Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கருணாநிதி போர்க் குற்றவாளி'-ஐ.நாவிடம் புகார் தரப் போகிறதாம் அதிமுக.!

Featured Replies

சென்னை: முதல்வர் கருணாநிதி யும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை:

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை தலைவரின் இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழைவிசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்சே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக் கூடாது.

பான் கி மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால், இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்சேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் முதல்வரை நம்பினார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் நம்பினார்கள். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் முதல்வரின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும் என சர்வதேச சட்டம் கூறுகிறது.

போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் முதல்வர்.

ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான்.

எனவே, இலங்கைக்கு ஐ.நா. குழுவினர் வரும்போது அதிமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி கருணாநிதி குறித்து புகார் தரப்படும். கருணாநிதி போர்க்குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

http://thatstamil.oneindia.in

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க காமடிக்கு அளவே இல்லையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் ஆதரவு நாடகம் தொடங்கி இருக்கின்றது. நடந்து முடிந்த அவலங்களுக்கு கருணாநிதிக்கு இணையான பொறுப்பு ஜெயலலிதாவுக்கும் உண்டு. தமிழகத்தின் நிழல் முதல்வரான ஜெயலலிதா இங்கு எம்மக்கள் கொடூரமாக அழிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டபோது ஆக்கபூர்வமாக என்ன செய்தார்? இப்போது புதிதாக அம்மாவுக்கு ஈழத்தமிழர் மீது பிறந்திருக்கும் அன்பு நகைப்புக்குரியது!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது சரிவந்தால் நல்லதுதானே என்றுதான் தோன்றுகிறது

ஒரு குற்றவாளியை பிடிக்கும்வரை ...

அவனோடு நின்றவர்களை வைத்து வழக்கு நடாத்துவது நடப்பதுதானே....

அதேநேரம் எம்மால் இவற்றை செய்யமுடியாது

ஆனால் தமிழ்நாட்டில் வழக்கு மற்றும் ஆட்களை திரட்டமுடியும்

எம்மவர்களும் எமக்கு ஆதரவானவர்களும் உதவமுடியும்

இவரும் இந்த குற்றத்தில் பங்காளிதானே.

ஏன் இவரை விசாரிக்கக்கூடாது.

என்னைப்பொறுத்தவரை யார் குத்தியென்றாலும் அரிசியானால் சரி.....

இவங்க காமடிக்கு அளவே இல்லையா? :lol:

இதில் நகைப்புக்கு எங்கே இடமிருக்கிறது..... ஜெயலலிதாவின் கூற்று முற்றிலும் உண்மை. முதல்வர் கருணாநிதி போர்நிறுத்தம் ஏற்ப்பட்டு விட்டது என்று சொல்லி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட பின்பு தானே முல்லிவைக்காளில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற அவருடைய தவறான கூற்றை நம்பி தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்தார்கள் என்பதும் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமரிக்கன் சதாமுசனை தூக்கில போட்ட மாரி யாராவது குள்ள நரி கருணாநிதியையும் போட்டா முதல் சந்தோச படுறது நானாய் தான் இருப்பன்..அதோடை ஈழ தமிழர்ட மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும் :lol:

இதில் நகைப்புக்கு எங்கே இடமிருக்கிறது..... ஜெயலலிதாவின் கூற்று முற்றிலும் உண்மை. முதல்வர் கருணாநிதி போர்நிறுத்தம் ஏற்ப்பட்டு விட்டது என்று சொல்லி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட பின்பு தானே முல்லிவைக்காளில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற அவருடைய தவறான கூற்றை நம்பி தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்தார்கள் என்பதும் உண்மை.

http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU&feature=player_embedded

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு கோவில் கட்டும் வேலூர் திமுக கவுன்சிலர்

வேலூர்: முதல்வர் [^] கருணாநிதி [^]க்கு வேலூர் மாவட்ட திமுக கவுன்சிலர் ஒருவர் கோவில் கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் கருணாநிதி பெயரில் செம்மொழி விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவரது பெயரில் வீட்டு வசதித் திட்டம், உயிர் காப்பீட்டுத்திட்டம் ஆகியவை உள்ளன. முதல்வர் பெயரில் டிவி சானலும் கூட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் பெயரில் ஒரு கோவில் வரவுள்ளது வேலூரில்.

வேலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கும் ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திதான் இந்தக் கோவிலை கட்ட முனைந்துள்ளார். முதல்வர் கருணாநிதியின் ஏழை மக்கள் [^] நலத் திட்டங்களால் கவரப்பட்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் கோவிலுக்கு கலைஞர் திருக்கோவில் என அவர் பெயரிட்டுள்ளார். குடியாத்தம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சாமிரெட்டிப்பள்ளி கிராமத்தில் இந்தக் கோவில் வருகிறது.

