலவீனம் படைத்தவர்கள் தான். ஒரு சில ஆண்களின் பலவீனத்தை வைத்து ஆண்வர்க்கமே சரி இல்லை என்று சொன்னால் அது சரி இல்லை. அதே போல, ஒரு சில பெண்களின் பலவீனத்தை வைத்தும் பெண்கள் எல்லாரும் ஆண்களை விட குறைந்தவர்கள் என்று முடிவு எடுப்பதும் சரி இல்லை.

இது நல்லாக இல்லை...

தெரியாமல் தான் கேட்கிறேன், தமிழ் பெண்கள் பொடி பில்டர்களாகித்தான் சிங்களவனோடு மோத வேண்டுமா? பெண்கள் அங்கே ஆண் போராளிகளுக்கு நிகராக களத்தில் இறங்கி போராடவில்லையா? 'எமது இனத்தின் தற்பாதுகாப்புக் கவசங்களாக நான் கரும்புலிகளை உருவாக்கினேன்.' என்ற தேசியத் தலைவரின் கூற்றுக்கு அமைய அதில் பெண்களின் பங்கு இருந்ததில்லையா? சிங்களவன் மூலம் ஈழப் பெண் போராளிகள்/பெண்கள் கொடுமைகளை ஏன் அணுபவிக்கிரார்கள்? விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பெரும் பங்கு எடுத்தார்கள் என்ற காரணம் இல்லையா??

அண்மையில் பத்திரிக்கை ஒன்றில் படித்தேன், ஒரு தீயணைப்பு அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் ஆண்கள் ஒரே ஒரு பெண் மட்டும் தான் அங்கே வேலைக்கு சேர்ந்தது இருக்கிறார். அங்கு உள்ள ஆண் அதிகாரிகளால், சகா பாலியல் சம்பந்தப் பட்ட சேட்டைகளும், வார்த்தைப் பிரயோகங்களும். இப்படி ஒரு வேலை தளம் இருந்தால், எப்படி பெண்கள் சரி சமமாக இருப்பார்கள்? துணிந்து ஒரு பெண் வேலைக்கு சேர்ந்தும், அங்கே நிலைத்து நிக்க முடியாத நிலை யாரால் உருவானது?

நாங்கள் சில இடங்களில் யதார்த்துக்கு அப்பால் "பெண்கள்" என்ற ஒரு நிலையைப் பேணிய கருத்தெழுதச் செய்யப்பட்டுள்ளோம். அது தவறு.

தேசிய தலைவரின் வழிகாட்டலின் கீழ் பெண்கள் போராடினார்கள்.. கரும்புலியானார்கள்.. சாதனைகள் படைத்தார்கள். ஆனால் அதே பெண்கள் இன்று சிங்களப் படைகளிடம் இருந்து தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முடியாது பல பாலியல் துன்புறுத்தல்களுக்கும்.. சொல்லனாத் துயரங்களுக்கும் முகங்கொடுக்கின்றனரே..!!

போராளியாக ஒரு வலுவான தலைமையின் கீழ் இருந்து செயற்படுவது என்பதற்கும் ஒரு பெண்ணாக தனித்து நின்று... சமூகத்தில் சவால்களை சந்திப்பது என்பதற்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு. அதை நீங்கள் உணர்கிறீர்களா...??!

அங்கிருந்துதான் நாம் இந்த சவால்களை சந்திக்கும் திறன் பெண்களிடமா ஆண்களிடமா அதிகம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

போராட்டக் களங்களில் கூட பெண் போராளி அணிகளோடு ஆண் போராளிகளும் ஒருங்கிணைந்து தான் செயற்படுத்தப்பட்டனரே அன்றி வெறுமனவே பெண் போராளிகளை மட்டும் கொண்டு தலைவர் போர் செய்ததில்லை. நாங்கள் எப்போது யதார்த்தத்திற்குள் நின்று நிலைமைகளை ஆராய்கிறமோ அன்று தான் எம்மால் பெண்களிற்கான பாதுகாப்புப் பற்றி அதிகம் விடயங்களை அவர்களுக்கு வழங்க சிந்திக்க முடியும். இன்றேல்.... இப்படியே போலி நிலைப்பாடுகளைக் காட்டி பெண்கள் சூழ்நிலைக்கு பலிக்கடா ஆகும் நிலையே தொடரும். :lol:

...

போராளியாக ஒரு வலுவான தலைமையின் கீழ் இருந்து செயற்படுவது என்பதற்கும் ஒரு பெண்ணாக தனித்து நின்று... சமூகத்தில் சவால்களை சந்திப்பது என்பதற்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு. அதை நீங்கள் உணர்கிறீர்களா...??!

அங்கிருந்துதான் நாம் இந்த சவால்களை சந்திக்கும் திறன் பெண்களிடமா ஆண்களிடமா அதிகம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

...

