Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ஈழம் என்று நான் சொல்வது இல்லை'' - சிவத்தம்பி பேட்டி

Featured Replies

இலங்கையின் மூத்த தமிழறிஞர் சிவத்தம்பியின் வருகையை எதிர்பார்த்து, 'வருக சிவத்தம்பி... உருகுதே என் இதயம்!' எனக் காத்திருந்தார் முதல்வர். கருணாநிதியின் காத்திருப்பு வீண் போகவில்லை. வந்திருக்கிறார் சிவத்தம்பி!

nonamezr.jpg

''ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் எந்த நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?''

''இந்தியா, ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்தது. ஆகவே, ஆங்கிலத்தை

நம்மால் தவிர்க்க இயலாது. இருந்தாலும் தமிழ், தமிழர் என்ற உணர்வு இருக்கும் வரை, எந்த மொழியாலும் தமிழை அழிக்க முடியாது. உலகின் முக்கிய மொழிகளான ஸ்பானிஷ், அரபிக், ஃபிரெஞ்ச், ஆங்கிலம் போன்ற மொழிகளில், தமிழைப்பற்றிய நூல்களை எழுதினால், தமிழின் பெருமையை உலகுக்கு இன்னும் வலுவாக எடுத்துக்கூற முடியும். அதற்காக, ஆங்கிலப் பரிச்சயமும் வேண்டும்தான். தமிழ் அல்ல முக்கியம்; தமிழராக வாழ்வதுதான் முக்கியம்!

அமெரிக்கா, ஜெர்மனியில் இருக்கும் நமது பிள்ளைகள், தாங்கள் கறுப்பர்கள் அல்ல என்பதை உணர்த்த, தமிழ் படிக்கிறார்கள். ஆனால், அங்கே இருக்கும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் பலருக்குத் தமிழ் தெரியாது.

தமிழை எல்லா வகையில் வளர்த்தாலும்கூட, நமக்கு தமிழை வளர்க்க ஓர் ஆய்வுக்கூடம் இருக்கிறதா? கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டுச் சூழலில் நாம் என்ன கண்டுபிடித்து இருக்கிறோம் சொல்லுங்கள்? தமிழகத்து அறிஞர்கள், வெளிநாடுகளில் அல்லவா கண்டுபிடிக்கிறார்கள்?''

''நீங்கள், 'எங்களை ஈழத் தமிழர் என்று சொல்லக் கூடாது; இலங்கைத் தமிழர் என்று சொல்ல வேண்டும்' என்று சொல்லி இருக்கிறீர்களே?''

''ஈழம் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட விஷயம். என் அபிப்ராயப்படி 'ஈழம்' என்பது சிங்களச் சொல்லில் இருந்து வந்ததாக நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு ஈழம் என்ற சொல், இலங்கையில் வேறு சில கருத்துகளை ஏற்படுத்துகின்றன. அங்கு உள்ள இளைஞர் அமைப்புகள், ஈழம் என்ற பெயரைப் பயன்படுத்திச் செய்யும் அரசியல் போராட்டங்கள் தவறான கருத்துக்களை ஏற்படுத்திவிட்டன. அதில் இருந்து விடுபடவே 'இலங்கை' என்று சொல்கிறோம். அதனால்தான், ஈழம் என்று நான் பயன்படுத்துவது இல்லை. அதே நேரத்தில், அந்தச் சொல்லுக்கு நான் எதிரியும் இல்லை. இந்தியாவில் நீங்கள் எப்படித் தமிழர்களாக, இந்தியர்களாக இருக்கிறீர்களோ... அதுபோல நாங்களும் இலங்கையர்களாகவும், தமிழர்களாகவும் இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் நீங்கள், லண்டன் செல்கிறீர்கள். அங்கே யாராவது கேட்டால், இந்தியன் என்றுதானே சொல்வீர்கள். அதுபோல, இலங்கையில் இருக்கும் எங்களுக்கான உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.''

''முள்வேலி முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் தமிழர்களின் நிலை எப்படி? அந்த மக்கள், இந்தச் செம்மொழி மாநாட்டை எப்படிப் பார்க்கிறார்கள்?''

''அரசியல் விவகாரம் சம்பந்தமாக எதுவும் நாம் பேச வேண்டாம். இலங்கையில் உள்ள உள்நாட்டு விஷயங்களை இன்னொரு நாட்டில் வந்து நான் பேசத் தயாராக இல்லை. அது பிழை என்று நினைக்கிறேன்.''