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக்கோவில் உருவாகிறது. கிரானைட்டால் ஆன முதல்வர் கருணாநிதியின் சிலை இங்கு வைக்கப்படுகிறது. வெளியில் உள்ள தூண்களில் மு.க.ஸ்லாடின், துரைமுருகன், மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தியின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கிருஷ்ணூ்ர்த்தி கூறுகையில், முதல்வர் கருணாநிதி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எனது கிராமத்தில் மட்டும் 13 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரை தாங்கள் கடவுள் போல கருதுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்தே எனக்கு கோவில் கட்டும் ஐடியா வந்தது என்றார்.

3 மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளை கிருஷ்ணமூர்த்தி தொடங்கினார். ரூ 2 லட்சம் செலவில் இக்கோவில் கட்டப்படுகிறதாம். இன்னும் 15 நாட்களில் பணிகள் முடிந்து விடும். பின்னர் அதைச் சுற்றி பூங்கா அமைக்கவும் கிருஷ்ணமூர்த்தி திட்டமிட்டுள்ளார்.

சரி இதை முதல்வர் அனுமதிப்பாரா என்று கேட்டபோது, இது எங்களது விருப்பும். அவரை நாங்கள் கடவுளாகத்தான் கருதுகிறோம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

http://thatstamil.oneindia.in/news/2010/07/01/dmk-councillor-karunanidhi-temple.html

:lol: :lol: :):D :D :lol: :lol: :lol: :lol: :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நகைப்புக்கு எங்கே இடமிருக்கிறது..... ஜெயலலிதாவின் கூற்று முற்றிலும் உண்மை. முதல்வர் கருணாநிதி போர்நிறுத்தம் ஏற்ப்பட்டு விட்டது என்று சொல்லி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட பின்பு தானே முல்லிவைக்காளில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற அவருடைய தவறான கூற்றை நம்பி தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்தார்கள் என்பதும் உண்மை.

நகைப்புக்கு இடமிருக்கிறது.

மக்கள் சாவிற்கு உடந்தையாக இருந்தவர் தானைத்தலைவர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஆனால் இந்த அம்மா என்றுமில்லாமல் இன்று திடீரென்று போர்க்குற்றமென்று முழங்குவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அம்மாவையும் நம்பத் தயாராக இல்லை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு ராசாக்களே அம்மாவின் அரசியலில் இதுவும் ஒன்றுதான் ஆனால் போர்க்குற்றம் சம்பந்தமாக யாரும், யார்மீதும், நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் புகார்மனு கொடுக்கலாம் அதில் புகாரில் குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணைக்குழு, விசாணை செய்வதற்குத் தேவையான முகாந்திரம் இருந்தால் விசாரித்தே தீரவேண்டும். இன்னுமொரு விடையம் இப்போது நியமிக்கப்பட்டது விசாரணைக்குழு அல்ல, அது ஐக்கியநாடுகளது பொதுச்செயலாளருக்கு இலங்கையின் போர்க்குற்றம் நடந்ததா எனக் கண்டறியவும் அது தொடர்பான விடையங்களை கையாள்வது தொடர்பாக அறிவுறுத்தல்களை தயார்செய்வதற்கும், இதில் யார் யார் விசாரிக்கப்படல் வேண்டும் என்பதை வரையறைசெய்வதற்காகவுமே.

அப்பு ராசாக்களே அம்மாவின் அரசியலில் இதுவும் ஒன்றுதான் ஆனால் போர்க்குற்றம் சம்பந்தமாக யாரும், யார்மீதும், நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் புகார்மனு கொடுக்கலாம் அதில் புகாரில் குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணைக்குழு, விசாணை செய்வதற்குத் தேவையான முகாந்திரம் இருந்தால் விசாரித்தே தீரவேண்டும். இன்னுமொரு விடையம் இப்போது நியமிக்கப்பட்டது விசாரணைக்குழு அல்ல, அது ஐக்கியநாடுகளது பொதுச்செயலாளருக்கு இலங்கையின் போர்க்குற்றம் நடந்ததா எனக் கண்டறியவும் அது தொடர்பான விடையங்களை கையாள்வது தொடர்பாக அறிவுறுத்தல்களை தயார்செய்வதற்கும், இதில் யார் யார் விசாரிக்கப்படல் வேண்டும் என்பதை வரையறைசெய்வதற்காகவுமே.

கருநாநிதி தமிழரை காட்டி கொடுத்து போருக்கு உதவினான் என்பதற்கான பதிவுகளே தவிர வேற்ன்றும் இல்லை.

கருநாநிதி நல்லவனோ கெட்டவனோ என்பதல்ல.