பல சாதாரண குடும்பங்களில் பிறந்து அறிமுகமில்லாத நாடுகளில் வந்து, புதிதாக ஒரு மொழியை ஆரம்பத்தில் இருந்து கற்று, பிறந்த குடும்பத்திற்காக, உறவினர்களுக்காக தமது தேவைகளை, விருப்புகளை ஒதுக்கி வைத்துவிடு உழைத்து பல பொறுப்புகளை தாமே ஏற்று வாழ்கிறார்களே. இவர்கள் குடும்பத்தில் ஆண்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் சுயநலவாதிகளாகவே தங்கள் பொறுப்புக்களிலிருந்து தள்ளி போகிறார்கள்.

அறிமுகமில்லாத நாட்டில், எத்தனையோ சவால்களை ஆண்ககள் சந்திக்கிறார்கள்... பெண்களுக்கு அதை விட அதிகம் இல்லையா? ஆண்களை விட அதிக சவால்களை சந்தித்து வாழ்கையை வாழ்ந்து வரும் பெண்களும் சமுதாயத்தில் உள்ளார்கள். ஆனால் அவர்களைத் தான் சமுதாயத்தில் உள்ள பலர் அடையாளம் காணத் தவறிவிடுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சில இடங்களில் யதார்த்துக்கு அப்பால் "பெண்கள்" என்ற ஒரு நிலையைப் பேணிய கருத்தெழுதச் செய்யப்பட்டுள்ளோம். அது தவறு.

தேசிய தலைவரின் வழிகாட்டலின் கீழ் பெண்கள் போராடினார்கள்.. கரும்புலியானார்கள்.. சாதனைகள் படைத்தார்கள். ஆனால் அதே பெண்கள் இன்று சிங்களப் படைகளிடம் இருந்து தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முடியாது பல பாலியல் துன்புறுத்தல்களுக்கும்.. சொல்லனாத் துயரங்களுக்கும் முகங்கொடுக்கின்றனரே..!!

போராளியாக ஒரு வலுவான தலைமையின் கீழ் இருந்து செயற்படுவது என்பதற்கும் ஒரு பெண்ணாக தனித்து நின்று... சமூகத்தில் சவால்களை சந்திப்பது என்பதற்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு. அதை நீங்கள் உணர்கிறீர்களா...??!

அப்ப என்ன ஆண்கள் வெட்டி கிழிச்சு சிங்களனிடம் சுதந்திரம் வாங்கிடடீனம் என்று சொல்றீங்களோ???

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன ஆண்கள் வெட்டி கிழிச்சு சிங்களனிடம் சுதந்திரம் வாங்கிடடீனம் என்று சொல்றீங்களோ???

ஆகக் குறைந்தது எதிரியின் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்தாவது தம்மை தற்காத்துக் கொண்டிருப்பார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோவுக்கு தெரியாதா எத்தனையோ குடும்பம் பிரிவதற்கு ஆண்களும் காரணமாய் இருக்குறார்கள் என்பது...ஆண்களில் குற்றம் செய்பவர்கள் அமசடக்காய் செய்து போட்டு இருப்பார்கள்...ஆனால் பெண்களில் குற்றம் செய்பவர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வது, வெளிப்படையாய் செய்வது போன்ற காரணங்களால் பெண்கள் செய்யும் குற்றங்கள் தான் உங்கள் கண்ணுக்கு தெரியுது போல கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகக் குறைந்தது எதிரியின் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்தாவது தம்மை தற்காத்துக் கொண்டிருப்பார்கள்..!

சிரிப்போம் சிந்திப்போம் என்பதால் எழுதுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்

2011 ஆம் முதல்தர பகிடி இதுதான்

அப்ப என்ன ஆண்கள் வெட்டி கிழிச்சு சிங்களனிடம் சுதந்திரம் வாங்கிடடீனம் என்று சொல்றீங்களோ???