''மாநாட்டுக்கு உங்களை வற்புறுத்தி அழைத்ததாக ஒரு பேச்சு இருக்கிறதே?''

''எந்தவிதமான வற்புறுத்தலும் இல்லை. நானாகவே வந்திருக்கிறேன். தமிழாசிரியன், ஆராய்ச்சியாளன் என்ற முறையில் வந்துள்ளேன். கூடவே, ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளேன்!''

- அ.சுப்புராஜ்

நன்றி: http://www.vikatan.com/jv/2010/jun/30062010/jv0203.asp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேராசிரியர் அவர்களே, உங்களை நோவதா? உங்கள் அறிவை நோவதா? என்று இந்துப் பாமரனுக்குப் புரியவில்லை. ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையோடு அழைக்கப்படீர்களோ நாமறியோம்.

'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள், பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களில் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளமை போன்றன பற்றிய வரலாற்றுத் தரவுகரளயும் ஆதாரங்களையும் நிராகரிக்கின்றீர்களா ஐயா? எமது இளங்தலைமுறையும் மக்களும் இந்த ஈழத்துக்காகப் பல்லாயிரம் உயிர்களை விதையாக விதைத்துள்ளனரே. தெளிவுபடுத்துவீர்களாயின் ஏற்புடையதாக இருக்கும்.

Edited by Valukkiyaru

பன்றியோடு சேர்ந்து கன்றும் என சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதியில்லாததால்

இந்த செய்தியில் சம்மந்த பட்டவர் வயதில் என் பாட்டனை விட மூத்தவர் என்பதாலும்

தமிழ் பண்பாட்டிற்கு இணங்க கருத்து எழுதுவதை தவிர்க்கிறேன்.

பன்றியோடு சேர்ந்து கன்றும் என சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதியில்லாததால்

இந்த செய்தியில் சம்மந்த பட்டவர் வயதில் என் பாட்டனை விட மூத்தவர் என்பதாலும்

தமிழ் பண்பாட்டிற்கு இணங்க கருத்து எழுதுவதை தவிர்க்கிறேன்.

வயதாகி போனதால் மறை களண்டு போச்சு போல... இவர பேசி என்ன பலன்...

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பத்திப் பேசிப்பலனில்லைஈ பேராசிரியர்(?) அவர்கள் எப்போது தமிழர் கோரிக்கையைப் புறந்தள்ளி அங்கபோக எத்தானித்தாரோ அன்றே இதுபோன்ற விடையங்கள் அரங்கேறும் என தமிழ் ஆர்வலர்கள் நினைத்ததுதான் நடந்திருக்கின்றது. அதுக்காக இப்படி ஒரு விடையத்தைக் கூறுவார் டின யாரும் நினைத்திருக்கவில்லைத்தான். இவ்விடையம் தொடர்பாக எமைடன் வாசகர் ஒருவர் தெரிவித்த கருத்தை இத்துடன் இணைக்கின்றேன்.