அவனது ஆட்சிக்காலத்தில் நடந்த கொடூர சொந்த இன அழிப்புக்கு உதவியது.

தமிழகம் – வறுமை காரணமாக தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்.

தனியார் மூலதனங்களைக் கவர்ந்திழுப்பதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அடிக்கடி கருணாநிதி பெருமைப்பட்டுக் கொள்வார். ஆனால் கொண்டு குவிக்கப்படும் பன்னாட்டு தனியார் முலதங்கள் உள்ளூர் மக்களின் வாழ்வை சூறையாடி வருகிறது. சிறு தொழில் நசிவும் வேலை இழப்பு, உணவுப் பற்றாக்குறை என ஏழை எளிய மக்கள் மிகப்பெரும் இழப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இது கிராமப்புறங்களில் பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. கிராமங்களை காலி செய்து உதிரி வேலைகளுக்காக நகரங்களுக்கு இடம்பெயர்வது. ஆனால் அங்கிருந்தும் துரத்தப்பட்டு வெளியேற்றப்படுவது என தனியார் மயத்தின் கோரமுகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொலை,கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தோடு கூடவே குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் இரண்டு குடும்பங்கள் கடன்சுமை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அதன் இன்னொரு வெளிப்பாடாக மயிலாடுதுறையில் தாயைக் கவனிக்க முடியாத மகன் தாயையே கொன்று போலீசிலும் சரணடைந்திருக்கிறார். நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் சித்தர்காடு பாரதிநகர் புதுத்தெருவில் வசிப்பவர் பனை ஏறும் தொழிலாளியான அருளானந்தம் (44). இவரது தாய் செபஸ்தியம்மாள் (85). கடந்த சில மாதங்களாக அருளானந்தம் பணக் கஷ்டத்தில் இருந்து வந்தார். இதனால் தன் தாய் செபஸ்தியம்மாளை அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை.இதனால் அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த செபஸ்தியம்மாளை ஈவு இரக்கமின்றி கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் அந்த மூதாட்டியின் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அருளானந்தம் துண்டிக்கப்பட்ட தன் தாயின் தலையை ஒரு பையில் எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார். இதை பார்த்து பயந்த அக்கம்பக்கத்தினர் அலறினார்கள். இதையடுத்து அவர் தலையை வீட்டுக்குள் எறிந்து விட்டு கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.

From INIORU

.. இனியாவது இந்திய... தமிழக உள்வீட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி ... யாரவர் எமக்கு குரல் கொடுக்கிறார்களோ, அவர்களை ஊக்குவித்து ... எமக்கெதிரானவர்களையும், எமக்காதரவாக்க முயற்சிப்பதே காலத்தின் தேவை ... இது சிங்களம் எமக்கு கற்றுத்தந்த பாடம்!!!!!!!

சிங்கள அடக்கு முறைக்கு எதிராக போராட வெளிக்கிட்டு ... பெண் அடக்குமுறை, சாதீய எதிர்ப்பு, வர்க்க முரண்பாடு, ...கள் தாண்டி பிராந்திய வல்லரசின் ஆதிக்கத்துக்கு எதிராக, பார்பணியத்துக்கு எதிராக .. தாண்டி உலக வல்லாதிக்கத்துக்கு எதிராகவும் போராட வெளிக்கிட்டு ... தொடங்கியதை மறந்து விட்டோம், உலகில் புத்திசாலிகள் என வர்ணிக்கப்படும் யூத இனத்துக்கு அடுத்த இனமாக கூறும் நாங்கள்!!! ... சொன்னார்கள் ***, பிராந்திய இராணுவ/அரசியலை மட்டுமல்ல, உலக இராணுவ/அரசியலை நிர்ணயிக்கிறார் என்று!!

ஆனால் சிங்களவனோ ... அன்று சீனா - இந்திய யுத்தத்தில் சீனாவுக்கு ஆதரவாக வெளிக்கிட்டது தொடக்கம் அமைதிப்படை வரும் வரை இந்திய எதிர்ப்பாளனாகவே இருந்தான் ... பார்த்தான் .. உது சரிவராது என்று, பிளேட்டடை மாற்றினான் ... இன்று சினாவையும் அரவனைத்து, இந்தியாவையும் பாக்கெற்றினுள் போட்டுக் கொண்டு சிரிக்கிறான், யூதனுக்கு அடுத்த மூளையுள்ள இனமான எம்மைப்பார்த்து!!!!!!!!!!

ஆனால் நாமோ ... ????????????

ஜெயலலிதாவுக்கு சிங்கள பயங்கரவாதிகளிடம் இருந்து செல்லும் கையூட்டு செல்லவில்லை போலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.