சரியான கேள்வி

பதிலைக்கனநாளாக காணவில்லை

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண் பெண் பலம்பலவீனம் என்றதும் உடனடியாக பாலியல் சார்ந்து பெண்கள்மீது திணிக்கப்படும் வன்முறைகளை(மிருககுணம்கொண்டஆண்களால்) பெண்களின் பலவீனமாகக்கோடிட்டுக்காட்டுகிறார்கள். இதைத்தவிர வேறெந்தவகையில் ஆண்கள் பெண்களைவிட மேலானவர்களாகத் தங்களைக்கருதுகிறார்கள்? இதற்காக இவர்கள் எடுத்துக்காட்டுகளை இலக்கியத்திலும் இதிகாசங்களிலும் தேடுவார்கள். நம்கண்முன்னே அதுகும் புலத்தில் எங்கள் பிள்ளைகளில் ஆண்பிள்ளைகளுடன் பெண்பிள்ளைகளை ஒப்பிட்டுப்பாருங்கள் தெரியும் உங்களின் ஆணாதிக்கக்கருத்துக்களின் பலவீனம். இங்கே தாய்மொழிக்கல்வியிலாகட்டும் துறைசார்கல்வியிலாகட்டும் பெண்களின் வீச்சிற்கு ஆண்களால் ஈடுகொடுக்கமுடிகிறதா? பொறுப்பும் பொறுமையும் கொண்ட பெண்கள் இல்லையானால் எத்தனை குடும்பம் இங்கே சீரழிந்திருக்கும்? ஒரு பெண் தன்னை ஒரு பலவீனப்பிறவியாக எண்ணுமளவிற்கு அடக்கியொடுக்கி வளர்க்கப்படுகிறாள்.இதில் கேவலமென்னவென்றால் பெண்ணே(தாய்) தன்னினத்தை தாழ்வாக உணரவைக்கிறாள். மேலுள்ளவர்கள் குறிப்பிட்டதுபோல் இது அலசப்படவேண்டிய நீண்ட வாதத்திற்குரிய விடயம்.நகைச்சுவையாக ஆரம்பிக்கப்பட்டதை அப்படியே தொடர்வதே சிறப்பு.

Edited by அரசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள நிர்வாகம் இத்திரியினை சமூகச் சாளரத்திற்கு மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். நெடுக்கை நோக்கிய நகைச்சுவைப்பதிவாகவே இத்திரியை ஆரம்பித்தேன். முற்றிலுமே நகைச்சுவைக்கும் கிண்டல்களுக்கும் அப்பால் சென்று அலசவும், ஆராயவும் வேண்டிய விடயமாக மாறியிருக்கிறது இத்திரி நன்றோ தீதோ பேசவேண்டியன நிறைய உள்ளன. முக்கியமாக யாரையும் யாரும் எதிரியாகக் கருதாமல் நண்பர்களாக கருத்துகளைப்பகிர்ந்து கொள்ளுவது பெண்களையும் இத்திரியில் பல விடயங்களை எழுத வைக்கும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சகாரா அக்கா இதை வேறு பகுதிக்கு மாற்றினால் நல்லம் எண்டு நினைச்சண்டு தான் இருந்தேன் நீங்கள் சொல்லிட்டீங்கள்..ஆனாலும் நெடுக் அண்ணாவின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறீங்கள்..அதை ஓருக்கால் எடுத்து விட்டால் கூச்சமில்லாமல் எழுதலாம் இல்லாது விட்டால் நெடுக் அண்ணாவைத் தாக்குவது போல் அல்லவா முடிந்து விடும்..?ஆகவே தான் நானே ஒண்டும் எழுதாமல் பாத்துக் கொண்டு பேசாமல் திரிகிறன்..தயவு செய்து ஒருக்கா கவனத்தில் கொள்ளவும் சகாரா அக்கா..நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72899&pid=595033&st=0&#entry595033

தயவு செய்து பெண்களே நீங்கள் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள திரியில் உண்மையான பெண்களின் பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் தைரியமாக எழுதுங்கள். பெண்களாகிய நாம் வாய்திறந்து பேசவேண்டும். எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் முகமறியாத சகோதரிகள் பற்றி பேசக்கூடிய நாம் பேசயேண்டும். தட்டிக்கழித்து நாம் செல்லும் ஒவ்வொரு பொழுதும் வேதனைக்குரியது. தயவுசெய்து பேசுங்கள். என் அம்மாவுக்காகவும், என் அக்காளுக்காகவும், என் தங்கைக்காவும், என் பிள்ளைகளுக்காவும் என் உறவுகளுக்காகவும் பேசவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருக்கிறது என்று உணருங்கள்.

என்னைப் பொருத்தவரைக்கும் ஆண்கள், பெண்கள் இருவருமே பலம், பலவீனம் படைத்தவர்கள் தான். ஒரு சில ஆண்களின் பலவீனத்தை வைத்து ஆண்வர்க்கமே சரி இல்லை என்று சொன்னால் அது சரி இல்லை. அதே போல, ஒரு சில பெண்களின் பலவீனத்தை வைத்தும் பெண்கள் எல்லாரும் ஆண்களை விட குறைந்தவர்கள் என்று முடிவு எடுப்பதும் சரி இல்லை

மருமேன் குட்டி.க்கு மாமா நான் எழுதும் அன்பு மடல் சீ வம்பு மடல்.........

ஆன்களின் பலவீனம் பெண்கள் தங்களை நம்பி வாழ்கிரார்கள் என்று நினைப்பது , பெண்களின் பலம் பெண்க்கள் ஆண்களை நம்பி வாழ்வது என்று ஆன்கள் நினைப்பது

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.