விகடன் நினைப்பது போல சிவத்தம்பி தமிழீழ அரசியலில் எந்தச் செல்வாக்கும் இல்லாதவர். 1974 ஆம் ஆண்டு நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அரசோடு சேர்ந்து குழப்பிய புண்ணியவான் சிவத்தம்பி என்பது எல்லோரும் அறிந்த உண்மை. காந்தளகம் சச்சிதானந்தன் அவர்களைக் கேட்டால் வண்டி வண்டியாகச் சொல்வார். கொழும்பில் தங்கி வாழும் சிவத்தம்பிக்கு ஈழம் என்ற சொல் பிடிக்காதது வியப்பில்லை. தன்னை தமிழறிஞர் என்று சொல்லும் சிவத்தம்பிக்கு ஈழம் என்ற சொல் "என் அபிப்ராயப்படி ''ஈழம்'' என்பது சிங்களச் சொல்லில் இருந்து வந்ததாக நினைக்கிறேன்" என எந்த அடிப்படையில் சொல்கிறார் என்பது தெரியவில்லை. ஈழம் என்ற சொல்லை இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த பூதந்தேவனார் என்ற புலவரை மதுரை பூதந்தேவனார் என்ற புலவரிடம் இருந்து பிரித்துக் காட்டுவதற்கு ஈழத்துப் பூதந்தேவனார் என்று அழைக்கப்பட்டார். இவர் நற்றிணை (3) குறுந்தொகை (4) அகநானூறு (2) ஆக மொத்தம் ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளார். சங்க காலத்தில் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் பல நெருங்கிய தொடர்புகள் இருந்தன. அவற்றுள் ஒன்று உணவு வணிகத் தொடர்பு. பத்துப்பாட்டில் ஒன்பதாவது பாட்டான பட்டினப்பாலையில் ஈழத் துணவும் காளகத் தாக்கமும்’ என்ற வரி உள்ளது. பட்டினப்பாலையைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆவர். பாடப்பட்டவன் கரிகாற்சோழன் ஆவான். ஈழம் அல்லது இலங்கை என்ற தீவுக்கு சிங்களத்தில் பெயர் இல்லை. சிறிலங்கா என்பது வடமொழிப் பெயராகும். அதுவே தமிழில் இலங்கை என்று திரிபுபட்டிருக்க வேண்டும். சிங்கத்தைக் குறிக்கும் சிகல என்ற சொல் இலங்கையைக் குறிக்க சூழவம்சத்தில் ஒரு தரமும் மகாவம்சத்தில் இரண்டுதரமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிவத்தம்பி மாணவர்களின், பாடசாலை ஆசிரியர்களின் கட்டுரைகளை திருடி தனது ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்து பிழைப்பு நடத்தியவர் என்பது யாழ் பல்கலை சமூகத்தினர் அறிந்த செய்தி.

ஆரம்பத்தில் கொம்யூனிஸவாதியாக தன்னை அறிமுகப்படுத்திய சிவத்தம்பி, தனக்கு வால் பிடிப்பவர்களுக்கு (அரைவேக்காட்டு மாணவர்களுக்கு), தனது ஆய்வு அறிக்கைகளை தயாரிக்கும் மாணவர்களுக்கு, தனது பதவிநிலையை பயன்படுத்தி பல்கலைக்கழக வேலைகளில் உள்வாங்கி தனக்கென ஒரு விசிறிப் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சிவத்தம்பியின் அரைவேக்காட்டு இலக்கியவாதிச் சுயரூபம் மெல்ல மெல்ல வெளிப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு யாரையும் குறை சொல்லவில்லை

எமக்கு யாரையும் அண்டி வாழத்தெரியாது

அரவணைக்கவும் தெரியாது

ஒத்துப்போகவும்தெரியாது

ஒதுங்கி வாழவும் தெரியாது

ஆனால் ஒவ்வொரு சொல்லிலும்

ஒவ்வொரு பழக்கத்திலும்

ஒவ்வொரு நடவடிக்கையிலும் பிழைபிடிக்க மட்டும் தெரியும்

இது தான் எமது அழிவுக்கான முதல் காரணி.......

நான் இங்கு யாரையும் குறை சொல்லவில்லை

எமக்கு யாரையும் அண்டி வாழத்தெரியாது

அரவணைக்கவும் தெரியாது

ஒத்துப்போகவும்தெரியாது

ஒதுங்கி வாழவும் தெரியாது

ஆனால் ஒவ்வொரு சொல்லிலும்

ஒவ்வொரு பழக்கத்திலும்

ஒவ்வொரு நடவடிக்கையிலும் பிழைபிடிக்க மட்டும் தெரியும்

இது தான் எமது அழிவுக்கான முதல் காரணி.......

Edited by tamil paithiyam

பேராசிரியர் அவர்களே, உங்களை நோவதா? உங்கள் அறிவை நோவதா? என்று இந்துப் பாமரனுக்குப் புரியவில்லை. ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையோடு அழைக்கப்படீர்களோ நாமறியோம்.

'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள், பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களில் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளமை போன்றன பற்றிய வரலாற்றுத் தரவுகரளயும் ஆதாரங்களையும் நிராகரிக்கின்றீர்களா ஐயா? எமது இளங்தலைமுறையும் மக்களும் இந்த ஈழத்துக்காகப் பல்லாயிரம் உயிர்களை விதையாக விதைத்துள்ளனரே. தெளிவுபடுத்துவீர்களாயின் ஏற்புடையதாக இருக்கும்.

சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் பட்டினப்பாலை.

கிமு இரண்டாம் - முன்றாம் நூற்றண்டுக் காலப்பகுதியில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய " பட்டினப்பாலை " எனும் சங்க இலக்கியத்தில் " ஈழத்துணவு " பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது

==============================================

நான் இங்கு யாரையும் குறை சொல்லவில்லை

எமக்கு யாரையும் அண்டி வாழத்தெரியாது

அரவணைக்கவும் தெரியாது

ஒத்துப்போகவும்தெரியாது

ஒதுங்கி வாழவும் தெரியாது

ஆனால் ஒவ்வொரு சொல்லிலும்

ஒவ்வொரு பழக்கத்திலும்

ஒவ்வொரு நடவடிக்கையிலும் பிழைபிடிக்க மட்டும் தெரியும்

இது தான் எமது அழிவுக்கான முதல் காரணி.......

சரியாய் சொன்னீர்கள் தமிழ் பைத்தியம்

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் தமிழே சிங்களத்தில் இருந்து பிறந்ததாகச் சொல்லுவார் போல.இலங்குதல் என்றால் ஒளிருதல் என்று பொருள்படும். அந்த சுத்தமான தமிழ்சொல்லில் இருந்தே இலங்கை என்ற சொல் உருவாகி இருக்க வேண்டும்.இ என்ற எழுத்தை விட்டு உச்சரிப்பது சில பிரதேசத்து வழக்கமாகும்.உதாரணமாக ரத்தம் ராவணன் லட்சியம் ரகசியம்..........அவ்வாறே இலங்கை லங்கையாகி லங்காவாகி இருக்கலாம்.விஜயன் இலங்கையில் காலூன்றிய பொழுது அந்த மண் செந்நிறமாக இருந்ததால் (தாமிரம் என்றால் சிவப்பு)தாமிரபரணி என்ற பெயர் உருவானதாம். இதை விட ஈழம் என்ற சொல் இல்லம் என்ற சொல்லில் இருந்து உருவானதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.சிங்களமே தமிழும் பாளி மொழியும் கலந்து உருவானதாகச் சொல்லுவார்கள். பேராசியரின் கருத்துப்படி ஈழம் என்ற சொல் சிங்களத்தில் இருந்து தோன்றியதாக எடுத்துக் கொண்டாலும் சிங்களத்தின் மூலத்தாயான தமிழில் இருந்து சிங்களத்திற்குப் போனதாகத்தானே கருதப்படும்.அட அவ்வளவு ஏன் ஈழம் என்ற சொல்லில் உள்ள ழகரம் தமிழுக்கேயான சிறப்பெழுத்து வேறு எந்த மொழியிலும் ழகரத்திற்கான உச்சரிப்பக் கிடையாது பேராசிரியருக்கு இது தெரியாமல் இருக்க நியாயமில்லை. ஈழம் கருத்துருவாக்கம் ஈழத்தமிழர் மத்தியில் இருந்து முற்றாக அகல வேண்டும் என்ற நோக்கத்தில் யாராலோ சொல்ல வைக்கப்பட்டிருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவத்தம்பி, சிங்களத்திடம் வாங்கின காசுக்கு, மேலால கூவிறாண்டா கொய்யாலே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலவர் குறிப்பட்டதுபோல் ழ வின் சிறப்பு தமிழிற்குமட்டுமே உரியது.ஈழம் என்பது தமிழிலிருந்து சிங்களத்திற்கும் போயிருக்கலாம். தவிர பேராசிரியர் சிவத்தம்பி ஐயா அவர்களிற்கு இதெல்லாம் தெரியாதென நாம் சிறுபிள்ளைத்தனமாக எண்ணக்கூடாது.சிவத்தம்பி ஐயா அவர்கள் மிகவும் சிறந்த தமிழ் வித்தகர்.உண்மையைச்சொன்னால் அவர் பேராசிரியரானார் தமிழ் கற்று. ஆனால் தமிழ்மேல் அவரிற்கில்லை பற்று. அவர் ஒரு தமிழ் வியாபாரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடுச்சாமம் பாதிச்சாமம் தெரியாமலிருந்த சேவலெல்லாம் இப்ப நேரகாலமில்லாமல் கூவுதுகள்.

எல்லாம் காலமடா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.